Tuesday, June 28, 2011

. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன??


1. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் அவசர முத்தங்களால் கறைகள் காட்டிக்குடுத்துவிடும் அபாயமாகக்கூட இருக்கலாம்#ஜிகிடி

--------------------

2. நீ தலைக்குக்குளித்து வரும் நாட்களில் உன்னைத்தவிர்க்க நினைக்கிறேன்,காரணம் உன் முக வசீகரத்தை கூந்தல் அழகு முந்துவதை விரும்பாததால்#ஃபிரைடே

--------------------

3. காதலிக்க கண்கள் மட்டும் போதும்,ஆனால் அதை கண்ட்டினியூ பண்ண பாக்கெட்ல காசு வேணும்#நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டோய் 

---------------------

4. உன்மேல் உள்ள அன்பை முழுசாக வெளிப்படுத்த எனக்குத்தெரியவில்லை என்றாய்,சோ வாட்?உள்ளே அன்பு இருக்கு என்று தெரிந்தாலே போதாதா?

---------------------

5. உன்னுடன் சந்திக்கும் வாய்ப்பு ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் என்னோடு இருக்கும் பர்ஸ் காலி ஆகி விடும்#வெட்டிச்செலவு வந்தனா 

--------------------




6. ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்

---------------------

7. கணவன்மார்கள் பைக்கில் போகும் நேரத்தை விட மனைவியை டிராப் பண்ணும் நேரம் அதிகம்,மனைவிமார்கள் பெரும்பாலும் கணவன்களை டிரைவராக யூசிங்க்

---------------------

8. ஆண்கள் பைக் உலா போகையில் அவன் கம்பீரம் கூடுகிறது,பெண்கள் ஸ்கூட்டி உலா போகையில் அவள் நளினம் குறைகிறது

--------------

9./ கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எனக்குப்பிடிக்காமல் போனதற்குக்காரணம் ,அவள் கண்கள் கட்டப்படுவதால்

----------------
10.  எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன்-ஜெ#அப்போ முதல்ல கரண்ட்கட்டுக்கு ஒரு வழி பண்ணுங்க தாயே

------------------



11. பிரதமர் முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால்,  சிறப்பாக செயல்பட முடியாது-ஜெ#சிஎம்மாக இருக்கறவங்க கூடதோழியின் பேச்சைத்தானே கேட்கறாங்க?

--------------------

12. எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்-ஜெ#அய்யய்யோ,அம்மா,குண்டை தூக்கிப்போடறீங்களே?அப்போ திமுகவுல உங்க நண்பர் யாரு?

---------------------------
13. நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்-ஜெ#இந்நாள் சினிமா நடிகை பேட்டி மதிரியே இருக்கே?

----------------------

14. நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்-ஜெ#என்னம்மா? இது?45 நாட்களுக்குள்ளேயா?

-------------------------

15. ஊழல்அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடே எதிர்பார்க்கிறது-ஜெ #ஊழல் செய்த முதல் அமைச்சர்கள் மீதும்,2 பேரும் மாட்னீங்க

-------------------



16. அரசு பேருந்தில் 'தீ' 36 பயணிகள் தப்பினர்-செய்தி # தீ ரஜினி நடிச்ச படம் ஆச்சே.. ரஜினியே தப்பிச்சுட்டாரு..பயணிகள் தப்பிக்க மாட்டாங்களா?

------------------------

17. பிரபுதேவா- பியா ஒரேவிமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர்# நயன்தாரா எங்கிருந்தாலும் சீதை படப்பிடிப்பை கேன்சல்செய்துவிட்டுஆஜர்ஆகுக

---------------------------

18.  என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்.

----------------------

19.  எல்லோரிடமும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்,ஆனால் அது எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படாது#ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்&டீலிங்க்

-----------------------
20.  உன்னை சமாதானப்படுத்த என்ன பரிசு வேணும்? என கேட்டேன் .செலவே இல்லாத எப்போதும் கிடைக்கும் 4 எழுத்து மந்திரம் என்றாள் #கிஸ்ஸாலஜி

----------------------