Showing posts with label SANIYA MIRSA. Show all posts
Showing posts with label SANIYA MIRSA. Show all posts

Thursday, June 28, 2012

சானியா மிர்சா ஆவேச தாக்குதல் - ஆணாதிக்கவாதம்

http://img.stillgalaxy.com/public/06-24-2011/sania-mirza/sania-mirza-hot-photos-0.jpg 

அதிருப்தியில் இருக்கும் லியாண்டர் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறி அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ), பயஸ் ஆகியோர் மீது கடுமையாகச் சாடியுள்ளார் சானியா மிர்சா.


 ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவிலும், சோம்தேவுக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் செவ்வாய்க்கிழமை இரவு வைல்கார்டு (நேரடித்தகுதி) வழங்கியது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்).  இதைத் தொடர்ந்து டென்னிஸ் சங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள சானியா, தன்னுடைய அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:


 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து இந்தியாவின் சார்பில் 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒலிம்பிக் போட்டிக்கான அணி அறிவித்தது முதலே பயஸýடன் இணைந்து விளையாடுவீர்களா என்று நண்பர்கள், உறவினர்கள், சக வீரர், வீராங்கனைகள் குறிப்பாக ஊடகங்கள் என அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர்.

 அப்போதைய சூழ்நிலையில் வைல்டுகார்டு கிடைக்காமல் அதுபற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தேன்.  கலப்பு இரட்டையரில் பயஸýடன் இணைந்து விளையாடுவதற்கு நான் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை வேஸ் பயஸ் தொலைக்காட்சிகள் மூலமாக என்னை நிர்பந்தித்தார். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன்.  அதனால் பயஸ், பூபதி, போபண்ணா, விஷ்ணுவர்தன், சோம்தேவ் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து விளையாடுவேன். ஒருபோதும் விளையாட முடியாது என்று மறுக்கமாட்டேன். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaCT-JGiHBn4IDpNhKQYYU2XkklJ8CIyB3kIRgY096Ky0xa-tiOAvtv18Ns7X-AW1i08lPKO_m0o_kvFFh9K4pVhvne7vnO_7SwdZU_H4K8EENJVx88bmSk5ts_im-sVGSSz6gma980NTE/s1600/Sania+Mirza+Hot+Pics.jpg

  ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுவதில் பூபதி மிக உறுதியாக உள்ளார். அவருடன் இணைந்து விளையாடினால் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறார். அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸýக்கு விட்டுக்கொடுத்து அவர் தியாகம் செய்திருக்கிறார்.  21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்ணாகிய நான், அதிருப்தியில் இருக்கும் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன்.

இதன்மூலம் நான் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறேன். பயஸýடன் விளையாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்ட விதமும், வெளியாகியிருக்கும் நேரமும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.  பயஸýடன் விளையாட முடியாது என்று மகேஷ் பூபதி கூறிவிட்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக இப்போது நான் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகப்பெரிய அமைப்பான டென்னிஸ் சங்கத்தினால் நான் இழிவுபடுத்தப்பட்டுள்ளேன்.

அதை இங்குள்ள பெண்கள் அமைப்பினர் கண்டிக்க வேண்டும். பயஸ், பூபதிக்கு அடுத்தபடியாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது நபர் நான்.  கடந்த வாரம் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோதும் டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எவ்வித வாழ்த்தும் எனக்கு வரவில்லை. அப்படியிருந்தும் என் மீது டென்னிஸ் சங்கத்தினர் மரியாதை வைத்திருப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் இப்போது இழிவுபடுத்தப்பட்டுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 திறமை அடிப்படையில் அணி தேர்வு:  சானியாவுக்கு ஏஐடிஏ பதில்  புது தில்லி, ஜூன் 27: திறமையின் அடிப்படையிலேயே டென்னிஸ் அணி தேர்வு செய்யப்பட்டதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.  சானியாவின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த அணி தேர்வு செய்யப்பட்டது என்றும் ஏஐடிஏ தெரிவித்துள்ளது. அணி தேர்வு விவகாரத்தில் சானியா கடுமையாக சாடியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஏஐடிஏ பொதுச் செயலர் பரத் ஓஸô வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:  திறமையின் அடிப்படையிலேயே கலப்பு இரட்டையரில் சானியா, பயஸ் இருவரையும் விளையாட வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvUhMHe9wHOUHxpEHs4VC0Rw7rjNqoqc8axav6pely2BQtn8ssOVv4lPI-hzjvIrKfMK8uMlZDyO2QN1Of31T6WvY6fGwkDzKpy7UviY_25AyD8P1DR4EMDCE-JIrYT_TP9JOgdsoyr-I/s400/sania.jpg


. தரவரிசையில் லியாண்டர் பயஸ் 7-வது இடத்திலும், சானியா 12-வது இடத்திலும் உள்ளனர். அதனடிப்படையிலேயே கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள 12 முன்னணி அணிகளில் பயஸ்-சானியா அணி 9-வது இடத்தைப் பிடிக்க முடிந்தது. 


 சானியாவும், பயஸýம் இணைந்து விளையாடினால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என ஏஐடிஏ நம்புகிறது. இந்திய வீரர்கள் தங்களின் கருத்து வேறுபாட்டை மறந்துவிட்டு நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும். பொது இடங்களில் ஒருவர் மற்றொருவர் குறித்து குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



THANX - DINAMANI

Tuesday, May 24, 2011

அந்தக்கால ஃபிகருங்க, இந்தக்கால ஃபிகருங்க என்ன வித்தியாசம்?

http://farm4.static.flickr.com/3436/3833787216_00d73a68f3.jpg 

1.பெண் பார்க்கும் படலத்தில் பெண் கூட 5 நிமிஷம் தனியா பேசிப்பார்க்க நினைச்சா அவன் பழமைவாதி.உரசிப்பார்க்க நினைச்சா பழந்தின்னு..........#ஜெண்ட்ஸாலஜி

-----------------------
2, பெண் பார்க்கப்போறப்ப பொண்ணு அழகா இருந்தா அவன் அதிர்ஷ்டக்காரன், பொண்ணோட தங்கைகள் 3 பேரும் அழகா இருந்தா அவன் தான் மச்சக்காரன்#சைட்டாலஜி

------------------------
3. ஒரு ஜி கே கேள்வி.பகலில் இந்தியாவுக்காகவும்,இரவில் பாகிஸ்தானுக்காகவும் விளையாடும் விளையாட்டு வீரர் யார்? ஹி ஹி சானியா மிர்சா

-------------------

http://www.thedipaar.com/pictures/sania4.jpg
4. சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் -அம்மா பார்த்து.. கைதிகளையும் இடம் மாத்தறேன்னுட்டு தெரியாத்தனமா ரிலீஸ் பண்ணிடப்போறீங்க

----------------------------
5. பதவி ஏற்பு விழாவுக்கு கேப்டன் ஏன் போகலை? பந்திலயே உட்கார வேணாம்னுட்டாங்க.. இலைல ஓட்டைன்னு சொன்னா எப்படி?#ஹானரபிள் அம்மா வாழ்க

------------------------

http://www.flixya.com/files-photo/s/h/i/shinu240798.jpg
6. டேய்..செல்லம் பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு கிஸ் குடுத்தியே என்ன சொன்னாங்க?அப்படியே அப்பன் புத்தின்னாங்க மம்மி#ஜொள்ளாலஜி

----------------------
7. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்.இது லவ்.சரக்கு கிடைச்சா சொல்லி அனுப்பு சைடு டிஷ் உடனே வருகிறேன் - இது நட்பு

---------------------
8. அந்தக்கால ஃபிகருங்க அவங்கம்மா மாதிரியே சமைச்சாங்க.. இந்தக்கால ஃபிகருங்க அவங்கப்பா மாதிரியே சரக்கு அடிக்கறாங்க#கலிகால ஃபிகர்ஸ் வாழ்க.

-----------------------
9. அம்மா தாயே.. ஏதாவது ஃபிகர் ஃபோன் நெம்பர் இருந்தா தாங்கம்மா.. லவ்வி 3 மாசம் ஆச்சும்மா .. பழைய ஃபிகரா இருந்தாலும் பரவால்ல.அட்ஜஸ் பண்றேன்

------------------------
10 . தேசியக்கொடி ஏத்தறப்ப என்ன பிரச்சனை?மூவண்ணமும் பச்சைக்கலர்ல இருக்கனும்னு அம்மா சொல்லீட்டாங்களாம்.கவர்னர் ஆடிப்போய்ட்டாரு#அம்மா நாமம் வாழ்க

---------------------
 http://s1.hubimg.com/u/490900_f520.jpg

டிஸ்கி - அன்பு நண்பர்களுக்கு ஒரு தகவல். நான் விடும் பஸ் கமெண்ட், ட்விட்டர் கமெண்ட் அனைத்தும் என் அனுபவம் அல்ல.. அதில் வரும் டீசண்ட்டான ,ரசிக்கக்கூடியவை மட்டும் என் சொந்தக்கற்பனை.மற்றபடி சில கிளுகிளுப்பான ,கிளாமரான கமெண்ட்ஸ் நண்பர்கள் விக்கி தக்காளி, நாஞ்சில் மனோ, நிரூபன்,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்,பன்னிக்குட்டி ராம்சமி போன்ற நண்பர்களின் அனுபவங்களே.. எனவே க்ரியேட்டிவ் ஹெட் என்ற முறையில் பாராட்டுக்களை எனக்கும், கண்டனங்களை நண்பர்களுக்கும் சொல்லவும்.இப்படிக்கு யார் எக்கேடு கெட்டுப்போனாலும் தான் மட்டும் நல்லாருந்தா போதும் என நினைக்கும் ஒரு மான மிகு பதிவர் ஹி ஹி