Friday, February 02, 2024

கேப்டன் மில்லர் (2024 ) - தமிழ் = சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா )

 


இயக்குநர்  அருண்  மாதேஸ்வரன் டயலாக்  ரைட்டராக 2016ல் ரிலீஸ்  ஆன  இறுதி சுற்று படத்தில்  மனம்  கவர்ந்தார். 2021ல் ரிலீஸ்  ஆன  ராக்கி , 2022ல்  ரிலீஸ்  ஆன  சாணிக்காயிதம்  இரண்டு  படங்களுமே  அவரை  இயக்குநராக  அடையாளம்  காட்டிய  முதல்  இரண்டு  படங்கள் . இரண்டிலுமே  வன்முறை  தூக்கலாக  இருந்தது . இந்தப்படத்தில்  வன்முறை  குறைவாக  இருந்தாலும்  ஆக்சன்  டிராமா  தான். தனுஷ் , அருண்  இருவருக்குமே  இது  ஒரு  வெற்றிப்படம்

2018ஆம்  ஆண்டிலேயே  இப்படத்திற்கான  திரைக்கதை  எழுதப்பட்டு  சத்யஜோதி  ஃபிலிம்ஸ்  தயாரிப்பதாக  இருந்தது. சில  காரணங்களால்  தள்ளிப்போடப்பட்டது. இப்போது  இப்படத்தின்  வெற்றியால் இதன்  முந்தைய  பாகம், பிந்தைய  பாகம்  உருவாக  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


கோயிலுக்கு  உள்ளே  செல்ல  அனுமதி  மறுக்கப்படும்  பழங்குடி  மக்களுக்காகப்போராடும்  ஒரு  வீரனின்  முயற்சி  தான்  மெயின்  கதை . அதை  எப்படி  எல்லாமோ  சுற்றி  வளைத்துக்கதை  சொல்லி  இருக்கிறார்கள் 


நாயகன்  பழங்குடி  இனத்தைச்சேர்ந்தவர்.கதை  நடக்கும்  கால கட்டம்  1947 க்கு  முன். ஜமீன் தாரர்கள் ,நிலக்கிழார்கள்  போன்ற  நம்  நாட்டு  செல்வந்தர்கள்  பழங்குடியினரை  கோயிலுக்குள்  அனுமதிப்பதில்லை . அதனால்  அவர்கள்  மீது  கடுப்பாக  இருக்கும்  நாயகன்  நமக்கான  மரியாதை  கிடைக்க  வேண்டும்  எனில்  மிலிட்ரியில்  சேர வேண்டும்  என  நினைக்கிறார். அதன்படி  மிலிட்ரியில்  சேர்ந்து  ராணுவ  வீரர்  ஆக  பணி  ஆற்றுகிறார். ஒரு  கட்டத்தில்  போராட்டத்தில்  ஈடுபட்ட  நம்  நாட்டு  மக்களையே  சுட  வேண்டி  வருகிறது. அதை  சகிக்காத  நாயகன்  உயர்  அதிகாரியைக்கொன்று  விட்டு  அங்கிருந்து  கிளம்பி  ஒரு  கலகக்காரக்கும்பலுடன்  சேர்கிறார்


ஆங்கிலேயர்களுக்கு  எதிரான  வேலைகளை  செய்கிறார்.ஒரு தலையாக  தான்  காதலித்த  பெண்ணின்  கணவரின்  மரணத்துக்கும், தனது  சகோதரனின்  மரணத்துக்கும்  காரணமாக  இருந்த  ஆங்கிலேய  அரசாங்கத்துக்கு  சிம்ம  சொப்பனமாக  விளங்கி  அவர்களுக்கு  தண்ணி  காட்டுகிறார். அவரது  ஆக்சன்  அதகளம்  தான் மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  தனுஷ்  கலக்கி  இருக்கிறார். மூன்று  விதமான  கெட்டப்களில்  வருகிறார். எல்லா  கெட்டப்களும்  குட் .


நாயகனின்  அண்ணன்  ஆக  கன்னட  நாயகன்  சிவராஜ்  குமார்  பின்னிப்பெடல்  எடுத்து  இருக்கிறார். ஜெயிலர்  படத்துக்குப்பின்  இனி  அடிகக்டி  தமிழ்ப்படங்களில்  தலை  காட்டுவார்  போல 


நண்பராக  தெலுங்கு  நாயகன்  சந்தீப்  கிஷன்  கச்சிதம் .  வழக்கமாக  குணச்சித்திரக்கதாபாத்திரத்தில்  கலக்கும்  காளி  வெங்கட்  இதில்  துரோகி  குமாஸ்தாவாக  நடித்து  வில்லத்தனம்  காட்டுகிறார்


அபியும்  நானும்  பட  புகழ்  +  பொன்னியின்  செல்வன்  திரைக்கதை ஆசிரியர்  குமாரவேல்  போராளி  ஆக  வீரம்  காட்டி  இருக்கிறார். 


மன்னர்  பரம்பரை  வில்லன்களாக  ஜெயப்பிரகாஷ் , ஜான்  கொக்கன்  இருவரும்  ஆர்ப்பாட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


ப்ரியங்கா  அருள்  மோகன், அதிதி  பாலன்  என  இரு  நாயகிகள்  இருந்தாலும்  இருவருமே  நாயகனுக்கு  ஜோடி  இல்லை  என்பதால்  ரொமாண்டிக்  காட்சிகள்  இல்லை 


157  நிமிடம்  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  படத்தை  எடிட்  செய்து  இருக்கிறார்  நாகூரான்  ராமச்சந்திரன் 

சித்தார்த்த  நுனி  யின்  ஒளிப்பதிவில்  ஆங்கிலப்படங்களுக்கு  இணையான  பிரம்மாண்ட  காட்சிகள்  இடம் பெற்றிருப்பது  சிறப்பு 

ஜி வி  பிரகாஷ்  குமார்  இசையில்    இரு  பாடல்கள்  ஹிட்  ஆகி  உள்ளன, பின்னணி  இசை  அருமை 

மதன்  கார்க்கியுடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இக்ருக்கிறார்  அருண்  மாதேஸ்வரன்சபாஷ்  டைரக்டர் ( அருண்  மாதேஸ்வரன்) 


1  பெண்கள்  என்றால்  இன்ன  வேலைகள்  தான்  செய்ய  வேண்டும்  என்ற  நியதியை  உடைத்து  ஒரு  காட்சியில்  நாயகன்  பாத்திரம்  கழுவுவது  போலவும், நாயகி  துப்பாக்கியைதுடைப்பது  போலவும்  மாறுபட்ட    காட்சியை  வைத்த  விதம் 

2     அந்தக்கால  கட்ட  ஆடை  வடிவமைப்புகள்  அரங்க  அமைப்புகள்  என  ஆர்ட்  டைரக்சன்  அட்டகாசம், அதே  போல்  ஜி வி  பிரகாஷின்  பின்னணி  இசை  வேற  லெவல் 


  ரசித்த  வசனங்கள் 


1  பெண்கள்  சொல்வதை  ஆண்கள்  கேட்கனும்னா  பெண்கள்  அதிகாரத்தில்  இருக்கனும் 


2  அவங்க  கொடுக்கும்  மரியாதை  தான் எனக்கான  சுதந்திரம் 


3  வாழ்க்கைல  நாம்  எடுக்கும்  முடிவுகள்  தப்பானா  அதை  விதினு  சொல்லி  கடவுள்  மேலே  பழியைப்போட்டுடுவோம், ஆனா  அது  கடவுளோட  முடிவா? நம்மோட  முடிவா?


4  எப்படிப்பட்ட  வீரனும்  தன்னோட  முதல்  போரில்  பயப்படுவான், ஆனா  அந்த  பயத்தையும்  மீறி  சண்டை  போட்டு  ஜெயிப்பதுதான்  வீரனுக்கு  அழகு 


5  கடுதாசி  எழுத  நமக்குன்னு  ஒரு  ஆள்  இருப்பதற்குக்கூட  ஒரு  குடுப்பினை  வேண்டும் 


6  ஒரு  நல்ல  பட்டாளத்தான்  கமாண்டர்  சொல்படி  கேட்பான்

ஆனா  ஒரு  நல்ல  வீரன்  அவன்  மனசாட்சி  சொல்படி  கேட்பான்


7  ஒரு  கெட்டவனைக்கொன்னிருக்கே? அப்போ  நல்லவனாத்தானே  இருப்பே? 


 ஏன்? ஒரு  கெட்டவன்  இன்னொரு  கெட்டவனைக்கொல்லக்கூடாதா? 


8  கோயில்  சிலையை  வெள்ளைக்காரன்  திருடிட்டான், இது  நம்ம  மானப்பிரச்சனை , அதை  நாம்  மீட்கனும், உன்  உதவி  வேணும்


 திட்டம்  போட்டு  சொல்லி  அனுப்பறேன், அதுவரை  மானம்  இல்லாம  இருங்க 


9 பசியோடு சுத்திட்டு  இருக்கும்  சிங்கத்தை  கழுதைப்புலி  ஏமாற்றி  இரையைத்தூக்கிட்டுப்போலாம்னு  நினைக்கும்போது  ஒரு  ஓநாய்  ரெண்டையும் ஏமாற்றி  இரையைத்தூக்கிட்டா  என்ன ஆகும்? 


ஓநாய்க்கு  ஆபத்து?


 இல்லை , ஒரு  ஓநாய்க்காக  அந்த  ஓநாய்க்கூட்டமே  உயிர்  இழக்க  வேண்டி இருக்கும் 

10  போக  வேண்டாம்னு  சொல்லலை , முதல்  ஆளா  போக  வேணாம்கறேன்


11  நாம  எல்லாம் சாமி  இருக்கும்  கருவறைக்குள்ளே  போகலாமா?


 போகக்கூடாதுனு  எந்த  சாமியும்  சொல்லலையே? 


12  ”, ‘நீ யாரு... உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்’

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மிலிட்ரியில்  சேரும்  நாயகனுக்கு  ட்யூட்டியில்  மக்களைக்கொல்ல  நேரிடும்  என்பது  தெரியாது  என்று  காட்டுவது  அருக்காணி  ஹோட்டலில்  அசைவம் தானா? என  அதிர்ச்சி  ஆவதுக்கு  சமமான  லாஜிக்  சொதப்பல்


2  தன்  சொந்த  மக்கள்  பலி  ஆவதை  விரும்பாத  நாயகன்  அண்ட்  டீம்  குறி  தவறி  கையிலோ , காலிலோ  சுடலாமே? ஏன்  நெஞ்சுக்குக்குறி  வைத்துக்கொல்ல  வேண்டும்? குற்ற  உணர்ச்சியில்  துடிக்க  வேண்டும் ?


3  மிலிட்ரி  வீரர்  ஆக  நாயகன்  இரண்டு  அல்லது  மூன்று  முறை  சுடுவதாகத்தான்  காட்டுகிறார்கள் , ஆனால்  நீ  மட்டுமே  300  பேரைக்கொன்றிருப்பே  என  நாயகி  பேசுவது  அபத்தம். அதுக்கு  மிஷின் கன் இருந்தாதான்  சாத்தியம் 


4  ஹீரோவுக்கான  பிஜிஎம்,ல் பில்டப்  இசை  இவை  எல்லாம்  ஆங்காங்கே  இருந்தால்  தான்  மாஸ்  ஆக  இருக்கும், ஓப்பனிங்  சீனில்  இருந்து  க்ளைமாக்ஸ்  வரை  டொம்  டொம்  என  பிஜிஎம்  போட்டு  காது  வலி  வந்ததுதான்  மிச்சம் 


5  இந்தக்கதையை  எல்லா  செண்ட்டர்  ரசிகர்களுக்கும்  புரியும்படி   நேரடியான  கதையாகவே  சொல்லி  இருக்கலாம்,  சும்மா  மாற்றி  மாற்றி  ஃபிளாஸ்பேக் , தற்காலம்  என  குழப்பி  அடித்து  இருக்கத்தேவை  இல்லை 


6  ஆங்கிலேயர்களிடம்  மிஷின்  கன்  மாதிரி  நவீன  ரக  துப்பாக்கிகள்  இருக்கின்றன  , படை  பலமும்  அதிகம், வெறும்  30  பேரை  வைத்துக்கொண்டு  நாயகன்  அவர்களுக்கு  தண்ணி  காட்டுவது  நம்பும்படி  இல்லை , குறிப்பாக  அந்த  கோயில்  சொத்தைக்கொள்ளை  அடிக்கும்  காட்சி  காதில்  பூ 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்= வன்முறை  மட்டும்  தான் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தனுஷ்  ரசிகர்களுக்கு  கொண்டாட்டமான  படம் , பொது  ரசிகர்களுக்கு  ஒரு  சராசரியான  ஆக்சன்  படம் , ரேட்டிங்  2.75 / 5 


Captain Miller
Theatrical release poster
Directed byArun Matheswaran
Screenplay byArun Matheswaran
Madhan Karky
Story byArun Matheswaran
Produced by
  • Sendhil Thyagarajan
  • Arjun Thyagarajan
Starring
CinematographySiddhartha Nuni
Edited byNagooran Ramachandran
Music byG. V. Prakash Kumar
Production
company
Distributed bysee below
Release date
  • 12 January 2024
Running time
157 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget50 crore[2]
Box office23 crore

0 comments: