Showing posts with label CRITICS. Show all posts
Showing posts with label CRITICS. Show all posts

Tuesday, March 15, 2011

நாளைய இயக்குநர் - மழலை +டிராஜடி கதைகள்

[0.jpg]
ஏற்கனவே பலமுறை சொன்ன மாதிரி கலைஞர் டி வி ல எனக்கு பிடிச்ச புரோகிராம் வாரா வாரம் ஞாயிறு காலை 10. 30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சிதான் என்றாலும் இத்தனை நாளா மனசுக்குள்ள புதைச்சு வெச்ச ஒரு ரகசியத்தை இப்போ ஓப்பன் பண்றேன்..(மனசுக்குள்ள நீரா ராடியான்னு நினப்பு)

தொகுப்பாளினியா வர்ற ஃபிகர் எனக்கு பிடிக்கலை.. ( பொண்ணு பார்க்கப்போன மாப்பிள்ளை மாதிரியே பேசறானே)பொதுவா பொண்ணுங்கன்னா உண்மையான குங்குமம் வெச்சுட்டு வந்தாத்தான் நல்லாருக்கும்.( அப்போ பொய்யான குங்குமம்னா என்ன? # ஸ்டிக்கர் பொட்டு) பாப்பா பிரச்சனை எதுக்குன்னு பெரும்பாலும் பொட்டே வைக்கறதில்லை..அது பெரிய மைனஸ்..அப்புறம் பாப்பா போட்டுட்டு வர்ற டிரஸ் கரகாட்டக்காரி மாதிரி நல்லாவே இல்லை.. இதை எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்.. ஆனா பாப்பா செயற்கையா சிரிக்குது பாருங்க.. அதை தாங்க முடியல...

இப்போ நீ விமர்சனம் பண்ண போறது பாப்பாவையா? குறும்படத்தையா?ன்னு சலிச்சுக்கறவங்களுக்கு...சென்னை  டி நகர் -ல் உள்ள டி சி மேனர் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றும் ஒரு ஃபிகரை பற்றி குறிபிட விரும்புகிறேன்.. (ஃபிகர் சுட்டி பொருள் விளக்கு..)அந்த ஃபிகர் +2 தான் படிச்சிருக்குன்னாலும் ஏர்ஹோஸ்டல்ல ஒர்க் பண்ற மாதிரி செம நீட்டா இருக்கும்..அந்த ஹோட்டலுக்கே ஒரு கவுரவம் அந்த ஃபிகர்தான்.ஃபிகருக்கு சம்பளம் மாதம் ரூ 27,000.வேலை சும்மா சிரிக்கனும்.. அவ்வளவுதான்...இது பற்றி மேலும் விபரங்களை என்னைக்கவர்ந்த கேரளா ஃபிகர்கள் என்ற புதிய பதிவில் விளக்கமா பார்ப்போம்.. இப்போ....
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/Priyamani-new-gallery-8.jpg

1. ஆசை - அருண்குமார்

டைட்டில்லயே சைக்கிளை டிசைன் பண்ணி கலக்கலா லே அவுட் குடுத்ததைப்பார்த்ததும் படம் பின்னி எடுக்கும்னு நினைச்சேன்.. ம்ஹூம்.. சுமார்தான்.சின்ன பொண்ணு ஒண்ணு சைக்கிள் வாங்க ஆசைப்படுது..கொஞ்சம் கொஞ்சமா காசு உண்டியல்ல சேர்த்து எப்படியோ ஒரு குட்டி சைக்கிள் வாங்கிடுது.. ஆனா ஒரு வேன் வந்து அதை இடிச்சு ரிப்பேர் பண்ணிடுது..

டிராஜடியா முடிக்கனும்கறதுக்காக வேணும்னே பண்ணுன மாதிரி இருக்கு.. இதன் மூலமா டைரக்டர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல..மனதை தொடலை..ஆனா ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதம்..

இயக்குநர் கவனிக்கத்தவறிய அம்சங்கள்

1. படத்தில் காட்டப்பட்ட அந்த சின்ன உண்டியலில் 200 ரூபா அளவுக்குத்தான் காசு போட முடியும்...இதை எப்படி உறுதியா சொல்றேன்னா மண்பாண்டம் செய்யும் குயவனாக இருக்கும் எங்க ஊர் நண்பன் சரவணன் என் கூட அமர்ந்துதான் பார்த்துட்டு இருந்தார்.. அவர் சொன்ன தகவல் தான் அது..300 ரூபா அதுல சேர்க்க முடியாது.

2. அதே போல் ஒரு ரூபாக்காசு, மற்றும் 2 ரூபாக்காசு மட்டுமே அந்த சிறிய உண்டியல் துவாரத்தில் போட முடியும். 5 ரூபாக்காசு போட சான்ஸே இல்லையாம்..( 2 ரூபாக்காசே ரொம்ப சிரமப்பட்டே போடமுடியுமாம்..).ஆனால் ஒரு சீனில் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த காசுகளை எடுக்கும்போது 5 ரூபாக்காசு நிறைய இருக்கு.

3. வேகமாக வரும் வேன் அந்த சைக்கிளை இடித்து தள்ளும்போது சப்பழிந்து போகும், அல்லது தூக்கி அடிக்கும்.. படத்தில் காட்டுவது போல் ஒரு சக்கரம் மட்டும் தனியே கழண்டு போக வாய்ப்பே இல்லை..

நான் சொல்ற பாயிண்ட்ஸ் ஏதோ குறை சொல்லனும் என்ற நோக்கில் சொல்லப்படுவதல்ல.. அடுத்த முறை அவர்கள் கவனமாக படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்வது..
http://tamildigitalcinema.com/wp-content/gallery/bhuvaneswari-hot/bhuvaneswari-hot-1.jpg
2. தருணம் - மணிவண்ணன்

எதிர்பாராதவிதமா ஒரு ஆக்‌ஷன் கம் டெரரிஸ்ட் ரிலேட்டட் மூவி...கேமரா ஆங்கிள் கலக்கலா இருந்துச்சு.கோயிலுக்கு ஒரு தம்பதி சாமி கும்பிட வர்றாங்க.. ஒரு தீவிரவாதி கும்பல் கணவனை பிடிச்சு அவன் உடம்புக்குள்ள ஒரு வெடியை வெச்சு ஆபரேஷன் பண்ணி பப்ளிக் பிளேஸ்ல அவனை அனுப்பறாங்க.. பிணையக்கைதியா மனைவி...என்ன நடக்குது?ங்கறதை  நல்ல சஸ்பென்ஸா சொல்லி இருக்காங்க..

இது எழுத்தாளர் சுபா அவர்கள் எழுதிய ஒரு நாவலின் வடிவாக்கம் (சூப்பர் நாவல் 1998 நவம்பர் உயிர்பலி) என்றாலும் இயக்குநர் விட்டு விளாசி இருந்தார்..7 நிமிடத்தில் இந்த மாதிரி ஒரு திரில்லர் எடுப்பது ரொம்ப கஷ்டம் தான்..ஹாய் மதன் கூட இதை பாராட்டி THE  Bourne  IDENTITY  படம் போல் திரில்லர் வகையறா படம் எடுக்க வாழ்த்துக்கள் என்றார்.

மனம் கவர்ந்த வசனம்

மனைவி - உங்க பெயரை இனிஷியல் ஆக்க ஒரு சொந்தம் வரப்போகுது..

கணவன் - என் வாழ்க்கைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கற 2வது தருணம் இதுதான்

மனைவி - அப்போ முத தருணம்..?

கணவன் - நம்ம முதல் கல்யாண நாள்

இந்த மாதிரி ஒரு ஆக்‌ஷன் பேக் டிராப்ல லவ் டயலாக் ஒரு ரிலாக்‌ஷேஷனா இருக்கும். வெல்டன் டைரக்டர்.அதே போல் க்ளைமாக்சில் வெடி குண்டை வெடிக்க வைக்கும் ரிமோட் பட்டனை புறா தட்டி விடுவது செமயான சீன்.(டைரக்டர் மணி அகதா கிறிஸ்டி,சுஜாதா ரசிகர் போல)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdmpT0_prjnmrdtEyBSPFra6ns0abOTpVcb4PzFtrgIGHTJ8NVQTMl-Qx8Z0WBjWvx1qws4EKb4Ol6dPeZJ6eeAxNIYm0T3W72RbSaPvi9Eg6tzrjXMrgn3_Th2zFpbEgUZuXL2mDdQxt/s1600/nishanti+in+transparent+saree+%25283%2529.jpg
3.  பசி - ஆர் .ரவிக்குமார்

ஒரு கிராமத்துக்கதை.. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கற சூழல்ல ஸ்கூல்ல போடற சத்துணவையாவது சாப்பிடலாம்னு ஏங்கற பையன் கதை.. ஸ்கூல்ல பாடம் நடத்தறப்பக்கூட அவனுக்கு சாப்பாட்டு ஞாபகம் தான்.அந்த அளவு அவனை பசி துரத்துது.. கடைசில அவன் சாப்பிடும்போது அந்த சாப்பாட்ல பல்லி விழுந்துட்டதா சொல்லி அதையும் பிடுங்கிடறாங்க..

இந்த கதைல முக்கியமா  அந்த சின்னப்பையனோட நடிப்பு நல்லாருந்தது.. ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னன்னா ஹாய் மதன் அந்த பையனை மேடைக்கு கூப்பிட்டு அவனை வாங்க போங்க என மரியாதை கொடுத்துப்பேசி ஊக்குவிச்சதுதான். வெல்டன் மதன் சார்..

இயக்குநர் ஒரு விஷயத்துல பாராட்டப்படவேண்டிய ஆள் தான். என்னான்னா ஸ்கூல்ல பாடம் நடத்தறப்ப கனிகள் பற்றி பாடம் வருது.. அப்போ எல்லா வகை கனிகளும் அந்த பையனோட நினைவலைகளில் சுற்றுவது மாதிரி ஒரு கிராஃபிக்ஸ் ஷாட் வெச்சது அழகு...அவர் பண்ணுன சின்ன மிஸ்டேக் ஏழை சிறுவனா நடிக்க  உண்மையாகவே ஏழையை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.. அந்த பையனோட முகத்துல செல்வக்களை தாண்டவமாடுது.. (FACE SHINING)

இதுக்கு ஹாய் மதனோட கமெண்ட் ,  “அரெஸ்ட்டிங்க் ஷாட் வைக்க முடியல.. பசி என்பது நிறைய பேர் எடுத்துக்கிட்ட தீம் என்பதால் உங்களால ஒரு வட்டத்தை விட்டு வெளில வர முடியல...புதுசா சொல்ல முடியாம தவிச்ச மாதிரி இருக்கு. உங்க கைகள் கட்டப்பட்டிருக்கு....”   100% கரெக்ட்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdFbugtozFImXP2_GstPWidbmCr9M9hvZDxXnA9BR-x1b3DQhx-8QB9EpH3qfasrRBEYXRESdJwhIw1P-OxBS1S6PElMWwqEXfm4wziXp_eZnck3Z9Rt3ndI5-MfSKgznw0yCq0FSH-Eq/s1600/neelam-actress-stills-010.jpg
4. அஞ்சு ரூபா - எஸ் . வி . அருண்குமார்

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே அசத்த ஆரம்பிச்ச இந்தப்படம் முதல் பரிசு வாங்குனதுல எந்த ஆச்சரியமும் இல்ல. பலரின் ஏகோபித்த ஆதரவு இந்தப்படத்துக்கு கிடைச்சதுக்குக்காரணம் மென்மையான கதை சொல்லல் பாணியும், சிறுவனின் பண் பட்ட நடிப்பும்..

ஒரு சின்ன பையன் பலூன் வாங்க ஆசைப்படறான்.. அஞ்சு ரூபா.. அவனுக்கு கிடைக்கல.. அம்மா கிட்டே கேட்கறப்ப  செலவுக்கு டெயிலி தர்ற அம்பது பைசாவை சேர்த்து வெச்சு வாங்கிக்கோ அப்படிங்கறா...அவனும் சேர்த்து வைக்கிறான்..காசை எங்கேயோ தொலைச்சுடறான்.. அப்புறம் அம்மாவே வேற ஒரு அஞ்சு ரூபாவை குடுத்து இதுதான் தொலைஞ்சு போன காசுங்கறா..அந்த காசை ஒரு அவசரத்துக்கு அம்மா க்ரேட்டப்பக்கூட அவன் கொடுக்காம அழுது அடம் பிடிக்கறான்.. இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வெச்ச அஞ்சு ரூபாவை குடுத்து அவன் பலூன் வாங்கப்போனப்ப பலூன் விலை 6 ரூபா ஆகிடுது
கலைஞர் ஆட்சில விலைவாசி கடுமையா ஏறுதுன்னு சிம்பாலிக்கா சொன்ன காட்சி வெச்ச படத்துக்கு அனுமதி அளிச்சதும், அதுக்கு பரிசு குடுத்ததும் கலைஞர் டி வி நிர்வாக இயக்குநர் எந்த அளவு அசிரத்தையா இருக்கார் என்பதற்கான அத்தாட்சி..


சேர்த்து வெச்ச காசை வெச்சு பலூன் வாங்கி வர்றப்ப அது உடைஞ்சிடுது..அவன் அடுத்த அஞ்சு ரூபா சேமிப்புக்கு ரெடி ஆகிடறான்..கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சாதாரணமா தெரியற இந்த கதை படமா நம்ம கண் முன் விரியும்போது செமயா இருக்கு..

இயக்குநரை சபாஷ் போட வைத்த இடங்கள்

1. பள்ளிக்கூடத்துக்கு போகும் மகனை அம்மா, “ ஸ்கூலுக்கு சூதானமா (ஜாக்கிரதையா) போய்ட்டு வ ரனும் என்ன?’ என்ற டயலாக்கை 2 இடங்களில் வைத்து ஏதோ ஆக்சிடெண்ட் நடக்கப்போகிறதோ என டெம்போ ஏற்றி அப்படி எந்த சீனும் வைக்காதது..

2. ஏழை அம்மா விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதும் சத்தத்தை இயற்கையாக ஆன் த ஸ்பாட் ரெக்கார்டிங்க் செய்தது..

3. பலூன்காரனின் வசனங்கள் வெகு இயல்பாக அமைந்தது..

4. அம்மா, பையனின் அற்புதமான நடிப்பு

பெஸ்ட் ஆக்டிங்க் விருதை கடைசி 2 படத்தில் நடித்த 2 சிறுவர்களுக்கும் கொடுத்தது கை தட்டல் பெற வைத்த  முடிவு..

டிஸ்கி -1. குறும்பட ஸ்டில்கள் எதுவும் கிடைக்கலை.. என் மெயிலுக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னதை யாரும் மதிக்கலை..(வழக்கம் போலவே..)அதனால சில குறும்பு பட ஸ்டில்கள்.. ஹி ஹி

டிஸ்கி 2  - முதல் 2 ஸ்டில்களில் ஃபிகர்கள் 2ம் கலைஞருக்கு பிடித்த மஞ்சள் நிற டிரஸ் அணிந்து நிற்பதும், அடுத்த 2 ஸ்டில்களில் உள்ள ஃபிகர்கள் கலைஞர் டி வி யின் நிர்வாக இயக்குநர்க்கு பிடித்த நிறமான டார்க் ரோஸ், லைட் ரோஸ் நிறங்களில் டிரஸ் அணிந்து நிற்பதும் எதேச்சையானவை.. எந்த  உள்குத்தும் இல்லை.. ஹி ஹி