Monday, February 26, 2024

SAPALA (2024) - மராத்தி - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம்

 


சபாலா  என்னும்  மராத்தி  வார்த்தைக்கு  அனுகூலம்  என்று  அர்த்தம் . 26/1/2024  அன்று தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆனபோது  சரியாகப்போகவில்லை . ஆனால்  இந்தக்கதையை  நல்ல  எடிட்டர் , திறமையான  இயக்குநரிடம்  கொடுத்தால்  இதை  வெற்றிப்படம்  ஆக்கலாம்  எனத்தோன்றுகிறது . இப்போது  அமேசான்  பிரைம் ஓடிடி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  பிரபலமான  ஒரு   சினிமாப்பட  ஸ்க்ரிப்ட்  ரைட்டர் . அவரது  சமீபத்திய  படங்கள்  அட்டர்  ஃபிளாப்  ஆகி  விட்டன. அதனால்  அவர்  டிப்ரஷனில்  இருக்கிறார். அவரது  மனைவி   ஆன  நாயகி பெரிய  கோடீஸ்வரி. மனைவிக்கு  சொந்தமான  பங்களா  வில்  தான்    நாயகன்  குடி  இருக்கிறார். அந்த  வீட்டில்  ஒரு  பணீப்பெண்  இருக்கிறார்


  அவரிடம்  கடந்த  இரு  நாட்களாக  நாயகன்  எரிந்து  எரிந்து  விழுகிறார். காரணமே  இல்லாமல்  கோபப்படுகிறார். நாயகி  ஒரு  ஹார்ட்  பேஷண்ட் .   சுகர்  பேஷண்ட். தன்  மனைவிக்கு  சுகர்  என்பதை  அறிந்து  தனக்குப்போடும்  டீ  கூட  சுகர்  இல்லாமல்  இருக்க  வேண்டும்  என்றே  நாயகன்  விரும்புகிறார். சுகர்  போட்டு  பணிப்பெண்  தந்த  டீயை  நாயகன்  கீழே  கொட்டி  விடுகிறார்.


  நாயகன் பணீப்பெண்ணிடம்  நீ  இரண்டு  நாட்கள்  லீவ்  எடுத்துக்கோ  என்று  அவளை  வீட்டுக்கு  அனுப்பி  விடுகிறார். நாயகன்  புதிதாக ஒரு  கதை  ரெடி  பண்ணுகிறார். அதற்கு  ஃபீல்டு  ஒர்க்  பண்றேன் பேர்வழி  என  அவர்  ஒரு  குழி  தோண்டி  எதையோ  புதைக்கிறார். கத்தி , கோடாலி , துப்பாக்கி என  ஆயுதங்களை  வீட்டு  சுவரில்  மாட்டி  வைக்கிறார், மேஜிக் மேன்  இடம்  இருந்து ஒரு  லட்சம்  ரூபாய்  செலவு  செய்து  ஒரு  கை  விலங்கை  ஆன்  லைனில்  ஆர்டர்  செய்து  வர  வைக்கிறார்


 நாயகனின்  இந்த  நடவடிக்கைகள்  நாயகிக்கு  பயத்தை  ஏற்படுத்துகிறது . தன்  வக்கீல்  நண்பருக்கு  ஃபோன்  செய்து   தன்  வீட்டுக்கு  வர  வைக்கிறார்.நடந்ததை  எல்லாம்  சொல்கிறார். ஆனால்  வக்கீல்  நண்பர்  அதை  சீரியசாக  எடுத்துக்கொள்ளவில்லை 


 நாயகனிடம்  ஜூனியர்  ஆக  ஒரு  புது  ரைட்டர்  வந்து  சேர்கிறான். ஆக்சுவல்  ஆக  அவனது  கதையைத்தான்  நாயகன்  இப்போது  ரெடி  செய்து  ஒரு  கதை  தயார்  செய்யப்போகிறார்.


புதுக்கதை  ஸ்டோரி  டிஸ்கஷன்  செய்யும்போது  டெமோ  என்ற  பெயரில் நாயகன்  தன்  மனைவியின்  கண்  முன்  தன்  அசிஸ்டெண்ட்  ரைட்டரைக்கொன்று  விடுகிறார்.  மனைவிக்குப்பெரிய  அதிர்ச்சி . அன்று  இரவு   பெட்ரூமில்  நாயகனும், நாயகியும்  படுத்திருக்கும்போது  இறந்ததாகக்கருதப்பட்ட  ஆள்  உயிருடன்  வருகிறான்.  வந்து  நாயகனான  ரைட்டரை  சுடுகிறான். இதைப்பார்த்து  நாயகி  ஹார்ட்  அட்டாக்கில்  இறந்து  விடுகிறார்


 இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 

நாயகன்  ஆக   சமீர்  தர்மாதிகாரி  நடித்திருக்கிறார். இவர்  சைக்கோவா?  நல்லவரா?  கெட்டவரா? என்று  ஆரம்பத்தில்  குழப்பமாகக்காட்டினாலும்  போகப்போக  இவரது கேரக்டர்  டிசைன்  தெரிந்து  விடுகிறது 


நாயகி  சித்ராவாக ,  நாயகனின்  மனைவி  ஆக  தீப்தி  கெட்கர்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.முதல்  பாதி  முழுக்க  இவர்  ஆதிக்கம்  தான் 


பணிப்பெண்  கவுசல்யாவாக   நேஹா  ஜோஷி கலக்கி  இருக்கிறார்.  ஓப்பனிங்  சீனில்  குறி  சொல்வதாகட்டும் ,  பணிப்பெண்  ஆக    பம்மி  பம்மி  பேசுவதாகட்டும், பயந்து  போன  விழிகளால்  நோக்குவதாகட்டும். பிறகு க்ளைமாக்சில்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீனில்  வில்லத்தனம்  காட்டுவதாகட்டும்  அபாரம் 


நாயகனின்  கள்ளக்காதலி  ஆக   நட்சத்திரா  மெதேகர் கச்சிதமான  நடிப்பு , ஆனால்  அவருக்கு  போர்சன்  குறைவு 


 அசிஸ்டெண்ட்  ரைட்டர்   ஆக  ,   வக்கீல்  ஆக  வருபவர்களூம்  பாத்திரத்தை  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


 முதல்  பாதி திரைக்கதையில்  இருந்த  விறுவிறுப்பு  பின்  பாதியில்  இல்லை . பின்  பாதி  டிராமா  பார்ப்பது  போல  இருக்கிறது , ஆனால்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  மற்றும்  கடைசி  15  நிமிடங்கள்  குட் 


தேவ்தத்தா  தான்  இசை , மிக  சுமார்  தான் , பிஜிஎம்  மில் பெரிதாக  சோபிக்கவில்லை  பிரியங்கா  மேகர்  தான்  ஒளிப்பதிவு . கவனிக்க  வைக்கிறார்.  சாக்ர்  விஸ்வநாத்  தான்  எடிட்டிங் . ஒண்ணே முக்கால்  மணி  நேரம்  தான்  படம், ஆனால்  3  மணி  நேரம்  ஓடியது  போல  களைப்பு  நமக்கு 


நிகில்  லேன்சேகர்  தான்  இயக்கம் . ஏதோ கொரியன் படத்தை  பட்டி  டிங்கரின்  செய்யத்தெரியாமல்  செய்தது  போல  இருக்கிறது


சபாஷ்  டைரக்டர்


1    நாயகன் , நாயகி ,  ரைட்டர் , வக்கீல் , பணிப்பெண், கள்ளக்காதலி  என   ஆறு  கேரக்டர்களை  மட்டுமே  வைத்து  லோ  பட்ஜெட்டில்  படம்  பண்ணிய  விதம் 


2  ஜவ்வு  மிட்டாய்  மாதிரி  இழுக்காமல் 105  நிமிடங்களில்  படத்தை  முடித்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு சஸ்பென்ஸ்  நாவல்  ரைட்டரா  இருக்கறதால  உங்க  வாழ்க்கைல  நடக்கும்  சம்பவங்களும்  சஸ்பென்சாவே  அமையனும்னு  நினைக்கறீங்க  போல 



2  போலிஸ்  அவ்ளவ்  சீக்கிரம்  என்னை  நெருங்க  முடியாது  என்று தான்  ஒவ்வொரு கிரிமினலும்  நினைப்பான்


3  ஒரு ரைட்டரோட  மூளை  வேலை  செய்ய  ஆரம்பிச்சா  நான்  ஸ்டாப்பா  ஒர்க் பண்ணிட்டே  இருக்கும் 


4  எந்த  ஒரு  விளையாட்டும்  ஒரு  நபரைத்தான்  வெற்றி  பெற  அனுமதிக்கும்


5  எந்த  ஒரு  ஸ்க்ரிப்ட்டிலும் இது  உண்மை சம்பவத்தின்  அடிப்படையில்  தயார்  ஆனது  என்று  எழுதப்பட்டிருந்தால்  அது  உடனே  விற்று  விடும் 


6  ஒரு  மாணவன்  எப்போதும்  தன்  குருவுக்குப்பாடம் கற்றுத்தர  நினைக்கக்கூடாது ., இதுவும்  நான்  உனக்கு  ஆல்ரெடி  படிப்பித்த  விஷயம்  தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  தன்  கணவனுடன்   பெட்ரூமில்  வந்து  படுக்கிறார். கதவு  திறக்க  யாரோ  ஒரு  ஆள்  நிழல்  தெரிகிறது . அப்போது  நாயகிக்குத்தன்  கணவன்  மேல்  ஏன்  டவுட்  வரவில்லை . இவர்  தான் கதவைத்தாழ்  போட்டார். பின்  எப்படி கதவு  திறக்கும் ?


2  நாயகன்  தன்  மனைவியை  திட்டம்  போட்டுக்கொலை  செய்கிறான். அவனது  கள்ளக்காதலி  அவனது  ஃபோனுக்கு  அடிக்கடி  ஃபோன்  செய்து  பேசுகிறாள் , இது  போலீசுக்கு  டவுட்   ஏற்படுத்தும்  என்பதை  நாயகன்  அறிய  மாட்டானா?  தன்  ஃபோன்  ட்ரேஸ்  செய்யப்படும்  என்பது  தெரியாதா? 


3 ரைட்டர்  சேற்று  மண்  பட்ட  காலால் பங்களா  முழுக்க  நடந்து  சேறு  தடம்  பதிந்து  இருக்கு . அப்போ  டாக்டருக்கு  ஃபோன்  பண்ணுகிறான்  நாயகன்,  அந்தக்கால்தடம்  யாருடையது   என  டவுட்  வராதா? அதைக்ளீன்  பண்ண  வேணாமா? 


4  துப்பாக்கிக்கு  லைசென்ஸ்  வைத்திருக்கும்  நாயகன்  அது  புல்லட்சுடன்  இருக்கும்போது  என்ன  எடை? புல்லட்ஸ்  ரிமூவ்  பண்ணிட்டா  என்ன  எடை? என  தெரிந்து  வைத்திருக்க  மாட்டாரா? அவரது  காலித்துப்பாக்கியைக்கையில்  எடுக்கும்போதே  இது  எம்ப்ட்டி  கன்  என்பதை  உணர  வேண்டாமா? 


5  கை  விலங்கை  ஆன்  லைனில்  ஆர்டர்  பண்ணி    வாங்கி  வைத்திருப்பது  நாயகன். அவனிடம்  இன்னொரு  செட்  சாவி  இருக்கும்  என்பதை  ரைட்டர்  ஏன்  யூகிக்கவில்லை ? 


6  வில்லனை  தனி  ரூமில்  அடைத்து  விட்டு  கதவை  லாக்  பண்ணிப்போனால்  தான் ரைட்டர்  சேஃப்டி. ஆனால்  ஹாலில்  விட்டுச்செல்வது  ஏன் ? 


7  நாயகனுக்கு  இரண்டு  கள்ளக்காதலிகள் .  வில்லியிடம்  இருந்து  தன் இரண்டாவது  கள்ளக்காதலியை  எப்படி  டீல்  செய்கிறார் ? 


8  வில்லி  க்ளைமாக்சில்  டெட்  பாடியில்  இருந்து  வந்த  ரத்தத்தை  தன்  ஹை  ஹீல்சால்  மிதித்து  ரத்தக்கறையுடன்  பங்களா  ஹாலில்  நடக்கிறார். காட்டிக்கொடுக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ/ ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  தான் , பொறுமைசாலிகள் பார்க்கலாம், ஸ்லோவாதான்  போகும்  . ரேட்டிங்  2.25 / 5 

0 comments: