Showing posts with label சக்தித்திருமகன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ). Show all posts
Showing posts with label சக்தித்திருமகன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ). Show all posts

Sunday, September 21, 2025

சக்தித்திருமகன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் ஆக்சன் மசாலா )

           


         இந்தப்படத்தை ஆர்வமாகப்பார்க்க இரண்டே  காரணங்கள் தான் அருவி (2017)  என்ற  வித்தியாசமான ஹிட் படத்தைக்கொடுத்த இயக்குனர்   அருண் பிரபு புருஷோத்தமன்  இயக்கிய படம் + விஜய் ஆண்ட்டனியின் 25 வது படம் , அவரது சொந்தப்படம் . 19/9/25  முதல் திரை  அரங்குகளில் வெளியாகி உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சென்னை தலைமை செயலகத்தில் நாயகன்  ஒரு மீடியேட்டர் ஆக புரோக்கர் ஆகப்பணிபுரிகிறான். ஐ ஜி க்கு புரமோஷன்  வாங்கித்தருவது , மந்திரிக்கு  பெரிய பதவி கிடைக்க செய்வது என பல மேலிடங்களுக்கு உதவியாக இருந்து அதில்  10 % கமிஷன் ஆகப்பெறுகிறான் . 15 வருடங்களில் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கிறான். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழை மக்களூக்கு செலவு செய்கிறான் 


  வில்லன் 30 வருடங்களாக அரசியலில் இருந்து  கோடிக்கணக்கான பணம் சம்பாதித்து இருக்கிறான். ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதுதான் வில்லனின் லட்சியம் . நாயகனின் அம்மாவை  இளம்வயதில் பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்தவன் இவன்


நாயகன்  வில்லனை எப்படிப்பழி வாங்கினான் என்பதே   மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக விஜய் ஆண்ட்டனி  நடித்து இருக்கிறார். வழக்கம் போலவே  முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நடித்து இருக்கிறார் . அவரது  பி ஏ   ஆக விவேக் படங்களில் காமெடி செய்யும் செல் முருகன் வித்தியாசமான குணச்சித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார்


பாரதிராஜாவின் காதல் ஓவியம் படத்தில் நாயகன் ஆக நடித்த கண்னன்  என்கிற  சுனில் தான் இதில் வில்லன் . ஜனாதிபதி ஆக இவர் செய்யும் மூவ்கள் எல்லாம் பயங்கரம் . இவரது  கெட்டப் துக்ளக்   ஆசிரியர் ஆடிட்டர்  குரு மூர்த்தியை நினைவு படுத்துகிறது , இவரது  உடல் மொழி , டயலாக் டெலிவரி நடிப்பு கலக்கல் ரகம் 


  வில்லனுக்குத்துணை புரியும்  மத்திய  அமைச்சர் ஆக வரும் வில்லி கெட்டப்  நிர்மலா சீதாராமனை  நினைவுபடுத்துகிறது . சென்சாரில் எப்படி விட்டார்கள் என்பது தெரியவில்லை 


நாயகி ஆக  திருப்பாதி ரவீந்திரா  நடித்திருக்கிறார் . குடும்பப்பாங்கான கண்ணீய தோற்றம் , ஆனால் அதிக வாய்ப்பில்லை 


 நாயகனின் வளர்ப்புத்தந்தை ஆக வாகை சந்திர சேகர் நடித்திருக்கிறார்


 விஜய் ஆண்ட்டனி தான் இசை . ஒரு பாடல்  நன்றாக இருக்கிறது . பின்னணி இசை ஓக்கே ரகம் 


ஷெல்லி ஆர் காலிஸ்ட்  தான் ஒளிப்பதிவு .  ஷங்கர்  படங்களில்  வரும் பிரம்மாண்டம்  இருக்கிறது .எடிட்டிங்க் இன்னமும்  கவனம் தேவை . பின் பாதியில் ரொம்ப ஸ்லோ .157  நிமிடங்கள்  படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதி  திரைக்கதை  நல்ல வேகம் . ஒரு சீனில் என்ன நடக்கிறது ? அது சாத்தியமா? எப்படி? என யோசிப்பதற்குள் அடுத்த சீன் வருகிறது . நல்ல உத்தி 


2  சாதா  பழி வாங்கும் கதையை  அரசியல் சதுரங்க விளையாட்டில்  லாவகமாக பரபரப்புக்கூட்டியது 


3  இப்படி  எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை , ஆனால் நடந்தால்  நல்லா இருக்கும் என்ற சாமான்யனின் மைண்ட் செட் தான் படத்தின் வெற்றிக்குக்காரணம் 


  ரசித்த  வசனங்கள் 


1 பலவீனமான ஆடு பலி ஆவது பாவம் இல்லை , பிராப்தம் 


2 அரசியலில்  அப்பிராணியா இருந்தா ஆப்பு வெச்சுச்சுப்போயிடுவாங்க


3 ஆட்சி , அதிகாரம் இருக்கும்போதே சம்பாதிச்சாதான் உண்டு , பதவி போய்ட்டா எவனும் மதிக்க மாட்டான் 


4  நாலு பேரு கையெடுத்துக்கும்பிட்டாலும்  எட்டுப்பேரு நாசமாப்போ என சொல்லும் அளவுக்கு இறங்கிப்பண்ணி இருக்கேன் 


5  பெரிய பெரிய   கல் எல்லாம் சின்னக்கல் தடுக்கித்தான் கீழே விழும் 


6 இந்த நாட்டில் சம்பாதிப்பதை விட பினாமிகளைக்கண்டு பிடிப்பதுதான் குதிரைக்கொம்பா ஆகிடுச்சு 


7  ஒருத்தரை தொடர்ந்து அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சா அவங்க அடுத்து என்ன செய்யப்போறாங்க என்பது தெரிஞ்சிடும் 


8  தீவிரவாதியை விட அரசியல்வாதி மோசமானவன் ,அரசியல்வாதியை விட மோசமானவன் ,  பிம்ப்            மோசமானவன் ,  இவங்க   3 பேரையும் விட  மோசமானவன்   மீடியேட்டர் /புரோக்கர் ச்


9 எங்கெல்லாம் சிஸ்டம் ஃபெயில் ஆகி  அரசாங்கம் மக்களூக்கு செய்யலையோ அங்கெல்லாம் இவன் செஞ்சிருக்கான் சார் 


10 வாழ்க்கை என்பது அவனவன் வாழ்வதற்கு மட்டும் இல்லை , அடுத்தவங்களூக்காக வாழ்வதும்தான் 


11   குறி  பார்க்காம சுடுவது எவ்வளவு ஆபத்தோ அதை விட ஆபத்து சிந்திக்காமல் பேசுவது 


12  பத்தாயிரம் பேரு  பட்டினியா இருந்தாத்தான் ஒத்தைப்பணக்காரன் வயிறு நிரம்பும் 


13  தனக்கான வழியைத்தானே உருவாக்கிக்கொள்பவன் தான் தலைவன் ஆக முடியும் 


14 காட்டுல ஒரு பிரச்சனைன்னா அழிக்க வேண்டியது சிங்கத்தை அல்ல

 நரியை 


15   இந்த நாட்டில் பிரச்சனையே தகுதியே இல்லாதவன் தன் தகுதிக்கு மீறி  ஆசைப்படுவதுதான் 


16     என்ன  ஜாதின்னா கேட்டே? இங்கே நல்லவன் , கெட்டவன் ரெண்டே ஜாதி தான் 


17  இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி . இதுல பாதிப்பேரு ரேஷன் அரிசியை  நம்பித்தான் வாழ்றான்


18   நான்  செய்த பாவத்தைக்கணக்குப்போட கடவுளுக்கே  ஆயுசு  பத்தாது 


19     எல்லாரையும்  பிச்சைக்காரன் ஆக்கிட்டு யார் கிட்டே திருடுவது ?


20    ஜனநாயக நாட்டில் மேலே இருக்கிறவன் தான் கீழே  இருப்பவனிடம் பயப்படனும் 


21 இங்கே  இருக்கும் மினிஸ்டருங்க எல்லாம் எம் ஜி ஆர்  மாதிரியா இருக்காங்க , நல்லா குடிச்சுட்டு பன்னி மாதிரிதானே இருக்காங்க ?


22  இல்லைன்னு சொல்றவன் நாத்திகன் , இருக்குன்னு சொல்றவன் ஆத்திகன் , இந்த இரண்டு கேட்டகிரிக்கும் நடுவில் இருக்கானே அவன் தான் ஸ்ட்ரைட் கிரிமினல் 


23  இத்தனூண்டு  பூனையைப்பார்த்து  பயந்து  ஊரை சுத்திப்போறான் பார்த்தியா இதுதான் மூட நம்பிக்கையின் உச்சம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஷங்கரின்  முதல் படமான ஜெண்ட்டில்மேன்  ரெஃப்ரென்ஸ் பல இடங்களில் கொட்டிக்கிடக்கிறது 


2  மெயின்  வில்லன் , வில்லி , சைடு  வில்லன் மூவரும்  ஆங்கில வசனங்கள் அதிகமாகப்பேசுவதால்   அதற்கு  தமிழ் சப் டைட்டில் போடாததால் பல வசனங்கள் புரியவில்லை 


3 ரமணா  வில் நாயகன்  செய்வதில் நம்பகத்தன்மை இருந்தது , இதில் மிஸ்சிங்க் 


4    வில்லன் நாயகனைக்கார்னர் செய்தபோதே இடைவேளை  டைமிலேயே கொன்றிருக்கலாம் . விட்டு விடுவது ஏனோ?


5   பின் பாதியில்  நாயகன் என்னமோ தகிடுதித்தம் செய்கிறான் என்பது வில்லனுக்குத்தெரியும்போதே  நாயகனைப்போட்டுத்தள்ளி இருக்கலாம், ஆனால் சும்மா ஃபாலோ பண்ணி அப்டேட் கொடுத்துட்டு இருக்காங்க .   அடியாளூங்க 


6    வாகை சந்திர சேகர்  நாயகன் கைக்குழந்தையாக சுடுகாட்டில்  பார்த்து  தத்து எடுத்து வளர்க்கிறார் . அவருக்கு   எப்படி நாயகனின் அம்மாவைக்கொலை செய்த வில்லனின் விபரங்கள் தெரிந்தன? 

7   பின் பாதியில்  அரசாங்கத்தைக்குறை சொல்லும் சீன்கள் எல்லாம் நியூஸ் சேனல் பார்ப்பது போல ஒட்டவில்லை , ரமாணாவில் ஆழமாகபப்திய வைத்திருந்தார்கள் 


8 பவர்ஃபுல்லான வில்லனுக்கு 15 வருடங்களாக  தமிழகத்தை ஆட்டி வைக்கும் நாயகனைத்தெரியாமல் இருப்பது எப்படி ? 


9   நாயகன்  ஃபாரீனில் கிரிப்டோ கரன்சியை டீல் செய்வது ஹவாலா மோசடி எல்லாம் காதில் பூக்கூடை ரகம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஜெண்டில்மேன் + ரமணா  பாணீயில் பரபரப்பான  முதல் பாதி , நம்பவே முடியாத பின் பாதி , கமர்ஷியல் ஹிட்  பி , சி செண்ட்டர்களில் ஆகிடும் . விகடன் மார்க் யூகம் 42 . ரேட்டிங்க் 2.75 / 5 



Shakthi Thirumagan
Theatrical release poster
Directed byArun Prabu
Written byArun Prabu
Produced byFatima Vijay Antony
Meera Vijay Antony (Presenter)
Starring
CinematographyShelley R. Calist
Edited byRaymond Derrick Crasta
Dinsa
Music byVijay Antony
Production
company
Vijay Antony Film Corporation
Release date
  • 19 September 2025
Running time
157 minutes
CountryIndia
LanguageTamil