Saturday, June 06, 2026

Panda Plan 2: The Magical Tribe (2026)-சைனீஷ் /தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் காமெடி அட்வென்ச்சர் டிராமா)@அமேசான் பிரைம்

 

ஜாக்கிசான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம்  சைனா திரை அரங்குகளில் 14/2/2026 முதல் ,அமெரிக்கத்திரை அரங்குகளில் 14/4 /2026 முதல் வெளியாகி இப்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் உடன் 22/5/2026 முதல் காணக்கிடைக்கிறது.


2024ம் வருடம் இதே ஜாக்கிசான் நடிப்பில் வெளியான Panda Plan  படத்தின் இரண்டாம் பாகம் இது.முதல் பாகம் பார்க்காதவர்கள் கூட இந்த இரண்டாம் பாகத்தைப்பார்க்கலாம்.இரண்டும் தனித்தனிக்கதை.

--                              


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு அதிரடிக்கதாநாயகன்.நாம் வீடுகளில் பூனைக்குட்டி ,நாய்க்குட்டி வளர்ப்பது போல் அவர் செல்லமாக ஒரு கரடிக்குட்டியை வளர்த்து வருகிறார்.அவரும் அந்தக்குட்டியும் சைனாவில் இருக்கிற ஒரு வனப்பிரதேசத்தில் இருக்கும் பாண்டா சரணாலயம் செல்கிறார்கள்.


போகும் வழியில் வழி தவறி  ஒரு பழங்குடி இனத்தவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.அந்தப்பழங்குடி இனத்துக்கு ஒரு ராணி தான் தலைமை.அவருக்கு ஒரு மகன்,மகள்.


அந்த இனத்தவர் தெய்வமாக வணங்கும் உருவ சிலையின் முக சாயல் நாயகனின் பாண்டா என்னும் குட்டியின் முக சாயலை ஒத்து இருக்கிறது.

ராணி ஒரு கல்வெட்டைப்படித்துப்பார்த்து பாண்டாவும்,அதன் தூதுவனும் இங்கே இருக்கும் மலை உச்சியை அடைந்தால் இந்த பழஙகுடி இனத்தவருக்கு வர இருக்கும் பேராபத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை அறிகிறாள்.

ராணி நாயகனிடம் தன் விருப்பத்தை சொல்கிறாள்.அதே கூட்டத்தில் ஒரு பிரிவினர் நாயகன் வருகையை விரும்பவில்லை.வில்லனை அனுப்பி நாயகனைக்கொல்ல முயல்கின்றனர்.


வில்லன் நாயகனைத்தாக்க வரும்போது தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை இழந்து விடுகிறான்.நாயகன்தான் தன் உயிரைக்காப்பாற்றியவன்.அவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என நினைத்து நாயகனை தெய்வமாக வணங்கி சேவைகள் செய்கிறான்.


வில்லனுக்கு மீண்டும் ஒரு முறை தலையில் அடிபடும்போது பழைய நினைவுகள் வந்து நாயகனைக்கொல்ல முயல்கிறான்.


நாயகன் வில்லனிடம் இருந்து தப்பித்தானா?மலை உச்சியை அடந்து அந்த இனத்தைக்காப்பாற்றினானா?என்பது மீதித்திரைக்கதை.

,

நாயகன் ஆக ஜாக்கிசான் நடித்திருக்கிறார்.71 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பா?என நம்மை வியக்க வைக்கிறார்.சேசிங் சீன் ,சாண்டைக்காட்சிகளில் தன் வயதுக்கு ஏற்ற வகையில் சாகசங்கள் செய்கிறார்.

பாண்டா கரடிக்குட்டி ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதன் உடல் மொழி ,முக பாவனைகள் ,குறும்புகள் ரசிக்க வைக்கிறது.

ராணி ஆக வருபவர் இந்திய சீன கலப்பினப்பெண் போன்ற முக சாயல்.நன்றாக நடித்திருக்கிறார்.நாயகனை அண்ணனாக  ஏற்றுக்கொள்வதைப்பார்க்கும்போது நமக்கு அண்ணாத்த பட ரஜினி நினைவு வருகிறது.


ஏன் எனில் ராணியாக நடித்த நடிகைக்கு 25 வயது இருக்கலாம்.ஜாக்கிசான் வயசு 71. தாத்தா வை எப்படி அண்ணன் என்கிறாரோ?


ராணியின் மகன் செய்யும் காமெடி ,மகளுக்கான செண்டிமெண்ட் சீன்ஸ் கச்சிதம்.

வில்லன் ஆக வருபவர் கொடூரமான முகத்துடன் வரும்போதும் சரி ,தலையில்  அடி பட்டதும் குழந்தை ஆக மாறுவதும் சரி மாறுபட்ட இரு வேறு நடிப்பு கலக்கி இருக்கிறார்.

படத்தில் நடித்த மற்ற அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ,இசை ,எடிட்டிங் ,சி ஜி ஒர்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்

லூவான் சாங்க் என்பவர் இயக்கி இருக்கிறார்.

படத்தின் ரன்னிங் டைம் 100 நிமிடங்கள்


சபாஷ்  டைரக்டர்

1. மலைப்பிரதேசங்கள் ,லாங்க் ஷாட்டில் காட்டும் அருவிகள் கொள்ளை அழகு

2 ஜாக்கி சானின் சுறுசுறுப்பு ,பாசிட்டிவிட்டி நமக்கும் தொற்றிக்கொள்கிறது

3  குழந்தைகளைக்கவரும் பாண்டா கேரக்டர்

4 பாசத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பழங்குடி இனத்தவர் முறையை மாற்றி அன்பை வெளிப்படையாகத்தெரிவிப்பது நல்லது என்பதை உணர்த்தும் காட்சிகள்.

5 வில்லன் கேரக்டர் டிசைன் ,அவர் நடிப்பு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

1 ஆர்மர் ஆப் காட் ,ஸ்பானிஷ் கனெக்சன் படங்களில் வருவது போல் அதிரடி ஆக்சன் சீக்வன்சை எதிர்பார்த்தால் ஏமாறுவோம்

2  பழங்குடி இனத்தவரின் ஒப்பனை ,ஆடை வடிவமைப்பு ,நடிப்பு என எல்லாமே அவதார் படத்தின் காட்சிகளில் இருந்து உருவி இருக்கிறார்கள்.

3 பாண்டா சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகள் மட்டுமே ரசிப்பார்கள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாக்கிசான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில்லாமல் குழந்தைகளுடன் கண்டு மகிழத்தக்க படம்.ரேட்டிங் 2/5



Panda Plan: The Magical Tribe
Theatrical release poster
Chinese name
Simplified Chinese熊猫计划之部落奇遇
Directed byDerek Hui
Written byKeyang Pan
Produced byDerek Hui
Han Mei
Wei Wang
Starring
Production
companies
Distributed byHY Media
Release date
  • 17 February 2026
Running time
99 minutes
CountryChina
LanguageMandarin
Box officeUS$37.3 million[1]

Friday, June 05, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - ஜூன் 4 தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை

 இந்த வாரம் இரண்டு தமிழ்ப்படங்கள்,ஒரு தெலுங்கு டப்பிங் படம் என மொத்தம் 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.மூன்றும் வெவ்வேறு ஜர்னர்கள் .காமெடி டிராமா ,ஸ்போர்ட்ஸ் டிராமா,க்ரைம் திரில்லர் என மூன்றும் மூன்று விதம்.





 1. பரிமளா அண்ட் கோ.  தமிழ்  ( running time 146 minutes)

காமெடி க்ரைம் டிராமா




பசங்க புகழ் இயக்குனர் பாண்டிராஜ் தயாரிப்பு +இயக்கத்தில்  உருவாகி இருக்கும் காமெடி கிரைம் டிராமா மூவி இது.

திரிஷ்யம் படத்தில் ஒரு கொலையை செய்து குடும்பமே அதை மறைக்கும் கதை மெகா ஹிட் ஆனது.கமல்  நடிப்பில் பாபநாசம் ஆகவும் ரீமேக் ஆனது.

திரிஷ்யம் படத்தை கிண்டல் செய்து அதே கதையின் காமெடி வெர்சன் ஆக பரத நாட்டியம் 2 மோகினியாட்டம் என்ற மலையாளப்படம் வந்து சக்கை போடு போட்டது.

போன வாரம் ரிலீஸ் ஆன பிளாஸ்ட் படம் கூட அர்ஜூனின் குடும்பம் 6 பேரைக்கொன்று வீட்டுக்குப்பின்னால் புதைக்கும் கதை அம்சம் தான்

அதே பாணியில் அதே பாதையில் இந்தப்படத்தின் கதையும் அமைந்திருக்கிறது

பிரபல ரவுடி வர்கஷ் கொலை செய்யப்படுகிறான்.அவனைக்கொன்றது போட்டி ரவுடி கேங்கா என போலீஸ் விசாரிக்கும்போது நாயகனின் குடும்பத்தில் இருக்கும் நால்வரில் ஒருவர் தான் கொன்றிருக்க வேண்டும் என போலீசுக்குத்தகவல் கிடைக்கிறது.

நடுத்தர வயதைக்கடந்த நாயகனுக்கு மனைவி,இரு பெண் பிள்ளைகள் டீன் ஏஜ் தாண்டியவர்கள்.

போலீஸ் விசாரணையில் குடும்பத்தில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மொத்தக்கதையுமே.

இதில்  நாயகன் ஆக ஜெயராம் ,நாயகி ஆக ஊர்வசி ,மகள்கள் ஆக ஆனந்தி சனில் குமார் ,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க போலீஸ் ஆபீசர் ஆக இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கிறார் 

காமெடிக்கு யோகிபாபு ,சிங்கம் புலி இருவரும் உண்டு

நடுத்தரக்குடும்பம் என்பதைக்காட்ட இவர்கள் வெளியிட்ட 3 நிமிட க்ளிம்ப்ஸ் செம ஹிட் அடித்தது.

அதில் ஆயுத பூஜைக்கு வீட்டைக்க்ளீன் செய்ய ஒரு பெண்  2000 ரூபாய் கேட்க நாயகன் 1000 ரூபாய்க்கு பேரம் பேசுகிறார்.நாயகி நாயகனிடம் எனக்கு 1000 ரூபாய் கொடுங்க ,நானே க்ளீன் பண்ணிடறேன் என்கிறார்.

மகள்கள் இருவரும் ஓடி வந்து நால்வரும் வேலை செய்வோம்.ஆளுக்கு தலா 500 ரூபாய் என்று டீல் பேசுகிறார்கள்.

பேமண்ட்டை அட்வான்சாகக்கேட்க அப்பா மேல நம்பிக்கை இல்லையாம்மா?என நாயகன் கேட்க 

என்னப்பா?இப்படி சொல்லிட்டீங்க?சுத்தமா நம்பிக்கை இல்லை என்கிறாள் மகள்


ட்ரெய்லரில் ரசித்த சில வசனங்கள்

1.  அவனைக்கொன்னாதான் நாம் வாழ முடியும்னா கொல்வதைத்தவிர வேறு வழி இல்லை.

அய்யய்யோ,கொலைக்கேஸ் ஆகிடாதா?

2 குடும்பத்தோட சேர்ந்து சமையல் தான் செய்வாங்க ,நீங்க கொலை கூட செய்வீங்களா?


3 கொலைகாரனுக்குப்பசிக்காதா?அவன் சாப்பிட மாட்டானா?

ஜெயில்ல உட்கார்ந்து சாப்பிடட்டும்

4 உண்மையை சொன்னா நான் உங்களைக்காப்பாத்தறேன்.

கொலை செஞ்ச நீங்கதான் ஜெயிலுக்குப்போய்டுவீங்களே?எங்களை எப்படிக்காப்பாத்துவீஙக?

5 நம்ம நால்வரில் ஒருவர் தான் கொலை செய்திருக்கோம்

பஞ்சதந்திரம் (2002) உட்பட 26 படங்களில் ஜோடியாக நடித்த ஜெயராம் ஊர்வசி இருவரும் இணையும் 27 வது படம் இது.24 வருட இடைவெளிக்குப்பின் இருவரும் இணையும் படம் இது.புத்தம் புதுக்காலை (2020) என்ற ஆந்தாலஜி வெப் சீரிசில் ஒரு கதையில்  இருவரும் ஜோடியாக நடித்தது ஒரு முழுப்படக்கணக்கில்  வராது .

இந்தப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் பரிமளா அண்ட் பேமிலி.ஆனால் டூரிஸ்ட் பேமிலி படம் வந்த பின் டைட்டில்  ஸ்வீட் ஹோம் என்று மாற்ற யோசித்து முடிவில். பரிமளா அண்ட் கோ என மாற்றி விட்டார்கள்.

வசந்த் அண்ட் கோ விடம் ஸ்பான்ஸர் பிடித்தால் வசந்த் அண்ட் கோ வின் பரிமளா அண்ட் கோ என விளம்பரம் செய்யத்திட்டம் இட்டார்கள்.பின் அது தேவைப்படவில்லை.



2. 
பெட்டி  தெலுங்கு/தமிழ். ஸ்போர்ட்ஸ் டிராமா


ராம்சரண்,ஜான்விகபூர் ,சிவராஜ் குமார் ,ஜெகபதி பாபு,திவ்யேண்டு ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியாகும் பிரம்மாண்டமான படம் இது.

படத்தின் ட்ரெய்லரைப்பார்க்கும்போது
புஷ்பா+ டங்கல் +சுல்தான் +எம் எஸ் தோனி+ரங்கஸ்தளம். ஆகிய படங்களின் கலவை போல் இருக்கிறது.
2015ம் ஆண்டு வெளியான பூலோகம் படத்தில் இருந்தும் சில காட்சிகளை சுட்டிருக்கிறார்கள்.

சாம்பார் ,காரக்குழம்பு ,ரசம்,மோர் எல்லாவற்றையும் ஒரே அண்டாவில் கலந்து வைத்த மாதிரி மாஸ் மசாலாவாக இருக்கிறது

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்


1 ஏரியாக்காரங்களுக்குப்"பெட்டி" கோயிலில் இருக்கும் கடவுள் இல்லை,கிரவுண்டில் இருக்கும் கடவுள்

2 ஆட்டம் தாம் ல என் திமிரு

3. ஆட்டத்தில் ஜெயிப்பது எனக்கு முக்கியம் இல்லை.ஆட்டத்தில் உயிர் இருக்கனும்

4 அவனுக்கு நல்லா ஆடத்தெரிஞ்சு இருக்கலாம்,ஆனா ஆட்டுவிப்பது நாம் தான்.

நாயகன் படத்தில் கிரிக்கெட் வீரன் ஆக ,மல்யுத்த வீரன் ஆக ,ரன்னிங் ரேஸ் வீரன் ஆக மூன்று விதமான திறமைசாலி ஆக இருக்கிறான்.அவனை வில்லன் கேங் எப்படி மிஸ்யூஸ் செய்ய முயல்கிறது? அதை நாயகன் எப்படித்தடுக்குறான் என்பதே கதை  போல்  தெரிகிறது.




3. ஆட்டி.   தமிழ் 


 ஹிஸ்டாரிக்கல் க்ரைம் திரில்லர் 


மேதகு என்ற் வித்தியாசமான படம் தந்த (விடுதலைப்புலி இயக்கத்தலைவன் பிரபாகரன். வாழ்க்கைக்கதை) இயக்குநர் கிட்டு வின் மாறுபட்ட படம் இது.

இசக்கி கார்வண்ணன் (பாலம் இயக்குநர் கார்வண்ணனின் மகன்),அபி நட்சத்திரா ,காதல் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மெட்டி ஒலி புகழ் திருமுருகன் கதை ,திரைக்கதை எழுத  ,சிபி சதாசிவம் இசை அமைக்க டி கிட்டு இயக்கி இருக்கிறார்.

1970 ல் கதை நிகழ்கிறது. மதுரை மாவட்டம் கொடை மலைத்தொடரில்  டீ எஸ்டேட் நிறைந்த ஊரில் நாயகி மழலைகளுக்கு பாடம் சொல்லித்தரும்  டீச்சர் ஆக இருக்கிறார்.

என் ஜி ஓ ஆபீசர் ஆன வில்லன் அங்கே வந்து நாயகியை சீண்ட பளார் என்று அறைந்து விடுகிறாள்.பின்னொரு நாளில் வில்லன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான்.போலீஸ் இன்வெஷ்டிகேசன் செய்கிறது.
கொலையை செய்தது நாயகியா?வேறு ஒருவரா?என்பது மீதித்திரைக்கதை


ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்

1 பெண்களால் எழுதப்பட்ட இலக்கியமும் ,பெண்களால் தொடுக்கப்பட்ட  போர்களும் தமிழ்க்குடியில் தாம் அதிகம் இருக்கிறது.

2  தமிழ் வரலாற்றை எல்லாம் கதையாகக்கூட சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

3.  அழகு,நீ அழகோ அழகு

4. இங்கே தப்பு நடக்கலையா? இல்லை தப்பை சரியா மறைக்கிறார்களா?

5. மண்ணுக்கும் ,பொண்ணுக்கும் ஒரு பிரச்சனைன்னா அவங்க வருவாங்க,காத்தோட காத்தா கலந்திருப்பாங்க


படத்தில் வசனங்கள் தூய தமிழில் ,தெளிவான உச்சரிப்பில் வருவது ஒரு பிளஸ்.

படத்தின் டைட்டில் உடன் சப் டைட்டில் ஆக  "எங்கள் குடியில் பெண்கள் முதலாம் " அமைவது சிறப்பு.



பெட்டி தெலுங்குப்படம் ஜூன் 4 ல் ரிலீஸ்.மற்ற இரு தமிழ்ப்படங்களும் ஜூன் 5 ல் ரிலீஸ்

Thursday, June 04, 2026

சதி லீலாவதி ( 2026)(தெலுங்கு/தமிழ் )-சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)@சன் நெக்ஸ்ட்

 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு மனவியல் மருத்துவர்.நடுத்தரக்குடும்பம்.நாயகி பிரபல சினிமா இயக்குநர்.வசதியான குடும்பம்.ஒரு ஆபத்தில் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்ற  உடனே நாயகி தன் அப்பாவிடம் எனக்கு இந்த மாப்பிள்ளை தான் வேண்டும் ,வாங்கிக்கொடுங்க என அடம் பிடிக்க அவரும் நாயகன் ,நாயகி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

மூன்று வருடங்கள் ஆகிறது.நாயகி சினிமா டைரக்சனில் ரொம்ப பிசி.நாயகனை கவனிக்கவே நேரம் இல்லை.பேசுவதற்குக்கூட நேரம் இல்லை.இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நாயகன் ஒரு நர்சைக்காதலிக்கிறார்.நாயகியிடம் டைவர்சும் கேட்கிறார்.

கோபம் அடைந்த நாயகி நாயகனை ஒரு சேரில் கட்டிப்போட்டு பாத்ரூமில் அடைக்கிறாள்.

அப்போது அவர்கள் வீட்டுக்கு நாயகனின் வக்கீல் ,நாயகியின் அப்பா ,நாயகியின் தயாரிப்பாளர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள்.அவர்கள் வீட்டுக்குத்திருடனும் வருகிறான்.நாயகனின் காதலியும் வருகிறாள்.இவர்கள் அனைவரையும் நாயகி எப்படி சமாளிக்கிறாள் என்பதே மீதித்திரைக்கதை.

நாயகி ஆக  லாவண்யா திரிபாதி  கோனிடேலா நடித்திருக்கிறார்.இயக்குநர் ஆக அவர் செய்யும் பில்டப்கள் ஓக்கே.நாயகனைக்கட்டிப்போட்ட பின்பு தான் நாயகிக்கு நடிக்க ஸ்கோப் கிடைக்கிறது.

நாயகன் ஆக தேவ் மோகன் நடித்திருக்கிறார்.பரவாயில்லை ரகம்.

நாயகனின் வக்கீல் ஆக விடிவி கணேஷ் காமெடி செய்கிறார்.சிரிக்கலாம்.

நாயகனின் காதலி ஆக மடோனா செபாஸ்டின் அழகாக வந்து போகிறார்.ஆனால் நடிக்க வாய்ப்பு இல்லை.மற்ற கேரக்டர்கள் பேசும்போது  வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்.

நரேஷ், சப்தகிரி,ஜாபர்,ஜபர்தஸ்த் என மற்ற சின்னச்சின்னக்கேரக்டர்கள் நடிப்பு ஓக்கே ரகம்.


இசை மிக்கி ஐ மேயர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்,பின்னணி இசை பரவாயில்லை ரகம் ,ஒளிப்பதிவு ,வசனம் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம்.


படத்தின் ரன்னிங்க் டைம் 130 நிமிடங்கள்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். தாதினேனி சத்யா


சபாஷ்  டைரக்டர்

1 தயாரிப்பாளர் மொட்டை ராஜேந்திரன் நாயகியைக்கடத்திப்போகும் காமெடி டிராக் உள்ளத்தை அள்ளித்தா படத்தை நினைவுபடுத்தினாலும் சிரிக்க வைக்கிறது.

2 மொட்டை ராஜேந்திரனின் கேரக்டர் டிசைன்படி அவரிடம் எந்தக்கேள்வியைக்கேட்டாலும் 5 நொடிகள் கழித்துத்தான் பதில் சொல்வார்.இதை வைத்து அமைக்கப்பட்ட காமெடி டிராக் அருமை.

3  வி டி வி கணேஷ் காமெடி டிராக்  சிரிக்க வைக்கிறது

4 நாயகியின் முறை மாப்பிள்ளை செய்யும் அச்சுப்பிச்சுக்காமெடி பரவாயில்லை ரகம்

5 திருடன் திடீர் என நுழைந்து வீட்டில் செய்யும் அலப்பறைகள் அருமை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகன் ,நாயகி இருவர் தரப்பிலும் எந்த நியாயமும் இல்லை. அதனால் எனோஷனல் கனெக்ட். இல்லை.

2 நாயகனின் காதலி கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை.ஏனோ தானோ என வந்து போகிறார்.

3 இரண்டு மணி நேரம் ஓடும் அளவிற்குக்கதையில் கண்ட்டெண்ட் இல்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமாரான காமெடி ,மொட்டை ராஜேந்திரன் ,விடிவி கணேஷ் காமெடி ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2/5



Wednesday, June 03, 2026

காட்டாளன் (2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் திரில்லர்)

 

லோ பட்ஜெட்டில் படம் எடுத்து ஹை லெவல் லாபம் பார்க்கும் மலையாள இண்டஸ்ட்ரி இந்த     முறை ஹை பட்ஜெட்டில் படம் எடுத்து     லோ லெவல் லாபம் பார்த்து இருக்கிறது.


புஷ்பா தெலுங்குப்படம் என்ற புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இது.50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி  ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம் 4 கோடி வசூல் செய்திருக்கிறது.27/5/2026 முதல் கேரளாவில் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் தமிழ் டப்பிங்கில் காணிக்கை    


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு கிராமத்தில் யானைகளின் வருகை அதீத தொந்தரவாக மக்களுக்கு இருக்கிறது.கிராமத்து மக்களை யானையின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறேன் என ஆபத்பாந்தவனாய் வருகிறான் வில்லன்.


வில்லன் ஒரு கடத்தல் காரன்.கானகத்தில் இருக்கும் யானைகளைக்கொன்று யானைத்தந்தத்தை  இலங்கைக்கு சட்ட விரோதமாகக்கடத்துபவர். தன்னை எதிர்ப்பவர்களையும் ,கூட இருந்தே  லாபத்தில் அதிக பங்கு கேட்பவர்களையும்  கொலை செய்து வருபவர்


வில்லனுக்குக்கீழ் 40 வேட்டையாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களை வில்லன் அடிமையாக ,மரியாதை இல்லாமல் நடத்துவதால் அந்த நாற்பதில் சிலர் வில்லனை வீழ்த்தத் தக்க தருணம் பார்த்துக்காத்திருக்கின்றனர்.

வில்லன் கேங்கிற்கு எதிராக இன்னொரு கேங்க் செயல்படுகிறது.இரு கேங்க் ஆட்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பவர்கள்.


இப்போது தான் நாயகன் எண்ட் ரி.இப்போது வில்லன் நாயகனின் உதவியுடன் கடத்தல் தொழிலைத்தொடர்கிறான்.வில்லனின் எதிர் கேங் வில்லனை வீழ்த்த நாயகனிடம் உதவி கேட்க இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை.


வில்லன் ஆக காமெடி நடிகர் சுனில் கொடூரமான குணம் கொண்டவர் ஆக நடித்திருக்கிறார்.ஜெயிலர் உள்பட பல படஙகளில் இவரைக்காமெடியன் ஆகவே பார்த்து நம் மைண்ட் செட் ஆகி விட்டது.

நாயகன் ஆக அங்கமாலி டைரீஸ் புகழ் ஆண்ட்டனி வர்கிஸ் நடிப்பு கன கச்சிதம். புஷ்பா படத்தின் வில்லனும் இவர் தான்.உடல் மொழி,பார்வை இவருக்கு நன்றாக செட் ஆகி இருக்கிறது 


தமிழ் நடிகையான துஷாரா விஜயன் மலையாளத்தில் நடித்திருக்கும் முதல் படம் இது.ஓக்கே ரகம்

நாயகன்,நாயகி,வில்லன் போக சித்திக் ,சந்தீப்,கபீர்சிங்க், ஆன்சன் பால்  எனப்பலரும் படத்தில் வந்து போகிறார்கள்.ஜெகதீஷ் கவனிக்க வைக்கும் நடிப்பு.


கே ஜி எப் புகழ் ரவி பஸ்ரூர் இசையில் 6 பாடல்கள்,எதுவும் தேறவில்லை.பின்னணி இசையும் எடுபடவில்லை.காது வலி வேற 


ஒளிப்பதிவு ரினாதேவ்.ரன்னிங் டைம் 120 நிமிடங்கள்.


உன்னி ஆர் தான் வசனம்.சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

ஜோபி வர்கீஸ்,ஜெரோ ஜேக்கப் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பால்ராஜ்.



சபாஷ்  டைரக்டர்


1 ஆரம்பத்தில் வரும் யானைகளின் அணி வகுப்பு பிரம்மாண்டம்

2 சிங்கிள் ஷாட்டாகக்காட்டப்படும் ஒரு காட்சி பேட்ச் ஒர்க் தான் என்றாலும் ரசிக்க வைக்கிறது.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஆக்சன் சீக்வன்சிற்கு அளித்த முக்கியத்துவத்தை எமோஷனல் பாண்ட் சீன்களில் தரவில்லை.அதனால் திரைக்கதை பின் பாதியில் மிக பலவீனம்

2  நாயகன் ,வில்லன் ,இன்னொரு கேங் என மூன்று தரப்பினருமே கெட்டவர்கள் என்பதால் யார் ஜெயித்தால் நமக்கு என்ன?என்ற சலிப்பு தான்  ஏற்படுகிறது.நாயகன் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்குத்தோன்றவில்லை.இது பெரிய பின்னடைவு.

3 படத்தில் புதிய காட்சிகள் ,புதிய ஐடியா என எதுவுமே இல்லை.எல்லாம் பார்த்துப்பார்த்து சலித்த பழைய காட்சிகள் தான்

4 பின்னணி இசையில் புதுமை இல்லை.பழைய ட்ராக் தான்.

5 இயக்குநர் லோகேஸ் கனகராஜின் கேமியோ ரோல் எடுபடவில்லை.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - போஸ்டர் டிசைன்,டிரெய்லர் நன்றாக இருந்த அளவுக்குபடம் இல்லை.அட்டைப்படம் நல்லாருக்கு,புத்தகத்தில் கண்ட்டெண்ட் இல்லை மொமெண்ட்.ரேட்டிங் 2/5


Kattalan
Theatrical Release Poster
Directed byPaul George
Written byPaul George
Joby Varghese
Jero Jacob
Dialogues byUnni R.
Produced byShareef Muhammed
StarringAntony Varghese
Sunil
Jagadish
Kabir Duhan Singh
Dushara Vijayan
Anson Paul
Hanan Shah
CinematographyRenadive
Additional Cinematography:
Chandru Selvaraj
Sudeep Elamon
Music bySongs:
B. Ajaneesh Loknath
Ravi Basrur
Nihal Sadiq
Score:
Ravi Basrur
Production
company
Cubes Entertainments
Distributed byCubes Entertainments (India)
Phars Films (Overseas)
Release date
  • 28 May 2026
Running time
120 minutes [1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹50 crore[2]
Box office₹3.91 crore

Tuesday, June 02, 2026

பிளாஸ்ட் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம். ( ஆக்சன் திரில்லர்)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் 7000 கோடி பிராஜெக்ட்டைக்கையில் வைத்திருக்கிறான்.ஒரு கிராமத்தில் இருக்கும் விலை உயர்ந்த கனிமங்களை எடுக்கத்திட்டம் போடுகிறான்.அதற்கு ஆளும் கட்சி மந்திரியை சந்திக்கிறான்.15%  கமிஷன் கேட்கிறான் மந்திரி.ஓக்கே சொல்கிறான் வில்லன்.ஆனால் மந்திரி கேட்ட பணத்தை வில்லன் ஒரு ஆள் மூலம் தந்து விட அந்தப்பணம் மந்திரியிடம் சேர முடியாமல் போகிறது.


நாயகன் ஒரு கராத்தே மாஸ்டர்.சின்ன வயதில் இருந்தே தன் மகளை துணிச்சல்காரியாக வளர்க்கிறான்.கராத்தேக்கலையையும் கற்றுத்தருகிறான்.

நமக்குத்தெரிந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் சரி,அறிமுகமே இல்லாத நபருக்குப்பிரச்சனை என்றாலும் சரி  உதவ வேண்டும் என்பதே நாயகனின் கொள்கை.

அநியாயங்களைத்தட்டிக்கேட்பதோடு விடாமல் அவர்களை கராத்தேக்கலையால் வீழ்த்துகிறார்.மகளையும் அப்படியே வளர்க்கிறார்.


நாயகனின் மனைவிக்கு ஒரு பயம் வருகிறது.நாயகனின் குணத்தால்,தன் மகளின்  வளர்ப்பால் எதிர் காலத்தில் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொள்வோமோ என்று பயப்படுகிறாள்.

நாயகனின் மனைவி ஒரு டெய்லர் ,நாயகனிம் மகள் ஐடி யில் பணி புரியும் ஊழியர். நாயகனின் தம்பி மெடிக்கல் ஷாப் சொந்தமாக வைத்திருக்கிறார்.


நாயகனின் குடும்பத்துக்கும் ,வில்லனுக்கும் ஒரு பிரச்சனை உருவாகிறது.அந்தப்பிரச்சனை என்ன?அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா?வில்லன் நாயகனின் குடும்பத்தார் பிடியில் இருந்து தப்பித்தானா?என்பது மீதித்திரைக்கதை


நாயகன் ஆக ஆக்சன் கிங் அர்ஜூன் தன் திரை உலக வாழ்க்கையில் 46ம் ஆண்டுப்பயணத்தில் அடி எடுத்து வைக்கிறார்.எல்லோருக்கும் அடி கொடுக்கிறார்.இவரது ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம்.


நாயகி ஆக நாயகனின் மனைவி ஆக விருமாண்டி அபிராமி.ஜிம்முக்குப்போய் வெயிட் லாஸ் செய்து பிட் (Fit) ஆக வந்து நிற்கிறார்.இவரது பைட் செய்யும் லாவகம் அருமை.


இவர்களது மகளாக ப்ரீத்தி முகுந்தன்.அர்ஜூனுக்கு இணையாக இவர் ஆக்சன் சீக்வன்சில் அதகளம் செய்கிறார்.

நேர்கொண்ட பார்வை ,பொன்னியின் செல்வன் ஆகிய படஙகளில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் இதில் முக்கிய ரோல்  (வில்லன் )செய்திருக்கிறார்.நல்ல நடிப்பு 

அர்ஜூனின் தம்பியாக வரும் விவேக் பிரசன்னா ,போலீஸ் ஆபீசர் ஆக வரும் எங்கேயும் எப்போதும் திலீபன் ஆகியோர் நடிப்பு கச்சிதம்



பின்னணி இசையில்  KGF புகழ் ரவி பஸ்ரூர் கச்சிதம்.சண்டைக்காட்சிகளில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் பிஜி எம்.

ஆக்சன் சீக்வன்சை ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு வடிவமைத்து இருக்கிறார்.படத்தின் உயிர் நாடி இவர் தான்.

ஒளிப்பதிவு ,எடிட்டிஙக் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ்

படத்தின் ரன்னிங் டைம் 145 நிமிடங்கள்

சபாஷ்  டைரக்டர்

1 முக்கியமான கதாப்பாத்திரங்களை வடிவமைத்த விதம் ,அதை ஏற்று நடித்த நடிகர்களின் பங்களிப்பு

2 ஆக்சன் சீக்வன்சை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு.

3 பெண்களின் சக்திக்கு என்று முக்கியத்துவம் கொடுத்து பெண்களை உயர்த்திப்பிடித்த விதம்.

4  ப்ரீத்தி முகுந்தன் ஆபீசில் நடக்கும் பிரச்சனையை எதிர் கொள்ளும் விதம் பெண்களுக்கான விழிப்புணர்வு

5 மொத்தம் 8  சண்டைக்காட்சிகள்.அனைத்தும் அருமை

6 மெடிக்கல் ஷாப் சீக்வன்சில் அரங்கம் அதிரும் கை தட்டல்




ரசித்த  வசனங்கள் 


1 எங்கேயாவது தப்பு நடக்கறதைப்பார்த்தா பாதிக்கப்பட்டவங்க நமக்குத்தெரிஞ்சவங்களாத்தான் இருக்கனும்னு அவசியம் இல்லை.

2 என்னைக்கொன்னுட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சீங்களா?எனக்கும் மேல ஒருத்தன் இருக்கான்.அவன் கண்டிப்பா உங்களைத்தேடி வருவான்

3 இவன் இங்கே திரும்ப வந்திருக்கான்னா பெரிய சம்பவம் ஒண்ணு நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

4. காசு இருந்தாதான் பொண்ணுங்க நம்மை மதிப்பாங்க.

5  பேசி சரி பண்ண முடியாத பிரச்சனை,பேச்சுவார்த்தையில் சரிப்பட்டு வராத மனிதர் என எதுவும் இல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. மெகா ஹிட் படமான Kungfu Hustle(2004) படத்தின் கதைக்கருவில் இருந்து தான் இந்தப்படத்தின் கதை அமைந்துள்ளது

2 இந்தப்படத்திற்கும் லாஜிக்கிற்கும் சம்பந்தமே இல்லை.

3 வன்முறைக்காட்சிகள் ,வெட்டி வீசக்கூடிய காட்சிகள் அதிகம்

4 பின்னணி இசையில் மார்கோ(2024) மலையாளப்படத்தின் வாசம் வீசுகிறது

5 பின் பாதி திரைக்கதை Nobody(2021) ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள்

6 மொத்தம் 18 கொலை செய்தவனின் க்ரைம் ரெக்கார்டை போலீஸ் இவ்ளோ அசால்ட்டா டீல் செய்யுமா?

7 தன் மனைவி கடத்தப்பட்டு சித்திரவதை அனுபவிக்கிறாள் என்பது தெரிந்ததும் திலிபன் துடித்திருக்க வேண்டாமா?ஏனோ தானோ நடிப்பு

,8 முதல் பத்து நிமிடப்படத்தில் அபிராமிக்கு ஓவர் மேக்கப்.ஒரு குடும்பப்பெண் வீட்டில் இருப்பவர் இவ்ளோ மேக்கப்,லிப்ஸ்டிக் உடன் இருப்பாரா?


9 ஒரு சாதாரண சமூக சேவகரைக்கொலை செய்ய 20 அடியாட்கள்,20 பட்டாக்கத்திகள் எதற்கு?


10 அபிராமியும் ஒரு கராத்தே வீராங்கனை என்பதை ஓப்பனிங்கில் சொல்லாமல் விட்டிருந்தால் இண்ட்டர்வல் பிளாக் சீனில் தெறித்திருக்கும்.

11 காலில் குண்டடி பட்டால் நடக்கவே முடியாது.வில்லன் 15 போலீசை அடித்து விட்டு அசால்ட் ஆக நடக்கிறான்.


12 அந்த மருந்தை வாங்க டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் சீட் ரெடி பண்ண முடியாதா?


13 ஆயிரம் கோடி பணத்துக்கான  டோக்கன் 100 ரூபாய் மிஸ் ஆகி விட்டது வேறு டோக்கன் கொடு என டீலரிடம் கேட்டால் மேட்டர் ஓவர்.


14. முதல் பாதி பரபரப்பு ,விறுவிறுப்பு ,வேகம் பின் பாதியில் மிஸ்சிங்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆக்சன் படப்பிரியர்களுக்கு விருந்து.மற்றவர்கள் தவிர்க்கவும்.ரேட்டிங்க் 3/5

ஆனந்த விகடன்  மார்க் யூகம்  - 45 , குமுதம் ரேங்க்கிங்க்  - நன்று 

Monday, June 01, 2026

Berlin and the Lady With an Ermine (2026)-ஸ்பானிஷ்/தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (ஹெயிஸ்ட் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

 


15/5/2026 முதல் நேரடியாக நெட் பிளிக்சில் ரிலீஸ் ஆன இந்த வெப் சீரிஸ் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.Money Heist என்ற பிரபலமான வெப் சீரிசை எடுத்த நிறுவனம் அதைத்தொடர்ந்து அதே பாணியில் எடுத்த இன்னொரு வெப் சீரிஸ் தான் பெர்லின்      


மொத்தம் 8 எபிசோடுகள்.ஒவ்வொரு எபிசோடும் 50 நிமிடங்களிலிருந்து 80 நிமிடங்கள் வரை ஆக மொத்தம் ஏழரை மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்து விடலாம்.   


வெப் சீரிசின் டைட்டிலில் இருக்கும் இரு பெயர்களில் முதலில் இருப்பது நாயகனின் பெயர்,அடுத்து இருப்பது அந்த விலை மதிப்பற்ற      ஓவியத்தின் பெயர்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு பெரிய கொள்ளைக்காரன்.சிறந்த மூளைக்காரன்.கொள்ளை அடிக்க ஒரு டீம் பார்ம் பண்ணி வைத்திருப்பவன்.இரு காதல் ஜோடி ,ஒரு தனி நபர் ஆக மொத்தம் 5 பேர் கொண்ட குழுவை வைத்துத்தான் இவன் எப்போதும் கொள்ளை அடிப்பான்.


வில்லன் மிகப்பெரிய கோடீஸ்வரன்.அபூர்வமான ஓவியங்களின் கலெக்சன் அவனிடம் இருக்கிறது.கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள ஒரு ஓவியத்தை சட்டத்துக்குப்புறம்பாகக்கொள்ளை அடிக்க நினைத்து அதற்கு நாயகனிடம் டீல் பேசுகிறான்.


நாயகனின் திட்டமே வேற.வில்லனிடம் இருக்கும் அத்தனை அபூர்வ ஓவியங்களையும் கொள்ளை அடிக்கத்திட்டம் போடுகிறான்.


வில்லனின் மனைவிக்கும் ,,வில்லனுக்கும் ஒரு கருத்து வேற்றுமை.20 வருடங்ககாக நன்றாகப்போன மண வாழ்க்கை இப்போது சரி இல்லை.தன்னை விட அபூர்வ ஓவியங்களின் கலெக்சனில் தான் வில்லனின் கவனம் இருக்கிறது என்பதை உணர்ந்த வில்லனின் மனைவி நாயகனின் டீம் மெம்பர் ஒருவனிடம் டீல் பேசுகிறாள்.என் கணவனிடம் இருக்கும் அனைத்து ஓவியங்களையும் திருடித்தர வேண்டும்.அப்போது தான் அவர் என் மீது பாசம் வைப்பார் என்கிறாள்.

நாயகனின் திட்டம் நிறைவேறியதா?

வில்லனின் மனைவியின் திட்டம் நிறைவேறியதா?என்பது தான் இந்த வெப் சீரிசின் மீதித்திரைக்கதையே.


நாயகன் பெர்லின் ஆக பெட்ரோ அலோன்சோ பிரமாதமாக நடித்திருக்கிறார்.இவர் பெயரில் தான் அலோன் (தனிமை)இருக்கிறது.நிஜத்தில் (வெப் சீரிசில்) இவருக்கு பல காதலிகள் உண்டு.ஒவ்வொரு காதலியிடமும் இவர் பேசும் காதல் டயலாக்ஸ் உலகப்பிரசித்தி பெற்றவை.ஒரு காதலியுடன் உறவில் இருக்குன்போது பழைய காதலி வந்தால் அவரை ஏற்க மாட்டார்.வித்தியாசமான கொள்கை கொண்ட புத்திசாலித்திருடன்.


நாயகனின் முன்னாள் காதலி கெமிலி ஆக சமந்தா சிக்குரோர்ஸ் ஹேர் ஸ்டைல் பிரமாதம். நடிப்பும் ,அழகும் இவருக்கு பிளஸ் பாயிண்ட்ஸ்.

நாயகியின் இந்நாள் காதலி  கெமரான் ஆக பெகோனா வர்கஸ் .திருடனான நாயகனிடமே பிக்பாக்கெட் அடிக்கும் லாவகம் பிரமாதம்.நாயகனிடம் கோபித்துக்கொண்டு சொந்த ஊருக்குப்போவது ,அங்கே வந்து சமாதானப்படுத்தும் நாயகனிடம் கண்ணீர் விடுவது என தமிழ்ப்படங்களில்  வருவது போலவே செண்ட்டிமெண்ட் சீன்ஸ் உண்டு.


வில்லன் ஆக நடித்திருப்பவரின் நயவஞசக சிரிப்பு அருமை.இவரது மனைவியாக நடித்தவர் கொஞ்சம் செயற்கை தட்டும் நடிப்பு.


நாயகனின் மெயின் பார்ட்னர் ஆக வருபவர் நடிப்பு கிளாசிக். வில்லனின் மனைவி இவருக்குக்காதல் தூது விடும்போது நான் காதலில் அன்னப்பறவை போன்றவன் என்று சொல்லி மறுப்பது  தூள்.

கொள்ளை அடிக்கும் போர்சனை மட்டும் தனியாக எடுத்தால் 3 மணி நேரம் தான் .மீதி நான்கரை மணி நேரம் காதல் எபிசோடுகள் தான்.


1 நாயகனிடமே பிக் பாக்கெட் அடித்து நாயகனின் மனம் கவர்ந்த காதலியாக மாறும் நாயகி நாயகன் காதல் எபிசோடு

2  நாயகனின் மெயின் பார்ட்னர் உடனான வில்லியின் காதல் எபிசோடு

3 நாயகனின் டீமில் டெக்னாலஜி தெரிந்த ஹேக்கர் அந்த கண்ணாடி அணிந்த பெண்ணின் முன்னாள் காதலன் லவ் எபிசோடு ,இந்நாள் காதலன் லவ் எபிசோடு

4 நாயகனின் டீமில் உள்ள இன்னொரு லவ் ஜோடியின் லவ் எபிசோடு

5 நாயகனின் முன்னாள் காதலி (வெப் சீரிசின் முதல் பாகத்தில் வந்த காதலி) இப்போது மீண்டும் சந்திக்கும் நாயகனுடனான லவ் எபிசோடு


என வெப் சீரிஸ் முழுக்க தெய்வீகக்காதலின் தொகுப்பாக இருப்பது சிறப்பு.


அலிபாபாவும் 40  திருடர்களும்  படத்தில் வருவது போல் வில்லனின் ரகசிய நிலவறை செட்டிங்க்ஸ் எல்லாம் பிரமாதம்.


ஆர்ட் டைரக்சன் ,இசை,பின்னணி இசை ,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்.

கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அலெக்ஸ் பின் + எஸ்தர் மார்ட்டினெஸ் லோபடோ ஆகிய இருவர் குழு


சபாஷ்  டைரக்டர்

1 ஒவ்வொரு எபிசோடின் துவக்கத்தில் வரும் டைட்டில் தீம் மியூசிக்  கலக்கல் ரகம்.

2 நாயகியின் இண்ட்ரோ சீன் சுவராஸ்யம்

3 கண்ணாடி அணிந்த பெண்ணின் நடிப்பு வித்தியாசம்.சில இடஙகளில் ஓவர் ஆக்டிஙகாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் நடிப்பு.

4 நாயகி ,முன்னாள் காதலி ,நாயகனின் டீமில் இருக்கும் ஒரு பெண் ஆகிய மூவரும் இந்திய வம்சாவளித்தோன்றல் மாதிரி முக வெட்டு ரசிக்க வைத்தது.

5 கொள்ளை அடிக்கும் பிராசஸ் அரை மணி நேரம் தான் என்றாலும் அந்த திட்டம் தீட்டும் லாவகம் அருமை

6 மணி ஹெய்ஸ்ட்டில் பிரபலமான கேரக்டர் ஆன புரொபசர் கேரக்டர் கெஸ்ட் ரோலில் கடைசி எபிசோடில் வருவது செம

7 கொள்ளை நடக்கும் கடைசி எபிசோடு செம பரபரப்பு + விறுவிறுப்பு 


  ரசித்த  வசனங்கள் 

1 நாம செய்யும் சின்னத்தப்புக்கள் கூட நம்மை நரகத்தில் தள்ளிடும்

2  ரொம்ப வித்தியாசமா இருப்பவர்களுக்கு ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பிடிக்கும்

3 வாழ்க்கையின் எந்த ஒரு தருணத்தையும் கொண்டாடனும்

4  கொள்ளை அடிக்க திட்டம் போடுவதுதான் கஷ்டம்.அதை எக்சிக்யூசன்  செய்வது  ரொம்ப ஈசி.

5 பயத்திலேயே வாழ்பவர்கள் வாழ்க்கையை முழுசா அனுபவிக்கத்தகுதி அற்றவர்கள்.

6 எப்பவாவது நீ காதலில் இருந்திருக்கிறாயா?


காதலிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

7  காதலிக்கறவங்க சந்தோஷத்துக்காக எது வேணாலும் செய்யலாம்

8 ஆதிக்கம் செலுத்தும் பெண்களை எனக்குப்பிடிக்காது.

9  வாழ்க்கைல அழகான பெண்களை எப்பவும் வேண்டாம் என சொல்ல மாட்டேன்.

10  வெறுப்பு தான் காதலை விட ஒருவனை அதிகமா ஏங்க வைக்கும்.

11  ஒரு நிமிசத்துக்கு 13 தடவை மூச்சு விட்டால் உன் சுவாசம் நார்மல்

12 மன அமைதி  வந்தாலே நாம் காணாம போனதுக்கு சமம்.



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு கொள்ளை அடிக்கும் கதையில் போலீஸ்  வாசனையே காணோம்

2 வில்லன் தானாக முன் வந்து தன் ரகசிய  அறைகளைத்திறந்து காட்டுவது மடத்தனம்.

3 வில்லியின் காதலை ஏற்காத நாயகனின் நண்பன் வில்லன் விடுத்த கொலை மிரட்டலுக்குப்பின் காதலுக்கு ஓகே சொல்வது காதில் பூ

4  பேசிக்கலாக திருடி ஆக இருக்கும் நாயகி  திடீர் என நாயகனிடம் கோபித்துக்கொண்டு சொந்த ஊர் போய் உழைப்பது நம்ப முடியவில்லை



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஹெய்ஸ்ட் திரில்லர் ரசிகர்கள் ,ரொமாண்டிக் ட்ராமா ரசிகர்கள் பார்க்கலாம்.நல்ல டைம் பாஸ் .ரேட்டிங்க் 3/5


SpanishLa casa de papel: Berlín
Created byÁlex Pina
Esther Martínez Lobato
Starring
Opening theme"Bullets and Flowers"[1] by Francis White (ft. Nikki Garcia)
Country of originSpain
Original languagesSpanish and French
No. of seasons2
No. of episodes16
Production
Executive producersÁlex Pina
Esther Martínez Lobato
Albert Pintó
Cristina López Ferraz
Production locations
Spain
France[1]
Camera setupSingle-camera
Running time41–81 minutes
Production companyVancouver Media[1]
Original release
NetworkNetflix
Release29 December 2023 –
15 May 2026
Related
Money Heist