Wednesday, September 24, 2025

சினிமா விமர்சனம் : Mirage (2018 film)

     
த்ரிஷ்யம்  மெகா ஹிட்டுக்குப்பின்  ஜீத்து ஜோசப் பேருக்கு  ஒரு பிராண்ட் வேல்யூ ஏறி விட்ட்து . டைட்டிலில்  ஏ  ஜீத்து ஜோசப் பிலிம்  என போடும்போதே அரங்கம் அதிரும் கைதட்டல்  எழுகிறது. இந்தப்படம்  அவர் பெயரைக்காப்பாற்றியதா?என்பதைப்பார்ப்போம்  

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு அநாதை . ஒரு கம்பெனியில்  ஒர்க் பன்றார் .அதே  கம்பெனியில்   நாயகிக்கு ஹையர் ஆபிஸர் ஆகப்பணி ஆற்றும் வில்லன் நாயகியின் காதலன் . அந்தக்கம்பெனி  மணி லாண்டரி  செய்யும்  இல்லீகல்   பிஸ்னஸ்  செய்யும்  கம்பெனி .பல கஸ்டமர்களின் டே ட்டாக்கள் அங்கே இருக்கு . ஒரு மில்லியன் டாலர்  சம்பளம் பேசி  வில்லன்  அந்த ரகசிய  டே ட்டாக்களை  திருடிக்கொள்கிறான் 


 அதே   கம்பெனியில்  பணியாற்றும்  இன்னொரு பெண் நாயகியின் தோழி .அவள்   அடிக்கடி   நாயகியை எச்சரிக்கிறாள் . உன் காதலனை நம்பாதே , அவனைப்பார்த்தால் நல்லவன் போல் தெரியலை  என்கிறாள் , ஆனால்   நாயகி   அதை சட்டை செய்யலை 


நாயகன்  நக்கீரன் மாதிரி  ஒரு புலனாய்வு  ஆன் லைன்  ரிப்போர்டடர் .பரபரப்பான  செய்திகளை சேகரிப்பவன் 


ஒரு நாள்   வில்லன்  ஆன நாயகியின் காதலன்   திடீர்   எனக்காணாமல்   போகிறான் .ஒரு ரயில் விபத்தில்   அவன் இறந்து விட்டதாகத்தகவல் வருகிறது .பிணத்தை அடையாளம் காட்ட நாயகி  அங்கே  போகிறாள் 


இப்போது  அந்தக்கம்பெனியின்  ஓனர் , போலீஸ், நாயகன்  என ஆளாளுக்கு  நாயகியை  விசாரிக்கிறார்கள் . வில்லன்  டே ட்டாக்களை    நாயகியிடம்  கொடுத்து   வைத்திருப்பான் என்பது அவர்களது சந்தேகம் 


 இதற்குப்பின்  நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை 



மேலே  சொன்னவை எல்லாம் முதல் 20 நிமிடத்தைத்தான் .அதன்பிறகு  பல  திருப்பங்கள் ,பல சம்பவங்கள்   உண்டு 



நாயகி  ஆக அபர்ணா பால முரளி  அபாரமாக   நடித்திருக்கிறார் .  ஆக்சன்  காட் சிகளில்   கலக்குகிறார்  .வில்லனிடம்  காதல்   காட் சிகளில்  கண்ணியம்   காட்டுகிறார் , நாயகனிடம் சில உண்மைகளை மறைத்தததற்கு குற்ற உணர்வு கொள்கிறார் .அனைத்தும் அருமை 


 நாயகன்   ஆக  ஆசிப்  அலி .அதிக   முக்கியத்துவம் இல்லாத  டம்மி  கேரக்ட்டர்  ஆக இருக்கே   என நினைக்கும்போது ஒரு டிவிஸ்ட் இருக்கு . படம் ,முழுக்க  அண்டர் பிளே  ஆ க்டிங்க்   செம 


 வில்லன்   ஆக ஹக்கீம் ஷாஜகான்  பொருத்தமான   நடிப்பு 


கம்பெனி  ஓனர் ஆக பருத்தி வீரன் சரவணன்  அதிக   வாய்ப்பில்லை 


போலீஸ்  ஆபீசர்  ஆக சம்பத்  செம கம்பீரம் 

 விஷ்ணு   ஷியாமின்  இசை அருமை .பல சீன்களில்  பின்னணி   இசை   டெம்போ ஏத்துது 


சதீஷ்  குரூ ப்பின் ஒளிப்பதிவு  அற்புதம் .எடிட்டிங்க்   விநாயக் . 150 நிமிடங்கள்   டைம் ட்யூரேசன் 


கதை  அபர்ணா   ஆர்  தரக்காட் 


திரைக்கதை  சீனிவாசன் அப்ரோல் + ஜீத்து  ஜோசப் 


 இயக்கம்   ஜீத்து  ஜோசப் 


சபாஷ்  டைரக்டர்


1   படம்  சீன்  பை     சீன்    பரபரப்பாக , விறுவிறு ப்பாக நகர்கிறது 


2    நாயகன்  , வில்லன் , நாயகி   மூவர் நடிப்பும் குட் 


3   எதிர்பார்க்காத  க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1  நியூஸ்  சேனல் - நடந்ததை  மறக்க   மாட் டேன் .இனிமேல் நடக்க இருப்பதை நேயர்களுக்கு சொல்லாமல் இருக்க மாட் டேன் 


2  நமக்கு உதவிய   ஒருவருக்கு  பிரதி உபகாரம் செய்வது தப்பில்லை 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1 படத்தில்   தேவை இல்லாமல்   ஏகப்பட் ட   ட்வீஸ்ட்ஸ் .  ஓவர்  டோஸ் 


2   நாயகி  பர்ஸ்   இல்லாமல் ,  ஜி  பே  செய்ய வழி இல்லாமல்   போன் இல்லாமல் பைவ் ஸ் டார் ஓட் டலில் சாப்பிட வருவது நம்பும்படி இல்லை 


3  வில்லனும் , அவனது   நண்பனும் 10 வயது   சிறுமியை   பாலியல்   வன் கொடுமை  செய்தவர்கள் . ஆனால் வாய்ப்பிருந்தும் நாயகியை எதுவும் செய்யாமல் விடுவது எப்படி ? 



4  நாயகி  பல இடங்களில்    தாக்கப்படுவது எல்லாம் கொடூரம் .ஒரு பெண்ணை  அப்படியா  தாக்குவார்கள் ? 


5   வில்லன்   பல ரகசியங்கள் அட ங்கிய  தனது    செல்  போனை காரில்   நாயகி இருக்கும்போது  விட்டு விட்டு வெளியே செல்வது நம்பும்படி இல்லை . நாயகி  எடுத்துப்பார்ப்பாள்   என்பது   தெரியாதா? 


6   வில்லன்   நாயகிக்கு போன்  போடும்போது   வீடியோ  காலில்  ஏன் வரவில்லை ? 


7 வில்லனின்   அம்மா வீட்டுக்கு  நாயகனும்,நாயகியும் விசாரிக்க வரும்போது  வில்லனைப்பற்றிய  ஒரு உண்மை  தெரிய    வருகிறது . ஒரு நாள்   தங்கி   அடுத்த நாள்   மீண்டும்  விசாரிப்போம் என்கின்றனர் , ஆனால் வில்லனின் அம்மாவை மீண்டும் விசாரிக்கவே இல்லை 


8      கோடிக்கணக்கான  பணம்  கைக்கு வரும்போது  வில்லன்  ஒரே ஒரு  கோடியை  தனது  நண்பனுக்கு  தர மறுப்பது நம்பும்படி இல்லை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  

ஜீத்து ஜோசப் ரசிகர்கள்  , அபர்ணா பால முரளி  ரசிகர்கள் மட்டும்   பார்க்கலாம் .நம்பமுடியாத  கதை . ட்விஸ்ட்கள்  அதீதம் . ரேட்டிங்க்  2.5 / 5 


0 comments: