நீ வருவாய் என (1999) படத்தில் தன் காதலனின் கண்களை தானமாகப்பெற்ற ஒருவனை நாயகி விசேஷ கவனிப்பு காட்டுவதை நாயகன் காதலாக நினைப்பது அதன் பின் நடப்பதுதான் கதை அழகன் ( 1991) படத்தில் ஒருவரை மூன்று பெண்கள் காதலிப்பதுதான் கதை . இந்த 2 படங்களின் டிவிடியை இயக்குனர் அட்லீயிடம் கொடுத்து ஒரு புதுக்கதை ரெடி பண்ணுங்க என்றால் அவர் என்ன செய்வார்? அதுதான் இந்தப்படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு குடிப்பழக்கம் , தம் பழக்கம் உண்டு , அவரது இதயம் கெட்டுப்போய் விடுகிறது . அவர் பெரிய பணக்காரர் ஆக இருப்பதால் மாற்று இதயம் வைத்துக்கொண்டு தப்பி விடுகிறார்
நாயகனுக்கு இதய தானம் செய்தவருடைய மகள் நாயகனைத்தேடி வருகிறார் . விரைவில் அவருக்குத்திருமணம் . அந்தத்திருமணத்தை நாயகன் நேரில் வந்து நடத்திக்கொடுத்தால் அவளது அப்பாவே அருகில் இருந்து ஆசீர்வதித்தது போல இருக்கும் என நாயகி கூறுகிறாள்
ஆரம்பத்தில் மறுத்த நாயகன் பின் மனம் மாறி திருமண விழாவுக்கு வருகை தர சம்மதிக்கிறார். .ஆனால் நாயகிக்குத்திருமணம் தடைபடுகிறது . நாயகி வீட்டிலேயே நாயகன் தங்கி இருக்கிறார். நாயகனுக்கு நாயகி மீது காதல் பிறக்கிறது . ஆனால் நாயகி நாயகனை அப்பா வடிவில் தான் பார்க்கிறாள் , காரணம் நாயகியின் அப்பாவின் இதயம் தான் நாயகனுக்கு வைக்கப்பட்டிருக்கிறது
நாயகியின் அம்மாவுக்கு நாயகன் மீது ஒரு பிரியம் உருவாகிறது . காரணம் புருசனின் இதயம் தான் நாயகனிடம் .நாயகன் அதைக்காதல் என்று நினைக்கிறார். ஆனால் காதல் இல்லை
நாயகனுக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு . ஆனால் காதலிக்குத்திருமணம் ஆகி விட்டது ஒரு மகளும் உண்டு . காதலியின் கணவன் ஓடிப்போய் விட்டான் . இப்போது காதலி நாயகனிடம் ப்ரப்போஸ் செய்கிறார்
இந்த மூன்று காதல்களில் எது நாயகனுக்கு செட் ஆகிறது என்பதுதான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக மோகன் லால் அண்டர் ப்ளே ஆக்டிங்கில் அசத்தி இருக்கிறார். . பல இடங்களில்,அவரது அனுபவம் மிக்க நடிப்பு கை கொடுக்கிறது
நாயகி ஆக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார் . இவர் நாயகனுக்கு ஜோடி இல்லை என்பதும் அப்பா முறை தான் என்பதும் தெளிவாகத்தெரிந்து விட்டதால் இவரை ஜோடி ஆகப்பார்க்கத்தோன்றவில்லை . நடிப்பில் குறை இல்லை
நாயகனின் நண்பன் ஆக நர்ஸ் ஆக சங்கீத் பிரசாத் காமெடி நடிப்புக்கு
நாயகியின் அம்மாவாக சங்கீதா மாதவன் நாயர் ஆச்சரியம் அளிக்கும் நடிப்பு .
நாயகனின் முன்னாள் காதலியாக சவும்யா பாக்யம் பில்லா உற்சாகமான நடிப்பு
இவர்கள் போக சித்திக் ,சபீதா ஆனந்த் போன்ற தெரிந்த முகங்களும் உண்டு , அனைவர் நடிப்பும் கச்சிதம்
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நான்கு பாடல்கள் . இரு பாடல்கள் நல்ல மெலோடிஸ் . பின்னணி இசையும் அருமை
ஒளிப்பதிவு அனு. காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார். 3 நாயகிகளையும் அழகாக , கண்ணீயமாகக்காட்டி இருக்கிறார்
கே ராஜகோபாலின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது
கதை அகில் சத்யன் திரைக்கதை சோமு . இயக்கம் சத்யன் அந்திக்காடு
சபாஷ் டைரக்டர்
1 படத்தின் முதல் காட்சியிலேயே நேரடியாகக்கதைக்கு வந்து விடுவது அருமை , பெரும்பாலான மலையாளப்படங்களில் முதல் 30 நிமிடங்கள் கேரக்டர்ஸ் இண்ட்ரோவுக்கே எடுத்துக்கொள்வார்கள்
2 இது ஒரு மெலோ டிராமா என்பதால் போர் அடிக்காமல் இருக்க ஆங்காங்கே காமெடிசேர்த்தது குட் ஐடியா
3 நாயகியின் அம்மா நிச்சயம் உன் மேல் கிரஷ் கொள்வார் காரணம் உன்னிடம் இருப்பது அவளது கணவனது இதயம் என நண்பன் உசுப்பேற்றும் சீனும் , நாயகியின் அம்மா நாயகனைக்கண்டு கொள்ளாமல் இருப்பதும் செமக்காமெடி
4 நாயகனின் முன்னாள் காதலி அடிக்கடி வீடியோ காலில் வருவதும் நாயகன் தவிப்பதும் நல்ல காமெடி என்றால் நாயகி அவள் முன் நாயகனின் ஜோடி போல நடித்து கடுப்பேற்றுவது அருமை
5 நாயகியின் அம்மா நாயகனின் குணத்தில் மதி மயங்குவதும் ஒரு நாள் கூட தன் கணவன் சாரி சொன்னதே இல்லை என மருகுவதும் செமயான காட்சிகள்
ரசித்த வசனங்கள்
1 சார் நீங்க பார்க்க யங்கா , புதுசா இருக்கீங்க
அப்படியா? அப்போ இதுக்கு முன்னால நான் பழசா , வயசான மாதிரி இருந்தேனா?
அய்யோ அப்டி இல்லை சார்
அப்பறம் ஏன் பொய் பேசறே ?
2 என் புருசன் போய்ட்டாரு
அடப்பாவமே செத்துப்போய்ட்டாரா?
இல்லை , அஃபிசியலா ஓடிப்போய்ட்டாரு
3 புனே நகரில் பெண்கள் ரொம்ப ஓப்பனா இருப்பாங்களாமே?
அப்போ புனே வில் பொண்ணுங்களை டீப்பா வாட்ச் பண்ணி இருக்கீங்க ?
4 அப்பாவோட ஹார்ட் உன்னிடம் இருப்பதால் மகளுக்கு நீ அப்பா ஓக்கே , ஆனா கணவனோட ஹார்ட் உன்னிடம் இருப்பதால் மனைவிக்கு நீ புருசனா , இது நாட் ஓக்கே
5 நான் ஃபகத் ஃபாசில் ஃபேன்
ஏன் இந்த சீனியர் ஹீரோஸ் மம்முட்டி மோகன்லால் எல்லாம் பிடிக்காதா?
நோ
6 வாழ்க்கைல நாம் தோல்வியை சந்திக்கிறோம் . அது ஜஸ்ட் ஒரு தோல்வி தான் , அதுக்காக இடிஞ்சு விழுந்துடக்கூடாது
7 நாம மிகவும் விருப்பப்பட்டு ஒரு ரயில் பயணம் போறோம்,, அப்போ டக்னு டி டி ஆர் வந்து உங்க ஸ்டேஷன் வரப்போகுது அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கனும்னு சொன்னா நமக்கு எப்படி இருக்கும் ? அப்படித்தான் நான் வாழ்க்கையை அனுபவிக்கறப்ப திடீர்னு ஹார்ட் ஃபெய்லியர் ஆகி கடவுள் என்னை முடிச்சுக்க சொல்லிட்டாரோ என நினைத்தேன்
8 உங்களுக்குப்பிடித்த விலங்கு எது ?
ஆடு. சாப்பிட அல்ல . பெட் அனிமல்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அழகன் படத்தில் வருவது போல ஆடியன்சுக்கு மூவரில் யாரா இருக்கும் ஜோடி என்ற குழப்பம் இதில் வரவில்லை , அது பெரிய மைனஸ்
2 நாயகன் - நாயகி அப்பா மகள் உஅவு என்பது க்ளீயர் ஆகத்தெரிந்து விட்டதால் நாயகனின் காதல் நமக்கு ஃபீல் ஆக வில்லை
3 நாயகனின் முன்னாள் காதலி திருமணம் ஆகி 20 வயது மகளுடன் வருவது அவரை நாயகன் ஏற்றுக்கொள்வது மனதில் ஒட்டவில்லை
4 வலிய திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் திருஷ்டிப்பூசணி
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபீல் குட் மூவி பார்க்க நினைப்பவர்கள் , மெலோ டிராமா பார்க்கும் பொறுமைசாலிகள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5
| Hridayapoorvam | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Sathyan Anthikad |
| Screenplay by | Sonu T. P. |
| Story by | Akhil Sathyan |
| Produced by | Antony Perumbavoor |
| Starring | |
| Cinematography | Anu Moothedath |
| Edited by | K. Rajagopal |
| Music by | Justin Prabhakaran |
Production company | |
| Distributed by | Aashirvad Cinemas |
Release date |
|
Running time | 151 minutes[1] |
| Country | India |
| Language | Malayalam |
| Budget | ₹30 crore |
| Box office | ₹80 crore[2] |
.jpg)
0 comments:
Post a Comment