Showing posts with label The End of Oak street(2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label The End of Oak street(2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, September 17, 2026

The End of Oak street(2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (சயின்ஸ் பிக்சன் அட்வென்ச்சர் சர்வைவல் திரில்லர்)

 


ஜூராசிக் பார்க் (1993) ரிலீஸ் ஆனபோது  டைனோசரைப்பார்த்து குழந்தைகள் மிரண்டு,வியந்து,பிரமித்துப் போனார்கள்.ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்  ஆடியன்சின் பல்ஸ் உணர்ந்து 

த லாஸ்ட் வோர்ல்ட்(1997),
ஜூராசிக் பார்க் 3 (2001),
ஜூராசிக் வோர்ல்ட்(2015),
ஜூராசிக் வோர்ல்ட் பாலிங்க் கிங்க்டம் (2018),
ஜூராசிக்  வோர்ல்ட் டொமினியன் (2021),
ஜூராசிக் வோர்ல்ட் ரீ பர்த் (2025) என தொடர்ந்து 6 படங்கள் டைனோசரை வைத்தே கல்லா கட்டினார்.இதுவரை மொத்தம் 7 படங்கள் டைனோசரை மையமாக வைத்துத்திரைக்கதை அமைக்கப்பட்ட ஸ்டீவன்  ஸ்பீல்பெர்க்  படங்கள்  ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றிருக்கின்றன.


படத்தின் இயக்குநர் டேவிட் ராபர்ட் மிட்செல்ஸ் இயக்கிய படங்களின் பட்டியலைப்பார்த்தால்  The myth of the american sleepover (2010),It Follows (2014),Under the silver Lake (2018) ஆகிய மூன்றுமே வெற்றிப்படங்கள் தான்.ஒவ்வொரு படத்துக்கும் நான்கு வருடங்கள் இடைவெளி விடும் இவர் தனது நான்காவது படத்துக்கு மட்டும் எட்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக்கொண்டார்.

92 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 14/8/2026 அன்று திரைக்கு வந்த முதல் நாளிலேயே 6.5 மில்லியன் டாலர்கள் அதாவது மொத்த பட்ஜெட்டில் 15% வசூலித்து விட்டது.தமிழ் டப்பிங் கில் தியேட்டர்களில் இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது.


ஸ்பாய்லர் அலெர்ட்


கதை நடக்கும் காலகட்டம் 1982.
நாயகி தன் கணவன் ,ஒரு மகன் ,ஒரு மகள் கொண்ட குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாள்.நாயகிக்குத்தன் கணவனுடன் கருத்து வேற்றுமை ஏற்படுகிறது.விவாகரத்து செய்து விடலாம் என்ற எண்ணம் நாயகிக்குத்தோன்றுகிறது.இந்த சமயத்தில் நாயகி குடி இருக்கும் ஏரியாவில் 2 கிமீ தூரத்தில் இருக்கும் பகுதி மட்டும்  டைம் டிராவல் மூலம் எப்படியோ 60 மில்லியன் வருடங்களுக்கு முன் போய் விடுகிறது.

மனிதன் தோன்றி  3 லட்சம்  ஆண்டுகள் ஆகின்றன.டைனோசர் தோன்றி 60  மில்லியன் வருடங்கள் ஆகிறது (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்).


நாயகி ஒரு ரைட்டர்.தான் எழுதிய நாவலைத்தொகுக்கும்  வேலையில் இருந்தபோது வீட்டுக்கு வெளியே ஒரு பிரம்மாண்டமான செடி வளர்ந்திருப்பதைப்பார்க்கிறாள்.அதைப்பற்றிய தகவலைத்திரட்ட டெனிஸ் லைப்ரரி போகிறாள்.ஆனால் அந்த லைப்ரரியில் கிடைத்த தகவல் அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.அந்த செடி 20,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என குறிப்பு சொல்கிறது.நாயகி குழப்பம் அடைகிறாள்.

டைம் டிராவல் நடந்திருப்பது. நாயகிக்கோ ,படத்தில் இருக்கும் கேரக்டர்களுக்கோ தெரியாது.படம் பார்க்கும் ஆடியன்சுக்கு புரிந்திருக்கும்.


மிகப்பெரிய ஒரு ஒளிவட்டம் அந்தப்பகுதியை சூழ்கிறது.எதுவோ விபரீதமாக நடக்கப்போகிறது என்பதை நாயகி உணர்கிறாள்.

திடீரென டைனோசர்கள் ,அனக்கோண்டா போன்ற விசித்திர உயிரினங்கள் வருகின்றன.மனிதர்களைத்தாக்குகின்றன.அவைகளிடமிருந்து நாயகியின் குடும்பம் எப்படித்தப்பித்தது?எந்த எமோஷனல் பாண்டிங்கும் இல்லாத நாயகியின் குடும்பம் இந்தப்பிரச்சனையால் எப்படி பாசம்,அன்பு கொண்டு மாறுகிறது என்பதையும் சொல்வதுதான் மீதித்திரைக்கதை.


நாயகியாக த ஒடிஸ்சி பட நாயகி அன்னே ஹாத்வே பிரமாதமாக நடித்திருக்கிறார்.விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதாபைஜூ எப்படி மொத்தப்படத்தையும் தாங்கி நிற்கிறாரோ அது மாதிரி இந்தப்படத்தில் இவர் தூணாக நின்று  தாங்குகிறார்.சமீபத்தில் நெட் பிளிக்சில் ரிலீசான த லாஸ்ட் ஹவுஸ் படம் போல நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி ?என்ற பேசிக் ஒன் லைன் தான் இந்தப்படமும்.


நாயகியின் கணவனாக ஈவன் மெக்ரெகர் ,மகளாக மெய்சி ஸ்டெல்லா ,மகனாக கிறிஸ்டியன் கான்வெரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அனைவர் நடிப்பும் கச்சிதம்.


டெக்னிக்கல் அம்சங்களான ஒளிப்பதிவு ,எடிட்டிங் ,சி ஜி ஒர்க் , சவுண்ட் டிசைனிங் எல்லாம் கன கச்சிதம்.பின்னணி இசை மட்டும் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம் என எண்ண வைக்கிறது.படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடங்கள்.

சபாஷ் டைரக்டர்

1.  நீச்சல் குளத்திலிருந்து அனக்கோண்டா வரும் காட்சி பிரம்மாண்டம்.

2 டைனோசர்சை ஜாம்பி ஸ்டைலில் காட்டியது புதுசாக இருந்தது.ஜாம்பி படங்களை ரசித்துப்பார்ப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும்

3 அக்கா,தம்பி இருவரும் எந்த வித எமோஷனல் பாண்டிங்கும் இல்லாமல் இருந்து விட்டு ஒரு ஆபத்து வந்ததும் சேர்ந்து கொள்வது நமக்கு நல்லதொரு எமோஷனல் கனெக்ட்டைத்தருகிறது.

4 பொதுவாக டைனோசர்ஸ் படங்களில் டைனோசர்சின் பிரம்மாண்டம் தான் முன்னிறுத்தப்படும்.ஆனால் இதில் ஆபத்தால் அதுவரை  பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை காட்டிய விதம் புதுசாக இருந்தது.

5 டைனோசர்களிடமிருந்து நாயகியும் ,குடும்பத்தாரும் எப்படித்தப்பிக்கிறார்கள் என்ற க்ளைமாக்ஸ் காட்சி அருமை.

6 அந்த நாய்க்குட்டியின் ஒரு சாகசம் தியேட்டரில் ஆரவாரமான வரவேற்பைப்பெற்ற ஒரு காட்சி.பெட் லவ்வர்சுக்கு மிகவும் பிடிக்கும்.

7  கரண்ட் கட் ஆகி விட்டதால் இனிமேல் யாரும் பிரிட்ஜைத்திறக்க வேண்டாம் என்று சொன்ன நாயகியே ஒரு கட்டத்தில் பிரிட்ஜைத்திறக்கும் தருணம் வரு போது நடக்கும் சம்பவம் காமெடிக்கலக்கல்.தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது.

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 படத்தில் எந்த வித ட்விஸ்ட் அண்ட் டர்ன்சும் இல்லை.டெம்ப்ளேட்டான திரைக்கதை ,யூகிக்க முடியும் சம்பவங்கள் வருவது மைனஸ்.

2   குழந்தைகள் ரசிக்கின்ற ஒரு டைனோசர் படத்தில் டைனோசர்கள் உறவு கொள்வது போல் ஒரு 18+ காட்சி வருவது தேவை இல்லாதது.தவிர்த்திருக்கலாம்.தாவணிக்கனவுகள் படத்தில் கே பாக்யராஜ் செய்வது போல் சில்லறைக்காசுகளை சிதற விட்டுக்குழந்தைகளை எடுக்க சொல்லவா முடியும் ?

3  டைனோசர் படங்களில் நடிக்கும் நடிகர்கள் கற்பனையாக டைனோசர் இருப்பது போல் பாவித்து வசனம் பேசி குறிப்பிட்ட திசை நோக்கி நடிக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் டைனோசர் ஒரு பக்கம் இருக்கு,இவங்க வேற எங்கோ பார்த்து  வசனம் பேசுகிறார்கள்.ஜூராசிக் பார்க் 1990 களில் வந்த படம் தந்த இம்ப்பேக்ட்டை இவ்வளவு வருடங்கள் கழித்துத்தொழில் நுட்பங்கள் வளர்ந்தும் அந்த துல்லிய அனுபவத்தைத்தர முடியவில்லை.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+.  ( டைனோசர் உறவு கொள்வது போல் ஒரே ஒரு காட்சி)

CPS கமெண்ட். - ஜூராசிக் பார்க் ரசிகர்கள் ,குழந்தைகளுடன் குடும்பமாகப்பார்க்கத்தக்க ஒரு நல்ல படம் தான் இது .ரேட்டிங் 2.5 / 5