தீபாவளி,பொங்கல் போல காந்தி ஜெயந்திக்கு தமிழில் இவ்வளவு பெரிய படங்கள் வருவது இதுவே முதல் முறை.தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அள்ளி விடலாம் என நினைக்கிறார்கள் போல.
1 பத்தா
2 ஏழு கடல் ஏழு மலை
3 சிக்மா
4 அன்பில் அவன்
5 டிமாண்ட்டி காலனி 3
6 மிஸ்டர் பாரத்
1 பத்தா (காமெடி கேங்க்ஸ்டர் டிராமா)
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்(2012) என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இயக்குநர் பாலாஜி தரணிதரன் அடுத்து சீதக்காதி (2018) படத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்தார்.இந்தப்படம் விமர்சன ரீதியாகப்பாராட்டுக்களைப்பெற்றா லும் கமர்சியலாக ஹிட் ஆகவில்லை.நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் படம் மாதிரி காமெடிப்படத்தைக்கொடுத்து விட்டு சீரியஸ் சப்ஜெக்ட்டை மக்கள் இவரிடம் எதிர்பார்க்கவில்லை போல.
இதே நிலை தான் கே பாக்யராஜூக்கு அன்று ஏற்பட்டது.முந்தானை முடிச்சு அதிரிபுதிரி ஹிட்டுக்குப்பின் ரிலீஸ் ஆன தாவணிக்கனவுகள் பிளாப் ஆனது. முந்தானை முடிச்சு கலகலப்பான ,ஜனரஞ்சகப்படம்.தாவணிக்கனவுகள் தங்கைகளைக்கரை சேர்க்கப்பாடுபடும் நாயகனின் சீரியஸ் கதை.எடுபடவில்லை.
இப்போது மூன்றாம் முறையாக இந்தக்கூட்டணி இணைகிறது.லிஜோ மோல் ஜோஸ் நாயகியாக நடிக்க அட்லி தயாரிக்க, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.
ட்ரெய்லர்,டீசர் பார்க்கும்போது யூகிக்கும் கதை இது தான்.1980 களில் நடக்கும் கதை.நாயகன் ஒரு தாதா.ஊரே அவனைக்கண்டு பயப்படுகிறது.ஒரு பெண்ணைக்காதலித்து மணக்கிறான்.சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்குப்போகிறான்.அவனுக்கு த்தன் மகள் மீது பாசம் அதிகம்.விசுவாசம் ,இரு முடி கட்டு ஆகிய படங்கள் போல அப்பா ,மகள் பாசத்தை முன்னிறுத்தி திரைக்கதை நகரும் போல் தெரிகிறது.
இதில் விஜய சேதுபதியின் கெட்டப் பெரிதாகக்கவரவில்லை.விக் என்பது அப்பட்டமாகத்தெரிகிறது.டி ராஜேந்தர் போல் ,ரஜினி போல் அவர் தலைமுடியைக்கோதுவது எடுபடவில்லை.
ஆனால் காமெடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கும் போல் தோன்றுகிறது.
ரசித்த வசனங்கள்
1 எல்லாரும் அவரைக்கண்டா பயப்படுவாங்க,ஆனா அவர் எதுக்கும் பயப்பட மாட்டார்.
2 ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உன்னை அவங்க வெச்சு செய்யாமயா இருப்பாங்க?
3 அன்பே ,! ஆருயிரே!மத்தவங்கதான் என்னைப்பார்த்து பயப்படனும்.நீ பயப்படக்கூடாது,புரியுதா?
இல்ல,நீ பாடலைன்னா பயப்பட மாட்டேன்
2 ஏழு கடல் ஏழு மலை ( ரொமண்டிக் சைக்கலாஜிக்கல் திரில்லர்)
நிவின் பாலி ,சூரி , அஞ்சலி நடிக்கும் இந்தப்படம் 1/2/2024 அன்றே ரோட்டர்டாமில் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக்குவித்த படம்.
கற்றது தமிழ்(2007),பேரன்பு (2018)ஆகிய படங்களுக்குப் பின் இயக்குநர் ராம் + அஞ்சலி இருவரும் இணையும் படம் இது.
நேரம்(2013) ,ரிச்சி(2017) ஆகிய படங்களுக்குப் பின் நிவின் பாலி நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம் இது.
யுவன்சங்கர் ராஜா + இயக்குநர் ராம் காம்போவில். கற்றது தமிழ் ,தங்க மீன்கள் ,தரமணி ,பேரன்பு ஆகிய படங்களுக்கு ப்பின் இணையும் ஐந்தாவது படம் இது.
இது ஒரு வித்தியாசமான கதை.படம் முழுக்க ஓடும் ரயிலில் நடக்கிறது. 32 வயது சாதா மனிதனுக்கும்,8000 ஆண்டுகள் பழமையான அமரர் ஒருவருக்கும் ,ஒரு எலிக்கும் நடக்கும் சந்திப்பில் அவர்கள் தலைவிதியே மாறுகிறது. காமெடியாக சொல்லப்பட்ட ஒரு feel குட் மூவி போல் தோன்றுகிறது.
கருடன்,விடுதலை பாகம் 1 ,கொட்டுக்காளி ,மாமன் ,மண்டாடி ஆகிய படங்களில் நாயகனாக நடித்த சூரி இதில் காமெடியனாக வருகிறார்.
ரசித்த வசனங்கள்
1 பையனுக்கு வாங்கி வெச்சிருந்த பிஸ்கெட்டை எலிக்குக்கொடுக்கிறான் ,ராஸ்கல்.
2 எலியோ ,யானையோ ,மரமோ ,புல்லோ எல்லாம் உயிர் தான்.மூத்தோரின் ஆன்மா தான்..
3 ஒரு சாதா நபர் ,மரணமற்ற மனிதர் இருவரும் சந்தித்தார்கள்
4 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.... சொல்டா
மாமலை போற்றுதும்
ழ நல்லா சொல்லு
சார்.மதுரைக்காரனுக்கு ல அவ்ளோ தான் வரும்.
5 உனக்கு என்ன வயசு ?
32 சார்
எனக்கு 8822
6. நாற்பது வயசு வரை வாழ்ந்தவங்களுக்கே மனசுக்குள்ளே என்னென்னெமோ ஓடுமில்ல?8000 வருசம் வாழ்ந்தவங்க மனசில் என்னென்ன ஓடுமோ?
7. 1441 ல் அமேசான் ல இருந்தியா?இல்லையா?
கிமு வா?கி பி யா?சார்
டேய்
சார் ,நான் அமேசான்ல ஆர்டர் கூடப்பண்ணலை சார்.
3 சிக்மா ( ஆக்சன் காமெடி ஹெய்ஸ்ட் திரில்லர்)
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் என்பதால் இது கவனம் பெறுகிறது. தமிழ் ,தெலுங்கு இரு மொழிகளில் உருவான படம் இது.
சந்தீப் கிஷன் ,பரியா அப்துல்லா,ராஜூ சுந்தரம் ,சம்பத் ராஜ் ,ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடிக்க கேத் ரீன் தெரேசா கெஸ்ட் ரோலில் வருகிறார்
இசை எஸ் தமன்.
ட்ரெய்லரைப்பார்க்கும்போது ஜனரஞ்சகமான ஒரு ஆக்சன் மசாலாப்படம் போல் தான் தோன்றுகிறது.
ரசித்த வசனங்கள்
1 நிலம்,நீர் ,காற்று,முக்கியமா பணம் எல்லாத்துக்கும் மதிப்பு நாளுக்கு நாள் ஏறிக்கிட்டுதான் போகுது.ஆனா நாம யார் என்பதற்கோ ,நம் உறவுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை.
2 இன்னைக்கு நீ உயிரோட இருக்கியேன்னு சந்தோஷப்படு.ஏதாவது ஆகி இருந்தா?
3 ஏதாவது பிராடு வேலை பண்ணப்போறீங்களா?
பயமா இருக்கு,சொல்லிடுப்பா.
4 இந்த சூதும் ,போதையும் ஒரு காய்னோட இரண்டு பக்கங்கள்.இந்த ரெண்டையும் கலந்து விட்டு கோடி கோடியா சம்பாதிக்கலாம்.
5 ஆடியன்சுக்கு என்ன தேவையோ அதைப்பண்ணு
6 அவர் பசிக்காக வேட்டையாட ஆரம்பிச்சார்.மொத்தக்காடே அவர் கண்ட்ரோலில் தான் இருந்தது
7 ஒரு படைப்பை உருவாக்குவது எவ்ளோ முக்கியமோ அதை விட முக்கியம் அதைப்பாதுகாப்பது...நான் கொஞ்சம் கொஞ்சமா அதை உருவாக்கிட்டேன் இனிமே நீ தான் அதைப்பார்த்துக்கனும்.
8 நான் நிறைய தோத்திருக்கேன்.ஆனா ஏமாந்து விட்டதில்லை.
4. அன்பில் அவன். ( ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்)
போர்த்தொழில் ஹிட்டுக்குப்பின் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கும் படம் இது. நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.பிளாஸ்ட் படத்தின் ஹிட்டுக்குப்பின் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளிவரும் படம் இது.
96 படப்புகழ் கோவிந்த் வசந்தா தான் இதில் இசை.
புதிதாகத்திருமணம் ஆன ஜோடி ஒரு சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.
ட்ரெய்லரைப்பார்க்கும்போது முதல் பாதி காதல் கதை போலவும் பின் பாதி பகத் பாசில் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்த வரதன் (2012) மலையாளப்படம் போலவும் உள்ளது.வரதன் படமே 1971ல் ரிலீஸ் ஆன Straw Dogs என்ற படத்தின் அதிகாரப்பூரவமான தழுவல் தான்.
ரசித்த வசனங்கள்
1 சூர்யா,உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா?என்ன?
2 அவ என்னை விட வசதி.ஆனா எனக்காக எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு என் கூட ஓடி வந்தா.
3 சொன்னதை மட்டும் செய் ,அதிகப்பிரசிங்கித்தனம் எதும் செய்ய வேண்டாம்.
4 ஒரு ரெண்டு நிமிசம் நிம்மதியா உக்காந்து அவ கூடப்பேசி எவ்ளோ நாள் ஆகுது தெரியுமா?
5 பிராமிஸ் செஞ்ச வாழ்க்கையை அவளுக்குக்குடுக்கனும்னு நான் ஆசைப்படறேன்..
6 இந்த சம்பவம் நடக்கும்போது மேடம் வீட்டில் தனியாவா இருந்தீங்க?
7 இன்னைக்கு நைட் எதிர்பாராத சம்பவம் நடந்து போயிடுச்சு.அதில் எனக்கும் வருத்தம் தான்.
8 தனியா இருக்கத்தான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.
9 சார் ரொம்ப சாப்ட் டைப் போல.
10 நீ என்ன செஞ்சே?நான் என்ன செய்யறேன் என்று கணக்குப்போட்டு வாழ்வது இல்லை வாழ்க்கை.
5 டிமாண்ட்டி காலனி 3
தமிழ். ஹாரர் திரில்லர்
அருள்நிதி ஒரு அண்டர்ரேட்டட் ஹீரோ. இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் பிரமாதமாக இருக்கும்
மாமூல் மசாலாக்கதையில் நடிக்கவே மாட்டார் மாறுபட்ட க்ரைம் திரில்லர் ,திகில் ஊட்டும் ஹாரர் திரில்லர் தான் இவரது சாய்ஸ்.
முதல் பாகம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி 26 கோடி ரூபாய் வசூல் செய்த மாபெரும் ஹிட் படம்.இரண்டாம் பாகம் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.இப்போது வர இருக்கும் மூன்றாம் பாகம் 75 கோடி வசூல் நிச்சயம் ,100 கோடி வசூல் லட்சியம் என்று சொல்கிறார்கள்.
இதில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர் ,அர்ச்சனா ரவிச்சந்திரன் ,மீனாட்சி கோவிந்தராஜன்,மியா ஜார்ஜ் ,குருசோமசுந்தரம், ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
சாம் சி எஸ் இசையில் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
மிரட்டலான டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
6 மிஸ்டர் பாரத். ( ரொமாண்டிக் காமெடி டிராமா)
ரஜினிகாந்த் + சத்யராஜ் நடித்த மிஸ்டர் பாரத் படக்கதைக்கும்,இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொந்தப்படம் இது.யூ ட்யூப் வீடியோ எடுக்கும் நாயகன் தன் நண்பனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க ஒரு கேங்க்ஸ்டரிடம் போகிறான்.அவரையே தயாரிப்பாளர் ஆக்கி படம் எடுக்கிறான். நொந்த படம் எடுப்பவன் ஒரு சொந்தப்படம் எடுக்கும் காமெடிக்கதை இது
கிரேசி மோகன் ,எஸ் வி சேகர் பாணியில் உருவாகி இருக்கும் வார்த்தை ஜாலக்காமெடிப்படம் இது.
ட்ரெய்லரே கலக்கல் காமெடியாக இருக்கிறது.
பாரத் ,சம்யுக்தா விஸ்வநாதன் ,பால சரவணன் ,நிதி பிரதீப் ஆதித்யா கதிர் ,லிங்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதை ,திரைக்கதை ,இயக்கம் நிரஞ்சன்.
ட்ரெய்லரைப்பார்த்தபோது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வேன் வெச்சு எல்லாம் கடத்தி இருக்கோம் காமெடி டிராக் போல இதிலும் கடத்தல் காமெடி இருக்கும் போலத்தெரிகிறது.
ரசித்த வசனங்கள்
1 கொஞ்சம் லெங்க்த்தியா வீடியோ எடுத்துட்டு வாடான்னா ரெண்டு மணி நேரப்படமா எடுத்துட்டு வந்திருக்காங்க.
2 அதென்ன எல்லாமே 2 நிமிசம் ,4 நிமிசம் வீடியோ வாவே இருக்கு,கொஞ்சம் நீளமா எடுத்தா என்ன?
3 என்னடா லாலி பாப்?
அவனுங்க பாக்கெட்டை செக் பண்ணினப்போ இது தான் இருந்தது.இன்னமும் இதை வெச்சுத்தான் சுத்திட்டு இருக்கானுங்க.
4 யார்றா போன்ல?
ஏன் ப்ரோ கேட்கறீங்க?
சும்மாதான்....
அப்ப சரி...
யார்றா போன்ல?
என்ன பிரதர்?மறுபடி கேட்கறீங்க?
சும்மாதான்
அப்ப சரி..
5 அண்ணன் கோபமா இருக்கார்டா.
6 சரி ,அடுத்து என்ன?
எப்போ?னு. சொன்னா யூ ட்யூப்ல அப்லோடு பண்ணிடலாம்.
7 இவனுங்க கிட்டே தியேட்டர் க்குப்படம் பண்ணனும்னு புரிய வைக்கலையா?
8 ஆக்சுவலா இவன் யார் பேச்சையுமே கேட்கறதில்லை.இவன் பேச்சை மட்டும் தான் கேட்கறான்.என்னைக்கு இவன் பேச்சை மட்டும் தான் இவன் கேட்கறான்னு இவனுக்குத்தெரியுதோ அப்போ தான் திருந்துவான்.
9 எதுக்கு டென்சன் ஆகறே?உனக்கு ஒரு பிரச்சனைனா அதுக்கான தீர்வை நோக்கிப்போ.அதை விட்டுட்டுப்புலம்பிட்டே இருக்காதே.
10 அண்ணே,நீங்க எங்கே போறீங்க.எல்லா சொல்யூசனுக்கும் என் கிட்டே ஒரு பிராப்ளம் இருக்குண்ணா.... அய்யய்யோ மாத்தி சொல்லிட்டனோ?
11 திடீர்னு பணம் கேட்டா எப்படி?நெக்ஸ்ட் டைம் கடத்தும்போது கண்டிப்பாத்தந்துடறேன்.
12. டேய்...உன் கிட்டே நான் என்னடா சொன்னேன்?
டேய்... அப்டினு சொன்னீங்க.


