Wednesday, February 21, 2024

THE 40 YEAR OLD VERGIN (2005)ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ அமேசான் பிரைம் + ஜியோ சினிமாஸ் 18+

   


36  மில்லியன்  டாலர்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  175  மில்லியன்  டாலர்கள் வசூலித்த  மெகா  ஹிட்  படம்  இது . சிறந்த  காமெடிப்படம்  விருது  பெற்றது . சிறந்த  நடிகர் , சிறந்த  நடிகை  உட்பட  16  விருதுகளை  வென்ற  படம். இப்போது  பார்ப்பதற்கு  படம்  கொஞ்சம்  ஸ்லோ  மாதிரி  தெரிந்தாலும்  இது  ரிலீஸ்  ஆன  கால   கட்டத்தில்  ரசிகர்களால்  கொண்டாடப்பட்ட  படம் என்பதால்  இதை  பதிவு  செய்கிறேன் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  எலக்ட்ரானிக்ஸ்  கடையில் ஸ்டாக்  சூப்பர்  வைசர்   ஆகப்பணி  புரிகிறார். சக  பணியாளர்களுடன்  பேசிக்கொண்டு  இருக்கும்போது  தனக்கு  40  வயது  ஆகியும்  இதுவரை  எந்தப்பெண்ணுடனும்  உறவு  வைத்ததில்லை  என்று  கூறுகிறார். இவ்வளவு  வயது  ஆன  பின்னும்  அவர்  பிரம்மாச்சாரியாகவே  இருப்பதை  அவர்கள்  ஆச்சரியத்துடன்  பார்க்கிறார்கள் 


அடுத்த  நாள்  இந்த  செய்தி  காட்டுத்தீ  போல  அவர்கள்  அஃபீஸ்  முழுக்க  பரவி  விடுகிறது . எல்லோரும் அவரை  கிண்டல், கேலி  கலந்த  புன்னகையுடன்  பார்க்கிறார்கள் . நாயகனின்  லேடி  பாஸ்  கூட  அவர் பால்  கவரப்பட்டு  ஆஃபர் தருகிறார்.  ஆனால்  நாயகன்  அந்த  ஆஃபரை  ஏற்கவில்லை 


நாயகனுக்கு  ஒரு  45  வயது  பெண்ணுடன்  பழக்கம்  ஆகிறது . அவருக்கு  20  வயதான  ஒரு  மகள் , 18 , 7  வயதில்  ஒரு  மகள்  ஆக  மொத்தம்  3  மகள்கள்  உண்டு 


இப்போது  நாயகன்  யாருடன்  தன்  முதல்  உறவை  வைத்துக்கொள்கிறான்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நண்பர்களுடன்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள் , பெண்களுடன்  நிகழும்  சம்பவங்கள்  எல்லாவற்றிலும்  காமெடி  தான்  கலந்து  இருக்கிறது 


 நாயகன்  ஆக  நடித்த ஸ்டீவ்  கேரல்  கச்சிதமாக  நடித்திருக்கிறார் .  அவரது  அப்பாவித்தனமான  முகம் ஒரு  பிளஸ் 


நாயகி  ஆக  நடித்த கேத்ரீன் கீர்  சிறப்பான  நடிப்பு . நாயகனை  விட  வயதில்  சீனியர்  ஆக  இருந்தாலும்  அவர்களுக்கு  இடையேயான  கெமிஸ்ட்ரி  குட் 


நாயகியின்  மகளாக  நடித்தவர்க்கு  அதிக  காட்சிகள்  இல்லை  என்றாலும்  வந்தவரை  வசீகரிக்கிறார். நாயகனின்  லேடி  பாஸ்  ஆக  வருபவர்  சுமார்  ரகமே . 


தியேட்டரிக்கல்  ரிலீஸ்  வெர்சனில்  113 நிமிடங்களூம் , ஓடி டி ரிலீஸ்  படம் ன்133  நிமிடங்களும்  டைம்  ட்யூரேசன் 


ஜட்  அப்டோவ்  என்பவர்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  தயாரித்து  இருக்கிறார்


இசை  , ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின்  டைட்டிலும், கதைக்கருவும்,  திரைக்கதையும்  ஒரு  மார்க்கமாக  இருந்தாலும்  காட்சிகள்  கண்ணியம் 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என  எதுவும்  இல்லை  என்றாலும்  சுவராஸ்யமான  திரைக்கதை  நம்மை  கவனிக்க  வைக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 


1    நாற்பது  வயது  என்பதற்காக  கவலைப்படத்தேவை  இல்லை , 40  என்பது  அடுத்து  வரும்  60க்குள்  வாழ  வழி  வகை  செய்யும்  20 


2  ஒரு  இளம்பெண்  வலிய  உன்னிடம்  வந்து  அவள்  ஃபோன்  நெம்பரைத்தந்தாள்  எனில்  அவள்  தன்னையே  தந்தாள்  என்று  தான்  அர்த்தம் 


3  பெரும்பாலான  ஆண்களுக்கு  பெண்களிடம்  என்ன  பேச  வேண்டும்  ?எப்படிப்பேச  வேண்டும்  என்றே  தெரிவதில்லை 


4   நீங்க  என்ன  பேசப்போறீங்க? என்பது  பற்றி  பெண்களுக்கு  அதிக  அக்கறை  இல்லை , எப்படி  நடந்துக்கறீங்க? என்பதுதான்  ரொம்ப  முக்கியம் 


5   அவர்  நம்மை  விட  10  வயது  சீனியர்  என்றாலும்  நம்மை  விட  இளைமையாகத்தோன்ற  அவர்  ஒரு  பிரம்மச்சாரி  என்பதுதான்  காரணம்


6  கேலி ., கிண்டல் , நக்கல்  பண்ணுவதை  நான்  இன்னொரு  மொழியாகவே   கற்றிருக்கிறேன்


7  என்  ஆளுக்கு  3  பொண்ணுங்க  இருக்காங்க . அந்த  3  பொண்ணுங்களில்  ஒரு  பெண்ணுக்கு  ஒரு  குழந்தை  இருக்கு 


 டேய் , சுத்தி  வளைக்காத , நீ  லவ் பண்ற  ஆள்  ஒரு  பாட்டி 


8 மிஸ்டர்@  நீங்க  ஒரு  பிரம்மச்சாரியா?


 ஆமா 

  உங்களுக்காக  என்  அறைக்கதவு  எப்போதும்  திறந்தே  இருக்கும்?


 என்னங்க  இது?  அரசியல்  கட்சிகள்  தேர்தல்  நேரத்தில்  சொல்ற  மாதிரி பேசறீங்க ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   என்ன  தான்  காமெடிக்காக  என்றாலும்  ஒரு  ஆண் 40  வயது  வரை  வெர்ஜின்  ஆக  இருக்கிறான்  என்பது  நம்பவே  முடியவிலை .  மிக  மிக  அரிதான  கேரக்டர்  டிசைன்  தான். கதைகளில்  மட்டுமே  பார்க்க  முடியும் 


2  தனக்கு  சம்பளம்  தரும்  லேடி  பாஸ்  வலிய  அழைப்பு  விடுத்தும்  நாயகன்  அதை  ஏன்  மறுக்கிறார்  என்பதற்கு  சரியான    காரணம்  சொல்லப்படவில்லை


3   இந்தக்கதை  ஒரு  மணி  நேரத்தில்  முடிக்க  வேண்டிய  கான்செப்ட். சீரியல்  மாதிரி  இழுத்து  விட்டார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  18+ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ரொமாண்டிக்  காமெடி  தான்.  பார்க்கலம். ரேட்டிங்  2.5 / 5 


The 40-Year-Old Virgin
The title character, Andy, who is smiling and has text in front of him
Theatrical release poster
Directed byJudd Apatow
Written by
Produced by
Starring
CinematographyJack N. Green
Edited byBrent White
Music byLyle Workman
Production
company
Distributed byUniversal Pictures
Release date
  • August 19, 2005 (United States)
Running time
116 minutes
133 minutes (Unrated)
CountryUnited States
LanguageEnglish
Budget$26 million
Box office$177.4 million

0 comments: