Showing posts with label SARVAM MAYA (2025)மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label SARVAM MAYA (2025)மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, February 02, 2026

SARVAM MAYA (2025)-சர்வம் மாயா -மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ரொமாண்டிக் காமெடி ட்ராமா)@ஜியோ ஹாட்ஸ்டார்

                              

25/12/2025 அன்று வெளியாகி மெகா ஹிட் ஆகி 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த இந்தப்படம் நிவின் பாலிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.இப்போது  30/1/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிஙகில் கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு  வசதியான நம்பூதிரி  குடும்பத்தில் பிறந்தவன் . அப்பா  பூஜை , புனஸ்காரம் என்று இருக்க  , 18  வது வயதில் அம்மா திடீர்  என இறந்து விட்டதால்  கடவுள்  நம்பிக்கை இல்லாத நாத்திகன்  ஆகிறான் .குடும்பத்தைப்பிரிந்து நகரத்துக்கு வருகிறான்  கிதார்  வாசிக்கும்  கலையைக்கற்று  சினிமாவில்  சாதிக்கும்  ஆசையை   வளர்த்துக்கொள்கிறான் . ஆனால் சான்ஸ்   கிடைக்கவில்லை . ஒரு கட்டத்தில்  வருமானத்துக்காக  சொந்த ஊருக்கு  திரும்ப வருகிறான் . இரண்டு  மாதங்கள்  இங்கே  இருந்தாக  வேண்டிய சூழல் .



 அப்போது  ஒரு வீட்டில்  ஒரு பையனுக்குப் பேய்  பிடித்து விட்டது எனவும் . அந்தப்பேயை ஓட்ட  வேண்டும்  எனவும் நாயகன் அழைக்கப்படுகிறான் . அங்கே  போய்  பூ ஜை   செய்யும்போது  பாதியிலேயே   திடீர்   என அந்தப்பையனுக்கு குணம் ஆகி விடுகிறது . நாயகன்   வீட்டுக்குத்திரும்பி விடுகிறான் .


 ஆனால்   அன்று   இரவில்  இருந்து  நாயகன்  வாழ்க்கையில்   ஒரு பெரிய  திருப்பம் உருவாகிறது . நாயகன்  வீட்டில் அவனது அறையில் ஒரு இளம் வயது  பெண்  பேய்  அவன் கண்களுக்குத்தெரிகிறது .


 வழக்கமான  பேய்கள்  போல  அது அவனை   பயமுறுத்தவில்லை , கோர முகம்  கா ட்ட வில்லை , ஒரு தோழியைப்போல பழகுகிறது 


 ஆரம்பத்தில்   தயங்கிய   நாயகன்  பின் அந்தப்பெண் பேயுடன்   சகஜமாகப்பழகி ஆரம்பிக்கிறான் . அந்தப்பெண்  பேய்க்கு  தன பெயர் என்ன? தான் எதனால் இறந்தோம் என்பது தெரியவில்லை 

உன்னிடத்த்தில்   என்னைக்கொடுத்தேன்  படத்தில் கார்த்திக் ரோஜாவுக்கு  பாடகி ஆக உதவுவது போல  அந்தப்பெண் பேய்  நாயகன்  சினிமாவில்  கிடாரிஸ்ட்  ஆக உதவுகிறது 



சினிமாவுக்கு கிடார்  வாசிக்க மும்பை   போகும்   சூழலில்  நாயகனுக்கு  ஒரு பெண்ணின்   நட் புக்கிடைக்கிறது . அது   காதலாக  உருமாறும்  வேளையில்  அந்தப்பெண்  பேய்க்கு  பொஸசிவ்னெஸ்   வருகிறது . ஐ லவ் யூ  சொல்கிறது . 



அந்தப்பெண்  பேயின்   முன்   கதை   என்ன?  நாயகன் என்ன  முடிவு எடுத்தான்   ? என்பது  மீதித்திரைக்கதை 

 நாயகன்  ஆக நிவின் பாலி   பிரமாதமாக நடித்து  இருக்கிறார் . சங்கோஜம் , பயம் , ஈகோ ,  அப்பா மீதான பாசம் . இரு  பெண்களிடையே  சிக்கித்தவித்தல்  என  பல காட் சிகளில்   அருமையாக   ஸ்கொர்   செய்கிறார் .

 நாயகி ஆக   , பெண் பேயாக , துறுதுறு பேச்சு  அழகி ஆக  ரியாஷிபு அட் டகாசமான  நடிப்பு . அவரது   உடல் மொழி , குரல் , நடிப்பு எல்லாம் அபாரம்  .மாடர்ன்  டிரஸ்  போட்ட   கலர் புல்  நதியாவாக  ஜொலிக்கிறார் .அவரது  பிளாஸ்பேக்  காட் சியில்  கண் கலங்க வைக்கிறார் 

இன்னொரு நாயகி ஆக  பிரித்தி    முகுந்தன்  பின் பாதியில்  வந்தாலும்   குறைவான நேரத்தில் நம் மனதில்   நிறைந்து விடுகிறார் . அவரது  முக அழகும் , கண்ணியமான   உடைகளும் , நடன அசைவுகளும்  சிறப்பு 

முதல்   நாயகியின் அம்மாவாக  மெதில்  தேவிகா , அப்பாவாக   வினீத்   இருவருக்கு ம்  நல்ல குணச்சித்திர  நடிப்பு 

 நாயகனின்   கசின்  ஆக வரும்  அஜூ   வர்கீஸ்   காமெடியில்   களை  காட்டும் நடிப்பு 

ப்ரியா  பிரகாஷ்  வாரியர்  கெஸ்ட்  ரோலில்   வருகிறார் 

ஒளிப்பதிவு  சரண்  வேலாயுதன் .  இரு நாயகிகளையு ம் , நாயகியின் அம்மாவையும்  கூட க்ளோஸப்பில்ம் அழகாகக் காட்டி இருக்கிறார் .ஜஸ்ட்டின்   பிரபாகரன்  இசையில்  இரு பாடல்கள்   அருமை . பின்னணி இசையும் சிறப்பு  அகில் சத்யன் , ரத்தின்  ராதாகிருஷ்ணன்  ஆகிய   இருவரும் இணைந்து  எடிட்   செய்து  இருக்கிறார்கள் . 146  நிமிடங்கள்   ஓடுகிறது . கதை , திரைக்கதை   எழுதி  இயக்கி   இருக்கிறார் அகில் சத்யன்



சபாஷ்  டைரக்டர்


1   பயமுறுத்ததும்  பேய் , காமெடிப்பேய்   வரிசையில்  ஒரு  பீல் குட்  ரொமாண்டிக் பேய்  கேரக்ட்டர்   அருமை 


2 முதல்  30 நிமிடங்கள்  மெதுவான திரைக்கதையில்  அனைத்துக்கதாப்பாத்திரங்களை  அறிமுகம்  செய்து அவர்களோடு  ஆடியன்ஸுக்கு    எமோஷனல் கனெக்ட்   கொடுத்த விதம் 


3  யாரம் எதிர்பாராத  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட் 



  ரசித்த  வசனங்கள் 


1  பொதுவாக  சிடுமூஞ்சிகளாக  இருக்கும் அப்பாக்கள்  அறுபது , எழுபது  வயசுல   பாசத்துக்கு  ஏங்குவாங்க 


2 பணம் இன்னைக்கு வரும் , நாளைக்குப்போகும்


நாளைக்குப்போக  இன்னைக்கு   இன்னமும்  பணம்   வரலையே? 


3   நம்மை நல்லபடியா   பார்த்துக்கறதுக்கும்,நம்ம  கிட்டே  அன்பு  காட்டிடவும்    ஒரு  ஆள்  வேணும் 


4   கல்யாணம்   ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு  பார்க்கிற  பொண்ணுங்க எல்லாரும் அழகாக  இ ருப்பதாத்தான் தோணும் 


5     நல்ல  தூக்கத்தை விட சிறந்த  மருந்து   வேற   எதுவும்   இல்லை 


6   பெரியப்பா  , என்   ரூமுக்கு  ஒரு பெண்  பேய்  வருது 


 அடுத்த டைம் வந்தா என் ரூம்க்கு அனுப்பு , பேச்சுத்துணைக்கு ஆகும் 


7   ஒருத்தரோட பிரச்சனை பண்ணிட்டு அப்படியே மெயிண்ட் டெ யின் பண்றது கஷ்டம் ஆகிடும் 


8  உன் குரல் அருமை , நீ மட்டும் சாகாம இ ருந்திருந்தா  பெரிய ஸ்டார்  ஆகி  இருக்கலாம் 


 அதுதான் செத்துட் டே னே , இனி ஸ் டார் ஆகறதுதான் பாக்கி 


9  பயம் இருப்பது நல்லதுதான் , பயம் இருப்பதால் தான் மனித குளம் இந்த அளவு அசுர வளர்ச்சி அடைஞ்சிருக்கு 


10     பேயை இவ்ளோ  பக்கத்தில் பார்த்துட்டு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லைன்னு சொன்னா எப்படி ? 


உன் கேள்வில யே பதிலும் இருக்கு.  நான் இன்னமும் கடவுளை நேரில் பார்க்கலையே ? 

 11     பிரிவு ஒரு பயங்கரமான  வலி தான் , ஆனா அதைக்கடந்துதானே போயாகணும் ?

12      நாம்  நேசித்த ஒருத்தர் நம்ம வாழ்க்கையை விட்டுப்போகும்போது நம்ம மனசைத் தெளிவா வெச்சுக்கறது முக்கியம் 

13   உங்களுக்கு இந்தப்பேய் ,பிசாசு  இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு  நினைச்சேன் 


நம்பிக்கை இல்லை , ஆனா பயம் உண்டு 


14  உன்னை மாதிரி  சிங்கிளா  சுத்தறவங்க தான்  ரொம்ப ரொமாண்டிக்கா இருப்பாங்க 


15    நீ  அவளை லவ் பண்றியா ?


 மியூஸிக்   தான் என் ஒரே லவ் 


 மண்ணாங்கட்டி , அதை  ஒரு ஓரமா வை 


16   நான்   எப்படி உன்னை லவ் பண்ண முடியும்?, நீ ஒரு பேய் , உன்னை தொடக்கூட முடியாது 


லவ்  ஈஸ்   நாட்  ஒன்லி   பிசிக்கல் டச் , எமோஷனல்  கனெக்ட் 


17   பொதுவா  ஒரு  ஆத்மாவுக்கு   மோட்சம்  கிடைக்கணும்னா  அது அனுபவிக்கும் தூக்கத்துல இருந்து  அதுக்கு  விடுதலை கிடைக்கனும் 



=============================================================

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின் கண்களுக்குமட்டும்  அந்தப்பெண்  பேய்  எதனால்   தெரிகிறது   என்பதற்கு  க்ளைமாக்சில்  விடை கிடைக்கிறது , ஆனால்  அந்தப்பெண்  பேயின்     அம்மா, அப்பாவுக்கு  காட்சி  அளித்து   ஆறுதல்   சொல்லாதது ஏன் ? 


2  கடவுள்   நம்பிக்கை இல்லாத நாயகன்  மீண்டும்   எப்படிக்கடவுளை   நம்புகிறான்  என்பதற்கு   விளக்கம் இல்லை 


3   காதலில்  பிரேக்கப்பில்    சோகம்  ஆகும் இரண்டாம்   நாயகி  கால அவகாசம்  எடுத்துக்கொள்ளாமல்  திடீர்   என  நாயகனுடன்  காதலில்   விழுவது எப்படி ?   


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  13 +   குடும்பத்துடன்   பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரு பீல்   குட்  ரொமாண்டிக் மூவியைப்பார்க்க விரும்புபவர்கள்  அவசியம்   பார்க்கலாம் .. ரேட்டிங்க் 3.25 / 5




Sarvam Maya
Theatrical release poster
Directed byAkhil Sathyan
Written byAkhil Sathyan
Produced byAjayya Kumar
Rajeev Menon
StarringNivin Pauly
Riya Shibu
Aju Varghese
Janardhanan
Preity Mukhundhan
CinematographySharan Velayudhan
Edited byAkhil Sathyan
Rathin Radhakrishnan
Music byJustin Prabhakaran
Production
companies
Firefly Films
Akhil Sathyan Films
Distributed byCentral Pictures
Release date
  • 25 December 2025
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office₹145.30 crores[2]