Showing posts with label SIMRAN. Show all posts
Showing posts with label SIMRAN. Show all posts

Thursday, January 10, 2013

சிம்ரனின் பர்சனல் டைரியிலிருந்து 26 ரகசியத்தகவல்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNgizQOi6B9erA4uAF9XrlcZmjRM1qBrnQ5d0KsD4GZVGJYXuw10Ip06I-vfGopMzrNq4OQBZ9yAl00qklzWlr11vOQPAAtzPXgy2qvSHy7sJJL2dwgOttxhCmlze4T_e-6L6YcJRTRfmG/s1600/2773475_f520.jpg

சிம்ரனைப் பற்றி... A To Z

A ஆப்பிள், ஏரோப்ளேன் பிசினஸ் எல்லாம் கிடையாது. எனக்குப் பிடிச்சது Axe. கோடரி. அது உழைப்பின் சின்னமாச்சே. எங்க வீட்லகூட ஒண்ணு இருக்கு. தற்காப்புக்காக வெச்சிருக்கேன். (அப்பாஸை மிஸ் பண்ணிட்டீங்களோ?)


 B நிச்சயமா 'பெட்’ இல்லை. Books. நான் நிறையப் படிப்பேன். காமிக்ஸ், சினிமா புக்னு கையில் சிக்கிறதெல்லாம் வாசிப்பேன். (பாத்ரூம்ல பாடுவீங்களா?)
C- Cap. என்னோட தலைமுடி கொஞ்சம் லூஸா 

இருக்கிறதால, கலர் கலரா கேப் வாங்கிப் போட்டுட்டு ஊர் சுத்துவேன். என்கிட்ட மொத்தம் 20 தொப்பி இருக்கு. ஆனா, எனக்கு யாரும் குல்லா போட முடியாது... ஆமா! (கேண்டில் லைட் டின்னருக்கு யாரைக் கூப்பிடுவீங்க?) 


D - Dog. எனக்கு நாய் பிடிக்காது... (என்று சொல்கிற முதல் நடிகை.) ஆனா, என் தங்கச்சிங்க நோவல், ஜோதி ரெண்டு பேருக்கும் நாய்தான் உயிரே. ஒரு வெள்ளை பொமரேனியன் எங்க வீட்ல வளர்த்து அது கொஞ்ச நாள்ல செத்துப்போச்சு. அந்த சோகம் மறக்க முடியாதது. (டிஸ்கொதே அடிக்கடி போறீங்களாமே?)E - Eye கண்தானே பிரதானம். கண்கள்தானே நம்மோட முதல் கம்யூனிகேஷன். ஒரு ஆளையே தீர்மானிச்சுரலாம், அவன் கண்களைப் பார்த்து. (பார்வையே சரியில்லையே!) எனக்குக் கண்கள் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருந்தா நல்லாஇருக்கும்னு நினைச்சுப்பேன். (நீங்க கண்ணாடி போடுறது தலைவலிக்குத்தானே?)

F - Fans... ரசிகர்கள்தான். எவ்ளோ லவ் லெட்டர்ஸ், போன் கால்ஸ், அப்புறம் யீறீணீரீ... நம்ம தேசியக் கொடி. கிரிக்கெட் மேட்ச் பார்க்கறப்போ நம்ம டீம் ஜெயிச்சு கப் வாங்குறப்போ வர்ற சந்தோஷம் இருக்கே... நான் சச்சின் ரசிகை தெரியுமோ? (உங்களுக்கு ஃப்ரீடம் இருக்கா?)


G - Gum. வீட்ல என் டாடி அசோக் ரவிசங்கர் நோவல் லைசென்ஸோட ஒரு துப்பாக்கி வெச்சிருக்கார். கோபம் வந்தா 'ஷூட் பண்ணிருவேன்’னு மிரட்டுவார். அதோட சரி. ஆயுத பூஜைக்கு சாமி கும்பிடுறதுக்கும் வீட்ல அலங்காரமா நிக்கிறதுக்கும்தான் அந்தத் துப்பாக்கி. எனக்குக்கூட ஷூட்டிங் கத்துக்கணும்னு ஆசை. சினிமா ஷூட்டிங்தான் வாய்ச்சது. (உங்களுக்கு குளூகோஸ் எது?)


H - Home என் வீடு ரொம்ப ஸ்பெஷல். மும்பையில் இருக்கிற எங்க வீட்டுக்கு 'மங்கள்மூர்த்தி நிவாஸ்’னு பேரு. கணபதி இல்லம்னு தமிழ்ல சொல்லலாம். வீடு முழுக்கக் கலைப் பொருட்கள் சேகரிச்சு வெச்சிருக்கேன். புத்தர் கால செப்புத் தகடு மாதிரி அபூர்வமான சமாசாரம்கூட உண்டு. சென்னையில ஒரு வீடு பிடிக்கணும். (ஹோட்டல்ல ரூம் போட்டுப் போட்டுப் போரடிக்குதா?)


I - Ice வைக்கிற பார்ட்டிகளைச் சுத்தமா பிடிக்காது. ஆனா, ஐஸ்க்ரீம்ஸ்... மொத்த சொத்தையும் எழுதித் தந்துடுவேன். அவ்ளோ பிடிக்கும். சினிமாவுக்கு வந்தப்புறம் டயட், அது இதுனு ஐஸ்க்ரீமுக்குத் தடா போட்டுட்டாங்க. அதனாலென்ன, திருட்டுத்தனமா டேஸ்ட் பண்ணிடுவேன்! (ஐடென்டி கார்டு வாங்கிட்டீங்களா?)


J - Jokes. ஒரு மனைவி, கணவன்... அவனோட ஃப்ரெண்ட். மூணு பேரும் ஸ்விம்மிங்பூல் போனாங்க. ஃப்ரெண்டுக்கு அந்தப் பொண்ணு மேல ஒரு கண்ணு. அவளை எப்படியாவது தொட்டுரணும்னு தண்ணிக்குள்ள நீந்தறப்போ உள்நீச்சல்ல அவளைத் தொட்டுட்டு வந்துட்டான். கரை ஏறினதும் அந்தக் கணவன் சிரிச்சானாம். 'பையா... Your idea is fine.. But the leg is mine-னு சொல்ல...’ பார்ட்டி பேஜாராயிட்டான். (பாரதிராஜா படத்துல ஜாக்கெட் போட மாட்டீங்களா?)


K - Kite... காத்தாடி. என் தம்பி காத்தாடி விடுறதுல கில்லாடி. ஃப்ரீயா இருக்கிறப்போ நானும் அவன்கூடச் சேர்ந்துக்குவேன். அறுபட்டு தானாப் பறக்கிற காத்தாடியைப் பார்க்கிறப்போ... அது யாரோ ஒருத்தரோட வேதனைனு புரியும். நம்ம கையில் சிக்கிட்டா... அதோட சந்தோஷம் அனுபவிச்சாதான் புரியும். (குறிப்பா எதைச் சொல்றீங்க..?)


L - Lion. ஷூட்டிங்ல என்னைப் பயமுறுத்தணும்னா, 'நாளைக்கு குஷால்தாஸ் கார்டன்ல சிங்கத்தோட ஒரு ஸீன் இருக்கும். சிங்கத்தோட நீங்க வாக்கிங் போற மாதிரி ஒரு ஷாட். ரெடியா இருங்க...’னு அசிஸ்டென்ட்ஸ் சொல்லிட்டுப் போயிடுவாங்க. அன்னிக்கு ராத்திரி எல்லா சாமியையும் கும்பிட்டுட்டு இருப்பேன். (லவ் ஞாபகம் வரலியா?)


M - Man. நல்ல மனுஷங்களைப் பார்க்கறதே அபூர்வமாயிருச்சு. என்னோட 'அவர்’ - ஒரு ஹீரோ மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லை. ஆனா, ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாவாவது இருக்கணும். மனசாரப் பழகணும். ஹ்யூமர்சென்ஸ் வேணும். பார்க்கிறத்துக்கு அம்சமா இருக்கணும். சினிமா ஆளாக்கூட இருக்கலாம். ஆனா, நம்பர் டூவாக நான் ரெடி இல்லை. (நிலாச் சோறு சாப்பிட்டு இருக்கீங்களா?)


N - Nail. நீளமா நகம் வளர்க்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, டென்ஷன் வந்தா நகம் கடிக் கிற பழக்கத்தால எல்லாம் அவுட். ஒரு பெண் தப்பிக்க நகத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த லாம்னு காந்தித் தாத்தா சொல்லியிருக்கார். எனக்கு அந்த சான்ஸ் வரலை. வந்தா நகம் இல்லை! (நைட் கனவு வருமா?)


O - Ocean. பொண்ணுங்க மனசைக் கடலுக்கு ஒப்பிடுவாங்க. அதுக்குத்தான் எவ்வளவு சக்தி. காதலுக்கும் கவிதைக்கும் கடல் ஒரு வரம். பீச்ல வாக் போறதுன்னா செம ஜாலியாயிருவேன். (ஒன்... டூ... த்ரீ... எதுவரைக்கும் தெரியும்?)


P - Piano.. எவ்ளோ அற்புதமான இசைக் கருவி. என் தாத்தா நல்லா பியானோ வாசிப்பாராம். அவர் இறந்ததுக்கு அடுத்த வருஷம் அதே நாள் நான் பிறந்தேன். அதனால எனக்கு எங்க வீட்டு பியானோ மேல தனி சென்டிமென்ட்! (ப்ளேபாய்ஸ்பற்றி அபிப்பிராயம் என்ன?)


Q - Queen... மகாராணியை இது வரை நேர்ல பார்த்தது இல்லை. பாட்டி சொல்ற கதை. பழைய சினிமா, ஹிஸ்ட்ரி புக் இது மூணும்தான் மகாராணிபத்தி எனக்குத் தெரியவெச்சது. இப்போ எலிசபெத் ராணி இந்தியாவுக்கு வர்றாங்கன்னதும் அவங்களைப் பார்க்க முடியுமானு ஆசை வந்தது. 'எங்களைக் கேட்டுத்தான் சூரியன் எழும்... விழும்’னு சொன்ன பரம்பரையாச்சே! ('க்யூ’ல எங்காவது நின்னது உண்டா?)


R - Rose.. ஆயிரம் பூக்கள் இருந்தாலும் அழகு ரோஜாதான். ஊட்டி ஷூட்டிங்னா என்னைப் பிடிக்கவே முடியாது. நைஸா பொட்டானிக்கல் கார்டன் ஓடிருவேன். 'ரோசாப்பூ... சின்ன ரோசாப்பூ...’ பாட்டு என்னோட லேட்டஸ்ட் ஃபேவரைட்! (உங்களை ரௌடிங்க மிரட்டலையா?)


S - Snake.. எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. பாம்புன்னா அலர்ஜி. அப்பப்போ கனவுல வந்து பயமுறுத்தும். (அதுக்கு வேற அர்த்தம் தெரியுமா?)


T - Telephone... போன் பில் அதிகமா கட்டுறதுல நானும் ஒருத்தி. யாராவது ஒரு ஃப்ரெண்டுக்குப் பேச ஆரம்பிச்சா... ரெண்டு, மூணு மணி நேரத்துக்குக் குறையாம வைக்க மாட்டேன். எனக்கு முதல் சான்ஸ் கிடைச்ச நியூஸ்கூட போன்லதான் வந்தது! (உங்க டார்கெட் என்ன... நம்பர் ஒன்னா?)


U - Umbrella... நல்ல மழையில கையில குடையோட நடக்கிறதுன்னா தனி சுகம். எலெக்ஷன்ல குடையைச் சின்னமா தருவாங்க. நல்லாப் பேசுவாங்க, மழை நின்னதும் குடையை மடக்கிடற மாதிரி... தேர்தல் முடிஞ்ச தும் மக்களை மறந்துடுவாங்க! (அப்பர் பெர்த் பிடிக்குமா... இல்லே லோயர் பெர்த்தா?)


V - Vegetarian.. நான் சாப்பாட்டுல வெஜ். அதுவும் முருங்கைக்காய் சாம்பார்னா கேக்கவே வேணாம். (பாக்யராஜ் படம் பார்ப்பீங்களா?)


W - Watch... எனக்கும் வாட்ச்சுக்கும் ராசியே கிடையாது. வாங்கின வாட்ச் அத்தனையும் தொலைச்சுட்டேன்.என்  வாட்ச்சுகளைத் திருடறதுக்குன்னே ஒருத்தன் பொறந்திருக்கான்போல... வெறுத்துப்போய் வாட்ச் கட்டறதையே விட்டுட்டேன். (வாட்ச்மேனைக் காக்கா பிடிக்கறது உண்டா?)


X - Xmas... நான் விரும்பிக் கொண்டாடுற ஃபங்ஷன் ஒண்ணு, தீபாவளி. இன்னொண்ணு கிறிஸ்துமஸ். நான் ஸ்கூல் படிக்கிறப்போ கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டு ஆடியிருக்கேன். (டபுள் எக்ஸ், ட்ரிபிள் எக்ஸ்னா என்ன?)


Y - Yellow... மஞ்சள் நிறம் மங்கலத்தோட அடையாளம். மஞ்சள் பூசிக்கற பொண்ணுங்களைப் பார்க்கவே ஆசையா இருக்கும். (யோகா செய்றது உண்டா?)


Z - Zero... நூறு, ஆயிரம், லட்சம், கோடில வர்ற ஜீரோவெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! (வரி கட்டுறீங்களா?)


- செல்லா

நன்றி - விகடன்

Thursday, December 30, 2010

சினிமா ஜோக்ஸ் + அரசியல் ராக்ஸ் ( ராஸ்கல்ஸ்)

http://www.viparam.com/thumbnail.php?file=1_626643737.jpg&size=article_medium
1.டைரக்டர் சார்,உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி “ஹை ஹை “னு டைட்டில் வெச்சு இருக்கீங்களே,ஏன்?

”நல்லா ஓடட்டும்னுதான்”

2. இன்ஸ்பெக்டர் - சட்டம் தன் கடமையை செஞ்சே தீரும்.

கைதி - ரொம்ப நன்றி சார்,இந்தாங்க ரூ 1000 லஞ்சம்,என்னை விட்டுடுங்க.

3.இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?

டெயிலி ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே....

4. ஜட்ஜ்  - ரூ 1000 பிக்பாக்கெட் அடிச்ச உனக்கு 6 மாத சிறை தண்டனை.

கைதி - ஆமா,கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்களை எல்லாம் விட்டுடுங்க,பிசாத்து 1000 அடிச்சவன்,நோ எண்ட்ரில போறவன்னு இளிச்சவாயனாப்பார்த்து தண்டனை குடுங்க.

5. அந்த ஹீரோ ரொம்ப சிம்ப்பிள்,யூனிட்ல மத்தவங்க சாப்பிடற சாப்பாட்டைத்தான் அவரும் சாப்பிடறாராம்.

அடடா,அது எச்சில் ஆச்சே,வேற கொண்டு வரச்சொல்லி சாப்பிட வேண்டியதுதானே....
http://vanniyan.com/newsimages/cinema/Tamil/112010/Simran_actress.jpg
6. மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே?

அடடா... ஓடற மெயில்னு நினைச்சுட்டீங்களா?மெயில் ஐ டி MAIL I D) இருக்குன்னு சொன்னோம்.

7. டியர், நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது....

4 நாள் வெயிட் பண்ணுங்க..என் கணவர் ஃபாரீன் போனதும் ஃபோன்  பண்றேன்.

8.  தலைவர் வீட்டுக்கு போனேன்,பொங்கல் குடுத்தாரு...

ஆச்சரியமா இருக்கே,, அவரு வழக்கமா எல்லாருக்கும் அல்வா தானே தருவாரு..?

9. குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,

யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?

10.  நிருபர்  - மேடம்,திடீர்னு ஏன் சின்ன திரைக்கு நடிக்க வ்ந்துட்டீங்க?

நடிகை - பெரிய திரைல துரத்தி விட்டுட்டாங்க...ஆனா இதை ஆஃப் த ரெக்கார்டா வெச்சுக்குங்க. (  OFF THE RECORD) . பேட்டில எல்லா வீடுகள்லயும் ரீச் ஆக அப்படின்னு போட்டுக்குங்க....