யோகா கற்கலாம் வாங்க -2
நடைப்பயிற்சி (வாக்கிங்க் ) , ஓட்டப் பயிற்சி (ரன்னிங்) , ஜிம் எக்சசைஸ் அனைத்துக்கும் எப்படி வார்ம் அப் முக்கியமோ அதே போல் யோகாசனம் செய்யும் முன் வார்ம் அப் செய்ய வேண்டும் .
1 பிரேயர் - முதலில் 30 வினாடிகள் கண்களை மூடி கோயிலில் சாமி கும்பிடுவது போல கும்பிட வேண்டும் . கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அவரவர் பெற்றோருக்கோ பெரியவர்களுக்கோ வணக்கம் வைப்பது போல் நினைத்துக்கொள்ளலாம்
2 கண் சுழற்சிப்பயிற்சி ( ஐ ரொட்டேஷன் )
உங்கள் வலது கையை முகம் முன் நீட்டி ஆள் காட்டி விரலை மட்டும் தனியாக உயர்த்திப்பிடிக்க வேண்டும் கண்களை , பார்வையை அதில் செலுத்த வேண்டும் . கையை முன் பின் சைடு கிராஸ் என மாற்றி மாற்றி செய்ய வேண்டும்
பின் கையை ஒரு முழு வட்டம் இடுவது போல சுற்ற வேண்டும் . உங்கள் கண்கள் ஆள் காட்டி விரலைப்பார்க்க வேண்டும் . தலையைத்திருப்பக்கூடாது . கண்களூக்கான பயிற்சி இது
3 தோப்புக்கரணம் - இதுவும் ஒரு யோகா நிலை தான் பிள்ளையாருக்கு முன்பே தோப்புக்கரணம் இடுவோமே அதை ச்செய்ய வேண்டும். ஸ்கூலில் லேட்டாக வந்தால் அந்தக்காலத்தில் இந்த தண்டனை கொடுப்பார்கள். ஆக்சுவலாக அது ஒரு யோகா நிலை . 30 முறை அமர்ந்து எழ வேண்டும்
0 comments:
Post a Comment