Showing posts with label ஜூன் 19 ரிலீஸ் தமிழ். Show all posts
Showing posts with label ஜூன் 19 ரிலீஸ் தமிழ். Show all posts

Saturday, June 20, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ஜூன் 19 ரிலீஸ் தமிழ் ,தமிழ் டப்பிங்,ரீ ரிலீஸ் படங்களின் முன்னோட்டப்பார்வை

  இந்த வாரம் வெள்ளிக்கிழமை   ஜூன் 19 வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் 10 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

5 புதிய தமிழ்ப்படங்கள் ,2 மலையாளப்படங்கள் தமிழ் டப்பிங் கில் ,ஒரு தெலுங்குப்படம் தமிழ் டப்பிங் கில் 2 ரீ ரிலீஸ் படங்கள் ( விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 2 விஜய் படங்கள்)



1. நூறு சாமி - லிவிங்க்ஸ்டன் க்ளைமாக்சில் நாக்கைக்கட் பண்ணிக்கொள்ளும் "சொல்லாமலே" (1998) தான் இயக்குநர் சசியின் முதல் படம்.மெகா ஹிட்.அந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் "சீனு" (1999).ஸ்ரீகாந்த் - பூமிகா நடித்த ரோஜாக்கூட்டம் (2002) நல்ல காதல் படம்.ஜீவா நடித்த டிஷ்யூம் (2006) ஒரு மசாலாப்படம் .ஒரு நாயகியின் ஆட்டோகிராப் கதையாய் வந்த பூ (2008) கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை என்றாலும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்றது.பரத் சிக்ஸ் பேக் ,எய்ட் பேக் வைத்து நடித்த க்ரைம் ஆக்சன் திரில்லர் 555 (2013) ஹிட்.விஜய் ஆண்ட்டனி நடித்த பிச்சைக்காரன் (2016) மெகா ஹிட் .ஜி வி பிரகாஷ், சித்தார்த் நடித்த சிவப்பு மஞ்சள். பச்சை(2019)  மீடியம் ஹிட்.

7 வருட இடை வெளிக்குப்பின் இயக்குநர் சசி யின் இயக்கத்தில் விஜய் ஆண்ட்டனி நடிப்பில் வெளி வரும் படம் தான்  நூறு சாமி.

படத்தின் ட்ரெய்லரைப்பார்க்கும்போது கிராமியப்படம் போல் தோன்றுகிறது

சுவாசிகா,லிஜோ மோல் ஜோஸ், காவ்யா அனில்,அஜய் திஷான்,கருணாஷ் ஆகியோர் நடிப்பில் வெளி வருகிறது


ரசித்த வசனங்கள்

1 நாம் சாதியைக்காப்பாத்தறதே பொண்ணுங்களை வெச்சுத்தான்,அவங்களை அடக்கி வெச்சுத்தான்

2. இந்த உலகத்துல உயிராப்பிறந்த எல்லாருக்கும் அடிப்படைத்தேவை என்ன தெரியுமா? சாப்பாடு,தூக்கம்,பொண்ணு


3 என்னை ஏன் பிடிச்சிருக்கு?

பிடிக்கலைன்னு சொன்னாதான் ஏன்னு கேட்கனும்

4 இருபது வயசுல ஒரு. நாள் என்பது ஒரு நாள் தான்,ஆனா நாற்பது வயசுல ஒரு நாள் என்பது ஒரு வருசம்


நூறு சாமி வந்தாலும் அம்மா போல் வருமா என்ற பாடல் இப்போதே ஹிட் ஆகி விட்டது.பிச்சைக்காரன் படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதால் இதிலும் அது தொடரும் போல் தெரிகிறது.

கிராமியக்காதல் கதையில் சாதிப்பிரச்சனை தான் மையக்கரு  போல் தோன்றுகிறது.

பாலாஜி ஸ்ரீ குமார் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.




2. மக்கள் தலைவா for sale


இயக்குநர் ரவிமரியா வில்லனாக,காமெடியனாகப்பல படங்களில் நடித்திருந்தாலும் கதையின் நாயகனாக இதில் நடித்திருக்கிறார்.ராதாரவி,அக்சரா விஜய்,பழ கருப்பையா ,நாஞ்சில் சம்பத் இயக்குநர் பேரரசு போன்றோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம் பொலிடிக்கல் சட்டயர் காமெடிப்படம்.

ஒன்றுமே தெரியாத ஒரு சாதா நபர்  எதிர்பாராத விதமாக முதல்வர் ஆனால் என்ன நிகழும்?என்பது தான் திரைக்கதை.

இயக்குனர் ராம் தேவ் இயக்கி இருக்கிறார்.

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்


1. அரசியல் பிஸ்னெஸ் ஆகி பல வருசம் ஆகுது

2  நீ லைட்னா நான் கரண்ட் .நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா விட்டில் பூச்சியா இருக்கும் மக்கள்  தொப் தொப்னு நம்ம கிட்டே வந்து விழுவாங்க

3 நெம்பர்ல பேரு வெச்சிருக்கும் நடிகை உதட்டை நான் கடிச்சுட்டதா கிசு கிசு எழுதுறாங்க

4 கட்சி பேரைப்பாருங்க..உள்ளே வெளியே.அவன் மங்காத்தா ஆடறதுக்குள்ளே  நாம எதுனா செய்யனும்.




,3.  டார்க் ஜெயண்ட் 

இது ஒரு சூப்பர் நேச்சுரல் சைக்காலஜிக்கல் பேமிலி டிராமா வகையைச்சேர்ந்தது.இதில் கே பாக்யராஜ்,லிவிங்க்ஸ்டன் ,சோனியா அகர்வால்,ஜோவிதா லிவிங்க்ஸ்டன், அமுரவாணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


அதிர்ஷ்ட வாய்ப்புக்காக  குழந்தையை நரபலி கொடுக்கத்தயாராகும் ஒரு அப்பாவின் கதை இது.

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்

1 நம்ம ரெண்டாவது குழந்தையை சாமிக்கு நேர்ந்து விட்டா நாம எல்லோரும் நல்லாருக்கலாமாம்.

2  ஒரு மோசமான சக்தியை மிக மோசமான முறைல தூண்டி விட்டுட்டாங்க.

3. அப்பாவுக்கு என்ன ஆச்சு ?

அப்பனைக்குத்திக்கொன்னதே உங்க அம்மா தான்.




4. பதினெண் கீழ்க்கணக்கு 

இதில்  புதுமுகங்கள் நடிக்க  அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.படத்தின் டீசரைப்பார்க்கும்போது வித்தியாசமான க்ரைம் திரில்லர் போல் தெரிகிறது


ரசித்த வசனம்

கொலை தான் முடிவுன்னா இந்த உலகத்தில் யாரும் வாழவே முடியாது



5. மனு 

இது ஒரு ரூரல் ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்.துர்கா பிரசாத் என்பவர் தான் எடிட்டராகவும் ,இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.ஜூன் 18 ரிலீஸ்.

புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.இது ஒரு லோ பட்ஜெட் படம்


கிராமத்தில் ஒரு காதல் ஜோடியை வாழ விடாமல் ஒந்தங்கள் நெருக்குகின்றன.எப்படி அதை மீறி ஜெயிக்கிறார்கள் என்பது கதை.






6.   பாலன் (மலையாளம் /தமிழ் )


மஞ்சுமேல் பாய்ஸ் என்ற 100 கோடி வசூல் படத்தை இயக்கிய  இயக்குநர் சிதம்பரம் இயக்கி இருக்கும் சைக்கலாஜிக்கல் எமோஷனல் டிராமா இது.
ஜீத்து மாதவன் தான் கதை ,திரைக்கதை எழுதி இருக்கிறார்.

ஒரு டீன் ஏஜ் பையன் தான் மிஸ் செய்த அம்மாவைத்தேடிப்பயணிக்கும் கதை இது





7. சின்ன சின்ன ஆசை ( மலையாளம் /தமிழ்)



ரொமாண்டிக் டிராமா

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் ரோஜா புகழ்  மதுபாலா,கருப்பு புகழ் இந்திரன்ஸ் ,அபர்ணா பாலமுரளி,தம்பி ராமய்யா ஆகியோர் நடிக்க உருவாகி இருக்கும் படம் இது.

வாரணாசியில் சந்திக்கும் இருவரின் உணர்ச்சிகரமான கதை இது.

இந்திரன்ஸ் ,மதுபாலா இருவரும் ஜோடி.கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார்.





8. எங்கள் தங்கம் ( தெலுங்கு/தமிழ்)

மா இண்ட்டி பங்காரம் என்ற தெலுங்குப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன் இது
சமந்தா நாயகியாக நடித்திருக்கும்  பேமிலி ஆக்சன் டிராமா இது

நாயகி ஒரு குடுன்பத்துக்கு மரும்ச்களாகப்போகிறார்.அவருக்கு. கட்டா குஸ்தி நாயகி போல் ஒரு பிளாஸ்பேக் இருக்கிறது.புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.



1 ஒரு மருமகளுக்கு சிறந்த தகுதிகள் இருக்கனும்,சமைக்கத்தெரியனும்,பாட்டுப்பாடத்தெரியனும்..

ஆனா எதுவுமே எனக்குத்தெரியாதே?

2 ஹீரோவா இருந்தாலும்  ,ஹவுஸ் ஒயிபா இருந்தாலும் டயலாக்ல பவர் இருந்தா எவனா இருந்தாலும் பயந்துதான் ஆகனும்.

3 நாம யாருன்னு நமக்கு மட்டும் தான் தெரியும்,ஆனா உலகத்துக்கு எது தேவையோ அந்த முகத்தை மட்டும் தான் காட்டனும்

4 ஒவ்வொருத்தரையும் அடி வெளுக்கப்போறேன் பாருங்க

என்னது?

அன்பாலதான்

படத்தின் ட்ரெய்லரைப்பார்க்கும்போது இன்னொரு பிளாஸ்ட் படம் போல் தோன்றுகிறது.சமந்தா சேலை கட்டிக்கொண்டு ஆக்சன்  அதகளம் செய்திருக்கிறார்

இயக்குனர்  ஒரு பெண் தான்.நந்தினி ரெட்டி.
இசை சந்தோஷ் நாராயணன்.


9. ஜில்லா 

10. மெர்சல்