Wednesday, September 16, 2026

Vadala(2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்

 



நம்ம ஊரில் பிரபு-குஷ்பூ ஜோடி போல விஜய்காந்த் - ராதிகா  ஜோடி போல தெலுங்கில் புகழ் பெற்ற ஜோடி ஜெகபதி பாபு -லயா ஜோடி.இவர்கள் ஜோடியாக நடித்த ஆக்சன் டிராமாவான மனோகரம் (2000), ரொமாண்டிக் டிராமாவான நாள் உன்ன பிரேமா(2001),காமெடி டிராமாவான ஹனுமான்  ஜங்க்‌ஷன் (2001),கமர்ஷியல் மசாலாவான சிவராமராஜூ  போன்ற நான்கு படங்களும் ஹிட். லேட்டஸ்ட்டாக இவர்கள் ஜோடி சேர்ந்திருக்கும் படம் தான்  வடலா.


ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு டாக்டர்.தன்னுடைய அப்பா, மனைவி ,ஒரு மகன் ,ஒரு மகள் என சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.19 வருட இல்லற வாழ்க்கை மிக இனிமையாகப்போய்க்கொண்டிருக்கிறது மகனும்,மகளும் டீன் ஏஜில் இருக்கின்றனர்.


நாயகன் காரில் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் விபத்துக்குள்ளான  ஒரு காரைப்பார்க்கிறான்.அதில் டிரைவர் சீட்டில் நாயகி மயக்க நிலையில் கிடக்கிறாள்.அவளைத்தன் காரில் ஏற்றித்தன் ஹாஸ்பிடலிலேயே சேர்க்கிறான்.

நாயகிக்கு காலில் அடிபட்டு பிராக்சர் ஆகியிருக்கிறது.ஒரு வாரம் ட்ரீட்மெண்ட் தந்தால் குணமாகி விடுவாள்.நாயகன் நாயகிக்கு சுய நினைவு வந்ததும் அவளுக்கு ஆறுதல் கூறி செல்கிறான்.

இந்த ஒரு வாரத்தில் தினசரி நாயகன் வந்து நாயகியை சந்தித்து கேரிங்காக இருப்பது நாயகிக்குப்பிடித்து விடுகிறது.வேண்டுமென்றே கட்டிலில் காலை இடித்துக்கொண்டு மீண்டும் அட்மிட் ஆகி ட்ரீட்மெண்ட்டை மேலும் 15 நாட்கள் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கொள்கிறாள்.

நாயகி ஹாஸ்டலில் தங்கி காலேஜில்  படிக்கும் மாணவி .இதை அறிந்ததும் நாயகன்  எங்க அபார்ட்மெண்ட்லயே ஒரு வீடு இருக்கு அங்கே வேணா தங்கிக்கொள் குறைவான வாடகை  தான் என்கிறான்.நாயகியும் சம்மதிக்கிறாள்.

இதற்குப்பின் நாயகனின் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் ,சம்பவங்கள் தான் மீதிக்கதை.


மேலே சொன்ன கதை ஒரு டிராக்.இன்னொரு டிராக்கில் ஒரு வீட்டில் ஒரு விபத்து நடந்து இருவர் இறந்து கிடக்கிறார்கள் .அது பற்றி போலீஸ் விசாரிக்கிறது
இந்த கேஸ் இன்வெஸ்டிகேசனில்  ஒரு பெண்ணின் அப்பாவுக்கு முதல் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொள்கிறார்.ஆனால் மகளுக்கு அப்பாவின் இந்த செயல் பிடிக்கவில்லை.மகள் தான் திட்டமிட்டு இந்த விபத்தை நிகழ்த்தி இருப்பாரோ என்ற கோணத்தில் போலீஸ் சந்தேகிக்கிறது.இந்த கேஸ் இன்னொரு டிராக்.

நாயகன் ,நாயகி டிராக்கிற்கும் ,இந்த டிராக்கிற்கும் என்ன தொடர்பு?என்பது சஸ்பென்ஸ்.

நாயகனாக   ஜெகபதிபாபு குணச்சித்திரக்கதாப்பாத்திரத்தில் மிளிர்கிறார்.தமிழ் ஆடியன்ஸ் பெரும்பாலும் வில்லன்  ரோலில் பார்த்திருப்போம்.இதில் நடுத்தர வயது நாயகனாக மிளிர்கிறார்.

நாயகனின் மனைவியாக லயா குடும்பப்பாங்கான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக ஹிரித்திகா ஸ்ரீனிவாஸ் வில்லித்தனமான நெகடிவ் ரோலில் மிரட்டி இருக்கிறார்.படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை ஆக்ரமிப்பது இவர்தான்.படையப்பா நீலாம்பரி போல வில்லி ரோல்.

கேஸ் இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீசராக ஸ்ரீனிவாஸ் அவசரலா நடித்திருக்கிறார் 

நாயகனின் மகன்,மகள் கேரக்டரில் நடித்தவர்கள்,மற்றும் மற்றக்கதாப்பாத்திரங்களில் நடித்த அனைவருமே அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பிளஸ் பாய்ண்ட் அதன் ரன்னிங் டைம். 109 நிமிடங்கள் தான்.குயிக் வாட்ச் ஆகவே பார்த்து முடித்து விடலாம்.


ஒளிப்பதிவு ,எடிட்டிங், இசை போன்ற டெக்னிகல் அம்சங்கள் சராசரி தரம்.


கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்   வம்சி கிருஷ்ணா அகெல்லா என்கிற  அகெல்லா வி.கிருஷ்ணா


சபாஷ் டைரக்டர்

1. முதல் பாதி படம் வரை இது கலாபக்காதலன் ,உயிர்  ஆகிய  படங்களை ப்போல  வில்லி நாயகனை விரும்பும் கதையோ என எண்ண வைத்துப்பின் ட்விஸ்ட் கொடுத்தது.


2 இன்னொரு டிராக்கில் வரும் போலீஸ் விசாரணைக்கதையை மெயின் கதையோடு கனெக்ட் பண்ணியது.

3 நாயகனின் அப்பாவை நாயகி கொலை செய்யப்போவதாக மிரட்டுவது,  சைக்கோத்தனம் பிரமாதம்.

4.  நாயகனுக்கும் ,நர்சுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நாயகி நாயகனின் மனைவியை நம்ப வைக்கும் காட்சி திரில்லிங்க்.

5 தெலுங்குப்படங்கள் என்றாலே அடிதடி ,வெட்டு,குத்து என்று பார்த்து சலித்த நமக்கு வன்முறை இல்லாத திரில்லர் கதை புதிய அனுபவம்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 காரில் வெளியே சென்ற நாயகனை மீண்டும் வீட்டுக்கு வர வைக்க நாயகி போடும் திட்டம் ஏற்கனவே  அஜித் நடித்த ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் போடும் திட்டம் போலத்தான்.

2 நாயகன் தன் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதைப்பார்த்துப்பொறாமைப்படும் நாயகி க்ளைமாக்சில் நாயகனை அப்பா ஸ்தானத்தில் தான் பார்த்தேன் என பல்டி அடிப்பது காதில் பூ.

3 இன்னொரு டிராக்கில். வரும் விபத்துக்கேஸ் மர்மம் விலகும்போது சப்பென்று போய் விடுகிறது.அதில் க்ரைம் சம்பவம் எதிர்பார்க்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டார்கள்.


அடல்ட் கண்ட்டெண்ட்.  வார்னிங். 16+


CPS கமெண்ட் -  பரபரப்பான எதிர்பார்க்க வைத்த முதல் பாதி.மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த பின் சுவராஸ்யம் குறைந்த பின் பாதி  என ஒரு சராசரி படம் தான். ரேட்டிங். 2.5/5

Tuesday, September 15, 2026

அரூபி(2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் திரில்லர்)@அமேசான் பிரைம்,சிம்ப்ளி சவுத் ஓடிடி

 


7/7/2026 முதல் கேரளத்திரையரங்குகளில் வெளியாகி பி,சி செண்ட்டர்களில் ஹிட் ஆன இந்த லோ பட்ஜெட் படம் இப்போது அமேசான் பிரைம்,சிம்ப்ளி சவுத் ஆகிய இரு ஓடிடி தளங்களில் தமிழ் டப்பிங்கில்   காணக்கிடைக்கிறது.


அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் ,2017ம் ஆண்டு வெளியான சமூக விழிப்புணர்வுப்படமான அரூபி என்ற தமிழ்ப்படத்தின் கதைக்கும் ,இந்த மலையாளப்படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.இரண்டும் வேறு வேறு கதைகள்.


ஸ்பாய்லர் அலெர்ட்


மெயின் கதைக்குப்போகும் முன் நாயகன் சிறுவனாக இருந்தபோது அம்மா சொன்ன ஒரு வட்டார வழக்குக்கதையைப்பார்ப்போம்.இது மாதிரி கதைகள் பல கிராமங்களில் சொல்லப்படுவதுண்டு.நிஜமாகவே நடந்த கதையா?புனைவுக்கதையா?தெரியாது.ஆனால் சுவராஸ்யமாக இருக்கும்.இந்தக்கதை படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை விரிவாகப்பார்த்து விடுவோம்.

180 வருடங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் கதை இது.பத்மினி என்று ஒரு பேரழகி இருந்தாள்.அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான்.ஒரு முறைப்பையனும் இருந்தான்.பத்மினியின் காதல் விவகாரம் முறைப்பையனுக்குப்பிடிக்கவில்லை.காதலனுடன் பத்மினி ஊர் சுற்றுவதைப்பார்த்துக்கடுங்கோபம் கொண்டு பலமுறை அவளைக்கண்டித்திருக்கிறான்.ஆனால் பத்மினி அவனை சட்டை செய்யவில்லை.

பொறுத்துப்பொறுத்துப்பார்த்த முறைப்பையன் ஒரு நாள் பத்மினியை பலாத்காரமாக அடைய முயன்று தோற்கிறான்.இந்தக்களேபரத்தில் பத்மினியை அவன் கொலை செய்து விடுகிறான்.

கன்னி கழியாமலேயே இறந்து விட்ட பத்மினி பேயாக மாறி அந்த ஏரியாவில் தனியாக இரவில் சுற்றும் இளைஞர்களை ஒவ்வொருவராக பலாத்காரமாக உறவு கொண்டு கொன்று விடுகிறது.

இதனால் கலவரம் அடைந்த ஊர் மக்கள் ஒரு சாமியார் துணையுடன் பத்மினிப்பேயை ஒரு சாமி சிலைக்குள் அடக்கி ஒரு பெட்டியில் வைத்துப்பூட்டி விடுகிறார்கள்.பத்மினிப்பேய் வெளியே வந்தால் ஆண்களுக்கு மீண்டும் ஆபத்து வரலாம்.


இது தான் நாயகனின் அம்மா நாயகனுக்கு சொன்ன கதை.

இப்போது நாயகன் வளர்ந்து விட்டான்.ஒரு கம்பெனியில் முக்கியப்பொறுப்பில் இருக்கிறான்.சக ஊழியரைக்காதலிக்கிறான்.காதலி தான் படத்தின் நாயகி 

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் க்கு மண்டைக்குள் ஒரு குரல் கேட்குமே?பை போலார் டிஸ் ஆர்டர் என்று டாக்டர் சொல்வார்களே?மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே நாவலில் நாயகனின் மண்டைக்குள் ஒரு குரல் கேட்குமே? அது போல் நாயகனுக்கு அடிக்கடி மண்டைக்குள் அம்மா சொன்ன சில விஷயங்கள் எதிரொலிக்கிறது.இதனால் நாயகன் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிறான்.நாயகியுடன் சரியாகப்பேசுவது இல்லை.

இரண்டு திருடர்கள் தெரியாத்தனமாக  பெட்டிக்குள் ,சிலைக்குள் இருக்கும் பத்மினிப்பேயை ரிலீஸ் செய்து விடுகிறார்கள்.

ஒரு முறை நாயகன் நாயகியிடம் இவள் தான் அந்த பத்மினி என அறிமுகம் செய்து வைக்கிறான். ஆனால் அவன் அருகில் யாரும் இல்லை.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக  வைசாக் ரவி கச்சிதமாக நடித்திருக்கிறார்.குழப்பமான மன நிலையைப்பிரதிபலிக்கிறார்.

நாயகியாக நேகா சாவ்லா திறம்பட நடித்திருக்கிறார்.காதகன் தன்னைக்கண்டு கொள்வதில்லையே என ஆதங்கப்படுவது கச்சிதம்.

மெயின் கேரக்டர்கள் போக சாக்‌ஷி படாலா,ஜாய் மேத்யூ ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசையில் இன்னமுமே மிரட்டி இருக்கலாம்.

ஒளிப்பதிவு ,எடிட்டிங் ,சவுண்ட் டிசைனிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிலாஷ் வாரியர்.


சபாஷ் டைரக்டர்

1 ஓப்பனிங்கில் வரும் அந்த பத்மினிப்பேய்க்கதையை அனிமேஷனில் சொன்ன விதம் அருமை.மொத்தப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை விட பத்மினிப்பேய் போர்சன் நன்கு மனதில் பதிந்தது.

2. லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் போஸ்டர் டிசைன் ,ஸ்டில்ஸ் எல்லாம் ரிச்சாக இருந்தன.

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம்.ஆனால் அது சிலருக்குப்புரியாமல் போகலாம் குடைக்குள் மழை ,ராட்சசன் ,மயக்கம் என்ன? ஆகிய படங்கள் பார்த்திருந்தால் எளிதில் புரியும்



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 அனிமேஷனில் வரும் முதல் 20 நிமிடக்கதை ,க்ளைமாக்சில் வரும் அந்த 10 நிமிட ட்விஸ்ட் சீன் இந்த இரண்டைத்தவிர படத்தில் வரும் இடைப்பட்ட 2 மணி நேரம் போர்தான்.சுவராஸ்யம் இல்லை.

2 பத்மினிப்பேய் கன்னி கழியாமல் இறந்து விட்டதால் பேயாகத்தன் காதலன் கூடக்கூடாமல் கண்டவன்களுடன் கூடுவது ஏன் ?


3 பாலியல்  வன் கொடுமை என்பது ஆண் பெண்ணுக்கு செய்வது.பெண் விரும்பினால் வரத்தயாராக ஒரு லட்சம்  ஆண்கள் தயாராக இருப்பார்களே? எதற்காக பத்மினிப்பேய் ஆண்களை பலாத்காரம் செய்யனும் ?

4 நாயகனுக்கு அடுத்த இடத்தில் நல்ல பொசிஷனில் இருக்கும் நாயகியை நாயகன் தன் இடத்தைப்பிடித்து விடுவாளோ ?என்று பொறாமைப்பட்டு அவளுடன்  சண்டை போடுவது அர்த்தமற்றது.திரைக்கதையில் சரக்கு இல்லாததால் என்னன்ன கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க?


அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங். 16+

CPS  கமெண்ட் - பேய்க்கதை என்பதால் ஜம்ப்ஸ்கேர் ,திகில் ,படபடப்பு ஊட்டும் காட்சிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.கிளாமர் உண்டு.திகில் இல்லை.ஆண்களுக்குப்பிடிக்கும்.ரேட்டிங் 2.5 / 5

Monday, September 14, 2026

மகுடம் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (கேங்க்ஸ்டர் ஆக்சன் மசாலா)@அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஓடிடி

 


விஷாலின் திரைவாழ்க்கையில் எதிர்பாராத மெகா ஹிட் படம் மார்க் ஆண்ட்டனி.15 வருடங்களுக்கு முன் ஷூட்டிங்க் முடிந்து பல பிரச்சனைகளால் கிடப்பில்போடப்பட்டு பின் ரிலீஸ் ஆகி எதிர்பாராத வெற்றி பெற்ற காமெடிக்கலக்கல்  கமர்ஷியல் மசாலாப்படம் மதகஜ ராஜா.இரு தொடர் வெற்றிகளுக்குபின் ரிலீஸ் ஆகும் படம் என்பதாலும் விஷால் இயக்கும் முதல் படம் என்பதாலும் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம்.ரசிகர்களின் எதிர்பார்ப்பைப்பூர்த்தி செய்ததா? என்பதைப்பார்ப்போம்



ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் ஒரு மெடிக்கல் ரெப்.தன்னிடம் கார் இருப்பதாகப்பொய் சொல்லி நாயகியைத்திருமணம் செய்கிறான்.திருமணத்துக்குப்பின் என்னென்னவோ பொய் சொல்லி சமாளிக்கிறான்.ஒரு கட்டத்தில் கார் வாங்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை.பல கார் ஷோர் ரூம்கள்  ஏறி இறங்கி விட்டான்.ஆனால் பலன் இல்லை.சரி ,செகண்ட்ஸ் ஆக ஒரு பழைய கார் வாங்கலாம் என வாங்கி விடுகிறான்.


அந்தப்பழைய காரில் நாயகன் ,நாயகி,மகன்கள் நால்வரும் பயணிக்கையில் ஒரு கும்பலால் தாக்கப்படுகிறார்கள்.அதில் நாயகி இறந்து விடுகிறாள்.

நாயகன் தன் மகன்களுடன் அந்தக்கும்பலிடமிருந்து தப்பி விடுகிறான்.


நாயகனின் அப்பா ஒரு கேங்க்ஸ்டர். ஒரு துறைமுகத்தில் அவர் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.நாயகனின் அம்மா இறக்க அப்பாதான் காரணம்
அவரது கேங்க்ஸ்டர் வாழ்க்கையால் போட்டியாளர்களால் கொல்லப்பட்டதால். அப்பாவிடமிருந்து நாயகன் விலகியே இருக்கிறான்.


இப்போது நாயகனின் அப்பா நாயகனைக்காப்பாற்றுகிறார்.நாயகன் ,நாயகன் இருவரும் இணைந்து எதிரிகளைப்பழி வாங்குவதே மீதிக்கதை.


நாயகன் ,நாயகனின் அப்பா என இருவித ரோல்கள் ,மூன்று கெட்டப்களில் விஷால் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.மகன் கேரக்டருக்கான கெட்டப் நாம் ரெகுலராகப்பார்க்கும் விஷால் தான்.அப்பாவின் வயதான கெட்டப் ,அவரோட யங்க் வெர்ஷன் இரண்டிலும் அவரது உடல் மொழி ,குரல் இரண்டும் பிரமாதம்.கேரக்டருக்குதகுந்தாற்போல் குரலை மாற்றிப்பேசும் கமல் போல விஷால் இதில் முயன்று அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.


அப்பா கேரக்டரின் பாதிப்பு மார்க் ஆண்ட்டனி படத்தால் வந்திருக்கிறது எனத்தெளிவாகத்தெரிகிறது.

அப்பாவுக்கு ஜோடி அங்காடித்தெரு அஞ்சலி.மகனுக்கு ஜோடி துஷாரா  விஜயன்.இருவரில் அஞ்சலிக்கு நடிக்க அதிக வாய்ப்பு.துஷாரா விஜயனும்  வந்தவரை ஓக்கே தான்.


மெயின் கேரக்டர்கள் மூவர் போக. ஜாவா சுந்தரேசன்,தம்பி ராமய்யா ஆகியோரும் உண்டு.கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இசை ஜி வி பிரகாஷ். பாடல்கள் சுமார் ரகம் தான்.பின்னணி இசையில் காது வலிக்கும் அளவுக்கு அடி போட்டு பிளந்திருக்கிறார்.

ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் குட்.



சபாஷ் டைரக்டர்

1 பழைய ஹிட் பாட்டை ஆக்சன் சீக்வன்சுக்கு வைத்து அப்ளாசை அள்ளும் டெக்னிக்கை லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்து வைத்தார்.இதில் விஷால் தொடர்கிறார்.சின்னக்கவுண்டர் படத்தில் வரும் முத்துமணி மாலை பாட்டுக்கு தியேட்டரில் அப்படி ஒரு வரவேற்பு.

2  மதகஜராஜாவில் அஞ்சலியுடன் விஷால் பாடும் பாட்டு செம ஹிட்டு என்பதால் அதே மெட்டில் பாடல் வரியை மட்டும் மாற்றி ரசிக்க வைத்திருக்கும் ஐடியா குட்.

3  அப்பா கேரக்டர் இண்ட் ரோ சீனும்,அடுத்த 10 நிமிடக்காட்சிகளும் அசத்தல்

4 பைக்,கார் மெக்கானிக்குகள் போலி ஸ்பேர் பார்ட்ஸ் குறைவான விலைக்குக்கிடைப்பதால் அதை வண்டிக்குப்பொருத்துவதால் ஏற்படும் விபத்துகள்,உயிரழப்புகள் பற்றி சொன்ன மெசேஜ் அருமை. (அந்நியன் படத்தில் வந்த சீன் தான் என்றாலும்)



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 முதல் 30 நிமிடங்கள் போர்.துடிப்புடன் காட்சிகள் இருக்கவேண்டாமா? நாயகன் கார் வாங்க ஷோ ரூம் ஷோ ரூமாக அலைவது போர்.

2 மெயின் கதை எம் ஜி ஆர் சிவாஜி காலத்திலிருந்து காலா,கபாலி ,வட சென்னை வரை பார்த்துப்பழகிய புளித்துப்போன கதை ,திரைக்கதை தான்.

3 வில்லாதி வில்லன் படத்தை இயக்கிய சத்யராஜ் மாதிரி தான் விஷாலும்.சொதப்பி இருக்கிறார்.

4 அப்பா கேங்க்ஸ்டர் ஆவதன் பின்னணியில் போலி மருந்துகளை அதிக லாபத்துக்கு விற்கும் கும்பலை எதிர்ப்பது,வண்டிகளின் ஸ்பேர் பார்ட்சில் போலிகள் வருவதால் மக்களுக்கான பாதிப்பு என சொல்ல வந்த கருத்து அருமை,ஆனால் எக்சிக்யூசன் சொதப்பல்  ரகம்.

5 பிரமாதமான நடிகைகளான அஞ்சலி,துஷாரா விஜயன் இருவரையும் சரிவர இயக்குநர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

6.  ஓவர் ஆக்டிங்க் செய்தாலும் ரசிக்க வைக்கக்கூடிய ஜான் விஜய்யிடம் சரியான நடிப்பை இயக்குநர் வாங்கவில்லை.முக்கியமான காட்சியில். முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் பிளாட் ஆக நிற்கிறார்.

7 விஷால் + சித்ராலட்சுமணன் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.


ரசித்த வசனங்கள்

1 கடல்ல வாழறவன் வேற,அந்தக்கடலையே ஆள்றவன்  வேற.

2 லிங்கா முடிவெடுத்துட்டா அது முடிஞ்சிடுச்சுனு அர்த்தம்.

3 அந்தப்பையன் மீது கை வெச்சுடலையே?

4 அந்த சரக்கை இறக்க மாட்டேன்,வேற யாரையும் இறக்கவும் விட மாட்டேன்.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 16+


CPS  கமெண்ட் - விஷால் ரசிகர்களைக்கூட கவராத படம்.பொது ரசிகர்கள்  டி வி யில் போடும்போது பார்த்துக்கொள்ளலாம்.பிளாப் படம்.ரேட்டிங் 2/5,,,,

Sunday, September 13, 2026

The Last House(2026)- அமெரிக்கன் மூவி/தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் சர்வைவல் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்




திரை அரங்கு களில் வெளியாகாமல்  நேரடியாக நெட் பிளிக்சில் 7/8/2026 முதல் தமிழ் டப்பிங் கில்  வெளியாகியிருக்கிறது.



ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தன் மனைவி ,இரு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறான்.ஒரு நாள் வித்தியாசமான முறையில் ,பலத்த மழை பெய்கிறது.வீட்டின் கதவுகள் ,ஜன்னல்கள் எல்லாம் திடீரென  லாக் ஆகிக்கொள்கின்றன.வெளியே வர முடியவில்லை.

எதிர் வீட்டில் இதே நிலைமைதான் என்பதை அறிந்ததும் நாயகனுக்கு நிம்மதிப்பெருமூச்சு.நம்ம வீட்டில் கரண்ட் போனதும் கவலைப்படும் நாம் பக்கத்து வீட்டிலும் கரண்ட் இல்லை எனில் அப்பாடா இங்கேயும் கரண்ட் இல்லை ,அங்கேயும் கரண்ட் இல்லை ,எங்கேயும் கரண்ட் இல்லை என்று நினைப்போமே அதே மைண்ட் செட்டில் தான் நாயகன் இப்போது இருக்கிறான்.

இப்போது ஊர்,உலகம் மொத்தமும் கொரோனா காலத்து லாக் டவுன் மாதிரி அடைபட்டு விட்டோம் என்பதை உணர்கிறார்கள் 

சரி,மாட்டிக்கொண்டோம்.சாப்பாட்டுக்கு என்ன வழி?வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை வைத்து எத்தனை நாட்கள் சாப்பாடு தயார் செய்ய முடியும் ?எனப்பார்த்தால் இரண்டு மாதங்களுக்குத்தேவையான மளிகைப்பொருட்கள் இருக்கின்றன.அப்பாடா,கவலை இல்லை என நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்.

ஆனால். 5 வருடங்ககாக இந்த நிலை தொடர் கிறது.போதாக்குறைக்கு ஏலியன்சா?மான்ஸ்டர்சா?என்று தெரியாத மாதிரி ஒரு விசித்திர உயிரினங்கள்   தாக்க வருகின்றன.நாயகன் எப்படி சமாளித்தான்?சர்வைவல் ஆனானா?என்பது மீதிக்கதை.

நாயகனாக  வாக்னர் மோரா,நாயகியாக க்ரேட்டா லீ கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்.மகன் ,மகளாக  எம்மா ஹோ,ஆர்டன் சோ சுட்டித்தனத்துடன் நடித்திருக்கிறார்கள்.


பின்னணி இசை, ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைனிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.

படத்தின் ரன்னிங்க் டைம்  112 நிமிடங்கள்



சபாஷ் டைரக்டர்


1 படத்தின் ஓப்பனிங்க் ஷாட்லயே இந்த பூமிக்கு லேண்ட்ஸ்கேப் என பெயர் வைத்தது தப்பு,நிலத்தை விட கடல் பகுதிதானே அதிகமாக இருக்கிறது?என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும்போதே ஏதோ மிஸ்ட்டீரியஸ் மேட்டர் என்பதைக்கோடிட்டுக்காட்டிய விதம்.

2 பக்கத்து வீட்டுப்பெண் மான்ஸ்டரிம் மாட்டி பலியாகும் திகில் காட்சி படமாக்கப்பட்ட விதம்.

3 மான்ஸ்டர் நாயகனின் வீட்டுக்கு வரும் சீனும் அப்போது ஆட்டோமெடிக்காக வீட்டின்  கதவுகள் திறப்பதும் திகிலான காட்சி.

4 முதல் 45 நிமிடங்கள் கேரக்டர் டிசைன் ,சிச்சுவேஷன் எல்லாவற்றையும்  பிரமாதமாக செட் செய்து எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம் அருமை.

5 டெக்னிக்கல் டீம் ,கம்யூட்டர் கிராபிக்ஸ் ,சவுண்ட் டிசைனிங் ,ஒளிப்பதிவு அனைத்தும் அருமை.

6 ஜன்னல் கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை என்பதை விஷூவலாகக்காட்டிய விதம் அருமை.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைத்து காய்கறி செடிகளை வளர்த்து உணவுக்கு ரெடி ஆவது சரி.ஆனால்   சூரிய ஒளியே இல்லாமல் அடைபட்ட வீட்டுக்குள் செடி எப்படி வளரும் ?

2 ஒரே வீட்டுக்குள் முழுக்கதையும் நடப்பதால் ,ஒரே குடும்பம் நான்கு பேர் தான் மொத்த கேரக்டர்சும் என்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது

3. க்ளைமாக்சில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை.அந்த மான்ஸ்டர்ஸ் கேரக்டர்களில் நல்லது ,கெட்டது எனப்பிரிவது நம்ப முடியலை.

4 மான்ஸ்டர்சின் உருவம் பிரமிப்பை ஊட்டவில்லை.இதெல்லாம் சாதாரணமப்பா என சலித்துக்கொள்வது போல் தான் தோன்றியது.





ரசித்த வசனங்கள்

1 மான்ஸ்டரில் நல்லது ,கெட்டது என எதுவுமில்லை.எல்லாமே கெட்டவை தான்.



அடல்ட் கண்ட்டண்ட் வார்னிங் 13+ க்ளீன் யூ.  குடும்பத்துடன் பார்க்கலாம்.


CPS கமெண்ட் -  வித்தியாசமான ,மாறுபட்ட சர்வைவல் திரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 3/5

The Last House
Release poster
Directed byLouis Leterrier
Written byMatthew Robinson
Produced by
Starring
CinematographyPål Ulvik Rokseth
Edited byAdam Gough
Music byYair Elazar Glotman
Production
companies
Distributed byNetflix
Release date
  • August 7, 2026
Running time
112 minutes[1]
CountryUnited States
LanguageEnglish



Saturday, September 12, 2026

Main Vaapas Aaunga (2026)- ஹிந்தி - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா) @நெட் பிளிக்ஸ்


 Jab we met ஜப் வீ மெட் (2007),Love Aaj kal  லவ் ஆஜ்கல் (2009),my Melbourne(2024) மை மெல்பர்ன் உட்பட பல வெற்றிப்படஙகளைக்கொடுத்த இயக்குநர்  இம்தியாஸ் அலியின் லேட்டஸ்ட் படம் இது.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூலித்தது.



ஏ ஆர் ரஹ்மான் தான் இசை என்பதால் இந்தியா முழுக்க கவனம் பெற்ற இந்தப்படம் நம்ம ஊர் பாரதிராஜாவின் முதல் மரியாதை போல ஒரு Feel குட் மூவி.

டைட்டிலுக்கான அர்த்தம் நான் திரும்ப வருவேன்.

ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகனுக்கு இப்போது 95 வயது.ஸ்ட்ரோக் வந்ததால் ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள்.அவருக்கு டெமன்சியாவும் இருப்பதால் எல்லா விஷயங்களை யும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுகிறார்.இவரைக்காப்பாற்ற வழியே இல்லை என டாக்டர்கள் சொல்லி விடுகிறார்கள்.நாயகனின் வாரிசுகள் இனி வேறு வழியில்லை என அவரது மரணத்துக்குக்காத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இருக்கும் தன் பூர்வீக வீட்டுக்குப்போக வேண்டும் என நாயகன் வலியுறுத்துகிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் பஞ்சாபில் நாயகன் குடி இருந்தார்.இத்தனை வருடங்கள் ஆனபின்பும் தன் பழைய காதலியை அவர் இன்னும் மறக்கவில்லை என அவரது வாரிசுகள் உணர்கிறார்கள்.20 வயதிலிருந்து 95 வயது வரை நிகழ்ந்த சம்பவங்கள் எதுவும் அவருக்கு நினைவில்லை.17 வயதில் நடந்த காதல் மட்டுமே நினைவிருக்கிறது.இதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

பம்பாய் படத்தில் மணிரத்னம் எப்படி இந்து முஸ்லீம் கலவரத்துக்கு நடுவே ஒரு காதல் கதையை சொன்னாரோ ,டைட்டானிக் படத்தில் மூழ்கிப்போன கப்பலின் கதையில் மூழ்காத காதலைப்பற்றி சொன்னாரோ அந்த மாதிரி இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



நாயகனாக நஸ்ருதின் ஷா உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார்.இளவயது நாயகன் தோற்றத்தில் வேதாங்க் ரெய்னா நடித்திருக்கிறார்.இளமை ,துள்ளல் மிக்க நடிப்பு.

நாயகனின் பேரனாக தில்சித் தோஷன் பிரமாதமான நடிப்பு.

நாயகியாக ஷர்வாரி நடித்திருக்கிறார்.நாயகனின் பேரனின் கேர்ள் பிரண்டாக பனிட்டா சந்து அழகாக வந்து போகிறார்.

மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்துக்குப்பெரிய பலம் இசையும் ,ஒளிப்பதிவும்.ஒரு ரொமாண்டிக் டிராமா காலம் கடந்தும் மனதில் நிற்க பாடல்கள் ஹிட் ஆக வேண்டும்.காட்சிகள் மனதில் பதிய வேண்டும்.இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஆர்த்தி பஜாஜின் எடிட்டிங்கில்  படம் 167 நிமிடங்கள் ஓடுகிறது.சில்வெஸ்டர் போன்செசா  தான் ஒளிப்பதிவு.காட்சிகள் கவிதை தான்.

பாடல்களுக்கான இசை ,பின்னணி இசை இரண்டையும் ஏ ஆர் ரஹ்மான்  பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
நயானிகா  மஹ்தானி யுடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் இம்தியாஸ் அலி

சபாஷ் டைரக்டர்

1 சீரியசான பிரச்சனையான இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் எளிமையாகபுரிய வைத்த லாவகம் அருமை.

2  ஹார்ட் சர்ஜன் - டெய்லர் இருவரையும் ஒப்புமைப்படுத்தி சொன்ன காமெடி 


3 ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு 3 நாட்கள் கழித்து 17ம் தேதிதான் பிரிவினை பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டது,அந்த 3 நாட்களில். எவ்வளவு குழப்பங்களும் ,வன்முறைகளும் நடந்தேறின என்பதை காமெடியாக சொன்ன விதம்.

,4 பிரிவினையின் போது குடும்பத்துப்பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து விவரித்த விதம்.

5 எட்டு பாடல்களில் ஏ ஆர் ரஹ்மானின் மயக்கும் இசை அனைத்தையும் ஹிட் ஆக்கியவிதம்.

6 ஒளிப்பதிவு மிகப்பெரிய பங்களிப்பைத்தந்திருக்கிறது.அட்டகாசமான லொக்கேஷன்ஸ்




ரசித்த வசனங்கள்

1 நாம் கிறிஸ்டியன் ஆகிட்டா சர்ச் ல கல்யாணம் பண்ணிக்கலாம்.


இதை இப்போ யோசிச்சியா?


2 நான் ஒரு வருசம் கழிச்சுத்தான் உன் காதலுக்கு சம்மதம் சொல்லலாம்னு இருந்தேன்.இப்பவே ஓக்கே சொல்லிட்டதால் என்னைக்குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்.

3 அவர் இதயமே இல்லாதவர்னு பலரும் சொல்வாங்க,ஆனா அவர் தன் இதயத்தை இங்கே யே விட்டுட்டுப்போய்ட்டார்.

இல்லை.இரண்டு வருசம் முன்பே யோசிச்சேன்.

4 உன்னால முடியாதுன்னா யாராலயும் முடியாது.

5 என்னை என்ன?னு நினைச்சே? ஒருபோதும் அது மாதிரி செய்ய மாட்டேன்.

மேரெஜ் ஆனாக்கூடவா?

6 இந்தக்காதல் தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது? மரணத்தருவாயில் இருக்கும் ஒருவனை சாகக்கூட விட மாட்டேங்குது


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 படத்தின் நீளம் பெரிய மைனஸ்.3 மணி நேரத்துக்கு நெருக்கி ஓடுகிறது.இது ஒரு ஸ்லோ ட்ராமா என்பதை விட  டெட் ஸ்லோ ட்ராமா என சொல்லலாம்.

2 இதே இயக்குநர் இயக்கிய ஜப் வி மெட் , பாரதிராஜாவின் முதல் மரியாதை ,கமலின் ஹே ராம் , ஆகிய படங்களை நினைவுபடுத்தும் பல காட்சிகள்



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+


CPS கமெண்ட் - பொறுமைசாலிகளும் ,பெண்களும் ,காதலர்களும் இந்தப்படத்தைக்கொண்டாடுவார்கள்.ரேட்டிங் 3.5/5






Friday, September 11, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-செப்டம்பர் 10,11 ரிலீஸ் படங்கள் முன்னோட்டப்பார்வை

 தமிழ் சினிமாத்தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்கியது கோடம்பாக்கத்தில் ஒரே கொண்டாட்டம்.இந்த வாரம் செப்டம்பர் 10,11 ஆகிய இரு தினங்களில் 9 படங்கள்  ரிலீஸ் ஆகின்றன.கார்த்தி,அருள்நிதி,சூரி நடிப்பில் வெளி வரும் பெரிய பட்ஜெட் தமிழ்ப்படங்கள் 3 ,லோ பட்ஜெட் தமிழ்ப்படம் 1 ,ஒரு கன்னடம்,2 தெலுங்கு ,1 ஹிந்தி,1 மலையாளம். தமிழ் டப்பிங்கில்  வெளியாகின்றன.



1 சர்தார் 2 
2 டிமாண்டி காலனி 3
3 மண்டாடி
4 ரி யூனியன்
5 Vk 30
6 மகேந்திரகிரி வாரஹி
7 வேம்ப்பயர்ஸ் சகா
8 ரணபாலி
9 பிரதம திரிஷ்டியா குட்டக்கர்




1 சர்தார் 2.  தமிழ்   ஸ்பை ஆக்சன் திரில்லர்


பருத்தி வீரன் மெகா ஹிட்டுக்குப்பின்  கார்த்திக்கு ஹிட்டான முக்கியமான ஆக்சன் படங்கள் இரண்டு.சிறுத்தை ,சர்தார். சிறுத்தை படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பில்லை என சிவா அறிவித்து விட்டார். சர்தார் 2 வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த  கார்த்தி ,ரஜிஷா விஜயன் மீண்டும் நடிக்க புதிதாக சேர்ந்திருப்பவர்கள் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா,மாளவிகா மோகனன் ,ஆஷிகா ரங்க நாத்.
முதல் பாகத்தில்  ஜி வி பிரகாஷ் குமார் இசை.இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா வின் இசையில்  5 பாடல்கள் இடம் பெறுகின்றன.

அப்பா,மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.அப்பா கேரக்டர் ஸ்பை ஏஜெண்ட்.மகன் கேரக்டர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரோல்.


சர்தார் 2 டீசர் ,ட்ரெய்லர் இரண்டுமே ஆக்சன் பாக்கேஜ்.

முதல் பாகத்தில் சைனாவின் கையாளை க்ளைமாக்சில் தீர்த்து க்கட்டுவது போல் காட்டி இருப்பார்கள்.இந்த இரண்டாம் பா
கத்தில் இந்தியர்கள் உபயோகிக்கும் தண்ணீரை சீனா கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு பிராஜக்ட் செய்கிறது.அதை சீனா போய் நாயகன் சர்தார் நிர்மூலமாக்குகிறார்.

வில்லன் பெயர் பிளாக் கேடர்.சைனாவில் நிஞ்சா போன்ற ஒரு ஆயுதம் தான் கேடர் என்பது.அதைத்தன் பெயராக வில்லன் வைத்திருக்கிறான் என்பதால் சைனாவின் கைக்கூலியாக இருக்கலாம்.ஆனால் ஆள் அமெரிக்காக்காரனைப்போல் தான் கெட்டப் இருக்கிறது.

வில்லனின் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பது தான் கதை.     


ரசித்த வசனங்கள்


1 அப்பா பலசாலி,மூளைக்காரன்.பையன் கூல் Guy,ஆனா Tough ஆனவன்.ஆனா ஷோ ஸ்டீல் நான் தான்.ஏன்னா அவங்க டார்கெட்டே நான் தான்.

2. டெக்னிக்கலி நான் தான் நல்லவன்.அவங்கதான் கெட்டவங்க.

3. இப்போ கேள்வி என்ன?னா. ஜெயிக்கப்போவது நல்ல வில்லனா?கெட்ட வில்லனா?

4 நம்ம தேசம் அபாயத்தில் இருக்கு. நமக்கு இம்மீடியட்டா ஒரு ஏஜெண்ட் வேணும்.

5  அந்தக்கூத்தாசிப்பையன் வர்றதுகுள்ளே தைப்பூசமே வந்துடும்.வரச்சொல்லு அவனை.

போஸ் இப்போ வேல் தூக்கிடுச்சு.இப்போ எல்லாக்காவடிகளையும் வழி நடத்தும் லீடர் அவர்.


6 மெட்ராஸ்ல இருந்து ஆள் வந்திருக்கு ,உடனே போகனும்.

இப்படிக்காவடியை பாதிலயே விட்டுட்டுப்போனா எப்படி?

நீங்கதானே சொல்லிக்குடுத்தீங்க?செய்யும் தொழிலே தெய்வம்னு.நான் போயாகனும்.

7 முப்பது கோடிப்பேர் சம்பந்தப்பட்ட விஷயம்.இந்த ட்ரெய்னை வெச்சு எப்படி முடிக்கப்போறோம் ?


8 மிஷின் அக்கம்ப்பளிஷ்டு சக்சஸ்புல்லி

இல்லை சார் எனக்குப்பெருசா தோத்துட்டு நிக்கற மாதிரி தோணுது.

9 போஸ்,அத்தனை உயிர்களையும் நீ தான் காப்பாத்தி இருக்கே.அதுக்கான விலையைக்கொடுத்துதான் ஆகனும்


10 இது ஒரு சாபம்.என் தலைக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு.சாகறவரை என்னை விட்டுப்போகாது போல

11 இனிமே இது நடக்காதில்ல?

கண்டிப்பா நடக்கும் ,பெண்ட்டாஸ்டிக்கா,மார்வெலசா ,டிலைட்புல்லா நடக்கும்.ஏன்னா இப்போ அதைப்பண்ணப்போறது நான்.

12. ஐ ஆம் அன் ஸ்டாப்பபிள்

13 இது போஸ்க்கு தெரிஞ்சா திரும்பி வருவான்.தானா வருவான்.

14 விட சொல்றியா?

நம்ப சொல்றேன்

15. நான் உன்னோட Fan தெரியுமா? உனக்காக வெயிட் பண்றேன் தெரியுமா?

16 வா,உனக்கு நான் காட்றேன்.fan boy சம்பவம்னா என்ன?எனக்காட்றேன்.




2 டிமாண்ட்டி காலனி 3   தமிழ். ஹாரர் திரில்லர்

அருள்நிதி ஒரு அண்டர்ரேட்டட் ஹீரோ. இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் பிரமாதமாக இருக்கும்
மாமூல் மசாலாக்கதையில் நடிக்கவே மாட்டார் மாறுபட்ட க்ரைம் திரில்லர் ,திகில் ஊட்டும் ஹாரர் திரில்லர் தான் இவரது  சாய்ஸ்.

முதல் பாகம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி 26 கோடி ரூபாய் வசூல் செய்த மாபெரும் ஹிட் படம்.இரண்டாம் பாகம் 60 கோடி ரூபாய்  வசூல் செய்து சாதனை படைத்தது.இப்போது வர இருக்கும் மூன்றாம் பாகம் 75 கோடி வசூல் நிச்சயம் ,100 கோடி வசூல் லட்சியம் என்று சொல்கிறார்கள்.

இதில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர் ,அர்ச்சனா ரவிச்சந்திரன் ,மீனாட்சி கோவிந்தராஜன்,மியா ஜார்ஜ்  ,குருசோமசுந்தரம், ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

சாம் சி எஸ்  இசையில் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில்  அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

மிரட்டலான டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





3 மண்டாடி. தமிழ். ஸ்போர்ட்ஸ் ஆக்சன் டிராமா

புரோட்டா சூரி ஹீரோ ஆகி விட்டார்.கருடன்,விடுதலை பாகம் 1 ,பாகம் 2 ,கொட்டுக்காளி என்று அவரது படங்கள் வரிசையாக வந்து வெற்றி பெறுகிறது.

மாண்டாடி என்றால் கடலில் அலைபவன் என்று அர்த்தம்

செல்பி (2022) பட இயக்குநர்  மதிமான் புகழேந்தி இயக்குகிறார்.

இயக்குநர் வெற்றிமாறனின் சொந்தப்படம் இது.

சூரி ,மஹிமா நம்பியார்,சத்யராஜ் ,கஹாஸ்,பால சரவணன், ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் வருகிறார்கள்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை

நாயகன் படகோட்டி வீரன்.அதில் சாம்பியன். அவர் தனது சொந்த ஊரான கடலோடி கிராமத்திலிருந்து தன்னைத்தானே  ஒதுக்கிக்கொண்டு வேறு இடம் போகிறான்.

வில்லன் அந்த ஏரியாவில் இரு பிரிவுகளை உருவாக்கி சண்டை மூட்டி விடுகிறான்.

நாயகன் திரும்ப வந்து ஒரு படகுப்போட்டியில் கலந்து கொள்ள ஒரு குழுவுக்குப்பயிற்சி அளிக்கிறான்.

நாயகன் ,வில்லன் இருவரில் படகுப்போட்டியில் யார் ஜெயித்தார்கள்?என்பதே க்ளைமாக்ஸ்.

ரசித்த வசனங்கள்

1 இந்தக்கடல் எவ்வளவு பெருசோ ,அதிலிருக்கும் ஆபத்துக்கள் அதை விடப்பெருசு.

2 சிங்கம் இல்லாதப்ப ஓநாய்க்கூட்டம் அரசாளும் கதையா ....

3  இந்த ஊரோட படகுப்பந்தயம்னா அது சுனாமி ரைடர்ஸ் தான்.எவன் வந்தாலும் அதைத்தடுக்க முடியாது.

4 லோக்கல் பசங்க இல்லாத டீம்னா அது எப்படி ஊர்க்காரங்க டீம் ஆகும்?

5 பந்தயம்கறது யார் பெரிய ஆளுனு காட்டிக்கறதுக்காக நடக்கும் போட்டி இல்ல.பந்தயம்கறது அறிவு

6 தொழிலைக்காப்பாத்திக்க என்ன வேணா நான் செய்வேன்.

7 உன்னை நம்பறவங்களுக்கு சாவையும் ,ஒப்பாரி யையும் தவிர்த்து என்னதான் நீ கொடுக்க முடியும்?

8 இன்னைக்கு மட்டும் நாம ஜெயிக்கலைன்னா நம்ம பசங்க கரைல நின்னு வேடிக்கை பார்க்கும் கூட்டமா மாறிடுவாங்க.

9 தரைல வேணா அவன் பெரிய ஆளா இருக்கலாம்.தண்ணில நாமதான் கிங்கு

10 புள்ளயை எதிரின்கிட்டே இருந்து காப்பாத்தி துரோகி கிட்டே ஒப்படைச்சு இருக்கே.


4 ரீ யூனியன். தமிழ். கேங்க்ஸ்டர் ஆக்சன் டிராமா


அருள்தாஸ் ,அனுபமா குமார் , நடிப்பில் சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லோ பட்ஜெட் படம் இது.

ஸ்கூல் படிக்கும்போதே ரவுடியாக இருந்த ஒரு க்ரூப்  பல ஆண்டுகளுக்குப்பின் ஒன்று கூடுகிறது. அவர்களுக்குள் இருக்கும்  பழைய பகையும் ,மறைக்கப்பட்ட சில உண்மைகளும் இப்போது வெளியே வந்து மோதல் வெடிக்கிறது.


5. வி கே 30. கன்னடம்./தமிழ் ஆக்சன் டிராமா


துனியா விஜய்  இயக்குநர் ஆர் ஆர் வெற்றிவேல்  என்கிற தம்பி மகேஷ் இயக்கியிருக்கும் படம் இது.





6.  மகேந்திரகிரி வாரஹி.  தெலுங்கு /தமிழ்.  மித்தலாஜிக்கல் ஆக்சன் திரில்லர்

ஐஸ்வர்யா ராஜேஷ் ,சுமந்த் ,மாளவிகா நாயர் ,மீனாட்சி கோ ஸ்வாமி ,பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் ஜாகர்லபுடி இயக்கி இருக்கிறார்.


ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை

மகேந்திரகிரி என்ற ராஜ வம்சத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் அவர்களது 33 வது வயதில் இறக்கிறார்கள் .வாரணாசியில் இருக்கும் வாராஹி என்ற அம்மனின் சாபம் என்று கூறப்படுகிறது.இந்த மர்ம மரணங்கள் 150 வருடங்களாக ஏன் தொடர்கிறது என்பதை   நாயகனான தொல் பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பதே கதை.


7  வேம்பயர்ஸ் சகா  ஹிந்தி /தமிழ் ரொமாண்டிக் ஆக்சன்  ஹாரர் திரில்லர்


 இயக்குநர் ஜூபர் கே  கான்   இயக்கத்தில்  அப்துல் அத்னான் ,ஜூபர் கே கான் ,சனா சுல்தான் ,புஷ்ரா ஷேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை

ஒரு புகழ் பெற்ற கல்லூரியில்  நான்கு காதல் ஜோடிகள் இருக்கிறார்கள்.ஒரு பழங்கால வேம்பயர் கூட்டத்துக்கும் ,அவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.யார் வெற்றி பெற்றார்கள் என்பதே மீதிக்கதை.



8 ரணபாலி. தெலுங்கு/தமிழ்.  ஹிஸ்டாரிக்கல் ஆக்சன் டிராமா

விஜய் தேவரகொண்டா + ராஷ்மிகா மந்தனா  ஜோடியுடன் அர்னால்டு வோஸ்லூ நடித்திருக்கிறார்.ராகுல் சங்கிருதயன் இயக்கி இருக்கிறார்.

ட்ரெய்லரில் ஒரே ஒரு மனிதனின் பேராசையால் ஒரு பேரரசே அழிந்த கதை என்கிறார்கள்.ராஜா காலத்துப்படம் போல் தெரிகிறது..பாகுபலி டைப்பில் பிரம்மாண்டமாக முயற்சித்திருக்கிறார்கள்.





9 பிரதம திரிஷ்டியா  குட்டக்கர்   மலையாளம்/தமிழ்.  மிஸ்ட்ரி இன்வெஸ்டிகேசன் க்ரைம் திரில்லர்


பார்வதி திருவோத்து ,உன்னி மாயா பிரசாத்,மேத்யூ தாமஸ்,சித்தார்த் பரதன் ,விஜயராகவன்  ஆகியோர் நடிக்க  உருவாகி இருக்கும் படம்.நாயகி பார்வதி திருவோத்து முதன்முதலாக போலீஸ் ஆபீசராக நடிக்கிறார். டைரக்சன் சாஹத்