Saturday, February 24, 2024

ஜூவி ஃபோட்டோ தாக்கு 20/2/2024 கே எஸ் அழகிரி vs செல்வப்பெருந்தகை - ஒரு கற்பனை




=======================================

1  கே.எஸ்.அழகிரி: - காலைல எந்திரிச்சு வேஷ்டி கட்டும்போதே கட்சியோட கோஷ்டிப்பிரச்சனையை எப்படி சமாளிக்கறதுனு டெய்லி யோசிச்சுக்கனும்


2 செல்வப் பெருந்தகை. = என் பேர் ராசில தான் தலைமைப்பொறுப்பு கிடைச்சுதுனு சொல்றீங்களே? சும்மா பேருல மட்டும் செல்வம் இருந்தாப்போதுமா? செல்லம் ?

3 செல்வப் பெருந்தகை. - ஹேர் டை அடிக்கும்போது ஏதோ ஒரு பிராண்ட் தான் அடிப்பேன். எனக்கு இரட்டைத்தலை ”மை” ல நம்பிக்கை இக்ல்லை

4 செல்வப் பெருந்தகை. = சீனியர்ங்கற முறைல கட்சில இத்தனை வருசமா எப்படிக்குப்பை கொட்டுனீங்கனு சொல்லித்தர முடியுமா?

 கே.எஸ்.அழகிரி: - - மனசுல இருக்கறதை யார் கிட்டேயும் கொட்டாம கமுக்கமா இருக்கனும். வாயைத்திறந்தா வில்லங்கம்தான்

5   கே.எஸ்.அழகிரி: - தலைமையை மாத்துனா மட்டும் கட்சியோட தலை எழுத்தை மாத்திட முடியுமா? ஒட்டற மண்ணு தான் ஒட்டும்

6 செல்வப் பெருந்தகை. = பதவி போயிடுச்சேனு என் மேல கோபம் ஏதும் இல்லையே?
 கே.எஸ்.அழகிரி: - ச்சே ச்சே , ஏழரை சனி முடிஞ்சு சனிப்பெயர்ச்சி ஆனா சந்தோஷம் தானே படனும் ?

7 செல்வப் பெருந்தகை. = இனிமே நான் இன்சார்ஜ் எடுத்துக்கறேன்

 கே.எஸ்.அழகிரி: - அப்பா , ஆளை விடுங்கடா சாமி, மீ எஸ்கேப், விதி வலியது


8  செல்வப் பெருந்தகை. = கூட்டணிப்பேச்சு வார்த்தைல நாம என்ன செஞ்சா கேட்டது கிடைக்கும்?

கே.எஸ்.அழகிரி: - கொடுக்கறதை வாங்கிட்டுப்போறதுதானே நம்ம கட்சியோட பாரம்பரியம்?

9  கே.எஸ்.அழகிரி: தலை இருக்க வால் ஆடலாமா? பழமொழி எல்லாம் இங்கே செல்லாது , தலையே இங்கே ஆடக்கூடாது. அடக்கி வாசிக்கனும்

10 செல்வப் பெருந்தகை. = உங்க கண்ணாடி பவர் எவ்ளோ அண்ணே?

கே.எஸ்.அழகிரி: = பவரா? அய்யய்யோ, அதுவும் மைனஸ் பவர் தான்

11  செல்வப் பெருந்தகை. = தேசியக்கட்சி நாம தானே? நம்ம கை தானே ஓங்கி இருக்கும் ?

கே.எஸ்.அழகிரி: = ம்க்கும், ஏற்கனவே நம்ம கை , கன்னம் எல்லாம் வீங்கி இருக்கே?


12  செல்வப் பெருந்தகை. = சோனியா காந்தி , ராகுல் காந்தி யார் கிட்டே நல்ல பேர் எடுத்தா கட்சில நல்ல பேரு கிடைக்கும் ?

கே.எஸ்.அழகிரி: = ஸ்டாலின், உதயநிதி இவங்க ரெண்டு பேர் கிட்டயும் முதல்ல நல்ல பேரு எடுக்கனும்

13 செல்வப் பெருந்தகை. = ரயில் மறியல் பண்ணக்கூப்பிட்டா மட்டும் போகக்கூடாதா? அது ஏன் ?

கே. எஸ்.அழகிரி: = வந்தே பாரத் ரயில் மறியல் பண்ணக்கூப்பிடுவாங்க . ஓவர் ஸ்பீடுல வண்டி வருமே?

14 கே. எஸ்.அழகிரி: = என்ன ? ஜாஸ்மின் செண்ட் வாசம் ஆளைத்தூக்குது ?

செல்வப் பெருந்தகை. = மல்லிகார்ஜூன் கார்கே மனசை கவரத்தான். ஜாஸ்மின்னா மல்லிகை, மேட்சுக்கு மேட்ச்

15   கே. எஸ்.அழகிரி: = இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்

செல்வப் பெருந்தகை. = எங்கே போகனும் ? கமலாலயத்துக்கா? அறிவாலயத்துக்கா?

16 கே. எஸ்.அழகிரி: = ஆலயம் தொழுவது சாலவும் நன்று

செல்வப் பெருந்தகை. = புரியுது அறிவாலயமே சரணம் ?


17 கே. எஸ்.அழகிரி: = 12 சீட் கேளுங்க

செல்வப் பெருந்தகை. = அப்போத்தான் திமுக அதுல பாதி ஆறாவது தருவாங்களா?


கே. எஸ்.அழகிரி: = ஆசை தோசை . 12 கேட்டாதான் 1+2 = 3 மூன்றாவது தருவாங்க

18 செல்வப் பெருந்தகை. = என்ன கையை அப்படிக்காண்பிக்கறீங்க? கூட்டணிக்கட்சிக்கு ஓ போடுனு அர்த்தமா?

கே. எஸ்.அழகிரி: = இல்லை , கூட்டணிக்கட்சியின் பார்வையில் நாம் எப்போதும் ஜீரோ தான்னு சிம்பாலிக்கா சொல்றேன்

19 செல்வப் பெருந்தகை. = அண்ணே , கூட்டணி தர்மம்னா என்ன?


கே. எஸ்.அழகிரி: = அவங்களாப்பார்த்து ரெண்டு அல்லது மூணு தொகுதிகள் தர்மம் பண்ணுவாங்க , அதை வாங்கிட்டுப்போயிடனும்


20 செல்வப் பெருந்தகை. = நம்ம கட்சில தொண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபடுவேன்

கே. எஸ்.அழகிரி: = முதல்ல கட்சில இருக்கும் கோஷ்டிகளின் எண்ணிக்கையைக்குறைக்கப்பாருங்க



====================

0 comments: