Tuesday, September 30, 2025

பல்டி (2025 ) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ஆக்சன் த்ரில்லர் )

 

          அறிமுக  இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் தன முதல்படத்திலேயேயே ரூ  2 கோடி சம்பளம்  பெற்று இருக்கிறார் . மலையாளப்பட உலகில் இது முதல் முறை .அறிமுக  இயக்குனர்  உன்னி சிவலிங்கம்  பாதி தமிழர் , பாதி மலையாளி  என்பதாலோ என்னவோ  மலையாளத்தில்  படத்தை இயக்கி அதை தமிழில் டப்செய்து வெளியிட்டு இருக்கிறார் ( இரு மொழிகளில்  உருவான படம் என்று விளம்பரம் ) .லோ பட்ஜெட்டில் உருவான இந்தப்படம்  26/9/25 அன்று திரை அரங்குகளில் வெளியாகி  முதல் 3 நாட்களில்  3 கோடி  ரூபாய் வசூல் செய்து இருக்கிறது     

பிரேமம்  மெகா ஹிட் படத்தின் இயக்குன ர் அல்போன்ஸ் புத்திரன் வில்லன் ஆக அறிமுகம்  ஆகி இருக்கும் படம் இது . நாயகன்  ஷேன் நிகாம் நடிக்கும் 25 வது படம் இது          

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் நெம்பர் ஒன்  ,வில்லன் நெம்பர் 2 , வில்லி   ஆகிய   மூவரும் ஒரே ஊரில்  வட்டித்தொழில்  செய்து வருபவர்கள் ..அவர்களுக்குள்  தொழில் முறை போட்டி இருப்பதால் மூவருக்கும் ஆகாது 

நாயகன் கபடி   பிளேயர் .தனது நண்பர்கள்   மூவருடன் இணைந்து  பல கபடி  மேட்ச்களில்  கலந்து  கொண்டு கப் அடித்தவர் /வில்லன் நெம்பர் ஒன் வைத்திருக்கும் கபடி டீம்  உடன் நாயகண் அண்ட் கோ   விளையாடி  அவர்களை ஜெயித்து கப் அடித்து விடுகிறது 


உடனே   வில்லன் நெம்பர்  2   நாயகன் அண்ட் கோ   வை தனது   டீம்   உடன் இணைந்து  விளையாடக்கேட்டு க்கொள்கிறான். சுதாரித்த  வில்லன் நெம்பர் ஒன்  நாயகன் அண்ட் கோ    வுக்கு 3 மடங்கு   அதிகம் சம்பளம் தருவதாக ஆசை காண்பித்து தனது  டீமில் சேர்த்துக்கொள்கிறான் 


ஒரு கட்டத்துக்குப்பின்  நாயகன்  அண்ட் கோ  வில்லன் நெம்பர் ஒன்   உடைய அடியாட்கள்  போல ஆகிறார்கள் 

வில்லன் நெம்பர் ஒன்   கொடுமையான வட்டி வசூல் செய்பவன் . அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் . நாயகனுக்கு ஒரு காதலி உண்டு அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு . அவன்  வில்லன் நெம்பர் ஒன்னால்  பாதிக்கப்படும்போது  வில்லனின் அடியாள்  நாயகி மீது   கை  வைக்கிறான்  . அப்போது  நாயகன்  வில்லன் நெம்பர் ஒன் உடைய   அடியாட்களை அடித்து   துவம்சம் செய்து விடுகிறான் .அப்போது   வில்லன் நெம்பர் ஒன்  க்கும்   அடிபடுகிறது 

வில்லன் நெம்பர் ஒன்   நாயகனைபழி  வாங்கத்துடிக்கிறான் .ஆல்ரெடி   நாயகன்  வில்லன் நெம்பர் ஒன்  னிடம்  அடியாள் ஆக   இருந்த போது வில்லன் நெம்பர் 2  வை   அடித்து   வெளுத்து விட் டவன் தான் . இப்போது  இரு வில்லன்களும்   நாயகனுக்கு எதிரி ஆகிறார்கள் . இந்த  சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி  வில்லி  ஒரு கேம் ஆடுகிறாள் 

வில்லன் நெம்பர் ஒன்  , வில்லன் நெம்பர்2  , வில்லி   ஆகிய  மூவரையும் நாயகன் எப்படி சமாளிக்கிறான்  என்பது மீதி திரைக்கதை 

நாயகன்  ஆக ஷேன் நிகாம்  நன்றாக   நடித்து இருக்கிறார் .கபடி  ஆடும்போதும் , சண்டைக்காட்சிகளிலும்  கலக்கி இருக்கிறார் .காதல்   காட் சிகளில்  நாயகியிடம்    பம்மும்போதும்  கச்சிதம் .

நாயகி ஆக  ப்ரீத்தி   அஸ்ராணி  இளமைத்துள்ளலுடன் நடித்து இருக்கிறார் . அதிக வாய்ப்பு இல்லை .ஆனால் வந்தவரை அருமை 

வில்லன் நெம்பர் ஒன்   ஆக   இயக்குனர்   செல்வராகவன் கொடூரமான  வில்லத்தனம்செய்கிறார் . ஆனால்  ஆல்ரெடி  பல படங்ககளில்  அவரை  நல்லவராகப்பார்த்து  விட்டு வில்லனாகப்பார்க்க என்னவோபோல் இருக்கிறது 

வில்லன் நெம்பர் 2  ஆக  பிரேமம்  மெகா ஹிட் படத்தின் இயக்குன ர் அல்போன்ஸ் புத்திரன் தெனாவெட்ட்தாக வருகிறார் . ஆனால்  ஓப்பனிங்கிலேயே  நாயகன்   அவரை  துவைத்துக்காயப்போட்டு விடுவதால் அவரது கேரக்ட்டர்  வலிமை இழக்கிறது 

வில்லி ஆக பூர்ணிமா மோகன்  பரவாயில்லை ரகம் தான் . சுருட்டு  நன்றாகப்பிடிக்கிறார் , மற்றபடி  அதிக வேலை இல்லை 

நாயகனின்   நண்பன் ஆக சாந்தனு கே   பாக்யராஜ் நடித்து இருக்கிறார்   , இவரது  கேரக்ட்டர்  டிசைனில் தெளிவில்லை .இவர்   நல்லவரா? கெட்டவரா? தெரியவில்லை 

அறிமுக  இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர்  இசையில்  3 பாடல்கள் .ஜாலக்காரி  செம ஹிட்டு மெட்டு .பின்னணி இசையில்  முத்திரை  பதித்து இருக்கிறார் . 

ஒளிப்பதிவு  அலெக்ஸ்  ஜெ பலிக்கல் .ஆக்சன்  சீக்வன்ஸ் , கபடி மேட்ச்  களை  படமாக்கிய விதம் அருமை .சிவகுமார் வி பணிக்கரின்  எடிட்டிங்கில்  படம் 151 நிமிடங்கள்   ஓடுகிறது . எந்த சீனும்  பெரிதாக போர் அடிக்கவில்லை . விறுவிறுப்பாக நகர முக்கியக்காரணம் கபடி மேட்ச் தான்


சபாஷ்  டைரக்டர்


1  விக்கி  அண்ட்  சந்தோஷ்  டீமின் ஆக்சன்  சீக்வன்ஸ்   அதகளம் .படத்தின்  பெரிய  பிளஸ் பாயிண்ட் டே  பைட் தான் . குறிப்பாக  ஹோட்டல்  கடையில்  நடக்கும்   முதல்  பைட் . வில்லன் நெம்பர்  2 வை  துவம்சம் ஆக்கும்     சோடா  பேக்ட்ரீ  2வது  பைட் , லாட்ஜில்   நடக்கும்  பைட் ,க்ளைமாக்ஸ்  பைட்  அனைத்தும்  அட் டகாசம் 


2  நாயகன் அண்ட்     டீம்  போலீசிடம்  இருந்து      தப்பிக்கும் சீனை  கபடி  மேட்ச்சில் ரைடு  வரும்போது எஸ் ஆகும்  சீனோ டு  மேட்ச்   பண்ணி  எடிட்   செய்த   விதம் அருமை 


3  நாயகன்  வில்லனின்  இடத்திலேயே   வில்லனை  , அடியாட்களை  அடித்து   துவம்சம்  செய்யும்  ஆக்சன்  ஸீக்வன்ஸ் ரன் படத்தில் வரும்  ஓப்பனிங்க்  பைட்டுக்கு நிகரான  கூஸ்பம்ப் சீன் 


4  நாயகன்  - நாயகி ரொமாண்டிக்   போர்சன்  குறைவாக வந்தாலும் நிறைவாக இருந்தது . இருவரின் கெமிஸ்ட்ரி  நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தது 


5  சண்டைக்காட் சிகளி ல்  டூப்  இல்லை .அனைவரும்  ரியலாக பைட் போட்டிருக்கிறார்கள் . குறிப்பாக நாயகன்  ஷேன் நிகாம் ,வில்லன் நெம்பர் 2   இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்  இருவரும்  செம உழைப்பு 

 ரசித்த  வசனங்கள் 


1   நடக்காத  ஒரு காரியத்தை நடத்திக்காட்டுவதுதான் கெத்து 

2  தெரு   நாய்கள்   யாரு பிஸ்கெட் போட் டாலும்  சாப்பிடும் 

3  நாம நாலு பேர் .நீ  பாட்டுக்குத் தனியா இனி முடிவு எடுக்காதே 

4  அவங்க   பேரு ,நாம நாலு பேர் . பொளக்கலாம்கறியா?  தெறிக்க   விடலாம்கறியா? 

பொளந்துட்டு   தெறிக்க விடலாம் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   கொடூரமான   வில்லன் என சித்தரிக்கப்பட்ட  செல்பவராகனை   நாயகன்  இடைவேளைக்கு   முன்பே அடித்து    விடுவதால்  அந்த  வில்லன் மேல்  இருக்கும் பயம் குறைகிறது 

2  இடைவேளைக்கு முன்பேயே   வில்லன்  நெம்பர்  2 சோடாபாபுவை   ஹீரோ அண்ட் கோ   துவைத்துக்காயப்போ ட்டு விட்டு   வில்லியிடம் க்ளைமாக்சில்  சோடா பாபு வை  நீங்க தான் முடிக்கணும் என கெஞ்சுவது  முரண் 

3  இது   ஒரு அரதப்பழசான  கதை .

4  சாந்தனு  கேரக்டர்  டிசைன்  பல இடங்களில்  குழப்பம்

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  16+

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கபடி  மேட்ச் பார்ப்பதில்   ஆர்வம் உள்ளவர்கள் ,  சண்டைக்காட் சிகளை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம் .விகடன்  மார்க் யூகம் 42 . ரேட்டிங்க் 2.75 / 5 


thanx  - anicham  2025 oct  month issue

Balti
Theatrical release poster
Directed byUnni Sivalingam
Written byUnni Sivalingam
Produced bySanthosh T. Kuruvilla
Binu George Alexander
Starring
CinematographyAlex J. Pulickal
Edited byShivkumar V. Panicker
Music bySai Abhyankkar
Production
companies
STK Frames
Binu George Alexander Productions
Release date
  • 26 September 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguagesMalayalam
Tamil
Box office₹3.00 crore [2]





0 comments: