Tuesday, August 27, 2013

மேரேஜே பண்ணிக்காத நவீன அன்னை தெரேசா


மருத்துவ ஸ்பெஷல்

சேவையே உயிர் மூச்சாக!


திருமண வரவேற்பு விருந்து! பந்தியில் அமர்ந்து அந்தப் பெண்மணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவமனை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள விழா அரங்கு அது. ஆயாம்மா பதற்றமாக ஓடி வருகிறார். அம்மா... ஒரு சிசேரியன் கேஸ். க்ரிடிக்கல் பொசிஷன்மா..." சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஆபரேஷன் தியேட்டர் நோக்கி விரைந்து செல்கிறார். சிறிது நேரத்தில் ஓர் அழகியப் பெண் குழந்தை பிறக்கிறது. திருமண வரவேற்பு விருந்தில் உணவருந்த கிளம்பிச் செல்கிறார். எல்லோராலும்அம்மாஎன்றழைக்கப்படும் அந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் ஆர். கௌசல்யா தேவி. அவருக்கு வயது 83. காந்தி கிராமம் கஸ்தூரிபாய் மருத்துவமனையின் ஆலோசகர்.


கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக இம்மருத்துவமனையில் சேவை புரிந்து வரும் இவரை திண்டுக்கல்-மதுரை மாவட்ட மக்கள், ‘எங்கள் தெரசாஎன்றே போற்றுகின்றனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் சின்னாளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது, காந்தி கிராம அறக்கட்டளையின் கஸ்தூரிபாய் மருத்துவமனை.

1930-ஆம் வருடம் சாத்தூர் அருகே அருணாச்சலபுரம் கிராமத்தில் பிறந்தவர் கௌசல்யா தேவி. அப்பா ரகுபதி ரெட்டி கால்நடை மருத்துவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மருத்துவம் பயின்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று கௌசல்யா தேவியின் இலட்சியம். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959-ல் தேர்ச்சி. 1960லிருந்து 69 வரை சங்கரன்கோவில், கோபிசெட்டிப் பாளையம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர். 7.11.1969 முதல் காந்தி கிராம கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேவை செய்து வருகிறார். தமது அறுபதாவது பிறந்த நாளிலிருந்து சம்பளம் ஏதும் பெறாமல், கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த உங்களை, மாற்றம் பெற வைத்த சம்பவம் எது?

எனது நெருங்கிய தோழி சிவரஞ்சனியை மதுரையில் ஒரு நாள் சந்தித்தேன். காந்தி கிராம அறக்கட்டளை சார்பாக இயங்கி வரும் கஸ்தூரிபாய் மருத்துவ மனை நிர்வாகம், சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்களைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார். அன்றே கிளம்பி வந்து சௌந்தரம் அம்மாளைச் சந்தித்தேன். தனியாக நானும் அவருமாக மாலை ஐந்திலிருந்து இரவு ஒன்பது மணி வரை பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். சௌந்தரம் அம்மாளுடன் நான் தொடர்ந்து பேசிய அந்த நான்கு மணி நேர உரையாடலே, என்னை கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வரவழைத்து விட்டது. 1969 நவம்பர் மாதம் முதல் இன்று வரைக்கும் இந்த வளாகம் முழுவதுமாக உயிரும் உடலுமாக உலவி வருகிறேன்.

திருமணம் செய்து கொள்ளாமலே... (நாம் முடிக்கவில்லை. சட்டென அம்மாவே பேசுகிறார்...)

பள்ளிப் பருவத்திலிருந்தே திருமணத்தை நான் விரும்பவில்லை. காரணம், மருத்துவச் சேவைக்குத் திருமணம், ஒரு பெரும் தடைக்கல்லாக இருக்குமென முடிவு செய்திருந்தேன். உயிர் காக்கும் மருத்துவத்தை விட உயர்ந்தது வேறென்ன? நான் அதையே மணம் புரிந்து கொண்டேன் மானசிகமாக!


உங்களது மருத்துவச் சாதனைகள்...

எனது மருத்துவச் சாதனைகள் என்று பட்டியலிட்டுக் கொள்ள என் மனம் இடம் தரவில்லை. கஸ்தூரிபாய் மருத்துவமனையின் சாதனைகள் என்று தான் அவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தயவுசெய்து அந்த விவரங்களைச் சற்று விவரமாகக் கூறலாமே...

செயற்கைக் கால் மருத்துவ மையம் இங்கு மிகச் சிறப்பு. செயற்கைக் காலினை முதன் முதலாக உருவாக்கியவரான டாக்டர் பி.கே.சேத்தியின், ராஜஸ்தான் மாநில மருத்துவமனைக்குச் சென்று தங்கியிருந்து பயிற்சி பெற்றுத் திரும்பிய பின்னர், இங்கு நிறுவப்பட்ட மையம் இது. மிகக் குறைந்த கட்டணத்தில் செயற்கைக் கால் பொருத்தி, அவர்கள் நன்கு நடைப்பயிற்சி பெற்ற பின்னரே வெளியில் அனுப்புகிறோம்.


 இதுவரை 4,233 நபர்களுக்கு செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறோம். எங்கள் மருத்துவ மனையின் இன்னொரு தனிச் சிறப்பு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு, அவர்களது தேவையின் பொருட்டு கர்ப்பப்பைக் குழாய் இணைப்பு அறுவை சிகிச்சை செய்கிறோம். 1976-77லிருந்து இதுவரை சுமார் 1400 பெண்களுக்கு மேற்கண்ட அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். 1947-48லிருந்து இதுவரை சுமார் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.



உங்கள் மனதை உலுக்கிய சம்பவம் ஏதேனும்...

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அப்போது எனக்குப் பணி. 1969-ல் நாகை அருகே கீழவெண்மணி கிராமத்தில் இந்தியாவையே உலுக்கியெடுத்த கோரச் சம்பவம். ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடிசைக்குள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரக் கலவரம். ஆயுதங்களால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு மிக மோசமான படுகாயங்கள்






 அத்தனை பேரும் நாகை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டுவரப்பட்டனர். அவர்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து 52 மணி நேரம் பணியாற்றி அறுவைச் சிகிச்சைகள் செய்து பலரையும் காப்பாற்றினோம். என் இதயத்தை ரணமாக்கிய அந்த மக்களின் வேதனைக் குரலை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது.


நன்றி- மங்கையர் மலர்

விஜய் -ன் ஜில்லா படத்தில் வில்லி யார்? -னு கண்டு பிடிச்சுட்டேன்

1.நம் அன்புக்கும் ,அபிமானத்துக்கும் உரியவர்கள் நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன் இறப்பது தான் இயற்கை நமக்குத்தரும் சாபம்

--------------------

2.மலைக்கா அரோரா வின் தங்கச்சி பேரு குப்புறக்கா கோவிந்தா வாம் # என்ன கொடுமை சார் இது ? ;-))

---------------------

3.அப்பாவுக்கு கெட்ட பேர் சம்பாதித்து கொடுத்தவர் - மு க முத்து .மகனுக்கு கெட்ட பேர் தந்தவர் எஸ் ஏ சந்திரசேகரன்

----------------------

4.அஜித் ரசிகர்கள் இனி ரம் அதிகமா விரும்பி குடிப்பாங்களோ? # ஆ ரம் பம் ,வீ ரம்

--------------------

5.கில்மாப்பிரியர்களுக்கு "பிரியாமணி இருக்க பிரியாணி கவர்ந்தற்று" !! # ரீமிக்ஸ்

----------------------

6.அம்பையில் உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை கொல்ல முயற்சி: # உல்லாசத்துக்கு வர மறுத்தா மங்காத்தா க்கு கூப்ட்ரிக்கலாம்

------------------

7.பீரோவில் ஒன்றுமில்லாததால்,ஆத்திரத்தில் வீட்டை கொளுத்திய திருடர்கள் # எங்க வீட்ல பீரோ சி ரோ டி ரோ எதுவுமே இல்லை.எவனும் வந்துடாதீங்க திருட 


-----------------------


8.தே சிங் கு ராஜா சர்தார் இனத்தை நக்கல் அடிக்கும் வகையில் டைட்டில் இருக்கு.தடை பண்ணனும்னு யாரும் கிளம்பாம இருக்கனும் # விமல் பாறைகள்




-------------------------


9. அது-ன்னு சொன்னதும் அது நினைவு வந்தா நீ சராசரி.அஜித் ன் ரெட் பட பஞ்ச் என நினைவு வந்தா நீ அஜித் ரசிகன்




------------------------


10. எம் பி தேர்தலில் பாமக தனித்து போட்டி: ஜி.கே.மணி #அஞ்சரைக்குள்ள வண்டியே இன்னும் பார்க்காதவன் புல்லுகட்டுமுத்தம்மா பார்த்தே தீருவேன்னானாம்்



--------------------------


11. எனக்கொன்று தா என கேட்டு வாங்கும் முத்தமும்் கவுரவப்படுவது காதலில்் மட்டுமே சாத்தியம




----------------------


12. பெண்கள் சமைக்கும் சாதங்கள் பெரும்பாலும் ஒரே ப்ளேட்டில் இருக்கின்றன! டெம்ப்ளேட் சமையல் 




------------------------


13. ஜட்ஜ் - டி டி ஆர் கூட சண்டை போட்டீங்களாமே? 



வில்லன் நடிகர் - கள்ளக்காதலி கூட ரயில் ல போனப்ப " டிக்கெட் டை என் கிட்டே காட்டனும்" னாரு 



------------------------


13. சார்.என் வேலையை ரிசைன் பண்றேன்.



 டேமேஜர் - ஏம்மா விடிஞ்சா 58 வயசு ஆகுது.ரிட்டையர்மென்ட்டே வந்துடும்.ஒரு நாள் பொறுத்துக்கக்கூடாதா? 



------------------------------


14. டியர்.சனிக்கிழமை ஒர்க் இருக்கு.நாம மீட் பண்ண முடியாது. 




வாரா வாரம் சனிக்கிழமை பராமரிப்பு பணி நடத்த நீ என்ன மின் வாரியமா? 





-----------------------------


15. தேர்தலில் காங்., பக்கம் சாய்கிறது தே.மு.தி.க.# கேப்டன் சினிமான்னா லெக் பைட்டு ,அரசியல்னா கை உடன் கூட்டு? ்




--------------------------


16, எத்தனை வழக்குகள் போட்டாலும் திமுகதொண்டர்கள் அஞ்சமாட்டார்கள்: கனிமொழி ு.# அவங்க ஏன் அஞ்சனும்? களி சாப்பிடும் தலைவர்கள் தான் அஞ்சனும்


---------------------------


17.  ஜில்லா வில் விஜய்க்கு வில்லன் ரவிமரியா - செய்தி # வில்லி யாருன்னு படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும் ;-)


----------------------


18. 18க்குகீழ்வயது பெண்ணோடு சம்மத பாலுறவு வைப்பது குற்றமில்லை: டெல்லி கோர்ட் # ஆதலால் முன் எச்சரிக்கையுடன் காதல் செய்வீர்



------------------------


19. இந்தியாவில் ஏழைகள் பசியோடு இருக்ககூடாது-சோனியா #அப்ப முதல்ல ப.சி கட்சிலயே இருக்கக்கூடாது



------------------------


20. பொண்ணுங்க நேரத்துலயே ட்விட்டர் பக்கம் வந்தா என்ன இவ்வளவுசீக்கிரம்?னும் , லேட்டா வந்தா “ ஏம்மாலேட்? உடம்புசரி இல்லையா?னும் கேட்கனும் போல



-------------------------------

Monday, August 26, 2013

பிரபல ட்விட்டர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 1



Photo: பார்வை கத்தி
குத்தி
கிழித்து
ரத்தம் வழிந்து
சதை
பிண்டமாகும் வரை
வழிய விடுகிறாய்
உன் ஆண்மையை
துயர் தரும் பார்வைதான்
உனை வெளிக்காட்ட
ஒரு குண்டூசி  எடுக்கும் அவகாசம் போதுமானது....


-ரேவா 

படத்திற்கு நன்றி 

சகோதரர் இளங்கோவன் பாலகிருஷ்ணன்
ஆல்ரெடி நாம  பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்  பாகம்  1 பாகம் 2   ன்னு தேவையான அளவுக்கு பதிவர்கள்பற்றி துவைச்சு , காயப்போட்டு , அலசி ஆராஞ்சிட்டதால   அடுத்து நாம ட்விட்டர்கள் பற்றி பார்ப்போம் , இது வரை அதை படிக்காதவங்க பாகம் 1  http://www.adrasaka.com/2010/12/blog-post_09.html   பாகம் 2  ,  http://www.adrasaka.com/2011/04/2-18.html போய் படிச்சுக்குங்க



Swimming pool view from hotel, Kuala Lumpur
Photo: Swimming pool view from hotel, Kuala Lumpur


1. கானாப்ரபா  - மாலையில்  சிட்னி யில்  இரவு இனிதே விடிந்தது 

 யோவ், இப்போத்தான் நைட்  ஸ்டார்ட்  ஆகி  இருக்கு

ஓ சாரி , எனக்கு அப்படிச்சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. இப்போ நான் யாழ்ப்பாணத்துல நடந்த  ஒரு உண்மைச் சம்பவம் பற்றி சொல்லப்போறேன்.

ம்க்கும், நைட் ஃபுல்லா அதுதானா? நாசமாப்போச்சு 

யாரைப்பார்த்து என்னவார்த்தை   சொல்லிட்டே?இளையராஜா பாட்டு , இசை பற்றி  வீடியோ ஆல்பம் பார்க்கப்போறோம் 


உலகத்துலயே முதல்  இரவன்னைக்கு இளையராஜா ஆல்பம் பார்க்கும்  முத ஜோடி நாமாத்தான் இருக்கும் ,அது  இருக்கட்டும் இப்போ எதுக்கு இந்த பால் , பழங்கள் , ஸ்வீட் எல்லாம் ஃபோட்டோ எடுக்கறீங்க?

 ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன் , ஃபேஸ்புக்;ல அப்பப்ப போடுவேன் 

 அய்யய்யோ, நான் எங்கப்பா வீட்டுக்கே போய்டறேன்,டாட்டா 


இரு , ஒரு க்விஸ் புரோகிராம் நடத்தறேன் , இளையராஜாவும் , எம் எஸ் வியும் சேர்ந்து இசை அமைச்ச படம் எது?


 போய்யா  நீயும் உன் முதல்  இரவும் .கிஸ் புரோகிராம் நடத்த வேண்டிய  இடத்துல க்விஸ் நடத்திட்டு..வேகமாத் திறக்குதுகதவு , மீ கோயிங்க் 


Photo: பேரன்பு மழைதான்
வானம் வெறித்த போது 
வேடிக்கையாய்  இருந்தது..

2.  சேந்தன் அமுதன்  சக்திவேல் - மாலை வணக்கம்  தங்கச்சி

 யோவ் , நான் உன் பொண்டாட்டியா? தங்கச்சின்னு சொன்னா முறையே மாறிடுமே?


 எல்லாம் பழக்க  தோஷம்  தான் .



அது  இருக்கட்டும் , கல்யாண மண்டபத்துல  மண மேடைல  எல்லாரையும் பார்த்து  பொதுவா  ஒரு வணக்கம் வெச்சாப்  பத்தாதா? எதுக்கு ஒவ்வொருவர்  கையையும்  பிடிச்சு  வாலண்ட்டியரா வணக்கம் வெச்சு டைம் வேஸ்ட் பண்றீங்க?

 அங்கே தான் நிக்கறான் அமுதன் . இப்போ பொதுவா   வணக்கம் வெச்சா ஒரே ஒரு ட்வீட் எண்ணிக்கைதான் கூடும் , என்ஃபாலோயர்ஸ் 3000 பேருக்கும் தனித்தனி வணக்கம்  வெச்சா  அதுலயே டெய்லி  3000  ட்வீட்ஸ் தேத்திடுவேன்

ஓஹோ, அப்படிப்போகுதா   கதை , இதுவரை எத்தனை பேரை அப்படித்தேத்தி  இருக்கீங்க? 


 ம்க்கும் , டெய்லி வணக்கம்   வைக்கவே 8மணி நேரம் ஆகிடுது, அதுக்குப்பிறகு  டி எம் போறதுக்குள்ளே  விடிஞ்சுடும்.


இப்போ  நீங்க  ஸ்டார்ட் பண்றதுக்குள்ளே இங்கே  விடிஞ்சிடும் போல.ஆமா, எனக்கு ஒரு டவுட் , எல்லா பெண்களையும் அக்கா, தங்கச்சின்னுகூப்பிடறேங்களே, நீங்க  அம்புட்டு நல்லவரா?

 இங்கே தான் எல்லாரும் என்னை தப்பா புரிஞ்சுக்கறீங்க..  ஃபிரண்ட்ஸ் கிட்டே   எந்த வம்பும் நான்  வெச்சுக்க மாட்டேன், எல்லா லேடி ட்வீடர்ஸையும்  அக்கா , தங்கைன்னுகூப்பிடுவேன், எல்லாரும் என்னை ரொம்ப  நல்லவன்னு   நம்பிடுவாங்க, அவங்களோட தங்கச்சி , தோழி , பக்கத்து  வீடு எதிர்த்த  வீடு இப்ப்டி அறிமுகம்  பண்ணுவாங்க ,  மல்டி லெவல் மார்க்கெட்டிங்க்  மாதிரி  செயின் மாதிரி போய்க்கிட்டே  இருக்கும் .அது  இருக்கட்டும் எங்கே உந்தங்கச்சி ? ஆளையே காணோம்?

  யோவ்!!



Photo: உன் பார்வை விருந்திற்கு பின் 
பசியென்னவோ 
என் காதலுக்கு தான்....


(மீள்)
3.  ஜப்பான்  ரவி - ஹா ய்   வெட்டி ! நானு  வந்தாச்சு


ஸ்வீட்டின்னுதானே பொதுவா   கொஞ்சுவாங்க? 


நீயும் ட்விடர்ல இருக்கே, நானும்  ட்விட்டர்ல இருக்கேன் , அப்போ நாம  2 பேருமே  வெட்டிதானே?


ம், சரி ,ஸ்டார்ட் பண்ணலாமா? 


ஒரு சின்ன விளையாட்டு விளையாடுவோமா? ஒரு 10 பேரு வரணும். 10பேருல at least ஒருத்தர கொஞ்சம் நல்லா தெரிஞ்சவரா இருக்கணும். யாரெல்லாம் ரெடி?

 யோவ் , இங்கே  என்ன நடக்குது? முதலிரவா?  கபடி மேட்சா?  கூட்டம் சேர்த்த? 


 ஹி ஹி , சும்மா , இன்னைக்கு ஒரு முடிவோடத்தான் ரூம்க்கு வந்திருக்கோம்... #ஒரு-கை-பார்த்திடப்போறேன்


 அப்போ இன்னொரு கை என்ன பண்ணும்? 


நான் எந்தவேலை செஞ்சாலும் இடதுகையாலதான் செய்வேன் , ஏன்னா வலது கை எப்பவும்  ட்வீட் போட்டுட்டே இருக்கும் 


சுத்தம் , நான் ஜப்பான் காரர்னா எப்பவும்சுறு சுறுப்பா இருப்பார்னு   நினைச்சுத்தான்  உங்களை கட்டுனேன் , இப்படி இதுல  சுறுசுறுப்புன்னுதெரியாம போச்சு



தொடரும்



Photo: Good nite ;)a
டிஸ்கி -  அடுத்த   பாகம் 2-ல் ரைட்டர் நாயோன் , ரைட்டர் சி எஸ் கே  , தோட்டா 

ஆல் ஆண்ட்டீஸ் ! யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! 40 +

இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும்'


* "ஆஸ்டியோபோரோசிஸ்' என்னும் எலும்பு புரை நோய் - மறைந்திருந்தே தாக்கும் மர்மம் என்ன?



வித்யாவுக்கு பன்னாட்டு நிறுவனத்தில், முக்கிய பொறுப்பில் வேலை; கை கொள்ளா சம்பளம்; பதவியுடன் வரும் அழகு, கம்பீரம், இத்யாதி இத்யாதி, கொஞ்ச நாளாக முதுகுவலி, இடுப்புவலி என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேலை பளுவே காரணம் என்ற சுயமுடிவோடும், வலி மாத்திரைகளின் உதவியோடும், காலம் கடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் ஆபீஸ் கிளம்பும் அவசரம்; காலணி நாடாவை கட்ட குனிந்தவர் தான்... சுரீரென்ற வலி நடு முதுகில், முள்ளெலும்பு முறிவாம்.

மருத்துவர் சொன்ன காரணம், "ஆஸ்டியோபோரோசிஸ்' என்று அழைக்கப்படும் எலும்பு புரை நோய். "எனக்கா? 42 வயதிலா?' என, உடைந்து போனார் வித்யா. வாழ்க்கையை, வேலையை, முன்னுரிமைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். தலைகீழாக புரட்டிப் போட்டதை போன்றதொரு உணர்வு. வித்யாவுக்கு இது ஏன் வந்தது? எப்படி வந்தது? எலும்பு புரை என்றால் என்ன?

* எலும்பு புரை என்றால் என்ன?

எலும்புத் திசு அழித்தலுக்கும், உருவாக்கலுக்கும் இடையே, சமச்சீர்கேடு ஏற்படுவது தான், இந்த நோய் உருவாகுவதற்கு முதற் காரணம். இந்த சமச்சீர் கேட்டால், எலும்புத் தாது அடர்த்தி, மெது மெதுவாக குறைகிறது; எலும்பு வலுவிழக்கிறது. எலும்பு முறிவு ஏற்படுகிறது. எலும்பு புரை நோய் உண்டாகிறது. இந்த மாற்றங்கள் ஏற்படும் காலக்கட்டத்தில், நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. இதை, பரவலாக எலும்பு மெலிதல் அல்லது, "ஆஸ்டியோபீனியா' என்றும் கூறுவர்.

* எலும்பு புரையால் என்ன தான் பிரச்னை?
பிரச்னையே, இந்த நோய் நாம் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களோடு, அழையா விருந்தாளியாக வருகை தருவது தான். சின்ன சின்ன முறிவுகள் கூட குணமடைய நாளாகலாம்; முழுவதுமாக குணம் அடையாமல் போகலாம். சில எலும்பு முறிவுகள், வாழ்நாள் முழுவதும், அடுத்த வரை சார்ந்து வாழ வேண்டிய நிலைமையை உருவாக்க வல்லது - வித்யாவுக்கு நேர்ந்த மாதிரி. அத்தகைய நிலை, மனச்சிதைவு போன்ற ஏனைய பிற பிரச்னைகளையும் உருவாக்கும்.

* யாருக்கு வரும்? எதனால் வரும்?
இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு, மாதவிடாய் நின்றலுக்கு பின், நோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. ஆசிய மரபுவழி, குடும்ப வரலாறு, முதுமை, தைராய்டு பிரச்னை, அழற்சி எதிர்ப்பு, மருந்துகள் உட்கொள்ளுதல் ஆகியவை, ஏனைய காரணங்கள்.
மேற்கூறியவை எல்லாம், நம்மால் மாற்ற இயலாத, ஆபத்து காரணிகள். நம்மை அறியாமல், நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்களும், எலும்பு புரையை உருவாக்க வல்லவை; இதில் முக்கியமானது, உடற்பயிற்சி அற்ற, சூழலில் வாழ்தல் மற்றும் உப்பு, கோலா, காபி, மது போன்றவற்றை, அதிக அளவில் உட்கொள்ளுதல்.

* இதை எப்படி அறியலாம்?

இந்தியாவில், 2.6 கோடி மக்கள் எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், விழிப்புணர்வுடன் மருத்துவரை அணுகி, எலும்பு அழிவு நிலைமையில், அதை கண்டுகொண்டவர்கள் குறைவு தான். 40 வயதை நெருங்கும் பெண்கள், குறிப்பாக மேற்கூறிய ஆபத்து காரணிகள், உங்களுக்கு பொருந்தும் எனில், மருத்துவரை அணுகி, Dexa ஸ்கேன் எனப்படும், எலும்புத்திறம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், இதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களும், இலவச ஸ்கேன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீடித்து இருக்கும் வலி, குறிப்பாக கழுத்து, மணிக்கட்டு, முதுகுவலி என்றால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எலும்பு புரை என்னும் அரக்கனை, அவனது மறைவிடமான எலும்பு அழிதல் நிலைமையிலேயே கண்டுபிடித்து, அழிக்க வேண்டும். எலும்பு முறிவு, உயரக்குறைவு போன்றவை வருமாயின், நோய் உறுதித் தன்மையை அடைந்துவிட்டது என்று பொருள்.

* எப்படி தடுக்கலாம்? எவ்வாறு குணப்படுத்தலாம்?
ஆரோக்கியமான உணவு முறைகள், அளவான உடற்பயிற்சி கொண்டு, எலும்பு புரை உருவாவதை எளிதில் தடுக்கலாம். கால்சியம் கூடிய உணவு வகைகளை, (தயிர்,மோர், பால், tofu, கேழ்வரகு) அதிகமாக உண்ணவேண்டும். கால்சியத்தை உடலில் பிடித்து வைக்க வைட்டமின் "ஈ' சத்து தேவை. நம் உடல், இதை இளஞ்சூரிய வெப்பத்தில் மட்டுமே உற்பத்தி செய்யும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி, நடைபயணம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். கால்சியத்தை உடலில் இருந்து வெளியேற்ற ஆற்றல் கொண்ட உப்பு, கோலா, காபி, மது போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

உறுதி செய்யப்பட்ட எலும்பு புரை நோய்க்கு, நாளுக்கு ஒரு மாத்திரை, ஆண்டுக்கு ஒரே ஒரு ஊசி என்று பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரை அணுகி, தங்கள் வாழ்க்கை முறைக்கு பொருந்தும் வழி முறையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எலும்பு புரையை பொறுத்தவரை, வரும் முன் காப்பதே சால சிறந்தது.

டாக்டர் உமா மகேஸ்வரி,





ஹரிணி, குரோம்பேட்டை, சென்னை: என் வயது 18, என் இடது பக்க மார்பு, அசையும்போது வலிக்கிறது. உருவாகும் வலி, நெஞ்சுக்கும், கைக்கும் பரவுகிறது. மூச்சு இழுத்து விடும்போதும் வலிக்கிறது. இதற்கு காரணம் என்ன?


 
இள வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வலிக்கு, தசையே காரணம். காய்ச்சல், இருமல், வேறு தொற்றுகள், ஆழ்ந்து மூச்சு விடும்போது, மார்பில் வலி ஆகியவை, நுரையீரல் மேல் புறத்தில் வீக்கம் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது தானாகவே சரியாகக் கூடியது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.


thanx-dinamalar

வாலி - மினி டைரி

வாலி பற்றிய மினி டைரி

• எம்.ஜி.ஆருக்கு 63 படங்களிலும், சிவாஜிக்கு 76 படங்களிலும், கமல் - ரஜினி, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு, என்று பல தலைமுறைக்குப் பாட்டெழுதிய ஒரே கவிஞர் வாலி மட்டும்தான்.

 • 1958இல் "அழகர்மலை கள்ளன்' என்ற படத்தில் பாடல் முதன் முதலாகப் பாடல் எழுதத் தொடங்கினார் வாலி. இன்று அவர் மறைந்த பிறகும்கூட நான்கு படங்கள் அவர் பாடலில் வரவிருக்கின்றன. இதுவரை எந்த கவிஞனுக்கும் கிட்டாத பேரு இது. தான் இறந்த பிறகும் தான் பாடல் எழுதிய படங்கள் வரவிருக்கும் பீல்அவுட் ஆகாத கவிஞன்.

 • கவிஞர் வாலி எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பார்த்தவரை அப்படியே வரையும் ஆற்றல் பெற்று விளங்கினார். அதனால் அப்போது ஆனந்த விகடனில் பிரபல ஓவியராக இருந்த மாலி மீது இவருக்கு மாளாக் காதல் இருந்தது. இதை உணர்ந்த வாலியின் பள்ளிக்காலத் தோழர் பாபு என்பவர் "நீ மாலியைப் போல வரவேண்டும்' ரங்கராஜனை வாலி ஆக்கினார்.

 • வயதான பிறகு பீல்டில் இருக்கமாட்டார்கள். அப்படி பீல்டில் இருந்தாலும் பெரிதாக எடுபடாது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை ரசிகர் பார்ப்பார்கள்; கேட்பார்கள். ஆனால் அப்படி எந்த மாற்றமும் இன்றி 82வயது வரை ரசிக்கும்படியான பாடல்கள் தந்த ஒரு பாடலாசிரியர் வாலி.

 • கவிஞரை "என்ன ஆண்டவனே' என்று எம்.ஜி.ஆரும்,
 "என்ன வாத்தியாரே' என்று சிவாஜிகணேசனும்
 அன்புடன் அழைப்பார்கள்.

 • ஸ்ரீரங்கத்தில் வாலி நடத்திய "நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர்தான் எழுத்தாளர் சுஜாதா.

 • 15000 பாடல் என்பது அவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கை. இதுவரை இந்த இலக்கை எந்தப் பாடலாசிரியரும் தொட்டதில்லை. இனி தொடப்போவதுமில்லை!.

 • கவிஞர் வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றார். அந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "மயக்கமா... கலக்கமா...' என்ற பாடலைக் கேட்டுத்தான், நம்பிக்கையோடு வீடு திரும்பினார். அந்த நம்பிக்கை, தமிழ்த் திரையுலகிற்கு மிகப்பெரிய பாடலாசிரியரைத் தந்துவிட்டது.

 • "உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...' என்று பகிரங்கமாக திமுக சின்னத்தையே, எம்.ஜி.ஆர் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் கவிஞர் வாலி.

 • திரைப்படப் பாடலாசியர் கவிஞர் கண்ணதாசன் அமர்ந்து கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இணையாக சிம்மாசனமிட்டு அமர்ந்து காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களைத் தந்தவர் வாலி.

 • எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஹரீஷ் ஜெயராஜ், வித்யாசாகர், தேவா முதற்கொண்டு, இன்றைய ஜீ.வி.பிரகாஷ் குமார், அனிருத் வரை அநேகமாக தமிழ்த் திரையுலகின் அத்தனை இசையமைப்பாளர்களின் இசையமைப்புக்கும் பாடல் புனைந்த கவிஞர் வாலி.

 • 1966ஆம் வருடம் முதன் முதலாக கருணாநிதியை "மணி மகுடம்' படப்பிடிப்பில் சந்தித்தார் வாலி. அன்று தொடங்கி தனது இறுதிக் காலம் வரை துளி பிசிறில்லாம் இருவரும் நண்பர்களாகவே இருந்தார்கள்.

 • கவிஞர் வாலி மிகப்பெரிய பாடலாசிரியராக இருந்தாலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும், கவியரங்க மேடைகளில் முதன்மை இடம் வகித்திருந்தாலும் இதுவரை அவர் வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை எல்லோரும் "பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்' என்று சொல்வார்கள்.

 • "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகளில் உள்ள தாய்மையின் மேன்மையை உணர்ந்து அந்தப் பாடலை, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளார்கள்.

 • எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியாக பலமாக உதவியவை கவிஞரின் பாடல்கள். அந்தத் திரை நாயகனை அரசியல் சிம்மாசனத்துக்குக் கொண்டு போன பெருமைக்கு வாலிக்கு உண்டு.

 • "உங்கள் பாடல்கள் தி.மு.கவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியிருக்கிறது' என்று அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரையே 1967 வெற்றிக்குப் பிறகு, வாலியிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 • காதல், நகைச்சுவை, தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி எனப் பல்வேறு நிலைப்பாடுகளில் 15000 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட 60 ஆண்டுகாலம் அவர் எழுதிய பாடல்கள் திரைத்துரையை அலங்கரித்துள்ளன


.thanx - dinamani












பெரம்பலூர் பெ ரம்பா லூர் ஆனது எப்படி?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1.பெரும்பாலான பெண் ட்வீட்டர்கள் ஷங்கர் -விக்ரம் ரசிகைகள் போல.ஹேன்டில் ல "ஐ' சேர்த்துக்கறாங்க



--------



2.நயன் தாரா விஜய் கூட ஜோடி சேர்ந்த படம் வில்லு டல்லு.அஜித் உடன் ஜோடி சேர்ந்த பில்லா நல்லா # நீதி - ஆரம்பம் ;-)



-----------------------


3. இன்னைக்கு பொண்டாட்டிங்க எல்லாம் வர லட்சுமி விரதம்  இருப்பதால் அதிகாலையில் எழுந்து  கட்டு கட்டுவாங்க, நோட் பண்ணுங்க ;-)




--------------------


4. தனி மனித ஒழுக்கம்  = ஒரு மனுஷன் தனியா இருக்கும்போது ஒழுக்கமா இருப்பது # சபாஷ் துபாஷ்




---------------------


5. குத்து ரம்யா எம் பி ஆனதைக்கொண்டாடும் வகையில் ஒரு குத்தாட்டம் போட்டு அமர்வார் என்று தொகுதி மக்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது




-----------------------


இனிய காலை வணக்கம்!



6. சுந்தர் சி எடுக்கும் மதகஜரஜா க்கு அர்த்தம் பிள்ளையாராம். # அஞ்சலி



-------------------


7. பெரம்பலூர்ல மினி ஸ்கர்ட் டோட பிகருங்க சுத்துதுக #,பெ ரம்பா லூர்?




----------------



8. நாம சைக்கிள்ல போய்க்கிட்டு இருந்தாக்கூட ஸ்டேட்டஸ் போடும்போது ஐ ஆம் டிரைவிங் னு அள்ளிவிட்ரனும்.



-------------------


9. ஒரு குடும்பத்துல எல்லாருமே அஜித் ரசிகர்களா இருந்துட்டா ஏகப்பட்ட செலவு மிச்சம்.எல்லா (அருகாமை )இடத்துக்கும் நடந்தே போய்க்கலாம்




---------------------


10. கர்நாடக இடைத்தேர்தலில் 'குத்து ரம்யா என்கிற திவ்யாவுக்கு' வெற்றி வாய்ப்பு. # வாக்காளப்பெருமக்கள் செம குத்து குத்திட்டாங்க போல




--------------------



Photo: கொஞ்சம் சிக்கன் சோசேஜ், கொஞ்சம் உருளை கிழங்கு ஃபிறை, ஒரு அவித்த முட்டை, நான்கு ஸ்லைஸ் வாட்டர் மிலன் - காலை சாப்பாடு முடிந்தது.



11. மாசமா இருக்கும் கவர்ச்சி நடிகை - ரசிகர்கள் யாரும் என்னைப்பார்க்க வீட்டுக்கோ ஹாஸ்பிடலுக்கோ வர வேண்டாம்.மீறி வந்தால் கலைத்து விடுவேன்




-------------------------


12. பஸ்ல ஒரு தகரடப்பாத்தலையன் தன் காதலியை ஓட்டிட்டு மிரட்டு இருக்கான்.அது எதிர் முனைல கெஞ்சிட்டு இருக்கு # அடேய்.2 மணி நேரமா என்னடா பேச்சு?



--------------------


13. நோ கடிக்காதீர் !நோகடிக்காதீர்



---------------------


14. 12 ஆழ்வார்கள் போட்டோவை பூஜை ரூம்ல வெச்சிருந்தா நீ ஆன்மீகப்பிரியன்.ஒரே ஒரு ஆழ்வார் ஸ்டில் ஹால் ல வெச்சிருந்தா நீ அஜித் ப்ரியன்




----------------------


15. சம்சாரம் ஏழரைக்கு எழுந்தால் - ஏழரைக்கு எழும் ஏழரையே!




-------------------




16. ஹால்ஸ் மிட்டாயை ஹால் ல இருக்கும்போது மட்டும்தான் சாப்பிடனுமா? கிச்சன் ரூம் ல இருக்கும்போதெல்லாம் சாப்டக்கூடாதா?




---------------------


17. ஒரு நாளின் தேவையைத்தாண்டி அதிகமா ரசம் வெச்சுட்டா அது அதி ரசம் ஆகிடாது



-------------------------


18. சமையல் அறை வேலைகளில் நீ பாதி நான் பாதி கண்ணே .அருகில் உங்கம்மா வீடிருந்தும் வீண் தானே பெண்ணே!




---------------------



19. மஜித் ,சர்ச் ,கோயில் பெருமை பற்றி சொன்னா அது ஸ்தல புராணம்.அஜித் பெருமை பற்றி சிலாகிச்சா அது தல புராணம்




----------------------------


20. வா மீட் பண்ணலாம்னு காதலன் கூப்ட்ட இடத்துக்கெல்லாம் காதலி போனா வாமிட் பண்ற சூழல் ஏற்படும் # ஆதலால் ஜாக்கிரதையாகாதல்செய்வீர்்




----------------------------



Sunday, August 25, 2013

ரேப் செய்யப்பட்ட மும்பை ஃபோட்டோகிராஃபர் பர பரப்பு வாக்குமூலம்

என்னையும் நண்பரையும் கொலை செய்வதாக மிரட்டினர்: பெண் போட்டோ கிராபர் வாக்குமூலம்என்னையும் நண்பரையும் கொலை செய்வதாக மிரட்டினர்: பெண் போட்டோ கிராபர் வாக்குமூலம்


 மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட 22 வயது பெண் போட்டோ கிராபர் நடந்த சம்பவம் பற்றி போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–


நான் சக்தி மில்லில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் பற்றி படம் பிடித்து எழுதுவதற்காக 22–ந்தேதி (வியாழன்) மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன். என்னுடன் அதே பத்திரிகையில் பணிபுரியும் 21 வயது ஆண் நண்பரையும் துணைக்கு அழைத்துச் சென்றேன். எங்கள் இருவரிடமும் போட்டோ எடுக்கும் பணியை பத்திரிகை நிறுவனம் ஒப்படைத்து இருந்தது.



மகாலட்சுமி ரெயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கினோம். 1–வது பிளாட்பாரத்தில் இருந்து நடந்து சென்று அதனையொட்டியுள்ள சக்தி மில்லை அடைந்தோம். அந்த இடம் பாழடைந்து புதர்கள் நிரம்பி இருந்தது. அப்போது நேரம் 5.30 மணி இருக்கும். உள்ளே சென்றால் பாதுகாப்பு இருக்காது என்று கருதினோம்.




அந்த சமயத்தில் மில் காம்பவுண்டில் இருந்து 2 பேர் வெளியே வந்தனர். மில்லுக்குள் செல்ல வழி இருக்கிறது என்று கூறி எங்களுக்கு வழி காட்டி ஒரு சுவரையொட்டியுள்ள பகுதி வழியாக அழைத்துச் சென்றனர். அதில் நடந்து செல்லக்கூடிய வகையில் பாதை இருந்தது. நாங்கள் அதன் வழியே சென்று சில போட்டோக்கள் எடுத்தோம்.


அவர்கள் இருவரும் தங்களை ரெயில்வே ஊழியர்கள் என்று அறிமுகம் செய்ததால் சந்தேகம் வரவில்லை. நாங்கள் மும்முரமாக போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தோம்.


அப்போது 3–வதாக ஒரு வன் வந்தான். அவனும் ரெயில்வே ஊழியர் என்று சொன்னான். நீங்கள் படம் எடுப்பதை எங்கள் அதிகாரி பார்த்து விட்டார். அவரிடம் வாருங்கள்’’ என்று எங்களை அழைத்தான். ‘‘சரி நாங்கள் வருகிறோம் என்று சொன்னோம். ஆனால் அவன் அதிகாரியிடம் அழைத்துச் செல்லாமல் தன்னுடன் வாருங்கள் என்று அழைத்தான்.


உடனே நான் பத்திரிகை அலுவலகத்துக்கு போன் செய்தேன். போன் கிடைக்க வில்லை. சிறிது நேரத்தில் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. எங்கள் பிரிவு பொறுப்பாளர் பேசினார். சில ரெயில்வே ஊழியர்கள் எங்களுடன் வாக்குவாதம் செய்யும் விவரத்தை தெரிவித்தேன். அவர் இனி அங்கு இருக்க வேண்டாம், புறப்பட்டு வாருங்கள் என்றார்.


உடனே நானும், நண்பரும் வெளியே செல்ல புறப்பட்டோம். அப்போது ஒருவன் திடீர் என்று எனது நண்பரை தடுத்து நிறுத்தினான். சில நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு கொலை நடந்தது. அந்த கொலையை செய்தவன் நீ தான் என்று மிரட்டினான்.


நான் அவர்களிடம் பேச முற்பட்டபோது என்னைப் பார்த்து சத்தம் போட்டு மிரட்டினான். எங்கள் இருவரையும் பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான். எங்களிடம் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா, செல்போன் இருக்கிறது எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினோம்.


அவர்கள் விடவில்லை. பெல்ட்டால் நண்பரின் கைகளை கட்டிப் போட்டான். அப்போது மேலும் 2 பேர் வந்து சேர்ந்து கொண்டனர். 3 பேர் நண்பருடன் இருந்து கொண்டனர். மற்ற 2 பேர் சுவரின் மறைவு பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.


அங்கு போனதும் எனது தாயாரிடம் இருந்து போன் வந்தது. உடனே ஒருவன் அவரிடம் இங்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று சொல்லுமாறு மிரட்டினான். அதன்படி தாயிடம் சொன்னேன். அதன் பிறகு மீண்டும் தாய் போன் செய்தார். அப்போதும் ஒருவன் மிரட்டிய தால் தாயிடம் எல்லாம் சரியாக நடக்கிறது என்று சொன்னேன்.



அதன் பிறகு 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக என்னை கற்பழித்தனர். முதலில் கற்பழித்தவன் கடைசியாக மீண்டும் ஒரு முறை கற்பழித்தான். அவர்களிடம் கடுமையாக போராடினேன். அவர்கள் பீர் பாட்டிலை உடைத்து வைத்துக் கொண்டு என்னையும், நண்பரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியபடி இருந்தனர். இதனால் எதுவும் செய்ய இயலவில்லை.


கடைசியாக எங்கள் இருவரது பையையும் சோதனையிட்டனர். எதையும் நாங்கள் திருடவில்லை. நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி நான் எடுத்த போட்டோக்களை பறித்துக் கொண்டனர். பின்னர் ரெயில் தண்டவாளம் வழியாக நடந்து தப்பிச் சென்று விட்டனர்.


அதன் பிறகு நடந்த விவரங்களை கட்டிப் போடப்பட்டு இருந்த நண்பரிடமும், எனது அலுவலகத்துக்கும் தெரிவித்தேன். உடனே எனது நண்பர் என்னை ஐஸ்லோக் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார்.


இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்


:போட்டோ கிராபருக்கு பாலியல் கொடுமை: 5 குற்றவாளிகளும் கைது

 
 மும்பையில் பத்திரிகை பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் போலீஸ் காவல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தெற்குபகுதியில், மகாலெட்சுமி ரயில்வே ஸ்டேஷன் அருகே, சக்தி மில் என்ற, பாழடைந்த கட்டடம் உள்ளது. இதை புகைப்படமெடுக்க, மும்பையிலிருந்து வெளியாகும், ஆங்கில பத்திரிகையின், 22 வயது இளம் பெண் போட்டோகிராபர், தன் ஆண் நண்பருடன், 22ம் தேதி இரவு சென்றார். அப்போது, ஐந்து பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது


5 குற்றவாளிகளும் கைது


20 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். முகமது அப்துல், சலீம் அன்சாரி, காஸிம் பெங்காலி, சிராஜ் ஷேக், விஜய் ஜாவத் ஆகிய 5 குற்றவாளிகளின் வரைபடத்தை வெளியிட்டு தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து மறுநாள் ( 23-ம் தேதி) முக்கிய குற்றவாளி, முகமது அப்துல் என்பவ ன் முதலில் கைதானான். இதையடுத்து நேற்று இருவரையும்,இன்று இருவர் என ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் இன்று கைதான காஸிம் பெங்காலி, சலீம்அன்சாரி ஆகிய இரு குற்றவாளிகள் சிக்கினர்.இவர்களில் கடைசியாக சலீம் அன்சாரி, டில்லியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டான்.

இந்த வழக்கு மும்பை குறறப்பிரிவு போலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகளில் 3-வது மற்றும் நான்காவது குற்றவாளிகள் , இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களின் காவல் ஆக.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான குற்றவாளிகளில் ஒருவரான சிராஜ் ஷேக் என்பவன் வயது 16 என அவனது உறவினர்கள் கூறி வருகின்றனர்.

பெண் உடல்நிலை முன்னேற்றம்

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் போட்டோகிராபர், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு பெண் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து கண்காணி்தது வருகின்றனர்.அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







மும்பையில் நேற்று முன்தினம் இரவு புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர்.

அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி இன்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முதல் குற்றவாளியான சந்த் ஷாயிக், சிறுவன் என்று அவனது பாட்டி தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. 16 வயது சிறுவனை 19 வயது வாலிபர் என்று போலீசார் சித்தரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.





இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் இன்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய அவர், குணமடைந்த பிறகு மீண்டும் வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.


நன்றி - மாலை மலர்

வாலி - எம் ஜி ஆர் ஹிட்ஸை எந்த ஆல்பமும் தாண்டியதில்லையா? எப்படி?

 

எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் வாலி.

திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். இவர் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தயார் பெயர் பொன்னம்மாள்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்த போது 'நேதாஜி' என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்தி இருக்கிறார்.

சிறு வயதிலேயே கவிதை, நாடகங்கள் எழுதுவதில் வாலிக்கு அலாதி பிரியம். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பு திருச்சி அகில இந்திய வானொலியில் இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகி இருக்கின்றன.

வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தார். அந்த பாடல் பின்னர் டி.எம்.சவுந்தரராஜனின் இனிமையான குரலில் பரவசப்படுத்தியது.

டி.எம்.சவுந்தரராஜனுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் சினிமாவில் பாட்டு எழுத தொடங்கினார்.

காதல், தாலாட்டு, வீரம், தத்துவம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், விரக்தி, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் வாலி எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் என தொடர்ந்து இப்போதுள்ள புதுமுக நடிகர்களுக்கும் அவர் பாடல்கள் எழுதி இருக்கிறார். திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலி பாடல் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்காக 'படகோட்டி' படத்தில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபலம். 'ஆயிரத்தில் ஒருவன்', 'எங்க வீட்டுப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'ரிக்ஷாக்காரன்' என எம்.ஜி.ஆரின் எல்லா வெற்றிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை பாடல்களில் அற்புதமாக சேர்த்து அவருடைய பேரன்பை பெற்றவர்.

'கலியுக கண்ணன்', 'கடவுள் அமைத்த மேடை', 'ஒரு செடியில் இரு மலர்கள்', 'சிட்டுக்குருவி', 'ஒரேயொரு கிராமத்தில்', 'சாட்டை இல்லாத பம்பரங்கள்' உள்பட 17 திரைப்படங்களுக்கு வாலி திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதி ராவுடன் சேர்ந்து 'வடைமாலை' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், நிஜ கோவிந்தம், அம்மா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இயக்குனர் கே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை', மற்றும் 'ஹே ராம்' மற்றும் 'சத்யா', 'பார்த்தாலே பரவசம்' ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

வாலி 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார். 1 எங்கள் தங்கம் (1970), இவர்கள் இப்படித்தான் (1979), வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள் (1989), கேளடி கண்மணி (1990), தசாவதாரம் (2008) ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த 2007-ம் அண்டு மத்திய அரசு வாலிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.

வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.



நன்றி - மாலை மலர் 



பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், வாலி, 82, மாரடைப்பால் நேற்று இறந்தார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.


கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, மூச்சுத் திணறல் அதிகமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு வாலி இறந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள கற்பகம் அவின்யூ வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகத்தினர், பாடகர்கள், பாடகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வாலியின் மனைவி ரமணத் திலகம், இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.


கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். துவக்கத்தில் எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, "நேதாஜி' என்ற கையெழுத்து பத்திரிகையை துவங்கினார். திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார். திரைப் படங்களுக்கு பாடல் எழுத ஆசைப்பட்டு சென்னை வந்தார்; அவர் நினைத்தது நடந்தது. 1958ல், "அழகர் மலை கள்வன்' படத்தில், "நிலவும் தரையும் நீயம்மா...' என்ற பாடலை வாலி எழுத, டி.கோபாலன் இசையில், பி.சுசிலா பாடினார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் துவங்கி, இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இதுவரை, 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என, பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். சிறுகதை, கவிதை, உரைநடை என, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வெற்றிலை பாக்கு பிரியரான இவர், இப்பழக்கத்தை 15 வயதிலிருந்து தொடர்ந்து, 76 வயதில் நிறுத்தினார். "அவதார புருஷன்', "அழகிய சிங்கர்' என கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.


நூல்கள், படங்கள்:
கவிஞர் வாலியின், "அம்மா, அவதாரபுருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், நானும் இந்திய நூற்றாண்டும், வாலிப வாலி' ஆகிய நூல்கள் பிரபலமாக பேசப்பட்டன. இவர், "சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்கால் குதிரை' படங்களில் நடித்துள்ளார்.


17 படங்களுக்கு திரைக்கதை:
"கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே' உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் மாருதி ராவுடன் இணைந்து, "வடை மாலை' படத்தை இயக்கவும் செய்தார்.


விருதுகள்:
வாலியின் கலைச் சேவையை பாராட்டி, 2007ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். "எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம்' படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசினால், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருதுகளும் பெற்றுள்ளார். 1973ல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற "இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு' என்ற பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்து விட்டார்.


மனதை "திருடிய' திரைப்பாடல்கள்




எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன் என, மூன்று தலைமுறைகள் கடந்து, திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட, இவரது பாடல்களில் சில:

* மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா....
* தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்...
* நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்......
* காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்...
* சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ...
* ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...
* அந்த நாள் ஞாபகம் - நெஞ்சிலே வந்தே நண்பனே, நண்பனே...
* மாதவிப் பொன் மயிலாள் தோகைவிரித்தாள்...
* ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...
* மல்லிகை... என் மன்னன் மயங்கும், பொன்னான மலரல்லவோ...
* வெற்றி வேண்டுமா... போட்டுப்பாரடா எதிர்நீச்சல்...
* புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக...
* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...
* "புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
* நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ...
* ஏமாற்றாதே ஏமாறாதே...
* கண் போன போக்கிலே கால் போகலாமா...
* நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும்...
* ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு...
* இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு...
* ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை...
* அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
* சுந்தரி கண்ணால் ஒரு சேதி...
* ரோஜா ரோஜா...

பழைய பாடல்கள் என்று இல்லை, காலத்திற்கேற்ப புதிய படங்களையும் இவரது "வாலிபமான' பாடல்கள் ஆக்கிரமித்தன.
* கொஞ்ச நாள் பொறு தலைவா... அந்த வஞ்சிக்கொடி இங்கு வருவா...
* அடி ஒன் இஞ்ச், டூ இஞ்ச், த்ரி இஞ்ச் கேப் ஏண்டியம்மா...
* மாசி மாசி... காதல் வாசி...
* மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாய்..

இதைத் தவிர, தற்போது திரைக்கு வந்த "தில்லுமுல்லு', "மரியான்', "உதயம் "என்.எச்., 4', "எதிர்நீச்சல்', "அலெக்ஸ் பாண்டியன்' போன்ற பாடங்களிலும், இவரது படைப்புகள் இடம்பெற்றன.

"காதோடு தான் நான் பாடுவேன்...
மனதோடு தான் நான் பேசுவேன்...''

- இந்த வரிகள், ஒவ்வொரு தமிழ் திரைப்பட பாடல் ரசிகனுக்கும், தன்னைப் பற்றி கவிஞர் வாலி, சொல்லிவிட்டு சென்றதாகவே கருத வேண்டி உள்ளது. அவரது, ""வார்த்தைக்கு வயதில்லை கருத்துக்கு காலம் இல்லை சிந்தனைக்கு சிதைவு இல்லை'' -நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, "வயசாயிப்போச்சு...' என புலம்புவோர் மத்தியில், 82வது வயது வரை, "வாலி'பராகவே வலம் வந்தவர் வாலி. இதுவரை, அவர் இயற்றியது 1000 படங்களுக்கு, 15 ஆயிரம்


புத்தகங்கள்:
கவிஞர் வாலி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:


* பாண்டவர் பூமி
* ஆறுமுக அந்தாதி
* பகவத்கீதை கவிதை நடை
* சரவண சதகம்
* இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்
* கம்பன் என்பது
* நானும், இந்த நூற்றாண்டும்
* நினைவு நாடாக்கள் உள்ளிட்ட ஏராளமான பாடல்கள், அழியாத காவியமாகவே விளங்குகின்றன. இது தவிர, "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' உட்பட பல தனி பாடல்களும் வாலியை, பாராட்டு மழையில் நனைய வைத்தன.


பெயர் மாற்றம்:
ரங்கராஜனுக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது; நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. வார இதழ் ஒன்றில், ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவியர் மாலியை போல, தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட பள்ளி தோழன் பாபு, "மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக வரவேண்டும்' என்று கூறி, ரங்கராஜனுக்கு, "வாலி' என, பெயர் வைத்தார்.


"சின்னத் தாயவள் தந்த ராசாவே': பின்னணி பாடகி மஹதி


"ஒஸ்தி' பட இசை வெளியீட்டு விழாவிற்கு, வாலி வந்திருந்தார். அந்தப் படத்தில், "நெடுவாலி...' என்ற பாடலை பாடியிருந்தேன். விழாவில், "உங்களோடு சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று, நான் கேட்க, அவரோ, "உங்களின் கர்நாடக இசை மிகவும் பிடிக்கும்; உங்களோடு நான் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்டார். நான் பாடிய, "தீயில்லை... புகையில்லை... ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே...' பாட்டு, அவர் கைப்பட எழுதிய காகிதத்தை, என்னிடம் பாடக் கொடுத்தனர். எனக்கு வாலியின் நினைவாக வைத்துக்கொள்ளத் தோன்றியது. இசையமைப்பாளரிடம் கேட்டு, அந்த கையெழுத்து பிரதியை, என்னிடம் வைத்துக் கொண்டேன். அவர் எழுதியதில் என்னைக் கவர்ந்தது, "சுந்தரி... கண்ணால் ஒரு சேதி மற்றும் சின்னத் தாயவள் தந்த ராசாவே...' பாடல்கள் தான்.


தலைமுறை கவிஞர்:
திண்டுக்கல் லியோனி, பட்டிமன்ற நடுவர்: அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்களை எழுதி, மலைக்க வைத்தவர் கவிஞர் வாலி. இலக்கிய கற்பனைகளில் புதுமையை புகுத்தியவர். ""மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே. போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை, உன் புருவத்தில் கண்டேனே. தஞ்சையில் பறந்த புலிக்கொடியை, உன் பெண்மையில் கண்டேனே. இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்பேனே'' என பெண்ணை, தமிழகத்தோடு ஒப்பிட்டு எழுதியவர். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே,' என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எண்ணங்களை தெளிவுபடுத்தியவர்.


தீர்க்கதரிசன கவிஞர்:
கவிஞர் முத்துலிங்கம்: எனது 45 ஆண்டுகால நண்பர். சினிமா பாடல்களைத்தவிர, பத்திரிகைகள், கவியரங்கங்களுக்கு வாலி கவிதை எழுதுவார். அக்கவிதைகளை என்னிடம் வாசித்து காண்பித்தபின், பத்திரிகைகளுக்கு அனுப்புவார்; நான், அவரை விட வயதில் இளையவன். அப்படி இருந்தும், என்னை வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்த நட்புக்கு, தமிழ்தான் காரணம். இந்திய சினிமா வரலாற்றில், 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர்; பாபநாசம் சிவனுக்கு பின், இசையறிவுடன் திகழ்ந்த கவிஞர். "நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார்...,' என தீர்க்கதரிசனமாக, எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாடல் எழுதியவர்.


தமிழே உன் தலையெழுத்து:
மதுரை ரேடியோ நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம்: ""பூ முகத்து புன்னகையே இனி யார் முகத்தில் பார்ப்போம்! புது நடையில் சொற்பொழிவை யாரிடத்தில் கேட்போம்! நடை துள்ளும் தமிழுக்கு பகை வந்தால், அங்கே உடைவாளை எடுக்கின்ற பெரும் வீரர் எங்கே? இமை மூடிக் கொண்டாய்! புதை குழியில் மெல்ல தமிழே உன் தலையெழுத்தை நான் என்ன சொல்ல?'' -இது அண்ணாதுரை இறந்த போது, கவிஞர் வாலி எழுதியது. வாலிக்கும், இது பொருந்தும்.


மனம் மாறிய வாலி:
கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி, இளமையில் வறுமையின் காரணமாக, ஒருமுறை தற்கொலை முடிவை' எடுத்தார். அப்போது கண்ணதாசன் "சுமைதாங்கி' என்ற படத்துக்காக எழுதிய, "மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா...' என்ற பாடலில் வரும், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு...' என்ற பாடல் வரியைக் கேட்ட வாலி, மனம் மாறி தற்கொலை முடிவை கைவிட்டார்.


இதுக்கு மேல் எழுத முடியாது:
"அபூர்வ சகோதரர்கள்' படத்துக்காக, காதல் தோல்வி தொடர்பாக வாலி பாடல் எழுதினார். அதில் திருப்தி அடையாத நடிகர் கமல், மீண்டும் கேட்டார். இதுமாதிரி ஐந்து முறை பாடலை மாற்றிய வாலி, 5 தடவைக்குப் பின், இதற்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என கூறி, கோபத்துடன் ஒரு பாடலை கமலிடம் கொடுத்தார். அந்த பாடல்தான், "உன்ன நெனச்சேன்... பாட்டு படிச்சேன்... தங்கமே, ஞானத்தங்கமே...' என்ற பாடல்.


வாலியின் வரி:
""அன்று 24 மணி நேரம் இருந்தது. ஆனால் சாப்பிட எதுவும் இல்லை. இன்று சாப்பிட அனைத்தும் இருக்குகிறது; ஆனால் நேரம் இல்லை'' என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.


வாலி "1000':
கவிஞர் வாலியின் 80வது பிறந்த தின நிகழ்ச்சியில், ஆயிரம் படங்களுக்கு அவர் பாடல் எழுதியதை பாராட்டி, "பிரம்ம கான சபை' சார்பில், 2010 நவ., 13ல், "வாலி - 1000' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.


பிரதிபலித்த வாலி:
எம்.ஜி.ஆர்., படங்களுக்கு அதிகளவில் வாலி பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர்., கருத்துக்களை பாடல்களில் வாலி பிரதிபலித்தார். எம்.ஜி.ஆர்., புகழுக்கு, வாலியின் பாடல் வரிகளும் ஒரு காரணமாக அமைந்தன. அந்தளவு இருவரது உறவு, நட்பு வட்டத்தை தாண்டி இருந்தது.


எளிதில் புரியும்:
வாலியின் பாடல் வரிகள், சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கும். அதே வகையில் சில பாடல்களில் பிற மொழி வார்த்தைகளை கலந்தும் பாடல்களை எழுதியுள்ளார். வாலி தத்துவ பாடல்களை மட்டும் எழுதவில்லை.


எம்.ஜி.ஆர்., தந்த கடிகாரம்:
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்: நல்ல ஓவியர். இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது' என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு. நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார். இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி' யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக', புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர். "அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே...' பாட்டெழுதியவர், வாலி. ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது' என்று தன்னை மறந்து சொன்னாராம்.



"கற்பகம்' படத்தின் "மன்னவனே... அழலாமா... அத்தை மடி மெத்தையடி... பக்கத்து வீட்டு பருவமச்சான்....' பாடல்கள், வெற்றியைத் தந்தது. டி.எம்.எஸ்.,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும்... கந்தனே உனை மறவேன்'. கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர்., வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன்' என்றார். சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்...' என்றெழுதியதும், எம்.ஜி.ஆர்., கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன். சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்.



வலிமை கவிஞர் வாலி:
கவிஞர் நெல்லை ஜெயந்தா: 1958ம் ஆண்டு முதல் இன்று வரையிலும், திரைத்துறையில் தேடப்படும் ஒரே நபர் வாலி. பாடல்களில் பழமையும், புதுமையையும் தரும் வலிமை, வாலிக்குத் தான் இருந்தது. "டிமாண்ட்' செய்யும் ஒரே பாடலாசிரியர். யாராக இருந்தாலும் இவரிடம் பாடல் கேட்டால் 4 பல்லவி, 4 சரணம் கொடுத்துவிடுவார். சிலர் புதியவர்களுக்கு, சிலவரிகளை கொடுப்பார்கள்; ஆனால், வாலிக்கு அந்த பழக்கமே இல்லை. தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம், தன்னை ஒரு முட்டாள் போல் நினைத்து கேட்பார். ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் பலதை ரசித்தாலும், எனக்கு அவரது பழைய பாடல்களில் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' புதிய பாடல்களில் "என்ன விலை அழகே...' மிகவும் ரசித்துக் கேட்பேன். வாலி, பெரும்பாலும் தனிமையைத் தான் விரும்புவார். நன்கு பழகியவர்களை எந்த இடத்தில் கண்டாலும் அழைத்து பேசுவார். அது போல், ஒருவரை சந்திக்க "அப்பாயின்மென்ட்' கொடுத்த பின், அதைவிட புகழ்பெற்ற அல்லது மிக முக்கியமான நபராக இருந்தாலும், அந்த நேரத்தை மாற்ற மாட்டார்.


வந்ததும் காலி; காரணம் "வாலி':
கவிஞர் வாலியின் வரிகளுக்கு அன்றும், இன்றும் இருக்கும் "மவுசுக்கு', அதை தாங்கி வந்த "கேசட்', "சிடி'களின் விற்பனையே சாட்சி. குறிப்பாக, வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ்கள், லட்சக்கணக்கில் விற்றுள்ளன. இன்றும், தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றன. "நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்', "ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை', "காற்று வாங்க போனேன்... கவிதை வாங்கி வந்தேன்', "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...' போன்ற எம்.ஜி.ஆர்., ன் காலத்தால் அழியாத பாடல்களின் அமோக விற்பனையில், வாலியின் வரிகளும் பின்னணியில் அணிவகுத்தன. டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய, "கற்பனை என்றாலும்', "ஓராறு முகமும்... ஈராறு கரமும்...' போன்ற பக்தி பாமாலைகளுக்கும், வரிகளால் பூமாலை கோர்த்தவர், வாலி. எம்.ஜி.ஆர்., டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு அடுத்தபடியாக, அதிக ஆல்பங்கள் விற்பனைக்கு வருவது, வாலியின் பாடல்கள் தான். மதுரை, கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராமிடம் கேட்ட போது, ""எனது 25 ஆண்டு கால ஆடியோ விற்பனையில், துவக்க காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு "டெமோ' காட்ட, வாலியின் வரிகளில், டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய பாடல்களை தான், ஒலிக்கச் செய்து காட்டுவோம். அதை கேட்டதுமே, கேசட் விற்றுவிடும். ஒவ்வொரு சீசனிலும், 30க்கும் மேற்பட்ட ஆல்பங்கள், வாலி பெயரில் விற்பனைக்கு வரும். அடுத்த சீசன் வருவதற்குள், முன்பு வந்தவை விற்றுவிடும். வாலியின் வரிகளை தேடி வரும் ரசிகர்கள், 70வயதிலும் இருக்கிறார்கள், 20லும் இருக்கிறார்கள். வாலி-எம்.ஜி.ஆர்., ஹிட்ஸ் விற்பனையை, வேறு எந்த ஆல்பமும் முறியடிக்க முடியாது,'' என்றார்.


நன்றி - தினமலர்