Monday, February 12, 2024

தாழம்பூ (1965) -தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் கமர்ஷியல் மசாலா ) @ யூ ட்யூப்

 


 தீபாவளி  ரிலீஸ்  ஆக  வெளியான  இப்படம்  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்தை  எப்படி  கம்ர்ஷியல்  ஆக   மசாலா  கலந்து  சொல்ல  வேண்டும்  என்று  அந்தக்காலத்தில்  பாடம்  நடத்தியது  போல  இருந்தது . போர்  அடிக்காமல்  காதல், டூயட் , காமெடி  , செண்ட்டிமெண்ட்  காட்சிகளூடன்  பொழுது  போக்குப்படமாக  அமைந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  பெரிய  பணக்காரரின்  மகள் .  அப்பா  ஒரு  எஸ்டேட்  ஓனர் . அவருக்கு  ஒரு  தம்பி  உண்டு . நாயகியின்  அப்பாவின்  எஸ்டேட்டில்  தான்  நாயகனின்  அண்ணன்  மேனேஜராக  வேலை  செய்கிறான்/ நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  வேலை  கிடைக்கிறது . அதற்கு  டெபாசிட்  கட்ட  பெரும்  தொகை  தேவைப்படுகிறது . தன்  ஓனரிடம்  கடனாகக்கேட்கிறான்  நாயகனின்  அண்ணன்.


  இன்னொரு  வேலைக்காரனும் அதே  போல் தன்  மகள்  திருமணத்துக்குப்பணம் கேட்கிறான். பணம்  எடுக்க  ஓனர்  முயற்சிக்கையில்  அவரிடம்  இருக்கும்  ஏராளமான  பணத்தை  அந்த  வேலைக்காரன்  பார்த்து  விடுகிறான். அந்த  சமயம்  கடன்  வாங்க  அங்கே  வரும் நாயகனின்  அண்ணன்  தன்  ஓனர்  கொலை  செய்யப்பட்டுக்கிடப்பதைக்கண்டு  அதிர்ச்சி  அடைகிறான். போலீசிடம்  மாட்டி  கொலை  செய்ததாக  பழி  சுமத்தபட்டு   தூக்கு  தண்டனை  பெறுகிறான்


 நாயகன்  தன்  அண்ணனை  கொலைப்பழியில்  இருந்து  காப்பாற்ற  அண்ணன்  வேலை  செய்த  அதே  கம்பெனியில்  தோட்டக்காரனாக  வேலை  செய்து   நாயகியை  சைடு  டிராக்கில்  லவ்  பண்ணி மெயின் டிராக்கில் கொலைகாரனை  எப்படிக்கண்டு பிடித்தார்  என்பதே  மீதிக்கதை 


நாயகன்  ஆக  எம்  ஜி ஆர். சுறுசுறுப்பான  நடிப்பு . பாட்டு  , ஃபைட் , டூயட்  என  வழக்கமான  அவர்  அம்சங்கள்  படம்  நெடுக  உண்டு .  அவரின்  அண்ணனாக  அசோகன் . சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் . சில  இடங்களில்  நெகிழ்ச்சியான  நடிப்பு 


  நாயகியின்  சித்தப்பாவாக  நடிக வேள்  எம்  ஆர்  ராதா  கலக்கி  இருக்கிறார்,   எஸ்டேட்  மேனேஜர்  ஆக   எம் என்  நம்பியார்  வில்லத்தனமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் 


 காமெடி டிராக்கில்  நாகேஷ்  மனொரமா  அசத்தல் 

 நாயகி  ஆக  கே  ஆர்  விஜயா  துள்ளல்  ஆன  நடிப்பு 


டி  ராதா  கிருஷ்ணனின்  எடிட்டிங்கில்  144  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது  கே  வி   மகாதேவன்  இசையில்  ஐந்து  பாடல்கள்    அவற்றில்  மூன்று  ஹிட் 

சுப்பாராவ்  தான்  ஒளிப்பதிவு . சிறப்பு .


கதை  கே  பி  கொட்டாரக்கர . திரைக்கதை  ஜி  பாலசுப்ரமணியம் . இயகம் என்  எஸ்  ராமதாஸ் 



சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  தன்  அண்ணியை  தன்  அம்மாவாக நினைக்கிறார். ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலையால்  காதலியின்  எதிரே  அண்ணியுடன்  தொடர்பு  இருப்பது  போல்  சித்தரிக்கப்படுகிறார். இந்த  செண்ட்டிமெண்ட்  சீன்  நன்றாக  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கிறது

2  எம்  ஆர்  ராதா  வுக்கு  போர்சன்  குறைவுதான், ஆனால்  எம் ஜி  ஆர்  உடனான  காம்போ  காட்சிகளில்   அனாயசமாக  நடித்து  தூக்கி  சாப்பிட்டு  இருக்கிறார்

3  நாகேஷின்  காமெடி  டிராக்  அசத்தல் 

4   எம் என்  நம்பியார்  , அசோகன் , எம்  ஆர்  ராதா  என  மூன்று  வில்லன்களை  கச்சிதமாக  அந்தந்த  பாத்திரங்களில்  மிளிர  வைத்தது 

5     கே  ஆர்  விஜ்யாவுக்கான  காஸ்ட்யூம்  டிசைன்  அருமை 

6  படத்தின்  டைட்டிலுக்கும் , க்ளைமாக்ச்ஸ்  ட்விஸ்ட்டுக்கும்   முடிச்சுப்போட்ட  விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வட்ட  வட்ட பாத்தி  கட்டி , வண்ண  வண்ண  சேலை  கட்டி  (  ஹீரோயின்  ஓப்பனிங் சாங்க் ) 


2  தாழம்பூவின்  நறுமணத்தில்    நல்ல தரம்  இருக்கும் தரம்  இருக்கும் ( ஹீரோ  விழாப்பாட்டு ) 


3  எரிக்கரை  ஓரத்திலே  எட்டு  வேலி  நிலம்  இருக்கும்  (  டூயட்) 

4  தூவானம்  இது  தூவானம்  இது  தூவானம்  சொட்டு  சொட்டா  உதிருது ( ஹீரோயின் சாங் ) 


5  பங்குனி  மாதத்தில்  ஒரு  இரவு  (  டூயட்)

6  எங்கே  போய்  விடும்  காலம் ? அது  என்னையும்  வாழ வைக்கும் (  ஹீரோ  தத்துவப்பாடல்) 

  ரசித்த  வசனங்கள் 


1   பெரிய  மனுஷங்களை ரொம்ப  நெருங்கவும்  கூடாது , ரொம்ப  விலகி  இருக்கவும்  கூடாது 


2   நம்ம  வருமானம்  மத்தவங்களுக்கு  தெரிஞ்சுடக்கூடாது  என்பதற்காகவே  அதிக  வேலையாட்கள்  வெச்சுக்கறதில்லை 

  3  எனக்கு  இங்க்லிஷ்  தெரியாதுதான்  , ஆனா  இங்க்லீஷ்  தெரிஞ்சவன்  என்  கிட்டே  இங்க்லீஷ் ல  பேசிடாதபடி  சமாளிக்கத்தெரியும் 


4  உன்  கோழியா  அது ?


 சொந்தக்கோழியைப்பிடிக்கறதுல  என்ன  உற்சாகம் இருக்கும்? ஊரான்  வீட்டுக்கோழின்னாத்தான்  ஒரு  இது 


 நீ  இன்னும்  திருந்தவே  இல்ல 


 காக்கா  பிடிச்சாதான்  தப்பு , கோழி  பிடிச்சா...   என்ன  தப்பு ?


5  இடம்  மாறுனா  மனம்  மாறும்னு  சொல்வாங்க 


4   வில்லன் = உனக்கு  என்ன  இங்கே  வேலை ?


 எனக்கு  என்ன  வேலை ?  வேலை  தேடித்தாங்க  வந்தேன் 


நான்சென்ஸ்


   என்  பேரு  நான்சென்ஸ்  இல்லைங்கை . கோபாலு 


5  முட்டாள்  தனத்தை  எப்படி  மூடி  வைக்க  முடியாதோ  அதே  மாதிரி  புத்திசாலித்தனத்தையும்  ரொம்ப  நாள்  மறைச்சு  வைக்க  முடியாது 


6   வில்லன் = வெரிகுட்  , யோக்கியனா  இருக்கியே? பேசாம  என்  கூடவே  இருந்துடு 


 காமெடியன் = நான்  தான்  யோக்கியன்  ஆச்சே? எப்படி  உங்க  கூட  இருக்கறது ?


பரவால்லியே? தமாசாக்கூடப்பேசறியே? சரி  ,  வேலை  போட்டுத்தர்றேன். கடைசி  வரை  என்  கூடவே  இருந்துடு 


கடைசி  வரைன்னா  உங்க  கடைசி  வரையா? என்  கடைசி  வரையா?


7   அடுத்தவங்களைக்கெடுத்து  நான்  வாழ  மாட்டேன்

8  என்ன  விசித்திரமான  உலகம் ?  திருடன்  கூட  தான்  திருடுன  பணத்தை  சொந்தம்னு  சொல்றான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனின்  அண்ணன்  தன்  தம்பி  வேலை  செய்யும்  இடத்தில்  ரூ  5000  டெபாசிட்  கட்டச்சொல்கிறார்கள்  என  தன்  முதலாளியிடம் சொல்லும்போது  எஸ்டேட்  ஓனரான  முதலாளி  வெள்ளிக்கிழமை  இரவு வா , தர்றேன்  கறார், அப்பவே  தந்தா  என்ன? 


2  படம்  எடுக்கப்ப்ட்ட  ஆண்டான  1965 ல்  ஒரு பவுன்  தங்கத்தின்  விலை  ரூ 63. கிட்டத்தட்ட  90  பவுன்  தங்க  விலை  என்னவோ  அதைத்தான்  முதலாளியிடம்  கடனாகக்கேட்கிறார் நாயகனின்  அண்ணன். யார்  தருவார்கள்  அவ்ளோ  பணம்? 

3  நாயகன்  கோல்டு  மெடலிஸ்ட். காலேஜில்  டிகிரி  முடித்த  போது  அவர்  மெடல்  வாங்கும்  ஃபோட்டோ  முன்னணி  பத்திரிக்கைகளில்  வ்ந்து  இருக்கு . அப்படி  இருக்கும்போது  எந்த  மாறு  வேடமும்  போடாமல்  அதே  முகத்துடன்  தோட்டக்காரனாக  வேலை  செய்வது  எப்படி ? 


4    வில்லனின்  அடியாள்  நாயகியின்  வீட்டில்  வேலை  செய்த  ஆளின்  மகளை  அடிக்கடி  வழி  மறீத்து  உண்மையை  சொல்.    உன்  அப்பா  எங்கே  எனக்கேட்டுக்கொண்டே  இருக்கிறார் , அதுக்கு  பதிலா  அவளை  ஃபாலோ  பண்ணினாலே  கண்டு  பிடிச்சுடலாமே?


5  நாயகி  தன்  சித்தப்பாவை  படத்தின்  முதல்  பாதியில்  அப்பா  அப்பா  என  அழைக்கிறார். பிற்பாதியில்  சித்தப்பா  என  அழைக்கிறார்


6  நாயகனின்  அண்ணன்  ஒரு  தூக்கு  தண்டனைக்கைதி . ஜெயிலில்  இருந்து  தப்பி  நேரா  வீட்டுக்கு  வந்து  மனைவியைப்பார்க்கிறார். வீட்டுக்கு  போலீஸ்  காவல்  இருக்காதா?தூக்கு  தண்டனைக்கைதி தப்பினால்  வேறு  ஒரு  இடத்துக்கு  மனைவியை  வரச்சொல்லி  சந்திப்பதுதானே  பாதுகாப்பு ?


7  நாயகிக்கு  நாயகன் தான்  தன்  அப்பாவைக்கொலை  செய்ததாகக்கைது  செய்யப்பட்டவனின்  தம்பி  என்பது  தெரியும்.  அப்படி  இருக்கும்போது  தன்  அண்ணன்  அடிக்கடி  தன் அண்ணியைப்பார்க்க  வீட்டுக்கு  வருவதாக  காதலியிடம்  ஏன்  சொல்லவில்லை ?


8  ஜெயிலில்  இருந்து  தப்பிய  தூக்கு  தண்டனைக்கைதி  சம்மர் வெக்கேசனுக்குப்போவது  போல்  அடிக்கடி தன்  வீட்டுக்குப்போஉ  மனைவியை  கர்ப்பம்  ஆக்கி  விடுகிறார்.  போலீஸ்  விசாரிக்கும்போது  தன்  தம்பி  மீது பழி  விழும்  அல்லது தன்  மனைவியை நடத்தை  கெட்டவள்  என  ஊர்  பேசும்  என்பது  தெரியாதா?


9 க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன் அந்த  வேலைக்காரனும் , மகளும்  வீட்டை விட்டுக்கிளம்பும்போது  புது  இடம்  ஷிஃப்ட்  ஆகறோம்  என  சொல்லிக்கிளம்புகிறார்கள் , ஆனால்  வீட்டைப்பூட்டவே  இல்லை , பெப்பரப்பே  என  திறந்து  வைத்தே  செல்கிறார்கள் 


10  க்ளைமாக்சில்    மெயின் வில்லன்   இன்னொரு  வில்லனைக்கொலை  செய்வதை  நாயகன் நேரில்   பார்த்து  விடுகிறான், உடனே  வில்லன்  நாயகனை  கயிறால்  கட்டிப்போட்டு விட்டு  மட்டும் செல்கிறான்.  சாட்சியை  யாராவது  உயிரோடு  விடுவார்களா?  (  வில்லன்  கொன்ற  இன்னொரு வில்லனைக்கொன்றது  நாயகன்  தான்  என  பழி  சுமத்த  ஐடியாவாம்,  சகிக்கவில்லை ) 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம்  ஜி  ஆர்  ரசிகர்கள்  மட்டுமின்றி    மசாலா  பட  ரசிகர்களும் பார்க்கலாம், டைம் பாஸ் ஃபிலிம். ரேட்டிங்  .  2.5 / 5 


Thazhampoo
Theatrical release poster
Directed byN. S. Ramadass
Screenplay byG. Balasubramaniam
Story byK. P. Kottarakkara
StarringM. G. Ramachandran
K. R. Vijaya
CinematographyW. R. Subba Rao
Edited byG. Radhakrishnan
Music byK. V. Mahadevan
Production
company
Sri Balamurugan Films
Release date
  • 23 October 1965
Running time
143 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: