Sunday, June 28, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - ஜூன் 25,ஜூன் 26 தியேட்டர் ரிலீஸ் படங்கள் ஒரு முன்னோட்டப்பார்வை

 இந்த வாரம் 6 தமிழ்ப்படங்கள் ,ஒரு தெலுங்கு டப்பிங்க் தமிழ் ,ஹாலிவுட் தமிழ் டப்பிங்க் படம் 1

ஆக மொத்தம் 8 படங்கள் வெளியாகின்றன.


1 அனந்தன் காடு
2 கான்சிட்டி
,3 அங்கீகாரம்
4 அந்தரன்
5 Heart in
6 லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
7 Hanuman
8 Super Girl



அனந்தன் காடு -  க்ரைம் ஆக்சன் திரில்லர்


ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்தப்படம் தமிழ் ,மலையாளம் என இரு மொழிகளில் உருவான படம்.அனந்தன் காடு என்பது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் என்ற நகரத்தைக்குறிக்கும்.இது கேரளாவின் தலை நகர்.

ஜீயென்  கிருஷ்ணகுமார் தான் இயக்கம். காலெஜ் டேஸ்(2010) என்ற க்ரைம் திரில்லர் மூவி காஞ்சி (2013),தியான்(2017) ஆகிய 3 மலையாளப்படங்களையும் ,ரன் பேபி ரன் (2023) என்ற தமிழ்ப்படத்தையும் இயக்கியவர்.


ஆர்யா,நிகிலா விமல் ,ரெஜினா கசண்ட்ரா,இந்திரன்ஸ் ,சுனில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இது ஒரு பொலிடிக்கல் ஆக்சன் திரில்லர் மூவி.

ட்ரெய்லரைப்பார்த்தால் விஜய் சேதுபதி ,சூரி நடித்த விடுதலை படம் போல் இருக்கிறது.

ரசித்த வசனங்கள்


1 ஒரு காலத்தில் அனந்தபுரி கொடூரமான காடாக இருந்தது.

2 புல்லை மேயும் புள்ளிமானுக்கு புலியை ப்பார்த்தா பயம்.ஆனா புலிக்கு எது பயம் தெரியுமா?

3 தெரியாம மிதிச்சுட்டாக்கூட  சீறிப்பாய்ந்து கொத்த வரும் பாம்பைப்பார்த்தா புலிக்கு பயம்.


4 யார் நீ?உண்மையை சொல்.

தாயை இழந்தவன்,தந்தையை இழந்தவன்.இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்.தமிழன்.

5 ரத்தத்தில் ஆரம்பித்த கதையை ரத்தத்தாலேயே தான் முடிக்கனும்

முரளி கோபி திரைக்கதை எழுத  உருவாகி இருக்கும் படத்தின் ரன்னிங் டைம்  157 நிமிடங்கள்.
25/6/2026  வியாழன் முதல் ரிலீஸ்



2 கான்சிட்டி. காமெடி ஸ்கேம் டிராமா

அர்ஜூன் தாஸ் ,அன்னாபென் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்தக்காமெடிப்படத்தை  இயக்குபவர் ஹரீஷ்  துரைராஜ் .இசை ஷான் ரொனால்டன்.ட்ரெய்லரைப்பாத்க்கும்போது யோகிபாபு மட்டுமில்லாமல் எல்லோருமே காமெடி செய்கிறார்கள் போல் தோன்றுகிறது

லக்கி பாஸ்கர் ,சதுரங்க வேட்டை போல ஏதோ ஸ்கேம் பண்ணி சம்பாதிக்கும் கதை மாதிரி தெரிகிறது.விடிவி கணேஷின் காமெடி அல்ட்டிமேட் ரகம்


ரசித்த வசனங்கள்

1 என்னது குயிக் மணியா?

இல்லை ,ருக்மணி

இல்லை பத்மினி

2 ஐடியா நல்லாருக்கு,யாரு டைரக்டர்?
இவன் தான்
ஹீரோ?
அதுவும் இவன் தான்

பாட்டுக்கூட எழுதுவாரு

3 கரண்ட் இல்லை ,அப்புறமா வா

இது இ பி ஆபீஸ் தானே?

அது மட்டும் என்ன கரண்ட்லயா ஓடுது?





3.  அங்கீகாரம். ஸ்போர்ட்ஸ் ட்ராமா

இயக்குநர் பா ரஞ்சித்திடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த  ஜெ.பி.தென் பாதியான் அறிமுக இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் இது.

அறம்,அயலான் படங்களின் தயாரிப்பாளர்  கே ஜே ஆர் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.சிந்தூரி விஸ்வநாத்,விஜி வெங்கடேஷ் ,மன்சூர் அலிகான் ,ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கிறார்கள்.

தடகள வீரர்கள் வாழ்வில் நடக்கும் சவால்களைப்பற்றிய கதை இது.

ரசித்த வசனங்கள்

1 நம்ம நாடுக்கு நேஷனல் கேம்னு ஒண்ணு இல்லவே இல்லை.

2   திறமை இருந்தா மட்டும் ஜெயிச்சுட முடியாது.
3 ஏழைகள் வாழ்வதே பிடிக்காத இந்த நாட்டில்  கோர்ட் ஏறி கேள்வி கேட்டா சும்மா விட்ருவாங்களா?

4 ஸ்போர்ட்ஸ்னா வெறும் கிரிக்கெட்தான்னு நினைக்கறாங்க

5. எனக்கு இருக்கற ஆசை உன் தலைமுறைலயே உன் வாழ்க்கை மாறிடனும்




4. அந்தரன். க்ரைம் திரில்லர்

அந்தரன் என்றால் வேடன் என்று பொருள்.ஆல்ரெடி சரத் குமார் நடித்து வேடன் வந்து விட்டதால் அந்தரன் என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.ஆனால் பிரசாந்த் நடித்த அந்தகன் டைட்டிலுடன் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்புண்டு.

சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜீன்,இவானா வருண் ,அனுபமா குமார் நடித்திருக்கும் படம் இது.

ஒரு இளம் பெண்ணை சுற்றி நடக்கும் மர்ம நிகழ்வினையும் ,ஒரு வழக்கின் பின்னணியையும் அலசும் கதை இது.




ரசித்த வசனங்கள்

1 யார்றா நீ?ரொமான்சை கிரைமா மாத்திட்டு இருக்கே?

2 என்னோட முதல் காதல் நீ தான்.உன்னோட கடைசிக்காதல் நான் தான்.



5 ஹார்ட்டின்   -ரொமாண்டிக் டிராமா

சனந்த் ரெட்டி,மடோனா செபாஸ்டின், நடிக்க கிஷோர் குமார் இயக்கி இருக்கும் படம் இது.

காதலில் செகண்ட் சான்ஸ் வந்தால்? என்பது தான் ஒன் லைன்


ரசித்த வசனங்கள்

1 எவ்ளோ செல்பிஷா காதலிக்க முடியும் என்பதை உன்னைப்பார்த்துத்தான் கத்துக்கிட்டேன்.

2 உங்க லவ் உண்மையான லவ்வா இருந்தா நீங்க ரெண்டு பேரும் எங்கே போனாலும் ,அந்த லவ்வே உங்களை சேர்த்து வெச்சிடும்






6

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.    க்ரைம் திரில்லர்


1944 ல் தமிழ் நாட்டை உலுக்கிய வழக்கு இது.சூப்பர் ஸ்டார் தியாஜராஜ பாகவதர் ,என் எஸ் கிருஷ்ணன் இருவரும் ஒரு பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்து நேசன் பத்திரிக்கையில் அவதூறாகக்கிசுகிசு எழுதிய லட்சுமிகாந்தனை இவர்கள் இருவரும் கூலிப்படை வைத்துக்கொலை செய்ததாக வழக்கு.

கொன்றால் பாவம் படத்தின் இயக்குநர்
தயாள் பத்மநாபன் இயக்கத்தில்  நடிகர் வெற்றி ,பிரிகிடா ,ரங்கராஜ் பாண்டே ,இளவரசு,சரவணன் நடித்திருக்கும் படம் இது.

ஆனால் ட்ரெய்லரைப்பார்க்கும்போது லட்சுமிகாந்தன் என்ற தனி மனிதன் கதையாகவே அதிகம் போகஸ் செய்திருப்பது போல் தோன்றுகிறது.



ரசித்த வசனங்கள்

1 தலையெழுத்துன்னு ஒண்ணு இல்லை.எல்லார் நெத்தியும் காலியாத்தான் இருக்கு,நமக்கு வேண்டியதை நாம்தான் எழுதிக்கனும்.

2 ஒரு அரசியல்வாதியோட மகன் அரசியல்வாதியா வர்றப்போ வராத வெட்கம் ஒரு திருடனோட மகன் இன்னொரு திருடனா வரும்போது ஏன் வரனும்?

3 திருடன்னு ஒத்துக்கற அளவு நேர்மையா இருக்கீங்க,ஆனா நேர்மையே இல்லாம திருட்டுத்தொழில் பண்றீங்க.




7 ஹனுமான்.  தெலுங்கு/தமிழ்  3 டி  ஹிஸ்டாரிக்கல் டிராமா


பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜா ,அமிர்தா ஐய்யர் ,வரலட்சுமி சரத் குமார் நடித்த படம்

ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்

1 பவர் எனக்குள்ளே ஓடிட்டே இருக்கனும்.ஒவ்வொரு நரம்பிலும் பவர் இருக்கனும்

2 உன் கண்ணுக்குத்தெரிஞ்சது ஒரு பிரச்சனை மட்டும்தான்.அதுக்குப்பின்னாடி ஒரு உபத்திரவம் மறைஞ்சு கிடக்கு



8 சூப்பர் கேர்ள் ஆங்கிலம் /தமிழ்

ஆக்சன் திரில்லர்


ஸ்பைடர் மேன் ,சூப்பர் மேன் மாதிரி படம் இது


மில்லி ஆல்காக் நாயகியாக நடித்த ஹீரோயின் ஓரியண்ட்டட் ஆக்சன் மூவி இது குழந்தைகளுக்கான படம்.
170 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் இது.
ரன்னிங் டைம் 108 நிமிடங்கள்.

பிரிட்டோ என்ற நாய்க்குட்டி செண்டிமெண்ட் சீன்களில் கலக்கும் போல.

ரசித்த வசனங்கள்

1 உங்க ரெண்டு பேரில் ஒருவர் மட்டும் தான் இங்கே இருந்து உயிருடன் தப்பிக்க முடியும்

2 இந்தக்கலர் உனக்குப்பிடிக்குமா?னு தெரியலை.ஆனா இந்த சிம்பலைப்பார்த்தா மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்.