Saturday, September 21, 2013

யா யா - சினிமா விமர்சனம்

கோடம்பாக்க  காமெடி சினிமா ஃபார்முலாப்படி  ஹீரோ  ஒரு வெட்டாஃபீஸ், அவருக்கு ஒரு முறைப்பொண்ணு , முறைச்சிட்டு இருக்கற ஃபிரண்ட்.ஹீரோயினை  பார்க்கறாரு , பார்த்ததும் லவ் , ஹீரோயின் ஹேண்ட் பேக் ல  தன் ஃபிரண்ட்டோட செல் ஃபோனை போட்டுட்டு வேணும்னே  ஃபிரண்டுக்கு  ஃபோன் பண்ற மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு ( இதைப்பார்த்து யாரும்  ட்ரை பண்ணாதீங்கய்யா , நிஜ வாழ்வுல சிம்மை கழட்டி வீசிட்டு ஃபோனை யூஸ் பண்ணிக்குவாங்க உதார் பார்ட்டிங்க பொண்ணுங்க ) 


ஒரு கம்ப்பெனியோட 45 வயசு  கன்னி ஆண்ட்டிக்கு ஹீரோ மேல லவ் . இண்ட்டர்வ்யூவுக்கு வநதவரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ண  பிளான் போடறாங்க . ஹீரோவின்  ஃபிரண்ட்டை விலைக்கு வாங்கிடறாங்க . புரட்சித்தலைவி கேப்டன் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குனதைப்போல . ஹீரோவின் ஃபிரண்ட்  கருணா மாதிரி கூட இருந்துட்டே குழி பறிக்கறாரு . ஹீரோ  , ஹீரோயின்  காதல் எப்படி என்ன ஆச்சு என்பதை  ரெண்டரை மணி நேரம்  சிரிக்க சிரிக்க  சொல்லி  இருக்காங்க . 


படத்தின் ஹீரோ கம் வில்லன் சந்தானம்  தான் .ஹீரோவின் காதலுக்கு ஆப்பு வெச்சு  தன் வாழ்க்கையை வளப்படுத்தும் கேரக்டர் . சும்மா அசால்ட்டா  ஊதித்தள்ளிடறார்.அவர் படம்  பூரா 55 ஜோக்ஸ்  சொல்றார்/  அதுல 12  ஜோக்ஸ்  ட்விட்டர்ல இருந்து சுட்டது . 8  ஜோக்ஸ் எஸ்  வி சேகர் காமெடி டிராமாக்களில் அடிச்சது . 6  ஜோக்ஸ் ஏர்செல் கம்ப்பெனி எஸ் எம் எஸ் ஜோக்ஸ், மீதி  29  சொந்த சரக்கு .  எப்படியோ   சிரிப்பு வருது , அதான் முக்கியம் , சுட்டாரா? சுடலையா?ன்னு எந்த சுடலைமுத்தும் உக்காந்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க டைம் இல்லை .  இந்தப்படம் ஆல்ரெடி எகிறி இருக்கும் சந்தானத்தின் சம்பளத்தை  இன்னும் உயர்த்தும் ( இப்போ  ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் ரூபாயாம் ) 




 படத்தின் 2 வது  ஹீரோ  சிவா .  டக் டக் என  டைமிங்க்  விட் அடிப்பதில் ஆள் கில்லாடி . கொஞ்சம் முகத்தில் பாவனைகள் கொண்டு வந்தால்  தேவலை . சந்தானத்தினுடனான காம்பினேஷன் காட்சியில் டம்மியாகிறார் சில காட்சிகளில் தாக்குப்பிடிக்கறார் . ரொமான்ஸ் காட்சிகளில் அவருக்கு  எந்த வித  ஃபீலிங்கும் கை கொடுக்கவில்லை 

 பவர் ஸ்டார்  மூணாவது காமெடி . படத்தில்  இவருக்கு  பல காட்சிகளில் பல ஹீரோக்களை கிண்டல் பண்ணி டூயட் பாடும் வாய்ப்பு . அந்தக்காலத்தில் எஸ் எஸ் சந்திரன் , எஸ் வி சேகர் ஆல்ரெடி எம் ஜி ஆர் படங்களை கிண்டல் செய்து இதே போல் அப்ளாஸ் அள்ளீ இருக்கிறார்கள் . ஆனால் இந்த டைப் காமெடி  ரொம்ப நாள்  நிலைக்காது . அழகே அழகே பாட்டுக்கு ( ஓக்கே ஓக்கே ) அவர் போடும் உதயநிதி ஸ்டெப் கலக்கல் ரகம் . இவருக்கு  ஒரு அட்வைஸ் , ஆல்ரெடி  நீங்களே சொன்ன மொக்கை காமெடியை ரிப்பீட் பண்ணாதீங்க .  போர் . 


 ஹீரோயின்   தன்ஷிகா .விஷால் , அஜித் மாதிரி ஜைஜாண்டிக் ஹீரோக்களுடன்  ஜோடி சேர வேண்டியவர் காலத்தின் கட்டாயத்தால்  சிவாவுடன்  ஜோடி சேர்கிறார். காதல் காட்சிகளில்  இன்னும் கெமிஸ்ட்ரி தேவை .  கலா மாஸ்டரிடம்  ட்யூஷன் போகவும் . ஹீரோவுடன் நெருக்கமாக  இருக்கும் காட்சிகளில் காட்டாத  நவரசத்தை பவர் ஸ்டாருடனான டூயட்டில் காட்டுகிறார். பவருடன் இவர் வரும்  17 செகண்ட்ஸ் லோ கட்  ஷாட் செம ஹாட் . தியேட்டரில்  விசில் 




காதல் சந்தியா  சந்தானத்துக்கு  ஜோடி . ஹீரோயினை விட இவர் அழகாகத்தெரிவது ஆச்சரியம். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமா ?  மேக்கப் விமன் பர்சனலா வெச்சிருக்காரா? தெரியலை , கலக்கல் பிரசண்ட்டேசன் . சந்தானத்துடனான  முதல் இரவுக்காட்சிகள்  செம கிளு கிளு .


 டி வி புகழ் தேவதர்ஷினிக்கு  ஓல்டு லேடி கெட்டப்  அந்த  கல்யாண ராமன் பல் கெட்டப் எரிச்சல் . மற்றபடி அவர் நடிப்பு செம கலக்கல் , அவர் போர்ஷனை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம் , சந்தானம் , சிவா வின் தலையீட்டால் எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும் என அவதானிக்கிறேன் . 


இளவரசு சிவாவுக்கு அப்பா  கேரக்டர் ,  பெரிய வாய்ப்பில்லை  என்றாலும் வந்தவரை  ஓக்கே

 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படம்  முழுக்க  யாரையும் சிந்திக்க  விடாமல்  ஒவ்வொரு சீனுக்கும்  ஜோக்ஸ் மழையைத்தூவி விட்டுக்கொண்டே  திரைக்கதைப்பந்தலை அமைத்தது .  தியேட்டரில் ஆடியன்ஸ்   சிரிச்சுட்டே  இருக்காங்க . 


2.  படத்தில் வரும்  தன்ஷிகா , சந்தியா , ஸ்டெபி ( சிவாவின் தங்கை )  என எல்லாருக்கும்  உடை அலங்காரங்கள் அருமை . மிக ஆடம்பரமாக அதே சமயத்தில் கண்ணியமான கண்ணைக்கவரும் டிசைன்களீல்  சுடி , மிடி கள் கலக்கல் .  ஆடை வடிவமைப்பாளருக்கு  ஒரு ஷொட்டு 


3. படத்தில்  3 பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன . பவர் ஸ்டாருக்கான காமெடி டூயட் செலக்‌ஷன் அருமை . அப்ளாஸ் அள்ளுது  





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. ஹீரோ பிளான் பண்ணித்தான்  ஹீரோயினின்  ஹேண்ட் பேக்கில் நண்பனின் செல்ஃபோனை   போடறார்செல்ஃபோனை  ஹீரோயின் செக் பண்ணா கேலரியில் இமேஜஸில் சந்தானம் , சிவா  ஃபோட்டோஸ் இருக்கும் என இவருக்கு தெரியாதா? அதை எரெஸ் பண்ணிட்டு போட்டிருக்கலாமே? 


2. ஓல்டு  லேடி எம் டி  யாக வரும் தேவதர்ஷினி யின் கெட்டப்பை சந்தானம் யூத்தாக மாற்ற ஐடியா தருவது ஓக்கே, அது சிவாவை கவர , ஆனால் கூடவே வரும் அந்த எடுபுடிகள் 3 பேர் எதுக்கு ?எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா? அவங்களுக்கும்  கெட்டப் மாத்துவது எல்லாம் ஓவர் . அந்த  3 கேரக்டரும் தேவையே இல்லை . ஏகப்பட்ட  கூட்டம் 



3. ஹீரோயினுக்கு  ஹீரோ மேல் எப்போ காதல் வந்ததுன்னு  மனம் தொடும்படி சொல்லவே இல்லை இயக்குநர். ஹீரோயின் எப்பவும்  ஒரே மாதிரி முகத்தை வெச்சிட்டுஇருக்கார் .

 ( ஹீரோவும் அப்படித்தான்  இருக்கார் ,ஆனால் அவர் சுபாவமே அபப்டி , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வராது , ஆனால் ஹீரோயின் ஆல்ரெடி அரவானில் கலக்கியவர்தானே , ஏன் அவருக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை ) 


4. ஹீரோ  ஹீரோயினைப்பற்றி  உயர்வாகப்பேசுவது, அதை  ஹீரோயின் ஒளிஞ்சிருந்து கேட்பது எல்லாம்  கே பாக்யராஜ்ன் டார்லிங்க் டார்லிங்க் கால டெக்னிக்குகள் . இதெல்லாம்  இப்போ அவுட் ஆஃப் ஃபேஷன். 


5. போலீஸ் காண்ஸ்டபிளாக வரும்  சந்தியா  ஓப்பனிங்க் சீன்ல  ஒரு காமெடிக்காக போலீஸ் ஸ்டேஷன்ல  யூனிஃபார்ம் ல இருக்கார்  மீதி எல்லாக்காட்சிகளிலும் பகல் டைம் ல  ஹீரோயின்  கூடவோ , சந்தானம்  கூடவோ சுத்திட்டு தான்  இருக்கார் .  வேலைக்கே போக மாட்டாரா? 


6 .ஓல்டு லேடி எம் டி   வேலை இல்லாத  சிவாவுக்கு தன் கம்ப்பெனியில்  வேலை  போட்டுக்குடுத்துட்டா இந்திர விழாவில் நமீதா ஸ்ரீகாந்த்தை கரெக்ட் பண்ணியது போல் ரொம்ப ஈசியா   தன் கண்காணிப்பில் , கட்டுப்பாட்டில் சிவாவை “ வெச்சிருக்கலாமே? *  எதுக்கு அவர் நாக்கை சுத்தி மூக்கைத்தொடனும் ?  சந்தானம் மாதிரி ஒரு ஆள் சப்போர்ட் எதுக்கு ? 



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நைட் 12 மணிக்கு மேல டாஸ்மாக் ல சரக்கு கூட ஈசியா கிடைக்குது.ஆனா கட்டிக்கப்போற பொண்ணு கிட்டே ஒரு கிஸ் கிடைக்க மாட்டேங்குது


2. நட்பும் காதலும் கொரியன் போன்ல இருக்கும் டூயல் சிம் மாதிரி.ஒரு சிம் க்கு கால் வரும்போது இன்னொரு சிம் வெய்ட்டிங் ல தான் இருக்கனும்


3. பியூச்சர் ல பி எம் ஆகப்போற என்னை பியூன் வேலைக்குப்போகச்சொல்றாங்க.



 என்னது? அப்போ நீ பியூன் வேலைக்குப்போற அளவு படிச்சிருக்கியா?


4. போலீஸ் கான்ஸ்டபிளையே லவ் பண்ணுவியா?



 அழகா இருந்தா கான்ஸ்டபிள் ,எஸ் ஐ னு பார்க்க மாட்டோம்


5. எங்க ஏரியா பொண்ணுக்கு உன் பிரண்ட் ஏன் லெட்டர் குடுத்தான்? 

 6.  வருசமா எல்லாருக்கும் குடுத்துட்டு இருக்கான்.ஏன்னா அவன் போஸ்ட்மேன்   ( எஸ்  வி சேகர்  டிராமா  ஜோக் ( வால் பையன் ) 


7. செல்லுல பேலன்ஸ் இல்லைன்னா லவ்வை பேலன்ஸ் பண்ண முடியாது



8. ஸாரி சொன்னா எல்லாம் சரி ஆகிடுமா?



 சந்தானம் - அப்போ ஆளுக்கு ஒரு செட் பூரி சொல்லட்டா? 



9. பழகுன பொண்ணை புள்ளத்தாச்சி ஆக்கும் பசங்களைக்கூட நம்பிடலாம்.ஆனா புள்ளப்பூச்சி மாதிரி இருக்கும் பொண்ணுங்களை நம்பக்கூடாது.



10. சிவா - எதுக்காக என் பிரண்ட்சை அடிச்சே?



 சந்தானம் - காசு கொடுத்தா நான் என் பிரென்ட்ஸையே அடிப்பேன்  




11.  உனக்காக உன் பேரை என் கைல பச்சை குத்தி  இருக்கேன் 


 யாராவது  வெள்ளைக்கலர்ல  பச்சை குத்துவாங்களா? சாக்பீஸ் ல எழுதி வெச்சுக்கிட்டு  சீன் போடறியா? 



12/  உனக்கு வேலை  கிடைக்கனும்னா இண்டர்வ்யூவுல ஒயின் ஷாப் எப்போ திறப்பாங்க ? எந்த எந்த டாஸ்மாக்ல எந்தந்த சரக்கு கிடைக்கும்? இந்த மாதிரி கேள்விகளா கேட்கனும் 


13. எப்பேர்ப்பட்ட ராஜாவா  இருந்தாலும் அவங்களை ஆண்டி ஆக்க இந்த பொண்ணுங்களால மட்டும் தான்  முடியும்  


14.  காதலியை எப்பவும்  தேவதையாப்பார்க்க   ஆசைப்படுவோம் , ஆனா அவங்க  நம்மை தேவதாசாப்பார்க்க ஆசைப்படுவாங்க  ( ட்விட்டரில் சுட்டது ) 


15. சந்தானம்  - இவன் எதுக்கு எச்சி தொட்டு முஞ்சி கழுவறான் ? 



16. சந்தியா - வாவ் !!!

 சந்தானம் - யார் இங்கே இப்போ வாமிட் எடுத்தது ? 


17.   ஏய்  மிஸ்டர் . உனக்கு எப்படி கண் போச்சு ? 

  பக்கத்து  வீட்டுப்பொண்ணு குளிச்சுட்டு இருந்தது . அதை பார்த்தேன் கண்ணு போயிடுச்சு 

 அது எப்படி ? 


 அந்தப்பொண்ணு தீக்குளிச்சுட்டு இருந்தது . என்னன்னு கிட்டே போய் பார்த்தேன் , கண் அவுட்   ( எஸ் வி சேகரின்  டி வி டிராமா  வண்ணக்கோலங்கள் -ல் சுட்டது  ) 


18.  சந்தானம்  டூ சந்தியா  - டைனிங்க் டேபிள் ஹைட்  இருந்துட்டு   உனக்கெல்லாம் எப்படி போலீஸ் கான்ஸ்டபிள் வேலை  கிடைச்சது ? 



19 . சந்தியா  டூ சந்தானம்  - இந்த வாசல் உங்களுக்காக எப்பவும் திறந்தே  இருக்கும்  ( டபுள் மீனிங்க் ) 




20  சந்தானம் - அந்தப்பொண்ணு மேல உனக்கு என்ன  கோபம் டா ? கோயில் பிச்சைக்காரி மாதிரி வரைஞ்சு வெச்சிருக்கே? 



21,   புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணுங்க  பின்னால போன ஆணும்  உயிர்  பிழைச்சதா சரித்திரமே  இல்லை ( எஸ் எம் எஸ் ஜோக் , இது ஆல்ரெடி  ஒரு கல் ஒரு கண்ணாடி ல சந்தானமே சொல்லிட்டாரு ) 



22. இந்தக்கால பொண்ணுங்க கிட்டே மொபைல் நெம்பர் வாங்கறதும்  , கர்நாடகாவுல தண்ணீர் வாங்கறதும் ஒண்ணு , அவ்வளவு  சீக்கிரம் நடக்காது 


23. சந்தான்ம்  - என் மொபைலை ஏண்டா  அவ ஹேண்ட் பேக்ல போட்டே?  


 சிவா - என் மொபைலை போட்டா எங்கப்பா  திட்டுவாரு


24.  அது என்னாங்கடி உங்களுக்கு மட்டும் லவ் லாண்டரித்துணி மாதிரி இவ்ளவ்   லேட்டா   வருது ?



25. நான் மப்புக்காக பழகறவன் இல்லை , நட்புக்காக பழகறவன் , சரக்கு குடுத்து  என்னை  விலைக்கு வாங்க  முடியாது 

 இந்தா  3 லட்சம் 


 ஹி ஹி  இது ஓக்கேங்க 


26.  எக்ஸ்க்யூஸ் மீ லேடீஸ் , மே ஐ கம் இன்  டூ மை ஓன் ஹவுஸ் ? 



27. மாப்பி , இந்த  ஃபோனை வெச்சு  ஒரு  டிராமா பண்ணனும் 

 ஃபோனை வெச்சு கால் தான் பண்ன முடியும் , எப்படி  டிராமா பண்ன ? 


28. பவர் ஸ்டார் - கான்செப்ட்  ரொம்ப சின்னதா  இருக்கே?  அதான் நடிக்கலாமா>? வேணாமா?ன்னு யோசிக்கறேன்  

 சந்தானம்  - கல்கியின் பொன்னியின் செல்வன்  இருக்கு பண்றியா?  மணிரத்னமே பண்ண யோசிக்கறாராம் 


29 . சந்தானம்  டூ சிவா  - டேய் , நீ எல்லாம் சீரியசாப்பேசாத , காமெடியா  இருக்கு 


30 பிப்ரவரி 14 ல யாரோட காதல் புட்டுக்கிச்சுன்னாலும் கவலைப்படாதீங்க , அதுக்குப்பிறகு  பிப் 15 இருக்கு , வேற பொண்ணுங்களும் இருக்காங்க 





31. சிவா - என்னை யாராலும் ஏமாத்த  முடியாது

 சந்தானம் - டேய் , சீதா டா 


 சிவா - எங்கேடா? 

 சந்தானம் - இப்போத்தான்  யாராலும் ஏமாத்த முடியாதுன்னே? கி கி 


32. மாடு புல் சாப்ட்டாலும்  பால் தருது, பாம்பு  பால் சாப்ட்டாலும் விஷம் தான் தருது   ( ட்விட்டரில்  சுட்ட லைன் ) 



33. உனக்கு செலவுக்குப்பணம் வேணும்கறதுக்காக  நான் ஏண்டா  வேலைக்குப்போகனும் ? 


 எவனோ பாட்டு கேட்க நாம காசு கொடுத்து காலர் ட்யூன் வைக்கறதில்லையா>  அந்த மாதிரி 


34. எதுக்கு இத்தனை செக்யூரிட்டி ? அவர் என்ன ஃபிளைட்டா ஏறப்போறாரு ? முதல் இரவுதானே நடக்கப்போவுது ? 


35. அவதார் படம் எடுத்தவனுக்கும், அஜால் குஜால் படம் எடுத்தவனுக்கும்  ஒரே மூளை  தான் , யூஸ் பண்ணிக்கற விதம்  தான் வேற 


36.  விடிஞ்சா  எனக்கு கல்யாணம் , அதுவும்  முடிஞ்சா எனக்கு எனக்கு ஃபர்ஸ்ட் நைட்  


37.  உன்னால என்  மேரேஜை நிறுத்தவே  முடியாது 

 ஏன் ? 

 ஏன்னா  கல்யாண முகூர்த்தம்  காலைல 7 மணிக்கு  , அவ்ளவ்  சீக்கிரம் நீ எழுந்துடுவியா?  நீ எப்பவும்  10 மணிக்குத்தானே எந்திரிப்பே? 


38. நீ  உடனே  என் கிட்டே சாரி சொல்லனும் 


 சாரி , என் வாயால சாரி  சொல்லவே மாட்டேன் 

 அடடா, இப்போ சொல்லிட்டியேடா? 



39. இது என்ன கல்யாண மடமா?  மசாஜ் செண்ட்டரா> வரிசையா பொண்ணுங்க  3 பேரு வந்து தடவிட்டு போறாங்க  ? 



40  பவர் ஸ்டார் -  சின்னப்பையன் மனசுல ஆசையை வளர்த்துட்டீங்க 


தன்ஷிகா   - யோவ் ,  நீ சின்னப்பையனா?  பாக்க தாத்தா மாதிரி இருக்கே 


 நீ  கூட ஆயா  மாதிரி தான் இருக்கே  , நான் ஏதாவ்து  சொன்னேனா? 


41. சந்தானம்  - டேய்  தகப்பா , முதல்  இரவு கட்டில்ல  பூவை டக்னு தூவிட்டு கிளம்பாம  எதுக்கு டா  புறாவுக்கு தீனி  போடற மாதிரி பண்ணிட்டு  இருக்கே? 

 மவனே , உன் கிட்டே மனம்  விட்டுப்பேசுவதற்காக வெயிட்டிங்க் 

  டேய் நாயே  உன் கிட்டே பேசறதுக்கா  மெனக்கெட்டு மேரெஜ் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்  வரை வந்திருக்கேன் ? 


42 . என் மாமா பையனை காணோம் , தேடனும் , எபப்டின்னு நான் திங்க் பண்ணிட்டு இருக்கேன் , தொந்தரவு பண்னாதீங்க  


 சரி வா , படுத்துட்டே 2 பேரும்  திங்க் பண்ணலாம் 

 ச்சீய் 


43 . அடியேய் , நகருங்கடி 2 பேரும் , அவன் என்ன புயல்ல  விழப்போற  கரண்ட் கம்பமா? 2 பேரும் ஆளுக்கொரு பக்கம்  தாங்கிட்டு நிக்கறீங்க  தள்ளுங்கடி

 
 


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =  3 / 5


சி பி கமெண்ட் -  ஏ செண்ட்டரில்  இது  ஹிட் ஆகிடும் . இந்தப்படத்தை  விட அழுத்தமான கதை அம்சம் , மேக்கிங்க் ஸ்டைல் பிரமாதமா  இருந்த 6 படத்துக்கு  கூட்டமே இல்லை . இதுக்கு செம கூட்டம் . படம் சர்வ சாதாரணமா 3 மடங்கு லாபம் சம்பாதிச்சுக்கொடுத்துடும் . ஜாலியா கல கலன்னு ஒரு டைம் பாஸ் படம் , எல்லாரும் பார்க்கலாம் . ஈரோடு அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன் 

diski -

6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/6.html





Friday, September 20, 2013

6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்

ஐ டி ல ஒர்க் பண்ற  ஹீரோ  தன்  மனைவி , மகனோட  பீச்சுக்குப்போறாரு. அன்னைக்குத்தான் பையனோட 6 வது பர்த்டே .( டைட்டில் க்கு காரணம் ) அந்த  கூட்டத்துல  பையன் எப்படியோ மிஸ் ஆகிடறான். அம்மா , அப்பா 2 பேரும் பதறி பீச் பூரா தேடறாங்க , பையன்  கிடைக்கலை . போலீஸ் ஸ்டேஷன் போய் புகார்  தர்றாங்க


 குழந்தைகளைக்கடத்தறதையே  தொழிலா வெச்சிருக்கும் கும்பல் நெட் ஒர்க் பற்றி தெரிஞ்சு தேடுதல் வேட்டை நடக்குது . ஹீரோ  எப்படியோ  பையனைக்கடத்தின  ஆளைக்கண்டு பிடிச்சடறார். ஆனா அவன் ஒரு கோடி பணம் கேட்கறான். பேரம் பேசி  50 லட்சம்  ரூபாவுக்கு ஓக்கே சொல்ல வைக்கறார்.


ஆனா பணம்  கொடுத்த பின்னும் தகராறு  நடந்ததுல  அந்த  குரூப் எஸ் ஆகிடுது. எப்படி  ஹீரோ பையனைக்கண்டு பிடிக்கறாரு என்பதுதான்   ஆக்‌ஷன் பரபர காட்சிகள் கொண்ட திரைக்கதை .


 இயக்குநர் சாதாரண ஆள்  இல்லை . அஜித் -ன் வித்தியாசமான படமான  முகவரி , பரத் -ன் ஆக்‌ஷன் த்ரில்லர் நேபாளி ஆகிய படங்களின் இயக்குநர் . பாடல்களும் எழுதி  இருக்கார் . அவர்  தான் படத்தின்  முதல் ஹீரோ . எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகாம  எந்த விதமான கமர்ஷியல் காம்ப்ரமைஸ்ம் பண்ணிக்காம   அழுத்தமான  திரைக்கதை  கொடுத்திருக்கார். மேக்கிங்க் ஸ்டைலும்  ஓக்கே


ஷாம்  தான்  ஹீரோ . இவருக்கு இது சொந்தப்படம் . தூங்காம  பல நாட்கள் விழிச்சிருக்காரு என்பதைக்காட்ட   கண்-ண்ணுக்கு கீழே  கட்டி வந்த  கெட்டப் , ஆள் இளைக்கும்  காட்சி  விக்ரம் மாதிரி சிரத்தையா பண்ணி  இருக்கார் . வெல்டன் ஷாம் .


பூனம்  கவுர் தான்  நாயகி . இவருக்கு  பெரிதாக வேலை இல்லை என்றாலும்  வந்த வரை நல்ல நடிப்பு . உனக்கு எத்தனை குழந்தை வேணும் ? நான் பெத்து தர்றேன் , நம்ம பையன்  கிடைக்காட்டி பரவால்லை , நீயாவது  திரும்பி வா என கதறும் டெலிபோன் காட்சியில் அவர் நடிப்பு  அருமை .

படத்துக்கு வசனம்  ஜெய மோகன் . குறிப்பிட்டு சொல்லும்படி 6 இடங்களில் தான் வசனம் பிரமாதம் .பட டைட்டிலை நினைவுல வெச்சுக்கிட்டார் போல . ஆனால்  தேவை இல்லாமல் வழ வழா கொழா கொழா வசனம் ஏதும் இல்லை , எல்லாம் நறுக்குத்தெறித்தாற் போல  . குட் ஒர்க்


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. எதிர் பாராத நேரத்தில்  ஒரு பிச்சைக்காரன் காலில் விழுந்து  ஹீரோயின்  கதறும் காட்சி பகீர் . குழந்தையைப்பறி கொடுக்கும் பெற்றோர் மனம் எப்படி பரிதவிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் 


2. குழந்தையைத்தேடி ரோட்டில் இரவில்  ஓடும்  ஹீரோ  தனியாக நிற்கும் ஒரு குழந்தையை  அதன்  குடிசை வீட்டில் ஒப்படைக்க  முயல  அங்கே  தொழில் நடத்தும் கில்மா லேடி “ எல்லாம் என் குழந்தை தான் , தெரியும் , நாங்க பார்த்துக்குவொம் “ என அசால்ட்டாக சொல்லும் காட்சி சமூக அவலத்தை சொல்லும்  சுருக் காட்சி 


3.  அரிசி வியாபாரி  தன் பேரன் மேல்  பொய் சத்தியம் செய்வதும்  , அதை  ஷாம் கண்டு பிடிப்பதும்  நல்ல சஸ்பென்ஸ் காட்சி 


4. அரவாணி  போல் வந்து எடுபுடி மாதிரி நடப்பவர் தான்  உண்மையில்  அந்த கூட்டத்துக்கே  பாஸ் என்பதும்  சரியான   திருப்பு முனைக்காட்சி . அவரின் வில்லத்தன நடிப்பு தமிழுக்கு  புதுசு 


5. ஹீரோயின்   கோதுமை அல்வா மாதிரி  இருந்தாலும் , அவர் தாராள ம்னம் கொண்டவர் என்ற பிளஸ் பாயிண்ட்  இருந்தும்  ஒரு டூயட் கூட வைக்காமல் திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக நகர்த்திய  இயக்குநரின் சாமார்த்தியம் 


6.  தன் மகன் ஆபத்தில் இருக்கான் என்ற உணர்வு இருந்தும்   இன்னொரு  பொண்ணைக்காப்பாற்ற   ஹீரோ  துடிப்பது சபாஷ்  இயக்கம் 



7. பாதிக்கப்பட்ட  ஒவ்வொரு அப்பாவும்  இந்த மாதிரி  கும்பல் ல 4 பேரையாவது வெட்டிப்பொட்டாதான் இவனுங்களுக்கு எல்லாம் பயம் வரும் என  ஹீரோ பேசும் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது . பிரமாதமான  ல் காட்சி 


8. படத்தில்  வரும் அனைத்து  வில்லன்கள் நடிப்பும்  அருமை , நல்ல தேர்வு , எல்லாரும் பொறுக்கிப்பசங்க போல 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 




1. போலீஸ் ஸ்டேஷனில்  புகார் கொடுக்க ஹீரோ எண்ட்டர் ஆகும்போது  வலது கையில் வாட்ச் கட்டி இருப்பவர் அடுத்த  ஷாட்டில்  ஏட்டய்யா முன் நிற்கும்போது  இடது கையில் வாட்ச் கட்டி இருப்பது ( கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் ) 


2.  சம்பவம் நடந்த  36 மணி நேரத்தில்  அதாவது ஒன்றரை நாளில்  ஹீரோவுக்கு மழு மழு கன்னம்  டூ 20 நாட்கள்  தாடி வந்து விடுவது , 


3. குழந்தையைப்பறி  கொடுத்த பதட்டத்தில்  இருக்கும்  ஹீரோ , பின் யாரோ   ஒரு வழித்துணை என காரில்  நெடும் பயணம்  மேற்கொள்வது  ஏன் ?  வசதி ஆனவர்கள் தானே , டாக்சி வைத்திருக்கலாமே? அவங்க  2 பேருமே  1000 கிமீ மாறி மாறி ட்ரைவிங்க் செய்வது  ரிஸ்க் ஆச்சே? 


4. கடத்திய கும்பல் தலைவன்  பையனை காட்ட மாட்டேன் , பணத்தை என் அக்கவுண்ட் ல போடு , காட்டறேன்  , முதல்லியே காட்டுனா நீ தகறாரு செஞ்சு பையனை கூட்டிட்டுப்போயிடுவே என்கிறார் , ஓக்கே நேரில் காட்ட வேண்டாம் , செல் ஃபோன் வீடியோவிலோ, ஃபோட்டோவிலோ பையனை காட்டு , அப்போ தான் பையன் உன் கிட்டே இருக்கானா? என்பதை உறுதி செய்ய முடியும்னு ஹீரோ ஏன் வாதாடலை ? 




5. ஹீரோ வுக்கும்  , கடத்தல் கும்பல் தலைவனுக்கு,ம் தகறாரு , டக்னு  ஹீரோ மனைவிக்கு   ஃபோன் பண்ணி பேசுனப்டி அந்த அக்கவுண்ட் ல பணம் போட வேண்டாம் அப்டினு ஏன் சொல்லலை?   அதே  போல்  மனைவி பணம் ரெடி பண்ணியதும்,   ஏங்க  பணம்  ரெடி  போட்டுடலாமா? என ஏன் கணவனிடம் கேட்கலை ?   பொதுவா  பொண்டாட்டிங்களூக்கு புருஷன் பேச்சை கேட்க்கும் பழக்கம் இல்லை என்றாலும்  பணம் விஷயம் , தொகை அதிகம் என்பதால் கண்டிப்பா கேட்பாங்களே ? 


6.  எல்லாம்  முடிஞ்சு   மீண்டும் தேடுதல் பயணத்தில்   இருக்கும்  ஹீரோ ஏன் மனைவிக்கு  தொடர்ந்து  கால் பண்ணவே இல்லை ?   ஹீரோயின்   ஃபோன் பண்ணி  ஏன் ஃபொன் பண்ணலை? என கேட்கும்போது கூட எந்த  ரீசனும் சொல்லலையே ஏன் ? 


7 . வீட்டை வித்து  இருவர்  வேலை செய்யும் ஆஃபீசில்  லோன் வாங்கி  50 லட்சம்  ரூபா  புரட்டிய  பின்  அதுவும் பறி போன பின்   ஹீரோ வுக்கு  மீண்டும் செலவுக்கு ஏது அத்தனை பணம் ?


8. குழந்தையை பறி கொடுத்த  ஹீரோ   பிச்சைக்காரன்  போல்  மேக்கப்பில்  இருக்க  ஹீரோயின் 13  ரீலிலும் முதல் இரவுக்குப்போகும்   முயல் குட்டி மாதிரி செம மேக்கப்பில்  இருப்பது எப்படி ? 


9 க்ளைமாக்சில்  பையன்  திரும்ப சந்திக்கும் காட்சியில் பின்னணி  இசை பிரமாதப்படுத்தி  இருக்க வேணாமா?  காதலுக்கு மரியாதை படத்தில்  இளைய ராஜா ஒரு பி ஜி எம் போட்டிருப்பாரே க்ளைமாக்சில் எல்லாரும் அந்த காதலுக்கு  சரி சொல்லும்போது அது போல் ஜீவனுடன் இருக்க வேண்டாமா  பின்னணி இசை ? 

10  வில்லனிடம்  மரண பயமே  இல்லையே , சாகும் நேரத்தில்  சிரிச்சு  ஹீரோ  கிட்டே பஞ்ச் பேசிட்டு  இருக்காரு . அவருக்கு மன்சுல இளைய தளபதி விஜய்னு நினைப்பா?  டக்னு எந்திரிச்சு  ஓடாம ... வெள்ளாட்டு புத்தி



மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிச்சைக்காரனுக்கு பிச்சை கிடைக்கும் நாள் எல்லாம் விசேஷ நாள் தான்


2. எனக்கு காசு ஏதும் வேண்டாம் , மேலே இருக்கறவன் கீழே இருப்பவனுக்கு ஒரு ரூபாயை சுண்டி பிச்சையா போடுவீங்களே அந்த மாதிரி கீழே இருப்பவன் மேலே இருப்பவனுக்கு பிச்சை போட்டதா இந்த உதவியை நினைச்சுக்கறேன்


3. இங்கே கிருஷ்ணராவ் இருக்காரா?

ஆந்திராவில் பாதிப்பேரு கிருஷ்ணராவ் தான் , உனக்கு எந்த கிருஷ்ணராவ் வேணும் ?


4. கடப்பாரை எடுத்து என்னை ஏத்தி இருந்தாக்கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன் , ஆனா கடப்பாரைலயே என்னை இறக்கிட்டயே


5. என்னைப்பார்த்தா உனக்கு என்ன தோணுது ?

நீ மாமாப்பையன் தானே? ( தியேட்டரில் அப்ளாஸ் )


6. நீ என்ன சொன்னாலும் நான் கேட்க்றேன்


நான் சொல்றதைக்கேட்க சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யும் 1000 பேர் எனக்கு இருக்காங்க




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   3  / 5 


சி பி கமெண்ட் - 6 மெழுகுவர்த்திகள் - குழந்தைக்கடத்தல் பற்றிய அழுத்தமான பதிவு , ஷாம்க்கு பிரேக் கொடுக்கும் படம் , ஆனால் கமர்ஷியலாய் பெரிய அளவில் ஹிட் ஆவது டவுட் . போட்ட முதலிட்டை எடுத்து விடும் , ஏ சென்ட்டரில் மட்டும் நல்லா ஓடும்
படம்  பெண்களும் பார்க்கலாம்


டிஸ்கி - சி பி யிடம் சில கேள்விகள் அப்டிங்கற பேர்ல யாரும் - இந்த ஸ்டில்ஸ் எல்லாம் படத்துல எங்கே எப்போ வருது?ன்னு கேட்கக்கூடாது , அது  ஏ டி எம் கேல சேரும்  மாற்றுக்கட்சி ஆட்களுக்கு அம்மா தரும் இன்னொவா கார் பரிசு மாதிரி . எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் , ஹி ஹி
a


டிஸ்கி 2  -

யா யா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_2147.html

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை




1. யா யாதற்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் பெரிய அளவில் ஹிட்டாவதால் நிறைய நகைச்சுவை படங்கள் வெளிவருகின்றன. இதனால் நகைச்சுவை நடிகர்களின் இடம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சம்பளத்தையும் கதாநாயகர்களுக்கு இணையாக உயர்த்தி விட்டனர்.

அதிகம் சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் சந்தானம் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘தில்லுமுல்லு’ என இருபடங்கள் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கின்றன.


தற்போது சந்தானமும் சிவாவும் இணைந்து ‘யாயா’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி கேரக்டரில் சிவாவும் ஷேவாக் கேரக்டரில் சந்தானமும் வருகிறார்கள்.
சமீபத்தில் பரபரப்பாக கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராவதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது:-
‘யாயா படத்தில் எனது கேரக்டரை டோனி என்றும் சந்தானம் கேரக்டரை ஷேவாக் என்றும் அழைப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. கிரிக்கெட்டுக்கும் இப்படத்துக்கும் தொடர்பு இல்லை. படம் பார்க்கும் போது எதற்காக அந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது புரியும்’ என்றார்.

2 6 மெழுகுவர்த்திகள் -கோடம்பாக்கத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, ஷாம் நடிக்கும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்திற்கு. ஷாம், பூனம் கவுர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் துரை இயக்கியிருக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரே புரியவில்லையென்றாலும் படத்தில் ஷாமின் நடிப்பு மிகவும் வித்யசமாக இருந்தது.
எனவே படத்தை வாங்கி வெளியிட பட முதலாளிகள் கோடம்பாக்கத்தில் காத்துக்கிடப்பதாகவும் அதில் ஸ்டியோ கிரீன் ஞானவேல் ராஜா ஒருவரும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சமீபத்தில் வெளிவந்த ஹரிதாஸ் படத்தில் குழந்தை காணாமல் போவதும், அதை கடத்தியது வில்லன்தான் என்பது போலவும் காட்சிகள் இருக்கும்.
இதே போன்ற சில காட்சிகள் ஷாம் நடித்த 6 படத்திலும் இருக்கிறதாம். ஹரிதாஸ் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார் 6 படத்தின் இயக்குனர் துரை.

6 மெழுகுவர்த்திகள் படத்திற்காக நடிகர் ஷாம் 10 நாட்கள் தூங்காமல் கண்களை வீங்க வைத்துக் கொண்டார். இதுமட்டுமல்லாமல் மேலும் சில உடல் ரீதியான மாற்றங்களையும் மிகவும் கடினப்பட்டு படத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தார் என்றும் சொல்லும்.

6 மெழுகுவர்த்திகள் - சினிமா

 விமர்சனம்

 

 http://www.adrasaka.com/2013/09/6.html

.அடுத்த கட்டம்” - பெரும்பாலும் தமிழ்சினிமாக்களில் பாடல் காட்சிகளுக்காத்தான் வெளி நாடுகளுக்குப் பயணமாவார்கள்.
அதுவும் இங்கிருந்து செல்லும் தொழில் நுட்பக்கலைஞர்களைக் கொண்டுதான் அதனைப் படமாக்கியும் வருவார்கள். முதல் தடவையாக ஒரு தயாரிப்பாளர் மட்டும் மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருக்கும் தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு மிரட்டும் ஒரு திகில் படத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதா..? படத்தின் பெயரும் “அடுத்த கட்டம்” தான்.

அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர்சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் வழங்கும் NGP Films  நவநீதன் கணேசன் தயாரிப்பில் உருவான அடுத்த கட்டம் படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னை பிரசாத் லேப்பில்  நடந்த்து. நடிகர்கள் ஸ்ரீகாந்த், சம்பத் இயக்குனர்கள் வா.கெளதமன், இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வா.கெளதமன் பேசும் போது, “தயாரிப்பாளர் ஆரூர் சுந்தரம் திரைப்பட இயக்கத்தில் DFT –படித்தவர். 12 வருடங்களாக  நல்ல படங்களைத் தரக்காத்திருக்கும் சினிமா ரசனையுள்ளவர். தயாரிப்பாளாராக இங்கிருந்து சென்று முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் நடிகர்களையும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் வைத்து  அட்டகாசமான ஒரு திகில் படத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். சாதாரணமாகக் கிடைக்கும் வெளிச்சத்தில் படம் பிடித்திருப்பதும் அருமையாக இருக்கிறது. இங்கே தமிழ்ப்படங்கள் எடுப்பவர்களைக் கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். திரைப்படங்களில் இருப்பவர்கள் தான் திரைப்படங்களைக் கொச்சைப் படுத்தவும் செய்கிறார்கள். சக கலைஞனைக் கொண்டாட வேண்டாம் அதே நேரம் அவன் மனதைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா... இங்கே ஜெயித்தாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள்...தோற்றாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள்... படம் சரியில்லை மொக்கை என்று முதல் ரீல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “மெசேஜ்”அனுப்பி விடுகிறார்கள். தமிழ்சினிமாவை நாம் கொண்டாடவில்லையென்றால் வேறு யார் கொண்டாடுவார்கள்..? அதே நேரம் துளசிசெடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் கஞ்சா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி செழித்து வளரச்செய்வதும் இங்குதான் நடக்கிறது. சமுதாயத்தைச் சீரழிக்கும் எந்த ஒரு திரைப்படமும் இங்கே ஓடக்கூடாது...” என்று பேசினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “திறமை எங்கிருந்தாலும் வரவேற்பதுதான் நமது பண்பாடு... மலேசிய-சிங்கப்பூர் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட அடுத்த கட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்..”என்றார்.

தயாரிப்பாளர் நவநீதன் கணேசன் பேசும் போது, “திகில் படம் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் பாடல்கள் இல்லாமல் எடுத்திருக்கிறோம்... முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் கலைஞர்களைக் கொண்டு அடுத்த கட்டத்தை தயாரித்தது போல தமிழகக் கலைஞர்களும் மலேசிய சிங்கப்பூர் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றும் படங்கள் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. தமிழகக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வார்கள், படைப்பும் நன்றாக வரும்..” என்றார்.

அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர்சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் தமிழகம் முழுவதும் அடுத்த கட்டத்தைத் திரையிடவுள்ளனர்.
5.


4
5,விடியும் வரை பேசு - ஏ.எம்.பிலிம்ஸ் சார்பில் ஏ.எம். முகன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் `விடியும் வரை பேசு'. இதில் புது முகங்கள் அனிருத் நாயகனாகவும், நன்மா, வைதேகி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். மீரா கிருஷ்ணன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர். 

படம் பற்றி இயக்குனர் முகன் சொல்கிறார். செல்போனை வைத்து தயாராகியுள்ள முக்கோண காதல் கதை. மிஸ்டு கால் சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கும். எல்லா கேரக்டர்களும் செல்போனிலேயே பயணிக்கும். நாயகனுக்கு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசும் பெண்ணோடு நட்பாகிறான். அடிக்கடி பேசி காதல் வயப்படுகிறான். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அப்பெண்ணும் சம்மதிக்கிறாள். அவளை சந்திக்க காத்திருக்கிறான். அப்பெண்ணோ வரவில்லை. அதன் பிறகு அவன் என்னவாகிறான் என்பது மீதி கதை. 

காமெடி கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ளது. சமூக பிரச்சினையும் படத்தில் இருக்கும். சென்னை, புதுவையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது. 

இசை: மோகன்ராஜ், ஒளிப்பதிவு: ராஜாமணி, எடிட்டிங்: பி.கே. மோகன், நடனம்: ராபர்ட்சன், ஸ்டண்ட்: ஆர்.கே. முரளி.




நாற்காலியின் நு66னியில் உட்கார வைக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். பெரும் பகுதி சென்னையை  சுற்றி இரவு நேரத்தில் மட்டும்  படமாக்கப்பட்டது. ஸ்ரீ இப்படத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவனாக  வாழ்ந்து காட்டியுள்ளார்.



5. மவுன மழை - மவுன மழை பாடல் வெளியீடு 


5/9/2013 1:11:53 AM

சென்னை : திலீப்குமார், மனிஷா ஜித், கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, சண்முகராஜன் நடித்துள்ள படம், ‘மவுன மழை’. பிரின்ஸ் மீடியா சார்பில் கே.ஜாபர் அலி தயாரிக்கிறார். ஆனந்த் இயக்குகிறார். ஒளிப்பதிவு, டி.மகிபாலன். இசை, ஆதிஷ். பாடல்கள், வி.எம்.ஆறுமுகம். இதன் பாடலை கலைப்புலி ஜி.சேகரன், சித்ரா லட்சுமணன் வெளியிட்டனர். விஜய மனோஜ்குமார், கில்டு செயலாளர் ராஜா, விஜயமுரளி, பீலிசிவம் பெற்றனர். படம் பற்றி ஆனந்த் கூறும்போது, ‘ஹீரோவும், ஹீரோயினும்  பேசாமல் காதல் வளர்க்கின்றனர். ஹீரோ தன் காதலுக்காக எதையும் செய்யத் துணிகிறார். ஆனால், எதிர்பாராத ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது கதை’ என்றார்

- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9750&id1=3#sthash.7bJrWxBU.dpufa



டீ டோட்டலர் , அபிலாஷா, டிரஸ் கோடு , முதல் பாவம்




1. அஜித்தா இருந்தாலும் அஜிதாவா இருந்தாலும் காலையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே


--------------------------------



2. அவங்கவங்க வீட்டுக்குள்ளே இருக்கும் நெருங்கிய சொந்தங்களை கண்டுக்கவே கண்டுக்காத தமிழன் ட்விட்டர்ல வளைச்சு வளைச்சு வணக்கம் போடுவான்


-----------------------


3. தமிழனின் கன்னத்து முத்தம் தொட்டுத்தொடரும் பாரம்பரியம்.ஆங்கிலேயரின் லிப் கிஸ் அப்படியே அப்பிக்கொள்ளும் வீரியம் # கிஸ்ஸாலஜி்



------------------------



4. வாழ்க்கையை சுவராஸ்யம் ஆக்குவது பெண்கள்.ஹாஸ்யம் சேர்ப்பது ஆண்கள்.




---------------------


5. அவங்கவங்க வீட்டு மொட்டை மாடியிலேயே வாக்கிங் போய்க்கொண்டு ,கிரவுன்டுக்கு வராத பெண்களை வன்மையாக கண்ணடிக்கிறேன்.சாரி கண்டிக்கிறேன்



------------------------


6. நல்லவேளை.இந்த டிரஸ்கோடு பழக்கம் தலைவா வில் தொடங்குச்சு.அபிலாஷாவின் லட்சியப்படமான முதல் பாவம் ல தொடங்கி இருந்தா என்ன ஆகி இருக்கும்?



------------------------



7. கே ஆர் விஜயா = புன்னகை அரசி .சிநேகா = புன்னகை இளவரசி .அப்போ பிரசன்னாவுக்கு விஜயா மாமியார் முறை ஆகுமா?




-------------------------


8. செப் 6 வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்க்க வரும் பிகர்கள் ஊதா கலர் ரிப்பனை சவுரியில் கட்டி வரவும் # டிரஸ் கோடு


-------------------------


9. தங்க மீன் (கோல்டு பிஷ்) என்றதும் கொடி பறக்குது அமலா நினைவு வந்தால் நீ கமர்ஷியல் ரசிகன்.இயக்குநர் ராம் நினைவு வந்தால் கலைப்பட ரசிகன்



----------------------


10/ கண்ணியமான சொல் பிரயோகம். வேலைக்காரி = பணிப்பெண் ,சலவைக்காரி = உடைப்புத்துயிர் வல்லுநர்



-----------------------



11. நான் சின்னப்பையனா இருக்கும்போது நர்சுஸ் காபின்னா நர்சுங்க வெச்சுத்தரும் காபின்னு நினைச்சேன்




-----------------------


12. ராமர் மற்ற பெண்களுக்கு ஒரு உதாரண புருசர்.சீதைக்கு மட்டும் உதா ரண புருசன்




------------------------



13. கைவீசம்மா கைவீசு' -ன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.வீசினாள்.கன்னம் பழுத்தது #,பளார்



-------------------------


14.பசித்தவுடன் சம்சாரி சமைப்பான்.பிரம்மச்சாரி மெஸ்க்கு போவான்.ட்விட்டர் ஆகப்பட்டவன் எனக்கு பசிக்குது என ட்வீட் போடுவான்



---------------------


15.அன்பே! நீ என் மீது எரிந்து விழு கை யில் கூட எரி நட்சத்திரமாகத்தான் தெரிகிறாய் ! வெவ்வெவ்வே ;-)




-------------------


16. டாக்டர் வெயிட் தூக்கி பழகச் சொல்லிருக்கார் னு யாரும் அவங்கவங்க சம்சாரத்தை தலைக்கு மேல தூக்கி வெச்சு ஆடாதீங்கய்யா ;-)




-----------------------



17. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர அருகாமையில் உள்ள ஜி ஹெச் சென்று வாருங்கள்



-------------------------


18.ஆபீஸ் ல டோட்டலா எத்தனை பொண்ணுங்க இருந்தாலும் எல்லாரையும் உரிமையா டீ போட்டு கூப்பிடறவன் தான் டீ டோட்டலர் ?



---------------------



19. பெண் என்று சொன்னால் போதாதா? அதென்ன பெண்மணி? ஏகப்பட்ட MONEY செலவு செய்வாள் என்பதால் பெண்MONEY


----------------------


20. சும்மா விளையாட்டுக்குத்தான் டி போட்டுக்கூப்பிட்டேன் என்பதை டிFUN னு சொல்லலாம்




-------------------------------------

Thursday, September 19, 2013

ஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும், பிரதமரை நேரில் சந்தித்து, அவரது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பிறகே, 2007 மற்றும் 2008ம் ஆண்டில் நடந்தது. அதில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009ல், திரும்பவும், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஒதுக்கினார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், சுப்ரீம் கோர்ட் பார்வையில் விசாரிக்கப்படும் போது, மறுபக்கம் இது குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் (ஜே.பி.சி.,) வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் கூட்டுக்குழு தலைவர், சாக்கோ தயாரித்துள்ள, இறுதி அறிக்கை, நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.கூட்டுக்குழுவுக்கு, கடந்த ஏப்ரல் மாதமே அந்த கடிதத்தை, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி உள்ள ராஜா அனுப்பியிருந்தாலும், அதை, இறுதி அறிக்கை தயாரித்து முடித்த பிறகு, சுற்றறிக்கையாக சாக்கோ அனுப்பியுள்ளார். அது ரகசிய ஆவணம் என்றாலும், அதில் இடம்பெற்ற கருத்துக்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தன்னை மட்டும் இந்த ஊழல் பிரச்னையில் மாட்டிவிடும் வகையில்ஜே .பி.சி., அறிக்கை வந்தால், அது அவரது எதிர்கால அரசியலை பாதிக்கும். தி.மு.க., - காங்கிரஸ் உறவில் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தும்.ஆகவே இந்த தகவல்கள் கசியவிடப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.



ராஜா எழுதிய கடித்தத்தில் உள்ள தகவல்களாக கூறப்படும் விஷயங்கள்:கடந்த 2007 நவ., 20ல், இரண்டு கடிதங்களை, பிரதமருக்கு அனுப்பியுள்ளேன். மேலும், டிச., 26, 2007; நவ., 7, 2008; ஏப்., 21, 2010ல், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். கடைசியாக, ஜூலை 21, 2011ல், பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.இதுமட்டுமல்லாது, பிரதமருடன், நான் தனிப்பட்ட முறையில், பல தடவை ஆலோசனை மேற்கொண்டிருக்கிறேன்.அதிகாரிகள் இல்லாமல், நாங்கள் இருவர் மட்டும் தனிப்பட்ட முறையிலும் பலமுறை பேசியிருக்கிறோம். இவை எல்லாவற்றுக்குமே ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றதற்கான நேர குறிப்புகள், ஆவணங்கள், கோப்புகள் என, பலவும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளன. அரசின் கொள்கை முடிவை, நடைமுறையில் இருந்து விலகி நின்று, அமல் செய்ததாக, என் மீது குற்றம்சாட்டப்படுவது முற்றிலும் தவறானது.



நான் செய்த தவறு என, ஒன்றை கூற வேண்டுமானால், "லெட்டர் ஆப் இன்டென்ட்' எனப்படும் உரிமத்திற்கான கடிதங்களை, அனைவருக்கும், ஒரே நேரத்தில், அனுப்பியதை வேண்டுமானால் கூறலாம். லைசென்ஸ் வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, சம்பிரதாய நடைமுறையில், அனுப்பப்படும் அந்த கடிதங்களை கூட, பிரதமர் மன்மோகன் சிங்கின் முழு ஒப்புதலை பெற்று தான் அனுப்பினேன். அதன் பிறகே, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், முறைகேடுகளில் ஈடுபட்டு, இந்த குற்றங்களைச் செய்த, அதே ராஜாவான எனக்கு, 2009ம் ஆண்டு அமைந்த, மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசில், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஏன் ஒதுக்கீடு செய்ய வேண்டும்? இவ்வாறு, அந்த கடிதத்தில் ராஜா குறிப்பிட்டுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



- நமது டில்லி நிருபர் -


1. விளக்கெண்ணையை தடவிக்கொண்டு வீதியில் புரண்டு புரண்டு அழுதாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும் ...விதி வலியது அதையாரும் வெல்ல முடியாது ...அவனுக்கென்ன தூங்கி விட்டான் ...அகப்பட்டவன் நான் அல்லவோ மாட்டிக்கொண்டேன் ..பதவியை முடக்கிவிட்டான் ...தனியே இப்படி புலம்பவிட்டான்


2. கருணாநிதியை நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் இந்த கதிதான். தானும் தன குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்வதில் இருந்த அவசரம் கூட்டாளியை காப்பாற்றுவதில் இல்லையே. இதுவே உங்களுக்கு ஆன படிப்பினை. உங்கள் பிரச்னையை நீங்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். பிரதமரை துணைக்கு அழைக்கும் ராஜா, கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் ஏன் அழைக்கவில்லை? தி மு க கட்சிதானே தன் தொண்டர்களை காப்பாற்றவேண்டும். ராஜாவை அது தன் தொண்டனாக ஏற்கவில்லையா? ராஜா ஒருவேளை தவறே செய்யாமல் இருந்தாலும் அவர் சேர்ந்துள்ள இடம் அவர் பக்கம் உள்ள நேர்மையை நம்ப மறுக்கிறது. நிச்சயம் ராஜா தவறு செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. சட்டம் என்ன செய்கிறது அல்லது சொல்கிறது என்று பார்ப்போம்.


3, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதும் பின்னர் அதனை வெளியுறவுத்துறை ஆட்சேபனையால் திரும்பபெற்றதும் ஏன்? அதன் பயனாளி தாவூத் இப்ராஹிம். அவரது பினாமியாக டைரெட்டராக சேர்ந்தவர் 'காய்கறிக் கடை'ஷாஹிது பலவா, கலைஞர் டிவி க்கு 2000000000அடமானமில்லாக் கடன் கொடுத்து புகழ் பெற்றவர் மற்ற பயனாளி நம்ம கீழக்கரை ETA Star சலாவுதீனின் மகன் அதாவது கருணாநிதிக்கு மிகவும் வேண்டியவர் தலைமை செலயகம், லைப்ரரி,காப்பீட்டுத் திட்டம் போன்ற பல கோடி ஒப்பந்தங்களை பெற்றவர் .நன்றிக் கடனாக கனிமொழியின் சென்னை சங்கமத்துக்கு 10000000 கொடுத்தவர் ..இந்த நிறுவனமே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்புள்ளது . நம் நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்துவிட்டு பழியை மன்மோகன் மீது போடுவது டகால்டி வேலை


4. கிராநைட் வழக்கில் தயாநிதி அழகிரி போலிசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தெறித்து ஓடி பதுங்கினார் ...இப்போது தி மு க மாவட்ட செயலாளர் கருப்பு சாமி பாண்டியன் பாலியல் புகாரில் தெறித்து ஓடி பதுங்கல் ...என்ன நடக்குது கட்சியில் ...இவர்களை பினப்ற்றி ஆ ராசாவும் தெறித்து ஓட வேண்டியதுதான் ..விடு ஜூட்


5. எல்லாமே மன்மோகன் தான் சொன்னார் நான் அதன்படி செய்தேன், என்று காது குத்தும் ராஜாவே, சாதிக் பாட்சா மூலம் 10 நாடுகளில் 2ஜீ ஊழல் பணம் போட சொன்னாரா? உறவினர்கள் மூலம்,Green House Promoters, Equaas, Kovai shelters, Sivakhamam முதலான பினாமி கம்பணிகள் ஆரம்பிக்க சொன்னாரா? உங்கள் மனைவி ராஜேஸ்வரியை பினாமி பாட்சா கம்பணியில் டைரக்டரா போட சொன்னாரா? 2ஜீ ஊழல் பணத்தை Green House Promoters கம்பணியில் முதலில் போட்டு பின் அதை மற்ற கம்பனிகளுக்கு மாற்ற சொன்னாரா? ஊழல் பணத்தை , உறவினர்கள் பெயரில் ரியல் எஸ்டேட்டிலும், வேறு சொத்துகளிலும் முதலீடு செய்ய சொன்னாரா? அமுலாக்க துறையும், வருமாண வரி துறையும் கட்டவிழ்த்து விடப்பட்டால், 2ஜீ யில் ஊழல் இல்லவே இல்லை என்று புழுகும் உங்கள் அனைவரின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறி விடும். இனிமேல் ஓட்டை பூட்டை ரொம்ப ஆட்டாதிங்க. புரியுதா இல்லையா.


6. இந்த பிரச்சினையை பிரதமர் சரியாக கையாளவில்லை. எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் நிர்ப்பந்தத்துக்கும் சொந்த கட்சியின் அரசியல் சூழ்ச்சிக்கும் இடம் கொடுத்ததால் வந்த வினை. சிறிய மனித தவறு இமாலய பெரிதாக்கப்பட்டு விட்டது

7. இந்த 2G குப் பின் நிலக்கரி,ரயில்,இன்னும் பல ஊழல் விசயங்கள் வெளியே வந்து விட்டன. அப்படியிருக்க இது ஒன்றை மட்டுமே பிரதானமாகப் பேசுவது ஒரே போராக இல்லையா?


8  

அடிப்படையில் சில கேள்விகள் கேட்டாலே போதும் - 2G விவகாரம் தெளிவாக புரியும். (1) ஏன் ஏலம் திடீர் என்று முன்னதாகவே வைக்கப்பட்டது, (2) ஏன் லெட்டெர் பாட் நிறுவனங்கள் கூட ஏலத்தில் இடம்பெற முடிந்தது? (3) ஏன் அரசு உரிமத்தை ஒரு நிறுவனம் அடுத்த நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிகளுக்கு விற்ற பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவில்லை? (4) பசி பற்றி ஏன் யாரும் பேச மட்டேன் என்கிறார்கள். அவரை விசாரணைக்கு அழைக்கக்கூட அரசு எதிர்ப்பு காட்டுகிறது. இதன் மர்மம் என்ன? (5) சிறிய சிறிய நிறுவனங்கள் முக வின் தொலைகாட்சி நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியதன் ரகசியம் என்ன? அந்தக்கடனையும் கூட முக வின் தொலைகாட்சி நிறுவனம் ஏன் இந்த விஷயம் வெளிவந்தவுடன் வேறு யாருக்கோ திரும்பக்கொடுக்கிறது? யார் யாருக்கு கருப்பை வெள்ளையாக்க முக உதவினார்? தீவிரவாதிகள் போதைப்பொருள் விற்ப்பதன் மூலம் பணம் திரட்டியதை முக சிறுபிள்ளை போல வெள்ளையாக மாற்றிகொடுத்திருக்கிறாரா? (6) இராம் ஜெத்மலானி கூட இராஜாதான் நடந்தவற்றிக்கு பொறுப்பு என்று வாதாடிய பின்ன என்ன காரணத்துக்காக இராஜாவை வெளியே விட்டு வைத்திருக்கிறார்கள்? போட்டுத்தள்ளவா அல்லது வேறு காரணத்துக்காகவா? (7) எதற்க்கெடுத்தாலும் விசாரணை கமிஷம் வைக்கும் அரசு ஏன் 2G விவகாரத்துக்கு ஒரு விசாரணை கமிசன் வைக்கவில்லை? நீதிபதிகள் விசாரிக்க ஆரம்பித்தால் உண்மைகள் வந்து விடும் என்ற பயமா? (8) ஏன் JPC வீணாக பல வேலைகளை செய்து வருகிறது - நீதிமன்றம் போல செயல்பட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? எனக்கு என்னவோ இராஜாவை விட்டுவைத்திருப்பது சமயம் பார்த்து போட்டுதள்ளவே என்று தோன்றுகிறது. அரசின் மெத்தன போக்கும் அதை உறுதி செய்கிறது. அடுத்து வரும் அரசாவது பிரதமரையும், நிதியமைச்சரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். பணம் போன வந்த வழி சிதம்பரத்துக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும்.


9. அரசாங்கத்தில் ,1000 நாற்காலிகள் வாங்க வேண்டும் என்றாலே நிதி அலுவலகத்தை கலந்து அலோசனை பெற வேண்டும். தகுதி ,தரம் ,வழங்கப்படும் நேரம் ,இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ராஜா , ப சி யை ஆலோசனை செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. ப சி யும் ,குற்றவாளி தான். 2014 ஜூன் ல் தான் நடக்கும்.

10 2006 ல் , ரதன் டாட்டா ,மன்மோகன் சிங்க் க்கு,ஒரு கடிதம் எழுதினர் ,தினமலரின் ,முதல் பக்கத்தில் வந்தது.நாட்டின் விலை மதிப்பில்லாத SPECTRUM ,ஏலம் விட வேண்டும்.அவர் ஒரு உரிமத்திற்கு ,ருபி 15,000 கோடி தருகிறேன் என்றார். ஆனால் ராஜா 122 உரிமங்களையும் 9600 கோடிக்கு ,குடுத்தார்.மக்களே கணக்கு பார்த்துக் கொள்ளவும். மு க விற்கு சென்ற 2 உறைகள்,நிடா ராடிய ,கொடுத்தது என்ன ?


நன்றி - தினமலர்