Showing posts with label Mutiny(2026)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்). Show all posts
Showing posts with label Mutiny(2026)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்). Show all posts

Friday, September 25, 2026

Mutiny(2026)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்)

 




40 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 21/8/2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிய முதல் நாளிலேயே 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த படம் இது.ஜனநாயகன் படத்துக்கும்,இந்தப்படத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.பட ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆன படங்கள்,
ஆனால் படத்தின் வெற்றியை அது பாதிக்கவில்லை.


Mutiny என்ற டைட்டில் வார்த்தைக்கு அடங்க மறு என்று அர்த்தம்,ராணுவம் அல்லது கப்பல் படையில் ஒரு குழு உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்தல் என்பதுதான் அர்த்தம்.

Plane(2023),Blood Father(2016)படங்களின் இயக்குநரின் லேட்டஸ்ட் ஆக்சன் மூவி இது.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகனின் அப்பா,தாத்தா என எல்லோரும் பரம்பரை பரம்பரையாக போலீஸ் ஆபீசர்கள்.நாயகனும் போலீஸ் ஆபீசராக இருந்தவன் தான்.ஆனால் ட்யூட்டியில் இருக்கும்போது ஓவர் ஹீரோயிசம் காட்டியதால் அடிக்கடி சஸ்பெண்ட் ஆனவன் ஒரு கட்டத்தில் நமக்கு இந்த வேலை சரிப்படாது என ரிசைன் செய்து விட்டவன்.

5 வருடங்களுக்கு முன் ஒரு பெரிய தொழில் அதிபரை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தன் உயிரைப்பணயம் வைத்துக்காப்பாற்றியதால் அவரிடமே பாடிகார்டாக வேலைக்கு சேர்ந்து விட்டவன்.

ஒரு மிகப்பெரிய ஷிப்பிங்க் கார்ப்பரேஷன் கம்பெனி ஓனரான அந்தத்தொழில் அதிபருக்கு ஒரு மகன் உண்டு.மகனின் ஆசைகள், பாதைகள் வேறு என்பதால் அந்தத்தொழில் அதிபர் தனது கம்பெனியை விற்று விட்டு ரிட்டையர் ஆகத்தீர்மானிக்கிறார் .

ஒரு பார்ட்டி முடிந்து காரில் போகும்போது  டிராபிக் போலீஸ் தடுக்கிறது.காரை நிறுத்தினால் போலீஸ்  சரமாரியாக சுடுகிறது.இதில் அந்தத்தொழில் அதிபர் குண்டடிபட்டு இறந்து விடுகிறார்.இறக்கும் முன் தன் மகனைக்காப்பாற்ற நாயகனிடம் உறுதிமொழி வாங்கிக்கொள்கிறார்.

போலீஸ் அந்தத்தொழில் அதிபரைக்கொன்றதாக நாயகன் மேல் பொய்க்கேஸ் போடுகிறது.டிவி ,மீடியாக்கள் எல்லாவற்றிலும் நாயகனின் போட்டோ பிளாஷ் ஆகி கொலைகாரன் பட்டமும் தருகிறது.


நாயகி ஒரு கப்பலில் முக்கியமான பதவியில் அன்றுதான் ட்யூட்டியில் சேர்கிறாள்.அந்தக்கப்பலின் கேப்டன் தான் வில்லன்.நாயகிக்கு அவன் தான் வில்லன் என்பது தெரியாது.அந்தக்கப்பலில் 25க்கும் மேற்பட்ட அப்பாவிகள் ஒரு கண்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஹியூமன் டிராபிக்  ஆபரேஷனைக்கையில் எடுத்து  வில்லனான கப்பல் கேப்டன் செயல்படுவது தெரிய வருகிறது.

நாயகன் அந்தக்கப்பலுக்கு வருகிறான்.நாயகியும் ,நாயகனும் இணைந்து அந்த அப்பாவிகளை எப்படி விடுவிக்கிறார்கள் என்பதும் தொழில் அதிபர் கொலைக்கும் இந்த வில்லனுக்கும் என்ன சம்பந்தம்? என்பதைக்கண்டுபிடிப்பதும் தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக ஜேசன்  ஸ்டேதம்  பிரமாதப்படுத்தி இருக்கிறார்.இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் ஜிம் பாடியை மெயிண்ட்டெயின் செய்கிறார்.ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.

நாயகியாக அனபெல்லே பிரான்சஸ் வாலிஸ் அழகு தேவதையாக வருகிறார்.இவருக்கும் ஆக்சன் சீக்வண்ஸ் உண்டு.

வில்லனாக ரோலண்ட் மோலர் மிரட்டி இருக்கிறார்.

கப்பற்படை உயர் அதிகாரியாக அட்ரியன் லெஸ்ட்டர் நடித்திருக்கிறார் இவர் ஒரு சாயலில் கவுதம் வாசுதேவ் மேனனின் தம்பி போல் இருக்கிறார்.

இவர்கள் போக படத்தில் நடித்த மற்ற அனைத்துக்கேரக்டர்கள் நடிப்பும் கச்சிதம்.

மார்க்கஸ் ட்ரம்ப்பிப் இசையில்  ஆக்சன் சீக்வன்சில் பிஜி எம் பொறி பறக்கிறது.பிராண்டன் சால்வினின்  ஒளிப்பதிவில் கடல் காட்சிகள் கண்ணுக்குக்குளுமை.

டேவிட் ரோசன் ப்ளூவின் எடிட்டிங்கில் படம். 96 நிமிடங்கள் ஓடுகிறது.

லிண்ட்சே மைக்கேல்,ஜேபி டேவிஸ் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர். ஜீன் பிராங்க்காயிஸ் ரிச்சர்.


சபாஷ் டைரக்டர


1 தொழில் அதிபர் பரிசாகக் கொடுத்த விலை உயர்ந்த வாட்சை நாயகன் ஆபத்தான தருணத்தில் ஸ்க்ரூ டிரைவராக உபயோகித்துத்தப்பிக்கும் காட்சி.

2.  தொழில் அதிபரின் கொலையில் அவரது மகனுக்கும் சம்பந்தம் இருக்குமோ?என்ற சந்தேகத்தைக்கிளப்பி க்ளைமாக்சில் அதைப்பற்றி விவரிப்பது


3 கப்பலில் நடக்கும் ஹியூமன் டிராபிக் ஆபரேசனுக்கும் ,தொழில் அதிபர் கொலைக்கும் முடிச்சு போடுவது ,இரு வெவ்வேறான டிராக்குகளை இணைத்த விதம்.


4 நாயகன் நாயகி இருவரும் இணைந்து நடத்தும் ஆக்சன் சீக்வன்ஸ்


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 கப்பல் உயர் அதிகாரிக்கு கடலில் குறிப்பிட்ட தூரத்தைக்கப்பலில் பயணித்துக்கடக்கும் நேரம் தெரியாதா?ஒரு சீனில் அந்த உயர் அதிகாரி 42 மைல்சைக்கடக்க 75 நிமிடங்கள் ஆகும் என்ற தகவலை மாலுமியிடம் கேட்டு அறிந்து கொள்கிறார்.

2  போலீஸ் ஆபீசராக இருந்தவன் என்பதால் நாயகனின் ஆக்சன் சீக்வன்ஸ் நம்பும்படி இருக்கிறது.ஆனால் சாதாரண கிளர்க்காக வரும் நாயகி நாயகனுக்கு இணையாக ஆக்சனில் மிரட்டுவது எப்படி ?

3. நெஞ்சில் கத்திக்குத்து வாங்கிய நாயகன் உடலில் காயம் படாத வில்லனை வீழ்த்துவது நம்ப முடியாத காட்சி.



ரசித்த வசனங்கள்


1. உலகத்தில் இருக்கும் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் இப்போது பாரில் தான் வேலை செய்கிறார்கள்.

2  செஸ்ல இதே என் இடத்தில் நீ இருந்தா என்ன மூவ் செய்வே?

சரண்டர் ஆகி இருப்பேன்.ஆனா நீங்க தொடரலாம்.ட்ரை பண்ணுங்க.

3 வாழ்க்கை பூரா வெற்றியைத்துரத்தறோம்.திரும்பிப்பார்த்தா வாழ்க்கையின் முடிவுக்கு வந்திருப்போம்.

4  எந்த சந்தர்ப்பத்திலும் என் பிஸ்னெஸ் வெற்றிக்காக புரொபசனல் எத்திக்சை விட்டுக்கொடுத்ததில்லை ( மீறியதில்லை)

5.  ஆட்டிடியூட் காட்றது எனக்குப்பிடிக்காது.

6 ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும், உன் தேவை என்ன?ந்னு சொல்

பழிக்குப்பழி.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+. ஜெயிலர்,ஜனநாயகன்,டாக்சிக் ட்ரெய்லர் இவைகளில் பார்த்த வன்முறையில் கால் பங்கு கூட இல்லை.



cps கமெண்ட். -  பரபரப்பான ,விறுவிறுப்பான ,சீட் எட்ஜிங்க் ஆக்சன் திரில்லர் என்றெல்லாம் சொல்ல முடியாது.சராசரியான ஆக்சன் திரில்லர் படம் இது.ரேட்டிங்க்   2.5 / 5


Mutiny
Theatrical release poster
Directed byJean-François Richet
Written by
Produced by
Starring
CinematographyBrendan Galvin
Edited byDavid Rosenbloom
Music byMarcus Trumpp
Production
companies
Distributed by
Release date
  • August 21, 2026
Running time
95 minutes[1]
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish
Budget$40 million[2]
Box office$3 million[3][4]