மம்முட்டியின் மகன் ஆன துல்கர் சல்மான் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் . வசூலில் வந்த லாபம் முழுக்க படத்தில் பங்குபெற்ற நடிகர்,. நடிகையர் , தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு சமமாகப்பிரித்துக்கொடுத்துவிட்டாராம், சபாஷ் . இப்படத்தின் 2ம் , 3ம் பாகங்கள் வர இருக்கின்றன
28/8/2-025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் 28/9/2025 முதல் நெட் ஃபிளிக்ஸ் சில் காணக்கிடைக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு சராசரி இளைஞன். ஆல்ரெடி ஒரு லவ் ஃபெய்லியர் உண்டு. நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பது இவர் வழக்கம் . இவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு புதுப்பெண் குடி வருகிறார் . அவர் தான் நாயகி . வெளி நாட்டில் இருந்து இங்கே வந்திருக்கும் அவர் ஒரு கம்பெனியில் நைட் ஷிட்ஃப்ட்டில் வேலை பார்க்கிறார்
நாயகன் நாயகி பின்னாலயே சுற்றுகிறார் . நண்பர்களுடன் கேலி கிண்டல் , நாயகி பின்னால் அலைவது என முதல் அரை மணி நேரம் ஜாலியாக்கதை போகிறது
அந்த நகரில் மனித உறுப்புக்களைத்திருடும் கும்பலை போலீஸ் தேடுகிறது . போலீசின் சந்தேக வளையத்தில் நாயகி சிக்குகிறார்
நாயகன் ஒரு முறை நாயகியை ஃபாலோ செய்து போன போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பத்தைப்பார்க்கிறார் . நாயகி மனிதப்பிறவியே அல்ல, யட்சி ( லேடி டிராகுலா மாதிரி )
நாயகி சிறுமியாக இருந்தபோது (அதாவது பலநூற்றாண்டுகளுக்கு முன் ) நாயகியின் பெற்றோரை ஒரு கும்பல் கொலை செய்கிறது . அப்போது வெகுண்டு எழுந்த நாயகி தனக்குள் அபூர்வ சக்தி இருப்பதை உணர்கிறாள் . தான் ஒரு யட்சி என்பதை உணர்கிறாள் . 20 வருடங்களுக்கு ஒரு முறை அவர் இடம் மாறிவிட வேண்டும் .கண்ணன் அவதாரம் எடுத்து அரக்கர்களை அழிப்பது போல நாயகி 20 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ஏரியாவுக்கு வந்து அங்கே இருக்கும் தீய சக்திகளை அழிக்கிறார். நாயகிக்கு இப்போது வயது 1200
நாயகி க்கு ,மரணம் இல்லை. நாயகனுடன் ஆன காதல் என்ன ஆச்சு ? நாயகிக்கு ஒரு வில்லன் எப்படி முளைக்கிறான் ? அவனை நாயகி எப்படி சமாளிக்கிறாள் என்பது மீதி திரைக்கதை
நாயகி ஆக கல்யாணி பிரியதர்ஷினி கலக்கி இருக்கிறார் .சிரிக்காத முகம் , ஆனால் சுண்டி இழுக்கும் கண்கள்
ஜேக்ஸ் பீஜாய் தான் இசை . இரு பாடல்கள் குட் , பின்னணி இசை அருமை . சாமன் சாக்கோ தான் எடிட்டிங்க் முதல் பாதி செம ஸ்பீடு . 150 நிமிடங்கள் டைம் ட்யூரேசன் . ஒளிப்பதிவு நிமிஷ் ரவி . கலக்கலான ஃபோட்டோகிராஃபி . போஸ்டர் டிசைன்கள் , பல ஸ்டில்கள் எல்லாம் அள்ளுது
சாந்தி பாலச்சந்திரன் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியே இயக்கி இருக்கிறார் டொமினிக் அருண்
சபாஷ் டைரக்டர்
1 ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு , பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம் . ஃபாரீன் லொக்கேஷன் மாதிரி செமயாக எடுத்து இருக்கிறார்கள்
2 டொவினோ தாமஸ் , துல்கர் சல்மான் , கூலி வில்லன் சவுபின் சாஹிர் போன்றோர் கேமியோ ரோலில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கை தட்டல் காதைப்பிளக்கிறது
3 நாயகனின் அப்பாவிமுகம் , நாயகியின் இறுகிய முகம் ஸ்பெஷல் காம்போ ரசிகர்களை சுண்டி இழுக்கிறது
4 க்ளைமாக்சில் நாயகியின் ஃபைட் , உடல் மொழி அபாரம் . வைஜயந்தி ஐ பிஎஸ் விஜயசாந்தி ரேஞ்சுக்கு கலக்குகிறார்
5 நாயகியை வெறும் வேம்ப்பயர் , லேடி டிராகுலா மாதிரி காட்டாமல் கிராமத்து தெய்வம் அவதாரம் மாதிரி கலந்து கட்டி கேரக்டர் டிசைன் அமைத்ததில் இயக்குனருக்கு வெற்றி
6 இண்ட்டர்வல் பிளாக் சீன் பாட்ஷாவுக்கு இணையான ட்ராண்ஸ்ஃபர்மேசன் சீன் கலக்கல் ரகம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி தன் பவரை உபயோகிக்கும் காட்சிகளில் கூஸ்பம்ப் சீன்கள் வைக்காமல் இயக்குனர் தவறு செய்து விட்டார்
2 நாயகி , வில்லன் இருவருக்குமான ஃபைட் சீன்கள் அயர்ச்சியைத்தருகின்றன
3 கழுத்தைக்கடிப்பது , ரத்தம் பீறிட்டு வருவது போன்ற வன்முறைக்காட்சிகள் அதிகம்
4 வில்லன் சாண்டியின் நடிப்பு ஓக்கே , ஆனால் அவர் வயசு ஒரு மைனஸ். சின்னப்பையனாக இருகிறார். பவர் ஃபுல் வில்லன் ரோலுக்குப்பொருத்தம் இல்லை
5 வில்லன் ஒரு போலீஸ் ஆஃபீசர், அவர் தனது ஹையர் ஆஃபீசரை முறைப்பது , கோபித்துக்கொள்வது எல்லாம் ஓவர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ வயலனசுக்காக
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கலாம் .மேல்சாவனிஸ்ட்களூக்குப்பிடிக்காது ( ஹீரோயின் வீரம் ஹீரோ கோழை ) ரேட்டிங்க் 3/ 5
| Lokah: Chapter 1 – Chandra | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Dominic Arun |
| Screenplay by | Dominic Arun Santhy Balachandran |
| Story by | Dominic Arun |
| Produced by | Dulquer Salmaan |
| Starring | Kalyani Priyadarshan Naslen Sandy Master Arun Kurian Chandhu Salimkumar |
| Cinematography | Nimish Ravi |
| Edited by | Chaman Chakko |
| Music by | Jakes Bejoy |
Production company | |
| Distributed by | Wayfarer Films[1] |
Release date |
|
Running time | 149 minutes[2] |
| Country | India |
| Language | Malayalam |
| Budget | ₹30 crore[3] |
| Box office | est.₹260 crore[4][5] |

0 comments:
Post a Comment