Wednesday, December 08, 2010

கறுப்பு எம் ஜி ஆர்-ன் விருதகிரி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb-NCWrjY_4-jiVCvY7DDzeLrqgoo9LwjJWBZb-9NyX4wtwAu35b9UabktAzwhky1Rwj0FCl7EG_pNYx8RafsjB9xxn9abjYt-cPQTm9JeUf01NG9nVSbPeqBoViPuz6ds01igKKA-1Rnk/s1600/virutha211209_1024_1.jpg
1. கேப்டனுக்கு மனசுக்குள்ள நாடோடி மன்னன் எம் ஜி ஆர்னு நினைப்பு.

எப்படி சொல்றே?

இந்தப்படம் ஓடுனா நான் கிரி,ஓடாட்டி ஆகிடுவேன் வெறி..னு சொல்றாரே?

ஓடுனாலும்,ஓடாட்டியும் படம் படம் சொறினு மக்கள் சொல்றாங்களே?


2.கேப்டன் -  இதுவரைக்கும் யாருமே பண்ணாத கேரக்டர் நான் பண்றேன்.

இவ்வளவு கேவலமான கேரக்டரை வேற யாரும் பண்ண மாட்டாங்க...


3. ஊமை விழிகள்,புலன் விசாரனை-னு நான் நடிச்ச போலீஸ் சப்ஜெக்ட்
   எல்லாமே ஹிட்,இது ஹிட் ஆகாதுன்னு எப்படி சொல்றீங்க?

அந்தப்படங்களை எல்லாம் விபரமான டைரக்டர்ஸ் டைரக்ட்
பண்ணாங்க,இந்தப்படத்தை நீங்க டைரக்ட் பண்றீங்களே..அதான் பயம்.


4.  இந்தப்படத்துல நான் சீரியஸ் போலீஸா வர்றேன்.

ஆனா ஸ்டில்ஸைப்பார்த்தாலே எங்களுக்கு சிரிப்பு பாலீஸா வருதே...


5.இந்தப்படம் பிரம்மாண்டமான சினிமாஸ்கோப் படம்.

படம் ஓடும்னு எனக்கு ஸ்கோப் இல்லை.
http://img219.imageshack.us/img219/5307/17virudhagiri200.jpg

6. படப்பெட்டில பேடு ஸ்மெல் (BAD SMELL) வருதே...?

படத்துல அங்கங்கே அரசியல் கலந்திருக்காராம்.

சோ வாட்? (SO WHAT?)

அரசியல் ஒரு சாக்கடை ஆச்சே?சாக்கடைல பேடு ஸ்மெல் வராம
குல்கந்து ஸ்மெல்லா வரும்?



7. இந்தப்படத்துக்கு விருது நிச்சயம்னு.எப்படி சொல்றே?

ஓடாத படத்துக்கு விருது தர்றதுதானே கோலிவுட்டோட பழக்கம்?



8. இது ஒரு போலீஸ் ஸ்டோரி.

நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க,போலீஸ் ஸ்டோரியா? போலி ஸ்டோரியா?



9. கலைஞர் - இந்தப்படத்துக்கு சன் டிவிலயும்,கலைஞர் டி வி லயும்
மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணி படத்தை ஹிட் பண்ணனும்.

தலைவரே...நாம எதுக்கு அந்தாள் படத்தை ஹிட் பண்ணனும்?

படம் ஹிட் ஆகிட்டா அந்தாளுக்கு டைரக்‌ஷன் சான்ஸ் நிறையா வரும்.
அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணி நம்ம கழுத்தை அறுக்க மாட்டாரே?




10. குடும்ப அரசியல் பண்றவங்களைத்தாக்கி பஞ்ச் டயலாக் பேசறேன் இதுல..

அடடா,உங்க மச்சான் கோவிச்சுக்க மாட்டாரா?