Showing posts with label PEDDI (2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label PEDDI (2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, June 25, 2026

PEDDI (2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ஆக்சன் ட்ராமா)

        

    பெத்தி என்பது நாயகனின் பெயர்.பலரும் பட டைட்டிலை பெட்டி என்று தவறாக உச்சரிக்கிறார்கள்.டைட்டிலில்  Bedhi என வந்திருக்க வேண்டும்.ஏ ஆர் ரஹ்மான் இசையால் இந்தப்படம் அகில இந்திய அளவில் கவனம்  பெறுகிறது.அந்நியன் படத்தில் விக்ரம் 3 வித கெட்டப்களில் வந்த மாதிரி இதில் ராம் சரண்  3 விதமான உடல் அமைப்புடன் வருவது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு.அவரது உழைப்பு  வின் (WIN)ஆனதா?வீண் ஆனதா? பார்ப்போம்      

2021ம் ஆண்டில் உப்பேண்ணா என்ற ஹிட் படத்தைக்கொடுத்த புஜ்ஜி     பாபு சனாவின் அடுத்த படம் தான் இது.தன்      முதல் படத்துக்காக  நேஷனல் பிலிம் அவார்ட்,சிமா அவார்ட்,சாக்சி எக்சலன்ஸ் அவார்ட் வென்றவர்.


ஸ்பாய்லர்  அலெர்ட்

கதை நடக்கும் கால கட்டம் 2016.கதைக்களம் ஆந்திரா வில் விஜயநகரம் என்னும் (கற்பனை)கிராமம்.


140 கோடி மக்கள்  தொகை கொண்ட இந்தியா ஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கங்கள் மட்டுமே  வாங்கியதால் கடுப்பான விளையாட்டுத்துறை அமைச்சர்  ஒரு மீட்டிங் போட்டு திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்கிறார்.


அமைச்சர் அறிவுறுத்தலின்படி விளையாட்டு வீரனைத்தேடிப்போகும்போது நாயகனைப்பற்றி ஆச்சரியமான உண்மைகள் தெரிகிறது.


மல்யுத்தம்,ஓட்டம்,கிரிக்கெட் ஆகிய மூன்றிலுமே சாம்பியன் ஆக இருக்கிறார் நாயகன்.ஆனால் அவர் குடி இருக்கும் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை.ரயில் நிற்பதில்லை.ரயில்வே டிராக் ஊரில் இருந்தும் பயன் இல்லை.அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.தனக்கும் ,தன் சொந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்க நாயகன் நினைக்கிறார்.அதற்காக அவர்   தேர்ந்தெடுத்த  ஊடகம் தான் விளையாட்டுத்துறை.

மூன்று துறைகளில் ஜாம்பவானாக இருக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.இதற்குப்பின் நாயகன் என்ன செய்தார் ?என்பது மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக ராம் சரண் அற்புதமான அர்ப்பணிப்பு,உழைப்பு கலந்த பங்ககிப்பு அருமை.குறிப்பாக குஸ்தி சண்டைக்காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.ரன்னிங் மேன் ஆக ஒரு வித உடல் அமைப்பு,குஸ்தி பயில்வான் ஆக வேறு வித உடல் அமைப்பு,கிரிக்கெட் வீரர் ஆக புது வித உடல் அமைப்பு என அவர் காட்டி இருக்கும் வித்தியாசம் அபாரம்.


நாயகி ஆக ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்.இவரது கேரக்டர் டிசைன் சரி இல்லை.நடிக்க வாய்ப்பும் இல்லை.கவர்ச்சிக்காக மட்டுமே ஊறுகாய் போல பயன்படுத்தி இருக்கிறார்கள்.


சார்பேட்டா பரம்பரை படத்தில் பசுபதி ஏற்று நடித்த ரோல் சிவராஜ் குமார் ரோல்.குஸ்தி வாத்தியாராக கலக்கி விட்டார்.

பொமன் இராணி,திவ்யேந்து சர்மா,ஜகபதிபாபு,ஜான் விஜய்,அஜய் கோஸ்,ஹரீஸ் பெரோடி,உபேந்திரா ,ஸ்ருதிஹாசன் என மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.

ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்களும் அருமை.குறிப்பாக சிக்கிரி சிக்கிரி மெகா ஹிட்.தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி கமர்ஷியல் மசாலா பாணியில் இசை அமைத்து இருக்கிறார்.பின்னணி இசையும் நன்று.


ஒளிப்பதிவு ஆர் ரத்தினவேலு.குஸ்தி சண்டைக்காட்சியில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்.

நவீன நூலியின் எடிட்டிங் கில் படம் 189 நிமிடங்கள் ஓடுகிறது.ரொம்பவே நீளம்.ஷார்ப் ஆக 150 நிமிடங்களில் முடித்திருக்கலாம்.

ஐந்து நபர்களின் உதவியுடன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்  புச்சி பாபு சனா



சபாஷ்  டைரக்டர்

1 ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தும் அதகளம்

2 நாயகனின் அர்ப்பணிப்பும் ,உழைப்பும் அபாரம்.கமல்,விக்ரம்,சூர்யா இவர்களைத்தாண்டிய உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

3 ஜெகபதி பாபுவின் கேரக்டர் டிசைன் நடிப்பு. அற்புதம்.இதுவரை அவர் இப்படி ஒரு கேரக்டர் அவருக்குக்கிடைத்ததே இல்லை.

4. ஏ ஆர் ரஹ்மானின் இசை யில் பாடல்கள் ஹிட்


  ரசித்த  வசனங்கள் 

1 உங்க ஊருக்குத்தான் இப்போ ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சே?எதுக்கு இவ்ளோ தூரம் நடந்தே கூட்டிட்டு வந்தே?


அப்போதான் சார் நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் என உங்களுக்குத்தெரியும்


2  ஏரியாக்காரங்களுக்குப்"பெட்டி" கோயிலில் இருக்கும் கடவுள் இல்லை,கிரவுண்டில் இருக்கும் கடவுள்

3  ஆட்டம் தாம் ல என் திமிரு

4. ஆட்டத்தில் ஜெயிப்பது எனக்கு முக்கியம் இல்லை.ஆட்டத்தில் உயிர் இருக்கனும்

45  அவனுக்கு நல்லா ஆடத்தெரிஞ்சு இருக்கலாம்,ஆனா ஆட்டுவிப்பது நாம் தான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கதை,திரைக்கதை இரண்டுமே ஒரு சரியான பாதையில் பயணிக்காமல் தறிகெட்டு ஓடுகிறது

2 நாயகியின் கேரக்டர் டிசைன் மகா மட்டம்.படம் முழுக்க அவருடன் எப்போதும் 10 தோழிகள் வருகிறார்கள்.அனைவரும் தாவணி அணிந்து கண்ணியமாய்த்தோன்றும்போது நாயகி மட்டும் தாவணி அணியாமல் வருகிறார்.நாயகன் நாயகிக்கு தாலி கட்டவில்லை,நாயகி தனக்குத்தானே தாலி கட்டிக்கொள்கிறார்,ஆனால் தாவணி கட்டவில்லை

3. நாயகனின் கேரக்டர்  டிசைனும் சரி இல்லை.நாயகியிடம் காதலை சொல்லும்போது " சில பேர் காதலை பூக்கள் கொடுத்து சொல்வார்கள்,சில பேர் காதலை பரிசு தந்து சொல்வார்கள்.ஆனால் நான் முத்தம் கொடுத்து காதலை சொல்கிறேன் என்கிறார் முன் பின் அறிமுகமே இல்லாத ஒருவர் முத்தம் தந்தால் போலீசில் தான் புகார் தருவார்கள் பெண்கள்.

4 படத்தின் ரன்னிங் டைம் 189 நிமிடஙகள்.ரொம்பவே நீளம்.எமோஷனல் கனெக்ட்டே இல்லை.எப்பத்தான் படத்தை முடிப்பாங்க என சலிக்க வைக்கும் திரைக்கதை அமைப்பு 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சொல்ல வந்த கதைக்கரு ,மெசேஜ் எல்லாம் அருமை,ஆனால் சொன்ன விதம் சரியில்லை.திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது.ராம்சரண் ,ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.ரேட்டிங் 2/5


Peddi
Theatrical release poster
Directed byBuchi Babu Sana
Screenplay byVara Prasad Toleti
Krushna Hari
Nagendra Kasi
Venkat Prasad Gandhi
Sri Raman CH
Story byBuchi Babu Sana
Produced byVenkata Satish Kilaru
Ishan Saksena
Naveen Yerneni
Yalamanchili Ravi Shankar
Sukumar
Partha Dey
Starring
CinematographyR. Rathnavelu
Edited byNaveen Nooli
Music byA. R. Rahman
Production
companies
Mythri Movie Makers
Sukumar Writings
Vriddhi Cinemas
IVY Entertainment
Distributed bysee below
Release date
  • 4 June 2026
Running time
189 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget350 crore[2][3]