Friday, March 08, 2013

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

 

எல்லா தமிழ் சினிமாக்களையும் கலாய்க்கும் எஸ் வி சேகரின் சினிமா சினிமா , ஷக்தி சிதம்பரத்தின் மகாநடிகன் , சி எஸ் அமுதனின் தமிழ்ப்படம் பாணியில் இன்னொரு படம் . முதல் பாதி ஹாலிவுட் படமான ஹேங்க் ஓவர் , பின் பாதியில் இன்று போய் நாளை வா  & கண்ணா லட்டு தின்ன ஆசையா?  அக்மார்க் உல்டா என கலந்து கட்டி மொக்கை போட்டிருக்கிறார்கள் .. உஷ் அப்பா முடியல


நண்பர்கள் 3 பேரு , திருப்தி இல்லாத மேரேஜ் லைஃப்ல இருந்து விடுபட  ஐடியா பண்றாங்க . இவங்க 3 பேருக்கும்  ஏன் மனைவி செட் ஆகலை அப்டினு தனித்தனி டிராக்ல சின்ன சின்ன கதை .அது முடிஞ்சதும் டான்ஸ் பார்ட்டில ஒரு ஃபிகரை பார்க்கறாங்க. அதுதான் ஹீரோயின் . அதை கரெக்ட் பண்ண 3 பேரும் படாத பாடு படறாங்க. யார் செட் பண்ணாங்க என்பதுதான் கதை . இதுல ஒரு ட்விஸ்ட் வேற இருக்கு க்ளைமாக்ஸ் ல . தில் இருக்கறவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க.. இந்த  கூத்துல பெரிய கூத்து என்னன்னா 2 வது பாகம் வேற வருதாம் .


ஹீரோ வினய்  என்பதே டைட்டில் ல தான் தெரியுது . எப்படி இருந்த ஆளு இப்படி ஆகிட்டாரே?  அய்யோ பாவம் , சத்யன் , பிரேம் ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட இவருக்கு இல்லை . இவர் அஜித்தை , ரஜினியை , விஜய் யை கலாய்ப்பதெல்லாம் ஓவர் . யார் யார் என்ன செஞ்சா நல்லாருக்கும்னு தெரிய வேணாமா?  ( அவர் கலாய்ச்ச ஆர்டர் படி பேர் போட்டிருக்கேன், இதுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க )


ஓப்பனிங்க் ஷாட்டில் ஒரு பாடலுக்கு வரும் பவர் ஸ்டார்க்கு அமோக வரவேற்பு , ஆனா பெருசா ஏதும் கவரலை . பவர் ஸ்டார் உஷார். இப்படி சில்க் ஸ்மிதா மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க பவர் போயிடும் . 




படத்துலயே எல்லார் மனமும் கவர்ந்தவர் சத்யன் தான். நல்ல காமெடி சென்ஸ். டயலாக் டெலிவரி , நடிப்பு எல்லாம் பக்கா 


பிரேம் ஜியை க்ளோசப் ல அடிக்கடி காட்டுவது ஏன்? அவர் வாய் என்ன சிம்ரனின் இடுப்பா? கேமராவைக்கொண்டு போய் கொண்டுபோய் அவர் வாய் கிட்டேயே வைக்கறாங்க >. முடியல 


 ஹீரோயின் லட்சுமி ராய். டைட்டில் ல அழகு தேவதைனு போடறாங்க. என்ன நிர்ப்பந்தமோ .. பில்லா நயன் தாரா கெட்டப்பில் க்ளைமாக்ஸ் சில் நல்லா பண்ணி இருக்கார் , ஜாக்கிங்க் போற சீன்ல நல்லா திறமையை காட்டி இருக்கார்.. (  ஜாக்கிங்க் போறதுல என்ன திறமை?னு கேட்கும் சின்னப்பசங்க எல்லாம் ஜவ் மிட்டாய் சாப்பிடவும் ). நீச்சல் டிரஸ் ல  10 நிமிஷம் வர்றார் , அதோட அவர் போர்ஷன் ஓவர் . 


 வினய்க்கு மனைவியாக வரும் அந்த குண்டு பொண்ணு ஆர்த்தி மாதிரி ஒரு ரவுண்ட் வர சான்ஸ் இருக்கு , அவரே 19 ரவுண்ட் நம்மை விட குண்டா தான் இருக்கார் . 


 கவுரத்தோற்றத்தில் (!!!!!!!!!) டான்ஸ் பார்ட்டி புகழ் சோனா . 1ம் சொல்றதுக்கில்லை.. அப்புறம் மந்த்ராஆஆ




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர் டிசைனில் , விளம்பரங்களில் பவர் ஸ்டாரை போட்டு மார்க்கெட் பண்ணினது , அவர் ஒரு பாட்டுக்குத்தான் வர்றார் என்பது தெரியாத வண்ணம் பார்த்துக்கிட்டது 



2.  படத்தின் ஹீரோயின் லட்சுமிராய்  படம் போட்டு 97 வது நிமிடம் தான்  அதாவது இடைவேளை முடிஞ்சு 6 நிமிஷம் கழிச்சுத்தான் எண்ட்ரியே ஆகறார் என்பது தெரியாத படி ஃபுல் அண்ட் ஃபுல் அவர் தான் எல்லாம் என்பது மாதிரி பிரமோட் பண்ணது 



3. ஹீரோ வினய் என்பதே தெரியாத படி இருட்டடிப்பு பண்ணி பிரேம் ஜி , சத்யன் இவங்களை பூஸ்ட் அப் பண்ணது 



4.  பிரேம் ஜி - சோனா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் கடலோரக்கவிதைகளை நையாண்டி செஞ்ச விதம்  ( அடி ஆத்தாடி ) 


5. சத்யன் தன் ஜோடியுடன் பாடும் உயிரின் உயிரே ( காக்க காக்க) பாடல் காட்சி


6, மனைவியைப்பிரிந்த வாலிபர்கள் சங்கம்  ஆரம்பிச்சு பாடும் கானாப்பாட்டான  வா மச்சி வா குத்தாட்டப்பாட்டு ஆக்கியது ( பாடல் இல் இருந்த கிக் படமக்கத்தில் இல்லை ) 


7 . மனோபாலாவின் சம்சாரத்தை  வேறொரு நபர்  கிஸ்  அடிப்பதும் , அதை மன்னிக்கும் மனோபாலாவை ஒபாமா சந்திக்க விரும்பும் காமெடி டிராக்கும் ஆஹா! 


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கலாய்த்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரே பார்த்தாலோ படிச்சாலோ அவங்களே ரசிக்கும் அளவு இருக்கனும். எல்லை மீறினால் ரொம்ப த்தப்பு . ரஜினி, கமல் , அஜித் , விஜய் 4 பேரையும் கலாய்ச்சு இருக்கீங்க , இதுல அவங்களோ, அவங்க ரசிகர்களோ பார்த்தா கடுப்பாகும்படி தான் காட்சிகள் இருக்கு .



2. ஹீரோ பேரு டேவிட் பில்லா , அவர் தடுமாறி கீழே விழும் காட்சியில் “ நீ நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு சொன்னே, இப்போ கீழே விழுந்து கிடக்கே  “ இந்த டயலாக் எதுக்கு? அஜித் ஒரு நாளும் தன்னை நெம்பர் ஒன் அப்டினு சொன்னதே இல்லையே?  தனிப்பட்ட முறைல உங்களுக்கு ஏதாவது அஜித் கூடப்பகையா? 


3. சத்யன் ஒரு காட்சியில் துப்பாக்கி விஜய் ஸ்டைலில்  “ ஐ ஆம் வெயிட்டிங்க் “ அப்டின்னதும் ஃபிகர் “ போடா லூசு “ அப்டிங்குது. இது ரொம்ப ஓவர் 


4. யார் அவன் கோச்சடையான்? மண்டை மேல கொண்டை வெச்சுக்கிட்டு  என்ற டயலாக்கும் அத்து மீறலே , தியேட்டர்ல யாரும் சிரிக்கவே இல்லை பாஸ் 


5 . லொள்ளு சபா உட்பட எல்லாரும் பிரிச்சு மேஞ்ச நாயகன் வேலு நாயக்கர் கேரக்டர் உல்டா செம போர்..


6. மகளிர் தினம் அன்னைக்கு படம் ரிலீஸ் பண்ணிட்டு படம் பூரா பெண்களை மட்டம் தட்டிட்டே இருக்கீங்க.. டயலாக்ஸ் எல்லாம் நேரடி டபுள் மீனிங்க் ..  ஏஏஏ சர்ட்டிஃபிகேட் குடுத்ததில் தப்பே இல்லை 



7, கே எஸ் ரவிக்குமார் போலீசாக செய்யும் அலப்பறை செம மொக்கை 



8. க்ளைமேக்ஸ் வந்ததும் டகால்னு 3 பேரும் திருந்துவது எப்படி? 


9. படத்தின் கடைசி அரைமணி நேரம் சத்திய சோதனை , மகா இழுவை 

10 . ஒவ்வொரு தமிழ் சினிமாவையும் கலாய்க்கும்போது நல்லாவே தெரியுது என்ன படத்தை ஓட்டறீங்கனு, போதாததுக்கு அந்தந்தப்பட ஃபேமஸ் பி ஜி எம் மை வேற ஓட விடறீங்க , போதாததுக்கு படத்தோட டைட்டிலையும் கேரக்டரே சொல்லனுமா? படு செயற்கை  



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நாம 10 ரூபா கடனா கேட்டா தராத பசங்க பொண்ணுங்க கேட்டா மட்டும் 1000 ரூபா அயர்ன் பண்ணித்தருவானுங்க



2. நான் தல யையே பார்த்தவ.என் கிட்டேயே மங்காத்தாவா ? 


- நான் தல ,தளபதி 2 பேரையும் பார்த்தவ 




3. எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வெச்சவனைத்தான்  லவ் பண்ணுவாங்கன்னா என்னை மாதிரி சிங்கிள் பேக் எல்லாம் எங்கே போக ? 



4.  ஏய், டூ வட் ஐ ஸே.. 

 என்னது? வாட்டர்  சப்ளை வேணுமா?



5. ட்ரெட் மில்லுல என்னை இப்படி நடக்க விட்டதுக்கு ரோட்ல என்னை விட்டிருந்தா இந்நேரம் நான் கோயம்பத்தூருக்கே போய் இருப்பேன் 


6. ஹாய் மிஸ்.. என்ன இவங்க கை கொடுக்க மாட்டாங்களா?

 அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ்

 ஆடு மேய்க்கறாங்களா? 


 அய்யோ, யாரையும் டச் பண்றது பிடிக்காதுன்னு அர்த்தம் 


 குட் ஹேபிட், ஆனா பேடு மேனர்ஸ் 



7.  இவ என் ஃபிரண்ட் சவுந்தர்யா 


 ரஜினியை கேட்டதா சொல்லுங்க 



8.  நாம 2 பேரும் பாம்பே ஓடிப்போலாம் 


 அங்கே வேணாம் , குஜராத் போலாம்// 


 இல்லை , பாம்பே படத்துல தான் அர்விந்த் சாமி மணீஷா கூட ஓடிப்போய் ரெட்டை குழந்தை பெத்துக்கிட்ட்டாரு  , அதே செண்ட்டிமெண்ட் ல நாமும் ட்ரை 



9.  தண்ணி குடு 

 இல்லை 


 இப்போதான் ஒரு 30 லிட்டர் கேனை உருட்டிட்டுப்போனே? ( அது ஒரு குஜிலி)



10.  டேய், இது எத்தனை நாளா நடக்குது? 


 இப்போத்தான் அரை மணி நேரமா 





11.  நான் உயிரோடு இருக்கும் வரை தப்பு பண்ண விட மாட்டேன் 


 ஓ, எப்போ சாவீங்க ?


12.  எதுல வேணாலும் விளையாடுங்க, ஆனா என் லவ் ல மட்டும் விளையாடாதிங்க


 அப்போ உன் லவ்வர் கூட விளையாடலாமா?  ( எந்த ஃபிரண்ட்ஸ் ஆவது இப்படி கேட்பாங்களா? )


13.  இந்த நாய்க்கு பூஜை, அர்ச்சனை செய்யனுமா? சரி நட்சத்திரம் என்ன?

 மிருக சீசரம் , கவுரவ கோத்திரம் 

 கூட இருந்து பிரசவம் பார்த்த மாதிரியே சொல்றானே



14.  என்ன பேசறீங்க? 

 தமிழ் தான் 


15.  ஏய்.. புரிஞ்சுக்க 


 முதல்ல புரியற மாதிரி பேசு


16.  புலி பசிச்சாலும் புரோட்டா தின்னாது 


17.  முழு புரோட்டாவா இருந்த நம்ம வாழ்வு மேரேஜ் ஆனதுல இருந்து கொத்து புரோட்டாவா ஆகிடுச்சு 


18.  நான் அஞ்சாவது படிக்கும்போது அஞ்சலை டீச்சரை லவ் பண்ணேன், பத்தாவது படிக்கும்போது பத்மா டீச்சரை , பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரிமளா டீச்சரை லவ் பண்ணேன் 




19.  அடடா, என்ன அழகு அழகு , உக்கார வெச்சு ஒரு மாசம் வேடிக்கை பார்க்கலாம் போல 


20 . எங்கே அவளைக்காணோம்? மைதா மாவு மாதிரி இருந்தாளே, தண்ணீருல கரைஞ்சுட்டாளா?





21.  மிஸ் , 17 சி பஸ் எங்கே நிக்கும்? 

 சாலி கிராமம் போய்க்கேட்டா சொல்வாங்க, இது பெங்களூர் 



22. அய்யோ , மேடம், ரொம்ப ஏறி ஏறி இறங்காதீங்க  ( அவுட் ஆகிடப்போகுது ) சென்சார் கட் வசனம் மியூட் ( டபுள் மீனிங்க் _)




23./ ஓமக்குச்சி கூட என்னைப்பார்க்க வர மாட்டான், ஒபாமா எதுக்கு வர்றாரு?


24.  அந்தக்கொரில்லா நீ எது சொன்னாலும் கேட்குமா? முட்டி போடுமா? 


 குட்டியே போடும்  ( அதாவது வாரிசு ) 



25. உன் மாமியார்  கராத்தாவுல பிளாக் பெல்ட்னு சொல்லவே இல்லை?


இதை பிரஸ் மீட் வெச்சா சொல்லிட்டு இருக்க முடியும்?


26. குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த மாமியார்களே இப்டித்தான்





எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி. பி கமெண்ட் - எல்லாரும் பார்க்க முடியாது . பி , சி செண்ட்டர் ஆண் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். எல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தவங்க ஓரளவு ரசிக்கலாம் , டி வி ல பார்க்க ஏற்ற படம் . தியேட்டருக்குப்போனா 9 ல குரு  ஏழரை சனி - ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

 ரேட்டிங்க் -   2.25  / 5


கோச்சடையான் ல என்னை நீக்கிட்டாங்களா? - கே எஸ் ரவிக்குமார் பேட்டி

ஆப்பிரிக்காவில் வடிவேலு!

இது புது சினிமா
க.ராஜீவ் காந்தி
கே எஸ்.ரவிகுமார்... தமிழ் சினிமாவின் மாஸ்டர் இயக்குநர், இப்போ பாலிவுட்டில்! சஞ்சய்தத்தை வைத்து 'சாமி’ படத்தை இந்தியில் இயக்கிக்கொண்டு இருப்பவரைச் சந்தித்தேன்.  



 ''நீங்கள் இயக்கிய ஹிட் படங்களே அவ்வளவு இருக்கும்போது, ஏன் இந்தியில் 'சாமி’ ரீமேக் பண்றீங்க?''



''அவங்க ரைட்ஸ் வாங்கிவெச்சுட்டுக் கூப்பிட் டாங்க. நான் என்ன பண்ண முடியும்? நிறைய போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் வருதேனு சின்ன சந்தேகம் இருந்துச்சு. அவருக்காக நிறைய மாத்தியிருக்கேன். என் ஸ்பீடுக்கு அங்கே வேலை பார்க்கிறதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு. ஆனா, ஹீரோ இல்லைன்னாலும் ஹீரோ இல்லாத போர்ஷனை எடுத்துருவேன். பரபரனு ஷூட்டிங் முடிச்சாச்சு. ஒரு ஃபைட்டு, ரெண்டு பாட்டு மட்டும்தான் பாக்கி!''
''சமீபமா இங்கே தமிழ்நாட்டில் சினிமாவை வெளியிடுவதில் நிறைய சிக்கல்கள் வந்துள்ளனவே?''



''எப்படிப் படம் எடுத்தாலும் சண்டைக்கு வர்றாங்க. இனிமே ஈ, கொசு, பல்லி, கரப்பான் பூச்சிகளைத்தான் வில்லனாக் காட்ட முடியும்போல. ஏன்னா, அதுகதான் கேஸ் போடாது. கெட்டவன்னா மது, சிகரெட் பழக்கம் இருக்கிறவனாத்தான் காட்ட முடியும். அப்படி சீன் வெச்சா திட்டுறீங்க. ஆனா, அப்புறம் ஏன் ரோட்டுக்கு ரோடு ஒயின்ஷாப் வெச்சு விக்கறீங்க? இதெல்லாம் டூமச்சா இருக்கு.''



''ரஜினிக்கு அரசியல் நிர்பந்தம் வந்த மாதிரி, கமலுக்கும் வந்துருச்சே...''



''ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு. கமல் சார் மனசுல என்ன இருக்குனு நமக்குத் தெரியாதே? தவிர, கமல் சார் எனக்கு நெருங்கிய நண்பர் இல்லை. 'மன்மதன் அம்பு’க்குப் பிறகு அதிகபட்சம் நாலஞ்சு தடவை சந்திச்சிருப்போம். ரஜினி சார்கூட ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு முறை பேசிடுவேன். யாரா இருந்தாலும் நிர்பந்தம்னு ஒண்ணு இருந்தாதான் அரசியலுக்கு வர முடியும். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மாஸ்... இவர் கிளாஸ். அரசியல் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை.''
''சரி... இப்போ உண்மை சொல்லுங்க, 'கோச்சடையான்’ படத்தின் ஸ்டேட்டஸ் என்ன?''



''போன வாரம்தான் படம் பார்த்தேன். ரொம்பப் பிரமாண்டமா வந்திருக்கு. ரஜினி சாருக்கும் எனக்கும் பரம திருப்தி. சௌந்தர்யா ரொம்பப் பிரமாதமா டைரக்ஷன் பண்ணியிருக்காங்க. இந்த மாதிரியான படங்களுக்கு ஷூட்டிங்குக்கு 20 நாள் போதும். ஆனா, போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள்தான் மாசக்கணக்கில் இழுக்கும். 'கோச்சடையான்’ல கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை என் பொறுப்பு. 



 படத்தை ரசிகர்களுக்கு விஷ§வல் விருந்தாக் கொடுக்க வேண்டியது சௌந்தர்யாவின் பொறுப்பு. படம் முழுக்க சுத்தத் தமிழ். ரஜினி சாரும் இலக்கிய நடையில்தான் வசனம் பேசி இருக்கார். ரொம்பப் புதுசா, வித்தியாசமா இதுவரை பார்க்காத ரஜினியைப் பார்க்கப்போறீங்க. நானே ரஜினியை அப்படிப் பார்த்தது இல்லை. அடிச்சுச் சொல்றேன்... இந்தப் படத்தைக் குறைஞ்சது அஞ்சு முறை பார்ப்பீங்க. அவ்ளோ புடிக்கும்!''



''ஆனா, 'கோச்சடையான்’ படத்தில் இருந்து உங்களை நீக்கிட்டதாவும் மாதேஷை நியமிச்சதாவும் செய்திகள் றெக்கையடிக்கின்றனவே?''



''நானும் அதைக் கவனிச்சுட்டுதான் இருக்கேன். கேட்டுட்டு ரஜினி சாரே சிரிக்கிறார். எதுவா இருந்தாலும் அவர் சொல்லட்டும். படப்பிடிப்பு என் பொறுப்பு. அதை முடிச்சுக் கொடுத்துட்டேன். இப்போ மாதேஷ் வேலை பார்க்கிறார்னா, அவரோட தேவை அங்கே இருக்கும். எடிட்டிங்கில் எதுவும் உதவினா, 'எடிட்டிங் உதவி’னு அவர் பேரைப் போட்டுக்கச் சொல்லுங்க. யாரும் யாரை நம்பியும் இங்கே வாழ்க்கை நடத்துறது இல்லை. நானும் யாரை நம்பியும் இல்லை!''


''அடுத்து ரஜினி, கமல்... யாராவது ஒருத்தரைவெச்சு பக்கா கமர்ஷியல் படம் கொடுப்பீங்கன்னு பார்த்தா, வடிவேலு நடிக்கிற படத்தை இயக்கப்போறீங்கன்னு சொல்றாங்களே... உண்மையா?''



'' 'கோச்சடையான்’ முடிஞ்ச பிறகு 'ராணா’ பத்திப் பேசலாம்னு ரஜினி சார் சொல்லிட்டார். 'பஞ்சதந்திரம் பார்ட் 2’னு பேச்சு வந்தது. ஆனா, அதிகாரபூர்வமா கமல் சார் தரப்பில் இருந்து யாரும் பேசலை. அந்த இடைவேளையில் வடிவேலுவுக்காக ஒரு கதை கேட்டேன். ரஜினி சார் பயோகிராஃபி எழுதின காயத்ரி சொன்ன கதை அது. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வடிவேலுவும் கதையைக் கேட்டுட்டு வந்து என்னைப் பார்த்தார். 'பண்ணலாமாண்ணே’னு கேட்டாரு. சரின்னு சொல்லிட்டேன். பிரமாண்டமான படமா இருக்கும். இந்தப் படத்துக்கு சினிமாவை சினிமாவாப் பார்க்கிற தயாரிப்பாளர்கள் வேணும். வந்தா, பிரமாதமா பட்டையைக் கிளப்பலாம்!''


நன்றி - விகடன் 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8.3.2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1.சுண்டாட்டம் - பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் பற்றிய கதையாக ‘சுண்டாட்டம்’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

இதுபற்றி இயக்குனர் பிரம்மா ஜி.தேவ் கூறியதாவது: 1990களில் ரஜினி, கமல் படங்களுக்குத்தான் பலத்த போட்டி. இரண்டு மன்ற ரசிகர்களும் தீவிரமாக இருப்பார்கள். இரு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கேரம் விளையாட்டில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பார்கள். அதுதான் வாழ்க்கை என்பதுபோல் விளையாடுவார்கள். இதில் ஏற்படும் மோதல் விபரீதத்தில் முடிகிறது. அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை.


இத்துடன் உண்மை காதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நடந்தவைகள் அனைத்தையும் முழுமையாக காட்ட முடியாது என்பதால் 60 சதவீதம் உண்மை கதையும் 40 சதவீதம் கற்பனையும் கலந்து ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது. இர்பான் ஹீரோ. மற்றொரு ஹீரோ மது. சூதாட்ட கிளப் நடத்தும் தாதாவாக நரேன் நடிக்கிறார். அருந்ததி ஹீரோயின். சிந்தாதரிப்பேட்டையில் கேரம் கிளப் நடத்தும் முனுசாமி என்பவரிடம் இர்பான், மது பயிற்சி பெற்றனர். அந்த கிளப்பில் நடிகர்கள் என்று கூறிக்கொள்ளாமல் சக மாணவர்களைப் போல் இருவரும் பயிற்சி பெற்றனர். 

ஈரோட்டில் சண்டிகாவில் ரிலீஸ்



2. மதில் மேல் பூனை  -வளரும் சிறுவர்களுக்கு, நல்ல பெற்றோர், நல்ல ஆசிரியர் அமைந்தால், அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். அதில், ஏதேனும் தவறு நடந்தால், என்ன நடக்கும் என்பதைத் தான், இந்த படத்தில், ஆக்ஷனும், காதலும் கலந்து கூறியுள்ளனர்.படத்தின், முதல், 20 நிமிடங்கள் வரும் காட்சிகள், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, படமாக்கப்பட்டுள்ளதாம். சிறுவர் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, என, கதையை இரண்டு பிரிவாக பிரித்து, இறுதியில், இரண்டையும் ஒன்று சேர்த்துள்ளனராம். விஜய் வசந்த், விபா, தம்பி ராமய்யா ஆகியோர் நடித்துள்ள, இந்த படத்தை, பரணி ஜெயபால் இயக்கியுள்ளார்.

பீனிக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் படம் ‘மதில் மேல் பூனை’. இதில் நாயகனாக விஜய்வசந்த், நாயகியாக விபா நடிக்கின்றனர். புதுமுகம் கார்த்திக், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

இப்படத்தை பரணி ஜெயபால் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக தயாராகிறது. விஜய் வசந்த் கேரக்டருக்கு பொருந்தி உள்ளார். நாயகி விபாவும் ஆக்ஷன் செய்துள்ளார். பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளது. சிம்பு ஒரு பாடல் பாடி பெரிய ஹிட்டாகியுள்ளது. கதைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. உண்மை கதையும் இதில் உள்ளது. சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை படத்தில் வைத்துள்ளோம். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடமாக இப்படம் இருக்கும் என்றார்.

விஜய் வசந்த் கூறும்போது, ஆக்ஷன் கேரக்டர் செய்துள்ளேன். காட்டில் நடந்த படப்பிடிப்பில் அனைவரும் கஷ்டப்பட்டு நடித்தோம். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.  

இசை: கணேஷ் ராகவேந்திரா, ஒலிப்பதிவு: எல்.கே.விஜய், எட்டிங்: பிரவீன் ஸ்ரீகாந்த், ஸ்டண்ட்: மிராசின் மைக்கேல், நடனம்: ஈஸ்வர்பாபு. 

ஈரோடு ராயலில் ரிலீஸ் 

 


3. ஒன்பதுல குரு -வினய், லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்துள்ள படம் "ஒன்பதுல குரு". வருகிற 8ந் தேதி ரிலீசாகிறது. ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள்.


 ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைப்பார். அவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி காமெடியாக கதை சொல்லும் படம். இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார்.



நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள். அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும். அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம்.



 முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம். ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார். புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம். நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலையாம்.


ஈரோடு அபிராமியில் ரிலீஸ்  

டிஸ்கி -

ஒன்பதுல குரு - செம காமெடி படம் - லட்சுமிராய் பேட்டி

http://www.adrasaka.com/2013/03/blog-post_3972.html


4 Oz the Great and Powerful (2013) - Oscar Diggs (James Franco), a small-time circus magician with dubious ethics, is hurled away from dusty Kansas to the vibrant Land of Oz. At first he thinks he's hit the jackpot-fame and fortune are his for the taking. That all changes, however, when he meets three witches, Theodora (Mila Kunis), Evanora (Rachel Weisz), and Glinda (Michelle Williams), who are not convinced he is the great wizard everyone's been expecting. Reluctantly drawn into the epic problems facing the Land of Oz and its inhabitants, Oscar must find out who is good and who is evil before it is too late. Putting his magical arts to use through illusion, ingenuity-and even a bit of wizardry-Oscar transforms himself not only into the great and powerful Wizard of Oz but into a better man as well. Written by Walt Disney Studios Motion Pictures

This overlong prequel to the classic Wizard of Oz offers much to admire, but more to regret. Its new screenplay gives us the backstory on how the Wizard wound up there before Dorothy blew into town for her famous adventure. With the resources of the Disney empire and Sam Raimi at the helm, one might expect another fantasy for the ages. One would be severely disappointed.

James Franco stars as Oz, a cheesy magician in a seedy little traveling carnival in 1905 Kansas. He has no scruples about conning the rubes, or trying to seduce the local lovelies. While fleeing from an irate husband in a hot air balloon, a tornado swoops him up to the not-so-merry old land of Oz, where he's believed to be the wizard of prophesy to free the kingdom from the clutches of an evil witch. As in the original, the Kansas setup is filmed in black & white, creating a stunning contrast when he reaches the colorful splendor of the main action.

The place is up for grabs among three witchy sisters (Rachel Weisz, Mila Kunis, Michelle Williams) who are variably good or wicked. One kilt their pa, the kindly king who is mourned by the nice folk of the land. This "wizard" is actually more cowardly than Bert Lahr's lion; and whatever heart he may have beyond Jack Haley's Tin Man is dwarfed by his avarice.

The visuals are truly spectacular - especially in the climactic confrontation sequence. 3-D is highly advisable. But there's not enough meat in the script for well over two hours of running time. Besides that, Franco mugs his way through the worst performance of his career, other than last year's dreadful job of co-hosting The Oscars.

Raimi has deftly combined mayhem - large-scale and small - with sharp humor in a slew of films, from his early horror flicks, to The Quick and the Dead (slightly surreal western) to at least two of his three Spiderman blockbusters. His Evil Dead II includes my all-time favorite cinematic sight gag. Other than a quick in-joke with his pal Bruce Campbell, there's little of Raimi's wit in evidence. One might assume the Disney honchos kept him on a short leash. Much of the film gives the impression of setting up the framework for a theme park attraction, rather than making the best film their available assets could yield.

Parents should be aware that this is a darker, scarier adventure than Judy Garland's journey, with less offsetting cuteness and music. It could easily have been rated PG-13. Keep that in mind, along with relative attention-spans, when deciding which kids to bring or (perhaps better) send to this movie.

Where were Tim Burton, Johnny Depp and Helena Bonham-Carter when they were needed?



ஈரோட்டில் ரிலீஸ் இல்ல

கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்த படத்துக்கு சாரு தான் வசனமாம்

1. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க? 



இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா?



----------------------




2. படம் ஃபெய்லியர் ஆனால் ஹீரொயின்கள் தொழில் அதிபரைத்தற்காலிக கணவர்களாக கட்டிக்கொள்கிறார்கள்



--------------------------



3.  படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்! டைரக்டர்கள் ஹீரோயினை தட்டிச்செல்கிறார்கள்




-----------


4. டாக்டர்,காலையில் 8 மணிக்கு எழுந்தா 9 மணிக்கே மீண்டும்  தூக்கம் வருது.



 .சரி, விழிச்சிருந்து என்னத்தை கிழிக்கப்போறீங்க, தூங்குங்க ;-)



----------------------


5. தமிழர்களால் மறக்க முடியாத சுற்றுலாத்தள(ல)ங்கள் - 1. நமீதா 2 . ஷகீலா 3. ஹன்சிகா மோத்வானி  4. கலா மாஸ்டர் 





------------------------



6. டியர், சின்ன வயசுலயே அரிசி மூட்டை மாதிரி இருந்தேன் நான்



   சுத்த கர்நாடகா பொன்னி அரிசி மூட்டைன்னு சொல்லு



------------------------


7. சார், உங்க சொந்த வீட்டையே வித்துட்டு வெக்கேட் பண்ணிட்டு கிளம்பிட்டீங்க்ளே? ஏன்?




 என் சம்சாரம் வெக்கேஷனுக்கு வோர்ல்டு டூர் போனாங்க



-----------------------


8. டூர் போகும்போது பொண்டாட்டிங்க எல்லாம் ஊரைச்சுத்திப்பார்க்கும்போது அப்பாவிக்கணவன் பர்சை எடுத்து பார்ப்பான் ;-)




---------------------


9.  டியர், 5 நாள் டூர் செம டைம் பாஸ் .




 உனக்கு ஜாலி , எனக்கு பர்ஸ் காலி



----------------------



10. டாக்டர், கேரட் ஜூஸ்  டெய்லி குடிச்சிட்டு இருந்தா எனக்கு கேரட் கலர் வந்துடுமா?



24 கேரட் தங்க பஸ்பம் சாப்டாக்கூட அப்டி வராது






-----------------




11. டியர், உனக்கு விசில் அடிக்கத்தெரியுமா?




 ம்ஹூம், மேரேஜ்க்குப்பிறகு உங்களை வேணா அடிப்பேன் ;-)


-------------------------


12. உன் ஏரியாவில் குடி இருக்கும் அத்தனை ஃபிகருக்கும் ஆசைப்படு


----------------------


13. ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தினால் பொறுக்க மாட்டோம்:பாரதிய ஜனதா எச்சரிக்கை    # சரி சரி, பெரிய மனுஷனா லட்சணமா இருங்க, பொறுக்க வேணாம்



------------------------


14. நிருபர் - சார், நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்க்ளா?




 டைரக்டர் - சாரி, யோசிக்கறதுக்காக நான் ரூம் போட மாட்டேன் , ஹி ஹி




-------------------------


15. டியர், என்னைப்பற்றி நினைக்கும்போது நீ மல்லாக்கப்படுத்திருப்பியா?
 இல்ல குப்புற வா?



 ஒருக்”களிச்சு” படுத்திருப்பேன்



-------------------------


16.  டாக்டர்,டெய்லி 15 மணிநேரம் தூங்கிடறேன்  ,இதனால ஏதும் பாதிப்பில்லையே?



இல்லை மேடம், உங்க கணவர் நிம்மதியா இருப்பார்



----------------------


17. அல்வா கடைவாசலில் - இங்கு அனைவருக்கும் அல்வா விற்கப்படும் . ஆசிரமவாசலில் - இங்கு பெண்களுக்கு மட்டும் அல்வா கொடுக்கப்படும்




---------------------------


18. அன்பே! எதைப்பார்த்தாலும் அல்வாதான் நினைவு வருது என்றாய்! அல்வாவைப்பார்த்தா என்ன நினைவு வரும் ? # தபு சங்கர் எஃபக்ட்


--------------------------



19. நெல்லை ஃபிகர் பாடினால் - மார்கழித்திங்கள் அல்வா, மதி கொஞ்சும் நாள் அல்வா,....



----------------------------



20. கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்த படத்துக்கு சாரு தான் வசனமாம் # செத்தாண்டா சேகரு



--------------------------------


21. மிஸ் புஷ்! உங்க வீடு எப்பவும் ரஷ் ஷாவே இருக்கே? எப்டி?




 லஸ் கார்னர்ல வீடு , எல்லாரும் கார்னர் பண்ணிடறாங்க




-------------------------




22. காலையில் எழுந்ததும் அவங்கவங்க சம்சாரம் முகத்தில் விழிக்கவும், அன்னைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அவங்க மேல பழி போட ஈசியா இருக்கும்






----------------------------------




23. டெயிலி அரைமணி நேரம் நீச்சல் அடிச்சா ஸ்லிம் ஆகிடுவீங்க



. பொய் டாக்டர்,24 மணி நேரமும் நீச்சல் அடிக்கும் சுறா, திமிங்கலம் குண்டா இருக்கே?






---------------------------






24. டாக்டர், 4 நாளா மனசே சரிஇல்ல. என்ன பண்ன?



 ஆச்சரியமா இருக்கேம்மா? உன்னால தானே உன் ஏரியா பசங்களுக்கு பாதிப்பு, உனக்கென்னா?








----------------------






25. டைரக்டர் சார், நீங்க அறிமுகம் பண்ணின ஹீரோக்கள் மொக்கையாவும் , ஹீரோயின்கள் சக்கயாவும் இருக்காங்க்ளே? எப்டி?



 ஹி ஹி என் கை ராசி அப்டி






-----------------------------------------------

Thursday, March 07, 2013

ஒன்பதுல குரு - செம காமெடி படம் - லட்சுமிராய் பேட்டி

 

சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஒன்பதுல குரு’. இதில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.


செல்லத்துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். “கே” இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதால் பெரிய நடிகர்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.


“ஒன்பதுல குரு” படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள “வா மச்சி வா மச்சி வீட்டை விட்டு” பாடல் ஹிட்டாகியுள்ளது. இன்டெர் நெட்டில் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனி வாசனும் இதில் “அலையாத சும்மா சும்மா” பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார்.


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் திரையுலக முக்கியஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதை பார்த்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது என்று இயக்குனர் பி.டி.செல்வ குமாரை பாராட்டினார்.


அவர் கூறியதாவது:-


நடிகர் விஜய் வீட்டில் இருபது வருடமாக பி.டி. செல்வகுமார் பணியாற்றுகிறார். அவர் இயக்கியுள்ள “ஒன்பதுல குரு” படம் ஜாலியான காமெடி படமாக வந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த படமாக உருவாக்கி உள்ளார். விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


நடிகர் ஜீவா பேசும் போது, இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி “ஒன்பதுல குரு” படத்தை எடுத்துள்ளனர். கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். சில காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன் என்றார்.


இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது:-


“ஒன்பதுல குரு” படத்தின் கதை எனக்கு தெரியும். பிரேம்ஜி அடிக்கடி இந்த படத்தை பற்றி என்னிடம் கூறுவது உண்டு. இன்றைய இளைஞர்கள் காமெடி படங்களை அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த படம் வந்துள்ளது. இளைஞர்களின் ஜாலி கலாட்டாக்கள், திருமணமாகி சந்திக்கும் பிரச்சினைகள் இதில் அலசப்பட்டு உள்ளன.


இவ்வாறு அவர் கூறினார்.


இசையமைப்பாளர் ‘கே’ கூறும்போது, “வா மச்சி வா” பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. நிறைய பாராட்டுகள் குவிகிறது. பெண்களுக்கும் இப்பாட்டு பிடித்துள்ளது என்றார். “ஒன்பதுலகுரு” படத்தை காஸ்மா அன்ட்பாஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


 


தென்னிந்திய சினி பியூட்டிகளில் சென்ஷேசனல் நியூஸ் மேக்கர் லட்சுமிராய். சினிமா, பெர்சனல், காதல், கிசுகிசு என எல்லாமும் பேசலாம் அவரிடம்...

 

 1.  இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', "காஞ்சனா' என லாரன்ஸூடன் நல்ல சினேகமாகத்தானே இருந்தீர்கள். ஆனால், திடீரென முனி பார்ட் 3-க்கு டாப்ஸி வந்து விட்டாரே....

.ஸோ வாட்...! அதைப் பற்றித்தான் முதலில் கேட்க வேண்டுமா? எனக்கு பேய் கதைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' நடிக்கிற போதே "காஞ்சனா' பற்றி என்னிடம் பேசியிருந்தார் லாரன்ஸ்.""இது மாதிரி கதை வந்தால் எனக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கும்'' என்று அப்போது சொல்லியிருந்தேன். அதை நினைவில் வைத்து திடீரென்று அழைத்து "காஞ்சனா'வில் வாய்ப்பு தந்தார். அப்போதே நான் அதை எதிர்பார்க்கவில்லை. இப்போது என் இடத்தை டாப்ஸி பிடித்துக் கொண்டார் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சினிமாவில் எனக்கென ஒரு மைலேஜ் இருக்கிறது. அதற்குள்தான் என்னால் சர்வே செய்ய முடியும். இது எனக்கான கேரக்டர் என யாரும் எழுதி வைக்க முடியாது.

"மங்காத்தா' படத்தில் ""நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியிலும் நம்ம பேர் எழுதியிருக்கும்''ன்னு அஜித் சார் சொல்லுவார். அதுதான் உண்மை. எனக்கு அது இல்லை. இது இல்லை என புலம்பும் கேரக்டராக நான் வளரவில்லை. லாரன்ஸூக்கும் எனக்கும் இப்போதும் நட்புதான். அதற்காக அவரிடம் நான் சண்டை போட முடியாது. "முனி பார்ட் 3' கதை பற்றி எனக்குத் தெரியும். அது வேறு மாதிரியானது. அதற்கு டாப்ஸி மாதிரியான ஒரு நடிகைதான் தேவைப்படுவார். ப்ளீஸ் அதை விட்டுடுங்க.

2. நல்ல உயரம், வசீகரிக்கும் அழகு, முன்னணி நடிகர்கள் முதல் நேற்று வந்த ஜூனியர் வரைக்கும் நட்பு இருந்தும் உங்களால் ஏன் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை?

நல்ல இடம் எப்படி இருக்கும்? அதற்கான தகுதிகளை முதலில் சொல்லுங்கள். நான் இருக்கும் இடம் பற்றி சொல்லுகிறேன். இதுவரை எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. தினம் தினம் நல்லது நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அப்படி நடக்கிறதா என்ன? பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு நல்லது பெரிதாக நடக்கும் என்று சொல்லுவார்கள்.



நான் பொறுமையாக இருக்கிறேன். நல்லது நாளைக்கே நடக்கலாம். மூன்று மொழிகளில் 40 படங்கள் வரை நடித்தாகி விட்டது. என் முகம், நடிப்பு பற்றி இனி சொல்லித்தான் ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. நடித்த எல்லா படங்களிலுமே என் கேரக்டரை நான் நன்றாக செய்து முடித்திருக்கிறேன். அந்த நம்பிக்கை மட்டுமே என்னை நன்றாக வைத்துக் கொள்ளும். எல்லா படங்களிலும் பிடித்துதான் நடித்தேன். அதில் எனக்குரிய இடங்கள் கிடைக்காமல் போனால் நான் என்ன செய்வேன்?



யாரிடமும் சென்று எந்த வாய்ப்பையும் நான் இதுவரை கேட்டதில்லை. "தாண்டவம்', "மங்காத்தா' படங்களில் சின்ன கேரக்டரில் வந்தது பற்றி கேட்கிறார்கள். அந்த டைரக்டர்ஸ் என்னை நம்பி வந்தாங்க. நடித்துக் கொடுத்தேன். கதைக்காக நான் எந்த கேரக்டரையும் ஏற்க தயாரா இருக்கிறேன். நல்ல நடிகைக்கான குணம் இதுதானே. அப்ப நான் எந்த இடத்தில் இருக்கிறேன் சொல்லுங்கள்....


3. ....வினய், பிரேம்ஜி, சத்யன்னு "ஒன்பதுல குரு' கலகலப்பாக வந்திருக்கிறதாமே? உங்களுக்கு அதில் என்ன ரோல்?


"ஒன்பதுல குரு' ஒரு க்யூட் ஸ்டோரி. காதல், கலாட்டா, ரொமான்ஸ், கிளாமர் எல்லாமே அதிகமாக இருக்கும். எனக்கு ஒரே படத்தில் காதல், அதே சமயம் கலாட்டான்னு நடிக்க இப்போதுதான் இந்தப் படம் அமைந்திருக்கிறது. உண்மையிலேயே நடிக்க ஸ்கோப் உள்ள படம். ரொமான்ஸ், கிளாமர்ன்னு இடைவேளை வரைக்கும் படம் இளமைத் துள்ளலாக இருக்கும். அந்த படத்தில் நடிக்கவில்லையென்றால் உண்மையிலேயே ஒரு நல்ல சினிமாவை மிஸ் செய்திருப்பேன். சினிமாவுக்கு வந்த சமயத்தில் இருந்தே பி.டி.செல்வகுமாரை தெரியும்.


""மேடம் நான் ஒரு படம் பண்றேன். நீங்கதான் ஹீரோயின்''னு அடிக்கடி சொல்லுவார். விளையாட்டு வார்த்தைகள் என்று நினைத்தேன். ஒரு நாள் ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து படிக்க சொல்லிவிட்டார். ஒவ்வொருத்தரையும் மற்றவர்கள் ஒவ்வொரு விதமாக எடை போட்டு வைத்திருப்பார்கள். என்னை அவர் ஒரு கதைக்காக அப்படி நினைத்து வைத்திருப்பார் என்று நினைக்கவில்லை. அவ்வளவு சூப்பரா படம் வந்திருக்கிறது.

 பார்க்க எனக்கே ஆசையா இருக்கிறது.

4. கன்னட சினிமாவில் அதிகமாக நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல?

என் தாய் மொழி சினிமா அதுதானே. இருந்தாலும் நான் தமிழில்தான் அறிமுகமானேன். தமிழ் சினிமாக்களை பார்த்து விட்டுதான் கன்னடத்தில் இருந்தே வாய்ப்புகள் வந்தன. மற்றபடி தமிழ் சினிமாதான் எனக்கு அதிகம் பிடிக்கும். இங்கே வாய்ப்புகள் இல்லாத போது, எனக்கு தெரிந்த என் மொழி சினிமாக்களில் நடிக்கிறேன். தமிழ், கன்னடம், மலையாளம் இந்த மூன்று மொழிகளில் மட்டுமே இப்போது நடித்து வருகிறேன். மற்ற மொழி சினிமாக்களில் நடிப்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.

த்ரிஷா பத்து வருஷத்துக்கும் மேலாக சினிமாவில் நடிக்கிறாங்க. 30 வயதை கடந்தாலும் அனுஷ்காவின் கால்ஷீட் வாங்க கூட்டம் வரிசையில் நிற்கிறது. ஒவ்வொருத்தரும் ஒரு வகையில் ரெக்கார்ட் பிரேக் பண்றாங்க. அது மாதிரி எதாவது லட்சியம் உங்களுக்கு இருக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில் சொல்லுவது கஷ்டம்தான். நான் சினிமாவுக்கு வந்தபோது சிம்ரனுக்கு அடுத்து நான்தான்னு சிலர் சொன்னாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் சிம்ரன்னா அது சிம்ரன்தான். அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஜோதிகாவின் இடம் கூட இன்னும் காலியாகத்தான் இருக்கிறது. யாருக்கும் யாரும் நிகர் கிடையாது. அவரவர்களுக்கு தெரிந்ததை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி செய்கிறார்கள். கிளாமர்தான் எனக்கு செட்டாகும்ன்னு பலர் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். அதை உடைக்கும் விதத்தில் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படம் நடித்து காண்பித்தேன். இருந்தாலும், அதன் பின்னும் கிளாமர் கதைகள்தான் தேடி வந்தன. ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை. அது மாதிரி ஒரு கதைதான் எனக்கு வேண்டும். மற்றபடி சினிமாவில் எந்த லட்சியமும் இல்லை....இருக்கவும் கூடாது.

5. டோனி தொடங்கி எல்லா கிசுகிசுக்களுக்கும் வெளிப்படையாக பதில் சொல்லுவீங்க. ஆனால், இப்போ உங்களை பற்றி கிசுகிசுக்களே இல்லையே.... என்ன மேஜிக்?

நடிகையாக பார்ப்பதை விட என்னை சக மனுஷியாக பார்த்தால் நான் இன்னும் அன்பானவளாக மாறுவேன். கிசுகிசுக்கள் வருகிற நேரங்களிலும், அதை பற்றி என் நண்பர்கள் பேசும் நேரங்களிலும் எனக்கு கோபமே வராது. ஏனென்றால் நான் இருப்பது சினிமாவில். அதில் அப்படிப்பட்ட பேச்சுக்களைத்தான் எதிர்பார்க்க முடியும். இப்போதைக்கு என்னிடம் காதல் இல்லை. ஆனால் அது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில சினேகம் காதலாக மாறி விடுகிற தருணம் வரும் போது, சினிமா உலகம் தவறாக சித்தரித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. எனக்கு நிறைய காதல் வந்திருக்கிறது. ஒன்றுமே நிலைக்கவில்லை. இப்போதெல்லாம் யாரையும் நான் காதலிப்பதே இல்லை. கிசுகிசுக்கள் இல்லாமல் போனதற்கு அதுதான் காரணமாக இருக்குமோ...? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காதல் இல்லாமல் வாழ முடியாது.

 

 thanx - dinamani, 123 cinema

 

 

பாலியல் பலாத்கார பாரதம் - தமிழருவி மணியன் -ன் ஜூ வி கட்டுரை

காதல் அறியாக் காதலர்கள்!

காதலே என்னு​டைய மதம்’ என்றான் கவிஞன் கீட்ஸ். 'காதலிக்​காமல் உயிர் வாழ்வதைவிட, காதலில் தோற் றுப்போவது உயர்வானது’ என்று வாக்குமூலம் வழங்கினான் டெனிசன். 'காதல் கண்களில் இல்லை. அது காதலிப்பவர் இதயத்தில் இருக்கிறது’ என்று கண்டறிந்து சொன்னான் ஷேக்ஸ்பியர். 'காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று உரத்த குரலில் அனைவரையும் கூவி அழைத்தான் பாரதி. ஆனால், அவர்கள் சொன்ன காதல் இன்றைய இளைய சமூகத்திடம் காணாமல் போய்விட்டது. இப்போது பார்க்கும் இடமெங்கும் உள்ளக்கலப்பின்றி, உடற்கலப்பில் உருக்குலையும் காமமே 'காதல் முகமூடி’ அணிந்து காட்சி தருகிறது.



 காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சீர்காழி மதியழகி ஆகியோர் மீது அமிலமும் பெட்ரோலும் ஊற்றி அவர்களுடைய அழகைச் சிதைத்து, உயிரைப் பறித்த இளைஞர்கள் காதலாகிக் கசிந்துருகியவர்களா? விலங்கினும் கீழான இழிமக்கள் இல்லையா இவர்கள்? காதல்... அன்பில் சுருதி கூட்டும் ஆன்ம ராகம். காமம்... சரீரத்தின் மேடு பள்ளங்களில் சரிந்து விழும் சபலத்தின் தாளம். காதல் தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணித்துவிடும் தேவதை. காமம் தன் அகோரப் பசிக்குச் சகலத்தையும் சுயநலமாய்ப் பறித்துக்கொள்ளும் சாத்தான். இந்த அழிவை உருவாக்கும் சாத்தானுக்குத்தான் இன்று ஊரெங்கும் உற்சவம்.


மனித மனதில் தோன்றும் பல்வேறு உணர்ச்சிகளில் மிகவும் வலிமையானதும், கட்டுக்குள் அடங்காததும் பாலுணர்ச்சியே. அதை முழுவதுமாக அழிக்க முனைந்தால், கடுமையான எதிர்வினைகளைச் சமூகம் சந்திக்க நேரிடும். நெறிப்படுத்தப்படாத விலங்குணர்ச்சியாக அது வெளிப்படும்போது, குடும்ப உறவுகளும், சமூகக் கட்டுமானமும் முற்றிலுமாகச் சிதைந்துபோகும். தனிமனிதன் சமூக மனிதனாக வாழ்வதற்கு, நம் முன்னோர்கள் பற்பல வழிகளில் சிந்தித்துப் பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுத்தனர். கட்டுப்பாடற்ற பாலுணர்ச்சியும், பண்பாட்டு விழுமியங்களால் வேலியிடப்பட்ட சமூக உணர்ச்சியும் எந்நாளும் பொருந்திப்போகாது. மனிதர்களை அலைக்கழிக்கும் இந்த இருநிலைப் போக்கால் உளப்போராட்டம் (Psychical conflict) உருவாகி விடுகிறது.


காதல் என்ற பெயரால் அமிலம் வீசியவர்கள் பண்பாட்டு வேலியைத் தகர்த்து அத்துமீறிய பாலு ணர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள். 'மனித இனமே நோய்வாய்ப்பட்டிருக்கிறது’ என்றார் உளவியல் தந்தை ஃபிராய்ட். நாம் அனைவரும் ஒருவகையில் நோயாளிகளே. அளவில் வேறுபட்டவர்கள். அவ்வளவுதான். பாலுணர்ச்சி நோய்க்கு மனக்கட்டுப்பாடு ஒன்றுதான் மருந்து என்று அனுபவத்தில் தெளிந்தவர்கள் நம் பாட்டன்மார்கள்.


உடலின்பமும் மனநிறைவும், பாலுணர்ச்சியால்தான் வாய்க்கப்பெறுகிறது. அதனால்தான், அதுவே நம் வாழ்வின் ஆதாரமாகி விட்டது. காலம் காலமாகக் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பாலுணர்ச்சியின் மூலமே கட்டமைக்கப்படுகின்றன. 'பாலுணர்ச்சியே மனிதகுல இயக்க ஆற்றலாக இருக்கிறது’ என்பதுதான் ஃபிராய்டின் அடிப்படைக் கோட்பாடு. பாலுணர்ச்சியே மாந்தரின் பெருவேட்கை​யாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தை உருக்குலைக்கும் அந்த வேட்கை நிறைவேற முடி யாத நிலையில் உண்டாகும் இறுக்கமே, விபரீத விளைவுகளில் உந்து சக்தியாகிறது.


 வேட்கைக்கான வடிகால் சமூக ஒழுக்கங்களாலும், சட்டங்களாலும் அடைபடும்போது பாலுணர்ச்சி பால் வெறி யாகி விடுகிறது. அந்த வெறியே உறவுகளின் விதிக்கோட்டை தகர்த்துவிடும் இழிகாமமாகக் கனன்று எரிகிறது. கோவையில், சகோதரிக்குப் பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சை தாய்மாமனே சீரழித்ததற்கு இந்த இழிகாமமே காரணம். பாலுணர்ச்சியில் இருந்து விடுபட்டு விலகி நிற்க நாம் அனைவரும் விவேகானந்தராவது எளிது இல்லை. 



அதேநேரத்தில், வேட்கை வெறியாகிக் காமத்தில் கரிந்துபோவதும் வாழ்வு இல்லையே. நமக்கிருக்கும் ஒரே வழி காமத்தைக் காதலாக்குவதுதான். பப்களின் வாசல்களில் தற்காலிகத் துணைக்குத் தவிப்புடன் தவமிருப்பதும், உடல் தினவைத் தணிக்க ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணைப் 'பிக்அப்’ செய்வதும், 'பார்ட்டி’களில் கட்டிப்பிடித்து ஆட்டம்போட்டு, விட்டுப்பிரிந்து வீடு திரும்புவதும், உடனடி நட்பு - உடனடிப் பிரிவுக்காக 'டேட்டிங்’ குறிப்பதும், காதல் இல்லை - கல்யாணம் இல்லை - கண்ணீர் விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தத்துவம் உதிர்ப்பதும், திருமண பந்தம் இல்லாமலே மனச்சான்றின் உறுத்தலின்றிப் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், 'பல இரவுகள்’ பார்த்துவிட்டு 'முதல் இரவு’ கொண்டாடுவது எந்த வகையிலும் வாழ்க்கையாகாது. 



'நம் இளைஞர்களுக்கு ஷேக்ஸ்பியர் தெரியும்; ஷெல்லி தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்; கெட்டழிந்த பின்புதான் பட்டினத்தார் புரியும்’ என்று கண்ணதாசன் சொன்னது ஆழ்ந்த அர்த்தமுள்ள வாசகம்.



புதுடில்லியில் நள்ளிரவில், ஓடும் பேருந்தில் 23 வயது நிரம்பிய, மருத்துவம் பயின்ற ஜோதி சிங் பாண்டே, காமவெறி பிடித்த மனித மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு இரையான செய்தி ஊடகங்களின் உதவியால் நாடு முழுவதும் சேர்ந்த பின்புதான் மத்திய - மாநில அரசுகளின் உறக்கம் கலைந்தது. வர்மா கமிட்டி அமைக்கப்பட்டது. மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. 



பாலியல் பலாத்காரம் செய்யும் பாவிகளுக்குத் தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? என்ற விவாதம் எழுந்தது. இதற்குப் பிறகும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மரண தண்டனை இந்த மண்ணில் இருப்பதனாலேயே படுகொலைச் சம்பவங்கள் இல்லாமற் போய்விட்டனவா? நுகர்பொருள் கலாசாரம் இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் 'எல்லாவற்றையும் எப்படியாவது துய்க்க வேண்டும்’ என்ற மனவிழைவும் வேட்கையும் வளரும் வரை குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.



பிறக்கும்போது மனித மனம் வெற்றுத்தாளாகவே விளங்குகிறது. காலநடையில் இந்த வெற்றுத்தாளில் புலன் சார்ந்த அனுபவங்கள் சிறிது சிறிதாகப் பதிவாகி, அவற்றிற்கேற்பவே நடத்தைகள் உருப் பெறுகின்றன என்கிறது உளவியல். பெற்றோர், ஆசிரியர், கல்விக்கூடம், குடும்ப உறவு, சமூகச் சூழல், ஊடகம் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் வந்து சேரும் பதிவுகளே தனிமனித நடத்தையை நிர்ணயிக்கின்றன. 


 மனம் சார்ந்தவன்தான் மனிதன். மனதை நலமாக வைத்துக்கொள்வதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. நமக்கு வாய்த்திருக்கும் அரசுகளோ, கருவூலத்தை நிரப்பும் அவசரத்தில் நம் பண்பாட்டைப் பள்ளம் தோண்டிப் புதைப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசே தவறு செய்யத் தூண்டும். அதன் தூண்டுத​லால் தவறிழைப்பவனை அதுவே வெட்கமின்றித் தண்டிக்கும். 'உனக்கு நீயே ஒளி’ என்றார் புத்தர். நாம்தான் நமக்குரிய பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.



காமம் வேறு... காதல் வேறு. இரண்டு நிமிட இன்பத்தில் காமம் முடிந்துவிடும். வாழ்வின் இறுதிநாள் வரை காதல் இல்லறத்தை இனிமையாக்கும். காதலுக்கென்ற தனியாக ஒரு நாள் கொண் டாடப்படுவதே அபத்தம். இன்றைய இளைஞர்கள் உண்மையான காதல் எதுவென்றறிய, கார்ல் மார்க்ஸ்-ஜென்னி, ஜெயப்பிரகாஷ் நாராயண் - பிரபாவதி காதல் வாழ்க்கையை அறிந்துகொள்வது அவசியம். இவர்கள் புராண - இதிகாசப் பாத்திரங்கள் இல்லை. எலும்போடும் சதையோடும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்கள்.



உலகுக்கு 'மூலதனம்’ வழங்கிய கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னியைச் சில நாட்கள் பிரிந்திருக்க நேர்ந்தபோது, அந்தப் பிரிவின் வலியைத் தாங்க முடியாமல் வரைந்த கடிதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. 'உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருக்கின்றனர். ஆனால் என்னுள் எப்போதும் இனிய நினைவுகளை எழச் செய்யும் உன் அழகு முகத்தைப் போல் வேறொரு முகத்தை எங்கு என்னால் காணக்கூடும்?



 என் எல்லையற்ற துன்பங்களையும், ஈடுசெய்வதற்கு இயலாத இழப்புகளையும், என்னை உள்ளிருந்து வாட்டும் வேதனைகளையும் உன் இனிய முகத்தில் முத்தமிடும்போது முற்றாக மறந்து விடுகிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை உன்னை நான் முத்தமிடுகிறேன். என்னருகில் நீ இருக்கும் தருணங்களில் கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. உன் முன்பு நான் முழந்தாளிட்டுப் பணிகிறேன். உன் தாய்மையான இதயத்தை என் இதயத்துடன் நெருக்கமாக இணைத்துக்கொள்கிறேன். வார்த்தைகள் எதுவுமின்றி மௌனமாகிறேன்’ என்று தன் ஆழமான காதலைக் கடிதத்தில் வெளிப்படுத்திய மார்க்ஸ், புற்றுநோயால் ஜென்னி மரணத்தை நெருங்கியபோது, அந்தக் கணத்தில் வாய்விட்டு அழுதார்.



ஜென்னி, மார்க்ஸுக்காகவே வாழ்ந்தவர்; பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, மார்க்ஸைக் காதலித்துக் கரம் பற்றியவர். காதல் கணவனுக்காக வறுமையை விரும்பி ஏற்றவர்; இறந்த குழந்தைக்குச் சவப்பெட்டி வாங்க முடியாத நிலையிலும் மார்க்ஸின் மனம் நோகப் பேசாதவர்; மார்க்ஸ் நடத்திய போராட்ட வாழ்க்கையின் வலிமை மிக்க பின்புலமாக இருந்தவர். அவன் கண்ணை மூடும்போதும், 'கார்ல் என் சக்தியை நான் பறிகொடுக்கிறேன்’ என்றுதான் இறுதியாகச் சொன்னார். ஜென்னி மரணித்தபோது, 'மார்க்ஸும் செத்துவிட்டான்’ என்றார் ஏங்கல்ஸ். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு, தளர்ந்துபோன மார்க்ஸ் 15 மாதங்களில் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.



ஜெயபிரகாஷ் நாராயண் இளம் வயதில் பேரழகன். காதல் மனைவி பிரபாவதி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிவிட, கல்வி பயில்வதற்கு அமெரிக்கா சென்ற ஜெ.பி-யின் அழகில் பல அமெரிக்க மாணவிகள் அவரைச் சுற்றிவந்தபோதும், அவர்களை ஏறிட்டும் பார்க்காதவர்; நாடு திரும்பியதும் தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பு தேக சுகம் காண்பதில்லை என்ற மனைவியின் விரதத்தை ஏற்றுக் காதலைக் கௌரவித்தவர்.



 பரமஹம்ஸருக்காக சாரதா தேவியும், காந்திக்காக கஸ்தூரி பாயும் பிரம்மசரியம் ஏற்றனர். ஆனால், பிரபாவதிக்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியம் பூண்டவர் ஜெ.பி. இறுதிவரை ஒரே அறையில் இரு படுக்கைகளில் தனித்தனியாக இரவைக் கழித்த ஆன்மநேயக் காதலர்கள் ஜெ.பி-யும் பிரபாவதியும். பிரபாவதி இறப்பைத் தழுவியபோது அனைவரையும் வெளியேற்றிவிட்டுச் சடலத்தின் பக்கத்தில் 15 நிமிடங்கள் தனியே அமர்ந்து அழுத ஜெ.பி., 57 ஆண்டுகள் தன் தாயாய், தோழியாய் உடனி ருந்து சேவை செய்த மனைவியை ஒருநாளும் மறந்ததே இல்லை. அவருடைய  படுக்கை அறையில் அவர் வைத்திருந்த ஒரே நிழற்படம் பிரபாவதியின் படம். அன்பிலே தோய்ந்து, அன்பிலே கரைந்து அன்புருவாய் வாழ்வதுதான் காதல் வாழ்க்கை என்று உணர்த்திய தம்பதி இவர் கள்.



இன்றைய இளைஞர்கள் ஜெ.பி-யாய் வாழ வேண்டியது இல்லை. ஆனால், கார்ல் மார்க்ஸாய் காதல் வாழ்வு வாழ்வதில் என்ன தடை? காமம் சேர்ந்த பாலியல் குற்றங்களே இப்போது பெருகி வருகின்றன. 'காதலர் தினம்’ கொண்டாடும் இளைய சமூகம் உண்மைக் காதலின் உயர்வை அறியா மலேயே 'காதல்’ வசப்பட்டு, அவசரம் அவசரமாய் இச்சையைப் பூர்த்திசெய்து, உறவு கசந்த நிலையில் விவாகரத்துக்காக நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் காணும் உலகங்கள் நீயாக வேண்டும்’ என்று கசிந்துருகிக் காதல் வளர்க்கும் இருவரிடையே வாழ்க்கை எப்படி விரைவில் கசந்துபோகும்?



பாலியல் குற்றங்கள் இல்லாத சமூகத்தில்தான் பெண் பாதுகாப்பாக வாழ முடியும். அந்தப் பாதுகாப்பை ஒருபோதும் சட்டத்தின் மூலம் சாதிக்க முடியாது. பெண் ஆணுக்குரிய போகப்பொருள் என்ற அழுக்குச் சிந்தனை ஆண்களின் மனதிலிருந்து முதலில் அகல வேண்டும். பெண்ணைக் கடவுளாகவும் போற்ற வேண்டாம்; அடிமையாகவும் நடத்த வேண்டாம்; சக உயிரியாக உணர்ந்து அன்புசெய்தால் போதும். பெண்ணைக் காமத்தோடு பார்க்கும் பார்வையில் இருந்து விடுபட ஊடகங்கள் உதவ வேண்டும். பாடத் திட்டங்கள் பள்ளிகளில் பிள்ளைகளின் பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். காதல் என்பது வெறும் காமம் இல்லை என்ற புரிதல் வரவேண்டும்.



'காதல் என்பது இன்பம் அல்ல; பொறாமைப்​படுவதும் அல்ல; ஒருவர் மீது மற்றொருவர் செலுத்தும் அதிகாரமோ, ஒருவரையருவர் விரட்டியடிப்பதோ காதலாகாது. உடைமைத்​தனத்திலும், ஒட்டிக்கொள்வதிலும் உண்மையான காதல் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு யுத்தம் எப்போதுமே இருந்து வருகிறது. அவர்களில் ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முயல்கிறார். விளைவு ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். இதுதான் காதலா? 'ஆம்’ எனில் காதலே ஓர் அர்த்தமற்ற வார்த்தைதான்’ என்று தெளிவுப்படுத்தும் தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சூத்திரம் போல் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள்...


'புகையிருக்கும் இடத்தில் ஒளியிருக்காது;
ஒளியிருக்கும் இடத்தில் புகையிருக்காது!

நன்றி - ஜூ வி 


நேற்று இன்று நாளை படத்தில் எம்.ஜிஆர் செய்த தில்லுமுல்லு - எம் எஸ் வி பேட்டி

 

எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்!''


விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்
வாசகர் கேள்விகள்
ட்டுக்குப் பாட்டெழுத மாட்டாராமே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... உண்மையா?''

 
''உண்மைதான். தன்னோட பாட்டு வரிகளுக்குத்தான் மெட்டுப் போடணும்கிறதை ஒரு வைராக்கியமாவே வெச்சிருந்தார் பட்டுக்கோட்டையார்.


'பாசவலை’னு ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சிக்குரிய பாடலை முதலில் கண்ணதாசன் எழுதினார். தயாரிப்பாளர், இயக்குநரை அந்தப் பாட்டு வரிகள் அவ்வளவா ஈர்க்கலை. அப்புறம் கவிஞர் மருதகாசிகிட்ட எழுதச் சொன்னோம். அதுவும் சிறப்பா அமையலை. அப்போ ஒரு நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்கு அறிமுகமானார். 'சரி... எதுக்கும் இவரையும் எழுதச் சொல்லிப் பார்ப்போம்’னு அவர்கிட்டே சிச்சுவேஷனைச் சொல்லி எழுதச் சொன்னோம். எழுதிட்டு வந்து கொடுத்தார். பிரமாதமான வரிகளா இருந்தன...


'குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச்  சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்’


-பாட்டு எங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. உடனே மெட்டுப் போட்டு பாடல் பதிவாச்சு. இன்னிக்கும் அவர் பேர் சொல்ற பல பாடல்கள் அவர் எழுதின பிறகு மெட்டு போடப்பட்டதுதான். 'புதையல்’ படத்துல நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிட்டதால,  என் மெட்டுக்கு ஒரே ஒரு பாட்டு எழுதிக்கொடுத்தார். சினிமாவில் நான் பார்த்த மனிதர்கள்ல ரொம்பத் துணிச்சலானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!''



கி.மனோகரன், பொள்ளாச்சி.

''கண்ணதாசன்-வாலி... இரண்டு கவிஞர்களையும் அவர்கள் உச்சத்தில் இருந்த சம காலத்தில் எப்படிச் சமாளித்தீர்கள்?''


''கண்ணதாசன் - வாலி... இந்த ரெண்டு ஜாம்பவான்களுடன் வேலை பார்த்ததை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் எனக்குப் பிரமிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. எனக்கு இசைமட்டும் தான் தெரியும். தமிழ்ல புகுந்து விளையாடும் அவங்களுக்கு ஈடுகொடுக்கிறதுக்காகவே இசையில் கூடுதலா நான் உழைக்க வேண்டிஇருந்தது.



நானும் கண்ணதாசனும் இணைஞ்சு பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்த காலகட்டத்துல, வாலியை எனக்கு அறிமுகம் செய்தது என் நண்பன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். வாலியோட சரளமான, இனிப்பான தமிழ் எனக்குப் பிடிச்சிருந்தது. 'இதயத்தில் நீ’ங்கிற படத் துல ஒரு பாட்டு எழுதச் சொன்னேன். 'பூ வரையும் பூங்கொடியே... பூமாலை சூட வா...’ங்கிற அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சு. அடுத்ததா 'கற்பகம்’ படத்துல அவரைப் பாட்டு எழுதவைக்கணும்னு எனக்கு ஆசை. 


ஆனா, அந்தப் படத்தோட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ் ணன், கண்ணதாசன் வெறியர். உலகத்துலயே கண்ணதாசன் மட்டும்தான் கவிஞர்னு நினைக்கிறவர். அவர்கிட்ட போய், 'வாலிக்கு உங்க 'கற்பகம்’ படத்துல ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தரணும்’னேன். மறுத்துட்டார். 'பூ வரையும் பூங்கொடியே...’ பாட்டை அவர்கிட்ட ரெண்டு மூணு தடவை திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டினேன். ரொம்பப் பிகு பண்ணிக்கிட்டுதான்... சரின்னார். வாலி எழுதின 'அத்தை மடி மெத்தையடி...’ங்கிற பல்லவியைக் கேட்டுட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அசந்துபோயிட்டார். அது மட்டும்இல்லாம, அதே படத்தில் 'மன்னவனே அழலாமா...’ங்கிற பாட்டு எழுதவும் வாலிக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார்.


வாலி அறிமுகமான இந்தச் சமயத்துல, 'விசு நம்மளை விட்டு விலகிப்போயிடுவானோ’ங்கிற ஒரு சந்தேகம் என் மேல கண்ணதாசனுக்கு இருந்தது. எல்லாரையும் சமமாக் கொண்டாடுற என் மனசால நாளடைவில் கவியரசரின் சந்தேகத்தையும் போக்கினேன்.


ரெண்டு கவிஞர்களையும் சமாளிக்க எனக்குக் காலமும் கைகொடுத்தது. எப்படின்னா... எம்.ஜி.ஆருக்கு வாலியும், சிவாஜிக்கு கண்ணதாசனும் நிறையப் பாடல்கள் எழுதும்படியான நேரம் அப்போ அமைஞ்சது. அதுவும்கூட என் வண்டி இவங்க மத்தியில கடகடன்னு ஓடுனதுக்கு ஒரு காரணம்!''  

கு.ராமலிங்கம், மதுக்கூர்.


'' 'நேற்று... இன்று... நாளை’ படத்தில் உங்களை வைத்து எம்.ஜிஆர். கேம் விளையாடினாராமே... என்ன விளையாட்டு அது?''


'' 'நேற்று... இன்று... நாளை’ படத்தைத் தயாரிச்சவர் நடிகர் அசோகன். எம்.ஜி.ஆர். ஹீரோ. அந்தப் படத்துல எல்லா பாட்டும் சூப்பர் ஹிட். ஆனா, கம்போஸிங்குக்கு முன்னாடி அந்தப் படத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் குறைச்சலா நூறு மெட்டுக்களாவது போட்டிருப்பேன். 


அதைத் தினம் ராமாவரம் தோட்டத்துக்கு எடுத்துட்டுப் போய் எம்.ஜி.ஆர்கிட்டே காட்டிட்டு... உதட்டைப் பிதுக்கிக்கிட்டே திரும்பி வருவார் அசோகன். எல்லா மெட்டையும் 'வேண்டாம்... நல்லாயில்ல... இது சரியில்ல’னு சொல்லி எம்.ஜி.ஆர். திருப்பிவிட்டுட்டே இருந்ததுல, நாலஞ்சு மாசம் ஓடிப்போச்சு. இதுக்கு மேலயும் என்னால மெட்டுப் போட முடியாதுன்னு நானும் உதட்டைப் பிதுக்கிட்டேன். 


அதைக் கேள்விப் பட்டதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடி வந்தார். 'டேய்... விசு, நீ போட்ட ஒவ்வொரு டியூனுமே அற்புதம். ஆனா, உன் டியூன்களை நான் உடனே ஓ.கே. பண்ணியிருந்தா, அப்பவே ஷூட்டிங் கிளம்பியிருப்பாங்க. ஆனா, அப்போ என்கிட்ட கால்ஷீட் இல்லடா. அதான் உன்னைவெச்சு கேம் விளையாடினேன்’னு சொன்னாரு பாருங்க... குறும்புக்கார மனுஷன்!''


சு.பால்ராஜ், மதுரை-4.


''நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நல்ல பழக்கம் எது?''


''எப்பவும் ஏகப்பட்ட பழக்கங்களை நான் கடைபிடிக்கிறேன். அதெல்லாம் நல்லதா... கெட்டதானு எனக்குத் தெரியாது. அதுல குறிப்பா சொல்லணும்னா, இப்பவும் மேடையில இசை நிகழ்ச்சி செய்யும்போது முதல் பாடலா கவியரசரின்  'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...’ பாட்டைப் பாடித்தான் ஆரம்பிப்பேன். அதே மாதிரி இசை நிகழ்ச்சியை முடிக்கிறப்ப, 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்’னு சொல்லி முடிப்பேன். இதைப் பழக்கமா இல்லை... வழக்கமாவே வெச்சிருக்கேன்!''


ரா.பாலகுமாரன், சென்னை-63.


''கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.எம்.சௌந்தர்ராஜன் என இந்த அட்டகாசக் கூட்டணியில் உருவான பாடல்களில் உங்கள் மனத்தைக் கவர்ந்த பாடல் எது?''


 ''  'வீடு வரை உறவு
 வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ’ பாட்டுதான் எங்க மூணு பேரு காம்பினேஷன்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு!''


ஆர்.சிவச்சந்திரன், வேலூர்-4.


''இசைத் துறையில் எத்தனையோ சாதனைகள் படைச்சிருக்கீங்க. உங்க மனசுக்கு நெருக்கமான சாதனை என்ன?''


''ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம ராப்பகலா உழைச்சுப் போட்ட மெட்டுகளை இன்னிக்கும் நீங்கள்லாம் கொண்டாடுறதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம். சினிமாவில் இல்லாம என் மனசுக்கு நிறைவான பங்களிப்புன்னா... என் இசையில் உருவான 'கிருஷ்ண கானம்’ இசைத்தட்டைச் சொல்லலாம். தமிழ்ல வந்த பக்தி இசையில் இன்னைக்கு வரைக்கும் அந்த இசைத் தொகுப்பின் சாதனையை வேற எதுவும் முறியடிக்கலை. அடுத்து, தமிழ்த் தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த...’ பாடலுக்கு நான் இசையமைச்சதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்யமா நினைக்கிறேன்!''


எஸ்.பார்வதி, தூத்துக்குடி.


''ஒரு பாட்டுக்கு நீங்க போட்ட மெட்டுகள் எல்லாமே நல்லா இருந்தா என்ன செய்வீங்க?''


''நிறைய தடவை அப்படி நடந்துருக்கு. உதாரணத்துக்கு, 'என் தங்கை’ படத்துல ஒரு பாட்டுக்காக நான் போட்ட எல்லா மெட்டும் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் நடிகர் பாலாஜிக்குப் பிடிச்சுப்போச்சு. எதை செலெக்ட் பண்றதுனு அவர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு இருந்தார். அப்போ அவர் ஆபீஸுக்கு லெட்டர் கொண்டுட்டு தபால்காரர் வந்தார். அவரைக் கூப்பிட்டு, எல்லா டியூனையும் போட்டுக் காட்டி ஒரு டியூனை செலெக்ட் செய்யச் சொன்னார். அந்த தபால்காரர் செலெக்ட் செஞ்ச மெட்டு... 


'கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத் தாளம் போடலாம்!''’


எம்.நாகப்பன், திருவாரூர்.


''இன்றைய சினிமா கலைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?''


''அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனா, ஒண்ணு சொல்றேன்... யாரா இருந்தாலும் உண்மையா இருக்கணும், கடுமையா உழைக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்கிற மாதிரி... அப்பா - அம்மாவை வணங்கணும். அந்த மனுஷ தெய்வங்கள் இல்லைன்னா நாம கிடையாது. அடுத்து, குரு பக்தி. நீங்க யாரால முன்னேறி மேல வந்தீங்களோ... அவங்களைக் குருவா மதிச்சு வணங்கணும். எனக்கு இசையமைப்பாளர்ங்கிற அடையாளம் கொடுத்தவர் என் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அவர் கடைசிக் காலத்துல, 'நான் இறந்துபோனா... என் உடலுக்கு விஸ்வநாதன்தான் கொள்ளி வைக்கணும்’னு எழுதிவெச்சிருந்தார். அவரோட விருப்பப்படியே நான்தான் அவருக்குக் கொள்ளி வெச்சேன். எது உங்களைக் கைவிட்டாலும், குரு பக்தியும் நன்றி உணர்ச்சியும் உங்களைக் கைவிடவே விடாது!''


நன்றி - விகடன் 


 

ஐ ஃபோன்ல ஷங்கரின் ஐ படம்? ஷங்கர் அதிர்ச்சி

வலைபாயுதே!

1. இரவு 11:00 மணிக்கு மேல், இனி "டிவி'யில், "ஏ' படங்கள் # ஆமா, நாங்க எல்லாம் தூங்கிடுவோமே? யார் படம் பார்ப்பா?



------------------



2. கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!! #  7ம் தேதி வரை வெயிட் பண்ணுங்கய்யா , படத்தையே தூக்கிடுவாங்க



---------------------


3. சிங்கம் 2 படம் சிங்க் களை தாக்கும் விதமாய் இருக்கு -சர்தார்ஜிகள் போர்க்கொடி # சும்மா



-----------------


4. ஜெ - எந்தப்படம் தடை என்றாலும் பஞ்சாயத்து சார்ஜ் - கட்சி நிதியாக 10 % பட வசூலில் கட்டாய வசூல் வசூலிக்கப்படும் # சும்மா



----------------------


5. ஐ ஃபோன்ல ஷங்கரின் ஐ படம் தெரியுமா?








----------------------------






6. காதலுக்கு ரோஜாப் பூ,மனைவிக்கு மல்லிகைப் பூ, மச்சினிக்கு ஜாதி மல்லிகைப்பூ , பிரிவுக்கு அரளிப்பூ



------------------------


7. ஓட்டை வாய் ஓமனாவின் டவுட் - வாயே ஒரு ஓட்டைதானே?






----------------------


8. பிரம்மச்சாரி மீசையை எடுக்க 1000 காரணங்கள் இருக்கும், ஆனா மேரேஜ் ஆனவன் மீசையை எடுக்க ஒரே அர்த்தம் தான்  ;-)






------------------------


9. பிச்சைக்காரன்க்கு ஜோசியம் கூடத்தெரிஞ்சிருக்கு, "மகராசி தருமம் பண்ணுமான்னு சொல்றதுக்குப்பதிலா மகர ராசி தர்மம் பண்ணம்மான்னு சொல்றான்






----------------------




10. முன்ன பின்ன இருந்தாலும் மனைவியை சகித்துக்கொண்டு வாழ் = சகி = மனைவி




-------------------------



11. ஒரு பாராகிராப் அளவுக்கு நீளமா காதலியின் முகம் இருந்தா உன்னைத்தவிர வேற யாரும் பாரா முகமாத்தான் இருப்பா



--------------------------


12. உலகின் முதல் பெண்ணான ஏவாள் உட்பட புருஷன் பேச்சைக்கேட்டு நடக்கும் பெண் இருந்ததே இல்லை



--------------------------



13. மாற்றி மாற்றிப்பேசுவதில் வல்லமை உள்ளவர்கள் பெண்கள்.மாறாத வார்த்தைக்குச்சொந்தக்காரர்கள் ஆண்கள்



----------------------


14. ஒரு பெண்ணிடம் நீ அன்பும் அக்கறையும் வைத்து விட்டால் நம்மை முட்டாள் ஆக்கி முச்சந்தியில் நிறுத்தி விடுவார்கள்




-------------------------


15. காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்டா மனசுக்கு இதம் , சுப்ரஜா பாதம் பார்த்தா கண்ணுக்கு இதம்








---------------------------




16. பொண்ணுக்கு மாப்ளை வீடே பவுன் போட்டு , கல்யாணச்செலவும் ஏத்துக்கிட்டா அதுதான் சொந்தச்செலவுல சூன்யம்






-----------------------




17. பக்கத்து வீட்ல விடி காலைல 4 மணிக்கு அலாரம் சத்தம் கேட்டுது. ஆனா விடிஞ்சும் யாரும் வீட்டை விட்டு கிளம்பலை, எதுக்கு வெச்சிருப்பாங்க? ;-)



---------------------------


18. அணையப்போகும் தீப விளக்கும், நாம அணைக்கப்போகும்  குத்து விளக்கும் எப்பவும் பிரகாசமா இருக்கும்



---------------------


19. இன்று செய்யவேண்டியதை இன்னைக்கே செஞ்சிடுங்க, நாளைக்குன்னு தள்ளி வைக்கக்கூடாது, நாள் தள்ளிப்போயிடும், ஹி ஹி



--------------------------


19. எந்த மாதிரி ஃபிகரை நீ லவ் பண்ணாலும்  ஒரு மாதிரியான பெண்ணை லவ் பண்ணிடாதே


----------------------------


20. பின்நவீனத்துவம் என்றால் எடுப்பா காட்டிக்க பின்னால ஆபரேஷன் பண்ணிக்குவதா?



----------------------


21. இங்க்லீஷ் மிஸ் - ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க



. தமிங்க்லீஷ் ஸ்டூடண்ட் - இங்க்லீஷ் கிஸ்னா என்ன டீச்சர்?


-----------------------



22. தன்னடக்கம் = தன்னைத்தானே அடக்கம் பண்ணிக்குவதா? அது எப்டி முடியும்?



--------------------


23.  சார், கே வி ஆனந்த் கூட படம் பண்றீங்க்ளா? இல்லையா?



ரஜினி - காலமும் நேரமும் கூடி வந்தால்.... எல்லாம் ஆண்டவன் கைல தான் இருக்கு




---------------------------


24. ஜட்ஜ் - 16 வயசுப்பையனான நீ என்ன தைரியத்துல 18 பொண்ணுங்களை ரேப் பண்ணே?



 மைனர் பையனுக்கு எப்படியும் தண்டனை கிடையாதுங்கற தைரியத்துலதான்



------------------------


25. டியர்.நம்ம காதல் சேராது.தற்கொலை பண்ணிக்கலாமா?



 ம் லேடீஸ் பர்ஸ்ட்.இந்தா விஷம்



---------------------------------

Wednesday, March 06, 2013

விஸ்வரூபம் - பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர்

1,விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!

விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர்.

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது

 

 

2. .நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

 விஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. 
 
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

விஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். 
 
 
 
 
 
3.பிரமாண்ட இயக்குனரை மிரட்டிய கமலின் விஸ்வரூபம்! முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. தமிழகம், புதுவை தவிர்த்து பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம் ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.  


தமிழில் சினிமாவைப்பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு இணையான படங்களை தருபவர் என்ற பெருமை இதுவரை டைரக்டர் ஷங்கருக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் கமலின் விஸ்வரூபம் படம் வந்த பிறகு அந்த பெயரை போய் விட்டது. ஷங்கர் படம் ஹாலிவுட் படம் மாதிரி என்றால், கமலின் படம் ஹாலிவுட் படமே என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதோடு, விஸ்வரூபம் படத்தைப்பார்த்த ஷங்கரும் அதிர்ச்சியடைந்து போய் இருக்கிறார். கமல் என்ற நடிகருக்குள் இத்தனை பெரிய இயக்குனரா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அவர், ஒரு டைரக்டராய் நாம் இன்னும் நிறைய யோசிக்க வேண்டும் போலிருக்கிறதே என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.

அதன்காரணமாக, ரஜினியை வைத்து தான் இயக்கிய எந்திரன் படத்தை விடவும் இப்போது விக்ரமைக்கொண்டு இயக்கி வரும் ஐ படத்தை இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். அதனால் இதுவரை 80 கோடி பட்ஜெட்டில் ஐ படத்தை பண்ண பட்ஜெட் போட்டு வைத்திருந்தவர், இப்போது 145 கோடி வரை பட்ஜெட் உயர்த்தியிருக்கிறாராம். அதோடு, படத்தை உலக அளவில் பப்ளிசிட்டி செய்து வெளியிட்டு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
 
 
 
 
4.விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி...?!! -  விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம் தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது. படமும் ஹாலிவுட் தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி,  இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
 
 
 
5.விஸ்வரூபம் 2க்கு பிறகு ஹாலிவுட்! கமல் முடிவு!! விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்தை முடித்த பிறகு ஹாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். பெங்களூருவில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விஸ்வரூபம் பிரச்னையில் திரையுலகம் மற்றும் பத்திரிகைகள் எனக்கு ஆதரவாக இருந்ததாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூப பிரச்னை திடீரென்று பொது பிரச்னையாக மாறி விட்டது. கமல்ஹாசனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டுமா? என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.

பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வாரம் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது. விஸ்வரூபம் இந்தி படம் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் வெளியாகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விஸ்வரூபம் தமிழ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் படத்தை முதலில் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பாக டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு விட்டது. டி.டி.எச். மூலம் படம் வெளியிடும் புதிய முறை இன்று இல்லாவிட்டாலும் நாளை அமலுக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அடுத்தபடியாக ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னேவுடன் பணியாற்ற உள்ளேன். ஆனால், எனது விஸ்வரூபம் படத்தின் 2வது பாகத்தை முடித்த பிறகே அவருடன் பணியாற்றுவேன். இந்த ஆண்டுக்குள் விஸ்வரூபம் 2வது பாகம் வெளியாகும் என்று நம்புகிறேன். அந்த படம் இந்தியாவை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும். ஆனால், விஸ்வரூபம் முதல் பாகத்தை போன்று விமர்சனங்கள் எதுவும் வராத வகையில் பார்த்து கொள்வேன், என்றார்.
 
 
டிஸ்கி - டைட்டிலில் வந்த   பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர் 2ம் தனித்தனி மேட்டர்