Monday, September 01, 2025

கிங்க்டம் (2025) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @நெட் பிளிக்ஸ்

   


                      

மல்லி ராவா (2017) , ஜெர்சி (2019)-தெலுங்கு ,ஜெர்சி(2022) -ஹிந்தி  ஆகிய படங்களை  இயக்கிய கவுதம் தின்னாநூரி  இயக்கிய  நான்காவது  படம்தான்  இது .130 கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  80 கோடி  ரூபாய்  மட்டுமே  வசூல்   செய்து  பாக்ஸ் ஆபீசில்  தோல்வியைத்தழுவியது 31/7/2025  அன்று  திரை அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  விரைவில்  நெட் பிளிக் ஸ்  ஓ டி டி  இல்  வெளிவர இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சிறுவனாக இருந்தபோதே  நாயகனின் அண்ணன்  தன அம்மாவை டார்ச்சர் செய்த  அப்பாவைக்கோலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடி விடுகிறான் . பெரியவன் ஆன நாயகன்  போலீஸ்  கான்ஸடபிள்  ஆகிறான் .தன அண்ணனை எப்படியாவது  தேடிக்கண்டுபிடித்து  தன்  அம்மா முன்  நிறுத்த வேண்டும் என்பதே ஆசை .


 நாயகன்  ஒரு முன் கோபி . ஒரு கட்டத்தில்  தன உயர் அதிகாரியையே  பளார் என அறைந்துவிடுகிறார் . சஸ்பென்ஷனா? டிஸ்மிசா?  என  எதிர்பார்த்த வேளையில்  நாயகனுக்கு ஒரு  ஆபர்   வருகிறது .சிலோனில்  ஒரு  கேங்க்ஸ்டர்   க்ரூப்  இருக்கிறது , அதன் தலைவனை வேவு பார்த்து  தகவல் சேகரித்து  அனுப்பவேண்டும் . இதுதான் நாயகனுக்குக்கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் .


 ஒரு சாதா கான்ஸடபிளுக்கு  ஒரு ஸ்பை  ஆக்சன்  ஹீரோ  வாய்ப்பு எப்படிக்கிடைத்தது ? அந்த கேங்க்ஸ்டர்   க்ரூப் தலைவன்  தான் நாயகனின் அண்ணன் 


நாயகன்  சம்மதிக்கிறான் .ஒரு உண்மையான போலீஸாக  நாயகன்  நடந்து கொண்டானா? தம்பியாக   நடந்து கொண்டானா?  என்பது மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக  விஜயதேவரகொண்டா  கச்சிதமான நடிப்பு , ஆகிருதியான உயரம் , ஜிம் பாடி  அவரது பிளஸ் .நீண்ட   இடைவெளிக்குப்பின் அவருக்குக்கிடைத்திருக்கும் நல்ல ரோல் 


நாயகன்  -ன்  அண்ணன்  ஆக  சத்யதேவ்  பாராட் ட வைக்கும் நடிப்பு .இவரது கேரக்ட்டர்  டிசைன்  நாயகன்  -ன் கேரக்ட்டர்  டிசைனை  விட  நன்கு வடிவமை க்கப்பட்டிருக்கிறது 


நாயகன்  -ன்   அம்மாவாக ரோகிணி  அதிக வேலை இல்லை , வந்தவரை ஓகே 


 நாயகி ஆக பாக்யா ஸ்ரீ  சும்மா வந்து  போகிறார் . ஒரு டூயட் கூட இல்லை 

நாயகன்  -ன்    அண்ணி  ஆக பூமி  ஷெட்டி  நல்ல குணச்சித்திர நடிப்பு . ஜொலிக்கிறார் 


அனிருத்தின் இசையில்  நான்கு பாடல்கள் .அவற்றில்  ஒரு பாடல்  படத்தில் இடம் பெறவில்லை .பின்னணி இசை  வழக்கம் போல் அருமை , நவீன்  நூலியின்  எடிட்டிங்கில்  படம்  160  நிமிடங்கள் ஓடுகிறது , ரொம்ப நீளம் .இன்னமும்  ட்ரிம் பண்ணி இருக்கலாம் கிரிஷ்  கங்காதர + ஜோமோன் டி ஜான்  இருவரின் இணைந்த  ஒளிப்பதிவு அபாரம் .திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கவுதம் தின்னாநூரி 


சபாஷ்  டைரக்டர்

1  முதல்  35 நிமிட  திரைக்கதை  நம்மை மிகவும் ஒன்ற வைத்து விடுகிறது . சென்ட்டிமென்ட் சீன்கள் ஆடியன்ஸுக்கு நல்ல கனெக்ட்டைத்தருகிறது 


2 1920 ல்  நடப்பதாக வரும் போர்ககளக்காட் சிகள் , டைட்டிலில்  வரும் அனிமேஷன் காட் சிகள்  ரசிக்க வைத்தன 


3  பிளாஸ்பேக் சீன்  15 நிமிடங்கள் என்றாலும்  மனதில்  தங்கும் அளவு  பாதிப்பை உருவாக்கியது 


4  நாயகன்  போலீஸ்  ஆபீசரையே  மிரட்டும்  காட் சி , நாயகன் - அண்ணன்  இருவருக்கும் இடையே   ஆன பாண்டிங் க் 


5   டெக்கினிக்கல்  டீமின் அபார உழைப்பு , குறிப்பாக ஒளிப்பதிவு , சேசிங்க்  சீன்ஸ் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ரகிலே ரகிலே  பாட்டு   அப்படியே  ஜெயிலர்  படத்தில்  வரும்  ஹுக்கும்  பாட்டின்  பாட்டின் டிங்கரிங்க் உல் டா 


2  செல்வா ராகவனின் ஆயிரத்தில் ஒருவன் , விஷாலின் தோரணை , ஜீவாவின் வந்தான் வென்றான் , தேவரா , சத்ரபதி , சூர்யாவின் ன் ரெட்ரோ ஆகிய  படங்கள்  அனைத்தும்  ஒரே  டி வி டியைப்பார்த்து  சுடப்பட் டவை யோ என எண்ண  வைக்கும் அளவு  பல சீன்களோடு இந்தப்படமும் .சீன்களும்    ஒத்திருக்கின்றன ( இந்த  இயக்குனர்    இயக்கிய  ஜெர்சி   படமே செல்வா ராகவனின் மயக்கம்  என்ன  சாயல் தான் ) 


3 செக் போஸ்ட்டில்  நாயகன்   தப்பிக்கும் சீன்  காதில்  பூ ரகம் . அத்தனை  பேர்  கையில் துப்பாக்கி  இருந்தும் யாருமே நாயகனை சுடவில்லை 


4  முதல் பாதி அளவு  பின் பாதி  நம்பகத்தன்மை இல்லை 


5  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  எடுபடவில்லை .கதையில்  நிகழு ம் முக்கியமான  மரணங்கள் தேவை இல்லாதவை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


விஜயதேவரகொண்டா  ரசிகர்கள் , தெலுங்குப்பட   மசாலா ரசிகர்கள் பார்க்கலாம் .மற்றபடி  இது சராசரி  ஆக்சன் மசாலா தான், ரேட்டிங் 2.25 /5 

thanx - ANICHAM   SEPTEMBER  ISSUE


Kingdom
Theatrical release poster
Directed byGowtam Tinnanuri
Written byGowtam Tinnanuri
Produced by
Starring
Cinematography
Edited byNaveen Nooli
Music byAnirudh Ravichander
Production
company
Release date
  • 31 July 2025
Running time
160 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹130 crore[2][3]
Box office₹80 crore[4]

0 comments: