Showing posts with label gowtham. Show all posts
Showing posts with label gowtham. Show all posts

Friday, February 01, 2013

கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் .



 படத்தோட முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தான் . கலக்கிட்டாரு மனுஷன் . கடல் அலைகளை , வானம் , சூரியன் , நிலா , பீச் , துளசி க்ளியவேஜ் -னு அவர் ராஜாங்கம் தான் ஓரளவாவது தியேட்டர்ல உக்கார வைக்குது 


 அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ஆர் . நெஞ்சுக்குள்ளே, என்னை நீ எங்கே கூட்டிப்போறே? , ஏ லே கீச்சான்  , மகுடி  என 4 பாட்டு ஹிட்.  படமாக்கிய விதம் அழகு 


படத்தை டாமினேட் பண்ணுவது ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் தான் தாதா . ஆயுத  பூஜை பட கெட்டப்ல அசத்திட்டார். அவரோட கேரக்டரைசேஷன் இயக்குநர் ஹரி பட காப்பி . 
 அர்விந்த்சாமி  நல்ல பாதிரியாரா வர்றார். சின்ன சின்ன டயலாக் குடுத்து அவரையும், நம்மையும் காப்பாத்திட்டார்  இயக்குநர் . 
 ஹீரோவா கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்  சைடுல இருந்து பார்த்தா அவர் முகச்சாயல் தெரியுது, நடிக்க முயற்சி பண்ணி இருக்கார். ஒரு முதல் படம் ஹீரோ எந்த அளவு   பண்ணுனா போதுமோ அந்த அளவு பண்ணி இருக்கார் . 



 ஹீரோயின் துளசி. அவர் நல்ல கட்டையோ இல்லையோ அவர் குரல் செம கட்டை. முடியல . தமிழர்கள் குரல் வளத்தைப்பார்க்க மாட்டாங்க சாரி கண்டுக்க மாட்டாங்க என்பது உண்மைதான் , அதுக்காக இப்படியா? ராதா முகச்சாயல் கார்த்திகாவை விட துளசிக்கு ஜாஸ்தி .புருவம் அக்காவை விட தங்கச்சிக்கு சின்னது . ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ). அவர் சிரிக்கும்போது ஒரு மாதிரி உதட்டை சுளிக்கிறார். உதட்டை மட்டும் கவனிச்சவங்க கடுப்பாகிடுவாங்க .என்னதான் 15 வயசுல அபார வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் பாப்பா சினி ஃபீல்டுல வளர்றது கஷ்டம் தான் . 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கதைக்கு சம்பந்தமே இல்லாம மீனவன் , கடல் , ஏ லே கீச்சான் பாட்டு எல்லாம்  ரெடி பண்ணி பில்டப் கொடுத்து நீர்ப்பறவையில் சொல்லாத , விடு பட்ட ஏதோ ஒரு மீனவர் பிரச்சனையை , ஈழத்தமிழர் பிரச்சனையை இவர் சொல்லப்போறார்னு எதிர்பார்ப்பை ஏற்படுத்துனது . 



2.  போஸ்டர் டிசைனை நல்ல படம் மாதிரியே உருவாக்குனது




3. விஸ்வரூபம்  வராத சைக்கிள் கேப்ல படம் ரிலீஸ் பண்ணி 7 நாள் ஓட்ட வெச்சது ( அதாவது 7 நாள் ஓடிடும் ) 



4. தான் உண்டு தன் பிஸ்னெஸ் உண்டுனு தேமேன்னு கிடந்த அர்விந்த் சாமியை நல்ல கேரக்டர்னு ஏமாத்தி ரீ எண்ட்ரி கொடுத்து நடிக்க வெச்சது 



5. படத்தை பிரமோட் பண்றதுக்காக தேவையே இல்லாம லிப் லாக் கிஸ் சீனை   வலுக்கட்டாயமா புகுத்துனது .



6 கிறிஸ்டியன்ஸ் ஏதாவது பிரச்சனை பண்ணட்டும் , உலக ஃபேமஸ் ஆகிடலாம்னு வேணும்னே அவங்களை வம்புக்கு இழுத்தது . ( ஆனா அவங்க செம டேலண்ட், யாரும் கண்டுக்கலை , ஏன்னா பிரச்சனை பண்ணுனா பர பரப்பா ஓடும் , இப்போ வந்த சுவடே தெரியாமல் போகும் ) 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சார், அலைபாயுதே , மவுன ராகம், கீதாஞ்சலி ( இதயத்தை திருடாதே)  நிஜமாவே உங்க கதை தானா?  ஏன்னா நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்க எடுக்கப்போகும் காதல் கதை பட்டாசைக்கிளப்பப்போகுதுன்னு நினைச்சா தியேட்டருக்கு வந்த ஆடியன்சை பாதிலயே கிளப்பி விடுதே? 



2. அர்விந்த் சாமி பாதிரியார் , படிச்சவர் . பண்பானவர் , ஆனா அவர் செருப்பு போட்டுட்டு 2 சீன்ல ஷூ போட்டுட்டு 4 சீன்ல தேவாலயத்துக்குள் போய்ட்டு வந்துட்டு இருக்கார், படிப்பறிவே இல்லாத பொடியன்க வெறும் கால்ல போறாங்க



3.  நீங்க 30 வருஷம் சினி ஃபீல்டுல இருந்தீங்க என்பதற்காக 30 வருடங்களுக்கு முன் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை எல்லாம் இப்போ வெச்சா எப்டி? சார். 

ஒரு பொண்ணு நல்லவனை கை காட்டி இவன் என்னை ரேப்பிட்டான் ஐ மீன் கெடுத்துட்டான்  அப்டினு பொய்ப்புகார் குடுத்தா அந்தக்காலத்துல அய்யோ பாவம்னு ஜனங்க பார்ப்பாங்க . இப்போ பெஞ்ச் ரசிகன் கூட ஏம்பா அதான் ஏதோ டி என் ஏ டெஸ்ட் இருக்காமில்ல அதை பார்த்தா தெரிஞ்சுடுது அப்டினு சொல்றான் .
 திரைக்கதை அமைச்ச ஜாம்பவான்கள் 2  பேரு , அதுக்கு அசிஸ்டெண்ட்டா 18 பேரு ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யாரும் கவனிக்கலை? இந்த லாஜிக் ஓட்டையை உங்க பேசும் படம் சுஹாசினி மேடம் கூட சொல்லலையோ?  ( ஒரு வேளை அவரோட  வசன வாய்ப்பை நீங்க  ரைட்டருக்கு குடுத்துட்டதால நல்லா வேணும் , எப்டியோ போகட்டும்னு விட்டுடாரோ?



4. கடல் ஓரம் வாழும் ஒரு பெண் ணின் முகம் மினுமினுப்பாக ஆயில் போட்ட மாதிரி  இருக்கே, அது எபப்டி?



5. அப்பாவை ஊரே அடிச்சுப்போட்டுட்டு இருக்குன்னு ஒருத்தன் வந்து சொன்னா அப்படியே  பதறி ஹீரோ ஓட வேண்டாமா? அவர் என்னமோ ரஞ்சிதா கிட்டே விசாரனை பண்ற மாதிரி யார் அடிச்சா? எதுக்கு? ஏன்? அப்டினு 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு இருக்காரு?  ( டயலாக் எழுத டோட்டலா படத்துக்கு இத்தனைன்னு இனி பேசிடுங்க , ஐ திங்க்  ஒரு பக்கத்துக்கு ரூ 10,000 அப்டினு காண்ட்ராக்ட் போட்டுட்டீங்க போல , அண்ணன்  புகுந்து விளையாடிட்டார் ) உங்க படத்துலயே அதிக வசனம் கொண்ட படம் இதுதான் 


6. ஒரு யூத் பையன் சைக்கிளைத்தூக்குவது ரொம்ப சாதாரண விஷயம் . இதுல ஹீரோ சைக்கிளைத்தூக்குவதை ஓவர் பில்டப் கொடுத்து க்ளோசப்ல பை செப்ஸ் எல்லாம் நரம்பு முறுக்கேறுவதைக்காட்டுவது ரொம்ப ஓவர். அவர் என்ன நமீதாவையா தூக்கறார்?




7.  நண்பன் படத்துல ஷங்கர் சார்  பிரசவக்காட்சி ஒண்ணை க்ளைமாக்ஸ்ல வெச்சார்னா கதைக்கு அது தேவையா இருந்தது , அப்டி வெச்சா படம் ஹிட் ஆகிடும்னு யாரோ சொன்னாங்கன்னு கேட்டு கதைக்கு சம்பந்தமே இல்லாம பிரசவ காட்சி . அதுக்கு கேமரா ஆங்கிள் உஷ் அப்பா முடியல . மலையாளப்படம் மாதிரி .. 




8. தேவாலயத்தில்  சின்னப்பையன் உச்சா போகும் காட்சி ,  வசனத்தில் மிக மலிவான  கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் உங்க தரத்தை குறைக்குது. ப்ளீஸ் டோண்ட் ஃபர்க்ட் யூ ஆர் ஏ செண்ட்டர் டைரக்டர் , இப்படி சி செண்ட்டர் மாதிரி இறங்கி  அடிக்கக்கூடாது . ( கேட்டா அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு ஒரு நொணை நாட்டியம் ( சால்ஜாப்பு) பேசுவீங்க )

9. உங்களுக்கு காமெடி அவ்வளவா வராதுன்னு எல்லாருக்கும் தெரியும் , அதுக்காக இப்படியா? ரொம்ப ட்ரை ( DRY)


10. மன வளர்ச்சி குறைந்த துளசியை  மருத்துவப்பணி பார்க்க விடுவது எப்படி? சும்மா காயத்துக்கு மருந்து போடுவது என்றால் கூட பரவாயில்லை,பிரசவம் பார்க்கறார், விட்டா  பை பாஸ் ஆபரேஷன் பண்ணிட்வார் போல


11. அர்விந்தசாமி பாதிரியார் கேரக்டர்,  அவர் எப்படி டபால்னு அர்ஜூன் உடம்புல பாய்ஞ்ச புல்லட்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார்? உங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாருமே டாக்டர்களா?


12. ட்ரெய்லர்ல , போஸ்டர்ல , ஸ்டில்ஸ்ல துளசிக்கு  லிப் லாக் கிஸ் சீன் வெச்சீங்க , ஆனா படத்துல அது இல்லையே? சென்சார்லயே விட்ட சீனை எதுக்கு தூக்குனீங்க? இது சீட்டிங்க் இல்லையா? ஒரு வேளை  10 நாட்கள் கழிச்சு இணைக்கப்பட்ட லிப் கிஸ் காட்சியுடன்னு ஓட்ட வைக்க தந்திரமா?







மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்மூருக்கு புது சாமியார் வந்துருகார்ல.. எம்ஜிஆரு போலவே இருக்கீரே .
2. சந்தோசமா இருக்க கூடாதுன்னு எந்த பைபிள்லயும் சொல்லல, ஏன் உம்முன்னு இருக்கீங்க?
3.  எனக்கு பைபிளும் தெரியும், பசியும் தெரியும்
 எனக்கு  பைபிள் மட்டும் தான் தெரியும் 
4.பாவத்துல நீ தலை குப்புற விழனும், அதை நான் பார்க்கனும் 
5. பாவ மன்னிப்புக்கு 10 ரூபா, ஜெபத்துக்கு 15 ரூபா , ஆனா லேடீஸ் க்கு எல்லாம் ஃபிரீ ஹி ஹி 
6. திஸ் ஈஸ் சாமியார், சாமியார் ஈஸ் குட் 
 யோவ் அது பாதிரியார்யா 
7. எல்லாருக்கும் அம்மா சொல்லித்தான் அப்பாவைத்தெரியும்.
8.  அஞ்சு ரூபா குடுத்து வாரியா? ( வர்றியா? )னு கூப்பிட்டவங்க மத்தில என் கூட வாழ்றியா? வா! கட்டிக்கறேன்ன்னு சொல்ற ஆளை இப்போத்த்தான் பார்க்கறேன்  


9. மனசுக்குள்ளே சூரியன் உதிப்பது போல இருக்கு  ( நீ என்ன டி எம் கேவா?/ )



10. பாதிரியார் யாரோ ஒரு பொண்ணுகூட ஓடுவது மாதிரி தெரியுதே?


 இன்னும் 2 கிளாஸ் சரக்கு அடிச்சுப்பாரும் . 2 பேரோட ஓடிப்போற மாதிரி தெரியும் 



11. சுடறதா இருந்தா எப்பவோ  சுட்டிருப்பே , இப்படி பேசிட்டு இருக்க மாட்டே 



12. நிம்மதியா இருக்கறதை விட உஷாரா  இருக்கறதை நான் விரும்பறேன்


13.  அவ ஏன் அப்படி மன வளர்ச்சி கம்மியா இருக்கான்னா ஆழ்மனசு செய்யும் தந்திரம் , அவ  வளர்றதை விரும்பலை , எதையோ பார்த்து பயந்திருக்கலாம் 


14,.  இப்போதான் உன்னைப்பத்தி நினைச்சேன் 


 என்ன?னு ?



 தெரில , மறந்துட்டேன்



15.  நீ என்னை கை விட்டுட்டியா? 


 நோ , கை நழுவிடுச்சு 


16. நன்மைக்கு இந்த உலகத்துல இடம் இல்லை , எனக்கே தெரியாம என் வாழ்க்கைல ஒரு நன்மை நடந்தா அதை அழிச்சுடுவேன் . அது என் மகளா இருந்தாலும் சரி



17. மனுஷனுக்கு பாவம் செய்யச்சொல்லித்தரத்தேவை இல்லை , நடக்கற மாதிரி அது தானா வந்துடும் 


18.  நான் நிறைய பாவம் பண்ணி இருக்கேன். பாவம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? 


 ம்ஹூம் 


-------

 சரி சரி , இனி பண்ணாதே, எல்லாம் சரியாப்போச்சு 


( ஆடியன்ஸ் - பாவம் எது தெரியுமா? இந்தப்படத்துக்கு நாங்க வந்தது )










எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 (  ஆக்சுவலா 37 தான் தரனும் , ஆனா விகடன்ல எப்பவும் ஷங்கர், கமல், மணி 3 பேருக்கும் ஷாஃப்ட் கார்னர் உண்டு  

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார் 

 ரேட்டிங்க் -  2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 



 சி பி கமெண்ட் -  மணிரத்னம் சாரின் தீவுர ரசிகர்கள் இடைவேளை வரை பார்த்துட்டு ஓடிவிடவும் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் எஃப் எம்மில் பாட்டுக்கேட்டுக்கொள்ளவும் ,பொது மக்கள்  டி வி ல எப்போ போடுவாங்கன்னு வெயிட் பண்ணவும். தமிழ்ப்புத்தாண்டுக்கு போட்டுடுவாங்க  .மணிரத்னத்தின் சாதனை அவரோட அட்டர் ஃபிளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு

diSki -

டேவிட் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/02/blog-post_5252.html