Monday, February 04, 2013

டி வி யில் இனி நைட் 11 மணிக்கு ஏ படம் - மக்கள் கருத்து

புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.



அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.



"ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





1. எதுக்கு 11 மணி வரைக்கும் வெயிட் பண்ணனும் .. அதன் எல்லாத்தையும் மெகா சீரியல் பேர் ல காட்டுறங்களே


2. தேவையல்லாத வேலைய மட்டும் பாருங்க.....என்ன அரசாங்கமோ?



3 இரவு 11 மணிக்கு மேல் எல்லாம் ப்ராக்டிகல் இருக்கும் போது படம் எதற்கோ? தனிமையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் கிடைக்கும்


4. அப்பன்னா இந்தியா சீக்கிரம் 200 கோடியை தாண்டிடும். ஆண்கள் பாவம்....


5. நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு திரைப்படம் ஒரு காரணம் .மக்கள் அதிகம் பார்த்து அதில் வரும் கட்சிகளை மனதில் பாதிக்கும் பொது சில வன்மங்கள் நடக்கின்றன .இதை தணிக்கைத்துறை மனதில் கொண்டு செயல்படவேண்டும் நல்ல கருதுஉள்ள படங்களுக்கு அனுமதி அழிதல் நல்லது .


6. ஏ படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது என்பது தேவை இல்லாத ஒன்று. காரணம், சாதாரணமாக வரும் அனைத்து நிகழ்ச்சிகளுமே இன்று அப்படித்தான் இருக்கின்றன. அது மட்டுமில்லை இரவு நேரங்களில் படிக்கும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைவார்கள், மற்றும், மக்கள் தொகையும் அதிகமாகும்???.

7. மத்திய அரசு அதிகாரிகளே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில் எ படங்கள் நாட்டுக்கு தேவையா ? இரவு நல்ல தரமான நிகழ்சிகள் ஒலிபரப்பு பண்ணலாமே பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனய பற்றி யோசிக்கும் அரசு அவர்களே எ படங்களுக்கு அனுமதி அளிக்கலாமா ?


8.  ஆபாச காட்சிகள் தணிக்கை தணிக்கைத்துறை வெட்டி எறிய வேண்டும் . படங்களை எடுபவர்கள் காட்சிகளை ஆபாசம் இல்லாமல் எடுப்பார்கள் .ஆபாசம் ஆகிய முக்கிய காட்சிகளை வெட்ட படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு ஆகும் சூழ்நிலை வந்தால் தான் இவர்கள் படங்களை நல்ல தரமான படங்களை கொடுப்பர்


9. அரபு நாடுகள் மற்றும் அதற்குப்பிறகு இருப்பவர்கள் இப்போதே மாலையில் தொடங்கி சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்களை தொலைக்காட்சியில் குடும்பத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனிமேல் வேறு வழியில்லை... தொலைக்காட்சியை தனியறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்.


10. இது ஆரோக்கியமான முடிவு அல்ல.பதினோரு மணி என்பது இன்றைய காலகட்டத்தில் பின்னிரவு நேரமல்ல.இதனால் விரும்பத்தகாத விளைவுகள் நிறைய ஏற்படும்.மொத்தக்குடும்பமும் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் நேரத்தில் ஆபாசப்படங்கள் ஒளிபரப்புவது நிச்சயம் ஆரோக்கியமாக இருக்காது.தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நஞ்சைப் பரிமாறுவது நியாயமல்ல.ஆபாசப் படங்கள் தொலைகாட்சிகளில் தவிர்க்கப்படவேண்டும். சிலரின் லாபத்திற்காக பலவீனமானவர்களின் மனதில் நச்சு எண்ணங்களை வளர்க்கும் இத்தகைய திரைப்படங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.வெளியில் இருக்கும் ஓனானை வீட்டுக்குள் விட்டுவிட்டு பின்னர் குத்துதே குடையுதே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை..


11. A படம் என்றாலே ஆபாசம் என்று பொருளில்லை எல்லாமே அஞ்சரைக்குள்ள வண்டி,சிந்துசமவெளி போன்றவையல்ல.சில சிக்கலான உறவுகள், செக்ஸ் கல்வி, வன்முறை சம்பந்தப்படவைகூட ஏ சான்றிதழ் வழங்கப்பட்டவைதான் டென் ஏஜ் பருவத்தினர் பாலியல் பற்றிய புறுத்தல் வேண்டுமென்பதற்க்காக எடுக்கப்பட்ட படங்களை சற்று முன்பே காட்டலாம் . அவற்றை பெற்றோர் துணையுடன் பார்ப்பது செக்ஸ் தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்க உதவும். செக்ஸ் தொடர்பான மூட ன்பம்பிக்கைகள் அதிகமுள்ள நம் நாட்டுக்கு இது அவசியம் தேவை



12 கெட்ட விஷயங்களை அமுல் படுத்த அரசுகள் எடுக்கும் ஷ்ரத்தையை நல்ல விஷயங்களுக்கு எடுப்பதில்லை. டாஸ் மார்க் சாராயம், அசிங்கப் படங்கள், அதீத விலை உயர்வு இதெல்லாம் உடனுக்குடன் இங்கே நடந்து விடும். ஆனால், தரமான சாலைகள், அத்யாவசியக் கல்வி, சுத்தமான குடிநீர் இதுபற்றிய சட்டங்களை ஒரே இரவில் போடுவது, அமுல்படுத்துவது போன்றவை மட்டும் இங்கே நடப்பதே இல்லை. அசிங்கங்களை மதிய மாநில அரசுகளே அரங்கேற்றிவிட்டு, குழந்தைகள், இளைஞர்கள், மக்கள் மனதை முழுக்க நஞ்சாகிவிட்டு மக்கள்-ஆட்சி நடத்துவதில் என்ன லாபம்? ஒழுக்கமிலா அரசுகள் ஒழுக்கமிலா மக்களையே உருவாக்கி புதுப்புது வன்முறைக்கு வழிகோலும் 


நன்றி - தினமலர் 

சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் ஃபேஸ்புக்கில் செய்த திருட்டு மோசடி

பெங்களூர் ரைட்டர் சி எஸ் கே போட்ட ட்வீட் லாங்கர் 


ஃபேஸ்புக்கில் டிவி காம்பியரர் / சினிமா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு Sivakarthikeyan Vijaytv Anchor பெயரில் யாரோ ஒரு ரசிகரால் நடந்தப்படும்
unofficial page (http://www.facebook.com/shivavijaytv) ஒன்று இருக்கிறது. கிட்டதட்ட அரை லகரம் லைக்களுடன் கூடிய ஒரு பிரபலமான பக்கம் அது.

நேற்று இரவு (செளம்யா) 7:51க்கு போட்ட ஒரு ட்வீட்டை (https://twitter.com/arattaigirl/status/294087553416577024) அப்படியே எடுத்து எந்த reference / courtesyயும் இல்லாமல் தன்னுடையது போல் இப்பக்கத்தில் நேற்று இரவு 8:05க்கு ஒரு post போடப்பட்டிருக்கிறது (http://www.facebook.com/shivavijaytv/posts/482718678435978).

இதுவரை இந்தப் போஸ்டுக்கு 209 பேர் இதற்கு லைக் போட்டு உள்ளனர். ஆனால் பாவம் ஒரிஜினல் ட்வீட்டுக்கு இதுவரை 20 ரீட்வீட்களும் 9 ஃபேவரைட்களும் தாம்.

இது எனக்குத் தெரிய வந்தவுடன் நான் இதைக் கண்டித்து கீழ்கண்ட கமெண்ட்டை அந்தப் போஸ்டில் போட்டேன்.

<<<<<<<

இது ட்விட்டரில் (செளம்யா) என்பவர் உங்களுக்கு முன்னதாக (இன்று இரவு 7:51க்கு) போட்ட ட்வீட்.

ஆதாரம் - https://twitter.com/arattaigirl/status/294087553416577024

அவர் பெயர் குறிப்பிட்டு நன்றி நவிலாமல் உங்களுடையதைப் போல் இங்கே பயன்படுத்தி இருப்பது அறிவுத் திருட்டு. அதற்கு என் வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

ஒன்று இப்பதிவினை நீக்குங்கள் அல்லது அவர் பெயரைச் சேருங்கள்.

>>>>>>>

எனக்கு முன்பே ம் அந்தப் போஸ்டின் கமெண்ட்டில் இதை சுட்டிக் காட்டி நியாயம் கேட்டிருந்தார்.

ஆனால் இன்று நான் போட்ட கமெண்ட் (மற்றும் சென்னை செந்திலுடையது) அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த சிந்தனை தன்னுடையதே என்று கொஞ்சமும் குற்றவுணர்வின்றி காட்டிக் கொள்வதான‌ தடித்தனமே இது. தட்டிக் கேட்க ஆளில்லை என்ற பாவனையிலான‌ திமிர்த்தனமும் கூட.

அடுத்தவர் அறிவில் பெயர் வாங்கி அப்படி என்ன சாதித்து விடப் போகிறார்? இவர்கள் தாம் அசிஸ்டெண்ட்களின் சினிமாக் கதையைத் திருடி படம் எடுப்பவர்களின், ஜூனியர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் பெயரில் வெளியிட்டுக் கொள்பவர்களின் ஆரம்பப் புள்ளி.

இதைத் திருட்டென உணரும் நண்பர்கள் இதை எதிர்த்து அப்பக்கத்தில் தம் கருத்துக்களைப் பதியுங்கள். எத்தனை கமெண்ட்களை அந்த அறிவுஜீவி அழிக்க முடியும்? அழிக்கச் சோர்ந்து பதிவை ரத்து செய்யட்டும் அல்லது கருத்தின் உரிமையாளர் பெயரைச் சேர்க்கட்டும்.


நன்றி - ரைட்டர் சி எஸ் கே 



டிஸ்கி - நீ மட்டும் யோக்கியமா? காப்பி பேஸ்ட் போஸ்ட் டெய்லி போடறியே? என கேட்பவர்களுக்கு நான் கீழே நன்றி போட்டு எங்கே இருந்து சுட்டது என தகவல் சொல்லிடுவேன், நான் எட்டாங்கிளாஸ் பாஸ் , அவங்க பத்தாங்க்ளாஸ் ஃபெயில் , பாஸ் பெருசா  ஃபெயில் பெருசா?

பூஜா மாதிரி மணப்பெண் VS பூஜா குமார் மாதிரி மணப்பெண்

1. கல்யாணின்னு சொன்னதும் ராகம் நினைவு வந்தா நீ இசை ரசிகன், ஃபிகர் நினைவு வந்தா கில்மாபார்ட்டி,பீர் நினைவு வந்தா சரக்கு பார்ட்டி




----------


2. பாரதிராஜாவின் மாணவி நான், சோடை போகமாட்டேன்- கார்த்திகா # நல்லவேளை, சோடா சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லலை



--------------------


3. மிஸ்,விழாவுக்கு வந்திருக்கும்எல்லாப்பெண்களும் ஏன் உதட்டை உள்ளங்கையால மூடிக்கறீங்க?



 விஸ்வரூபம் ப்ரீமியர் ஷோ,கமல் ஃபேன்ஸ் ஜாஸ்தி



--------------------


4. டியர்,எனக்கு பரதநாட்டியம் கத்துக்க ஆசையா இருக்கு. 



அடடா, ராமாயண  பரதன் தான் செத்துட்டாரே? 


----------------




5. கமல் - யுவர் ஆனர் ,நீங்க மட்டும் படம் பார்க்காம எதுக்கு கூட 50 பேரை சேர்த்துகிட்டீங்க?



 ஜட்ஜ் - ஹி ஹி ,50 * 1000 = 50,000ரூபா கலெக்சன்


----------------------


6. மிஸ்,நீங்க வோட்கா யூஸ் பண்ணுவீங்க்ளா? 



நோ, அது எங்கக்கா, மீ ஒன்லி குட்கா # மாடர்ன்ஃபிகர்ஸ் 





-------------------



7. பொண்ணு பூஜா மாதிரி அமைஞ்சா பிரச்சனை இல்லை.பூஜா குமார் மாதிரி ஆகிட்டா விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனைகள்




------------------


8. யுவர் ஆனர், கோர்ட் டைம் 5 மணிக்கு முடியுது, எதுக்கு தீர்ப்பு நைட் 8 மணிக்கு ? 



ஹி ஹி , ஓவர் டைம்னு கணக்கு எழுதுனா ரூ 2000 பேட்டா




------------------------


9. "அன்பே சிவம் " படத்திற்கு ஏன் கிரணை ஹீரோயினாப் போட்டீங்க?



 கமல் - படத்துல பெருசா ஏதும் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதே? 




------------------


10. புறா - மேல கை வைக்கிறதுக்கு முன்னால 1 தடவைக்கு 2 தடவை யோசிச்சு வை 




.சுறா - கை வைக்கற அளவுக்கு ஒர்த்தா?னுதான் யோசிக்கிறேன் 




--------------------------



11. சுறா கடல் ல இருக்கு.கடல் ல சுறா இருக்கு.புரிஞ்சவங்க சிரிச்சுக்குங்க.பொழச்சுக்குங்க # சும்மா




------------------------


12. நீ மனமாரக்காதலித்”தாய்”! மணமானதும் கூட்டுகுடும்பத்தைப்பிரித்”தாய்”!




--------------------


13. நீ ரிச்சபிள் பர்சனா இருந்தா (பெரும்பாலான ) எல்லா மாடர்ன் ஃபிகர் நெம்பரும் ரீச்சபிளாத்தான் இருக்கும்





---------------------



14. நீ காதலியா இருந்தப்போ திகட்டிவிட்டாய்! மனைவி ஆனதும் திட்டி விட்டாய்!




-------------------------



15. கமல் - இடது கண் துடிக்குது, நல்லதா கெட்டதா? 



 டாக்டர் - 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும், ஏன்னா தீர்ப்பு நாளைதான் 



--------------------


16. தண்டச்செலவு செய்யப்பழகுங்கள் , உங்களைச்சுற்றி ஏகப்பட்ட ஃபிகர்கள் சுத்திட்டே இருக்குமாம்




------------------------



17. அன்பே! நீ ஆச்சரியக்குறியாய் என்னைப்பார்த்துப்பிரயோஜனம் இல்லை, உங்கப்பா பணத்துலயே குறியா இருக்காரு, நம்ம காதல் கேள்விக்குறிதான்




-----------------


18. OPS -மேடம், ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு . 



ஜெ - உளறாதீங்க, டைம் இப்போ 8 PM .



OPS -  ஹய்யோ அய்யோ , அது தெரியும், நமக்கு ஏழரை # சும்மா



--------------------------------



19. ஒரு ஹீரோ எப்டி இருக்கணும்ன்றதுக்கு எங்க அண்ணன் தான் உதாரணம் - கார்த்தி .. #ஒரு ஹீரோ எப்டி ஓவரா AD ல நடிக்காம இருக்கனும் என்பதற்கும்




--------------------


20. மொக்க பிகரை லாங்க் ஷாட்ல பார்த்ததை வச்சு் கண்டு புடிக்க முடியாது



---------------------



21. பூமிகாவின் கணவர் -வர வர நான் பூமிக்கு பாரமாகிட்டே வர்றேன்.பூமிகாவுக்கும்




------------------------


22. அறிவுடன் பொறுமையாவும் இருக்கற ஆண்கள், ் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பா இருப்பாங்க இல்ல ... அது தான் இன்னும் அழகு !!!


----------------------


23. நமீதாவிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை.மறைக்க நினைத்தால் அது நமீதாவே இல்லை!



------------------------


24. ட்ரெய்லரில் அடக்கி வாசித்து இருந்தால் கமல் இத்தனை பிரச்சனைகளை சந்திச்சிருக்கத்தேவை இல்லை # நீதி - பட மேக்கிங்கை விட ட்ரெய்லர் முக்கியம்



-------------------


25. ஐட்டம் ஆட்டத்துக்கு நான்வரமாட்டேன் - ஷாரூக்கானுக்கு நோ சொன்ன நயன்தாரா # ஒரு கோடி சம்பளம் கொடுத்தா கரகாட்டத்துக்கே வாருவாக - கவுண்டமணி 



--------------------------------------------

Sunday, February 03, 2013

புதிய தலைமுறை திரு மாலன் அவர்களிடம் சில கேள்விகள்

விகடன் , குமுதத்திற்குப்பின்  இளைஞர்களின் வரவேற்பைப்பெற்ற இதழ் புதிய தலைமுறை. குறுகிய கால கட்டத்தில் ஒரு லட்சம் புக் சேல்ஸ். அவங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க . அதாவது மாதம் ஒருவருக்கு அந்த இதழை தயாரிக்கும் வாய்ப்பு . 4 இதழ்கள் தயாரிக்கலாம்.வாரம் ஒரு புக் வீதம் மாதம் 4 புக் , இந்த மாதிரி 12 பேருக்கு வாய்ப்பு . ஒரு வருடம் - 12 மாதம் , 12 பேர் தலா 4 வாரம், 48 வாரம் வாசகர் தயாரிப்பு 


 வரவேற்க வேண்டிய  விஷயம். ஏன்னா எல்லாருக்கும் பத்திரிக்கை தயாரிக்கும் , பணி புரியும் எண்ணம், ஆசை இருக்கும், ஆனா வாய்ப்பு இருக்காது. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாய் இந்த அறிவிப்பு இருக்கு.


 ஆனா அதுல அவங்க போட்ட கண்டிஷன் ஸ் பார்த்தா மிடில் கிளாஸ் ஃபேமிலி இளைஞர்கள் கலந்துக்கவே முடியாது . சென்னை வந்து போகும் செலவை அவங்க ஏத்துக்க மாட்டாங்களாம், புதிய தலைமுறை ஊழியர்களுக்கான சலுகைகள் ஏதும் கிடையாதாம், ஒரு வாரம் தங்கி செயல்படும்போது அதுக்கான செலவையாவது ஏத்துக்குவாங்களா? அல்லது அதுவும் நாம தானா? என்ற தகவல் கொடுக்கப்படலை



எனது கேள்விகள்


1.  பி கே பி நடத்திய உங்கள் ஜூனியர் மாத இதழ் இதே போல் பல வருடங்களுக்கு முன்பு ( 1996 டூ 1999 )  இதே போல் ஒரு வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியது . அவர்கள் புக் சேல்ஸ் இவர்களுடையதை விட 25 மடங்கு கம்மி. அவங்களே  சென்னை வந்து போகும் செலவை ஏத்துக்கிட்டாங்க , இத்தனைக்கும் அவங்களுக்கு அந்த புக்கால பெரிய லாபம் ஏதும் இல்லை. மினிமம் 10,000 மேக்சிமம் 20,000 புக் சேல்ஸ் ஆன ஒரு புக்கே இத்தனை செலவு செய்யும்போது  1,50,000 புக்ஸ் விற்கும் புதிய தலைமுறை ஏன் ஓ சி யில்  மங்களம் பாட நினைக்குது? 


2. இதே போல் குமுதம் ஆஃபீசில் 2000 ஆம் ஆண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழுக்காக டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் சை சென்னை வர வைத்து ஒரு மீட்டிங்க் போட்டாங்க. வந்தவங்களுக்கு அப் அண்ட் டவுன் சார்ஜ் குடுத்து , ஆளுக்கு  ஒரு வாட்ச் ( ஒர்த் ரூ 1850 ) பரிசு தந்தாங்க . மதிய விருந்தும் இருந்தது , பின் 2012 ஆம் ஆண்டு இதே போல் இன்னொரு மிட்டிங்க் , இதிலும் டிட்டோ . ஏன் உங்க பத்திரிக்கை மட்டும் எளிய மக்களை , இளைஞர்களை கண்டுக்க மாட்டேன்கறீங்க? 



3. ஆனந்த விகடன்  - விக்ரம், விஜய்  என பல வி ஐ பி நடிகர்களுடன் வாசகர் சந்திப்பு நடத்திய போது இதே போல்  அசத்தலான பரிசு கொடுத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ( ரூ 500 பில் ஒரு ஆளுக்கு )  விருந்து கொடுத்தது .


இப்படி பல முன்னுதாரணங்கள் பத்திரிக்கை உலகில் இருக்கு . நீங்க ஏன் அப்படி செய்யக்கூடாது? 

 ஒரு ஆஃபீஸ்ல பணி புரியும்  ஆள் ஒரு வாரம் லீவ் போட்டா  சம்பளம் பிடிச்சுக்குவாங்க , பல காரணம் சொல்லி லீவ் எடுக்கனும் .அது போக  சென்னை வந்து போகும் செலவும் கூடுதல் சுமைதானே? 


இதை எல்லாம் நான் எனக்காக கேட்கலை,. ஏன்னா நான் இதுக்கு விண்ணப்பிக்கலை . மற்ற மிடில் கிளாஸ் இளைஞர்கள் சார்பா கேட்கறேன். ( நான் கலந்துக்காததுக்கு காரணம் இது யூத்ங்களுக்கானது , என்ன தான் நான் யூத்தா இருந்தாலும்  18 வயசு டூ 25 வயசு யூத் இல்லை ) 




 இந்த பதிவை படிக்கும் பத்திரிக்கைத்துறையினர் ஏழை இளைஞர்களின் கஷ்டம் உணர்ந்து இது போன்ற விழாக்கள்,  பத்திரிக்கைத்தயாரிப்பிப்பணிகள் இவற்றுக்கு  போக்குவரத்துச்செலவு தந்து உதவுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்






Saturday, February 02, 2013

டேவிட் - சினிமா விமர்சனம்

 

ஈரோடு சண்டிகா தியேட்டர்ல சாயங்காலம் 6 மணிக்குத்தான் படம் போடுவாங்க . நேத்து என்னடான்னா  6.30 மணிக்குத்தான் டிக்கெட்டே குடுத்தாங்க , நியூஸ் ரீல் ட்ரெய்லர் எல்லாம் முடிச்சு பின் 7 மணிக்கு படம் போட்டாங்க, ஜீ வா நடிச்ச கோ படத்துல இருந்து ஆல் டைம் ஃபேவரைட் பாட்டான “ என்னமோ ஏதோ “ பாட்டு போட்டாங்க , சரி போனாப்போகுதுன்னு விட்டுட்டேன், அப்புறம் விக்ரம் நடிச்ச  தெய்வத்திருமகள் பட பாட்டு போட்டாங்க , செம கடுப்பாகிட்டேன். ஆபரேட்டர் மாத்தி ஓட்டறாரா? இல்லை  நம்மை ஓட்டறாரா? விசாரிக்க கிளம்புனா கேட்டை வழி மறிச்சு 4 பேரு “ சார் சார் , கோபப்பாடாதீங்க , படம் ரொம்ப சின்னப்படம் , அது தெரியாம இருக்க இப்படி ஹி ஹி ன்னாங்க .


அதாவது இது ஒரு டப்பிங்க் படம். ஹிந்தி ஒரிஜினல் ல 3 கதை. 3க்கும் சம்பந்தம் இல்லை . தமிழ் டப்பிங்க்ல ஒரு கதையை கட் பண்ணிட்டாங்க . 2 கதைதான் .


 கே பாலச்சந்தர் எடுத்த ஒரு வீடு இரு வாசல் மாதிரி ட்ரை பண்ணி இருக்காங்க . குரு  மணி ரத்னம் எடுத்த ஆய்த எழுத்து  டைப் ல திரைக்கதை . 


டேவிட்ங்கற பேர்ல இருக்கும் 2 பேரோட தனித்தனிக்கதை. 





ஜீவா  ஒரு கிடாரிஸ்ட்.அவங்கப்பா நாசர் ஒரு கிறிஸ்டியன் , மற்றவர்களை மதம் மாற்றுவது அவரோட பணிகளில் ஒண்ணு. அது மாயாவதி மாதிரி ஒரு அரசியல் தலைவிக்கு பிடிக்கலை . நாசரை அவமானப்படுத்திடறாங்க. பையன் ஜீவா  அந்த லேடியை போட்டுத்தள்ள பிளான் பண்றாரு ( போட்டுத்தள்ள  = கொலை செய்ய - ஏன்னா தமிழ் ஒரு நுட்பமான மொழி ) இது ஒரு கதை . 


விக்ரம் ஒரு தண்ணி வண்டி கேஸ். அவரோட சம்சாரத்தை யாரோ ஓட்டிட்டுப்போய்டறாங்க. அந்தக்கவலையை மறக்க 24 மணி நேரமும்  குடிக்கறாரு. சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் எடுத்த ”மயக்கம் என்ன ”கதையை உல்டா பண்ணி ஒரு கதை . அதாவது விக்ரமோட  நண்பனின் காதலியை இவர் ரூட் விடறாரு .அந்த காதலி பார்க்க பஸ் ஸ்டேன்ட் டிக்கெட் மாதிரி இருக்கு . அதை இவரு தெய்வீகமா லவ்வறாரு. இது கலாச்சார சீர்கேடு இல்லையா? அப்டினு எவனும் நாக்கு மேல பல்லையோ, பல்லு மேல நாக்கையோ போட்டு கேட்டுடக்கூடாதுன்னு  அவருக்கு ஒரு நோய் இருக்கற மாதிரி காட்டறாங்க 


 அதாவது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன்  மாதிரி விக்ரம்க்கு ஒரு நோய் இருக்கு . செத்துப்போன அப்பாவை எப்பவும் பக்கத்துலயே இருப்பதா அவரா கற்பனை பண்ணிட்டு பேசுவாரு . அது மாதிரி அந்த கிராக்கி ( ஹீரோயின் நெம்பர் 2 ) இவரை லவ் பண்றதா இவரா  நினைச்சுக்கறாரு, இந்த கேவலமான காதல் கதை என்னாச்சு? என்பதே கதை இது தனி டிராக் 




 படிக்கும்போது உங்களுக்கே  இப்போ இவ்வளவு காண்ட் ஆகுதே படம் பார்த்த அந்த 37 ஆடியன்ஸ் கதி என்ன ஆகி இருக்கும். ஆக்சுவலா அரசாங்கம் இந்த மாதிரி குப்பைகளை பார்க்கறவங்களுக்கு தியாகி பட்டம் தரனும் .


முதல் ஹீரோ விக்ரம் இந்தப்படத்துல ஒன் ஆஃப் த புரொடியூசர். இந்தக்கதையை முடிவு பண்ணும்போதே  சக தயாரிப்பாளர்கள் சொல்லீட்டாங்க போல “ இங்கே பாரப்பா ,  படத்துல உனக்கு சம்பளம் கிடையாது , சரக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு அடிச்சுக்கோ “ அதனால விக்ரம் அவர் வர்ற 47 சீன்ல  47 ஃபுல் அடிக்கறாரு . உயர்வு நவிற்சியா சொல்லலைங்க , இதை  எண்ணுவதற்கே ஒரு பொடியனை கூட கூட்டிட்டுப்போய் இருந்தேன் . கின்னஸ் ரெக்கார்டு . இதுவரை எந்த ஒரு உலகப்படத்துலயும் ஹீரோ இத்தனை சரக்கு அடிச்சதே இல்லை. நியாயமா டாக்டர் ராம்தாஸ் இதுக்குத்தடை போட போராட்டம் பண்ணனும் . 




அடுத்தது ஜீவா . உண்மையிலேயே இவரை நினைச்சா பாவமா இருக்கு. தான் நடிப்பது ஒரு டப்பா படம்கற  உணர்வே இல்லாம உயிரைக்குடுத்து நடிச்சிருக்காரு .வன்முறை , கோபம் , பழி உணர்வு எல்லாம் அவர் முகத்துல பொங்கி வழியுது . ( ஒரு வேளை சம்பளம் தர்லைங்கற கோபமோ என்னவோ? 



தபு , லாரா தத்தா, இஷா ஷெர்வானி, ரோஹினி ஹட்டாங் அப்டினு ஏகப்பட்ட லேடீஸ் கேரக்டர்ஸ் . யாரும் மனசுல நிக்கலை 



டைரக்டர் மணி ரத்னம் ரசிகர் . படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு ஃபாரீன் ட்விட்டர் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு பாராட்டி ஒரு ட்வீட் போட்டாரு . நான் கூட உண்மைன்னு நம்பிட்டேன் . அதாவது ராவணன் , கடல் மாதிரி குப்பையை கொடுப்பதில் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு அர்த்தம் போல. 

 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. மணிரத்னம் சார் படத்துல வர்ற மாதிரியே கேமரா கோணங்கள் , ஒளிப்பதிவு , வசனம் பேசும் ஸ்டைல்  எல்லாம் பிரமாதமா பண்ணி  இருக்காரு.லொக்கேஷன் செலக்சன் பின்னிட்டாங்க . 



2. பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டுது , குறிப்பா ஜீவா வரும் காட்சிகளில்  டெம்போ ஏத்துது . நல்ல ஆக்‌ஷன் படமோ அப்டினு   டக்னு நம்ப வைக்கும்படி பி ஜி எம் பட்டாசு. (ஆனா கதை அடாசு )



3. ஜீவாவுக்கு தங்கச்சிகளா 2 70 மார்க் ஃபிகருங்க ஏதோ மும்பை ஃபிகருங்க போல , ஆல்வேஸ் டைட் டி சர்ட் , மிடி ல வந்து கிளாமரா வர்றாங்க 



4.  தபுக்கு 40 வயசு ஆனாலும் விடாம கதைக்கு ரொம்ப முக்கியமான காட்சின்னு ரீல் விட்டு  பாவாடை கட்டி ஒரு குளியல் காட்சி எடுத்தது சாணக்கியத்தனம் ( ஏன்னா கதை தான் இல்லை , கொஞ்சம் சதையாவது இருக்கட்டும்னுதான் ) 


5. இஷா ஷெர்வானிக்கு கன்னம்  ஸ்பெஷல் மைசூர்பாக் மாதிரி இருக்கு . சாதா மைசூர்பாக்னா கெட்டியா இருக்கும் , ஸ்பெஷல் மைசூர்பாக்னா ரொம்ப சாஃப்டா நெகு நெகுன்னு வெல்வட் மாதிரி இருக்கும்  ( தொட்டுப்பார்க்கலை , ஒரு உத்தேசமா கண்டு பிடிச்சேன் ) அவரை முடிஞ்ச வரை ஓப்பன் யுனிவர்சிட்டி  குட்டியா காட்டுனது 





இயக்குநர் அண்ணனிடம் கோபமாய் சில கேள்விகள்


1. இளிச்சவாய் புரொடியூசர்கள் 8 பேர் கிடச்சா அவங்க தலையில் மிளகாய் அரைப்பீங்களா? இது ஒரு டப்பிங்க் படம்னு ஏன் சொல்லவே இல்லை .? அது சீட்டிங்க் இல்லையா? கேரக்டர்ஸ் வாய்ஸ் மாடுலேஷன்ஸ் சின்க் ஆகவே இல்லை , நல்லா அப்பட்டமாத்தெரியுது .




2. போஸ்டர் டிசைன்ல விக்ரம் மீன் தூக்கிட்டு நிக்கற மாதிரி காட்டி இருப்பது எதுக்கு? மீனவப்பிரச்சனையைப்பற்றி சொல்லப்போறோம்னு பில்டப் காட்டவா? 


3. விக்ரம் ஓப்பனிங்க் சீன்ல அவர் வாய்ல புனலை வெச்சு ஒரு ஃபுல் பாட்டில் சரக்கை வலது கைலயும் , சோடாவை இடது கைலயும் ஊத்தி சரக்கு அடிக்கறார். இது சி செண்ட்டர் ரசிகர்களைக்கவரும் மலிவான் உத்தி . படு கேவலமா இருக்கு .ஷூட் பண்ணும்போது வாமிட் வர்ற மாதிரி இல்லை? 


4. கிறிஸ்டியன்கள்   இந்துக்களை கட்டாய மதம் மாற்றம் செய்பவர்கள் அப்டிங்கற மாதிரி காட்சி வருது . இது எதுக்கு? தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பவா? ஆல்ரெடி கமல் படும் கஷ்டங்கள் போதாதா? உங்க மலிவான வியாபார உத்திக்கு எதுக்கு மதங்களை , பலிகடா ஆக்கறீங்க?


5. நாசர் ஒரு வெறுப்புல ஷேவிங்க் ரேசர்ல அழுத்தி தன் கன்னத்துல ஷேவிங்க் பண்ணி காயம் பண்ணிக்குவது கொடூரமான காட்சி . ஆனா செம காமெடி என்னன்னா அவர் கன்னத்தை மகள் துணியால துடைக்கும்போது க்ளீன் ஆகிடுது . பிளேடால கன்னம் வெட்டுப்பட்டா ரத்தம் வந்துட்டே இருக்கும் , காயத்தையே காணோம் 

ஸ்பெஷல் மைசூர்ப்பாக் கன்ன அழகி

 


6. ஓப்பனிங் ல விக்ரம்  மூலமா 14 இடங்கள் ல மாற்றுத்திறனாளிகள் பலரை சகட்டு மேனிக்கு கிண்டல் பண்ணி இருக்கீங்க. மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்க  இப்படி ஒரு  கேவலமான பொழப்புத்தேவையா? அவங்க மனசைப்புண்படுத்தி அதுல காமெடி பண்ணி என்ன வருது? தியேட்டர்ல யாரும் சிரிக்கலை


7. மாடிப்படில உக்காந்து ஹீரோ கூட லேடி தம் அடிக்கும் காட்சி எதுக்கு? படத்துக்கு ரொம்பத்தேவையா? ஆணுக்குப்பெண் சரி நிகர் சமானம்னு காட்டவா?


8. பெண் பார்க்கும் வைபவத்துல  வழுக்கைத்தலையா ஒரு பொண்ணு வந்து பலர் முன் அவமானப்படுது , ஏன் விக் வெச்சுக்க மாட்டாங்களா? சவுரி இருக்காதா? லேடீஸை அப்படியா அவமானப்படுத்தறது? 



9. விக்ரமோட தோழியா வர்ற தபு  வாசப்படில உக்காந்து பாவாடையை கட்டிக்கிட்டு மலையாளப்படத்துல வர்ற மாதிரி குளிக்குது . .விக்ரம் அவர் பக்கத்துலயே உக்காந்து டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காரு ,. நல்ல வேளை  அவர் முதுகுல சோப் போட்டுக்கிட்டே பேசலை . ஏய்யா , எந்த ஊர்ல இப்படி ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? 



10 . விக்ரமோட தோழி தபுவை ஹீரோ சந்தோஷமா இருக்கும்போது கட்டிப்பிடிக்கறாரு , கிள்ளறாரு , தபுவோட புருஷன்  சரியான மிக்சர் பார்ட்டி போல , எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு



11. ஒரு குண்டான பெண் கேரக்டர் காமெடியன் மேல விழுந்தா ஆடியன்ஸ் சிரிப்பாங்க , ஓகே ஆனா ஹீரோ மேல அவரோட பிந்து கோஷ் டைப் குண்டு அம்மா விழுவது  அதுவும் ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் - ஜெ மாதிரி நெருக்கமா ...... படு கேவலமான காட்சி 


12. ஜீவா பழகும் கணவரை இழந்த அந்த ஆண்ட்டி “ உக்காரும்மா”ன்னா பெட்ஷீட் விரிச்சுப்பக்கத்துல  படுத்துக்கும் போல , ஷகீலா தங்கச்சி மாதிரி இருக்கு . அந்த  மொக்கை ஃபிகருக்கு ஜீவா உருகுவது  , அவங்க 2 பேருக்கும் இடையே மேட்டர் நடக்குமா? நடக்காதா?ன்னு பெரிய ஹிட்சாக் சஸ்பென்ஸ் வெச்சது ரொம்ப ஓவரு 

13. அந்த ஆண்ட்டி ஏன் ஜீவாவை க்ளைமாக்ஸ்க்கு முன்னால “ சாத்தானே அப்பால் போ”ன்னு சொல்லாத குறையா விரட்டுது? பாப்பாவுக்கு புருஷன் இல்லை , அதுக்கும் ஜீவா மேல ஒரு கண்ணு . ஏன்னு கேட்க யாரும் இல்லை , அப்பாவும் கண்டுக்கலை  எதுக்காக அந்த சீன்? சிம்ப்பதி கிரியேட் பண்ணவா? 




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  உன் பொண்டாட்டி கூட ஓடிப்போனவ தான், நான் ஏதாவது கேட்டேனா? சொன்னேனா? 


 உன் தங்கச்சிக்குக்கூட 13 இடங்கள்ல மச்சம் இருக்கு , அதுல 10 மச்சத்தை ஊர்ல இருக்கறவன் எல்லாம் பார்த்துட்டான், 3 மச்சம் அவ மட்டும் பார்க்கும் இடத்துல இருக்கு , நான் ஏதாவது வெளில சொன்னேனா? 



2. தேவன் ஆணைப்படி வெளிச்சம் உண்டாகட்டும் . என்னது? பல்பு மங்குது? அடடா, அங்கேயும் பவர் கட்டா? ( ஜெ வை கலாய்ச்சுடாங்களாம் ) 



3. வீட்டை பேசாம வித்துடுங்க 


அது முடியாது , படேல் அதுக்கு விட மாட்டார் 


 அவர் யாரு? 

 அவர் தான் ஹவுஸ் ஓனர் ( இந்த மொக்கை ஜோக் `1984 ல சாவி வார இதழ்ல கரடி குளம் ஜெயாப்பிரியன் எழுதிய அரதப்பழசான ஜோக் )



4. உலகில் பெஸ்ட் 3 என்ன தெரியுமா? 


1. பெண்ணின் சிரிப்பு 

2. பெண்ணின் கண்கள் 

3 பெண்ணின் வேர்வை வாசம் , ஆக்சுவலா அவங்க வேர்வை வாசத்துல செண்ட்டே தயாரிக்கலாம் தெரியுமா? 



5.  மீ குட் பாய்,. மை ஃபாதர் ஈஸ் ஃபாதர் 


 வாட்? 

 எங்கப்பா ஒரு ஃபாதர் சர்ச் ல ( ஆராரோ ஆரிராரோ பட வசனம் ) 



6.  நீ என்ன சொல்ல வர்றே? புரியல . சைகைல சொல்றே /. என்னது ? வீடு ஓடிப்போச்சா? 


 நோ


 ஓ வீட்டுல உன்னை டிராப் பண்ணனுமா? 


7.  வாட்சாய்யா இது ? முள் தலைகீழா இருக்கு?


 சார், நீங்க வாட்சை தலைகீழா கட்டி இருப்பீங்க ( க்ரேசி தீவ்ஸ் இன் பால வாக்கம்  நாடக கிரெசிமோகன் ஜோக் ) 



8.  அவ என்ன பண்ணா ? சரியாச்சொல்லி , ஃபிரண்ட்ஷிப்ல ஒரே ஒரு எமோஷன் தான் இருக்கு , மத்ததெல்லாம் லூஸ் மோஷன் தான் 



9. ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக்காட்டுன்னு உங்க மதம் சொல்லுது , ஆனா நீ புகார் கொடுத்திருக்கே,,


10 . உனக்கு மேரேஜ் பண்ண யாருக்கு அக்கறை இருக்கும் ? 

 எனக்கு


 இல்லை , உங்கம்மாவுக்கு , போய் அவங்க கிட்டே முதல்ல சொல்லு 



11.  ரெண்டு வாரம் மருந்து , 3 வாரம் ரெஸ்ட் , 4 வாரம்  நோ டாக்.. 


 டாக்டர் , இதே தான் அவருக்கும் சொன்னிங்க 



12  பத்து ரூபா முதலீடு போட்டு  2 ரூபா லாபம் பார்ப்பது பிஸ்னெஸ் , ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாம 100% லாபம் பார்ப்பது அரசியல்



13. ஒரு நல்ல அரசியல்வாதியோட கடமை எது தெரியுமா? மக்கள்ட்ட பிரச்சனை தீராம பார்த்துக்கறது 



14.  எனக்கு எங்கப்பாவைப்படிக்காது , ஆனா அவர் கிட்டே எனக்கு உரிமை இருக்கு ( ஆரண்ய காண்டம் வசன உல்டா ) 



15. வலுக்கட்டாயமா மதம் மாத்துறது தப்பில்லையா? 


16.  அவங்க அடிச்ச முத ஆளும் நீ இல்லை, அவங்க அடிக்கும் கடைசி ஆளூம்  நீ இல்லை.. 



17. வீரனோட வரலாற்றில் யார் முதல்ல கை வெக்கறாங்க என்பதே முக்கியம்   ( மகேஷ் இன் பிஸ்னெஸ்மேன் பட வசனம் ) 



18.  நாம மிடில் கிளாஸ் , ஒண்ணும் பண்ண முடியாது ( சாமுராய் வசனம் ) 



19.  கோடில ஒருத்தருக்குத்தான் வலியைத்தாங்கிக்கும் சக்தி இருக்கு 



20 .எப்பவும் மன்னிப்பு மட்டும்தான் மனுஷனுக்கு நிம்மதியையும் , சந்தோஷத்தையும் தரும்  







ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 37 ( இது டப்பிங்க் படம் என்பதால் விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க , ஒரு ஒப்பிடலுக்காக )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்கிங்க்  -சுமார் 


 ரேட்டிங்க் -     1 /5  


சி பி கமெண்ட் - படம் குப்பைன்னு ஓப்பனா சொல்லியாச்சு , இது டி வி ல  போட்டாக்கூட பார்த்துடாதீங்க . யாராவது உங்களைப்பழி வாங்க “ உனக்கு 500 ரூபா பணம் தர்றேன், முழுப்படத்தையும் பாருன்னு பந்தயம் கட்டுனாக்கூட பார்த்துடாதீங்க, 2 நாள் தலை வலிக்கும், ஆரோக்யம் முக்கியமா? காசு முக்கியமா? 



டிஸ்கி -1 கடல் விமர்சனம் படிச்சுட்டு ஏகப்பட்ட பெரு திட்டறாங்க, படம் நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்ல மாட்டோமா? சும்மா ஏன் டார்ச்சர் பண்ணனும்? ஆஃபீஸ் டைம்ல திட்ட வேணாம் . காலை 7 டூ 9 மாலை 8 டூ  9 திட்டவும்


டிஸ்கி 2 - கடல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/02/blog-post.html


 

கமல்-க்கு ஆதரவாக தமிழருவி மணீயன் அறிக்கை , சென்சார் ஆஃபீசர் பேட்டி

1. வேண்டாம் வேறொரு முகத்தின் விஸ்வரூபம்!

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக எழுந்து நிற்கும் பிரச்னைகளால் பாதிக்கப்படப் போவது ஒரு தனி மனிதன்தானே என்று, அறி வுலகம் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாகாது. மதநல்லிணக்கம் ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழ் மண்ணில் ஒரு திரைப்பட எதிர்ப்பு தவறான பாதிப்புகளை உருவாக்கி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இங்கே அனைவருக்கும் உண்டு. பாபர் மசூதி 1992-ல் இடிக்கப்பட்ட போதும் அமைதி காத்த பண்பாளர்கள் தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள். 'விஸ்வரூபம்’ படம் இஸ்லாமியரைக் காயப்படுத்துவதாக இன்று ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பிரச்னை நீதிமன்றத்தில் போய் நின்றி ருக்கிறது. இந்த விரும்பத்தகாத சூழல் எங்கே போய் முடியும் என்பதுதான் கேள்வி. 


ஓர் அமெரிக்கர் தயாரித்து வெளியிட்ட ‘Innocence Of Muslims’ என்ற திரைப்படத்தின் நோக்கம் மனிதகுலத்தின் அழகிய முன்மாதிரியாய் அரபு நிலத்தில் வலம் வந்த இறுதி இறைத்தூதர் நபி களாரையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தப் படம் திரையிடப்படுவதை இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்து அணிவகுத்தது நியாயமான நடவடிக்கை.


 ஆனால் கமல்ஹாசன், இஸ்லாமுக்கு எதிரானவர் இல்லையே. பயங்கரவாதிகளாய், மதத்தின் பெய ரால் மனிதகுலத்தை அழித்தொழிக்க முயலும் மோச மான அடிப்படை வகுப்புவாதியராய் ஆயுதம் ஏந்திநிற்கும் கூட்டம் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களை எவ்விதம் ஆதரிக்க முடியும்?



 பின்லேடனையும், தலி பான்களையும் இஸ்லா​மியர் என்பதற்காகவே, இங்குள்ள இஸ் லாமியர்கள் ஆதரிக்கக்​கூடுமா? தன்னை ஓர் இந்து சந்நியாசி என்று நித்தியானந்தன் அடையாளப்படுத்திக்​கொள்வதற்காக, அந்த வேடதாரியை எல்லா இந் துக்களும் ஏற்பது தகுமா?



 குஜராத் கலவரத்தில் மோசமான மிருகங்களைப் போல் வெறிபிடித்து ஊழித் தாண்டவம் நடத்தியவர்களை நாம் நியாயப் படுத்த இயலுமா? மிருகப் பண்புகள் மிக்கவரை மனிதர்களாக மாற்றுவதற்குத்தான் மதம்; மனிதர்களை மிருகங்களாக்குவது எந்த மதத்துக்கும் நோக்கம் இல்லை.

'ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதால் நற்கூலி கிட்டும்’ என்பதுதானே நபி மொழி. 'முஸ்லிம் அல்லாத ஒருவனுக்கு, முஸ்லிம் அநீதி இழைத்தாலோ, அவனது உரிமையைப் பறித்தாலோ, அவனுடைய சக்திக்கு மீறியச் சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக்கொண்டாலோ, நான் மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில், முஸ்லிம் அல்லாதவனின் வழக்கறிஞராக வாதாடுவேன்’ (நபி மொழித் தொகுப்பு) என்று வாய் மலர்ந்த அருட்பெருங் கருணை வள்ளல் அல்லவா பெருமானார்! 




'அல்லா வழங்கியவற்றில் இருந்து உண்ணுங்கள்; பருகுங்கள். பூமியில் குழப்பம் உண்டாக்கித் திரியாதீர்கள்’ என்று அறிவுரை வழங்குவது அல்லவா திருமறை! அல்லாவின் திருநாமங்களில் ஒன்றாக 'அஸ்ஸலாம்’ என்பதற்குப் பொருள் 'அமைதியை வெளிப்படுத்துபவன்’ என்பதுதானே. 'வஸ்ஸில் ஹு ஹைர்’ (சமாதானமே சிறந்தது) என்பதன்றோ இறைவனின் மாசற்ற மறை வாசகம். 'வாய்மொழியாலும், கைகளாலும் அடுத்தவருக்குத் தீங்கிழைப்பவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது’ என்று தீர்ப்புரைக்கும் அன்பு வழிப்பட்ட சமயத்தின் பாதையிலா தலிபான்களின் பயணம் நடக்கிறது? இவர்களை எதிர்த்து எழும் 'விஸ்வரூபம்’ சாந்தியும் சமாதானமும் நாடும் மனங்களை எப்படிக் காயப்படுத்த முயலும்?



'அழிவுப் போர் நடத்தப் புறப்படும் போதெல்லாம் தலிபான் தீவிரவாதிகள் திருமறை​யை வாசிப்பதுபோன்று காட்சிகள் அமைக்கப்​பட்டிருப்பதும், திருமறையின் வசனங்கள் ஒலிக்கப்​படுவதும் எங்கள் உணர்வுகளைக் காயப் படுத்துகின்றன’ என்று முஸ்லிம் அமைப்புகள் மனவருத்தத்தைப் பதிவுசெய்துள்ளன. இதைக் கமல்ஹாசன் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். 



தீவிரவாதிகள் வழி தவறியவர்கள்; மனப் பிறழ்வில் வன்முறையை வாழ்நெறியாக வரித்துக் கொண்டவர்கள்; தாங்கள் 'ஜிஹாத்’ என்ற புனிதப் போரில் ஈடுபட்டிருப்பதாக ஆழ்மனதில் நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் எதைச்செய்தாலும் இறை வனை முன்நிறுத்தியே செய்யப் பழ கியவர்கள். 'விஸ்வரூபம்’ காட்சிகள் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனாலும், கமல்ஹாசன் இரணப்பட்ட இருதயங்களுக்கு மதிப்பளித்து அந்தக் காட் சிகளை வெட்டிவிட முன்வருவது நல்லது.



மகாபாரதத்தில் வரும் குரு க்ஷேத்திரம்உண்மை நிகழ்வன்று; அது ஓர் உயர்ந்த உருவகம். ஒவ்வொரு மனித மனத்திலும் தீய எண் ணங்களும், நல்லெண்ணங்களும் கலந்தே காட்சி தரும். இரண்டுக்கும் இடைவிடாமல் நடக்கும் போரே குருக்ஷேத்திரம். மனித இனம் உள்ள கடைசி நாள் வரை இந்தப் போர் நடந்துகொண்டுதான் இருக்கும். சூஃபிக்கள் பார்வையில் 'ஜிஹாத்’ என்னும் புனிதப் போர் உடல் வலிமையைக் கொண்டு உலக அரங்கில் நடப்பது அன்று. அது உள்ளத்துக்குள் படிந்து கிடக்கும் தீய எண்ணங்களை அழித்தொழித்து இறைவனின் இருப்பிடமாக மனதை மாற்ற நடப்பது. இந்தப் புனிதப்போர் எல்லா இடங்களிலும் நடக்கட்டும். 'விஸ்வரூபம்’ இந்தப் போருக்கு எதிரானது இல்லை.



மத்திய தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலர் லீலா சாம்சன், 'சில முஸ்லிம் அமைப்புகள் 'விஸ்வரூபம்’ தடைசெய்யப்பட வேண்டும்’ என்று போராடுவது கலாச்சார பயங்கரவாதம் (Cultural Terrorism) வளர்வதற்கு வழி வகுத்துவிடும். எந்த மதம் சார்ந்தவரின் மனதையும் புண்படுத்துவதுபோல் இந்தப் படத்தில் ஒரு காட்சியும் இல்லை. தடைசெய்யப்பட வேண்டும் என்று கிளர்ச்சி செய்வது சட்டபூர்வமான தணிக்கை அமைப்பை அவ மானப்படுத்தும் செயலாகும். தணிக்கைக் குழுவின் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, திரையரங்குகளில் படம் வெளியிடப்படுவதைத் தடுக்கவோ, அதைப் பார்க்கும் உரிமையை மக்களிடமிருந்து பறிக்கவோ, எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை’ என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.



இஸ்லாமிய சகோதரர்கள் யோசிக்க வேண்டும். சிவாஜி கணேசனுக்குப் பிறகு, தமிழகம் கண்டெடுத்த இணையற்ற நடிப்பாற்றல் கொண்ட கலைஞர் கமல்ஹாசன். 'களத்தூர் கண்ணம்மா’வில் ஆதரவற்ற அனாதைச் சிறுவனாய் 'அம்மாவும் நீயே’ பாடலுக்கு அழகாக வாயசைத்துத் தன் நிராதரவான நிலையை வியக்கத்தக்க விழியசைவிலும், சோகம் ததும்பும் முகபாவத்திலும் நேர்த்தியாக வெளிப்படுத்திய தருணத்திலிருந்து, இந்தியக் கலையுலகின் தவிர்க்க முடியாத நவரச நாயகனாய் கால நடையில் வளர்ந்து, நடிப்பில் விசுவரூபம் காட்டி நிற்பவர் கமல்.




 'பதினாறு வயது’ முதல் 'அன்பே சிவம்’ வரை நடிப்பில் அவர் காட்டிய பரிமாணங்களை இன்னொருவரால் எளிதில் காட்ட இயலாது. ஈட்டிய பணத்தைப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து இறுதி நாள் வரை இன்பமான வாழ்க்கைக்கு வழிதேடிக் கொள்ளும் நடிகர்களுக்கு நடுவில், பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுப் படவுலகில் கையைச் சுட்டுக்கொள்ளும் கலைத் தாகமுள்ள கமல், தமிழினம் பெருமை கொள்ள வேண்டிய மனிதர். 




ரஜினிக்கும் கமலுக்கும் தமிழகம் கொடுத்தது அதிகம். அதற்குக் கைம்மாறாகத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் இவர்கள் இருவரும் கொடுத்தது மிகமிகக் குறைவு. இந்த விமர்சனம் எனக்கு எப்போதும் உண்டு. ஆயினும் 90 கோடி ரூபாய் செலவழித்து மூன்று மொழிகளில் எடுத்த படத்தை வெளியிட முடியாமல் துடிக்கும் ஒரு கலைஞனின் வலியை என்னால் பூரணமாக உணர முடிகிறது. அடுத்தவர் வலி உணர்ந்து அதற்கு மருந்திடுவது அல்லவா உண்மையான மதம்; அதுதானே உன்னதமான ஆன்மிகம்.


வீடற்ற, வேலையற்ற, இலக்கின்றிப் பயணிக்கிற ஏழைகளைத் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் 'டிராம்ப்’ (tramp)  என்ற பாத்திரத்தின் மூலம் நகைச்சுவை இழையோட ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க சமூகத்தின் முதலாளித்துவ முகமூடியை விலக்கி, அதன் ஈரமற்ற இதயத்தைத் தோலுரித்துக் காட்டிய 'குற்றத்துக்காக’ சார்லி சாப்ளின் மீது கம்யூனிஸ்ட் சாயத்தைப் பூசி, அவரை நாடு கடத்தி 20 ஆண்டுகளுக்கு மேல் அலைக்கழித்துக் காயப்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம். சார்லி சாப்ளின் என்ற மகா கலைஞனுக்கு நேர்ந்த துயரம் மதம் காரணமாக நம் மகா கலைஞர் கமலுக்கும் நேர்ந்து விடலாகாது.



'பம்பாய்’ படத்தில் முஸ்லிம்களுக்குச் சார்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், அந்தப் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுத்த பால்தாக்கரேவைச் சந்தித்து, பணிவாக அவர் இட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மணிரத்னத்தின் படைப்புரிமை சிவசேனாவின் இந்துத் துவத்தால் பறிக்கப்பட்டது கலாசாரப் பயங்கரவாதம் என்றால், இன்று 'விஸ்வரூபம்’ வெளிவர அனுமதிக்க மாட்டோம் என்று அடம்பிடிப்பதை எந்தப் பெயரில் அழைப்பது?



நேற்று துப்பாக்கி; இன்று விஸ்வரூபம்; நாளை அமீரின் ஆதிபகவன் என்று தொடர்வது சிந்தனைச் சர்வாதிகாரத்துக்கான சமிக்ஞை. விஜயின் தந்தை இயக்குநர் சந்திரசேகரன், எதிர்ப்பை வெளிப்படுத்திய அமைப்புகளுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டு, அவர்கள் நிபந்தனைகளை ஏற்றுச் சில காட்சிகளை நீக்கிய பிறகு, 'துப்பாக்கி’ திரைக்கு வந்தது. இஸ் லாமியரைப் புண்படுத்தும் காட்சிகள் 'துப்பாக்கி’யில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகும் ஒவ் வொரு படமும் ஏதோ ஒரு சமூகத்திடம் இன்னொரு 'சான்றிதழ்’ வாங்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வலுப்பெறுவது சமூகத்துக்குச் சரியானது அன்று.


'இஸ்லாம் சமயம் சகிப்புத்தன்மையற்றது’ என்று அமெரிக்க, ஐரோப்பிய ஊட​கங்​கள் திட்ட​மிட்டு ஒரு தவ​றான கற்பிதத்தை நிலைநிறுத்த நீண்ட கால​மாக முயன்று வருகின்றன. அன்பு சார்ந்த, அனைவரையும் சகோதரர்களாகப் பாவிக்கும் பண்பை அடித்தளமாகக் கொண்ட, துயருற்றுத் தவிக்கும் ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காகவே 'ஜகாத்’ என்னும் தானம் வழங்குதலை முக்கிய மார்க்கக் கடமையாக வலியுறுத்திய நேரில் சந்திக்கும் தோழர்களை மார்புறத் தழுவி மனித நேயத்தை வெளிப்படுத்துகிற, முதற்பார்வையில் முகமன் கூறும்போது 'அஸ்ஸலாமு அலைக்கும் - வ அலைக்கும் வஸ்ஸலாம்’ என்று ( உங்களுக்கு அமைதி கிட்டுவதாக) பாசத்தைப் பகிர்ந்துகொள்கிற சமயம், சிலரது உணர்ச்சியின் வெளிப்பாடுகளால் தவறான புரிதலுக்கு உட்படலாமா?



கமல்ஹாசன் தயாரித்த 'ஹே ராம்’ திரைப்படத்தில் காந்திக்கு எதிரான காட்சிகளை அமைத்தார். காந்தியை விமர்சிக்கும் வசனங்கள் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. அது படத்தின் போக்கில் தவிர்க்க முடியாதது. அதற்காக மகாத்மாவுக்கு எதிரான மனிதர் கமல்ஹாசன் என்று எந்தக் காந்தியவாதியும் கொடி பிடிக்கவில்லை. 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்கு மகாத்மா அல்ல. அவர் எனக்கு நண்பர். என்னால் அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் என்னுடன் பேசாமலேயே செத்துப் போய் விட்டாரே என்ற வருத்தம் உண்டு’ என ஒரு முறை கமல் குறிப்பிட்டிருந்தார். அப்படிப் பேசுவது கமலுக்கான அடையாளம். இதை எந்த காந்தியச் சிந்தனையாளரும் அதிகப் பிரசங்கித்தனம் என்று எண்ணவில்லை.



'விஸ்வரூபம்’ படம் வெளிவருவதும், வராமல் போவதும், கமல்ஹாசன் லாபமடைவதும் நட்டப் படுவதும் ஒரு தனிநபர் விவகாரம். இதற்காக நீங்கள் மெனக்கெட்டு எழுத வேண்டுமா என்று கேட்கலாம். மீண்டும் சொல்கிறேன். இது தனிநபர் பிரச்னை இல்லை. 'நாங்கள் நினைப்பதைத்தான் நீ எழுத வேண்டும். நாங்கள் விரும்பும் விதத்தில்தான் உன் எந்தப் படைப்பும் இருக்க வேண்டும். நாங்கள் சொல்வதற்கேற்பவே நீ சிந்திக்க வேண்டும்’ என்று சிலர் சமூகத்தின் சட்டாம்பிள்ளைகளாகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு கட்டளையிடப் புறப்பட்டு விட்டால், கலாசார பயங்கரவாதம் வேறொரு வடிவில் விசுவரூபம் கொள்ளும். அப்போது படைப்பாளியின் சுதந்திரம் பறிபோகும். பாசத்தின் அகோரப் பசிக்கு அறிவுலக நியாயங்கள் அனைத்தும் இரையாகும்.


படம்: சொ.பாலசுப்பிரமணியன் 



2.மதச்சார்பற்ற தேசத்தைத் தேடிச் செல் வேன்’ என்று, கமல் உருக்கமாகச் சொன்​னது, முஸ்லிம் சமூகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் கமலுக்கு ஆதரவு நிலையையும், மற்றவர்கள் தாங்கள் எடுத்த எதிர்ப்பு  முடிவிலும் உறுதி யாகவும் இருக்கின்றனர். 


கமலைச் சந்தித்துப் பேசி இருக்கும் காங் கிரஸ் எம்.பி. ஆரூணிடம் பேசினோம். ''முஸ் லிம்கள் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. 'விஸ்வரூபம்’ விவகாரத்தில் எங்கள் சமூகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் கமலைப் பார்த்தோம். கமல் வியாபார ரீதியில் படம் எடுக்கிறார். அதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை விட்டே வெளி«​யறுகிறேன் என்று கமல் வருந்தும் நிலைக்கு நாம் அவரைத் தள்ளி இருக்கிறோம். 'விஸ்வரூபம்’ விவகாரம் இப்போது திசை திருப்பப்படுகிறது. 'துப்பாக்கி’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருந்ததால் நீக்கச் சொன்னோம். அதேபோல், இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் அதை நீக்க கமல் தயாராகத்தான் இருக்கிறார். நான் கமலைச் சந்தித்துப் பேசியதைக் கூட சிலர் குற்றம் சாட்டு கிறார்கள். ஆனால் அதில் எந்தத் தவறும் இல்லை'' என்றார் தைரியமாக.
நடுநிலையான கருத்துக்களைப் பதிவு செய்யும்  கவிஞர் இன்குலாப், இந்த விவகாரத்தில் என்ன சொல்கிறார்? ''கருத்துச் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. கருத்தில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். எதிர்மறையான கருத்துகளை முன் வைக்கலாம். அதற்காக, கருத்தை முடக்குவது தவறு. கருத்துச் சுதந்திரம் பற்றி கமல் போன்றவர்களுக்கு முழுமையான புரிதல் இல்லை. கதா நாயகன், வில்லன் என்ற சினிமா கருத்துக்கள்தான் கமல் சினிமாவிலும் பிரபதிபலிக்கிறது. படத்​தில் சித்திரிப்புகளை உரு வாக்கும் போது வேறுபட்ட பார்வை கமலுக்கு இல்லை.



 தீவிரவாதத்தைக் காட்டுவதாகச் சொல்லிவிட்டு அதன் புனைவுகளைத்தான் சொல்ல முற்படுகிறார். இதை 'குருதிப்புனல்’ படத்திலேயே பார்த்து விட்டோம். தொடர் நிகழ்வுகள்தான் முஸ்லிம்களை இந்த அளவுக்கு கோபப்பட வைத்திருக்கிறது. மதச்சார்பற்ற நாட் டைத் தேடுகிறேன் என்று அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் போதே அவர் மதச்சார்புள்ள நிலையில்தான் இருக்கிறார் என்பது தெரிகிறது. மதவெறிச் சித்திரிப்புகளைப் படத்தில் காட்டி இருந்தால் அதற்காக எழும் போராட்டத்தை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும்'' என்கிறார் ஆணித் தரமாக.



முஸ்லிம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹி ருல்லாவிடம் பேசினோம். ''தன்னுடைய பெயரில் ஹாசன் என்று இருப்பதால் சில ஆண்டு​களுக்கு முன் அமெரிக்காவில் கமலுக்கு நேர்ந்த அவமானத்தைக் கமல் மறந்து விட்டாரா? அப்துல் கலாமுக்கும் ஷாருக்கானுக்கும்கூட இதுபோன்ற அவமானங்கள் ஏற்படும் போதும் சாதாரண முஸ்லிம்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். எங்கள் வலியை அனுபவமாக அறிந்த பிறகும் கமல் எங்களைக் காயப்படுத்தலாமா? 


அவர் நஷ்டம் அடைய வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. 'உன்னைப் போல் ஒருவன்’ படம் வந்தபோதே அதில் சில காட்சிகள் எங்களை பாதிப்​பதாக இருந்ததை அவரிடம் முறையிட்டோம். 'முஸ்லிம்களை உயர்வாகச் சித்திரித்து நிச்சயம் ஒரு படம் எடுப்பேன்’ என்று எங்களிடம் சொன்னார். அதுதான் 'விஸ்வரூபமா’? முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கூடங் குளம் விவகாரத்தையும், குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு என எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறதே... அதை எல்லாம் எடுக் கலாமே? 



இப்போது கொதிக்கும் நடிகர்களும், இயக்குநர்​களும் இதற்கு முன் சில படங்கள் தடை விதிக்கப்பட்ட போது எங்கே போனார்கள்? மகாத்மா காந்தியைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே. ஆனால், பழியை முதலில் முஸ்லிம்கள் மீதுதானே போட்​டனர். அதேதான் விஸ்வருப விவகாரத்திலும் நடக்கிறது'' என்று வெடித்தார்.



எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, ''படத்தில் முஸ்லிம்களின் உணர் வைப் பாதிக்கும் விதத்தில் காட்சிகள் இருந்தது. ஆரம்பத்​திலேயே இதுபற்றி கமல் பேசி இருந்தால், பிரச்னை இந்த அள​வுக்கு வெடித்து இருக்காது. தன்னுடைய வியாபாரத்தில் ஒரு பிரச்னை என்று வந்ததும் இந்தி​யாவை மதச் சார்புள்ள நாடு என்கிறார். நாங்கள் எல்லோரும் இங்கே இருக்கும் எல்லோருடனும் சகோதர்களாகத்தான் பழகி வரு கிறோம். கமல் தன்னுடைய வியாபாரத்துக்காக எங்கள் உணர்வுகளை உரசிப்பார்க்க வேண்டாம்'' என்கிறார் கோபத்​தோடு.


சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்!

- எம்.தமிழ்ச்செழியன் 



3. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடி க்குக் கொண்டாட்டம் என்பார் கள். கோலிவுட்டில் கூத்தாடிகளே இரண்டுபட்டுக் கிடப்பதால், அரசாங்கத்துக்குக் கொண்டாட்டம்! 



கண் வலி ஏற்பட்டு சிவந்த கண்களைக் கண்டிருப்பீர்கள்; குடித்துச் சிவந்த கண்களைப் பார்த்து இருப்​பீர்கள்; கடந்த 20 நாட்களாக உறக்கம் இன்றி கவலையால் கண்கள் சிவந்து, கமல் திரிந்து கொண்டு இருக்கிறார்.



நடிகர் சங்கம் 


அ.தி.மு.க-வில் இருந்தாலும் மீடியாக்களில் கமலுக்கு ஆதரவாக கணீர் குரல் கொடுக்கிறார், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி. அதேசமயம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. கமலுக்கு கை கொடுத்​தால், இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க. உறவில் பிணக்கு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால், 'விஸ்வரூபம்’ தொடர்பான கமென்ட்களைத் தவிர்க்கிறார் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.


பேருந்து ஓட்டுனர் ஒருவரிடம் சண்டை போட்டால், ஓட்டுகிற பேருந்தை எல்லாம் அதே இடங்களில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் போராடுகின்றனர். ஒரு வக்கீலிடம் சண்டை போட்டால் பேசினால், ஒட்டுமொத்த வக்கீல்கள் சங்கமே போராட்டத்தில் குதிக்கிறது. உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர் சார்ந்துள்ள நடிகர் சங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து கமலே பலமுறை வேதனை தெரிவித்து இருக்கிறார்.


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் 


'நடிகர் கமல்ஹாசனை கவுன்சில் கண்டு கொள்ள வேண்டாம், ராஜ்கமல் ஃபிலிம்ஸின் தயாரிப்பாளர் கமலை தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ள வேண்டாமா?’ என்று குமுறல் குரல்கள் கேட்கின்றன. ஒரு பக்கம் எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் ஆகியோரின் குடுமிப்பிடிச் சண்டை... இன்னொரு பக்கம் 'படம் தயாரிப்போர் சங்கம்’ ஆரம்பிக்கும் புது கோஷ்டி என்று குஸ்திமேளா நடந்து வருகிறது அங்கே. இதற்கு இடையில் கமலை அம்போ என்று விட்டுவிட்டனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 



நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கமலுக்கு ஆதரவு இல்லை. இயக்குநர் கமலுக்கு இயக்குநர்கள் சங்கத்தில் இருந்தும் பெரிதாக ஆதரவு இல்லை. அதன் சங்கத் தலைவர் பாரதிராஜா ஆதரவுக் குரல் கொடுக்கிறார். ''தலிபான் நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக எடுப்பது, படைப்பாளியின் தார்மீக உரிமை. அப்படி எடுக்கக் கூடாது என்று தடுப்பது யார்?'' என்று கமலுக்கு வக்காலத்து வாங்குகிறார். கமலுக்கு வரிந்துகட்டிக்கொண்டு பாரதிராஜா ஆதரவு தெரிவிக்க, கமலின் குருநாதர் பால​சந்தர் 'விஸ்வரூபம்’ குறித்து இதுவரை ஏனோ வாய் திறக்கவில்லை.  


அஜித்தும் கமலும்! 


கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதிக்கு, 'பாசக்​காரத் தலைவனுக்கு பாராட்டு விழா’ நடத்தினர். மேடையில், 'இந்த மாதிரியான விழாக்களுக்கு வரச்​சொல்லி சில நபர்கள் நடிகர், நடிகைகளை மிரட்டுகிறார்கள்’ என்று பொதுவாகப் பேசினார் அஜித். கருணாநிதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த ரஜினி, அஜித் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினார். மறுநாளே அஜித் மிரட்டப்பட, கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து மேடையில் பேசியதற்காக 'ஸாரி’ கேட்டார் அஜித். அப்போது அஜித்துக்கு ஆறுதலாக இருந்தவர் ரஜினி. இப்போது கமலுக்கு ஆதரவாக முதல் அறிக்கையை அஜித் வெளியிட்டது கமல் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
''அன்று அஜித்துக்கு ஏற்பட்ட நிலைதான் இன்று கமலுக்கு ஏற்பட்டு இருக்கிறது'' என்று சொல்பவர்கள், ''தன்னு​​​டைய பிறந்த நாளுக்கு போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவிடம் ஆசி வாங்கிய கமல், அதன்பிறகு நடந்த ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில், 'வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர வேண்டும்’ என்று பேசியதைப் பார்த்து உஷ்ண​மானார் ஜெயலலிதா. மறுபடியும் கமல் தன்னை வந்து சந்திப்பார் என்று எதிர்பார்த்தார். கமல் கண்டுகொள்ளாமல் 'விஸ்வரூபம்’ பட ரிலீஸில் இறங்கினார். அப்போதுதான் முஸ்லிம் விவகாரம் தலைதூக்க, கடுப்பான ஜெயலலிதா, அதை வைத்து கமலுக்கு எதிராகக் காய் நகர்த்தினார்'' என்கின்றனர். ஆனால், ''சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்காகவே 'விஸ் வரூபம்’ படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதில் எந்த அரசியல், வியாபார பின்புல​மும் இல்லை'' என்று மறுக்​கிறார் ஜெயலலிதா.



கண்ணீர்விட்ட ரசிகர்கள்! 


சிறந்த நடிகருக்கான தேசிய விருது பலமுறை... பிலிம்ஃபேர் விருது பலமுறை பெற்ற நடிகர்  கமல், கடந்த 30-ம் தேதி தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் அளித்த பேட்டியைப் பார்த்து அவரது ரசிகர்கள் கண்ணீர்விட்டு கதறினர். ''நான் சிவாஜி மடியில் அமர்ந்தவன், ஜெமினியிடம் நடை பயின்றவன், எம்.ஜி.ஆர். தோளில் வளர்ந்தவன். அவர்தான் என்னை தோளுக்கு மேல் உயர்த்தி உலகத்தின் உயரத்தைக் காட்டியவர்.



 நான் ராமநாதபுர அரண்மனையில் பிறந்தவன். இப்போது இங்கே ஆழ்வார்பேட்டையில் இருக்கும் எனது அலுவலகம் ஒரு வகையில் அதே ராமநாதபுர அரண்மனைக்கு சொந்தமானது. இந்த இடம், கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் எனது சொத்துக்கள் எல்லாவற்றையும் அடகு வைத்து சினிமா எடுத்து இருக்கிறேன். 'விஸ்வரூபம்’ படத்துக்காக எல்லாச் சொத்துப் பத்திரங்களையும் பண முதலீட்டாளரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன். படம் ஜெயித்தால், பணம் கிடைத் தால், எனது சொத்துக்கள் என்னிடமே திரும்பி வரும். இல்லைஎன்றால், எல்லாச் சொத்துக்களும் பறிபோய்விடும்.  சாப்பிட எனக்கு நிறைய வீடுகள் இருக்கின்றன. தங்குவதற்குத்தான் வீடு இல்லை.



 நமது முன்னோர் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று சொல்லி இருக்கிறார்களே. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதச்சார்பில்லாத மாநிலம் இருக்​கிறதா என்று தேடிப் பார்ப்பேன். இந்தியாவில் இல்லையென்றால், என்ன செய்வது? உலகில் வேறு பகுதியில் அதுமாதிரி இடம் இருந்தால் அங்கே குடிபெயர்வேன்'' என்று, கமல் பேசி முடித்தபோது, கண்களில் கூடுகட்டி இருந்த உப்புநீர்க் குடம் உடைந்து போனது.



'நாட்டைவிட்டு வெளியேற விட மாட்டேன்...’ என்று, தேனியில் இருந்து கமல் ரசிகர் ஒருவர், 10 ஆயிரம் ரூபாய் செக்குடன் கண்ணீர் மல்க கமலின் ஆபீஸில் ஆஜரானார். இப்போது, தேனி ரசிகரின் பாணியைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் இருந்து கமல் ரசிகர்கள் கையில் காசோலையோடு ஆஜராகி வருகின்றனர். நேற்று வரை கமல் விஷயத்தில் பாராமுகமாக இருந்த திரைப்பட உலகம், 'நான் நாட்டைவிட்டு வெளியேறுகிறேன்’ என்ற கமலின் பேச்சுக்குப் பிறகு, கொஞ்சம் கூச்சம் அடைந்து அவரது அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தனர். 




பாரதிராஜா, மணிரத்னம், வைரமுத்து, விஜயகுமார், ராதாரவி, சிவகுமார், சூர்யா, கார்த்தி, குஷ்பு, ராதிகா, சினேகா-பிரசன்னா, என்று நட்சத்திரங்கள் கமலைச் சந்தித்து கண்ணீர் விட்டனர். அன்று மாலை 5 மணிக்கு கமலிடம் செல்போனில் பேசிய ரஜினி, அலுவலகத்துக்கு வருவ​தாகக் கூறினார். ''வேண்டாம். சுற்றிலும் மீடியாக்கள் இருக்கின்றன. நீங்கள் வந்தால், பிரச்னை வேறுவிதமாக திசை திரும்பிவிடும்'' என்று அன்பாக மறுத்து​ விட்டார் கமல்.



திரை உலகினரின் யு டர்ன்! 



பிப்ரவரி 1-ம் தேதி ரிலீஸாகும் 'விஸ்வரூபம்’ இந்திப் பதிப்புக்காக 31-ம்தேதி காலை கமல் மும்பைக்குச் சென்று விட்டார். அதனால், முஸ்லிம் தலைவர்களுடன் கமல் சார்பில் இயக்குநர் அமீர், சாருஹாசன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்து​கின்றனர். கடந்த 31-ம் தேதி, காலை, திரையுலகினர் அனைவரும் கமல் ஆபீஸில் சந்திக்கிறார்கள் என்று தெரிவித்தனர். ஆனால், தென்னிந்திய வர்த்தக சபைத் தலைவர் கல்யாணம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோர் வரவில்லை. இயக்குநர் பாலா, சிவகுமார், பிரபு, கார்த்தி, மாதவன், ராதிகா, பெப்சி தலைவர் அமீர் ஆகியோர் மட்டும் சந்தித்தனர். 31-ம் தேதி மதியம் முதல்வரின் பேட்டி  வெளியாகும்வரை கமல் அலுவலக மாடியில் இவர்கள் காத்திருந்தனர். அதன்பிறகு, 'மதச்சார்பு இல்லாத மாநிலம் நோக்கிப் போகிறேன்’ என்று கமல் கண்கலங்கிய அதே இடத்தில், ''நாங்கள் புரட்சித்தலைவி முதல்வருக்கு நன்றி சொல்கிறோம்'' என்று யு டர்ன் போட்டனர். இந்த டயலாக், ரசிகர்கள் யாருக்கும் புரியவில்லை.



''கடந்த 15 நாட்களாக கமல் கஷ்டப்பட்டபோது சினிமாவில் இருக்கும் ஒரு அமைப்புகூட ஏன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை'' என்று, இவர்களைப் பார்த்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இறுகிய முகத்தோடு எல்லோருக்கும் பெரிய கும்பிடு போட்டு வழியனுப்பினர்.


சினிமாவில் கர்ஜிப்பவர்கள், பறந்து பறந்து தாக்குபவர்கள், பஞ்ச் டயலாக் உதிர்ப்பவர்கள்... 'விஸ்வரூப’ விவகாரத்தில் பொட்டிப் பாம்பு மாதிரி பதுங்கிக் கிடந்ததுதான் வருத்தமளிக்கிறது!



- நமது நிருபர்கள், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்


4. மதப் பிரச்னை, சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, குறுக்கு வழியில் தணிக்கைச் சான்றிதழ்.. இப்படி எல்லாவிதத்திலும் முட்டுக்கட்டைப் போட்டுப் பார்த்தாகி விட்டது. 'விஸ்வரூபம்’ படம் எடுத்ததை விட அதை ரிலீஸ் செய்வதற்குத்தான் பாடாய்படுகிறார் கமல்ஹாசன். 



திரைப்படத்தை வெளியிடுவதில் யாரும் தலையிடக்கூடாது என்று, கமல் தரப்பில் கடந்த 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் சார்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனும், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியனும், இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் சங்கர சுப்புவும் வாதிட்டனர்.


சென்னை உயர் நீதிமன்றத்தின் 11-வது நீதிமன்றத்தின் காட்சிகள் விறுவிறுப் புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தன.


தனி நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு வாதாடத் தொடங்கினார் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸின் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: '''விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு 31 மாவட்ட கலெக்டர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன், அவர்கள் காவல் துறையை ஆலோசிக்கவில்லை. எங்களுக்கு நோட் டீஸ் அனுப்பவில்லை. 'விஸ்வரூபம்’ திரைப் படத்தை வெளியிடுவதால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கலெக்டர்களிடம் யாரும் புகார் கொடுக்கவும் இல்லை.

இதிலிருந்தே இது உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. சினிமோட்டோகிராஃப் சட்டப்படி, மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைத் துறை, தணிக்கைச் சான்றிதழ் வழங்கிய பிறகு மாநில அரசு அந்தத் திரைப் படத்துக்குத் தடைவிதிக்க முடியாது. அதனால்தான், குறுக்கு வழியில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை காரணம் காட்டி 144-வது தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.



'விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இந்திய முஸ்லிம்கள் தவறாக சித்திரிக்கப்படவில்லை. அதில் கதாநாயகன் மட் டும்தான் இந்திய முஸ்லிம். அந்தப் பாத்திரம் நல்லவிதமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், முஸ்லிம்கள் பெரு வாரியாக வசிக்கும் ஹைதராபாத்திலும் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கேரளாவின் மலபாரிலும் 'விஸ்வரூபம்’ எந்தச் சர்ச்சையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. 



தமிழகத்தில் மட்டும் எப்படி சட்டம் - ஒழுங்கு பாதிக்கும்? சிலரின் நியாயமற்ற கோரிக்கைக்காக, தனி மனிதனின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. அமிதாப் பச்சன் நடித்த 'ஆரக்ஷன்’ என்ற திரைப்படத்துக்குப் பஞ்சாப்பிலும் உத்தரப்பிரதேசத்திலும் இதேபோல் தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்த வழக்கில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஒரு சிலரின் அபத்தமான அச்சத்துக்காக ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய முடியாது என்று  தடையை நீக்கியது. திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் ஒவ் வொரு நாளும் கமல்ஹாசனுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். ஆகவே, தடையை நீக்க வேண்டும்.


தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன்: சட்டம்-ஒழுங்குக்கு ஆபத்து நேரிடும் சூழ்நிலை உருவானால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அந்த அடிப்படையில்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்துக்குத் தணிக்கைக் குழுவின் தலைவர்தான் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியும். 



ஆனால், 'விஸ்வரூப’த்துக்கு அவர் சான்றிதழ் வழங்கவில்லை. சம்பந்தம் இல்லாத ஐந்து பேர் கொண்ட ஆய்வுக்குழுதான் சான்றிதழ் வழங்கி உள்ளது. ஆய்வுக்குழு அளித்த சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியதாக ஒப்புக் கொள்ள முடியாது. மேலும் இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் சரியாகவும் இருக்கலாம்... தவறாகவும் இருக்கலாம்... தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடக்கின்றன. தனி புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்றம் அதை விசாரிக்க வேண்டும்.




வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் (குறுக்கிட்டு): தணிக்கைக் குழுவில் முறைகேடு நடப்பதாக அரசின் தலைமை வழக்கறிஞர் சொல்கிறார். அவர் சொல்வது தமிழக அரசாங்கமே சொல்வது போன்றதுதான். இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் மை லார்ட்.



அ.த.வ: எனக்கும் சட்டம் தெரியும். கடவுள் ஒருவரைத்தவிர இங்கு வேறு யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.


நீதிபதி: நீதிபதிக்கும் நீங்கள் பயப்பட மாட் டீர்கள் என்று சொல்கிறீர்கள் (நீதிமன்றத்தில் சிரிப் பொலி).


அ.த.வ.: நான் அப்படிச் சொல்லவில்லை மை லார்ட். இந்திய முஸ்லிம்களை தவறாக சித்திரிக்க வில்லை என்று மனுதாரர் சொல்வதை ஏற்க முடியாது. ஏனென்றால், ஆப்கன் முஸ்லிம், இந்திய முஸ்லிம் என்றெல்லாம் யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. உலகம் ஒரு கிராம மாகச் சுருங்கி உள்ள நிலையில், ஆப்கன் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்தால், அது இந்திய முஸ்லிம்களையும் பாதிக்கும். மேலும், இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் (கமல்) விற்று விட்டார்.



 இப்போது படத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. எனவே, அவர் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடி யாது. தியேட்டர் உரிமை​யாளர்கள் மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும். ஆனால், அவர்கள் எந்த வழக்​கையும் தொடுக்கவில்லை. எனவே, இவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.


தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன்: கருத்துத் தெரிவிக்கவும் வர்த்தகம் செய்யவும் மனுதாரருக்கு உரிமையை வழங்கி உள்ள அதே அரசியல் சாசனம்தான், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் கடமையையும் உரிமையையும் எங்களுக்கு வழங்கி இருக்கிறது. 'விஸ்வரூபம்’ திரைப்படத்தை வெளி யிடுவதால் நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். வெளியிட்டால் பல உயிர்களுக்கு சேதம் ஏற்படும். உயிரா? அல்லது பணமா? என்பதை நீதிபதி அவர்கள் முடிவு செய்து தீர்ப்பளிக்க வேண்டும்.



முஸ்லிம் அமைப்புக்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சங்கரசுப்பு: சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ராமர் பாலம் என்ற கருத் தைக் காரணம் காட்டி சிலர் பிரச்னை செய்தனர். அந்த உணர்வுக்கு மதிப்பளித்து, அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதே உணர்வோடுதான், இப்போது 'விஸ்வரூபம்’ திரைப்படத்துக்குத் தடை கேட்கிறோம்.



-இப்படியான இரண்டு தரப்பு வாதங்களும் மாலை ஆறு மணிக்கு முடிந்தது. அதன்பிறகு, தீர்ப்பை இரவு எட்டு மணிக்கு வழங்குவதாக சொன்ன நீதிபதி வெங்கட்ராமன், இரவு 10.15-க்குத் தீர்ப்பை வாசித்​தார். தீர்ப்பில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கலெக்​டர்கள் விதித்த தடை உத்தரவுக்கு தடை விதிக் கிறேன் என்றார்.



இரவோடு இரவாக, தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ் வீட்டுக்குச் சென்ற தமிழக அர சின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்.


இதனால், இந்த வழக்கு மறுநாள், (30-ம் தேதி) நீதிமன்றத்துக்கு வந்தது. அன்று இந்த வழக்கை தற் காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் முன்பு வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ''கலெக்டர்களின் தடை உத்தரவை எதிர்த்து இவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருக்கக் கூடாது. கலெக்டரிடம் சென்றுதான் முறையிட்டிருக்க வேண்டும். அங்கு  நிவாரணம் கிடைக்காத பட்சத்தில்தான் நீதிமன்றத்துக்கு வர வேண்டும். மேலும், தனி நீதிபதி அளித்த உத்தரவில் மனுதாரரின் கோரிக்கை மட்டுமே பரிசீலிக்கப்பட்டது. எதிர் மனுதாரர்களின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்றார்.




தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ், கமல் தரப்பு வழக்கறிஞரிடம்: கலெக்டரின் தடை உத்தரவு பற்றி நீங்கள் கலெக்டரிடம் ஏன் முறையிடவில்லை? எடுத்த எடுப்பிலேயே நீதி மன்றத்துக்கு வந்து, நீதிமன்​றத்தை ஏன் போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்று​கிறீர்கள்?



பி.எஸ்.ராமன்: திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை என்று சிறப்புச் சட்டம் இருக்கும்போது, அதைப் பின்பற்றாமல் தடை உத்தரவு என்ற தனிச்சட்டத்தைப் பின்பற்றி கலெக்டர்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனால்தான் நாங்கள் நீதிமன்றம் வந்தோம். தனி நீதிபதி உத்தரவு இப்போதுவரை நடைமுறையில் உள்ளது. ஆனால், போலீஸும் தாசில்தார்களும் 'விஸ்வரூபம்’ படத்தை திரையிடக்கூடாது என்று தடுத்து வருகின்றனர். இதனால், பல தியேட்டர்களில் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.



தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மாராவ்: இருதரப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் மனுதார ரின் கோரிக்கையின் அடிப்படையில் மட்டும் தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர் மனு தாரர்களிடமிருந்து அவர் எந்த விளக்கத்தையும் பெறவில்லை. எனவே, இந்த வழக்கில் வரும் திங்கள் கிழமைக்குள் அரசுத் தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விளக்கத்தைப் பெற்ற பிறகு தனி நீதிபதி, வரும் 6-ம் தேதியோ அல்லது வேறு தேதியிலோ இறுதி உத்தரவைப் பிறப்பிக்கலாம். அதுவரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.


பிப்ரவரி 6-ம் தேதியாவது 'விஸ்வரூப’த்துக்கு விடிவு பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!


- ஜோ.ஸ்டாலின்,


படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்




5. முதல்வர் ஜெயலலிதா பேட்டி முடிந்ததும் நம் முன் ஆஜர் ஆனார் கழுகார். 

'' 'விஸ்வரூபம்’ மேட்டர் நொடிக்கு நொடி விஸ்வரூபம் ஆகிக்கொண்டு இருப்பதுதான் இன்றைய ஸ்பெஷல் என்பதால், அதை முதலில் சொல்லி முடித்து விடுகிறேன்'' என்று பீடிகை போட்டபடி கழுகார் தொடங்கினார்.


'' 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிட 15 நாள் தடை என்பதைத் தொடர்ந்துதான் விவகாரத்தின் காரம் கூடியது. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்பதில் முஸ்லிம் அமைப்புகளைவிட, ஆட்சி யாளர்களும் போலீஸும் அதிக ஆர்வத்துடன் இருந்ததாகவே செய்திகள் பரவின. சேட்டிலைட் உரிமை என்றும் ப.சிதம்பரத்தை ஆதரித்து கமல் பேசினார் என்றும் எத்தனையோ தகவல்கள் றெக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலையேபடாமல், கமல் படத்தை எப்படியும் வெளியிட அனுமதித்துவிடக் கூடாது என்பதில் அரசாங்க வக்கீல்கள் காரியம் ஆற்றினர். நீதிபதி வெங்கட்ராமன் முன்பு ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் முடிந்தவரை தன்னுடைய அஸ்திரத்தை பிரயோகித்தார். 




ஆனால், படத்தை வெளியிடலாம் என்று அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்பே வந்தது. உடனடியாக, உயர் நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு அப்பீலுக்குச் சென்று தடை வாங்கினர். வரும் திங்கள் கிழமை வரை தடை இருக்கிறது. அதுவரை சினம் கொண்டவராக தனிமையில் வார்த்தைகளை அவிழ்த்துக் கொண்டு இருந்த கமல், வெளிச்சத்துக்கு வந்து பேச ஆரம்பித்தார். அவரது ரசிகர்களும் வீதிக்கு வர ஆரம்பித்தனர். நடிகர்களும் ஒவ்வொருவராக கமலை ஆதரிக்கத் தொடங்கினர். அரசாங்கம் நெருக்கடியைச் சந்திக்க இதுவே முக்கியக் காரணம் ஆனது.''


''ம்!''
''சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் பல ஊர்களில் படத்தை ஓட்ட ஆரம் பித்தனர். அப்போது, தியேட்டர்களுக்குள் புகுந்த போலீஸ் படை, 'உடனடியாக ஷோவை நிறுத்துங்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எங்களால் பாதுகாப்புத் தர முடியாது’ என்று கைவிரித்து படத்தை நிறுத்தினர்.




 அதுதான் கமல் மற்றும் சினிமா ஆட்களை வீட்டை விட்டு வெளியில் வர வைத்தது. தேர்தலில் பங்கேற்காத அமைப்பின் தலைவர் ஒருவர் கமலுக்கு ஆறுதல் சொல்லி பேசி இருக்கிறார். அப்போது, பல விஷயங்களைப் பேசிய கமல், தனக்கும் ஜெயலலிதாவுக்குமான சினிமா காலத்து அறிமுகங்களைச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அந்தத் தலைவர், கருணாநிதியிடம் இதைக் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார். இதைத் தொடர்ந்துதான் கருணாநிதி மிகநீண்ட அறிக்கை வெளியிட்டார்.




 அந்த அறிக்கையை முதலமைச்சரின் கவனத்துக்கு உளவுத் துறை கொண்டுபோய்ச் சேர்த்தது. 'கமல்ஹாசனை இவர்தான் தூண்டி விடுறாரா?’ என்ற அர்த்தத்தில் சீறி இருக்கிறார் ஜெயலலிதா. சில டெல்லி சேனல்கள், 'இது கமல்ஹாசனுக்கும் ஜெயலலிதாவுக்குமான யுத்தம்’ என்று ஃப்ளாஷ் போட ஆரம்பித்ததும், அவரது சீற்றம் அதிகரித்தது. உடனே, அறிக்கை வெளியிட ஜெயலலிதா தயார் ஆனார்.''


''அப்படியா?''


''நிலைமையின் சீரியஸ் உணர்ந்து தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்தை வியாழக் கிழமை காலை அழைத்துப் பேசினார். அறிக்கை விட்டால் மாலையில் வரும், மறுநாள் காலையில்தான் அது பொது மக்களை அடையும் என்பதால், பிரஸ்மீட் வைத்து அதை ஜெயா டி.வி-யில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார்.



 மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களை முதல்வர் கோட்டையில் சந்தித்தார். ஒரே ஒரு பிரச்னைக்காக தனியாக ஒரு பிரஸ்மீட் வைத்தாக வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா இறங்கி வந்ததையே அது காட்டியது. இறுக்கமான முகத்துடன் ஜாக்கிரதையான வார்த்தைகளுடன் பேசினார். '524 தியேட்டர்களில் 'விஸ்வரூபம்’ ரிலீஸ் ஆனால், அத்தனை இடத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு அரசிடம் ஸ்ட்ரென்த் இல்லை’ என்பதுதான் அவரது முக்கியமான விளக்கம்.




 ஜெயா டி.வி-க்கு சேட்டிலைட் உரிமை கொடுப்பதில் கமல் தடுமாறியதாகச் சொல்லப்படும் செய்தியை அவராகவே நிருபர்களிடம் சொன்னார். தனக்கும் ஜெயா டி.வி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அதனுடைய செயல்பாடுகளில் தான் தலையிடுவது இல்லை என்றும் சொன்னார். 



ப.சிதம்பரம், பிரதமர் ஆவது பற்றிய சர்ச்சையையும் அவரே மீடியாவிடம் சொன்னார். 'அதைச் சொல்வதற்கு கமலுக்கு உரிமை இருக்கிறது’ என்று சொன்னதோடு நிறுத்தி இருக்கலாம். 'யார் பிரதமர் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது 100 கோடி மக்கள்தானே தவிர, கமல்ஹாசன் அல்ல’ என்று கிண்டல் அடித்தார். 'பல கோடி போட்டு படம் எடுத்துள்ளேன் என்பது எல்லாம் அவரது சொந்தப் பிரச்னை’ என்றும் சொல்லி இருந்தார். ஒன்றிரண்டு துணைக் கேள்விகளுக்கு மட்டும் அனுமதித்து விட்டு, விறுவிறுவென உள்ளே போய்விட்டார்.''


''முதல்வர் பிரஸ்மீட் வைக்க வேறு ஏதாவது உள் காரணங்கள் இருக்குமா?''
''கமல் படத்தை வைத்து கிளம்பும் சர்ச்சைகள், ஆட்சி மீது அதிக அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது என்பதுதான் உண்மை. அதில் இருந்து தப்பிக்கும் வகையில்தான் முதல்வர் இந்தத் தன்னிலை விளக்கத்துக்கு முன்வந்தாராம். ஆட்சியாளர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறதா இல்லையா என்ற பட்டிமன்றம் மட்டும் தொடர்ந்து நடக்கிறது'


 நன்றி - ஜூ வி