Sunday, October 20, 2013

ஆரம்பம் ல் ஆர்யா - டாப்ஸி ரொமான்ஸ் ஓவர் டோசா? - அஜித் பேட்டி

'ஆரம்பம்' பார்த்து ஆர்யாவை புகழ்ந்த அஜித்!

ஆரம்பம்' படத்தினைப் பார்த்துவிட்டு ஆர்யா பாராட்டி இருக்கிறார் அஜித்.
தீபாவளி ரேஸில் மற்ற இரண்டு படங்களையும் முந்திக்கொண்டு இம்மாதம் 31ம் தேதியே திரைக்கு வரவிருக்கிறது 'ஆரம்பம்'. பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யூ' சான்றிதழ் அளித்தார்கள்.
நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டது மட்டுமன்றி, படத்தினை அஜித் மற்றும் ஷாலினிக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்கள்.
படத்தினைப் பார்த்துவிட்டு இயக்குநர் விஷ்ணுவர்தனை புகழ்ந்திருக்கிறார் அஜித். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய படம் அளித்ததற்கு நன்றி என்று விஷ்ணுவர்தனிடம் கூறியுள்ளார்.


அதுமட்டுமன்றி, ஆர்யாவிற்கு போன் செய்து மிகவும் பாராட்டியிருக்கிறார். “நீங்கள் டாப்ஸியுடன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் இளமை ததும்புகிறது. இளைஞர்களின் மத்தியில் உங்கள் நடிப்பிற்கு பெரும் பாராட்டு கிடைக்கும், கண்டிப்பாக ஆரம்பம் படத்திற்கு பிறகு உங்களது திரையுலக வாழ்க்கை உச்சித்தில் இருக்கும். தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்துக் கொண்டிருப்பதிற்கு பாராட்டுக்கள்” என்று ஆர்யாவிடம் தெரிவித்திருக்கிறார் அஜித்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நிறைய ஹீரோக்கள் இணைந்து நடிக்க முன்வருவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் 

IMG_5062

.1. நாம வாங்கும் ஷீ சாக்ஸ் கெண்டைக்காலைத்தாண்டறது இல்லை.இந்த நரசுங்களுக்கு மட்டும் எப்டி இவ்ளவ் நீளமாக்கிடைக்குது?்




=====================




2 நீ இங்க்லீஷ்ல வீக்கா?னு கேட்ட இங்க் மிஸ் கிட்டே கணக்குல ஸ்ட்ராங்க் ,சென்ட்டம்னு சொல்ல நினைச்சேன்.சொல்லல ;-))





=====================




3 சாட்சிகள் சொல்வது நம்பும்படியாக இல்லை -நீதிபதி #மிஸ்டர் மாரி முத்து.இனி உங்க பேரு நம்பா மாரி முத்து





====================




4 போட்டு வாங்கும் பொம்முக்குட்டி- உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணுங்களைப்பிடிக்கும் , ? 





ஜொள் ஜக்கு - எல்லாப்பொண்ணுங்களையும்




=======================




5 திருமணமான நடிகைகளை ஆண் கண்டுகொள்வதே இல்லை.திருமணமானாலும் தன் ஆதர்ச ஹீரோவை பெண் விடுவதில்லை # நீதி - ஹி ஹி மியாவ்




======================







6 எங்க ஆபீஸ் ல வெர்ஜீனியா னு ஒரு ஆங்கிலோ இண்டியன் கேர்ள் சேர்ந்திருக்கு.எல்லார் மனசுலயும் என்ன கேள்வி ஓடும்னு யூகிக்க முடியுது




====================




7 மோடியை காமெடி பீஸ் ஆக்காம விடமாட்டாங்க போல # சோ ,எஸ் வி சேகர் அறிக்கைகள்




====================




8 விஜய் சேதுபதி யின் புதிய பட டைட்டில் சங்கு தேவன் # சென்ட்டிமென்ட் செம்மல்கள் நிறைந்த கோடம்பாக்கத்தில் டைட்டிலிலேயே சங்கு! துணிச்சல் தான்





====================




9 தலை தீபாவளி கொண்டாடாத புதுமணத்தம்பதியும் இல்ல. தல படம் தீபாவளிக்கு வருவதைக்கொண்டாடாத அஜித் ரசிகரும் இல்லை




===================



10 பில்லா ,மங்காத்தா ,பில்லா 2 அஜித் ஓப்பனிங் சீன் களை எல்லாம் ஆரம்பம் அஜித் ஓப்பனிங் சீன் தூக்கி சாப்பிட்ரும் என அவதானிக்கிறே




==================




11 வில்லன் - எமனையே ஏமாத்தி எஸ்கேப் ஆனவன் நான் . 





அஜித் - எமன் எருமை ல வந்திருப்பான்.சேஸ் பண்ண முடிஞ்சிருக்காது.நான் ரேஸ் பைக் ல.




=====================



12 வில்லன் - GUN னை உன் நெத்திப்பொட்டுல வெச்சும் உனக்கு பயம் வர்ல ? 





அஜித் - துப்பாக்கி யைப்பாத்து பயப்படும் துர்ப்பாக்கியம் எனக்கு இல்லை




=====================




13 சார்.இந்த ஆபரேஷனுக்கு அவர் தான் கரெக்ட் சாய்ஸ் னு எப்டி சொல்றீங்க ?,





போலீஸ் கமிஷனர் - அவர் 6 அடி உடம்புலயே 60 ஆபரேஷனைப்பார்த்தவர்




========================



14 9 தாரா - என் பின்னாலயே வருவீங்க ,பாலோ பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன் . 





அஜித் - பர்சனாலிட்டி இல்லாதவன் தான் பொண்ணுங்க பின்னால போவான்.





=====================




15 சார்.உங்க படத்துல காமெடி இல்லையாமே? ஏன்? 





படத்தைப்பார்த்து ஊரே சிரிக்குதுன்னு ஒரு பேச்சு வந்துடக்கூடாதுனு தான்





======================





ஆரம்பம்' படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தீபாவளி ரேஸில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆரம்பம்’. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா மற்றும் பலர் நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான ‘ஆரம்பம்’ புகைப்படங்களில் அஜித் போலீஸ் உடை அணிந்திருந்தார். இதனால் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. இணையத்தில் 'ஆரம்பம்' படத்தினைப் பற்றி அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது #Arrambam என்ற டாக் இந்தியளவில் டிரெண்ட்டாகிறது. இன்று சென்சார் என்பதால், #Arrambamcensorday என்ற டாக் இந்தியளவில் டிரெண்ட்டாகி வருகிறது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு இன்று காலை திரையிட்டு காட்டினார்கள். படத்தினைப் பார்த்துவிட்டு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தீபாவளி படங்களில் முதலில் சென்சார் ஆகியிருப்பது 'ஆரம்பம்'. ஆகையால் இம்மாத இறுதியில் 31ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.



Saturday, October 19, 2013

வணக்கம் சென்னை , தலைவா -வரிவிலக்கு மறுப்பு ஏன் ? - உதயநிதி ஸ்டாலின் கார சார பேட்டி @ த தமிழ் ஹிந்து

தனது மனைவியை இயக்குநராக்கிய சந்தோஷத்தில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் வசூல், மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு என பிஸியாகக் கணக்கிட்டுக் கொண்டிருந்தவரிடம் பேட்டி என்றதும் ஆவிபறக்கும் காபி கோப்பையொன்றைக் கையில் கொடுத்தபடியே 'கேளுங்க' என்று உற்சாகமானார்...
'வணக்கம் சென்னை' படத்தின் வசூல் எப்படி இருக்கு?
எதிர்பார்த்த அளவுக்கு ஒப்பனிங் இல்ல. ஆனா டீசென்ட்டான ஓப்பனிங் இருந்துச்சு. விமர்சனங்கள் ரொம்ப பாசிட்டிவ்வா வந்திச்சு. ஒவ்வொரு ஷோவுக்கும் மக்கள் வர்றது அதிகமாகிட்டே இருக்கு. கண்டிப்பா லாபமா அமையும்னு நம்பறேன். ஏன்னா இது பெரிய பட்ஜெட் படம் கிடையாது. பப்ளிசிட்டிக்கு நிறைய செலவு பண்ணினேன். இந்த ஓப்பனிங் வந்ததுக்கு காரணமே அனிருத்தோட இசைக்கும், படத்தோட டிரெய்லருக்கு யூட்யூப்ல கிடைச்ச வரவேற்பும்தான்.
நீங்க இப்போ நடிக்கிற 'இது கதிர்வேலன் காதல்' எப்போ வெளியாகப் போகுது ?
இன்னும் 2 பாடல் காட்சிகள் படம் பிடிக்க வேண்டியிருக்கு. அவ்வளவுதான். அதன் பிறகு பின்தயாரிப்பு வேலைகள் முடிஞ்சுட்டா நவம்பர் கடைசில இசை வெளியீட்டுக்கு திட்டமிடுறேன். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடுற திட்டம் வச்சிருக்கேன். பார்க்கலாம்.



நயன்தாரா - உதயநிதி ஸ்டாலின் ஜோடியின் கூட்டணி திரையில் எப்படி வந்திருக்கு?
அதைச் சொன்னா சுவாரஸ்யம் போயிடலாம். எனக்கும் அவங்களுக்கும் காம்பினேஷன் ரொம்ப கம்மியாதான் இருக்கும். எனக்கும் சந்தானத்துக்கும்தான் அதிகம் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சிகள்லதான் நயன்கூட முழுசா இருப்பேன்.
சந்தானம் இருந்தாதான் படம் நடிக்கவே ஒப்புக்குவீங்க போல?
நீங்க இப்படி கேட்கக் காரணம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' தான். மக்களும் எங்களை ஏத்துக்கிட்டாங்க. 'வணக்கம் சென்னை' படத்துல ஒரு சீன் அவரோட நடிச்சதுக்கே மக்கள் பயங்கரமா கைத்தட்டுறாங்க. 'இது கதிர்வேலன் காதல்' படத்துல 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சாயல் வந்திரக் கூடாதுனு ரொம்ப தெளிவா இருந்தார் சந்தானம். படத்தோட கதையை நகர்த்துற மாதிரி ஒரு முக்கியமான கதாபாத்தித்தில் வர்றாரு. இப்போ மூணாவதாக நடிக்கப்போற 'நண்பேன்டா' படத்துல, நானும் சந்தானமும் படம் முழுக்க ஒன்றாகவே இருக்குற மாதிரி கதை ரெடி பண்ணிருக்கார் ஜெகதீஷ். ஒரு அளவுக்கு சினிமாவுல ஹீரோவா நிலைச்சுட்டேன்னா, அதுக்கு அப்புறம் நடிக்கிற படங்கள்ல ஏதாவது புதுசா ட்ரை பண்ணுவேன்.
கதிர்வேலன் காதலும் இன்னோரு காமெடி படம் தானா..?
'ஒரு கல் ஒரு கண்ணாடி' எல்லாரும் குடும்பத்தோட ரசிச்ச படம்தானே. ஆனா 'இது கதிர்வேலன் காதல்' ஒரு குடும்பபடம். ஆனா, முழுக்க காமெடி படமும் கிடையாது. நான் கூட ஒரு சீன்ல கிளசிரின் போட்டு அழணும் அப்படினு இயக்குனர் சொன்னாரு. எனக்கு ஷாக்! ‘ ஏங்க நான் எல்லாம் அழுதா காமெடியா ஆயிடும் விட்டுருங்கனு’ சொன்னேன். இதுல புதுசா இல்லன்னா இன்னொரு 'ஒரு கல் ஒரு கண்ணாடி'னு சொல்லிடுவாங்க. நீங்க டிரைப் பண்ணுங்கன்னு சொன்னார். நான் முதல்தடவையாக அழுதுருக்கேன். கண்டிப்பா பிடிக்கும்னு சொன்னாரு. இந்தப் படத்துல அப்பா, அக்கா சென்டிமென்ட் இருக்கு. கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.


அடுத்து மனைவி இயக்கத்தில் நடிப்பீர்கள்தானே?
'வணக்கம் சென்னை' படத்துக்கே கேட்டாங்க. இல்ல நீங்க சிவாவை வைச்சே பண்ணுங்கன்னு சொன்னேன். இப்ப இயக்குநரா ஜெயிச்சுட்டாங்க. முதல் படம் மாதிரியே தெரியல அப்படினு எல்லாரும் சொல்றப்ப சந்தோஷமா இருக்கு. அடுத்து என்ன பண்ணப் போறாங்க அப்படினு அவங்க இன்னும் முடிவு பண்ணல. இப்போதைக்கு அவங்க நினைப்பு எல்லாம் இன்னைக்கு கலெக்‌ஷன் எவ்வளவு. செலவு பண்ண காசு வந்திருமா லாபம் கிடைக்குமானு டென்ஷனா கேட்டுகிட்டே இருக்காங்க... அவங்க அடுத்த கதை ரெடி பண்ணிட்டு, அந்த கதை எனக்கு பொருத்தமா இருந்தா, கண்டிப்பா பண்ணுவேன்.
உங்களை திரையில முதல்ல கொண்டு வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் நடிக்க கூப்பிடலையா?
பெரிய டைரக்டர். அவருதான் என்னை வற்புறுத்தி 'ஆதவன்'ல நடிக்க வைச்சாரு. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படப்பிடிப்பு சமயத்துல ஒரு கதை சொன்னாரு. அது ஒரு பழைய படத்தோட ரீமேக். ரெண்டு மூணு ஹீரோக்கள் கூட சேர்ந்து பண்ற மாதிரியிருக்கும். நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லிருக்கேன். அவர் சொன்ன கதை ஜீவா, ஆர்யா மாதிரி நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய ஒரு பெரிய பட்ஜெட் காமெடி படம். அவர் கூப்பிட்டா கண்டிப்பா நடிப்பேன்.

உங்கள தயாரிப்பாளரா அறிமுகப்படுத்தியவர் விஜய். நீங்க நினைச்சா 'தலைவா' படத்த ரிலீஸ் பண்ணிருக்க முடியுமே?
அந்தப் படத்துக்கு ஏற்கனவே பிரச்சினை. நான் வேற போனா பிரச்சினை இன்னும் கூடியிருக்கும்.. அந்த பிரச்சினையின்போது நான் விஜய் சார்கிட்ட பேசவே இல்ல. அவரோட நண்பர்கள் கிட்ட பேசினேன். சினிமால ரொம்ப தப்பான விஷயங்கள் நடக்குதுன்னு சொன்னேன்.
அதாவது மாணவர் புரட்சி படைன்னு சொன்னாங்க. அவங்களுக்கு என்ன சம்பந்தம் சொல்லுங்க. சந்தானத்தோட 'நீ அரசியலுக்கு ரெடியாயிட்ட'னு ஒரு டயலாக். இதுக்கும் மாணவர் புரட்சி படைக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க. தயாரிப்பாளரே இதைப்பத்தி கேள்வி கேட்காதப்போ நமக்கு எதுக்கு அப்படினு விட்டுட்டேன்.
அந்த சமயத்துல என்னால முடிஞ்ச உதவிய பண்றேன்னு அவரோட நண்பர்கள்கிட்ட சொன்னேன். எனக்கு விஜய் சார்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல. ஏன்னா அவரே ரொம்ப டென்ஷன்ல இருந்திருப்பார். ஒரு பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படத்துக்கே இவ்வளவு கஷ்டமான்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.


வணக்கம் சென்னை உட்பட நீங்க தயாரிக்கிற படங்களுக்கு வரிவிலக்கு ரத்து ஆக என்ன காரணம்?
ஊருக்கே தெரிஞ்ச காரணம்தான். பேசாம அவங்க ஒரு சட்டமே போட்றலாம். ரெட் ஜெயன்ட் தயாரிக்கிற படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது அப்டினு. நீதிமன்றத்திற்கு கண்டிப்பா போய் போராடுவேன். நிறைய ஆதாரங்கள் எடுத்து வச்சிருக்கேன். இப்போ ஒரு கமிட்டி ஒண்ணு போட்டுருக்க்காங்க இல்ல.. அந்தமாதிரி ஒரு காமெடி கமிட்டியே கிடையாதுங்க.
மத்திய அரசு நடத்துற சென்சார் போர்டு அவ்வளவு சின்சியரா நடத்துறாங்க. ஒரு படத்துக்கு சம்பந்தமில்லாம பாக்குற முதல் ஆளுங்க அவங்கதான். அதுக்கு அவ்வளவு ரூல்ஸ் இருக்கு. 5 பேர் பாக்கணும். அதுல 2 லேடீஸ் இருக்கணும். படம் புரொஜக்‌ஷன் ரூம்லகூட தயாரிப்பாளர், இயக்குநர் இருக்கக் கூடாது.
ஆனா, ரிலீஸ் முன்னாடித்தான் இவங்களுக்கும் (வரிவிலக்கு குழு) படம் போட்டு காட்றோம். அவங்க வீட்டு வேலைக்காரன்ல இருந்து, தோட்டக்காரன் வரைக்கும் வந்து படம் பாக்குறாங்க. இவங்க இப்படி பாத்தா ஒரு தயாரிப்பாளருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க. என்கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரமிருக்கு. அதுவும் ஒரு பெரிய ஸ்டார் படம்னா ஒரு பிக்னிக் மாதிரி வீட்டுல சொந்தக்காரங்கள்ல இருந்து எல்லாத்தையும் கூட்டிட்டு வந்திராங்க.

'தலைவா' படத்துக்கே வரிவிலக்கு கிடையாதே. அப்படின்னா, முதல்லயே தெரியுது இந்த படத்துக்கு எல்லாம் வரிவிலக்கு குடுக்கணும், இதுக்கு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு. நான் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர்ல புகார் கொடுக்கப் போறேன்.
வரி தானே கட்டுங்கன்னு சொல்றாங்க. நான் கேட்குறது ஒரே விஷயம்தான். மத்த படங்களுக்கு கிடைக்குறது ஏன் என்னோட படங்களுக்கு கிடைக்கல. ஏன்னா என்னோட அரசியல் பின்னணி. எல்லாத்துக்கும் போதுவா ஒரு சட்டம் போடுங்க. உடனே உங்க ஆட்சில நடக்கலயானு கேட்பாங்க.
என்னால ஒரு படம் வெளிவர முடியாமலோ, தள்ளிப் போச்சுன்னோ சொன்னாங்கன்னா நான் சினிமாவை விட்டே போகத் தயார். வரி விஷயத்தை பொறுத்த வரைக்கும் இந்த விஷயத்தை நான் சும்மா விடப்போவதில்லை.


தயாரிப்பாளர், நடிகர் அடுத்து அரசியல்தானே?
அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. இப்போதைக்கு 'இது கதிர்வேலன் காதல்' என்னோட இலக்கு. என்னுடைய தயாரிப்பு, வெளியீடு அப்படினு பிஸியாக இருக்கேன். அரசியல் எல்லாம் நினைச்சு பாக்கக்கூட நேரமில்லை. எனக்கு அரசியல் தேவையில்லாதது. சினிமாதான் என்னோட ஃபாஷன்

thanx - the tamil hindu

நள்ளிரவில் அறை மாறி மாப்பிள்ளைத்தோழனுடன் முதல் இரவு கொண்டாடிய மணப்பெண்

1. நாம் அடைவது எல்லாம் இயற்கை நமக்குத்தரும் பரிசு.நமக்குக்கிடைக்காதது எல்லாம் நாம் மற்றவர்களுக்கு த்தரும் பரிசு (னு நினைச்சிக்கனும்)



===================


2 இறக்கத்தான் பிறந்தோம்.அது வரை இரக்கத்தோடு இருப்போம்  




==========


3 நம்மைச்சுற்றி எத்தனை திறமைசாலிகள் போட்டிக்கு இருக்கிறார்களோ அத்தனைக்கத்தனை நம் திறமை கூர் தீட்டப்படும்



===================


4 நம் மீது அன்பும் ,அக்கறையும் கொண்ட ஒரு பெண் அருகில் இருந்து நம்மை வழி நடத்தினால் நம் வாழ்க்கைப்பயணம் பிரமிப்பு மிகுந்த சாகசமாக இருக்கும்


=====================



5 நீ ஒரு மதி மயக்கி



==================



6 தினமும் மாலையில் மனைவிக்குப்பூ வாங்கி வந்து இரவில் மனைவி கூந்தலில் சூடி விடுபவன் அன்புக்கணவன் ( சொந்த மனைவிக்கு)



====================



7 ஒரு பெண்ணிடம் அவமானப்பட்டவனின் கோபம் அந்தப்பெண் உயிருடன் இருக்கும் வரை அகலாது நெஞ்சில் உறைந்திருக்கும் ( கொலை பண்ணனும்.னு அர்த்தம் இல்ல)



=====================


8 பொண்ணுங்க சபதம் போடுவாங்க.அடுத்த நாளே மறந்துடுவாங்க.ஆண்கள் சவால் விடுவாங்க.ஜெயிக்கும் வரை மறக்க மாட்டாங்க



=======================


9 தன் கணவன் பிற பெண்ணுடன் பேசும்போது மனைவி கணவனின் கண்ணை கண்காணிப்பாள். தன் மனைவி பிற ஆணிடம் பேசும்போது கணவன் எதிராளியின் கண்ணை கவனிப்பான்



===================


10 அன்பின் அளவீடு அனைவரின் கண்கள்.ஆசையின் அளவீடு ஆண்களுக்கு உள்ளங்கைகள். பெண்களுக்கு வார்த்தைகள்


=====================


11 அன்பே! கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது என்றார்கள்.அதனால் தான் நீ சொன்ன கன்ன எல்லை தாண்டி இடையில் பட்டது என் கை



=======================


12 எல்லா ஏர் செல் ஆபீஸ் சென்ட்டர்க்ளிலும் 19 10 13 அன்று இலவச கண் பரிசோதனை நடக்காம்.பிகர்களை தரிசித்து வரவும் #ஈரோடு



====================


13 ஒரே சோம்பலாக இருக்கிறது.என்னை சுறுசுறுப்பாக்க ஒரு முத்த குளுக்கோஸ் தேவை.உன் கன்னத்தை என் உதட்டின் மீது வைத்து விட்டுச்செல்




=======================


14 நீ கொடுத்த் முத்தத்திலேயே உன் கோபம் தெரிந்துவிட்டது.ஆனாலும் நல்லாதான் இருக்கு.#எப்படி முத்தம் கொடுத்தாலும் அதை ரசித்து ருசிப்போர் சங்கம்




========================


15 இங்கு முத்தம் இருப்பு இல்லை என உதட்டின் வாசலில் நீ போர்டு வைத்தாலும் வாசலிலேயே என் கன்னம் காத்திருக்கும்



==========================


16 ஆபீஸ் மீட்டிங்க் ல லேடி ஸ்டாப்ங்களை பின்னால உக்கார வெச்சுடறாரு டேமேஜர்.முன்னால இருந்தாலாவது பின்னலை பிடிச்சு இழுக்கலாம்



======================


17 ஆபீஸ் ல பொண்ணுங்க இந்த சேலை நல்லாருக்கா? ஜாக்கெட் டிசைன் ஓக்கேவா? பேசிக்கறாங்க.எங்களைக்கேட்டா நாங்க சொல்ல மாட்டமா? ஆண் எனில் மட்டமா?



======================


18 அன்பே! நாளை ஐப்பசி ஆரம்பம். இப்போ ஐ பசி



==================


19 சாயங்காலம் 6 மணிக்கு மேல தன் மனைவியிடம் ் கோபம் ,வீரம் எல்லாத்தையும் காட்டுனா ஆணுக்கு வாசல் திண்ணை படுக்கை வாழ்க்கை ஆரம்பம்



======================


20 நள்ளிரவில் அறை மாறி மாப்பிள்ளைத்தோழனுடன் முதல் இரவு கொண்டாடிய மணப்பெண் - தமிழ்முரசு@புதுக்கோட்டை # நிஜமா இப்டி ஒரு சம்பவம் நடந்ததா?ரீலா?



========================

Friday, October 18, 2013

Escape Plan - கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு - சினிமா விமர்சனம்

உலகில் இருக்கும்  பல சிறைகளில்  கட்டமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள  ஓட்டைகளை, பலவீனங்களைப்பயன்படுத்தி   கைதிகள் எப்படித்தப்பிக்கிறாங்க  என்பதை உணர்ந்தவர்  ஹீரோ . அவரோட வேலையே இந்த மாதிரி  ஒரு ஜெயில்ல  வேலண்ட்ரியா உள்ளே போய் அங்கே இருந்து தப்பிச்சு  அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள மைனஸ்களை அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்துவதே . அவரோட அனுபவங்களை  ஒரு புக்காவே போட்டிருக்கார் . 


ஜெயிலோட அமைப்பு   எப்படி  இருந்தா  கைதி எந்த வழில  தப்பிப்பான் என்பதற்கான  கைடு அது . அந்த புக்கைப்படிச்சா சிறை அதிகாரிகள் ஜாக்கிரதையா  இருப்பாங்க , கைதிகள் படிச்சா ஈசியா  ஜெயில்ல  இருந்து தப்பிப்பாங்க. 


எந்த  ஜெயிலோட அமைப்பைப்பார்த்தாலும்  ஹீரோவால அந்த ஜெயில்ல  இருந்து எப்படித்தப்பிக்கறதுன்னு பிளான்  ரெடி பண்ணிக்கொடுக்க முடியும் . அப்பேர்ப்பட்ட  கில்லாடி ஆளான  ஹீரோவுக்கு  ஒரு பிராஜக்ட்  வருது . உலகின்  மிகப்பாதுகாப்பான  ஒரு ஜெயில் உள்ளே போய் தப்பிச்சு வரனும் . அதுக்கான  சார்ஜ்  5 மில்லியன் டாலர்கள் . 


ஹீரோ அந்த ஜெயிலுக்குள்ளே  போய்  தப்பிக்க  முனையும் போதுதான்  தெரியுது , இது அவரை லைஃப் லாங்க் ஜெயில்லயே சிக்க வைக்க திட்டமிடப்பட்ட சதின்னு . அதை எப்படி அவர்  முறியடிக்கறார்? அந்த சதி  செஞ்ச  சதி லீலாவதி  யார் என்பதே  மிச்ச  மீதி திரைக்கதை .  க்ளைமேக்ஸ் ல ஒரு சஸ்பென்ஸ் வேற  இருக்கு 



ஹீரோவா சில்வர்ஸ்டர் ஸ்டோலன் . ஆள் பார்க்க பாவமா  இருக்கார் . வயசானவங்க ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் நடிக்காம  இருப்பதே அவர்களது இமேஜ்க்கு நல்லது , வ்ழக்கமா  தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சட்டையைக்கழட்டி தன் எக்சசைஸ் பாடியைகாட்டி விடும்   ஹாலிவுட்  கமல் ஆன ஸ்டோலன்  இதில் அப்படிச்செய்யாதது ஆறுதல் . கன்னம் எல்லாம் சதை தொங்கிப்போச்சு. இருந்தாலும்  படம்  முழுக்க  தன்  ரசிகர்களைக்கவர்ந்திழுக்க  தன்னாலான முழு முயற்சியையும்  எடுத்திருக்கார் , வெல்டன்  



இன்னொரு  ஹீரோ கமாண்டோ அர்னால்டு ஸ்வார்செனேகர் . இவரும் அப்படியே . வள்ளி படத்தில் ரஜினியைப்பார்த்தது போல்  வயசான  கெட்டப்பில்  இருக்கார் .ஹீரோவை  விட இவருக்கு காட்சிகள் குறைவுதான் . ஆனால்  க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் காட்சி இவருக்கு  உரியது என்பதால்  நடிக்க  ஓக்கே சொல்லி இருப்பார்  போல 


வில்லனாக வரும்  ஜிம்  மிக அமைதியான முகத்துடன்   ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வழங்கி மனம்  கவர்கிறார் .  


ஹீரோயின்  பேருக்கு  இருந்தாலும்  நோ யூஸ் . திரைக்கதை  முழுக்க முழுக்க ஜெயிலிலேயே நடப்பதால்   ஹீரோக்கள்  இருவரையுமே காட்ட வேண்டிய கட்டாயம் 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்க்  சீனில்  ஹீரோ  ஒரு ஜெயிலில்  இருந்து தப்பிக்கும் காட்சி மிக பிரமாதமாகப்படம் ஆக்கிய  லாவகம் . யாரும்  லாஜிக் மிஸ்டேக்கே  சொல்லாத படி  எடுத்தது , அதே சமயம்  அதை  டீட்டெயிலாக சொல்லி  இழுக்காமல் கட் ஷாட்ஸ்களில் சொல்லி ஈசியாகப்புரிய வைத்தது 



2  படம்  மொத்தம்  2 மணி  நேரம்  ஓடுது , முழுக்க முழுக்க ஜெயிலில் தான்  என்றாலும்   சில காட்சிகள்  தவிர  மீதிக்காட்சிகளை போர் அடிக்காமல்  ஒரு எதிர்பார்புடன் திரைக்கதை அமைத்த லாவகம்



3  இரண்டு ஹீரோக்கள்  மெயினாக இருந்தாலும்   வில்லனுக்கு முக்கியத்துவம்  கொடுத்து அவரை அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்ய வைத்தது 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. இந்தக்காலத்தில் அறிமுகம் இல்லாத நபர்  ஒரு செக் கொடுத்தா நம்மாளுங்க  அது பேங்க்கில் பாஸ் ஆன பின் தான் நம்புவாங்க , அது வரை ஒரு சாதா பேப்பர்தான் . ஆனால் 5  மில்லியன் டாலர் பிராஜக்ட். அதுவும் அட்வான்ஸ் பேமண்ட் என சொல்லப்பட்டதும்  அந்த பேமண்ட்டை கேஷாக வாங்காமல் செக்காக யாராவது வாங்குவாங்களா? இது பிளாக் மணி . செக்காக வாங்கினால்  கணக்கில் வந்துடாதா? அப்படியே செக்காக வாங்கினாலும் அதை கலெக்ச்ன போட்டு பாஸ் ஆன பின் தானே ஹீரோ  அந்த வேலையை செய்ய ஆரம்பிக்கனும் ?


2  அந்த செக் பேங்க்கில்  ரிட்டர்ன் ஆனதும்  ஒரு வசனம் “ இன்னும் 2 தடவை கலெக்‌ஷன் போட்டுப்பாரேன்  என . அப்போ  ரிப்ளை “ ஒரு மாசம் ஆச்சு , பல டைம் கலெக்‌ஷன் போட்டாச்சு , நோ யூஸ் . இந்த வசனம்  வரும்போது அந்த செக்  க்ளோசப்ல காட்டப்படுது . செக் ரிட்டர்ன்  பேங்க் சீல்  ஒரு டைம்  தான் வைக்கப்பட்டிருக்கு . ஒவ்வொரு டைம் செக்  ரிட்டர்ன் ஆகும்போதும்  சீல் வைக்க வேண்டாமா?   என்ன  தான் பேங்க் ஸ்டாஃப்ஸ் எல்லாம் சரியா வேலை செய்யாதவங்களா  இருந்தாலும் இதைக்கூடவா ஒழுங்கா செய்ய மாட்டாங்க ?


3  ஓப்பனிங்க்   சீன் ல  ஹீரோ  ஜெயில்ல  இருந்து தப்பிச்சு கார்ல போகும்போதே  தன் கைதி  டிரஸ்சை மாத்தி இருக்கலாமே? ஏன் மாத்தலை ? கைதி தப்பிக்கும்போது ஃபாலோ பண்ண வேண்டிய  முதல்  ரூலே  டிரஸ் சேஞ்ச் தானே?


4  ஜெயில்  அதிகாரிக்கு  ஹீரோ அந்த  ஜெயில்ல  இருந்து தப்ப  ஏதோ பிளான் போடறார்னு தெரியுது , பாதுகாப்பை  3 மடங்கு பலப்படுத்துங்கன்னு ஆர்டர்  போடறார். இதுக்கு பேசாம  ஹீரோவுக்கு 4 மணி நேரத்துக்கு  ஒரு முறை மயக்க மருந்து  கொடுத்தா போதுமே?  அல்லது ஸ்லீப்பிங்க் டேப்லட்சை அவருக்கே தெரியாம  கொடுக்கலாமே? 


5  தப்பிக்கப்போகும்  கைதி  உடம்பில் GSM  செல் ஃபோன் ல டிராக் கண்டுபிடிப்பது மாதிரி  ஏதாவது  ஒரு ட்ரான்ஸ்மீட்டரை பொருத்திட்டா  கைதி எங்கே தப்பி ஓடினாலும்  ஈசியா  ஃபாலோ பண்ணி பிடிக்கலாமே? 


6 ஜெயிலுக்குள்ளே  ஏதோ  ஒரு கவரை  ஹீரோ  தன் பேண்ட்டின் பின் பக்கம்  சொருகி மறைவா எடுத்துட்டுப்போறார். அது அப்படியே நழுவி கால் வழியா விழுந்தா  அவருக்குத்தெரியாது , அதனால் சட்டைப்பகுதியில்  முன் பக்கம் மறைத்து எடுத்துச்செல்வதுதான் பாதுகாப்பு ( லைப்ரரில  இருந்து  புக்  சுடும் பசங்க அப்படித்தான்  சுடுவாங்க ) 

7 துப்பாக்கி சுட்டு அனுபவம் ஏதும் இல்லாத  ஒரு ஆள் ஹீரோவுக்கு உதவி பண்றார் . அவர் 2 கைலயும்  2 கன் வெச்சு அட்டர் டைம் ல சுட்டுட்டே இருக்கார் , சுடும்போது ரிஃப்லக்‌ஷன் ஏதும் ஆகலை 


8 க்ளைமாக்ஸ்ல  வில்லன் கப்பல் மேல் தளத்தில் , அவர் அருகே ஆயில் கேன்கள் அல்லது பெட்ரோல் கேன்கள் இருக்கு , ஹீரோவுடன் நடக்கும் கன் ஃபைட்டில்  ஹீரோ  2 ஆயில் டேங்க்கில் சுட்டு ஆயில் லீக்கேஜ் ஏற்படுத்தறார். அப்புறம் 13 செகண்ட் கேப் விடறார் அந்த கேப் ல  வில்லன் டக்னு  கப்பல் ல இருந்து  கடல் ல குதிச்சு இருக்கலாமே?  ஏன் அப்படியே நிக்கறார்? நீச்சல் தெரியாதுன்னு சமாளிக்க வழி இல்லை , ஏன்னா கப்பல்ல ஒர்க் பண்றவங்க கம்ப்பல்சரி நீச்சல் பழகி இருக்கனும் என்பது விதி 



மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஜெயில் லைஃப் எப்படி  இருந்தது ?


 எல்லாரும் உன்னைத்தான் அக்கறையா கேட்டாங்க 



2  தப்பிக்கக்கூடிய வாய்ப்பு எந்தக்கைதிக்கும் 1% கூட கிடைக்கக்கூடாது , அதுதான் என் லட்சியம் 


3   பொதுவா ஜெயில்ல  இருந்து தப்பிக்க 3 காரணிகள் 

1 சுத்தி என்ன நடக்குதுன்னு  புரிஞ்சுக்கனும் 

2 வெளீல இருந்து உதவி  கிடைக்கனும் 

3 சமயத்துக்கு தக்கபடி சாதுர்யமா நடக்கக்கத்துக்கனும் 


4  ஹாய் , ஸ்வீட்டி , உன்  கள்ளத்தொடர்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு ?

 வாட்? 

 நான் ஜெயிலுக்குப்போனதும்  ஒருத்தன்  கூட டின்னருக்குப்போனியே ? 



5  ஹாய் , என் பேரு  மிஸ்  ஜூஸ் 

 புதுசா? 

 வாட்? 

 இல்லை , வேலைக்குச்சேர்ந்து புதுசா?ன்னு கேட்டேன் , நியூலி அப்பாயிண்ட்டட்>?

 5 மாசம்தான் ஆகுது 


 5  மாசமா? பார்த்தாத்தெரியலையே? 



6  ஜெயில்ல  இருக்கும்போது  பொழுது போக்குகள் ஏதும் இல்லைன்னா  ரொம்ப  போர் அடிக்கும் 


7  டாக்டர் , அந்தக்கைதி  உங்க கிட்டே என்ன கேட்டான் ?

 இங்கே  இருக்கறவங்க எல்லாம்  ஏன் பல்ஹீனமா இருக்காங்கன்னு கேட்டான் 


 அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க ?

 இப்[போ  உன் கிட்டே சொன்ன மாதிரியே தெரியாதுன்னு சொன்னேன் 



8  சின்ன வயசுல நான்  ஓவியன் ஆகனும்னு ஆசைப்பட்டேன் , இதுல என்ன பிரச்ச்னைன்னா எனக்கு அந்த  திறமை சுத்தமாக்கிடையாது 


9  சிறையில்  இருக்கும் மனிதர்களின்  புத்தி வெளியுலக மனிதர்களின் புத்தியை விட வித்தியாசமா சிந்திக்கும் 


10  சாதாரணமா   எல்லா ஜெயிலுங்களும்  ஊரை  விட்டுத்தள்ளி தான்  இருக்கும் 


11  ஒருத்தனைக்கொல்வது  சுலபம், அவனை திருத்தறதுதான் கஷ்டம் , இதுல வேடிக்கை என்னான்னா அதுதான் வாழ்க்கை ஆவது 


12   நீ சாகறதுக்கு ஆசைப்படறியா?


 நீ  ஜெயிலை விட்டு வெளீயே போக ஆசைப்படறியா? 


13  உனக்கு சுதந்திரத்தைத்தவிர வேறு  எது வேணாலும் தர  என்னால முடியும் 


14  நான்  இங்கே  வாழ்வதே கடவுளை ஒரு டைமாவது நேர்ல பார்த்துடலாம்னு தான் 


15  பொதுவா  டாக்டர்ங்க  வியாதியை குணப்படுத்த  மருந்து  தருவாங்களே தவிர அந்த மருந்தோட  தன்மை என்ன?னு தெரிஞ்சு வெச்சுக்க மாட்டாங்க  


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-41  ( ஹாலிவுட் படங்களுக்கு மார்க் போடுவதில்லை) 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் = 3.25   / 5



சி பி கமெண்ட்  - தியேட்டரில் போய்ப்பார்க்கும் அளவு  பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது , ஆனா  போர் அடிக்காம போகுது . 2  சூப்பர் ஸ்டார்கள் ரசிகர்களைத்திருப்திப்படுத்தும் அளவு ஆக்‌ஷன் காட்சிகள் ஏதும்  கிடையாது  திரைக்கதை சுவராஸ்யம் போதும் என நினைப்பவர்கள் பார்க்கலாம் , பெண்களு,ம் பார்க்கலாம் , ஏன்னா படத்துல சரக்குக்கூட சீன் இல்லை , ஐ மீன் மருந்துக்குக்கூட விருந்து இல்லை 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 18 10 2013 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை


தீபாவளி போட்டியிலிருந்து விலகிய 7 படங்கள்  ரிலீஸ்

7 movies Releasing tomorrow
வருகிற செப்டம்பர் 2ந் தேதி தீபாவளிக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாகிறது. இதனால் தீபாவளி போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகும் 7 சிறுபட்ஜெட் படங்கள் (அக்., 17ம் தேதி) ரிலீசாகிறது.

ஆர்.சுந்தர்ராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்ட் செய்துள்ள சித்திரையில் நிலாச்சோறு நாளை ரிலீஸ். தெய்வ திருமகள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராதான் ஹீரோயின். குழந்தையை சுற்றி நடக்கும் கதை. வசுந்தரா பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கிறார்.

பெரும் போராட்டத்துக்கு பிறகு கருணாசின் ரகளபுரம் நாளை ரிலீஸ். காமெடி போலீசான கருணாஸ் சீரியசான கேஸ்களை காமெடியாக டீல் பண்ணும் கதை.

சினிமாவுக்கு புதியவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் நுகம். ஜெஃபி என்பவர் டைரக்ட் செய்துள்ளார். இனியா ஹீரோயின். இது ஒரு திகில் கதை.

திருப்பதி என்பவர் டைரக்ட் செய்துள்ள முத்து நகரம் என்ற படமும் நாளை ரிலீசாகிறது. தூத்துக்குடி தாதாக்களின் கதை. இதுவும் புதுமுங்களின் தயாரிப்பு.

ஏ.ஆர்.ரவி என்ற நியூபேஸ் டைரக்ட் செய்துள்ள படமான அஞ்சல்துறையும் நாளை ரிலீஸ். இதில் ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் 3டியில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதுதவிர நிர்ணயம், இங்கு காதல் கற்றுத் தரப்படும் ஆகிய இரண்டு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகிறது. இதற்கு இடையே ஹாலிவுட் ஆக்ஷன் படமான எஸ்கேப், கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு என்ற பெயரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ரிலீசாகிறது.

1சித்திரையில் நிலாச்சோறு - .பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோயில் கிழக்காலே, என் ஜீவன் பாடுது, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தாள் என ஏராளமான ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தராஜான். இவருடைய படங்கள் எப்படி மிகப்பெரிய ஹிட்டோ அதைவிடம் இவர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் பெரிய ஹிட்டாகும். இளையராஜா இசையில் இவருடைய அனைத்துப் படங்களின் பாடல்களும் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவையாகும்.

நீண்ட இரு இடைவெளிக்குப் பிறகு ஆர்.சுந்தராஜான் 'சித்திரையில் நிலாச்சோறு' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசைஞானி தான் இசையமைத்துள்ளார். சுந்தராஜன் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடையே பலமான எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் சார்பில் பழனிச்சாமி என்பவர் தயாரித்துள்ள இப்படத்தில் புதுமுகங்கள் நடிக்க, முக்கிய வேடத்தில் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்த சாரா அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 25) சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் உள்ளிட்ட ஏராளமானோர்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும், இயக்குநர் ஆர்.சுந்தராஜான் - இளையராஜா கூட்டணியின் உருவான பாடல்கள் குறித்தும், படங்கள் குறித்தும், சுந்தராஜனின் நகைச்சுவை உணர்வு பற்றியும் பேசினார்கள். நிகழ்ச்சி முழுவதுமே கலகலப்பாக ஏதோ ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்தது போல இருந்தது. (டி.என்.எஸ்)

2. ரகளபுரம். -  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் 3வது படம் ரகளபுரம். இப்படத்தில் கருணாஸ் ஜோடியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பரத் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவன், மயில்சாமி, சிங்கம்புலி, ஓ.ஏ.கே.சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பயந்த சுபாவம் உள்ள ஒரு போலீஸ்காரரை பற்றிய படம் இது. அவர் தப்பாக எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவருக்கு சாதகமாக முடிகின்றன. அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் இப்படத்தின் கதை. சுந்தர் சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக இருந்த மனோ இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோவாக நடிப்பதுடன் தன்னுடைய கென் ஸ்டூடியோ சார்பில் கருணாஸே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.  
 
3 இங்கு காதல் கற்றுத்தரப்படும்-  ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் சார்பில் சாந்தி ஸ்ரீதர் தயாரிக்கும் படத்துக்கு ‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்ரீநாத் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக தருஷனா நடிக்கிறார். லிவிங்ஸ்டன், ஆர்த்தி, பாண்டு, இமான் அண்ணாச்சி, ஷியாம்சுந்தர, மீனாகுமாரி, பேபி ஸ்நேகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஸ்ரீதரன் இயக்குகிறார். காதலிக்கிறவர்கள் தங்கள் காதலை எவ்வாறு கையாளவேண்டும். காதலிக்க போகிறவர்கள் எவ்வாறு அதனை எதிர்கொள்ள வேண்டும். காதலில் தோற்றவர்கள் அந்த சூழலை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காதலர்களுக்கு கருத்து சொல்லும் படமாக தயாராகிறது என்றார் இயக்குனர்.

சென்னை, ஊட்டி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: கோபி சபாபதி, இசை: காகித்யா, எடிட்டிங்: கண்ணதாசன், இணை தயாரிப்பு: வி.மணிவண்ணன், தயாரிப்பு மேற்பார்வை: செங்குன்றம் இ.கணேசன்.



முத்து நகரம்'.- எல்.ஏ.சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் `முத்து நகரம்'. இதில் நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு நடிக்கின்றனர். நாயகியாக அஸ்ரிக் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கே.திருப்பதி இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிறக்கும் போது யாரும் குற்றவாளி இல்லை. வளர்ந்த பிறகும் குற்றவாளிகளாக விரும்புவது இல்லை. சூழ்நிலைகளே குற்றவாளியாக்கிறது.

இந்த கருத்தை படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், குலசேகரப் பட்டிணம், கயத்தாறு போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இசை: ஜெய்பிரகாஷ், ஒளிப்பதிவு: சூர்யா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, ஸ்டண்ட்: பயர்கார்த்திக், பாடல்: ஜெயமுரசு, கவின்பா, நடனம்: பால குமார் ரேவதி, தயாரிப்பு மேற்பார்வை: ஜெ.வின்னி.

5. அஞ்சல்துறை -  அஞ்சல்துறை என்ற பெயரில் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மோகன் சி, நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக சவுபர்னிகா, குஷ்பு முகர்ஜி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை ஏ.ஆர்.ரபி ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி ரபி கூறுகையில், கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டு நண்பர்கள் காதல் வசப்படுகிறார்கள். அந்த அறையில் ஒரு அமானுஷ்யமான சக்தி இருந்து கொண்டு இவர்களின் காதலுக்கு தொல்லை கொடுக்கிறது. அதை மீறி நண்பர்கள் இரண்டு பேரும் காதலில் எப்படி ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை. செந்தில், நெல்லை சிவா, பெஞ்சமின், கிங்காங், போண்டாமணி ஆகிய நகைச்சுவை நடிகர்களுடன் வடிவுக்கரசியும் நடிக்கிறார். பருத்திப்பள்ளி பி.சின்னுச்சாமி தயாரிக்கிறார். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் திருவனந்தபுரத்தில் படம் வளர்ந்து வருகிறது, என்றார்.
 
6.ரவுடி கோட்டை -  ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் அதாவது 2010ம் ஆண்டு நிதினுடன் நடித்த தெலுங்குப் படம் "சீதாராமுல கல்யாணம் லங்கோலோ". வெல்பர் கிரியேஷன் சார்பில் மல்லையா விஜய பிரசாத் என்பவர் தயாரித்திருந்தார். இதன் தமிழ் டப்பிங் உரிமையை பெண் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி என்பவர் வாங்கியிருந்தார். படத்தை தமிழில் டப் செய்து ரவுடி கோட்டை என்ற பெயரில் ரிலீஸ் பண்ணவும் தயாராக இருந்தார்.

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:  "தெலுங்கில் சீதாராமுல கல்யாணம் லங்கோலோ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது இது தெலுங்கில் மட்டுமே வெளியிடப்படும் தமிழ் டப்பிங் வெளிவராது என்று சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி தமிழ் டப்பிங் உரிமையை விற்றுள்ளனர். இதற்கு என்னிடம் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுந்தரலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கு தயாரிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் தமிழில் டப் செய்திருக்கிறேன். ஹன்சிகாவின் புகார் குறித்து தெலுங்கு தயாரிப்பாளரிடம் கேட்டபோது மற்ற மொழிகளில் டப் செய்ய மாட்டோம் என்று ஹன்சிகாவுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. வாய்மொழியாகவும் அவர் கேட்கவில்லை. நாங்களும் சொல்லவில்லை. என்று கூறிவிட்டார் எனவே ஹன்சிகா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மீதுதான் எடுக்க வேண்டுமே தவிர எங்கள் மீதல்ல. அதையும் மீறி அவர் எங்களுக்கு இடையூறு செய்தால் அவரை சட்டப்படி சந்திப்போம் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் அவரே ஈடுகட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹன்சிகா எதிர்ப்பது ஏன்...?

படத்தின் டப்பிங் பொறுப்பேற்றிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது "ரவுடிக்கோட்டை படத்தில் ஹன்சிகா படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் நாட்டில் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயந்து படத்தை தடை செய்ய முயற்சிக்கிறார்" என்றார்.



7 நிர்ணயம்  - பி.சி.எஸ்.எம். பட நிறுவனம் சார்பில் செல்வ கணேஷ், சிட்டிபாபு, ஸ்ரீசரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் நிர்ணயம் இதில் புதுமுகம் விக்ரம் ஆனந்த் நாயகனாகவும், ரெஜினா கசன்ட்ரா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

வேதிகா என்ற நான்கு வயது குழந்தையும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. காதல் சரண்யா, வி.கே.ராமசாமியின் மகன் வி.கே.ஆர். ரகுநாத், ஹாரீஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீசரவணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும் போது வாழ்க்கையில் காதல் மட்டுமே முக்கியம் என்று சில இளைஞர்கள் வாழ்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாமல் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இவர்களை பற்றிய கதையே இப்படம்.

தளி, காஞ்சீபுரம், சித்திர துர்கா, மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதிகட்ட பணிகள், நடக்கின்றன. இசை: வி.செல்வகணேஷ், ஒளிப்பதிவு: சிட்டிபாபு.
 
8  நுகம்  - சினர்ஜி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெஃபி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘நுகம்’. ஜெய்பாலா, இனியா, கஞ்சா கருப்பு, விஜயகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் ஜெஃபி கூறியதாவது: ‘நுகம்’ என்பதற்கு தாங்க முடியாத, தவிர்க்க முடியாத வலியுடன் கூடிய பாரம் என்று பொருள். அதாவது, மனம் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்களே, அது. அன்னிய முதலீடுகளை தடுக்கும் விதமாக செயல்படும் இரண்டு தீவிரவாதிகளைப் பற்றிய கதை.

இரண்டு கெட்டவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்கியுள்ளேன். ஜெய்பாலா, விஜயகுமார் இருவரும் தீவிரவாதிகள். கெட்டவன் என்றாலும், அவனுக்கும் காதல் வரும். தீவிரவாதி ஒருவனுடைய காதலியாக இனியா நடிக்கிறார். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மும்பை, பெங்களூரில் ஷூட்டிங் நடந்தது. இரண்டு ‘கட்‘டுகள் கொடுத்த சென்சார், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது

Escape Plan (2013) Poster



9.

Escape Plan (2013)-ஆக்ஷன் ஹீரோக்களான அர்னால்ட் ஸ்வாஜ்நேகரும் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனும் இணைந்து நடித்துள்ள ஹாலிவுட் படம், ‘எஸ்கேப் பிளான்’. இது தமிழில் ‘கேடி ராம்போ கில்லாடி அர்னால்ட்’ என்ற பெயரில் டப் ஆகிறது. தவறாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், அங்கு பல கொடுமைகளை அனுபவிக்கிறான். சக கைதியின் உதவியுடன் அவன் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் கதை. பிரமாண்டமாக உருவக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மைக்கேல் ஹாப்ஸ்டோம் இயக்கி உள்ளார். ஹோப்ஸ், வின்னி ஜோன்ஸ், வின்சென்ட் டோனோபிரியோ, எமி ரியான் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை தமிழில், எஸ் இன்டர்நேஷனல் 18,ம் தேதி வெளியிடுகிறது. 

 

When a structural-security authority finds himself set up and incarcerated in the world's most secret and secure prison, he has to use his skills to escape with help from the inside. 

 

Ray Breslin is the world's foremost authority on structural security. After analyzing every high security prison and learning a vast array of survival skills so he can design escape-proof prisons, his skills are put to the test. He's framed and incarcerated in a master prison he designed himself. He needs to escape and find the person who put him behind bars. 

 

 

Director:

Writers:

(screenplay), (screenplay), 1 more credit »

Stars:

 

சென்னை : சினர்ஜி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெஃபி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘நுகம்’. ஜெய்பாலா, இனியா, கஞ்சா கருப்பு, விஜயகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் ஜெஃபி கூறியதாவது: ‘நுகம்’ என்பதற்கு தாங்க முடியாத, தவிர்க்க முடியாத வலியுடன் கூடிய பாரம் என்று பொருள். அதாவது, மனம் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்களே, அது. அன்னிய முதலீடுகளை தடுக்கும் விதமாக செயல்படும் இரண்டு தீவிரவாதிகளைப் பற்றிய கதை.

இரண்டு கெட்டவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்கியுள்ளேன். ஜெய்பாலா, விஜயகுமார் இருவரும் தீவிரவாதிகள். கெட்டவன் என்றாலும், அவனுக்கும் காதல் வரும். தீவிரவாதி ஒருவனுடைய காதலியாக இனியா நடிக்கிறார். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மும்பை, பெங்களூரில் ஷூட்டிங் நடந்தது. இரண்டு ‘கட்‘டுகள் கொடுத்த சென்சார், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10332&id1=3#sthash.rigNIp13.dpuf