Monday, December 17, 2012

மாத விடாய் - ஆவணப்படம் - அதிர்வ்லைகள்

முழுக்க முழுக்க பெண்களால் தயாரிக்கப்பட்ட ஆனால் ஆண்களுக்கான ஆவணப் படம் ஒன்றின் வெளியிட்டு விழா அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என தானம் அறக்கட்டளை நண்பர் சிவகுமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
ஆவணப்படத்தின் தலைப்பு- மாதவிடாய்

சமுதாயத்தில் பாதிக்கு பாதியாக இருந்து, தாயாக, மணைவியாக, சகோதரியாக, மகளாக வலம் வரும் பெண்களின், இந்த மாதாந்திர பிரச்னையை எத்தனை ஆண்கள் மகனாக, கணவனாக, சகோதரனாக, அப்பாவாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியுடன் துவங்குகிறது.

கேள்விக்கு உண்மையான விடை பூஜ்யம் என்றுதான் வரும், அதற்காக வருந்த வேண்டாம் சகோதரர்களே, இதுவரை எப்படியோ இனியாவது புரிந்து கொள்ளுங்கள், அந்த நாளில் பரிவுடன் நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி படம் ஆரம்பிக்கிறது.

மாதவிடாய் என்ற வார்த்தையை உபயோகிப்பதையே இன்னும் இந்த சமுதாயம் கேவலமாகவே நினைக்கிறது. வீட்டுக்கு "தூரம்' என்ற வார்த்தைகளிலேயே பெண்களை ஒடுக்குமுறை கொண்டு ஒதுக்குகிறது, எவ்வளவு நாகரிகம் பேசினாலும், எப்படிப்பட்ட செல்வந்தர்களாக இருந்தாலும், இன்னமும் அந்த நாட்களில் ஒதுக்கிவைக்கவும், ஒதுங்கிச் செல்லவும்தான் செய்கிறார்கள், பேட்டிகளில் பெண்கள் குமுறுகிறார்கள்.

இன்னமும் கிராமங்களில் "முட்டு வீடு' என்ற பெயரில் அந்த நாட்களில் பெண்கள் தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்தப்படுவதை ஆதாரத்துடன் காட்டும் போதும், அதனால் தாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறோம் என்பதை கிராமத்து பெண்கள் அழுதபடி சொல்லும் போதும், கண்ணீர் நம் பக்கம் இருந்தும் வருகிறது. இந்த "முட்டு வீட்டில்'அடைக்கப்பட்ட பெண்கள் பாம்பு கடித்த இறந்த நிஜக்கதையெல்லாம் உண்டு என பக்கத்தில் இருந்து நண்பர் பழனிக்குமார் சொன்னபோது அதிர்ச்சி இன்னும் அதிகமானது.

மாதவிடாய் என்பது அசிங்கமானதோ, அருவெறுப்பானதோ, புதிரோ, தீட்டோ அல்ல, தாய்ப்பாலை போன்று பெண்ணின் உடலில், ரத்தத்தில் ஊறும் இயற்கையான சங்கதி. இந்த அறிவியல் ரீதியான புரிதல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே இல்லை என்பதுதான் சோகம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆணுக்கு முகசவரம் செய்ய தேவைப்படும் "ரேசர்' போலத்தான் பெண்களுக்கு இந்த நாப்கின், ஆனால் இந்த நாப்கின் வாங்கிவரவோ, தரவோ ஏன் இவ்வளவு கூச்சம், அதை ஒரு செய்திப் பேப்பரில் சுருட்டி, கருப்புகலர் பாலீதீன் பையில் ரகசியமாக வைத்து கொடுக்கும் கெட்ட பழக்கத்தை எப்போது விடப்போகிறார்கள்.

டி.வி.,களில் பிரமாதமாக நாப்கின் பற்றி விளம்பரம் செய்யப்பட்டாலும் உண்மையில் எண்பது சதவீத இந்திய பெண்கள் துணிதான் உபயோகிக்கிறார்கள், ஆனால் இந்த ஆண்களுக்கு பயந்து அந்த துணியை சரியாக உலர்த்தாமல், சுத்தம் செய்யாமல் அணிவதால் எத்தனை பேர் கர்ப்பப்பை வாய் புற்று நோய் வரைக்கும் உள்ளாகிறார்கள் தெரியுமா? என்ற கேள்வி எழும்போது கூடவே அதிர்ச்சி ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

நாப்கின் உபயோகிக்கும் பெண்களுக்கு அவர்களுக்கான கழிப்பறைகளில் அதற்கான அடிப்படை வசதி ஏற்படுத்தி தந்து இருக்கவேண்டும். ஆனால் அப்படி எங்குமே இல்லை, வெறும் ஆவண படம் எடுப்பதுடன் நின்று விடாமல், ஒரு படி மேலே போய் அரசு அலுவலகங்களில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகளில் மாதவிடாய் தேவைகள் என்ன செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட போது, அப்படி ஒரு வசதியும் செய்து தரப்படுவதில்லை என்பதே பதிலாக வந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் காட்டும் போது பார்க்கும் நமக்கு வெட்கமாக இருக்கிறது.

அவ்வளவு ஏன் சட்டம் இயற்றும் சட்ட மன்ற கட்டிடத்திலேயே இந்த அடிப்படை வசதி இல்லை என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, இவரைப் போல 55 பெண்கள் தங்களது கருத்துக்களை வலுவாக பதிந்துள்ளனர். "அம்மா உங்க புடவையில கறை' என்றதுமே ஏதோ குற்றம் செய்துவிட்டது போல பதறிப்போவோம், இனி அந்த பதற்றமே கூடாது என்றும் கூறுகிறார்.

வீடுகளில், அலுவலகங்களில் இருக்கும் பெண்களுக்கு இது மாதிரி பிரச்னை என்றால், களப்பணியாற்றும் பெண் போலீசாரின் நிலமை இன்னும் மோசம், சாதிக்கலவரம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பெண் போலீசார் அவசரம் கருதி ஏதேனும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டால் போலீஸ் அந்த சாதிக்கு ஆதராவாயிடுச்சுன்னு சொல்லிவிடுவர் என்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி திலகவதி.

மகளுக்கு விதம், விதமாக நகைகள் வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பதைவிட அவளின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண விழையுங்கள், பொன் நகை ஏற்படுத்தாத புன்னகை அவள் முகத்தில் தவழும்.

மகப்பேறு, குழந்தை வளர்ப்பு போல மாதவிடாயும் பொம்பளைங்க சமாச்சாரம் என ஒதுக்கிவைக்கும் ஆண்களே இனியும் அப்படி இருக்காதீர்கள், அது உங்கள் ஆண்மைக்கே அழகல்ல, மேற்சொன்ன அனைத்திலும் உங்களுக்கு ஆழமான பொறுப்பு உண்டு, என்று அழுத்தந்திருத்தமாய் சொல்லி முடிகிறது ஆவணப்படம்.

படம் முடிந்த போது ஏற்பட்ட கைதட்டலைவிட, ஏற்புரையாக இயக்குனர் கீதா இளங்கோவன், "இந்த படத்தை இரண்டு வருடங்களாக திட்டமிட்டு எடுத்தோம், இருந்தாலும் இந்த ஆவண படத்தை யார் கேட்டாலும் இலவசமாக தர தயராக உள்ளோம் காரணம் விஷயம் நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் போய்ச் சேரவேண்டும்' என்று கூறிய போது எழுந்த கைதட்டல் அதிகம்.

மாதவிடாய் பற்றிய இலவச டிவிடிக்கும் மற்ற விளக்கங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9443918808.
 நன்றி - தினமலர்


ஊமை விழிகள் (1986) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiew_AFBWzfRHkC41B7iF6xjeACIA3xTSV_XlfomevaabigV3KV1xA2UvZ2wen7sxRD3xBvD6M5IAfiROTiRhmzKfOVfIQh-kGrl4lkGxfRCzukK01UDHaRK_MJW15rruuDu611lNRF2Jo/s1600/a3.jpgதிரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆர்ட் ஃபிலிம் தான் எடுப்பாங்க, கமர்ஷியல் சினிமா அவங்களுக்கு செட் ஆகாது என்றிருந்த காலகட்டத்தில் 1986 இல் ரிலீஸ் ஆகி அந்த எண்ணத்தை , தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டிய படம் தான் இந்த ஊமை விழிகள் .பல பிரம்மாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் .

வில்லன்ஒரு 60 மார்க் ஃபிகரை லவ் பண்றார்.அது சஹானா மாதிரி வேற ஒருத்தன் கூட ஓடிடுது. உடனே அவருக்குப்பொண்ணுங்கன்னாலே வெறுப்பு. தன் காதலி கண்கள் பேசிப்பேசி தன்னை மயக்குச்சு. அந்த பாதிப்பில் கண்ணில் பட்ட பெண்களை  கொலை பண்ணி அவ கண்களை எடுத்து வெச்சுக்கும் சைக்கோ பார்ட்டி. சட்ட சிக்கல்களை தவிர்க்க ஒரு பாதுகாப்புக்கு ஒரு அமைச்சரை பார்ட்னர் ஆக்கிக்கறார். ஃபிகர் மினிஸ்டர்க்கு , மேட்டர் முடிச்சதும் கண் இவருக்கு. 

 இந்த விஷயம் ஒரு  பத்திரிக்கை அம்பலப்படுத்துது. எந்த விதப்பின்புலமும் இல்லாத சாதா பத்திரிக்கை. அதை ஒடுக்க நினைக்கறார் வில்லன். அந்த பிரஸ்க்கு ஒரு டி எஸ் பி உதவி பண்றார். வில்லனுக்கு எதிரா அவர் நிகழ்த்தும்போராட்டம் தான் மிச்ச மீதி திரைக்கதை .


படத்தோட ஓப்பனிங்க்கே ஒரு வித அமானுஷ்யமான இரவில் கொண்டாட்டமான பாட்டோட ஆரம்பிக்குது. ராத்திரி நேரத்துப்பூஜையில்  ரகசிய தரிசன ஆசையில் ஆ ஆ அது சுக வேதனை ( இதுல எதுக்கு 2 ஆ? ) . மனோஜ் கியான் + ஆபாவாணன் இணை இசையில் கலக்கலான பாட்டு. 


 பாட்டு முடிஞ்சதும் கொலை  அப்போ டாப் கீர்ல போற படம் க்ளைமாக்ஸ் வரை செம ஸ்பீடு .


நேர்மையான , வறுமை நிலையில் உள்ள பத்த்ரிக்கை ஆசிரியரா ஜெய்சங்கர். ஆல்ரெடி இவர் சொல்வதெல்லாம் உண்மைல இதே ரோல்ல நடிச்சிருப்பாரு , நல்லா சூட் ஆகி இருக்கு. 

 சந்திர சேகர்  ஜெய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவரா வர்றாரு. நல்ல நடிப்பு . கத்திக்குத்து வாங்கி துடிக்கும் இடத்தில் நிஜமாவே குத்திட்டாங்களோன்னு நினைக்க வைக்கும் அநாயசமான உயிரோட்டமான நடிப்பு 


வில்லனாக ரவிச்சந்திரன் . செம்பட்டை விக் , தாடில இவர் குதிரை வண்டில ஏறும்போதே செம திகில். 

மலேசியா வாசுதேவன்  மினிஸ்டர் வில்லன். மினிஸ்டர்னாலே வில்லன்க தானே?  கலகலப்பான நடிப்பு 

 டி எஸ் பி தீனதயாளன். பேருக்கேத்த கம்பீரமான நடிப்பு கேப்டனோடது. படம் போட்டு  50 நிமிஷம் கழிச்சு ஹீரோ எண்ட்ரி . ஈரோடு பாரதி தியேட்டர்ல ரிலீஸ் டைம்ல என்னா ஒரு கைதட்டல். இந்தப்படத்திற்குப்பின் கேப்டன் அட்டகாசமான அப்ளாஸ் வாங்கியது கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டில் தான்  .மனைவி சரிதா இறந்ததும் கதறும்போதும் சரி , புலன் விசாரணையில் கம்பீரம் காட்டும்போதும் சரி அனுபவம் மிக்க நடிப்பு .


இது போக அருண் பாண்டியன், கோகிலா, சசிகலா, கார்த்திக் இன்ன பிற நடிக நடிகைகளும் உண்டு .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ5NGu-eoWt8o100ity5M8bIIuw8ry3AZpTAz_U2-z0JwmP0PUJtL86HyXWHetu8mksGrRX5QPavmjEDFrUCHbe1LMdcjyOwdJ-vmmaBb5S_VbTWPecroygxwrLpDrd4yov1fZyszjpR8/s1600/o5.jpg


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. க்ரைம் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஒரு ஸ்பீடு பிரேக்கர்கள் என்ற விதியை உடைத்து  3 மணி நேரப்படத்தில் தைரியமாக 6 பாடல்கள்  சூப்பர் ஹிட்  ஆக்கியது. ராத்திரி நேரத்துப்பூஜையில் செம குத்து சாங்க் , கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் சோக மெலோடி , தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?  இன்றளவும் நிலைத்து நிற்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு ,மாமரத்துப்ப்பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடப்வா கிளு கிளு முதல் இரவுப்பாட்டு ,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி  தத்துவ பாட்டு , குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப்பேச்சு  ரகளையான பாட்டு என எதுவுமே  குறை சொல்ல முடியாத பாட்டு. 



2. ரவிச்சந்திரனின் வில்லன் கெட்டப் , பாடி லேங்குவேஜ் திகில் ஊட்டும் விதமாய் அமைத்தது . அவர் கேரக்டரை கடைசி வரை சஸ்பென்சாக காட்டியது 


3.. ஆர்ட் டைரக்‌ஷன் அட்டகாசம் . அந்த வில்லன் பங்களாவே திகிலைத்தரும். அந்த மணி அடிக்கும் கிழவி , பாதிரியார் என   மர்மம் கிளப்பும் முகங்கள் அருமை

4.  ஜெய் சங்கரின் பத்திரிக்கை ஆஃபீஸ் ஸை ரொம்ப டீட்டெயிலாக காட்டியது , படத்தோட ஒன்ற வைத்து இருந்த முக்கியக்காரணி 


5. க்ளைமாக்சில் 67 ஜீப்கள் லைனாக வருவது , ஆரம்பத்தில் ஒரே ஒரு லைட்டை மட்டும் காட்டி அது அப்படியே  பிரிந்து  பிரம்மாண்டமான அணி வகுப்பாய் வரும் காட்சி பர பரப்பாக அப்போது பேசப்பட்டது இதுவரை தமிழ் சினிமாவில் அந்த காட்சியை ஓவர் டேக்க இன்னும் எந்தபப்டமும் வரவில்லை



http://padamhosting.com/out.php/i94153_7.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்( ஆர் அர்விந்த்ராஜ் பிஎஸ் சி டி எஃப் டெக் )



1. படத்துல லேடீசை துரத்தும் குதிரை  க்ளோசப்ல 70 கிமீ வேகத்துல பாயுது , துரத்தப்படும் பெண்கள் 7 கி மீ வேகத்துல ஓடுறாங்க. ஆனா 10 நிமிஷம் அந்த சேசிங்க் சீன் வருது . லாங்க் ஷாட்ல காட்டும்போது வேகம் கம்மியா ஆகிடுது . பார்க்கும்போது திகிலா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சா.... 



2. பத்திரிக்கைக்காரர் அந்த மர்ம பங்களாவுக்கு வந்து அந்த கிழவையை ஃபோட்டோ எடுக்கறதைக்கூட ஒத்துக்கலாம். பாட்டிக்கு விபரம் தெரியாது, படிப்பறிவு இல்லை, அதனால கண்டுக்கலைன்னு . ஆனா அந்த பாதிரியார் படிச்சவர் ஆச்சே .( பாதிரியாரைக்கொன்று பாதிரியார் ஆன வில்லனின் எடுபுடி ) அவர் எப்படி ஃபோட்டோ எடுத்தப்ப எதுவும் சொல்லலை? பிடிங்கி இருக்க வேணாமா? அல்லது அப்போவே போட்டுத்தள்ளி இருக்க வேணாமா? 


3. நேர்மயான , தன் தொழிலை தெய்வமாக மதிக்கும் எடிட்டர் ஜெய்சங்கர் டியூட்டி டைம்ல தம் அடிக்கறார்/ அதுவும் சக பணியாளர்கள் முன். எனக்குத்த்தெரிந்து  விகடன் , குமுதம் உட்பட எந்த ஒரு பத்திரிக்கை எடிட்டரும் ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ்க்குள்  அப்படி தம் அடிக்கறதில்லை.



4. அருண் பாண்டியன் கோகிலா கிட்டே இது இது  பத்திரிக்கை நிருபர் வீடுதானே> என கேட்கும் இடம் ரொம்ப அமெச்சூர் நடிப்பு . இயக்குநர் கவனிச்சு அதை ரீ சூட் பண்ணி இருக்கலாம் .



5.  ஹவுஸ் ஓனர் பொண்னு வீட்டில் நைட் சாப்பிடுது . அப்போ அருண் பாண்டியன் பட்டினியா இருப்பதா வசனம் பேசுவது கேட்டு சாப்பிடும் தட்டில் கை கழுவறார்.அத்தனை சாப்பாடும் வேஸ்ட். அதை சாப்பிட்டுட்டு அவருக்கும் சாப்படு எடுத்துட்டுப்போய் கொடுத்தா மேட்டர் ஓவர். அதே சீனில்  ஒரு சின்னக்குண்டாவில் சாப்பாடு இருக்கும். ஒரு டம்ளர் அளவு அரிசியில் சமைச்ச சாப்பாடுதான் இருக்கும். அவங்க அம்மா , அப்பா சாப்பிட அது போதுமா?ன்னு யோசிக்கும்போதே சந்திர சேகர் , அருண் 2 பேரையும் கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுவாங்க , அதே குண்டா , ஆனா சாப்பாடு மட்டும் நிறைய இருக்கும் 



6. பேங்க் மேனேஜர் ஜெய்சங்கர்க்கு ஃபோன் பண்ணி “ பர்சனல் மேட்டர் 1 பேசனும் , மாலை விட்டுக்கு வா’ன்னு கூப்பிடறார். அங்கே போனதும் “ பேங்க் லோன் டியூ கட்டவே இல்லை , ஒரு வாரம் டைம் , கட்டலைன்னா சீஸ் பண்ணிடுவேன்னு சொல்றார். இதுதான் பர்சனலா? இது பேங்க்  மேட்டர். பேங்க்லயே சொல்லி இருக்கலாமே? 


7. பத்திரிக்கை ஆஃபீஸ்ல கரண்ட் போயிடுது 12 மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கறாங்க. மீட்டிங்க் நடக்குது. ஆனா அந்த சீனில் லைட்டிங்க் அப்பட்டமா காட்டிக்குடுக்குது. அதே ஷாட்டில் கரண்ட் வந்த பின் வெளிச்சம் அப்படியே தான் இருக்கும் . செம காமெடி 


 8. இளவரசியை ரேப்போ , மர்டரோ அவர் வீட்டிலேயே பண்ணி இருக்கலாம். ஒரு கார் நிறைய ஆள் அனுப்பி பில்டப் கொடுத்து மலேசியா வாசுதேவன் வீட்டுக்கு வர வெச்சு  ரிசைன் லெட்டர் டைப் பண்ணச்சொல்லி அதுக்குப்பின் ரேப் அண்ட் மர்டர் பண்ணுவது ரொம்ப நீலமான சாரி நீளமான காட்சி 


9. கொலை நடந்ததுக்கான சாட்சியா வர்ற விசு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி செஞ்சாரா?  அவர் சாதாரண சாட்சி தான் . அவர் எப்படி ஒரு டி எஸ் பி தோள்ல கை போட்டு பாராட்ட முடியும்? பேச முடியும். அது கூடப்பாரவாயில்லை,. டி எஸ் பி  தான் போடும் ரகசிய பிளானை  சந்திரசேகர், ஜெய் சங்கர்க்கு விளக்குவது ஓக்கே ,. ஏன்னா அவங்க ஃபீல்டு ஒர்க் பண்றாங்க . ஆனா சமப்ந்தமே இல்லாம விசு எதுக்கு அங்கே? அதே போல் பிரஸ் மீட்டில் விசு என்னமோ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஐ ஜி மாதிர் பில்டப் கொடுப்பது ஓவர் . அவர் ஒரு சாட்சி . அவ்ளவ் தான்


10. கார்த்திக்கை தலையில் தாக்கும் வில்லன் அப்படியே அவரை விட்டுட்டு சசிகலாவைதூக்கிட்டுப்போறாரே? அவரை கண்ணால் கண்ட சாட்சியை கொலை பண்ணிட்டு , உயிர் அடங்கியாச்சா?ன்னு செக் பண்ணிட்டுத்தானே போகனும்?


http://i.ytimg.com/vi/gRfRUIAPGW8/0.jpg


11. ஓப்பனிங்க்ல அருண் பாண்டியன் 7 ரவுடிகளை ஒரே ஆளா அடி பின்றார்.சந்தோஷம் . ஆனா க்ளைமாக்ஸ்ல நடக்கும் ஃபைட்ல 4 பேர் அவரை சூழந்த்தும் ஒரு ஆளைக்கூட ஒரு அடி கூட அடிக்கலை .



12.  வில்லன் பொண்ணுங்களை ரேப் பண்றார். இன்னொரு வில்லன் கொலை பண்றார். இதுல என்ன ஆதார டாக்குமெண்ட்ஸ் இருக்கும்? ஜெய்சங்கர் க்ளைமாக்ஸ்ல ஆதார டாக்குமெண்ட்ஸ் பேப்பர்ஸ்னு ஒரு கத்தைப்பேப்பர் எடுத்துட்டு வர்றார். ஆராசா வழக்குல கூட அவ்வளவு டாக்குமெண்ட்ஸ் இருக்காது . டெண்டர் விட்டது ,ரகசிய ஒப்பந்தம்னு இருந்தாலாவது அத்தனை பேப்பர்ஸ் காட்ட அர்த்தம் இருக்கு


13. பத்திரிக்கையாளர் மீட்டிங்க்கில் டி எஸ் பி தீனதயாளன் வழக்கமா உங்க பத்திரிக்கை எப்போ வரும்னு கேட்கும்போது எல்லாருமே அதிகாலை 4.30க்கு லாஸ்ட் நியூஸ் ,  காலை 6 மணிக்கு பேப்பர் வரும்கறார், ஆனா உண்மையில் தினத்த்ந்தி உட்பட எல்லாப்பத்திரிக்கைகளுக்கும் லாஸ்ட் நியூஸ் அப்டேஷன் நடு நிசி 12 மணி , பேப்பர் ரிலீஸ் @ அதிகாலை 3.30 தான்


14. வில்லன் ரவிச்சந்திரன் பொம்பளைப்பித்தன் அல்ல, பெண்ணின் கண்ணை எடுப்பவன். அவனை வலை வீசிப்பிடிக்க சும்மா ஒரு பெண் அந்த ஏரியாவில் போனால் போதும் . எதுக்கு கோகிலாவை ஸ்விம்மிங்க் டிரஸ்ல அனுப்பனும்>



15. எந்தக்காதலனும் தன் காதலியை பகடைக்காயா அதுவும் ஸ்விம் டிரஸ்ல அனுப்ப ஒத்துக்க மாட்டான், அதுவும் படம் பூட்ரா பாவாடை தாவணி அல்லது சேலையில் வரும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கேர்ள் சிட்டி பொண்ணு மாதிரி எந்த தயக்கமும் இல்லாம ஸ்விம் டிரஸ்ல போக ஓக்கே சொன்னது எப்படி?


16. கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சசிகலாவை டி எஸ் பி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கிறார். கேசில் சமப்ந்தப்பட்ட சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட பின்பு கூட அவர் உஷார் ஆகி தன் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் 2 போலீஸ் கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பு இல்லை அவர் பங்களாவில் . சர்வ சாதாரணமாக வில்லன் குரூப் அவர் மனைவியை கார்னர் பண்ணறாங்க


17. தவறான நடத்தை உள்ள காதலியால் மன நலன் பாதிக்கப்படும் வில்லன் பழி வாங்க அதே போல நடத்தை தவறும் பெண்களை மட்டும் தானே கொல்லனும்? கண்ணுக்கு சிக்குன ஃபிக்ரை எல்லாம் கொலை செய்வது என்ன லாஜிக்?


18 சந்திரசேகர் வயிற்றில் ஆழமான கத்திக்குத்து வாங்குனதும் ஒரே ஒரு பெட்ஷீட்டை செந்தூரப்பூவே கேப்டன் மாதிரி போர்த்திக்கறார். அப்படிப்பண்ணுனா ரத்தம் நிக்குமா? டைட்டா ஒரு துணி போட்டு கட்டவே இல்லை




19. ஆனானப்பட்ட  ஆ ராசாவை அரெஸ்ட் பண்ணவே 10 போலீஸ் தான் போனாங்க. ஆனா வில்லன் சிங்கிளா இருக்கார். அவர் கிட்டே அடியாளுங்க யாருமே இல்லை, அவரை அரெஸ்ட் பண்ண எதுக்கு அத்தனை அமளி துமளி? எதுக்கு 67 ஜீப் ?



20. லாங்க் ஷாட்ல காட்டும்போது 67 ஜீப்பிலும் ஒரே ஒரு டிரைவர் தான் இருக்கார் . ஆனா வில்லன் மாளீகையை எண்ட்டர் ஆனதும் ஒவ்வொரு ஜீப்பில் இருந்தும் 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் இறங்கறாங்க, எப்படி?



21. ஒரு பேச்சுக்கு 80 போலீஸ் தேவை என்றே வைத்துக்கொண்டாலும் 20 ஜீப் போதாதா?  20 * 4 = 80 .

22. கோகிலா கிட்டே கேப்டன் “ இந்த கேசோட திருப்பு முனையே நீங்க அந்த குதிரைக்காரரை பேச வைப்பதில்தான் இருக்கு” அப்டினு ஒரு பில்டப் டயலாக் விடறார். ஆனா கோகிலா அந்த  குதிரைக்காரரை பார்த்து  எந்த ரிஸ்க்கும் எடுக்காமயே அவர் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுடறார்


23. குதிரைக்காரரை வில்லன் ஏன் ஓப்பனிங்க்லயே கொலை பண்ணலை? அவர் பேத்தியை கொலை பண்ணினது அவருக்குத்தெரிஞ்சிடுச்சுன்னு வில்லனுக்குஹ்ட்தெரிஞ்சுடுச்சு . சாட்சியாவோ , பழி வாங்கும் ஆபத்தாகவோ அவர் மாறுவார்னு வில்லனால் யூகிக்க முடியாதா?


24. வீட்ல வயசுப்பொண்ணை வெச்சிருகறவர் பிரம்மச்சாரி சந்திரசேகர்க்கு எப்படி வீடு கொடுத்தார்? சென்னைல பிரம்மச்சாரிக்கு வீடே கிடைக்காது. ஹவுஸ் ஓனருக்கு அழகான சம்சாரமும், வயசுப்பொண்ணும் இருந்தா கேட்கவே வேணாம். ஆனா இவர் சந்திரசேகரையும் அலோ பண்ணி அவரோட ஃபிரண்ட் அருண் பாண்டியனையும் அலோ பண்ணி தன் பொண்ணு கையால சோறெல்லாம் போடறாரு ஹி ஹி


25. படத்துக்கு முக்கியத்திருப்புமுனையே வில்லனோட  காதலி சஹானாவா மாறுவதுதான் , வில்லன் சஹானா வா பார்ப்பதை காட்சியா காட்டி இருகனும் , முதல் 2 கொலையா வில்லனின் காத்லி , அவ கள்லக்காதலன் இருவரையும் கொலை பண்ரதை காட்டி இருக்கனும்

http://img822.imageshack.us/img822/9797/vlcsnap2011111808h24m54.png



சி.பி கமெண்ட் - பார்த்தே ஆக வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம், பெரும்பாலானோர் பார்த்திருப்பீங்க, பார்க்காதவர்கள் பார்த்துடுங்க .

http://www.shotpix.com/images/58364948498597659820.png
 சில சுவாராஸ்யமான செவி வழித்தகவல்கள்


1. இந்தபடத்தில் ஹீரோவாக நடிக்க உச்ச நட்சத்திரங்கள் இருவரைக்கேட்க ஃபிலிம் ஸ்டூடன்ட்ஸ் என அவர்கள் தயங்க  3 வது  ஆளாக  கேப்டன் ஒத்துக்கொண்டார்.



2. ரவிச்சந்திரன் நடித்த வில்லன் கேரக்டரில் முதலில் புக் ஆனவர் நாகேஷ். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது . அப்படி நடிச்சிருந்தா அபூர்வ சகோதரர்கள் க்கு முன்பே அவர் வில்லன் ஆகி இருப்பார் .



3. இந்தபப்ட ரிலீசின் போது போஸ்டரில்  விஜய் காந்த் படமே ஸ்டில்ஸாக பேப்பர் விளம்பரங்களில் இருந்தது. படம் மெகா ஹிட் என்றதும் வகை வகையாக அருண் பாண்டியன் - கோகிலா ஸ்டில்ஸ் அதிகம் வந்தது . அது கேப்டனுக்கு பிடிக்கவில்லை



4. கண்மணி நில்லு காரணம்  சொல்லு பாடல் காட்சி  பட ரிலீசின் போது  இல்லை, எடிட்டிங்கில் கட். படத்தின் நீளம் கருதி ( 165 நிமிடங்கள் ) பாட்டை கட் பணிட்டாங்க , பின் 25 வது நாளில் பாடல் இனைக்கப்பட்டு போஸ்டர்களில்  இன்று முதல் இப்பாடல் இணைக்கப்பட்டு என விளம்பரம் வந்தது


5. இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கார்த்திக் குக்கு நோ சம்பளம் , அதுக்குப்பதிலாக சசிகலாவுடன் ஸ்டோரி டிஸ்கஷன் ஹி ஹி


6 படத்தின் டைரக்டர் ஆர் அர்விந்த்ராஜ் தான் நடிகை விஜியை லவ் பண்ணி மேட்ட்ரை முடிச்சுட்டு அல்வா குடுத்தவரு , காதல் தோல்வியில் விஜி தற்கொலை பண்ணிக்குச்சு , நல்ல வேளை லெட்டர் எதும் எழுதி வைக்கலை அண்ணன் எஸ் ஆகிட்டாரு


7 . இதன் 2ஆம் பாகமாக மூங்கில் கோட்டை வருவதாக  இருந்தது , சில காரணங்களால் வரவில்லை


http://cdn5.supergoodmovies.com/FilesFive/oomai-vizhigal-to-be-remade-db4bacf7.jpg



Directed by R. Aravindraj
Produced by Abhavanan
Written by Abhavanan
Starring Vijayakanth
Arun Pandian
Chandrasekhar
Jaishankar
Karthik
Music by Manoj Gyan
Cinematography A. Ramesh Kumar
Editing by G. Jayachandran
Release date(s) 15 August 1986
Running time 176 minutes
Country India
Language Tamil
http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2012/05/Oomai-Vizhigal.jpg

லெஸ்பியன் போஸ் கொடுத்ததில் தப்பேதும் இல்லை" - நீது சந்திரா பேட்டி வீடியோ

நன்றி - விகடன்,யூடியூப், நீதுசந்த்ரா

உலக சாதனை - அந்தமான் ஆர்யன் - எவரெஸ்ட் சிகரம்

எவரெஸ்ட் சிறுவன்

வாவ் ஆர்யன்!

ரமணன்

நினைவிருக்கிறதா... ‘ஆனந்தபுரத்து வீடுபடத்தில் சுருட்டை முடி தலையோடு திகிலூட்டிய சிறுவன் ஆர்யனை? அதன் பிறகு பல விளம்பரப் படங்களில் நடித்துவிட்ட இந்தக் குட்டிப் பையனுக்கு இப்போது வயது ஏழு. பெற்றோருடன் அந்தமானில் வசிக்கும் ஆர்யன் இந்த ஆண்டு 17,300 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட்டின் பேஸ்கேம்ப் வரை மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறார்.  



உலகிலேயே இப்படி ஒரு சாதனையைச் செய்த சிறுவன் ஆர்யன் தான். நேபாளத்தின் 17900 அடி உயர (நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் போகும் வழியில் இருக்கும்) கல்பத்தர் சிகரத்தில் ஏறி நமது தேசியக் கொடியை நட்டுவைத்து மற்றோர் உலக சாதனையையும் படைத்திருக்கிறார் இந்தத் தமிழ்ப் பையன்.


ஆர்யனின் தந்தை ஸ்ரீநிவாஸ் பாலாஜி இந்தியக் கடற்படை கமாண்டர். தற்போது அந்தமானில் வேலை. இவர் அடிப்படையில் மலையேற்ற வீரர். பூமியின் வட துருவத்தில் ட்ரெக்கிங் செய்தவர். அம்மா ரிக்கியும் அடிக்கடி ட்ரெக்கிங் செல்பவர். பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து டைவ் அடித்தவர்.  


பெற்றோருடனும் ஒரு ஷெர்பா கைடுடனும் எவரெஸ்ட் பேஸ்கேம்ப் வரை ஏறி இருக்கிறார் ஆர்யன். அந்தமான் லெப்டினட் கவர்னர் வாழ்த்தி வழியனுப்ப 250 கி.மீ. பயணத்தை இருபத்துரெண்டு நாட்களில் கடந்திருக்கிறார். கூட பயணித்த புனேவைச் சார்ந்த இன்னொரு மலையேற்றக் குழுவினர் சிலர் களைத்துப்போய் மலையேற்றத்தைக் கைவிடும் நிலையிலிருந்தபோது ஆர்யனைப் பார்த்து ஊக்கமடைந்து தொடர்ந்திருக்கிறார்கள்.


பேஸ்கேம்பில் மைனஸ் 22 டிகிரி குளிரில்கூட பாடல் பாடி அந்தக் குழுவினரை மகிழ்வித்திருக்கிறார் ஆர்யன். எப்படி இந்தச் சிறுவனால் முடிந்தது?


காஷ்மீர், ஹிமாலசலப் பிரதேசத்தின் கடும் குளிர்ப்பகுதிகளில் தங்கவைத்துப் பயிற்சி அளித்திருந்தாலும் அவன் மனோ திடம் எங்களை ஆச்சர்யப்படுத்துகிறது," என்கிறார் தந்தை பாலாஜி. மலையேறுவதில் மட்டுமல்ல நீச்சலிலும் ஆர்யன் கில்லாடி


 அந்தமான் ஆழ்கடலில் 25 அடி ஆழத்தில் ஒரு மணி நேரம் நீந்தி பிரமிக்க வைத்திருக்கிறான். ஏழு வயதுக்குள் எவரும் செய்யாத உலக சாதனை இது. இம்மாதிரி சாகசங்களுக்கு மூச்சு பிடிக்கும் திறன் அதிகம் வேண்டும். அணிந்து கொள்ளும் ஆக்ஸிஜன் ஹெல்மெட் 25 கிலோ எடை என்பதால் 12 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. சிறப்பு அனுமதி பெற்று இதைச் செய்திருக்கிறார் ஆர்யன்.



நிறைய அழகான கலர் மீன்களுக்கு நடுவே நடப்பது ஜாலியாக இருந்தது. அம்மாவுக்காக ஓர் அழகான கலர் சிப்பி எடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் ட்ரெயினர் எதையும் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்" என்கிறார் ஆர்யன்.


ஆர்யன் படிப்பிலும் சுட்டி. இரண்டாம் வகுப்பு. எல்லா பரீட்சைகளிலும் முதல் ரேங்க். மியூஸிக், டான்ஸ் ஸ்கேடிங், சைக்கிளிங்... எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறான்"- பெருமைப்படுகிறார் அம்மா ரிக்கி. இவர் மலை ஏற்றம், காட்டாற்றுப் படகுப் போட்டி, டைவிங் போன்ற சாகஸ விளையாட்டுகளைத் திட்டமிட்டு நடத்திக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


ஆர்யனின் அப்பா பாலாஜி கடலூர் மாவட்ட கலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போதும் அவருடைய பெற்றோரும் உறவினர்களும் அங்கு வசிக்கிறார்கள். ஆர்யன் தாத்தாவுடனும் மாமாவுடனும் தமிழில் பேசுகிறான். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் பிராண்ட் அம்பாஸிடரான ஆர்யன், போலியோ ஒழிப்புக்காக நேபாள அரசின் சிறப்பு விளம்பரத் தூதுவரும்கூட.


கடந்த மாதம் தமிழக கவர்னர் ரோசய்யா இந்தச் சிறுவனை ராஜ்பவனுக்கு அழைத்து கௌரவித்து இருக்கிறார். இந்த ஆண்டு டிசம்பரில் கிளிமஞ்சரோ சிகரத்தையும், 2017இல் எவெரஸ்ட் சிகரத்தையும் தொட திட்டமிட்டிருக்கிறது இந்தக் குடும்பம். இந்த ஆண்டு கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம் பெறப்போகும் இவனின் சாதனையை தமிழக சேனல்களும் மீடியாவும் கண்டுகொள்ளவில்லை என வருந்தும் பெற்றோர் தமிழக முதல்வரிடம் மகனை அறிமுகப்படுத்த நேரம் கேட்டுக் காத்திருக்கிறார்கள்.


ஆர்யனை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் நாகா:

அறையில் நான் கம்ப்யூட்டரில் பிஸியாக இருந்த போது குடுகுடுவென ஓடி வந்து, ‘ ஆம் ஆர்யா , வாட் இஸ் யூவர் நேம்?’ எனக்கேட்டு மடியில் உட்கார்ந்த போது, ஆர்யனுக்கு வயது மூன்றரை. ஆனந்தபுரத்து வீடு படத்துக்காகப் பல குழந்தைகளைப் பார்த்துத் திருப்தியில்லை. ஒரு மாடல் கோ ஆர்டினேட்டர் அனுப்பிய குழந்தை இவன். நான் என் பெயரைச் சொன்னவுடன், ‘ யூ ஆர் டைரக்டர்எனச் சொல்லி என் கம்ப்யூட்டரில் என்ன கேம்ஸ் எல்லாம் இருக்கு எனப் பேசத் தொடங்கி விட்டான்.


படத்தில் அந்தக் குழந்தை கேரக்டர் மிக அழுத்தமானது. நான் சொல்வதைப் புரிந்து சிரமமில்லாமல் செய்து முழு யூனிட்டையே வியக்க வைத்த பையன் ஆர்யன். திறமைகளை வெளிக்காட்ட திறமை வேண்டும். அது ஆர்யனுக்கு இயல்பாகவே இருக்கிறது.

நன்றி - கல்கி , புலவர் தருமி

மிஸ், நீங்க சொந்தமா மெஸ் வெச்சிருக்கீங்களா?


செய்தி: //மாணவர்கள் படியில் பயணம் செய்தால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து டிஸ்மிஸ் - தமிழக அரசு//

# இந்த அரசு பஸ்சுக்கு படிக்கட்டே இல்லையே? இதற்கு அரசு என்ன செய்யும்?

தமிழச்சி (Tamizachi)
செய்தி: //மாணவர்கள் படியில் பயணம் செய்தால் பள்ளி, கல்லூரிகளில் 
இருந்து டிஸ்மிஸ் - தமிழக அரசு//



# இந்த அரசு பஸ்சுக்கு படிக்கட்டே இல்லையே? இதற்கு அரசு என்ன செய்யும்?



தமிழச்சி (Tamizachi)
1.மிஸ், எதுக்காக கைல வெச்சிருக்க வேண்டிய கர்ச்சீப்பை கழுத்துல வெச்சிருக்கீங்க?


யோவ், அது துப்பட்டா, நீளமா இருக்குன்னு கட் பண்ணிட்டேன்


-----------------



2. தலைவா.உங்களை கண்டபடி திட்டுன கேப்டன் கூட கூட்டணியா?


 மு க - ராம்தாஸ் கூட திட்டுனாரு.கூட்டணி வெச்சுக்கல?



-------------------


3. ஜட்ஜ் - சத்தியப்பிரமாணம் எடுத்துக்குங்க .


ஜெ - போகும்போது எடுத்துக்கறேன்.



--------------------


4. உங்கள் பொன்னான வாக்குகளை குதிரையின் இறக்கைக்கே போடவும் - மாஆஆஆண்பு மிகு புரட்சித்தலைவி




---------------


5. தி.மு.க & தே.மு.தி.க கூட்டணி முடிவாகி விட்டது :# (தமிழ்நாட்டை ஆல்ரெடி )ஆண்டவருடன் மட்டுமே கூட்டணின்னு சொன்னேனே இதான் அது.ஆங்-கேப்டன்்




---------------------




6. அரசு விழாவில் கரீனாகபூர் நடனமாட 1.40 கோடி செலவு… இது சட்டீஸ்கர் மாநில கூத்து# கரீனா அக்கப்போர்.அரச விழாவா?சரச விழாவா?




---------------------


7. கவுதம் - என் படத்தை டி வி யில் ரிலீஸ் பண்ணப்போறேன் .


கேபிள் ஆபரேட்டர் - இப்படி எல்லாம் மிரட்டுனா போலீஸ்ல புகார் கொடுப்போம் # சும்மா



----------------


8. வெகுவிமர்சையாக பிறந்தநாள் கொண்டாடுவேன்-மு.க.அழகிரி # வேலூர்லயா? -ஜெ




--------------------


9. போலிஸ்காரரிடம் திருடிய எஸ்.ஐ# பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே.கவுண்டர் ராக்ஸ்



-----------------------


10. மோடி அரசு ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது-சோனியா காந்தி# இருக்காதே.அவருக்கு காங்கிரஸ்னாலே ஆகாதே?




-------------------------


David - 1 Name BUT 2 OR 3 Lives - What the HECK is this? - Content Suitable for ALL

ஏக் மார் தீன் துக்கடா - ஹிந்தி மே - ஏக் மார் தோ துக்கடா - தமீழ் மே - என்னயா இது விளம்பரம் ஒரு பெயர் இரண்டு மனிதனின் கதைன்னு தமிழ்ல வந்திருக்கு - ஆனா ஹிந்தியில அதே காட்சிகள் அதே ஆட்கள் ஆனா மூனு ஆட்களின் வாழ்க்கை ஒரு பெயர்னு வருது என்ன நடக்குது இங்க - ரெண்டு ஒரே புரடக்ஷன் கம்பெனி, ஒரே இயக்குனர் ஒரே காட்சிகளம் ஆனா இது எப்படி -

See the Trialer in Tamil -https://www.youtube.com/watch?v=4SEwCrsMswc

See the Trialer in Hindi - https://www.youtube.com/watch?v=fmOBx6jS3Fc
David - 1 Name BUT 2 OR 3 Lives - What the HECK is this? - Content
 Suitable for ALL

ஏக் மார் தீன் துக்கடா - ஹிந்தி மே - ஏக் மார் தோ துக்கடா - தமீழ் மே - 
என்னயா இது விளம்பரம் ஒரு பெயர் இரண்டு மனிதனின் கதைன்னு தமிழ்ல 
வந்திருக்கு - ஆனா ஹிந்தியில அதே காட்சிகள் அதே ஆட்கள் ஆனா மூனு ஆட்களின் 
வாழ்க்கை ஒரு பெயர்னு வருது என்ன நடக்குது இங்க - ரெண்டு ஒரே புரடக்ஷன் 
கம்பெனி, ஒரே இயக்குனர் ஒரே காட்சிகளம் ஆனா இது எப்படி - 

See the Trialer in Tamil -https://www.youtube.com/watch?v=4SEwCrsMswc

See the Trialer in Hindi - https://www.youtube.com/watch?v=fmOBx6jS3Fc


11. ஸார்.படத்துல உங்க பிஜிஎம் சூப்பர்.


நான் பின்னணி இசை அமைக்கலையே?


ஒரு வேளை அதனாலதான் சூப்பரோ?



-------------------


12. ராமநாராயணன் - சாலமன் சார்.அடுத்து பூனையை வெச்சு ராம்கியா?ி




-----------------


13. ஜீவா - சார்.சம்பள பாக்கி...? கவுதம் - கிஸ் அடிச்சதுக்கு கழிச்சாச்சு



------------------


14.  இன்னைக்கு இண்ட்டர்நேஷனல் டீ டே வாம், எனவே இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் இன்னைக்கு டீ போட்டு கூப்பிட்டாலும் கோவிச்சுக்க மாட்டாங்க




------------------------


15. என் படங்களின் மவுனம் புரிந்துகொண்டவர் இளையராஜா., மவுனிகாவைப்புரிந்து கொண்டவன் நான் மட்டும் தான் ஹி ஹி  - பாலுமகேந்திரா 



--------------------------


16. எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமந்தா வாக எண்ணுகிறானோ அவனே நீதானே என் பொன் வசந்தத்தை அனுபவித்துப்பார்த்தவன் 


--------------------


17. டியர், கோயிலுக்குப்போலாமா? 


சாரி , 3 டி!


அடிப்பாவி, சினிமாவுலதான் 3  டி , கோயில்லயுமா? 


 3 D = 3 DAYS #  hi hi  ஹி ஹி


------------------------


18. முதல் இரவில் மனைவி - மண மேடைல கண்ணாடி போடலையே?


மாப்ளை - ஹி ஹி , இது 3 டி கண்ணாடி



-----------------


19. கோயில் யானை -யால் புகழ் இழந்தவர் - கேப்டன்,கலைமணி , நல்லா துட்டு சம்பாதித்தவர் - பிரபு சாலமன்



-------------------


20.  மிஸ், நீங்க சொந்தமா மெஸ் வெச்சிருக்கீங்களா?


அட! ஆமா, எப்படித்த்தெரியும்?


யுவர் வாய்ஸ் ஈஸ் மெஸ் மரிசிங்க் ;-))



-------------------
21. அவநம்பிக்கையே நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது-மன்மோகன் சிங்#  எவ நம்பிக்கை?



--------------------------


2. 2  அன்பே! உன் ஜாக்கெட் ஜன்னல் மூடினாய்! தென்றல் உனக்குள் நின்றது!  கோபப்புயல் எனக்குள் தோன்றியது




-------------------


23 கவுதம் - இந்தபப்டம் யூத்ங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் # அப்போ உங்க படம் உங்களுக்கே பிடிக்காதா? ( சும்மா)



-----------------


24. மதுரை - திருவனந்தபுரத்திற்கு, சென்னையிலிருந்து துரந்தோ, "ஏசி' ரயில் சேவை -ஜெ # அப்போ துரந்தோ ஏழைகளுக்கு தூரந்தானா?



----------------------


25. இளையராஜாவை ஏன் கடவுள்னு சொல்றாங்க?


எல்லா சமயங்கள்லயும் அவரையே நம்பிட்டு இருக்கக்கூடாது, நாமும் கொஞ்சம் முயற்சி பண்ணனும் # திரைக்கதை



-----------------------

டுடே டைம் பாஸ் @ டி வி