தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் 26/8/2026 முதல் வெளியான இந்தப்படம் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
2025 ம் ஆண்டில் அன்னா டோட் எழுதிய த லாஸ்ட் சன் ரைஸ் நாவலைத்தழுவி திரைக்கதை எழுதப்பட்ட படம் இது.
மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா வசனம் எழுதி மணிரத்னம் இயக்கிய தில் சே(1998) தமிழில் உயிரே என்று டப் செய்யப்பட்டு வெளியானது.அதில் தீவிரவாதியாக வரும் நாயகி மனித வெடிகுண்டாக செயல்படக்கிளம்புகிறாள்.அப்போது ஒரு வசனம் வரும்.நீ பார்க்கும் கடைசி சூர்யோதயம் இது தான்.மிகப்புகழ் பெற்ற வசனம் அது.அதையே டைட்டிலாகப்பார்த்தபோதே இது ஒரு feel குட் மூவியாக இருக்கும் என எண்ண வைத்தது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு காலெஜ் ஸ்டூடண்ட்.அம்மாவுடன் வசித்து வருகிறாள்.அம்மா பெரிய கோடீஸ்வரி+தொழில் அதிபர்.ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்கிறார்.
நாயகிக்கு இதயத்தைத்திருடாதே நாயகிக்கு இருப்பது போல் ஒரு ஜெனடிக் இஸ்யூ இருக்கிறது.ஒரு விதமான வலிப்பு நோய்.
ரெகுலராக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.அதனால் நாயகியின் அம்மா நாயகியை எங்கேயும் வெளியே அனுப்பாமல் கூடவே இருந்து அவளைப்பார்த்துக்கொள்கிறாள்.
நாயகியின் அம்மா தன் மகளுடன் தொழில் நிமித்தமாக ஒரு பிஸ்னெஸ் டீலை முடிக்க ஸ்பெயினில் இருக்கும் ஒரு அழகான தீவுக்குப்போகிறார்கள்.
நாயகன் ஒரு மீன்பிடி தொழில் செய்பவரின் மகன்.அப்பாவுக்கு உதவியாக இருக்கிறான்.தொழிலை விரிவுபடுத்த. கந்துவட்டிக்குக்கடன் வாங்கி மிகவும் பண நெருக்கடியில் இருப்பவன்.
நாயகன் ,நாயகி சந்திப்பு நடக்கிறது.ஆரம்பத்தில் மோதல்,பின் காதல் என வழக்கமான பாதையில் பயணிக்கிறது.
நாயகியின் அம்மாவால் நாயகனின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் நாயகன் ,நாயகி இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் நாயகிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல்.அந்த ஆபரேஷன் நடந்தால் நாயகிக்குப்பழைய நினைவுகள் வருவது சந்தேகம் தான்.ஆனால் வேறு வழியில்லாமல் ஆபரேசன் நடக்கிறது.
நாயகிக்குப்பழைய நினைவு வந்ததா?நாயகனை அடையாளம் தெரிந்ததா?என்பது க்ளைமாக்ஸ்.
இது போக நாயகியின் அம்மாவின் முதல் காதலனை இங்கே சந்திக்கிறாள்.அது ஒரு கிளைக்கதை.
நாயகியாக மயா ரெபிகோ இளமைத்துள்ளலுடன் நடித்திருக்கிறார்.நம்ம ஊர் சின்மயி போல இவர் ஒரு பாடகி.குழந்தைத்தனமான முகம்,இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.
நாயகனாக பெர்னாண்டோ லிண்டேஸ் பால் மணம் மாறா பாலகனாக அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி வருகிறார்.நடிப்பு ஓக்கே.ஆனால் நாயகியிடம் இருக்கும் புனிதக்காதல் இவரிடம் இல்லை.
நாயகியின் அம்மாவாக ஈவா லொங்கோரியா நடிப்பு சுமார் ரகம் தான்.ஆரம்பத்தில்.வில்லியாக மாறுவாரோ?என எதிர்பார்க்க வைக்கிறார்.
நாயகியின் தோழியாக பாப் கட்டிங்க் கெட்டப்பில் சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா கேரக்டர் டிசைனில் ஒருவர் சுட்டித்தனமான நடிப்பை வழங்ஜி இருக்கிறார்.
ஒளிப்பதிவு பிரமாதம்.நாயகிதான் சம்மர் வெக்கேசனுக்கு வந்திருக்கிறாரா?நாம் வந்திருக்கிறோமா?என எண்ண வைக்கும் காட்சிகள்.அந்தத்தீவின் மொத்த அழகையும் கண்ணுக்குள் நிறுத்தி இருக்கிறார்.
இசை ,பின்னணி இசை கச்சிதம்.எடிட்டிங்கில் பின் பாதி படம் மிக மெதுவாக செல்கிறது.படத்தின் ரன்னிங்க் டைம் 107 நிமிடங்கள்.
அன்னா க்ளாசன் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் கார்ட்சன் யங்.
சபாஷ் டைரக்டர்
1. மொஜார்க்கோ தீவின் அழகை ஒரு டூரிஸ்ட்டுக்கு சுற்றிக்காட்டுவது போல ஒளிப்பதிவு செய்த விதம்.
2 நாயகன் ,நாயகி இருவருக்குமான கெமிஸ்ட்ரி,குறிப்பாக நாயகியின் குழந்தைத்தனம்.
3 கடு கடு முகத்துடன் இருக்கும் அம்மா கேரக்டருக்கு ஒரு வலி நிறைந்த கடந்த கால நிறைவேறாத காதல் இருப்பது டச்சிங்க் சீன்
ரசித்த வசனங்கள்
1 ஒரு விஷயம் நிரந்தரமா இருக்காது என்பதற்காக அதை அனுபவிக்காமல் இருப்பதில் அர்த்தமே இல்லை.
2 என்னால் கொஞ்ச நேரம் தான் இங்கே இருக்க முடியும் .
அப்போ உன் டைமை வேஸ்ட் பண்ணாதே.
3 நம்ம கிட்டே இருப்பதை வைத்து அனுபவிக்கக்கத்துக்கனும்.
4 நான் மட்டும். ஸ்பெயினிலேயே இருந்திருந்தா உனக்கு ஏகப்பட்ட அக்கா,தங்கைகள்,அண்ணன்,தம்பிகள் கிடைச்சிருப்பாங்க.
5 ரோமியோ ஜூலியட் மாதிரி ஒரு லவ் எனக்குக்கிடைச்சிருக்கு.
ஆனா அதில் ஒருவர் இறந்துடுவாங்களே? ( பல தமிழ்ப்படங்களில் இந்த டயலாக் வந்திடுச்சு )
6 என்னோட எல்லா முதலும்,எல்லாக்கடைசியும் உன்னோட மட்டும் தான் நிகழுது.நிகழனும்.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 மூன்றாம் பிறை காலத்திலிருந்து காதல் ரீ செட் ரிப்பீட் வரை ஏராளமான படஙகள் ஞாபக மறதி கான்செப்டில் பார்த்து விட்டோம்.
2 யூகிக்கக்கூடிய திரைக்கதை அமைப்பு .
3 கடனாளியாக இருக்கும் நாயகனுக்கு நாயகி தாராளமாகப்பண உதவி செய்திருக்கலாமே?
4 நாயகியின் அம்மாவின் காதல் முறிவுக்கும் வலுவான காரணம் இல்லை.காதலன் தன் பூர்வீகத்தொழிலை விட்டு வர மாட்டேன் என்கிறான்.இவ்ளோ தானே? கோடீஸ்வரிக்கு இதை சார்ட் அவுட் பண்ண முடியாதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 18+
CPS கமெண்ட் - ஒளிப்பதிவை ரசிப்பவர்கள் ,பீல் குட் ரொமாண்டிக் மூவி பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 2.5/5
| The Last Sunrise | |
|---|---|
Release poster | |
| Directed by | Carlson Young |
| Screenplay by | Anna Klassen |
| Based on | |
| Produced by |
|
| Starring |
|
| Music by | Isom Innis |
Production companies |
|
| Distributed by | Amazon MGM Studios (via Prime Video) |
Release date |
|
Running time | 107 minutes[1] |
| Country | United States |
| Language | English |