Wednesday, February 07, 2024

ANIMAL (2023)- ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் ட்ராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 100  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  1000  கோடி  வசூலை  அள்ளிக்குவித்த  படம்.. 201  நிமிடங்கள்  ஓடும்  இந்தப்படம்  குடும்பத்துடன்  பார்க்கத்தகுதி  அற்ற  படம் .


போற  பாதை  எப்படி  இருந்தாலும்  போய்ச்சேரும்  இடம்  சரியானதாக  இருக்க  வேண்டும்  என  பெரியவர்கள்  சொல்வார்கள் . இந்தப்படத்தின்  கதைக்கரு  என்னவோ  அதீதமாக  அப்பா  மேல்  பாசம்  வைத்திருக்கும்  மகனின்  கதை  தான். ஆனால்  அட்டென்சன்  சீக்கிங்க்காகவோ , அல்லது  யாரும்  சொல்லாத  கோணத்தில்  சொல்கிறேன்  என்பதற்காகவோ இயக்குநர்   கொஞ்சம்  கேவலமான  சிந்தனையுடன்  படம்  எடுத்திருக்கிறார். இப்படி  எல்லாம்  ஒரு  கேரக்டர்  டிசைன்  இருக்கும்  என  நீங்கள்  கற்பனை  கூட  செய்து  பார்த்திராத  மட்ட  ரகமான  ஆள்  பற்றிய  கதை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  மிகப்பெரிய  கோடீஸ்வரன்  கம்  தொழில்  அதிபர் .  தன்    மகன்  மிகவும்  முரட்டு  சுபாவம்  உள்ளவன்  என்று  தெரிந்து  அப்பா  மகனை  கொஞ்சம்  கடுமையாகவே  வளர்க்கிறார். நாயகன்   அப்பா  மேல்  அதீத  அன்பு  வைத்திருக்கிறான். ஒரு  கட்டத்தில்  தன் அப்பாவைக்கொல்ல  யாரோ  முயல்கிறார்கள்  என்பதை  கண்டறிந்த  பின்  அந்த  சதிகாரர்கள்  யார்? என்பதை  கண்டுபிடிக்க  என்ன  எல்லாம்  செய்கிறான் ? அப்பா  மகன்  பாசம்  என்ன  ஆனது  என்பதை  எல்லாம்   இழுத்து ,  நீட்டி  முழக்கி  சொல்லி  இருக்கிறார்கள் 


 இந்த  மெயின்  கதையை  மட்டும்  சொன்னால்  சுவராஸ்யமாக  இருக்காது  என்பதற்காக  நாயகனின்  இரு  காதல்  கதைகளையும்  சேர்த்து  சொல்லி  இருக்கிறார்கள் . நாயகன்  முதலில்  காதலித்து  மணம்  செய்து கொண்ட  பெண்ணுடன்  வாழ்வது  ஒரு  கதை   நாயகனுக்கு  ஒரு  விபத்தில்  அடிபட்டு  ஹார்ட்  சர்ஜரி  செய்த  போது   நாயகனின்  இதய  மாற்று  அறுவை  சிகிச்சைக்கு  இதய  தானம்  கொடுத்தவனின்  மனைவி  இப்போது  நாயகனை    நெருங்கி  வர  முதல்  சம்சாரத்தை  அம்போ  என  விட்டு  விட்டு  நாயகன்  இரண்டாவது  சம்சாரம்  பின்  செல்வதும்  இரு  சம்சார  சாகரங்களுக்கு  இடையே  அவன்  வாழ்க்கை  என்ன  ஆனது  என்பதையும்  சொல்வது  எக்ஸ்ட்ரா  திரைகக்தை 


  நாயகன்  ஆக  ரன்பீர்  கபூர்  அட்டகாசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்,    முரட்டுத்தனத்தின்  எல்லையை  காட்ட  வேண்டிய  இடத்தில்  எல்லாம்  சி  செண்ட்டர்  ரசிகர்களின்  கை  தட்டலை  அள்ளிக்கொள்கிறார்


நாயகனின்  அப்பாவாக  அனில்  கபூர்  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார். பல  இடங்களில்  இவரது  நடிப்பு  அபாரம் 


நாயகி  ஆக  நாயகனின்  காதல்  மனைவியாக  ராஷ்மிகா    மந்தனா  75 %  கிளாமருடன்  25 %  நடிப்புடன்  தன்  பங்கை  கச்சிதமாக  நிறைவேற்றி  இருக்கிறார்


நாயகி  நெம்பர்  2  ஆக  இரண்டாவது  மனைவியாக  த்ரிப்தி டிமிரி  நடித்திருக்கிறார். கலக்கல்  நடிப்பு , அசத்தல்  கிளாமர் 


இவர்கள்  போக  நட்சத்திரப்பட்டாளமே  படம்  நெடுக  உண்டு 


இசை  அமைத்திருப்பவர்  ஏ ஆர்  ரஹ்மான்  என  டைட்டில்  சொன்னாலும்  இசை  அமைப்பாளர்கள்  பட்டியலே  10  பேர்  இருப்பார்கள்  போல . பிஜிஎம்  அதகளம் 


சந்தீப்  ரெட்டி  தான்  கதை .திரைக்கதை , இயக்கம்,  சவுரவ்  குப்தா  தான்  வசனம்  
சபாஷ்  டைரக்டர்


1   விஜய்  நடித்த  வாரிசு  படமே  ஆல்ரெடி  வந்த  சில  தெலுங்குப்படங்களின்  பட்டி  டிங்கரிங்  வெர்சன்  தான்.  அந்த  வாரிசு  கதையையே  பட்டி  டிங்கரிங்  பண்ணிய  சாமார்த்தியம் 


2  அர்ஜூன்  ரெட்டி  படத்தில்  வரும் முரட்டுத்தனமான  கேரக்டர்  டிசைனை  உல்டா  செய்தது 


3   ஆல்ஃபா  மேல் , பீட்டா  ஃபீமேல்  என  என்னென்னெமோ  சொல்லி  ஆணாதிக்கத்தை  ஓவர்  டோசாக  கொடுத்து  பெண்களைக்கடுப்பேற்றியது


  ரசித்த  வசனங்கள் 


1  சரித்திரம்  நமக்குக்கத்துக்குடுத்தது  ஒண்ணுதான் , எப்போ  வேணா  யார்  வேணா  யாரை  வேணா  தாக்கலாம் 


2  இங்கே  இத்தனை  பேர்  இருக்கும்போது  என்னை  மட்டும்  அவ  ஏன்  அண்ணா  அப்படினு கூப்பிடனும் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கடந்த  20  வருடங்களாக  எந்த  வித  போக்குவரத்தும்  இல்லாத  பங்காளிகள்  நாயகனுக்கு  ஒரு  பிரச்சனை  என்றதும், அவர்  அழைக்கிறார்  என்பதற்காக  ஒன்று  கூடி  திரண்டு  வர  தயாராக  இருப்பது  டிராமா  பார்ப்பது  போல்  உள்ளது


2  நாயகனின்  அப்பா  போல்  உருவத்தோற்றம்  கொண்ட  ஆளை  அழைத்து  வரும்  நாயகன்  இந்த  க்ளோனிங்  ஆள்  மேட்டர்  யாருக்கும்  தெரியக்கூடாது  என  25  பேர்கள்  கொண்ட  கூட்டத்திடம் சொல்கிறான்.  இதை  தனிமையில்  அப்பாவிடம்  மட்டுமே  சொல்லி  இருக்க  வெண்டும் 


3  க்ளோனிங்காக  நடிக்க  சம்மதிக்கும்  ஆளுக்கு  தன்  உயிருக்கு  ஆபத்து  என்பது  தெரியாதா?  எப்படி  ஒத்துக்கொள்கிறார்? அதற்கான  டீலிங்க்  என்ன? டீட்டெய்லிங்க்  இல்லை 


4    தங்கள்  ஃபோன்  ஒட்டுக்கேட்கப்படும்  என்பது  தெரிந்தும்  மடச்சாம்பிராணி  வில்லன்கள்  கொலைக்கான  திட்டம்  பற்றிப்பேசும்போது  பரஸ்பரம்  தங்கள்  பெயர்  சொல்லி  அழைத்துக்கொள்வார்களா? 5  கையில்  கோடாலியுடன் 100  அடியாட்கள்  எதிர்க்க  நாயகன்  தனி  ஒரு  ஆளாக  அத்தனை  பேரையும்  துவம்சம்  செய்வது  காதில்  பூக்கூடை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 18+  காட்சிகள் , வசனங்கள் , திரைக்கதை  அமைப்பு , கேரக்டர்  டிசைன்  எல்லாவற்றிலும்  18+  போதாததற்கு  ஓவர்  வன்முறை 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியல்  ஆக்சன்  மசாலா  என்ற  பெயரில்  ஒரு  மட்டரகமான  , கேவலமான , குப்பைப்படம். இதெல்லாம்  மெகா  ஹிட்  ஆகி  இருக்கே? என   வருந்தத்தான்  வேண்டி  இருக்கிறது. ரேட்டிங்    1 / 5 


Animal
Theatrical release poster
Directed bySandeep Reddy Vanga
Screenplay bySandeep Reddy Vanga
Pranay Reddy Vanga
Suresh Bandaru
Story bySandeep Reddy Vanga
Dialogues bySaurabh Gupta
Produced byBhushan Kumar
Krishan Kumar
Murad Khetani
Pranay Reddy Vanga
Starring
CinematographyAmit Roy
Edited bySandeep Reddy Vanga
Music bySongs:
Pritam
JAM8
Vishal Mishra
Jaani
Manan Bhardwaj
Shreyas Puranik
Ashim Kemson
Harshavardhan Rameshwar
A. R. Rahman
Ajay–Atul
Bhupinder Babbal
Background Score:
Harshavardhan Rameshwar
Production
companies
Distributed byAA Films
Sri Venkateswara Creations
AP International
E4 Entertainment
KVN Productions
Release date
  • 1 December 2023
Running time
201 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget100 crore[2][3]
Box officeest. ₹917.82 crore[4]

0 comments: