Showing posts with label SEX. Show all posts
Showing posts with label SEX. Show all posts

Monday, February 04, 2013

டி வி யில் இனி நைட் 11 மணிக்கு ஏ படம் - மக்கள் கருத்து

புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது."ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1. எதுக்கு 11 மணி வரைக்கும் வெயிட் பண்ணனும் .. அதன் எல்லாத்தையும் மெகா சீரியல் பேர் ல காட்டுறங்களே


2. தேவையல்லாத வேலைய மட்டும் பாருங்க.....என்ன அரசாங்கமோ?3 இரவு 11 மணிக்கு மேல் எல்லாம் ப்ராக்டிகல் இருக்கும் போது படம் எதற்கோ? தனிமையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைக்கும்


4. அப்பன்னா இந்தியா சீக்கிரம் 200 கோடியை தாண்டிடும். ஆண்கள் பாவம்....


5. நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு திரைப்படம் ஒரு காரணம் .மக்கள் அதிகம் பார்த்து அதில் வரும் கட்சிகளை மனதில் பாதிக்கும் பொது சில வன்மங்கள் நடக்கின்றன .இதை தணிக்கைத்துறை மனதில் கொண்டு செயல்படவேண்டும் நல்ல கருதுஉள்ள படங்களுக்கு அனுமதி அழிதல் நல்லது .


6. ஏ படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்பது தேவை இல்லாத ஒன்று. காரணம், சாதாரணமாக வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே இன்று அப்படித்தான் இருக்கின்றன. அது மட்டுமில்லை இரவு நேரங்களில் படிக்கும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள், மற்றும், மக்கள் தொகையும் அதிகமாகும்???.

7. மத்திய அரசு அதிகாரிகளே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில் எ படங்கள் நாட்டுக்கு தேவையா ? இரவு நல்ல தரமான நிகழ்சிகள் ஒலிபரப்பு பண்ணலாமே பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனய பற்றி யோசிக்கும் அரசு அவர்களே எ படங்களுக்கு அனுமதி அளிக்கலாமா ?


8.  ஆபாச காட்சிகள் தணிக்கை தணிக்கைத்துறை வெட்டி எறிய வேண்டும் . படங்களை எடுபவர்கள் காட்சிகளை ஆபாசம் இல்லாமல் எடுப்பார்கள் .ஆபாசம் ஆகிய முக்கிய காட்சிகளை வெட்ட படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு ஆகும் சூழ்நிலை வந்தால் தான் இவர்கள் படங்களை நல்ல தரமான படங்களை கொடுப்பர்


9. அரபு நாடுகள் மற்றும் அதற்குப்பிறகு இருப்பவர்கள் இப்போதே மாலையில் தொடங்கி சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனிமேல் வேறு வழியில்லை... தொலைக்காட்சியை தனியறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்.


10. இது ஆரோக்கியமான முடிவு அல்ல.பதினோரு மணி என்பது இன்றைய காலகட்டத்தில் பின்னிரவு நேரமல்ல.இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நிறைய ஏற்படும்.மொத்தக்குடும்பமும் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் நேரத்தில் ஆபாசப்படங்கள் ஒளிபரப்புவது நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது.தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நஞ்சைப் பரிமாறுவது நியாயமல்ல.ஆபாசப் படங்கள் தொலைகாட்சிகளில் தவிர்க்கப்படவேண்டும். சிலரின் லாபத்திற்காக பலவீனமானவர்களின் மனதில் நச்சு எண்ணங்களை வளர்க்கும் இத்தகைய திரைப்படங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.வெளியில் இருக்கும் ஓனானை வீட்டுக்குள் விட்டுவிட்டு பின்னர் குத்துதே குடையுதே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை..


11. A படம் என்றாலே ஆபாசம் என்று பொருளில்லை எல்லாமே அஞ்சரைக்குள்ள வண்டி,சிந்துசமவெளி போன்றவையல்ல.சில சிக்கலான உறவுகள், செக்ஸ் கல்வி, வன்முறை சம்பந்தப்படவைகூட ஏ சான்றிதழ் வழங்கப்பட்டவைதான் டென் ஏஜ் பருவத்தினர் பாலியல் பற்றிய புறுத்தல் வேண்டுமென்பதற்க்காக எடுக்கப்பட்ட படங்களை சற்று முன்பே காட்டலாம் . அவற்றை பெற்றோர் துணையுடன் பார்ப்பது செக்ஸ் தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்க உதவும். செக்ஸ் தொடர்பான மூட ன்பம்பிக்கைகள் அதிகமுள்ள நம் நாட்டுக்கு இது அவசியம் தேவை12 கெட்ட விஷயங்களை அமுல் படுத்த அரசுகள் எடுக்கும் ஷ்ரத்தையை நல்ல விஷயங்களுக்கு எடுப்பதில்லை. டாஸ் மார்க் சாராயம், அசிங்கப் படங்கள், அதீத விலை உயர்வு இதெல்லாம் உடனுக்குடன் இங்கே நடந்து விடும். ஆனால், தரமான சாலைகள், அத்யாவசியக் கல்வி, சுத்தமான குடிநீர் இதுபற்றிய சட்டங்களை ஒரே இரவில் போடுவது, அமுல்படுத்துவது போன்றவை மட்டும் இங்கே நடப்பதே இல்லை. அசிங்கங்களை மதிய மாநில அரசுகளே அரங்கேற்றிவிட்டு, குழந்தைகள், இளைஞர்கள், மக்கள் மனதை முழுக்க நஞ்சாகிவிட்டு மக்கள்-ஆட்சி நடத்துவதில் என்ன லாபம்? ஒழுக்கமிலா அரசுகள் ஒழுக்கமிலா மக்களையே உருவாக்கி புதுப்புது வன்முறைக்கு வழிகோலும் 


நன்றி - தினமலர் 

Saturday, July 28, 2012

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22141_1.jpg

தமிழ் சினிமாவில் 4 வகையான படங்கள் வருவதுண்டு. 

1. அனைவராலும்  சிலாகித்து பாராட்டு பெறும் படங்கள் 

2. மாமூல் மசாலா குப்பைகள்

 3. விருதை குறி வைத்து எடுக்கப்படும் படங்கள் 

4. வக்ர சிந்தனையை தூண்டும் வல்கரான படங்கள்..

 நடு நிசி நாய்கள் படத்துக்குப்பின் நான் பார்த்த மிக மோசமான , வன்முறை,வல்கரின் உச்சமான படமாக இதை சொல்லலாம்.. மேக்கிங்க் வைஸ் பல இடங்களில் சபாஷ் வாங்கினாலும் அஸ்திவாரம் மகா மட்டம்.. இந்த மாதிரி மக்கள் மனதை பாதிக்கும், சமுதாயத்துக்கு எந்த வித நேர் மறை விளைவுகளை தராமல் வக்கிர எண்ணங்களை சமூக விரோதிகளிடம் வளர்க்கும் படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கண்டனத்துடன் விமர்சனத்துக்குள்ளே போலாம்.. 


கார் ஆகட்டும், பைக் ஆகட்டும் முதல்ல ஃபர்ஸ்ட் கீர், அப்புறம் செகண்ட் கீர் லாஸ்ட்டா டாப் கீர். இப்படித்தான் ஸ்பீடு எடுக்கனும்.. ஆனா  படத்தோட ஓப்பனிங்கே டாப் கீர்ல ஸ்டார்ட் ஆகுது.. ஒரு ஹனிமூன் கப்பிள் நடுக்காட்ல கார்ல போறாங்க.. அதை 4 பேர் கொண்ட கும்பல் துரத்துது..  இதை சுவராஸ்யமா 7 ரீல் கொண்டு போனதே பெரிய விஷயம்.. அவங்க எதுக்காக அவங்களை துரத்தறாங்க அப்டிங்கறதை சாவகசமா இடைவேளைக்குப்பிறகு  ஃபிளாஷ்பேக்ல சொல்றாங்க. 


 முறைப்படி இந்த கதையை ஃபிளாஷ்பேக் உத்தியை பயன் படுத்தாம நேரடியா ஏன் சொல்லலைங்கறதுக்கும், ஆரம்பத்துல ஹீரோயின் கார் ஓட்ட ஹீரோ ஏன் பின் சீட்ல உக்காந்திருக்கார் என்பதற்கும் அட்டகாசமான சஸ்பென்ஸ் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கு.. சொன்னா சுவராஸ்யம் போயிடும்./.

வில்லன் குரூப் ல மெயின் வில்லன் சாடிஸ்ட்.. உலகத்துல சாடிஸ ரேப்க்கு தனி மார்க்கெட் இருக்கறதால  பெண்ணை சித்ரவதை பண்ணி ரேப் பண்ணி அதை வீடியோ எடுத்து நெட்ல விட பிளான் பண்றாங்க.. 3 டிக்கெட்ங்களை கூட்டிட்டு வந்து ஃபாரஸ்ட்ல பாழடைஞ்ச பங்களாவுல கில்மா பண்றப்போ ஹீரோயின்  அதை பார்த்துடறா.. அதை வீடியோ எடுத்துடறா.. அதை கைப்பற்றத்தான் சேசிங்.. படம் பூரா ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான்.. படம் முடிஞ்சதும் ஆடியன்சும் ( மொத்தமே 19 பேர்தான்)  விட்டா போதும்னு வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கறாங்க


http://i.ytimg.com/vi/LwNRQ2Lwfzw/0.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஷூட்டிங்க் ஸ்பாட், லொக்கேஷன்ஸ், ஒளிப்பதிவு அட்டகாசம்..

2. ஹீரோயின்  நடிப்பு செம.. பல படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர் போல் நடிச்சிருக்கார்..அங்கங்கே ஓவர் ஆக்டிங்கும் உண்டு

3. ஹீரோயின் பட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை  காரை டிரைவ் பண்றார்.. ஆனா ஹீரோ தேமேன்னு பின்னால இருக்கார்./  ஆனா பின் பாதி ஃபிளாஷ்பேக் சீன்ல ஹீரோ தான் கார் ஓட்டறார்.. இதுக்கான காரணத்தை க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சீனா வெச்சது கலக்கல் .. இயக்குநர் படத்தில் பாராட்டத்தக்க ஒரே  விஷயம் இந்த ட்விஸ்ட் தான்.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  


http://i869.photobucket.com/albums/ab253/tamiltheatre/pollangu-5.jpg


மனம் கவர்ந்த ரொமான்ஸ் வசனங்கள் ( ஹனிமூன் ட்ரிப்)

1. ஏய்.. ரொம்ப வளைக்காதே..

எதை?

 காரை

2.ஹனிமூனை யார் கண்டு பிடிச்சாங்க ? தெரியுமா? கேன் யூ கெஸ்?

ம்ஹும், நீங்களே சொல்லிடுங்க..

கூட்டுக்குடும்பத்துல பிறந்த ஒருத்தன் தன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க முடியாதவன் தனியா எங்காவது அவளை தள்ளிட்டு போக ஐடியா கண்டு பிடிச்சு இருக்கனும்

 அப்போ மாயாண்டி குடும்பத்துல  பிறந்த முனியாண்டி?!!

3.  ஏய்! வலிக்குதா?


வலி இல்லாம வழி கிடைக்காது4. டியர்.. தாங்க்ஸ்..

எதுக்கு?

என்னை சந்தோஷப்படுத்துனதுக்கு

ஐ நோ (I KNOW)

எப்படி?

ம் ம்  என்னால உணர முடிஞ்சது..  உயிர்த்துடிப்பு சொல்லுச்சு..ம், ஆனா வலிக்குது5.  குளிருது... உனக்கு குளிரலை?

 போர்வைக்கு எப்படி குளிரும்? புரியலையே..

மக்கு புருஷா.. நைட் டைம்ல நான் தானே உன் போர்வை.. எனக்கு எப்படி குளிரும்?6. கடல்ல ஒரு வகை மீன்கள் இருக்கு.. லாங்க் ஷாட்ல அவை நீர்  மட்டத்தை விட்டு வெளில வர்றப்போ நெருப்புக்குழம்பு பாய்ச்சல் போல் தெரியும்.. கொள்ளி வாய் பிசாசுன்னு  சிலர் நினைப்பாங்க.. அதே மாதிரி அடர்ந்த கானகத்தில் இப்படி அருவி சத்தம் போலியா கேட்கும்.. அதுக்கு கோஸ்ட் மாடஸ்டி ஆஃப் வாட்டர்னு பேரு.,.

வில்லனின் வசனங்கள்

1. எல்லா பெரிய ஆளுங்களும் ( பெரிய மனுஷங்க) தொடர்ந்து பணக்காரங்களா இருக்க அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டே இருக்கறது தான் காரணம்

2. அது போக 18 இடங்களில் கெட்ட வார்த்தைகள் http://4onlinetv.com/wp-content/uploads/mvbthumbs/img_359_pollangu-tamil-theo-trailer-pro-mounam-ravi_xvid.jpg


இயக்குநரிடம்  பல கோபாவேச கேள்விகள்


1. இந்தப்படத்தின் மூலம் நீங்க சமுதாயத்துக்கு சொல்ல வருவது என்ன? சமூக விரோதிகளுக்கு ஐடியா குடுக்கறீங்களா? ஆட்டோ சங்கர் மாதிரி இதை பார்த்து அது போல் செய்யலாம்னு முயற்சி செஞ்சு யாராவது பாதிக்கப்பட்டா நீங்க அதுக்கு பொறுப்பு ஏத்துக்குவீங்களா?

2. ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கறது தப்பில்லை.. நல்ல விஷயங்களை காப்பி அடிக்காம இப்படிப்பட்ட வல்கர் படம் தான் உங்க கண்ணுக்கு சிக்குச்சா?

3. படத்தோட டைட்டில்ல எழுத்து , இயக்கம்னு உங்க பேரை ஜம்பமா போட்டுக்கறீங்க.. இதன் ஒரிஜினல் மூவிக்கான க்ரெடிட்டை ஏன் கொடுக்கலை?

4. ஏதோ த்ரில்லர் படம்னு தெரியாம ஒருத்தன் தன் ஃபேமிலியோட வந்து தியேட்டர்ல மாட்டிக்கிட்டா அவன் அடையும் மன உளைச்சல்களுக்கு உங்க நஷ்ட ஈடு என்ன?

5. ஹீரோ செலக்‌ஷன் மகா மட்டம்.. சரியான தத்தியா இருக்கார்.. அவர் தான் ஃபைனான்ஸ் பண்ணாரா?

6. ஹீரோயின் நியூலி மேரீடு கேர்ள்க்கு பொருத்தமே இல்லை.. 38 வயசு ஆண்ட்டி மாதிரி இருக்கு..

7 சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு எவ்ளவ் லஞ்சம் கொடுத்தீங்க?


http://www.tamilnow.com/movies/gallery/pollangu/pollangu-9231.jpg


லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. படத்தோட ஓப்பனிங்க் சேஸ் சீன்ல ஹீரோயின் கார்ல வேகமா போறா.. வில்லன் குரூப் ஜீப்ல துரத்தறாங்க.. அப்போ ஹீரோயின்  டக்னு மெயின் ரோட்டை விட்டு விலகி லெஃப்ட்ல கட் பண்ணி மண் ரோட்டில் கொஞ்ச தூரம் போய் வண்டியை நிறுத்தி வந்த பாதையின் மண் தாரையை அழிச்சுட்டு கிளம்பறா.. அதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா? என் ஐடியா என்னன்னா ஆளில்லா அநாமத்து காட்டில்  அப்படி சப்வே மண் ரோட்டில் போய் மாட்டிக்கறதுக்கு ஒரு பெண் என்ன யோசிப்பான்னா வில்லன்க அந்த இடத்தை கிராஸ் பண்ணதும் வந்த வழியிலேயே காரை திருப்பி போனா எஸ் ஆக வாய்ப்பு அதிகம்.. ஏன்னா 10 கிமீ வில்லன்க போய் ஆள் எஸ்னு உணரும்போது ஹீரோயின் ஆப்போசிட் டைரக்‌ஷன்ல 10 கிமீ போய் இருப்பா.. டோட்டலா 20 கிமீ தள்ளி இருப்பா.. சேஃப்.. இந்த ஐடியா தான் செலக்ட் பண்ணுவாங்க.. மேலும் மேலும் சிக்கலை வரவழைக்கும் அந்த சப் வே ஐடியா வை யாரும் அதும் ஒரு பொண்ணு செலக்ட் பண்ண மாட்டா..

2. ஒரு  சீன்ல வில்லனை மலைப்பாம்பு வளைக்குது.. அப்போ அவன் கைல கன் இருக்கு.. சுட்டிருக்கலாம்.. பயத்துல அல்லது உயிர்ப்பாதுகாப்புக்காகவாவது சுட்டிருக்கனும்./. ஆனா அவன் சுடலை ஏன்? வேற ஒரு வில்லன் வந்து அவன் கைல இருக்கற கன்னால சுடறான்.. அது டேஞ்சர் இல்லையா? பாம்பு மேல குண்டு பாய்வதை விட ஆள் மேல பாய்வதற்குத்தான் சான்ஸ் அதிகம்

3.  இன்னொரு காட்சில மலைப்பாம்பு ஒருத்தனை வளைக்குது.. அப்போ 3 பேரு வந்து என்னமோ ராட்டைல இருந்து நூல் உருவற மாதிரி அவனை ஈசியா விடுவிக்கறாங்க.. அப்புறம் என்னமோ செல்லப்பிராணியை வழி அனுப்பற மாதிரி காட்டுக்குள்ளே அதை விட்டுடறாங்க.. காட்டிலாகா அதிகாரியிடம் இது பற்றி பேசினேன்.. மலைப்பாம்பின் பிடி இறுகி இருக்குமாம்.. அல்ப சொல்பமா  அப்படி எல்லாம் விடுவிக்க முடியாதாம்.. உடும்புப்பிடிக்கு அடுத்து மலைப்பாம்பின் பிடிதான் ஃபேமஸாம்

4.   புரட்சித்தலைவியின் தஞ்சாவூர் பொம்மைஓ பி எஸ், சோனியாவின்  கை பொம்மை மன்மோகன் சிங்கை  எல்லாம் தோற்கடிக்கும் வகையில் அந்த கணவன் கேரக்டர்,, மகா மகா சோப்ளாங்கி..  கேரக்ட்ரைசேஷன் ஒர்ஸ்ட்

5. கதைப்படி அவங்க ஹனிமூன் கப்பிள் தான்.. ஆனா வில்லன் அவங்க கிட்டே “ உங்க கழுத்துல தாலி இல்லை.. தள்ளிட்டு வந்துட்டீங்களா?” அப்டினு கேவலமா கேட்கறப்போ எந்த ரெஸ்பாண்சும் இல்லையே, ஏன்? தன்னிலை விளக்கம் கொடுக்க வேணாமா?

6. டவர் இல்லாத காட்டுப்பகுதி.. யாருக்கும் செல் ஃபோன் டவரே கிடைக்கலை.. ஆனா வில்லன்க தேடல் வேட்டையை நடத்தும்போது 4 வெவ்வேறு திசைகளில் போய் மறுபடி கரெக்டா வேற ஒரு இடத்துல ஒண்ணு கூடுவது எப்படி?இந்த இடத்துல மீட் பண்ணலாம்னு அவங்க பேசிக்கவும் இல்லை..

7. ஹீரோயின் அடிபட்டு மயக்க நிலைல இருக்கு.. இந்த லூஸு வில்லன்க பாட்டுக்கு கேனத்தனமா விசாரனை பண்றதும், தேளை அவங்க மேல விடறதும் ஓவர்.. தேளை ஒருத்தன் அப்பப்ப தூண்டி விடறான்.. அவன் என்ன ஜூவாலஜி ஸ்பெஷலிஸ்ட்டா? பொட்டுன்னு அவனைத்தான் மொதல்ல போடும்..

8. ஹீரோயின் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோ, தீவிரவாதியோ கிடையாது.. சராசரி பொண்ணுக்கான வலி தாங்கு திறன் தான் அவருக்கும் இருக்கும்.. ஆளில்லா காட்டில் கை விரல் நகங்கள் 10, பற்கள் எல்லாம் கட்டிங்க் ப்ளையர் எல்லாம் வெசு பிடுங்கியும் அவர் பிடிவாதமா அந்த கேமராவை எங்கே ஒளிச்சு வெச்சேன்னு சொல்ல மாடேன்னு அடம் பிடிப்பது செயற்கை.. அவ்ளவ் அடம் பிடிச்சு என்ன யூஸ்?

9. ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருட்டுல இவர் பாட்டுக்கு  மண்ணுக்குள்ளே கேமராவை ஒளிச்சு வைக்கறார்.. செல் ஃபோன் டவர் இல்லை.. யாருக்கும் மெசேஜ் அனுப்பும் வசதியும் இல்லை.. அதனால என்ன யூஸ்? இவர் செத்துட்டா அந்த ரகசியத்தை யார் எடுக்கப்போறாங்க?

10. நடுக்காட்டில் நள்ளிரவில் எழும் மணப்பெண் ஒரு மினிமினி பட்டர்ஃபிளை பார்த்து வீடியோ எடுப்பது ஓக்கே.. அது பின்னாலயே 2 கிமீ தூரம் போய்க்கிட்டே இருப்பது ரொம்ப ஓவர்.. அது என்ன பிட்டுப்படமா? பட்டர் ஃபிளை தானே.. 2 நிமிஷம் எடுத்தாலும் 2 மணி நேரம் எடுத்தாலும் 1 தானே..?  
http://haihoi.com/Channels/cine_gallery/Pollangu-Movie-Wallpapers-11_S_152.jpg


சென்சார் ஆஃபீசரிடம் சில கேள்விகள்

1.  லஞ்சம் வாங்கிட்டா எவ்ளவ் குப்பை படத்தையும் ரிலீஸ் பண்ணிடலாமா? இந்தப்படத்துக்கு எப்படி சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைச்சதுன்னு நீதி விசாரனை எல்லாம் வரவா போகுதுன்னு  அலட்சியமா?

2.  ஒரு பெண்ணை ரேப் பண்ற மாதிரி சீன் காட்ட சிம்பாலிக் ஷாட் போதாதா? அவ்ளவ் டீட்டெயிலா காட்டி இருக்காங்க.. அதை எப்படி அலோ பண்ணீங்க?

3. ஹீரோயின் நகங்கள் பிடுங்கப்படும் காட்சி, பல்லை கட்டிங்க் ப்ளையர் ( கொரடு) வெச்சு எடுக்கும் காட்சி எல்லாம் ஓவரோ ஓவர்.. இதுவரை எந்த தமிழ் சினிமாவுலயும் வர்லை.. என்ன தைரியத்துல இதை எல்லாம் அலோ பண்ணீங்க?

4. ஹீரோயின் மயக்கம் ஆகிடறா.. அவளை எழுப்ப தண்ணி தெளிக்கறதுக்குப்பதிலா வில்லன் ஹீரோயின் முகத்துல.. .. மகா மட்டமான வல்கரான சீன் அது.. உவ்வே,, இதை எப்படி ஓக்கே சொன்னீங்க?

5. பிணத்துடன் உறவு கொள்ளும் வில்லன் மூவ்மெண்ட் காட்டுனது ஓவர்னா ஒருத்தன் அந்த பிணத்தின் முகத்து தோலை அப்படியே  உரிச்சு எடுக்கறது எல்லாம் வல்கரின் உச்சம்.. உங்க ஃபேமிலி லேடீஸ் இந்தப்படத்தை பார்க்க அலோ பண்ணுவிங்களா?

6. இந்தப்படத்துக்கு பணத்தை வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் குடுத்த குற்றத்துக்காக தண்டனையா உங்க மனைவி மகள் அம்மாவுடன் இந்தப்படத்தை பார்க்கனும்னு சொல்லிடனும்.. அப்போதான்யா உங்களுக்கெல்லாம் புத்தி வரும்..


தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு கேள்வி

1. நாய் வித்த காசு குரைக்காதுதான்.. இந்த மாதிரி மட்டமான படம் எடுத்து அதுல வர்ற வருமானத்துல சாப்பாடு சாப்பிடனுமா?கீழே இருப்பவர் தான் தயாரிப்பாளர் . படத்துல போலீஸ் ஆஃபிசரா வர்றார்..


http://www.thehindu.com/multimedia/dynamic/00928/19cp_Pollangu_Praka_928179g.jpgசி.பி கமெண்ட் - இந்த கேவலமான படத்தை பெண்கள், கர்ப்பிணிகள், மாணவ மாணவிகள் , 36 வயதுக்கு உட்பட்டோர், மனோரீதியாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் மென்மையான மனம் கொண்ட அனைத்து வயது ஆண்கள் பார்க்க வேண்டாம். ஹனிமூன் போகும் புது மணத்தம்பதிகள் பார்த்தால் ஜென்மத்துக்கும் அந்த ஆசையே போயிடும் அபாயம் இருப்பதால். அவர்களும் பார்க்க வேண்டாம்..வன்முறையின் உச்சமான படத்தை எடுத்த இயக்குநர் பேரு காந்தி மார்க்ஸ்ஸாம் அவ்வ்வ்வ். என்னே ஒரு முரண்!


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க் - ஓக்கே


டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5

 டெக்கான் கிரானிக்கல்   6 /10

டிஸ்கி 1 - நடுநிசி நாய்கள் விமர்சனம் - http://www.adrasaka.com/2011/02/18_18.html


டிஸ்கி 2 -

இயக்குநர் கவுதம் மேணனுக்கு ஒரு கண்டனக்கடிதம்( இது பொல்லாங்கு இயக்குநருக்கும் பொருந்தும்)http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

 

 

டிஸ்கி 3 - சுழல் விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 

 

டிஸ்கி 4 -  டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html