லோகேஷ் கனகராஜின் கைதி படத்துக்குப்பின் ஒரே இரவில் நிகழும் கதைகளுக்கு மவுசு ஏற்பட்டிருக்கின்றன . அவை பெரும்பாலும் வெற்றியும் பெற்று வருகின்றன . அந்த வகையில் இந்தக்கதையும் ஒரே இரவில் நடக்கும் ராபரி த்ரில்லர் கதைதான்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தவன் .. பிறகு சொந்த ஊரில் ஒரு சுரங்கத்தில் வெடி வைப்பவன் ஆகப்பணி புரிகிறான் . வில்லனின் தம்பி தன் நண்பர்களுடன் சேர்ந்து நகரில் ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கிறான், . அப்போது கொள்ளையைத்தடுக்க வந்த பொலீஸ் என்கவுண்ட்டரில் வில்லனின் தம்பி உட்பட அனைவரையும் கொண்று விடுகிறது . தன் தம்பியின் மரணத்துக்குப்பழி வாங்க வில்லன் வித்தியாசமான திட்டம் ஒன்றைத்தீட்டுகிறான்
நாயகன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் . அன்றைக்குத்தான் டியூட்டியில் முதல் நாளாக ஜாயின் செய்து இருக்கிறான் . அவனை ரோந்துப்பணிக்கு அனுப்புகிறார்கள் / நாயகனும் மேலும் சில கான்ஸ்டபிள்களும் ரோந்துப்பணிக்கு வந்தபோது வில்லனின் திட்டம் எதேச்சையாகத்தெரிய வருகிறது
நகரில் அனைத்து வங்கிகளிலும் ஒரே நாள் இரவில் ஆல்ரெடி தோண்டி வைத்த சுரங்கப்பாதை மூலம் கொள்ளை அடிப்பதுதான் அந்த திட்டம் . நாயகன் அந்த திட்டத்தை எப்படி முறியடிக்கிறான் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக அதர்வா கச்சிதமாக நடித்திருக்கிறார் . அவரது ஃபிட் ஆன ஜிம் பாடி போலீஸ் கேரக்டருக்கு பொருந்துகிறது . ஆக்சன் காட்சிகளில் கலக்கி இருக்கிறார் .
நாயகி ஆக லாவண்யா த்ரிப்பாதி பேருக்கு ஏற்றபடி பாதிப்படத்தில் வருகிறார் . அதிக வாய்ப்பில்லை
வில்லன் ஆக அஸ்வின் கருமனு மிரட்டலான தோற்றம் + நடிப்பு . வில்லியாக வரும் லட்சுமிப்பிரபா நடிப்பும் அருமை
நாயகனின் நண்பர்களாக வரும் பரணி, சாரா நடிப்பு ஓக்கே ரகம்
நாயகனின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் குணச்சித்திர நடிப்பில் கொடி கட்டிப்பறக்கிறார்
ஜஸ்டின் பிரபாகர் இசையில் விறு விறுப்பான பின்னணி இசை கச்சிதம் சக்தி சரவணன் ஒளிப்பதிவில் ஒரே இரவில் நடக்கும் கதையை அருமையாகப்படம் பிடித்துள்ளார் கலைவாணனின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது
கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ரவீந்திர மாதவா
சபாஷ் டைரக்டர்
1 பணத்துக்காக கொள்ளை அடிக்காமல் பழி வாங்கக்கொள்ளை அடிக்கும் வில்லனின் மாறுபட்ட ஐடியா அருமை
2 பேங்க் கொள்ளை பற்றிய துப்புக்கிடைத்ததும் நாயகன் அதைத்தடுக்க முயற்சிக்கும் ஐடியாக்களும் செம
3 வில்லன் நாயகனுக்கு வைக்கும் செக்
4 விறு விறுப்பான திரைக்கதை , இயக்கம்
ரசித்த வசனங்கள்
1 அழுகையின் வலி புரியனும்னா நீயும் கூட சேர்ந்து அழு
2 பயத்துல ஓடலாம், ஒளியலாம், ஆனா சண்டை போட முடியாது
3 வாழ்க்கைல முதல் டைமா பொய் சொல்றே , ஆனா கான்ஃபிடண்ட்டா சொல்றே
4 அவனுக்கு என்ன ஆச்சோ என்ற பயத்துல தான் நான் இங்கே வந்தேன் , இப்போ அவனுக்கு என்ன ஆகப்போகுதுனு தெரிஞ்ச பின் நான் ஏன் அவனை இங்கே வரச்சொல்லப்போறேன் ?
5 போனவங்க:ளுக்காக சண்டை போட்டு இருக்கறவங்களை இழக்கச்சொல்றியா?
6 எந்த அப்பாவும் தன் பிள்ளை பிறக்காமலேயே இருந்திருக்கலாம்னு நினைக்க மாட்டான், ஆனா நீ அப்படி என்னை நினைக்க வைக்கறே
7 எந்தக்குறையுமே இல்லாத எங்க பொண்ணை எந்தத்தகுதியுமே இல்லாத உங்க பையனுக்குத் தர முடியாது
8 இவன் ஒழுங்கா பிளான் போட்டாலே சொதப்பலாத்தான் முடியும், ஆனா சொதப்பலா பிளான் போட்டிருக்கான்
9 உலகத்துல சில முகங்களை யாராலும் மறக்க முடியாது அவளும் மறக்க மாட்டா
10 நான் பிறக்கும்போதே ஐடியாவோட பிறந்தவன்
11 இவன் பாடி லெங்க்வேஜே தப்பா இருக்கே ?
12 இவ என் லெவந்த் கிளாஸ் மேட்
எந்த வருசம்னு சொல்லு ஏன்னா 8 வருசமா இவன் லெவந்த்தான்
13 அவ யாரு ?
தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போறே?
மறைத்து நீ என்ன பண்ணப்போறே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லனின் ஃபிளாஸ்பேக் நீளம் . அவன் தரப்பு நியாயத்தை சரி என சொல்ல முயல்வது தேவை இல்லை
2 நாயகன் , நாயகி ரொமாண்டிக் போர்சன் 29 நிமிடங்கள் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை . அதை கட் பண்ணி விட்டால் ஆங்கிலப்படம் போல் 90 நிமிடங்களீல் கிரிஸ்ப் ஆக இருந்திருக்கும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விறுவிறுப்பான ஆக்சன் த்ரில்லர் விரும்பிகள் , பேங்க் ராபரி த்ரில்லர் விரும்பிகள் பார்க்கலாம் . விகடன் மார்க் யூகம் 41 . ரேட்டிங்க் 2.75 / 5
| Thanal | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Ravindra Madhava |
| Written by | Ravindra Madhava |
| Starring | |
| Cinematography | Sakthi Saravanan |
| Edited by | Kalaivannan |
| Music by | Justin Prabhakaran |
Production company | Annai Film Production |
| Distributed by | Ayngaran International |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |
.jpg)
0 comments:
Post a Comment