Tuesday, February 13, 2024

PINDAM (2023) - தெலுங்கு - பிண்டம் -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம் + ஆஹா தமிழ்

 


 தெலுங்கானாவில்  உள்ள  நால்கொண்டா  என்னும்  ஊரில்  1930  ல்  நிகழ்ந்த உண்மை  சம்பவம்  இது .  தியேட்டரில்  15/12/2023ல் ரிலீஸ்  ஆனபோது  கலவையான  விமர்சனங்களைப்பெற்ற  இப்படம்  ஆஹா  தமிழ்  ஓடிடி  யில்   2/2///2024 ல்  ரிலீஸ்  ஆகி  இப்போது 9/2/2024  முதல்  அமெசான் பிரைம்ல  யும்  கிடைக்கிறது . தமிழ்  டப்பிங்கிலும்  உண்டு 

ஸ்பாய்லர்  அலெர்ட்

அன்னம்மா  என்னும்  பெண்  பேய்  ஓட்டுபவர்  ஆக  இருக்கிறார். அவரைப்பேட்டி  காண  வரும்  நபர்  அவர்  வாழ்க்கையில்  சந்தித்த  கஷ்டமான  கேஸ்  டீட்டெய்ல்ஸ்  கேட்கிறார். அவரும்  சொல்கிறார். அந்தகதைதான்  படத்தின்  கதை 

  நாயகன் ,  தன்   மனைவி ,  இரு  பெண்  குழந்தைகள் , அம்மா  உடன்  வசித்து  வருகிறார். ஊரில்  ஒரு  புது  பங்களா  விலைக்கு  வாங்கி  அங்கே    குடி  போகிறார். அங்கே  அமானுஷ்ய  சம்பவங்கள்  நடக்கின்றன. வீட்டை  விற்று  விடலாம்  என  முடிவு  எடுக்கும்போது  வீட்டைக்காலி  செய்தாலோ , விற்று  விலகினாலோ விபரீதங்கள்  ஏற்படும்  என  அன்னம்மா  எச்சரிக்கிறார். நாயகன்    அவர்  வாக்கை  மீற  நினைக்கும்போது  நாயகனின்  அம்மா  மர்மமான  முறையில்  இறக்கிறார்.இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


டெம்ப்ளேட்  ஆன  பேய்க்கதை  ஃபார்முலாதான். ஊருக்கு  ஒதுக்குப்புறமான  இடத்தில்  ஒரு  பங்களா  இருக்கும், அங்கே  புதிதாகக்குடி  வருபவர்கள்  அமானுஷ்ய  அனுபவங்களை  சந்திப்பார்கள் , பேய்க்கு  ஒரு  ஃபிளாஸ்பேக்  இருக்கும், பேயின்  ஆசையை  நிறைவேற்ற  முயற்சிக்கும், யாரையாவது  பழி  வாங்கும், சுபம்.


 இந்த  ஃபார்முலாதான்  காலம்  காலமாக  பேய்ப்படங்களில் திரைக்கதையாக  அடித்துத்துவைத்துக்காயப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்  நாயகன்  ஆக  ஸ்ரீகாந்த்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். விக்கிபீடியாவில்   ஸ்ரீராம்  என  காட்டுகிறது , தெலுங்குப்பட  உலகுக்கு மட்டும்  அந்தப்பெய்ர்  போல் . 56   வயதானவர்  போலவே  தெரியவில்லை . இளமையாக  இருக்கிறார். குட்  பாடி  மெயின்ண்டனன்ஸ்.படம்  முழுக்க  அடக்கி  வாசித்து  இருக்கிறார்


நாயகி  ஆக  குஷி ரவி  நடித்திருக்கிறார். பாந்தமான  , குடும்பப்பாங்கான  தோற்றம். பேய் ஓட்டும்  அன்னம்மாவாக  ஈஸ்வ்ரிராவ் நல்ல  உய்ரம்  என்பதால்  க்ம்பீரமாகத்தெரிகிறார். இவர்  அணி ந்து  வரும்  ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்டும்  ஃபுல்  கவர்  பேக்  நெக்  மாடலும்  அழகு 


சிறுமிகளாக  வரும்  பேபி  சைத்ரா , பேபி  லைஷா  இருவரும்  கச்சிதமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள்

கிருஷ்ணா  சுராஜ் சுராம்பள்ளி  தான்  இசை. பின்ன்ணி  இசை  மிரட்டல்  ஸ்ரிஸ் பிர்சாத்  எடிட்டிங்கில்  149  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . இன்னும்  20  நிமிடங்கள்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம், ரொம்பவே  ஸ்லோவாகப்படம்  நகர்கிறது 


கவி  சித்தார்தா, டோபி ஒஸ்பொர்னே  ஆகிய  இருவரும்  கதை  எழுத  திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர்  சாய்கிரண்  டைடா.சபாஷ்  டைரக்டர்

1  வாய்  பேச  முடியாத  குழந்தையும் , அம்மாவும்  சைகை  பாசையில்  பேசிக்கொள்ளும்  அனைத்துக்காட்சிகளும், கவிதை  , ரசிக்க  வைத்தது 


2  குழந்தை  இரவு  நேரத்தில்  கிணற்றில்  தண்ணீர்  சேந்தும்போது  நாயகன்  அதிர்ச்சியாகப்பார்ப்பதும்  பின்னால்  மாடியில்  அதே  குழந்தை  குடும்பத்துடன்  காட்சி  அளிப்பதும்  ஜெர்க்  அடிக்கும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1  ஈசான்  மூலை  இருக்கும்  வீட்டில்  குடி  இருந்தா  பையன் பிறப்பான்னு  ஒரு ஐதீகம் 


2  பிறப்பு  என்பது  ஆரம்பம்  மட்டும்  அல்ல , இறப்பு என்பது முடிவு  அல்ல 


3  க்டவுளோட  அன்புக்கு  நிகர்  ஆனது  ஒரு  தாயின்  அன்பு  மட்டும்  தான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாய்  புதிய  ஆட்களையோ , திருடனையோ  பார்த்தால்  குரைக்கும், ஆடு  மாதிரி  முட்ட  வருமா?  ஓப்பனிங்  சீன்லயே  கார்  கதவை  முட்டுது ( கிராஃபிக்ஸ்  நாய்) - இது  நாய்  மாதிரி  இல்லை , வேறு  ஏதோ   ஜந்து  என  சமாளிப்பு  டயலாக்  வேற


2  நாயகன் இரவில்   இருட்டில்  நடக்கும்போது  அரிக்கேன்  விளக்கைப்பிடித்துச்செல்கிறார். அதை  அவர்  முகத்துக்கு நேராக லைட்டிங்  படும்படி  ஏன்   பிடித்திருக்கிறார்? கைகளைத்தொங்கப்போட்டபடி  தானே  செல்வார்கள் ?


3  புதிதாகக்குடி  வந்த  வீட்டில்  நாயகன், நாயகி  இருவரும்  தனி  ஒரு  ரூம்,  குழந்தைகள்  இருவரும்  தனி  ஒரு  ரூமில்  இருக்கிறார்கள் . பொறுப்பான  பெற்றோர்  இப்படித்தான்  தனியா  விடுவாங்களா?  ஃபாரீனில்  தான்  அப்படி  தனித்தனி ரூம்,  இந்தியாவில் ஒரே  ரூமில்  தானே  இருப்பார்கள் ?


4  பேய்  பயம் , கனவு  என ஏதோ  ஒரு  காரணத்துக்காக  குழந்தை  பயந்து  கத்திய  பின்பும்  ஒரே  ரூமில்  படுக்காமல்  தனித்தனி  ரூமில்  படுக்கிறார்கள்

5  நாயகன்  ஒரு  தனியார்  ரைஸ் மில்லில்  அக்கவுண்ட்டண்ட்  ஆக  இருக்கிறான், அவன்  குடி  இருக்கும்  வீடு  பெரிய  பங்களாவாக  இருக்கிறது . ஒரு  அர்சு  ஊழியர்  தான்  அவ்ளோ  பெரிய பங்களா   வாங்க  முடியும் 


6  நாயகி  ஆறு  மாத  கர்ப்பமாக   இருக்கிறார். அபார்ஷன்  பண்ணி  விடலாமா  என  கேட்கிறார். 3  மாதங்கள்  தாண்டினாலே  அது  ரிஸ்க்  ஆச்சே? அடுத்த  காட்சியிலேயே  நிறை  மாசமா  இருக்கீங்கனு  ஒரு  டயலாக்  வேற 


7   நாயகன்  கிணற்றில்  தவறி  விழுந்து  இரவு பூரா  உயிரைக்கையில்  பிடித்துக்கொண்டு  இருக்கிறான். விடிந்ததும்  அங்கே  வரும்  நாயகி  டக்னு  நாயகனைக்காப்பாற்ற  முயற்சிக்காமல்  நாயகனைக்கேள்வி  கேட்டுக்கொண்டிருக்கிறாள் . எல்லா  ஊர்லயும், எல்லா  பொண்டாட்டிங்களும்  ஒரே  மாதிரி  தான் இருக்காங்க 

8  நாயகன்  இரவில்  ஒரு ரூமில்  மாட்டிக்கொள்கிறான். உடனே  நாயகியோ , அம்மாவோ அக்கம்  பக்கம்  ஓடிப்போய்  உதவி  கேட்காமல்  இரவு  முழுக்க  அவனை  தனியே  இருக்க  விட்டு  அடுத்த  நாள்  காலையில்  போலீஸ்  ஸ்டேசன்  போறாங்க 


9  மர்மம்  ஆன  முறையில்  வீட்டில்  இறந்து  கிடக்கும்  தன்  அம்மா  வை  போஸ்ட் மார்ட்டம்  செய்ய  முயற்சிக்கவே  இல்லையே?  என்ன  காரணம்?>னு  தெரிஞ்சுக்க  ஆர்வம்  இல்லையா? 


10  நாயகன், நாயகி  , குழந்தைகள்  இருவர்  அனைவரும்  பாட்டி    இறந்ததால்  சுடுகாட்டில்  இருக்கும்;போது  அன்னம்மா  நாயகன்  வீட்டுக்குள்  இருப்பது  எப்படி ?  சாவி  ஏது ? 


11  பேய்  ஓட்டும்  அன்னம்மாவிடம்  நாயகி என்  குழந்தைகளுக்கு  ஏதாவது  ஆகிடுமோன்னு  தான்  பயம்மா  இருக்கு  எனும்போது  அன்னம்மா  டோண்ட்  ஒர்ரி,  குழந்தைகளுக்கு  எதுவும்  ஆகாது  என்பவர்  அடுத்த  காட்சியிலேயே  உன்  இரண்டாவது  குழந்தையை  ஜாக்கிரதையாப்பார்த்துக்கோ  என்கிறார். அது  ஏன் ? 

12  பேய்  ஓட்டும்  அன்னம்மா  நாயகனிடம்  தன்  அசிஸ்டெண்ட்ஸ்  இருவரை  அறிமுகப்படுத்தும்போது  இவனுக்க்  16  மொழிகள் தெரியும்  என்கிறார் அவ்ளோ நாலெட்ஜ்  உள்ளவர்  ஏன்  அசிஸ்டெண்ட்டா  3000  ரூபா  சம்பளத்துக்கு  அன்னம்மாவிடம்  வேலை  செய்யனும் ?   ட்யூஷன்  சொல்லிக்க்டுத்தே  சம்பாதிக்கலாமே? 


13   ஃபிளாஸ்பேக்கில்  வரும்  கர்ப்பிணிப்பெண்  கொலைக்காட்சி  கர்ண  கொடூரம். அப்பாவே  சொந்த  மகள்களைக்கொல்வது  எல்லாம்  ஓவர். காட்சிப்படுத்திய  விதமும்  பயங்கரம்

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  ஏ  படம் ., 18+  காட்சிகள்  இல்லை , ஆனால்  ஃபிளாஸ்பேக்கில் ஒரு  கொடூரமான  கொலைக்காட்சி  இருக்கிறது சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பேய்ப்பட  விரும்பிகள்  பார்க்கலாம்.lஸ்லோவாகத்தான்  திரைக்கதை  நகரும். உண்மை  சம்பவம்  என்பதால்  ஆர்வமாகப்பார்த்தேன். ரேட்டிங்  2 / 5 


Pindam
Theatrical release poster
Directed bySaikiran Daida
Written bySaikiran Daida
Story byKavi Siddhartha
Toby Osborne
Produced byKalaahi Media
Yeshwanth Daggumati
Prabu Raja
StarringSriram
Kushee Ravi
CinematographySathish Manoharan
Edited bySirish Prasad
Music byKrishna Saurabh Surampalli
Production
company
Kalaahi Media
Release date
  • 15 December 2023
Running time
02hrs:39mins
CountryIndia
LanguageTelugu

0 comments: