Saturday, December 15, 2012

ஆபாசமாத்தான் வருவேன்.ஆனா போட்டோ எடுக்கக் கூடாது-ஸ்ரேயா -காமெடி கும்மி

1. 1. செத்த பிணத்துக்கு பொண்டாட்டி தேவையா?ன்னு கேட்டீங்களாமே?

ஆமா,அதுக்கென்ன? செத்தாத்தானேய்யா அது பொணம்?#சீமான் பேட்டி இன் குமுதம் காமெடி கும்மி

-----------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல.

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க,மேரீடு மேன் எனில் சம்சாரத்தை மாத்துங்க#சம்சாரம் என்பது வீணே.


----------------------------

3. வரலட்சுமி மாதிரி நடிகையோடு நடித்தது உற்சாகமான அனுபவம் : சிம்பு! # அண்ணன் இதே டயலாக்கை நயன் தாராட்ட,லேகா வாஷிங்க்டண்ட்டயும் சொன்னாரே

-----------------------

4. ஆபாசமாத்தான் வருவேன்.ஆனா போட்டோ எடுக்கக் கூடாது-ஸ்ரேயா #இதென்னாங்க வம்பா இருக்கு?BF ல நடிப்பேன்,ஆனா யாரும் பார்க்கக்கூடாதுன்னா எப்டி?


-----------------------------
5. அந்த சாமியார் ஒரு மார்க்கமான ஆள்னு எப்படிசொல்றே?

அத்தனைக்கும் ஆசைப்படுன்னு சொன்னவர் இப்போ அத்தைக்கும் ஆசைப்படுன்னு சொல்றாரே?#ரதிநிர்வேதம்

---------------------------
6 பனைமரத்துப்பட்டி பகுதியில் நில அதிர்வு #பனைமரத்துல கள் இறக்கும்போது கீழே சிந்தி இருக்கும் போல.. பூமிப்பெண்ணுக்கும் மப்பு ஏறிக்கிச்சு போல

-----------------------------

7.. அதிககட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து #இதுக்கு என்ன அர்த்தம்னா உடனே கல்விஅமைச்சரை கவனிக்கனுமாம் ஆல்கரெஸ்பாண்டண்ட்ஸ்அலெர்ட்ஸ்

-------------------------

8. கனிமொழியை சந்திக்க டில்லி புறப்பட்டார் கருணாநிதி #தலைவரே.. ஏன் சிரமப்படறீங்க? கொஞ்ச நாள் அங்கேயே தங்கிக்குங்களேன்,சட்டசபைக்கும்போகவேணாம்

--------------------------
9.  இன்று சர்வதேச இசை தினம்#அம்மாவுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் கவனிக்க.யாரும் உங்களை இன்னைக்கு நக்கல் அடிக்க முடியாது.. தாராளமா ஜிங்க்ஜக்கலாம்

--------------------------

10. .பொண்ணு பார்க்க போறப்ப எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம போனா பொண்ணு பிடிச்சுடும்,ஹன்சிகாவை மனசுல நினைச்சுட்டு போனா பிடிக்காது#அவன் இவன்

-------------------------


11. ஆண் அனுமதிப்பதால்தான் பெண்ணின் ஆர்வம் தலை தூக்கி நிற்கிறது, நியாமாய் பெண்கள் ஆண்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் # எ கீ்



--------------------


12. தகாத வார்த்தையால் பேசுகிறார் அமைச்சர்- தேமுதிக பெண் எம்.எல்.ஏ புகார் #மந்திரி.உன் பதவி காலி.எந்திரி - ஜெ



-------------------


13. டியர்.எதுக்கு என்னை இப்படி உ(கு)லுக்கறீங்க ?



ஷேக் வெல் பிபோர் யூஸ் னு டாக்டர் சொன்னாரே?


 யோவ்.அது டானிக் கு



------------------


14. சர்வர் - மேடம்.சாப்பிட்டபின் இலையை எடுக்கனும்.போர்டு பாக்கல?



நடப்பது இரட்டை இலை ஆட்சி.நியூஸ் பாக்கல?




-------------------

15. நெல்லை வி.கே.புரம் மதுரா கோட்ஸ் ஆலை கதவடைப்பு:தொழிலாளர்கள் அதிர்ச்சி: # அல்வா குடுத்துட்டாங்களா?




----------------------



16. என் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது: எடியூரப்பா: # உங்க்ளையும்தான் சகிச்சுக்கமுடியல



--------------------



17. ரஜினியை ஒரு மந்திரக்கோல் இல்லாத வசியக்காரர் என்றுதான் சொல்லவேண்டும் -மீனா# உங்க பொண்ணுதான் அவரோட அடுத்த ஹீரோயினாம்




-------------------------


18. நடிகை - எனக்கு எளிமைதான் பிடிக்கும். #



அப்புறம் என்ன இதுக்கோசரம் தொழில் அதிபரா பார்த்து வளைக்கறீங்க? எளிமையான ஏழையை கட்டறது?



-----------------

19. ரஜினி சீக்ரெட் ஏஜென்ட்டா நடிச்சா - நான் செய்யறத சொல்ல மாட்டேன்.சொல்றதை செய்ய மாட்டேன் # பஞ்ச்்




-------------------


20. 10.10.10ல் காதல், 11.11.11ல் நிச்சயம், 12.12.12ல் திருமணம் # அப்ப குழந்தை...?



9 9 9 ல ஆல்ரெடி கெட்



--------------------


21. பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு#இதுதான் சாக்குன்னு அவனவன் ஸ்டெப்ல நிக்கப்போறான்




------------------------


2.2 பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணங்களை நடத்த வேண்டும்: ராமதாஸ்# கை கலப்புத்திருமணம் தான் நடக்கும்




--------------------



23. கோச்சடையான் வெற்றிபெற்றால் இதிகாசங்களைப் படமாக எடுக்கும் வாய்ப்பு உருவாகும் -ரஜினிகாந்த்!#ராவணன் ரிசல்ட் தெரியாதா? -மணிரத்னம்



-----------


24. கிறிஸ்த்துவ பள்ளி கற்று கொடுத்த கல்வியும் நற்பண்புகளுமே என் முன்னேற்றத்திற்கு காரணம் -ஜெ # பெங்களூர் ல கேஸ் நடக்குதே அதுக்கு?்




---------------

25. ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்: # நன்றி - ஜல்லிக்கட்டு ஹீரோ சத்யராஜ்



-----------------



26. வால்மார்ட்: விசாரணைக்கு அரசு தயார்: -பிரதமர் #


ஜட்ஜ் - ஊழல் நடந்ததா?



 பி எம் - நடந்திருக்காது



--------------


27. முற்பகல் செயின் பிற்பகல் நெக்லஸ் ராத்திரி ஒட்டியாணம் - வழிப்பறி வந்தியத்தேவன் டைரியிலிருந்து




--------------------





Friday, December 14, 2012

நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters/images/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters01.jpg 

ஹீரோ ஹீரோயின் இருவருமே  ஸ்கூல் மேட்ஸ் , காலேஜ் மேட்ஸ் , 3 படத்துல வர்ற மாதிரி ஆரம்பத்துல இருந்தே லவ். ஆனா பாருங்க 2 பேரும் வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கறதில்லை. எதையாவது உளறி அது ஈகோ மோதல் ஆகி ஊடல் பிரிவுன்னு அடிக்கடி ஆகிடுது. லவ்வர்ஸ்னா கிஸ் அடிக்க மட்டும்தான் வாயைத்திறக்கனும்னு அவங்களுக்குத்தெரியலை ( கிஸ் அடிக்க எதுக்கு வாயைத்திறக்கனும்? நாராயணா! நாராயண! )


 மு க் அ ழகிரியும் , மு க ஸ்டாலினும் மாதிரி இருக்கும் அவங்க எப்படி பிரசன்னாவும் சினேகாவும் போல் சேர்றாங்க என்பது தான் திரைக்கதை .


படத்தின் முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான். சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது பாட்டு ஓடும்போது ஏதாவது ஒரு பொண்ணு மடில சாஞ்சுக்கலாம்னு நினைக்காத ஆண் இல்லை. கிளாசிக் மியூசிக். அதே போல் என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன். செம கலக்கலான பாட்டு , மற்ற பாட்டுக்களும் நல்லா இருக்கு . ஒரு ஆள் கூட தம் அடிக்கப்போகலை. ஆனா BGM ஸ்பெலிஸ்ட்டான இளையராஜா  ஏன் இவ்வளவு அடக்கி வாசிச்சிருகாரோ?பல காட்சிகளில் போயஸ் தோட்டத்து மயான அமைதி நிலவுது. அவரே அப்படி இருக்கட்டும்னு விட்டுட்டாரா? கவுதம் ஏதாவது  தகரர்று பண்ணி அதுக்குப்பழி வாங்கிட்டாரா?  தெரில



ஜீவா. கோ படத்துல செம க்யூட்டா இருந்தவர் அதை விட யங்கா சில காட்சிகள்ல தெரிஞ்சாலும் மீசை இல்லாம அவரைப்பார்க்க என்னமோ மாதிரி இருக்கு. ஸ்கூல் பையனா வர்றப்ப அந்த கெட்டப் ஓக்கே . ஆனா காலேஜ் படிக்கறப்போ , ஜாப்க்குப்போறப்போ எல்லாம் அதே கெட்டப் ஏன்? ஏன்னா பல காட்சிகள்ல அவர் வசனம் பேசும்போது வில்லத்தனமாவே இருக்கு.ஈகோ மோதல்கள் கன கச்சிதமான நடிப்பு . 


 சந்தானம். ஒரு படத்தின் பல மைனஸ்களை  தாங்கி நிற்கும் தூண். ஓக்கே ஓக்கே படம் மாதிரி படம் முழுக்க வராவிட்டாலும் பாதி அளவுக்கு வர்றார். அவர் பேசும் கவுண்ட்டர் பஞ்ச்க்கு டக் டக்னு ஆடியன்ஸ் அப்ளாஸ்.. அவருக்கும் ஒரு ஜோடி. காமெடி கலாட்டாக்கள்.. 



ஹீரோயின் சந்தனதேக அஜந்தா  சமந்தா .பவுடர் போடறாரா? வெண்ணெய் யூஸ் பண்றாரா? என கேட்க வைக்கும்  நைஸ் ஃபேஸ். முகத்துக்கு அதீதமான ஒப்பனை இல்லாமலேயே மிளிர்கிறார். இவரது டிரஸ்சிங்க் சென்ஸ் அபாரம். 6 காட்சிகளில்  ஜீவாவுக்கு லிப் கிஸ் தர்றார். பல காட்சிகளில் ஜீவாவுக்கு இணையான  நடிப்பு . ஆனா ஆவேசமா பேசும் காட்சிகளில் அவர் ஏன் ஒரு மாதிரி தடுமாறி நடக்கறார்னு தெர்யல . அப்படி பாடி லேங்குவேஜ் கோப காட்சிகளில் செட் ஆகலைன்னா ஒரே இடத்துல நின்னு டயலாக் பேசி எடுத்திருக்கலாம். 


ஸ்கூல் , காலேஜ் ஆஃபீஸ் என 3 வெவ்வேறு கட்டங்களில் திரையில் உலா வரும் பல ஃபிகர்கள் நேர்த்தியான தேர்வு .பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அள்ளுது .



http://moviegalleri.net/wp-content/gallery/neethane-en-ponvasantham-movie-stills/neethane_en_ponvasantham_movie_stills_jeeva_samantha_97aaaee.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் ஓப்பனிங்க் சீனில் ஜீவா சமந்தாவைப்பார்த்து பாடும் நீதானே என் பொன் வசந்தம் , புது ராஜ வாழ்க்கை பாடலைப்பாட முகத்தில்  வெட்கம் , தோழிகள் பார்ப்பதில் பெருமிதம் என அந்த ஆடிட்டோரியமே காதல் வெள்ளத்தில் தத்தளிக்கிறது . 



2. அந்த குண்டுப்பெண் பள்ளிக்கூட அறையில்  ஜீவாவைப்பார்க்க சமந்தாவுக்கு உதவும் காட்சிகள் கல கல. யதார்த்தம் .  இளமை 


3. சமந்தா நிலைக்கண்ணாடி முன் டைட் டி சர்ட் போட்டு நெஞ்சை நிமிர்த்தி அழகு பார்க்கும் காட்சி தியேட்டரில் அபார அப்ளாஸ் ( அவரோட நெஞ்சு அவர் நிமிர்த்தறாரு, இவ்ங்க ஏன் கிளாப்ஸ்?  - அப்பாவி கோவிந்து) 


4. சமந்தா ஒரு காட்சியில் சாம்பல் நிற காட்டன் சேலையும் , ரத்தச்சிவப்பு அமெரிக்கன் ஜார்ஜெட் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஜீவா கூட உலாத்தறாரே? ஆஹா ... 


5. ஹீரோவோட அண்ணன் தான் விரும்புன பொண்ணு வீட்டுக்கு அப்பா, அம்மாவோட போய் பொண்ணு கேட்டு அவமானப்பட்டு திரும்பி வந்த பின்  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் காட்சியும் , ஜீவா குற்ற உணர்வில் பரிதவிக்கும் காட்சியும் 


6. சந்தானம் , குண்டுப்பெண்  லவ் போர்ஷன் ஜீவா - சமந்தா லவ் போர்ஷன் போர் அடிக்கும்போதெல்லாம் ரிலாக்ஸ்க்கு உதவுது. சந்தானம் பண்ணும் சேட்டைகள் கல கல 


7. சமந்தா மொட்டை மாடியில் ஜீவாவிடம் வெடித்துக்கதறும் காட்சி , க்ளைமாக்ஸ் காட்சியில்  என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பின்னணி இசை இசை ஞானி பெயர் சொல்லுது 


8. ரிசப்ஷனில் தன் அண்ணியின் தங்கையையே  மனைவியாக ஏற்றுக்கொள்ள முன் வரும் ஜீவாவை சமந்தா சோகத்துடன் கை குலுக்கி சம்பிராதய வாழ்த்து சொல்ல வரும்போது ஜீவா நாசூக்காக மறுப்பதும் அப்போது அடிபட்ட பார்வையுடன் சமந்தா அவரைப்பார்ப்பதும் நுணுக்கமான இயக்கம் .


9. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நெகடிவ்  என பதட்டப்பட வைத்து  கடைசி 15 நிமிடத்தில் ஹீரோ - ஹீரோயின் வாக்குவாதம் செய்யும் காட்சி 


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers/images/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers09.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தின் திரைக்கதையில் உள்ள மிகப்பெரிய மைனஸ் ஆண்களை  பழிக்கும் விதமான கதை ஓட்டமே. அதாவது 99%  உண்மைக்காதலர்கள் சில பிரச்சனைகளால் சேர முடியாமல் போய் விட்டால் ஆண் முதல்ல வேற பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். தப்பு பொண்ணு சைடில் என்றாலும், அவதான் வேண்டாம் என்று சொன்னாலும் அவளுக்கு மேரேஜ் ஆகி சில வருடங்கள் கழிச்சுத்தான் ஆண் மேரேஜ் பண்ணிக்குவான். நீங்க யாரை வேணா கேட்டுப்பாருங்க . ஆனா இதுல ஹீரோ காதலியுடனான சண்டையில், ஊடலில் தன் அண்ணியின் தங்கையை மணக்க சம்மதிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய் சொல்லப்படலை .



2. இசைஞானி இளையராஜா சாய்ந்து சாய்ந்து பாட்டை என்னமா உருகி இசை அமைச்சிருக்கார். ஆடியோ வெர்ஷன் மட்டும் கேட்கும்போது  காதலியை தாய் ஸ்தானத்தில் வைத்து  ஒரு சோகத்துக்கு அரவணைப்பும் ஆறுதலும் தேடும் ஒரு காதலனின் பாட்டாகவே அது வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனா பிக்சரைசெஷனில் அது இளமைக்குறும்பு , கில்மாக்கொண்ட்டாட்டமாகக்காட்டப்படுவதால் ரசிகன் தடுமாறுகிறான். பாட்டை லயித்து ரசிப்பதா? கிளு கிளுப்பை ரசிப்பதா? என . எப்படி இயக்குநரு இதுல ஸ்லிப் ஆனாரு



3. உன் அம்மா , அப்பாவைப்பற்றி என் கிட்டே ஏன் நீ சொல்லவே இல்லை? என ஹீரோயின் கடைசியில் குற்றம் சாட்டும்போது ஹீரோ மவுனமா இருக்கார் . “ ஏன் நீ கேட்கவே இல்லை?னு பதிலடி தர்லை . சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவித்துக்கொள்ளும்  ஹீரோயின் ஹீரோ வேறு ஒரு பெண்ணுடன் மேரேஜ் , ரிசப்ஷன் என்றதும் ஓங்கி வெடிப்பார் என்று பார்த்தால் அழுது டிராக் மாறிட்டாரே? 



4. இடைவேளை வரை சந்தானத்தின் காமெடியில் இசையில்   ஓரளவு ஸ்பீடாகப்போகும் படம் பின் பாதியில் தட்டுத்தடுமாறுது . திருச்செந்தூரில் ஹீரோயின் ஸ்கூல் நடத்துவது , அவரை சமாதானம் பண்ண ஹீரோ வருவது அது சம்பந்தமான காட்சிகள் கொஞ்சம் இழுவை 


5. விடிய விடிய ஹீரோ அனுப்பிய மெயிலை தூங்காமல் படிச்சுட்டு விடிஞ்சதும் எனக்கு இன்னும் கோபம் போகலை, சும்மா தான் படிச்சேன் என்பது மாதிரி அவர் வசனம் பேசுவது வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த டாக்டர் கலைஞர்  மாநில அரசிடம்  வர விடக்கூடாது என்று பல்டி அடிபப்து போல் படு கேவலமாக இருக்கு 



6. ஹீரோ 8 வயசுல இருந்து ஸ்கூல் , காலேஜ் , ஆஃபீஸ் என பல கட்டத்துல ஹீரோயின் வீட்டுக்குப்[போயிருக்கார். ஆனா ஒரு முறை கூட ஹீரோயின் அப்பாவும் அவரும் சந்திக்கவே இல்லை என்பதும் ஹீரோயின் அப்பாவுக்கு இவர்கள் காதல் மேட்டரே தெரியாது என்பதும் காதில் பூச்சுற்று .


7. இவர்கள் காதல் ஈகோ யுத்தத்தில் ஹீரோவின் அண்ணியின் தங்கையை ரிசப்ஷன் எல்லாம் முடிச்சு , மேரேஜ்ல தாலி கட்ட கடைசி ஒரு மணி நேரம் முன்பு நைசா கழட்டி விடுவது  வை கோவுக்கு நாஞ்சில் செஞ்ச துரோகம் போன்றது .



8. ஹீரோ , ஹீரோயின் ஈகோ மோதல் காட்சிகள் 4 இடங்களில் வருகிறது . எல்லாமே செம இழுவை. நறுக் சுருக் என முடிச்சிருக்கலாம் . 



9. பல லட்சம் மதிப்புள்ள கார் எல்லாம் வெச்சிருக்கும் , கம் ஆஸ்திரேலியா அடிக்கடி போகும் வசதி உள்ள ஹீரோயின் ஹீரோவுக்கு கிஃப்டாக நோக்கியா 1100 மாடல் மாதிரி ஒரு டப்பா ஃபோனை தருவதும், அதே போல் ஹீரோயினும் மட்டரகமான ஃபோன் வைத்திருப்பதும் காதில் பூச்சுற்றல் 



10. ஹீரோ அவ்வளவு ஈகோ பார்ப்பவர் ஹீரோயினிடம் ஒனத்தியாக ஓ சி செல் ஃபோன், ஓ சி சர்ட், என ஏகப்பட்ட ஓ சி களை வாங்கிக்கொள்வது 


11. இளையராஜாவை வ்லுவந்தமாய்ப்பாராட்டும் ஒரு வரியாவது அவர் இசை அமைக்கும் படத்தில் வந்துடும் , இதுலயும் வருது . 


http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-01/images/neethane-en-ponvasantham-jiiva-04-09-12.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல? 


 ஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு




2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை 

 விட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல் 



3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது




4. அவ கிட்டே என்னடா பேசறது?

 ரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு



5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது 





6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா? 


 நோ 

 அடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே? 

 ஆஸ்திரேலியா 



7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத 




8.  அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே? நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும் 


9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா  ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே? 



10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா?


வாட்?

 எல்லாரையும் சேர்த்துப்போட 


 மை திங்க்..... 

 வாட்? திங்க்?

 என்ன? எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது?  ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா ) 




11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு 



12. நீ ஏதாவது சொல்லனுமா? நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்

 அதான் இப்போ  சொன்னேனே?

 ஒண்ணும் சொல்லலையே? 



கிஸ் அடிச்சேனே? 



13. வாடா வா, சுடிதார்ங்க  காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே? 



14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன் 



15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா? 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Sep/04/Neethane_En_Ponvasantham_Latest_Stills/Neethane_En_Ponvasantham_Latest_Stills96132685227bc3e15c84d4362430fc0d.jpg


16.  என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா? 


 ம்ஹூம்

 முடி வெட்டி இருக்கேன்

 ஓஹோ சரி 

 சுத்தம் 



17.  நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்

 இதானா? நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன் 



அப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா? 



18. உன் நல்லதுக்கும்  எ ன் நல்லதுக்கும் , நம்ம .  நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா?

 ம் 

 என்னை விட்டுடு 


19.  நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் ,  என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை 



20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு 



21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு 

 இதே டயலாக்கை இன்னும் எத்த்னை படத்துல சொல்வே? 



22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க



23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே? 


 சொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும் 


24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க #nepv 



25.  எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல 


 20 நாள் ஆனாலும் சரி  பரவாயில்லை

 டேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்?



26. நீ என்னை வெறுத்துடக்கூடாது

 அது முடியாது, ஐ ஹேட் யூ 



27.  குட்பை சொல்லிட்டு வந்துட்டேன் 


 குட்பை சொல்ல முடிஞ்சுதா?



28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSpgR4vljUMDJ1vVLx0UaSa6tINuaoJMDIJV-R8YzhibbBXd9T4A3x5g8EbRfJqKCvQGyUOmdldbQkfx3WETz88fLMKcKNRR-nRDRXK_0pvnieNGnH7oVXEq_M00TaxxvDjNygDg2EZZxs/s1600/Samantha+Hot+Navel+Stills+With+No+Watermark+(3).jpg


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் - 43 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  - ஓக்கே 



 சி .பி கமெண்ட் - காதலர்கள் , யூத்ங்க, பிரிந்து வாழும் தம்பதிகள் பார்க்கலாம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே  கூடாத படம் .ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன் . சி செண்ட்டர்ல சுமாராத்தான் போகும், பி செண்ட்டர்ல பொங்கல் வரையும் , ஏ செண்ட்டர்ல 50 நாள் தாண்டியும் ஓடும் 

http://tamilhotactress.files.wordpress.com/2010/12/samantha-hot-stills61.jpg

கும்கி - சினிமா விமர்சனம்

  
http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html


நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 

 

அனைத்துப்பாடல்களையும் வரி வடிவில்

கும்கி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_6836.html

 

http://actresspadam.com/wp-content/uploads/2012/05/samantha-hot-sexy-pics-from-tamil-movie-008.jpg



கும்கி - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/gallery/kumki-wallpapers/kumki-wallpapers-8.jpg 

அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி மதுரையை அடக்கி ஆண்டது போல் ஒரு காட்டு யானை ஒரு மலைவாழ்கிராமத்து மக்களை துவம்சம் பண்ணிட்டு இருக்கு.அறுவடை நடக்கும் டைம்ல வந்து எல்லாத்தையும் அழிக்குது. அந்த யானையை விரட்டி அடிக்க ஒரு கும்கி யானை தேவை. இந்த மாதிரி காட்டு யானைகளை விரட்டுவதற்காகவே சின்ன வயசுல இருந்தே பழக்கபட்ட யானை தான் கும்கி யானை .

 ஹீரோ ஒரு கோயில் யானையை வெச்சிருக்காரு. எதேச்சையா அந்த கிராமத்துல எண்ட்டர் ஆகறாரு. ஹீரோயின்  அந்த மலைவாழ் ஜாதிப்பொண்ணு. பார்த்ததும் ஹீரோவுக்கு லவ். அதனால கும்கி யானைன்னு பொய் சொல்லி மெயிண்ட்டெயின் பண்றாரு. அவங்க காதல் நிறைவேறுச்சா? காட்டு யானை வால்மார்ட் மாதிரி ஆக்ரமிச் சுதா அந்நியன் சுதா என்பதை படத்தில் காண்க.


படத்துக்கு முதல் ஹீரோக்கள் டி இமான் + தஞ்சை இளவல்யுகபாரதி . என்னமா பாட்டு போட்டிருக்காங்க. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல் ஒலி அள்ளுது.இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் பட்டியலில் நிச்சயம் முதல்  இடம்.

 http://haihoi.com/Channels/cine_gallery/kumki_movie_latest_photos_stills_vikram_prabhu_lakshmi_menon_9664_S_113.jpg



அடுத்து ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன்ஸ். ஹாலிவுட் படமான எமர்ஃபால்டு ஃபாரஸ்ட்க்குப்பின் நான் பார்த்த அட்டகாசமான  அருவிகள் சூழ் மலை வாசஸ்தலம் பிரமாதம்.கேமரா கலக்கல்.


ஹீரோயின் ஆல்ரெடி சுந்தர பாண்டியன்ல அறிமுகம் ஆன லக்‌ஷ்மி மேணன். கொள்ளை அழகு. மலை வாழ் பெண் போல வே கெட்டப் , பாடி லேங்க்வேஜ் ஆஹா! ஒரு காட்சியில் க்ளோசப்பில் அவர் புருவத்தை காட்டும்போது எந்திரிச்சுப்போய் நீவி விடலாமா? என எண்ண வைக்கும் அழகு .. சரி சரி கண்ட்ரோல்


 ஹீரோ  சிவாஜியின் பேரன் .முதல் படம் என்ற அளவில் ஓக்கே . பிரமாதம்  என சொல்லும் அளவு இன்னும் வரலை. வந்த வரை ஓக்கே .


 http://www.lateststills.com/wp-content/uploads/2012/08/Lakshmi-Menon-www-lateststills-com-300x300.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மைனா படத்துல எப்படி ஜிங்கி ஜிங்கி பஸ் பாட்டு படத்தை ஒரு ஜாலி மூடுக்கு கொண்டாந்துச்சோ அதே போல் இதுல சொய் சொய் பாட்டு . க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னால வருது. அறுவடைக்காட்சி , கிராமத்து மக்களின் பாரம்பரிய நடனத்துடன் துள்ள வைக்கும் இசையில் அபாரமான பிக்சரைசேஷன்.


2. நாயகிக்கும் நாயகனின் யானைக்கும் இடையே மலரும் நட்பு . யானை என்றாலே மம்மியைக்கண்ட ஓ பி எஸ் மாதிரி பம்மும் சுபாவம் உள்ளவர் நாஞ்சில் சம்பத் ஜெ மாதிரி  சர்வ சாதாரணமாக நட்பு பாராட்டுவது அழகு .


3. மலை கிராமம் , அவங்க உடைகள் எல்லாம் யதார்த்தம்


4. கிராமத்து மக்கள் ராமையாவை தெய்வமாக நினைப்பதும் , உண்மை தெரிஞ்சுட்டா துவம்சம் பண்ணிடுவாங்க என்று அவர் தொடை நடுங்குவதும் செம காமெடி டிராக். தனி காமெடி டிராக்காக இல்லாமல் கதையுடன் பயணிக்கும் யதார்த்த காமெடி பிளஸ் 



5. சொல்லிட்டேனே  என் காதலை பாட்டு செம ஹிட் மெலோடி . அந்தப்பாட்டில் ஹீரோயின் முக பாவங்கள் , க்ளோசப் காட்சிகள் கொள்ளை அழகு

http://kollywoodz.com/wp-content/uploads/2011/10/Kumki-Movie-Stills04.jpg



மனம் கவர்ந்த வசனங்கள் 


1.விவசாயத்தை கண்டுபிடிச்ச கடவுள் மாதிரி பேசாதே. கட்டடத்தை கட்டி கட்டி கடைசில கல்லை உடைச்சு சாப்பிடும் சூழல் வரத்தான் போகுது



2. உனக்குன்னு ஒரு காலம் உடைச்சுக்கிட்டு வரும்


3. 52 வயசு வரைநாய் படாத பாடு படுவீங்க. அதுக்குப்பின்? பழகிடும் # கும்கி ( வால் பையன் எஸ் வி சேகர் மொக்கை உல்டா)


4. சார்! நீங்க மாமா தானே?

 போலீஸ் - வாட்?

 ஐ மீன் உங்க தங்கச்சி பையனுக்கு மாமா தானே?



5. ஆ ஆள்ட்ட நான் சம்சாரிக்கனும்.


யானைக்கு சம்சாரம் இல்லைன்னு ஃபீல் பண்றீங்களா?



6.  சார், நீங்க ஏன் மேரேஜ் பண்ணிக்கலைன்னு தெரியும், யானைப்பாகன் நீங்க, யானை மிதிச்சு செத்துட்டா? மனைவி சின்ன வயசுல விதவை ஆகிடுவா அதானா?

 அடேய்



7. பன்னிப்பயலே! உன்னை எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும்போது ஆரம்பிக்கும்போது பக்க வாதம் வந்துடனும்


8. கொசுக்கடி இந்த காட்ல ஜாஸ்தி போல


 2 மணி வரை பொறுத்துக்குங்க


 அதுக்குப்பின் வராதா?

 கொசுக்கடி பழகிடும் ( 1987 தினத்தந்தி மொக்கை ஜோக்)



9. எனக்கு அவளைத்தெரியும் , அவளை மட்டும் தான் தெரியும்

 கவித கவித


 இப்போ வெல்லாம் நான் எது பேசுனாலும் அது கவிதை மாதிரியே இருக்குனு எல்லாரும் சொல்றாங்க.



10.  நிஜ்மா சொல்றேன் , எனக்கு கல்யாணமும் நடக்கலை, ஒரு ஃபர்ஸ்ட் நைட் கூட ந்டக்கலை



11. உனக்கு சாபம் விடறேன் , நீ எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது டைவர்ஸ்ல தான் போய் முடியும்



12. சென்னிமலை மாப்ளை கட்னா இவளைத்தான் கட்டனும்னு அடம் பிடிக்கறாளாமெ? ( எங்க ஊர்ப்பேருக்காக )




http://moviegalleri.net/wp-content/gallery/kumki-movie-latest-stills/kumki_movie_latest_photos_stills_vikram_prabhu_lakshmi_menon_8722.jpg


13,. முகறையைப்பாரு , மூஞ்சூறுக்கு முதப்பிள்ளை மாதிரி



14. சார்ஜ் ஏறிடுச்சா?

 ஹூம், ஃபுல்லா ஏறிடுச்சு




15. யானையோட பலம் பாகனோட தைரியத்துல தான் இருக்கு 



16. இப்போ நாட்ல அமைச்சருங்க எல்லாம் 9 ஓட்டைகளையும் அடைச்சுக்கிட்டு அமைதியா இருக்காங்க. ஏன்? ( ஏன்னா நடப்பது அம்மா ஆட்சி ஹி ஹி )


17. மனிஷனாப்பிறந்தா  மானம் , ரோஷம் முக்கியம்


 மனுஷனுக்குத்தானே, நமக்கென்ன?

 நக்கல் பண்ணி நகர்த்தப்பார்க்கறே, நடக்காதுடி



18.   கம்பளியைப்போர்த்திக்கிட்டு  குனிஞ்ச வாக்குல இருக்கியே , ஏன்?

 யானை என்னைப்பார்த்தா யானைக்குட்டின்னு நினைச்சு விட்டுடும்


19. காட்டோட  கலாச்சாரத்தையும் , நம்பிக்கையையும் மாத்தவே முடியாது .அப்படி யாராவது மாத்தினா , மாத்த நினைச்சா அவன் நம்பிக்கைத்துரோகி . எங்க கூட்டத்துல நம்பிக்கைத்துரோகி .யே கிடையாதுங்க ( நல்லா பாருங்க சம்பத் மாதிரி ஒரு ஆள் எல்லா ஜில்லால்யும் உண்டாம்)


20. அஞ்சு நிமிஷம் அவ அ ப்பா கிட்டே பேசுனதுக்கே  நம்பிக்கைத்துரோகம் பண்ண மாடேன்னு சொல்லிட்டியே , 20 வருஷம் வளர்ந்தவ எப்டி உன் கூட வருவான்னு எதிர்பார்க்கறே?



21. ஆம்பளை உடனே லவ்வை சொல்லிடலாம், ஆனா பொம்பளை உடனே லவ்வை சொல்லிட மாட்டா, அப்படி சொல்லிட்டா அது காதலே இல்லை   


22. யோவ், ஒரு லைன் மேன் இப்டித்தான் ஒரு பெண் கிட்டே சவுக்கியமா இருக்கியா?ன்னு தான் கேட்டான், அதுக்கே அவன் ஆள் அட்ரஸை காணோம், நீ எபடி? அட்ரஸ் இல்லாம போகனுமா?


23. என்  மேல வெச்சிருக்கும் நம்பிக்கையை அப்படியே என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு


24. நீ என் ரத்தம்மா ,  தப்பு பண்ண மாட்டே





/.



http://filmreviews.bizhat.com/wp-content/gallery/kumki/kumki_movie_stills-1.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. மலைஜாதி மக்கள்  வெளி ஆட்களை சேர்த்துக்க மாட்டாங்க என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டறாங்க வசனத்துல . ஆனா ஹீரோ அண்ட் கோவுக்கு சாப்பாடு போடும்போது அவங்க பிளேட்ல சாப்பாடு போடறாங்க அது எப்படி? பொதுவா கிராமங்கள்ல  வாழை இலை  சர்வ சாதாரணமா கிடைக்கும். விருந்தோம்பல்க்கு அதுதான் யூஸ் பண்ணுவாங்க. ஆனா வாழை இலையே யூஸ் பண்ணலை 



2. ஹீரோயின் தண்ணீர் எடுக்க வரும்போது கீழே ஸ்லிப் ஆகி விழப்போறார். அப்போ யானை ஆயிரத்தில் ஒருவன் ல எம் ஜி ஆர் ஜெவை காப்பாத்துன மாதிரி டக்னு துதிக்கைல் தடுத்து நிறுத்தி காப்பாத்துது அது வரை ஓக்கே , அனா குடத்துல தண்ணீர் முகண்டு அது எடுத்து தர்றதெல்லா ம் ஓவர் , ராமநாராயணன் படம் மாதிரி இருக்கு. செம காமெடி 


3.ஹீரோவோட மாமா ஃபோன் பண்ணி கும்கி யான்பையோட அங்கே வர்றேன்னு சொல்லும்போது ஹீரோ ஏன் வேணாம்கறார்? வந்தா இவர் கிளம்ப வேண்டியதிருக்கும்னு ஒரு சாக்கு. தேவையே இல்லை. 2 பேரும் சேர்ந்து விரட்றோம்னா மேட்டர் ஓவர். படத்துல மிகப்பெரிய லாஜிக், ஓட்டையே இதுதான். தன் யானை கும்கி இல்லை. இன்னொரு யானை ஒரிஜினல் கும்கி கொண்டு வரவேணாம்னு ஏன் சொல்லனும்? 


4. ஹீரோ பல காட்சிகளில் தான் ஒரு ஜிம் பாடின்னு காட்டிக்க டைட் பண்ணிட்டே இருக்காரே? எதுக்கு?  நரம்பெல்லாம் புடைக்குது. முடியல 


5. படம் போட்டு சரியா 124வது நிமிஷத்துல அதாவது 2 மணி நேரத்துக்கும் மேல தான் ஹீரோ ஹீரோயின் கிட்டே தன் லவ்வையே சொல்றாரு. அதுக்குப்பின் 37 நிமிஷம் . அந்த 37 நிமிஷம் தான் கதையே . ஏன் ஓப்பனிங்க்ல மெயின் கதைக்கு வர்லை?


6. லவ் சொன்னதும் ஹீரோயின் நம்பியாரைப்பார்த்த சரோஜாதேவி மாதிரி ஓடிடறார். அடுத்த நிமிஷமே  பாட்டு , பதில் சொல்லு பதில் சொல்லு தொனில “ எப்போ சொல்லப்போறே” பாட்டு. பாட்டு நல்லாருக்கு, ஆனா மிஸ் பிளேஸ். இன்னும் 4 சீன் காட்டி அதாவது ஹீரோ இன்னும் 4 டைம் ஹீரோயின் கிட்டே பேசிய பின் அந்த பாட்டைப்போட்டிருக்கனும்.


7. அந்த போலீஸ் ஆஃபீசர்ஸ் 2 பேரும் எப்போ பாரு கிராமத்து மக்களை மிரட்டிட்டே இருக்காங்க. இடத்தை காலி பண்ணிடுங்கன்னு. ஏதோ பெரிய ட்விஸ்ட் வரப்போகுது, அந்த மலைப்பகுதில போலீஸ் ஏதோ தகிடு தித்தம் பண்ணுது அவங்க தான் மெயின் வில்லன் அப்டிங்கற மாதிரி பில்டப் பேக்கிரவுண்ட் மியூசிக் எல்லாம் கொடுத்துட்டு  கடைசில சப்



8. ஹீரோ அடிக்கடி யானையின் தந்தத்தை புல் அப்ஸ் பார் மாதிரி நினைச்சு  டபுள் பார்மாதிரியூஸ் பண்ணி எக்சசைஸ் பண்றது மட்டும் 6 இடங்கள் ல வருது.


http://www.fashionstay.com/img/lakshmi-menon-hot-without-makeup.jpeg



9. தன் மேல ஹீரோயின் அப்பா பரிபூரண நம்பிக்கை வெச்சிருக்காரு அப்டினு ஹீரோவும் , ஹீரோயினும் பரஸ்பரம் நான் உன்னை மறந்துட்டேன்  அப்டினு சொல்றது காதலுக்கு மரியாதை படத்துல ஷாலினி சொல்வது போல் அழுத்தமா வந்திருக்க வேண்டிய காட்சி. ஆனா ஏனோதானோன்னு சாதாரணமா இருக்கு. 


10. படத்தின் மிக முக்கியமான யானை  VS   காட்டு யானை மோதல் மிகச்சாதாரணமா காட்டி இருக்காங்க. இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்.


11. கதை சொல்லும் உத்தி ரொம்ப சாவதானமா கேரளா மக்களுக்கு சொல்வது போல் இருக்கு 



12, கார்த்திக் நடிச்ச சோலைக்குயில்  படத்துல இருந்து 20% காட்சிகள் , மலைச்சாரல் அப்டினு ஒரு மலையாள கில்மாப்படம்ல இருந்து 30 % காட்சிகள் சுடப்பட்டிருக்கு ( அதுக்காக சீன் இருக்கா?ன்னு கேட்கப்படாது , இது குடும்பப்படம் )


13. நல்ல நேரம் எம் ஜி ஆர் படம் பார்ப்பது மாதிரி ஆரம்ப யானைக்காட்சிகள் ஆயாசத்தை  வர வைக்குது . இயக்குநர் அட்டகாசமான இசை ஆல்பம் , அற்புதமான ஒளிப்பதிவு இரண்டையும்  விழலுக்கு இரைத்த நீர் ஆக்கிட்டார். 


14. ராமைய்யா பேசும் பல வசனங்கள் அரதப்பழசான மொக்கை ஜோக்குகள், நாகெஷ் , எஸ் வி சேகர் காலத்து வசனங்கள் .  முடியல. அவரை ஓவரா நம்பிட்டீங்க போல



15. மலை கிராமத்து மக்கள் ல கன்னிப்பெண்கள் காதுல தோடு  மட்டும் தான் போடுவாங்க , காது மடல்ல காது ஃபுல்லா என்னென்னெமோ குத்தி இருப்பது மேரேஜ் ஆன பொண்ணுங்க தான். ஆனா ஹீரோயின் அப்டித்தான் இருக்கு , அதே போல் ஜரிகை வெச்ச ஜாக்கெட் கரை எல்லாம் அவங்க போட மாட்டாங்க , மற்ற எல்லாப்பெண்களும் அப்படிப்போடலை, ஹீரோயின் மட்டும் .அதே போல் ஸ்டிக்கர் பொட்டு வெச்சிருக்கு. மற்ற எல்லாப்பெண்களும் குங்குமம் வெச்சிருகாங்க, ஹீரோயின் மட்டும் ஸ்டிக்கர் பொட்டு


16. மலை வாழ் கிராம மக்கள் கிட்டே செல் ஃபோன் எல்லாம் கிடையாது. யாரும் வெச்சிருக்கலை, ஆனா சார்ஜ் இருக்கா? அப்டினு ஒருத்தன் ஹீரோ கிட்டே கேட்கறான் , சார்ஜர் எடுத்தும் தர்றான்  ஹி ஹி  





http://gallery.southdreamz.com/cache/actress/lakshmi-menon/stunning-fashion-and-style/hot-and-beautiful-desi-indian-girl-lakshmi-menon-photo-gallery-3_720_southdreamz.jpg



எதிர்பார்க்கும்  ஆனந்த விக்டன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி.பி கமெண்ட் - ஒளிப்பதிவு , லொக்கேஷன், பாட்டு ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். மற்ற படி படம் மாமூல் சாதா படம் தான். 200 ரூபா , 150 ரூப்பாக்கு எல்லாம் ஒர்த்தே இல்லை. 3 நாள் வெயிட் பண்ணினா கவுண்ட்டர் டிக்கெட்ல பாதிதான் வாங்குவாங்க . ஏ செண்ட்டர்ல  மட்டும் ஜனவரி 10 வரை ஓடும் , பி சி செண்ட்டர்ல எல்லாம் அடுத்த வாரம் ஜாக்கி சான் படம் மாத்திடுவாங்க ( நான் சொல்லலை, தியேட்டர் ஓனரே சொன்னார் )


http://www.kollytalk.com/wp-content/uploads/2012/07/Lakshmi-Menon-Prabhu-Solomon.jpg


diSki -

நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

  
http://www.adrasaka.com/2012/12/blog-post_5285.html

நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 

 

அனைத்துப்பாடல்களையும் வரி வடிவில்

கும்கி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_6836.html

  http://moviegalleri.net/wp-content/gallery/telugu-actress-lakshmi-menon-photo-shoot-stills/telugu_actress_lakshmi_menon_photo_shoot_pics_4377.jpg

 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 14.12.2012 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters/images/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters03.jpg 
1. நீதானே என் பொன்வசந்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இப்படத்தின் தமிழ் பதிப்பில் ஜீவாவும், தெலுங்கு பதிப்பில் ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானியும் நடிக்கின்றனர். சமந்தா இரு மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டு, அனைத்து பாடல்களும் வெற்றியடைந்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தை வரும் டிசம்பர் 14-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன்னரே இப்படத்தை வெளியிடுவதால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த கவுதம்மேனனின் அடுத்த படைப்பாக வரும் இப்படம், மக்கள் மனதில் எந்தளவுக்கு இடம்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


ஈரோடு  சண்டிகா , வி எஸ் பி , ஸ்ரீலட்சுமி  ஆகிய 3 தியேட்டர்களில் ரிலீஸ்

இயக்குநர் , ஹீரோயின் பேட்டி , ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் 

படிக்க - நீதானே என் பொன்வசந்தம் http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html



கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 

http://www.adrasaka.com/2012/12/2_13.html

 


 http://tamilasia.com/wp-content/uploads/2012/07/kumki-movie-songs-download.jpg

 2. கும்கி -

இளைஞர்களின் ரிங் டோனாக மாறிய கும்கி பாடல்கள்

கொலிவுட்டில் மைனா பட வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள 'கும்கி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கும்கி படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது படத்தின் பாடல்கள், ட்ரைலரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள்.


இதற்கிடையில் கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளுக்கு இசை விருந்தாக அமைந்துள்ளது.


'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.


மைனா பட குழு அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறார் என்று தகவல்


ஈரோடு அபிராமி, ஆனூர், ஸ்ரீநிவாசா  ஆகிய 3 தியேட்டர்களில் ரிலீஸ் 


கும்கி - சினிமா விமர்சனம்

   http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html
http://static.imax.com/media/photos/sweepstakes/HOB_Sweeps_CAROUSEL_300x250.jpg

3.The Hobbit: An Unexpected Journey (2012) - ஹாலிவுட் படம்  லோர்ட் ஒஃப் தெ ரிங்க்ஸ் சீரிஸுக்கு பிறகு அதிகளவில் எதிர்பார்க்கும் பீட்டர் ஜெக்ஸனின் இயக்கத்தில் வரும் படமிது.. The Lord of the Rings Trilogy இன் Prequel ஆக வெளிவர இருப்பதே இந்த பெரிய எதிர்பார்ப்புக்கான முதற் காரணம்..மேலும் அந்த சீரிஸில் வரும் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு திரும்பி வருவது இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.இதுவும் ஒரு அட்வென்ச்சர் பேண்டஸி திரைப்படமாகும்..

Bilbo Baggins is swept into a quest to reclaim the lost Dwarf Kingdom of Erebor from the fearsome dragon Smaug. Approached out of the blue by the wizard Gandalf the Grey, Bilbo finds himself joining a company of thirteen dwarves led by the legendary warrior, Thorin Oakenshield. 



Their journey will take them into the Wild; through treacherous lands swarming with Goblins and Orcs, deadly Wargs and Giant Spiders, Shapeshifters and Sorcerers. Although their goal lies to the East and the wastelands of the Lonely Mountain first they must escape the goblin tunnels, where Bilbo meets the creature that will change his life forever ... Gollum. 


Here, alone with Gollum, on the shores of an underground lake, the unassuming Bilbo Baggins not only discovers depths of guile and courage that surprise even him, he also gains possession of Gollum's "precious" ring that holds unexpected and useful qualities 


http://www.cinepicks.com/tamil/gallery/naane-varuven/nane-varuven-film-stills-1.jpg

4. நானே வருவேன் - பாபு கணேஷின் இயக்கத்தில் வருது. தமிழின் முதல் காதல் வாச்னைப்படம்னு விளம்பரம். அதாவது படத்துல ஹீரோயின் மல்லிகைப்பூ வெச்சுட்டு வந்தா தியேட்டர்ல மல்லிகைப்பூ வாசம் அடிக்குமாம். என்னென்னெ விபரீதம் இதனால ஆகப்போகுதோ?

Staring : Babu Ganesh, Chinni Jayanth, Sriman, Shilpa, Steepy, Archana,
Director : Babu Ganesh,
Producer : Babu Ganesh,
Music Director : Babu Ganesh,

நன்றி - கனவுகள் 1000, விகடன், தினமலர், மாலை மலர் 

Thursday, December 13, 2012

கும்கி

http://tamilasia.com/wp-content/uploads/2012/07/kumki-movie-songs-download.jpg

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்க, இமான் இசையமைத்து இருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

'கும்கி' படம் துவங்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பார்ப்பு தான். பிரபு சாலமன் இயக்கம் மட்டுமன்றி, நடிகர் திலகத்தின் பேரனும் பிரபுவின்  மகனுமான விக்ரம் பிரபு நடிக்கும் முதல் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றது.

காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வரும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் யானைக்கு 'கும்கி' என்று பெயர். அதனையே படத்திற்கு பெயராக வைத்து இருக்கிறார்கள். யானைகள் ஏன் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வருகின்றன? அதனை தீர்க்க என்ன வழி என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி சொல்லி இருக்கிறார்கள்.

'கும்கி' படம் குறித்து பிரபு சாலமன் " 'காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வர்ற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கினு பேரு. எதாவது ஒரு பகுதியில், 'யானைகள் புகுந்து அட்டகாசம்’, 'ரேஷன் கடையை உடைத்து நொறுக்கியது’, 'மனிதர்களைத் தாக்கியது’னு தினமும் யானைகளைப்பத்தி ஃப்ளாஷ் நியூஸ் வருது. ஏதோ யானைகளை வில்லன் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டோம்.

ஆனா, நிஜத்தில் யானை ரொம்பப் பாசமான ஜீவன். நேசிக்கத்தக்க மிருகம். ஆசாபாசம், கோபம், காதல், பழிவாங்கும் உணர்ச்சி, ஞாபகசக்தினு 40-50 டன் எடை கொண்ட மனிதன் அது... அவ்வளவுதான். யானையைச் சும்மா மிருகம்னு சொல்ல கூச்சமா இருக்கு. அந்த யானைகளின் வாழ்வியல் சூழலின் பின்னணியில் ஒரு காதல் சொல்லி இருக்கேன்.

இப்போ வரை யானைகள் பத்தி தனியா ஒரு புத்தகம் எழுதுற அளவுக்குப் படிச்சாச்சு. யானைப் பாகன்களோடு பேசினால் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் சுவாரஸ்யம். யானைக்குச் சின்ன சத்தம்கூடப் பிடிக்காது. வனத்தில் இயல்பா யானைகள் திரியும்போது, அவ்வளவு அழகா இருக்கும். யானைகள் மனிதர்களின் வாசத்தைப் பதிவுபண்ணி வைக்கும். பாகனோட வார்த்தைக்குத்தான் கீழ்ப்படியும். எங்கே நெல் இருக்கு, சோளம் இருக்குனு அதுங்களுக்குத் தெரியும்.

பரம்பரை பரம்பரையாக யானைகளின் ஜீன்லயே மேப் ரூட் இருக்கு. பேச்சிலர் ஆண் யானைகள் மட்டுமே தனியாத் திரியும். பெண் யானைகள் மகள், அத்தை, அம்மானு உறவுகளோடுதான் திரியும். யானைகளைக் காதலிக்கிற ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலான காதல்தான் படம்.

கிராஃபிக்ஸ் கப்பல்ல நடந்தாலும் 'டைட்டானிக்’தான் உலகின் பிரமாண்டமான காதல் படம் இல்லையா? அப்படிப் பார்க்கும்போது, நிஜமான யானைகள் வளர்த்தெடுக்கும் 'கும்கி’ பிரமாண்டமான காதல் படமா இருக்கும். வனத்தையும் மனத்தையும் ஒருசேரத் தூண்டில்  போட்டுத் தூக்கும். அதுதான் படத்தின் விசேஷம்!'' என்று தெரிவித்தார்.

'கும்கி' படத்தின் இசையை ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, சத்யராஜ் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே ஒன்றிணைந்து வெளியிட்டார்கள். அவர்கள் அனைவருமே இணைந்து வெளியிட்டதாலோ என்னவோ பாடல்கள் அனைத்துமே ஹிட். இமான் இசையில் 'ஒண்ணும் புரியல', 'நீ எப்போ புள்ள' ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சியில் வருடத்திற்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும். அந்த நேரம் வரை காத்திருந்து ஒரு பாடலை அங்கு சென்று படமாக்கி இருக்கிறார்கள். அது போலவே பயிர் நட்டு அது வளர்த்து அறுவடை செய்யும் வரை காத்திருந்து பல காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறது. டிசம்பர் 14ம் தேதி முதல் தியேட்டர்களில் வலம்வர இருக்கிறது 'கும்கி'.


இளைஞர்களின் ரிங் டோனாக மாறிய கும்கி பாடல்கள்
[
கொலிவுட்டில் மைனா பட வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள 'கும்கி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கும்கி படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது படத்தின் பாடல்கள், ட்ரைலரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளுக்கு இசை விருந்தாக அமைந்துள்ளது.
'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
மைனா பட குழு அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறார் என்று தகவல்

 
 

1.படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்




2.படம் : கும்கி
இசை : D. இமான்
பாடியவர் : அதிதி பால்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்

ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே

ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ

ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கி கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனை
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடவே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

3.
படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
வரிகள் : யுகபாரதி

நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற



4. படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : D இமான்
வரிகள் : யுகபாரதி

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஒருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல





5.படம் : கும்கி
இசை: D இமான்
பாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்
வரிகள் : யுகபாரதி

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேலை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க
வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொழப்போமே



6.படம் : கும்கி
பாடியவர் : மகிழினி மணிமாறன்
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்

சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்


7. படம் : கும்கி
இசை : இமான்
பாடியவர் : ஹரிச்சரண்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
ஹய்யய்யய்யோ
ஒ ஹய்யய்யய்யோ

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்துவாய்
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

ஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இளநெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

நன்றி -தமிழ் பாடல் வரிகள் , விகடன் , லங்காஸ்ரீ

diSki -

நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

 
 
 

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 




 அ








கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

http://cinema.lankasri.com/photos/full/movies/nee_dhane_endhan_ponvasantham.jpg 

நீதானே என் பொன் வசந்தம் ஃபாரீனில் ரிலீஸ் ஆகி விட்டது. ட்விட்டர்  படம் பார்த்துட்டு நறுக் சுருக் விமர்சனத்தை ட்விட்டர் லாங்கரில் போட்டுட்டார்.



நீ தானே என் பொன் வசந்தம் = அரைத்த மாவு!

அய்யயோ! இத படிச்சா படம் பார்க்க சுவாரஸ்யம் இல்லாம போயிருமேனு நினைக்கிற அளவுக்கு படத்துல ஒரு சுவாரஸ்யமும் இல்ல!

கெளதம்மேனனுக்காகவும், இசைஞானிக்காகவும் பார்க்க தூண்டிய படம்! படத்தில் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களான்னு டவுட் வருது படம் பார்க்கும் போது! படத்தில கதைனு ஒரு யழவும் இல்ல! காலங்காலமா காட்டுற ஈகோ புடிச்ச காதல் கதை! கெளதம் எதுக்கு இதே கருமாந்திரம் காதல் கதைக்குள்ளயே குதிரை ஓட்டுறாருனு தெரில! காக்கி சட்டை கதை தான் உங்களுக்கு கரீக்ட்! இன்னொரு விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரியான படம்! ஆனா கம்பேர் பண்ணுனா விதாவ பெட்டர்

படத்துல வழக்கம் போல ஆங்காங்கே பல இங்கிலீஸ் டயலாக்குகள் பேசுறாங்கே! ஏன் சந்தானமே இங்கிலீஸ்ல பேசி காமெடி(!) பண்றாருனா பார்த்துகங்களேன்

படத்துல பல இடங்களில் லிப் டூ லிப் கிஸ் காட்சி இருக்கு! ஆனா ஒரு கிஸ்ஸ கூட நேரடியா காட்டல!  இதுக்கு பாரதிராஜா மாதிரி பூவையும் பூவையும் ஒரச விட்டுருக்கலாம் கெளதம் சார்!

பாடல்கள பத்தி ஏற்கனவே பல விமர்சனம் பார்த்தாச்சு! அதனால அதிகம் சொல்ல போறதில்ல! எல்லாப் படத்துலயும் பாட்டு வரும் போது தான் வெளிய போய் தம் அடிப்பாங்கே! படத்துல பாட்டு தான் ஒரளவுக்கு நம்மள சாந்த படுத்துது!

அதுவும் படத்துல எந்த பாட்டுமே முழு பாட்டு இல்ல எல்லாமே பிட் சாங்ஸ்! பாடல்கள் ஸ்கீரின்லயாவது நல்லாருக்கும்னு பார்த்தா ம்ஹீம் அதே ஓகே ரகம் தான்! பேக் கிரவுண்ட் மியுசிக் சொல்றதுகில்ல! ஒகே ரகம் தான்! ஆனா பழைய ராஜா சார் எந்த சீனிலும் காண கிடைக்கல!

படத்துல சமந்தா ஒரு சீன்ல “ஒரு மயிறும் இல்ல”னு சொல்வாங்க! படம் முடிஞ்சு வர்றப்ப அந்த டயலாக் தோணுது நமக்கு! படத்துல……!
கெளதம் சார் , ராஜா சார்…. .. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


டிஸ்கி: படம் பார்க்கனும்னா காதலி இல்ல கேர்ள் பிரண்டோட போங்க! நிறைய சீன்ஸ் போரடிக்கும் அவங்க பக்கத்துல இருந்தா குஜாலா படம் பார்க்கலாம்(!)




Neethane En Ponvasantham Movie Review- Wasted Opportunity

Featured, Movies — By on December 12, 2012 11:14 pm

Produced by Photon Kathaas and RS Infotainment, directed by Gautham Vasudev Menon, Neethane En Ponvasantham is a love story (or as the director cleverly puts it across – moments from Varun-Nithya’s love story).



 With excellent acting, fantastic music, pleasing-on-the-eye cinematography, Neethane En Ponvasantham is a great case study of sum being lesser than the parts. The film starts off when Varun joins college and he meets Nithya in the college culturals. 



They share a history of love-hate relationship. First, they meet when they were kids and then when they were in school. Sparks fly when they meet duing college and they are together for the next four years. The film tries to capture some interesting moments in their lives. Unfortunately, only some of the moments are engaging.



I am not a great fan of GVM’s VTV. It was not bad cinema, it wasn’t a plot oriented film but a character oriented film. But when the director tries the same technique again in NEP, he falls flat. Despite excellent acting by Samantha and Jiiva, you really do not care as much for Varun and Nithya as you should have. 



Beyond a point their fights become irritating and you wonder why at all they should be together. The biggest drawback of NEP is the script focusses too much on the fights between Varun and Nithya and not so much on romantic moments. And you know the director has faltered when he packs off Nithya on a holiday to Edinburgh, and focuses on Varun and you immediately sit up with interest. The moment Nithya is back, the script sags again.



Just like in the Tamil film Khushi, a key scene happens on the rooftop just before the interval – the roof top acts as a character here (Varun-Nithya have had some real intimate moments in this rooftop), but the scene is absolutely ineffective due to the mishandling by the director. 



(The scene from Khushi in comparison is Citizen Kane – more on this a bit later). To give credit to the film, there are a few moments which are engaging. Nithya teaching Varun how to pronounce Edinburgh, the initial school scenes, the climax scene in the same rooftop, the family scenes which changes Varun from a boy to a man, and the first few moments in the college culturals are really entertaining. Incidentally, these are the portions when Varun and Nithya do not fight!



And GVM has done the biggest disservice to Ilayaraja by having improper situations for at least 3 songs. Mudhal Murai, Kaatrai konjam and Ennodu act as speed breakers. The songs are picturised with love and care but due to the situations in which they occur, you really do not get involved. 


But the balance 4 songs – Saindhu Saindhu, Sattru Munbu, Vaanam Mella and Pengal Endral – are good. Sattru Munbu is rivetting in its picturisation in the climax, and the way Samantha emotes here clearly lifts the film to a different level. (Thengi pona Ore nadhiyena indru naanada – you can see it in her eyes – frankly I did not think she could act this well).




Ah!the rooftop !!!
The climax is very good on its own, but when compared to the rest of the film, it is outstanding. And what works here are the moments where no one talks – and this is where Raja scores. What a BGM in the last few minutes. When you hear Raja’s BGM in the last few scenes, you immediately realize what is wrong with the film – through the film, some one or other keeps on talking, and there is just no scope for BGM. GVM – Is this how you write scenes? 



You should have learnt from a less sensitive director (perhaps more street smart) like S.J.Surya. Take the Khushi rooftop scene for example, Vijay and Jothika fight in the rooftop – they keep on arguing – the pitch of their tones keep on getting high – and then an airplane takes off nearby and interrupts their argument for a few moments – and it provides such a character to the scene.



And when Vijay says something he should not have said, the director immediately focuses on Jothika’s close up reaction. She is so hurt that Vijay immediately realizes the mistake he has done and his facial expression conveys that he is really sorry for what he had said. But she is now so hurt that she isn’t prepared to give him another chance – 


the director focuses on close ups and the music director gives a reasonable good BGM and then the scene becomes so very effective. GVM – You may well want to show that the rooftop is a character by opting for a long shot that covers the rooftop as well as Chennai skyline, but you can’t extend it to the whole scene. It reduces the experience to watching something like a stage play.


And you take a genius like Raja, who changed the way BGM was written in Indian Cinema, and offer him no scope at all? I mean, isn’t this suicide? Here is a composer, who had saved films like Idhayam before. And the moment you listen to the last couple of scenes, you know Raja could have saved NEP, if the director thought about BGM when conceiving shot composition. But the current product is even beyond the Maestro. Wasted Opportunity.

நன்றி -  madabout moviez, ட்விட்டர் திருட்டுக்குமரன்




இயக்குநர் பேட்டி படிக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html



கும்கி - சினிமா விமர்சனம்

 
http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html