Tuesday, August 30, 2011

ஆண்கள் ஏன் ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்?


1.பாலிவுட்டின் வளரும் நடிகைகளில் சரா கானும் ஒருவர்-தினமலர் செய்தி#26 வயசு ஆச்சே இன்னுமா வளர்ந்துட்டு இருக்கு?#டவுட்டு

---------------------------------

2. இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!#என்னய்யா நியூஸ் போடறீங்க.. எதுக்கு பரபரப்பு? கிளு கிளுப்புன்னு போடுங்க .. அப்ப்டியே ..லிங்க் ப்ளீஸ்   pls

-------------------------------

3. மிஸ், டைம் ப்ளீஸ் என்றேன், ரொம்ப ஓல்டு டெக்னிக் என்றாள். ஓல்டு ஈஸ் கோல்டு என்றேன்#கடலை ஸ்டார்ட்ஸ்

-----------------------------

4. சூப்பர் ஃபிகருடன் சேர்ந்து வெளியே வரும் மொக்கை ஃபிகர் கூட சீன் போடுவதை ஆண் வேறு வழி இல்லாமல் பொறுத்துக்கொள்கிறான்

-------------------------

5. மதிமுக பூப்படைந்துவிட்டது - நாஞ்சில் சம்பத்#சாரி அண்ணே.. ஒரு சின்ன கரெக்‌ஷன் மூப்படைந்து விட்டது,அவ்வளவு தான் , இனி எழ முடியாது.

-------------------------




6. தியேட்டரின் பால்கனியில்  நுழைந்ததும் கிடைத்த இடத்தில் அமர்பவர்கள் ஜஸ்ட் சிநேகிதர்கள், கார்னர்சீட் தேடிப்போய் அமர்பவர்கள் காதலர்கள்#ஜிகிடி

------------------------

7. நீ ஏன் என்னிடம் ஒரு தடவை கூட கோவிச்சுக்கவே மாட்டேங்கறே?என்று முனகி கோபித்துக்கொண்டாள் காதலி#ஸ்.. ஷ்.. அப்பா .. முடியல

---------------------

8. பெண்கள் பெரும்பாலும் வழிவதில்லை,பெண்களுக்கு அவர்கள் முன் இருக்கும் ஏராளமான தூண்டில்களிடமிருந்து தப்பிக்கவே நேரம் சரியாக இருக்கிறது

------------------------

9. சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகாத காரணத்தால் பெரும்பாலான  ஆண்கள் தங்களை ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்

-----------------------

10. காதலியிடம் அடிக்கடி பொய் சொல்க.சத்தியம் பண்ணுங்க என்பாள்,உன் மீது சத்தியம் என்று தொடுவதற்கு எதார்த்தமான வாய்ப்புக்கள் கிடைக்கும்@#ஜிகிடி

----------------------------


a
11. காதலிக்கும்போது பெண்கள் காதலன்மீது வைக்கும் அன்பை காதல் தோல்வி அடைந்த பின்னும் ஆண்கள் காதலி மீது வைத்திருப்பார்கள்


--------------------------

12. 100% தூய்மை, 100 % நேர்மை என யாருமே இங்கே கிடையாது,சின்ன சின்ன தவறுகளுக்காக மனிதர்களை நீ ஒதுக்க ஆரம்பித்தால் நீ தான் தனியன் ஆவாய்

-------------------------------

13. அர்த்தம் அற்ற வார்த்தைகளை விட அர்த்தம் உள்ள மவுனம் சிறந்தது

-----------------------------

14. முக்கியமான ஒன்றைத்தொலைக்கும்போது யாராவது மனம் மகிழ்வார்களா? நான் மகிழ்ந்தேன், என் இதயம் தொலைக்கையில்

----------------------------

15. என்னுடன் பேசவே கூடாது எனும் வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய்!எப்போதாவது நீயாய் வந்து பேசுவாய் எனும் எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன்.

---------------------------------



16. நாத்திகவாதியாய் இருப்பவர்கள் காதலியின் நலனுக்காக பிரார்த்திக்கும்போது ஆத்திகவாதி ஆகிவிடுகிறார்கள்

-----------------------------

17. இழப்பதற்கு உன் நினைவுகள் தவிர வேறெதுவும் இல்லை என்னிடம்,மறப்பதற்கு என் காதல் தவிர வேறெதுவும் இல்லை உன்னிடம்

--------------------------

18. உன்னை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பணித்தாய், உன் அளவு கடந்த அன்புகளை என் மேல் திணித்தாய்

------------------------

19. விமானத்தில் தனியே தொலை தூரம் நீ 32 மணி நேரம் பயணித்தாய்! நான் 64 மணிநேரம் கழித்து திரும்பினேன்


-------------------------

20. நீ என்னை உன்னவனாய் நினைக்க ஆரம்பித்த நாளை என் முதல் பிறந்த நாளாய் எண்ண ஆரம்பித்தேன்

-------------------------



21. உன்னைச்சுற்றி அமையும் ஒரு பாதுகாப்பு வளையமாய் நான் மாற முடிந்தால் சந்தோஷப்படுவேன்

------------------------

22.அடிக்கடி என் கனவில் நீ வரும்போதே நான் உஷார் ஆகி இருக்க வேண்டும் , நீ கனவாகவே கரையப்போகிறாய் என்று


---------------------

23. மெலோடி சாங்க்ஸ் ரசிக்கும் பெண்கள் எல்லோரும் மென்மையான மனம் படைத்தவர்கள் அல்ல, அடிப்பாட்டை விரும்பும் ஆண்கள் வன்மையான குணம் உள்ளவர்கள் அல்ல

----------------------------

அனகா அலங்காமணி - ஸ்குவாஷ்
24.சேலை பெண்கள் முந்தானையை சரி செய்வதை விட 4 மடங்கு அதிகமாக சுடிதார் பெண்கள் துப்பட்டாவை சரி செய்கிறார்கள்#மைக்ரோநோட்டாலஜி

-----------------------

25 காதலிக்காதவன் கவிதை எழுதும்போது வார்த்தைகளாக வந்து விழும்,காதலிப்பவன் கவிதை எழுதும்போது வரி வரியாக மிதந்து வரும்#முப்பொழுதும் அவள் கற்பனை

--------------------

26 பெண்கள் கால் விரல் மிஞ்சி பட்டா போடப்பட்டவள் என்பதை  காட்டிக்கொடுப்பது போல் ஆண்களுக்கு?நாங்க தான் ஷூ போட்டுக்கறோமே? #யாரு கிட்டே?

-----------------------

27 சரக்கு ஸ்மெல்,சிகரெட் ஸ்மெல் இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் பெண் ஆணின் முத்தம் விரும்புகிறாள்#கில்மாலஜி

------------------

28. சுடிதார் பெண்களின் துப்பட்டா போடும் ஸ்டைல் தான் அவரது டிரஸ்சிங்க் சென்சை தீர்மானிக்கிறது#டிரஸ்ஸாலஜி

------------------------



29. கோயிலுக்குப்போவதால் மனநிம்மதி,ஓசி பிரசாதம்,ஏசி போட்டது மாதிரி குஜிலியின் கூல் பார்வை மூன்று பலன்கள் இருப்பதால் ஆன்மீகவாதியாகு#ஜிகிடி

---------------------

30.நெயில் பாலீஸ் வைப்பது ஃபிகர்களின் பழக்கம்,இயற்கை மருதாணிச்சிவப்பை ரசிப்பது ஆண்களின் வழக்கம்#ஜிகிடி

---------------------------

31 கலைநிகழ்ச்சிகளில்,விழாக்களில் மேடையில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சாமான்யன்,ஆடியன்ஸ் தரப்பில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சரித்திரன்#ஜிகிடி

-----------------------

32 ஒற்றை நாடிப்பெண்களுக்கு ஒற்றைஜடை அழகு,ரெட்டைநாடிப்பெண்களுக்கு ரெட்டை ஜடை அழகு என்று நினைப்பது அழகிய முட்டாள் தனம்#ஜிகிடி

------------------

33. ஜிமிக்கி அணிந்த பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்,ஆனால் அவர்கள் ஆண்களுக்குப்பிடிக்காத மாடலில் பெரிய சைஸ் ரிங்க் மாட்டி கடுப்பேற்றுகிறார்கள்

rainbow rose