இரவுக்கு ஆயிரம் கண்கள் (2018) கண்ணை நம்பாதே (2023) ஆகிய க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குனர் மு மாறன் இயக்கிய மூன்றாவது படம் தான் இது . இவர் 1998 கால கட்டத்தில் உல்லாச ஊஞ்சல் உங்கள் ஜூ னியர் ஆகிய மாத இதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதியவர் .
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு கோடீஸ்வர தொழில் அதிபரின் மனைவி , இவர்களுக்கு ஒரு மகள் . நாயகிக்கு திருமணத்துக்கு முன் ஒரு காதலன் இருந்தான் . அவனுடன் பிரேக்கப் ஆகி விட்ட்து . அவன் இப்போது நாயகியிடம் வந்து நாம் நெருக்கமாக இருந்த படங்களை உன் கணவனிடம் காண்பிக்காமல் இருக்க ரூ 2 கோடி பணம் வேண்டும் என மிரட்டுகிறான்
நாயகன் ஒரு டிரைவர் . போதைப்பொருள் கடத்துக்கிறோம் என்பது தெரியாமல் வேலை செய்பவன் ., இவனுக்கு ஒரு காதலி உண்டு . காதலி திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகிறாள் . ஒரு நாள் நாயகன் வண்டியுடன் சரக்கைப்பறி கொடுக்கிறான் . உடனே ஓனர் நாயகனின் காதலியை பிடித்து வைத்துக்கொண்டு சரக்கையோ அதற்கு ஈடான பணத்தையோ செட்டில் செய்து விட்டு காதலியை மீட்டுக்கொள் என்கிறான்
இந்த இரண்டு மிரட் டல்களும் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை
நாயகி ஆக பிந்து மாதவி . சிறப்பான நடிப்பு . அவரது கணவன் ஆக ஸ்ரீ காந்த் கச்சிதம் . நாயகன் ஆக ஜி வி பிரகாஷ் . துடிப்பான நடிப்பு . இவரது காதலி ஆக தேஜு அஸ்வினி , அதிக வாய்ப்பில்லை , வந்தவரை ஓகே
நாயகியின் முன்னாள் காதலன் ஆக வில்லன் ஆக லிங்கா பரவாயில்லை ரகம் தான் . நாயகனின் நண்பன் ஆக வரும் ரமேஷ் திலக் நல்ல நடிப்பு . ரெடின் கிங்க்ஸ்லி வழக்கம் போல மொக்கைக்காமெடி செய்கிறார்
சாம் சி எஸ் சின் பின்னணி இசை அருமை கோகுலின் ஒளிப்பதிவு கன கச்சிதம் . எடிட்டிங்கில் படம் 117 நிமிடங்கள் ஓடுகிறது
1 வாய்ப்பிருந்தும் ஹீரோ பில்டப் சீன்கள் இல்லை , டூயட் இல்லை
2 முதல் பாதி முழுக்க செம பரபரப்பில் திரைக்கதை பறக்கிறது
3 பிந்து மாதவியின் உணர்ச்சிகரமான நடிப்பும், ஜி வி பிரகாஷின் அண்டர் பிளே ஆக்டிங்கும் அருமை
4 கண்ணியமான காட் சி அமைப்புகள்:
ரசித்த வசனங்கள்
1 செட்டில் ஆன பின் தான் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் எனில் இந்த உலகில் யாரும் வாழவே முடியாது
2 ரிஸ்க் பார்த்தா வருமானம் பார்க்க முடியாது
3 சரி , தப்பு என எதுவும் இல்லை , நமக்குத்தேவை இருக்கா? இல்லையா? என்பதில் தான் இருக்கு
4 யாரையும் நம்பாதே , ஜெயிக்க என்ன வேணா செய்
5 சுயநலமா இருக்கக்கத்துக்க
6 எந்த பிரச்சனை வந்தாலும் போலீஸ் ஸ் டேஷன் போயிடாத
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கதை நடக்கும் ஊர் கோவை , ஆனால் யாரும் கோவை வட் டார வழக்கில் பேசவில்லை
2 கோவை மால் தவிர படம் முழுக்க கோவையில் ஷூட் செய்யப் படவில்லை
3 இடைவேளைக்குப்பின் ஏகப்பட் ட திருப்பங்கள் ஓவர் டோஸ்
4 கடத்தப்பட் ட சிறுமிக்கு எதுவும் ஆகி விடக்கூடாதே என்ற பதை பதைப்பு ஆடியன்ஸுக்கு வரவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய தரமான படம். விகடன் மார்க் யூ கம் 43 . ரேட்டிங்க் 3 / 5
| Blackmail | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Mu Maran |
| Written by | Mu Maran |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Gokul Benoy |
| Edited by | San Lokesh |
| Music by | Sam C. S |
Production company | JDS Film Factory |
| Distributed by | Creative Entertainers & Distributors Zinema |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |

0 comments:
Post a Comment