Thursday, September 25, 2025

தண்டகாரண்யம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

                   


       இரண்டாம்  உலகப்போரின்  கடை சிக்குண்டு (2019)  என்ற  வித்தியாசமான படம் கொடுத்த  இயக்குனர் அதியன் ஆதிரை  இயக்கிய இரண்டாம் படம் இது இயக்குனர் பா ரஞ்சித்தின் சொந்தப்படம் 


தண்டகாரண்யம்  என்பது  தண்டனை பெற்றவர்கள் வசிக்கும் இருப்பிடம் என்று பொருள் .இராமாயண  காலத்தில் ராமர் ,  சீதை  இருவரும் இங்கே  வசித்ததாக நம்பப்படுகிறது ஒடிசா ,பீகார்  ஆகிய  சுற்றுப்பகுதிகளில்  உள்ள  காட்டுப்பகுதியை தண்டகாரண்யம் என்று சொல்கிறார்கள் 


2008ல்  நிகழ்ந்த  உண்மை சம்பவம்  இது .வெற்றி மாறனின்  விசாரணை  படம் போல  மனதை பாதிக்கும் கதை அம்சம் உள்ள படம் என்பதால்   கமர்ஷியல் சினிமா ஆர்வலர்கள் இதைத்தவிர்ப்பது நல்லது . வித்தியாசமான  படங்களைப்பார்ப்பவர்கள் மட்டும் பார்க்கவும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்  ஒரு மலை  கிராமத்தை சேர்ந்தவன் .அம்மா, அப்பா ,அண்ணன் , அண்ணி , ஒரு காதலி உண்டு தமிழக வனத்துறையில் பணியாற்றுகிறான் . ஒரு  அரசியல்வாதி செய்த தப்பை சுட்டிக்காட்டியதற்காக வேலை பறி போகிறது ஜார்க்கண்ட்  மாநிலத்தின் துணை ராணுவப்படையி ல்   தற்காலிக பணியில் சேர்கிறான் . இந்தப்பணியை நிரந்தரம்  ஆக்க   நாயகனின் அண்ணன்  படாதபாடு படுகிறான் . 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு ட்ரெய்னிங்க் செண்ட்டரில்  சேர்ந்தால் பணி  நிரந்தரம் ஆகுமென்ற தகவல் கிடைக்கிறது 



நாயகனின்  அண்ணன் , இருந்த  ஒரே சொத்தான நிலத்தை விற்று  அந்தப்பணத்தைக்கட்டுகிறான் . நக்சல்   என்று பொய் சொல்லி  ராணுவத்திடம் சரண்டர் ஆனால்  நக்சல்  மறுவாழ்வு  இயக்கம் மூலம் அரசுப்பணி கிடைக்கும் என மூளைச்சலவை செய்கிறார்கள் . நாயகனும்  அதை   நம்பி  அப்படியே   செய்கிறான் .இதற்குப்பின் அவன் அடையும் சிரமங்கள் , குடும்பத்தார் சந்திக்கும் இன்னல்கள்  தான்   மொத்தப்படமும் 



நாயகன் ஆக  கலையரசன்  யதார்த்தமாக நடித்து இருக்கிறார் . ராணுவப்பயிற்சியில்     அவர்  படும் சிரமங்கள் எல்லாம்  தத்ரூபமாக  ஆடியன்சுக்குக்கடத்துகிறார் நாயகனின்  அண்ணன் ஆக  அட்டக்கத்தி தினேஷ் கச்சிதமாக  நடித்து இருக்கிறார்.ஆனால்  இவரது கேரக்ட்டர் டிசைனில்  தேவை இல்லாமல்   ஹீரோயிசம் புகுததி க்கெடுத்து விட்டார்கள் 


 நாயகன்   உடன் பணியாற்றும் சக வீரர் ஆக சார்பேட் டா பரம்பரை புகழ்  டான்சிங்க் ரோஸ்  ஷபீர்  கலக்கி இருக்கிறார் .சில இடங்களில் நாயகனை ஓவர் டேக் செய்யும் நடிப்பு 


நாயகி ஆக  வின்சு சாம் , நாயகனின் அண்ணியாக ரித்விகா  இருவரும் கனகச்சிதம் .


இறுக்கமாகப்பயணிக்கும் கதையில்  பாலசரவணன்   சில  இடங்களில்  சிரிக்க  வைக்கிறார் 


ஒளிப்பதிவு  பிரதீப்  காளிராஜா .படம் முழுக்க  அடர்ந்த  வனப்பகுதியில் கதை நடப்பதால்  கேமரா  புகுந்து விளையாடுகிறது .காதல்  காட் சிகளில்   சிலிர்ப்பையும் .இரவு நேரக்காடசிகளில் பயத்தையும்   புகுத்துகிறது   கேமரா 


 இசை  ஜஸ்ட்டின் பிரபாகரன் .இரண்டு  பாடல்களில்  அந்த  ஒப்பாரிப்பாட்டு  மனதை  என்னவோ  செய்கிறது 

பின்னணி   இசை அருமை .இளையராஜாவின் 2 பாடல் கள்  பயன்படுத்தப்பட்டு இருக்கு .இதுக்கு வேற அவர் தனியாகக்கேஸ் போடுவார் . 


சபாஷ்  டைரக்டர்


1   ஜார்க்கண்ட்  மாநிலத்தில்  2014ல்     உண்மை  சம்பவத்தைத்தழுவி எழுதப்பட் ட திரைக் கதை   என்பதால் 

நம்பகத்தன்மை அதிகம் 


2  பழங்குடி மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் , வனத்துறை  துஷபிரயோகம்    ஆகியவற்றை  சொன்ன விதம் 


3   நக்சல்  சரண்டர்  ,  நக்சல்  மறுவாழ்வு  என்று  சொல்லி நடக்கும் கொடுமைகள்  படம் பிடித்த விதம் 


4    நாயகி ,டான்சிங் ரோஸ் இருவரின் மாறுபட் ட நடிப்பு   


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  அட்டக்கத்தி தினேஷ்  பல  இடங்களில் வசனம் பேசும்போது  லிப் சிங்க்  சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை /

2    அட்டக்கத்தி தினேஷ் கேரக்டரை     சினிமாத்தனம்  மிக்க  ஓவர் ஹீரோயிசமாகக்காட்டியது 

3  முதல்பாதியில் இருந்த   உயிர்ப்பு பின் பாதியில் இல்லை .மெயின் கதையே  பின் பாதிதான் .ஆனால்   அதை சரியாகசொல்லவில்லை 

4  இயக்குனர்  பா ரஞ்சித்தின்  படங்களில்  ரெகுலராக  வரும் ஆர்ட்டிஸ்ட்  செய்யும் ரெகுலர் கேரக்டர்கள்   ரிப்பிட் ஆவது போர் 

5  டாணாக்காரன் , விடுதலை , விசாரணை  படங்களை   பல இடங்களில்  நினைவுபடுத்துது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் = 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 இது அனைத்துத்தரப்புக்கான படம் அல்ல . வித்தியாசமான படங்களைபார்ப்பவர்களுக்கு மட்டும் . விகடன் மார்க் யூகம் 42 .   ரேட் டிங்

 2.75 / 5



0 comments: