Saturday, November 17, 2012

விடுதலைப் புலி தளபதி பரிதி சுட்டுக் கொலை

: தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பரிதி என்ற ரீகன் பிரான்ஸ் நாட்டில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் விடுதலை இயக்கத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன் ஆகியோர் கண்டனமும் வீரவணக்கமும் தெரிவித்துள்ளனர்.
பழ. நெடுமாறன் இரங்கல்


பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.



நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



30 ஆண்டுகால நண்பர்- கொளத்தூர் மணி



விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியும், ஈழவிடுதலை இயக்கத்தின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளருமான பரிதி என்ற ரீகன் அவர்கள் பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் அளவிலா வேதனையும் அடைந்தேன். பரிதி அவர்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர். அதன் பின்னர் கொளத்தூரில் எங்கள் தோட்டத்தில் நடந்த புலிகளின் மூன்றாம் பயிற்சி முகாம் காலத்தில் எனக்கு அறிமுகமானவர். முப்பதாண்டு கால நண்பரை இழந்த வேதனை ஒரு புறம் இருக்க அவர் கொல்லப்பட்டிருக்கும் விதம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.



முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்த சிங்களப்பேரினவாதம் - இன்னமும் பல்வேறு வடிவங்களில் தனது இனப்படுகொலையை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தொடரும் சிங்கள பேரினவாதம் - தனது கோரக்கரங்களை இலங்கைக்கு வெளியே நீட்டி வெளிநாடுகளில் வாழ்பவர்களையும் கொன்று வருகிறது.



பரிதி அவர்கள் பல ஆண்டுகாலமாக ஈழவிடுதலை இயக்க அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு சிறையில் இருந்தவர். பின்னர் மீண்டும் பொறுப்பேற்று அமைதியாகச் செயல்பட்டு வந்தவர்.



நீண்ட நாட்களாகவே அவர் மீது குறிவைத்திருந்து கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் அவர் மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அதில் பிழைத்த அவர் இந்த ஆண்டு அதே நவம்பர் மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்பாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



மாவீரர் நாள் நிகழ்வு என்பது தமிழ் மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் நிகழ்வு என்பதால் அந்நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்புடன் இருக்கும் சிங்கள அரசு, ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டே வந்துள்ளது. இந்த ஆண்டு தங்களின் நீண்டநாள் குறியான தோழர் பரிதியைக் கொன்று, மாவீரர்நாள் நிகழ்வைச் சீர்குலைக்கும் தனது எண்ணத்தைச் செயல்படுத்தியுள்ளது.



ஒவ்வொரு இழப்பும் மேலும் உறுதியையே அளிக்கும் என்பதையும் பரிதியின் இழப்பு இந்த மாவீரர் நாள் நிகழ்வை மேலும் எழுச்சி உள்ளதாக மாற்றும் என்பதும் சிங்களர்கள் அறியாதது.



வாழ்நாளெல்லாம் தனது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்த நண்பர் பரிதிக்கு எனது வீர வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.



வைகோ வீரவணக்கம்


விடுதலைப் புலிகளின் தளபதி பரிதிக்கு வீரவணக்கம் செலுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 8 ஆம் தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஒர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம்; தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், ஃபிரான்ஸ நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்தரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.



நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளபதிகளுள் பரிதியும் ஒருவர். 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில், வன்னிக்காடுகளில் இடைவிடாத இந்திய-சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே, வான்வெளிக் குண்டு வீச்சுக்கும் பீரங்கி தாக்குதளுக்கும் ஊடே பிரபாகரனோடு நான் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம், கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின் போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போதே மனம் பாறையாய்க் கனக்கிறது.



பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்றபோது, மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்துக்குச் சென்றேன். அங்குதான் ஈழத் தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார். 1990 ஆம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்கமுடியாத நிலையில், சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்சு நாட்டின் புலிகளின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.



பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபின், பரிதி கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில், கொடியோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.



இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில், கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமான கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்து விட்டது. பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில், தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.



தலைமைக்கும், இயக்கத்துக்கும், தமிழ் ஈழ விடுதலை இலட்சியத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும்வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ் ஈழ இலட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதமேற்போம் என்று கூறியுள்ளார்.



வேல்முருகன் கண்டனம்



இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர்.



தன் வாழ்நாள் முழுவதும் தாயக விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 நன்றி - தட்ஸ் தமிழ்

சுஹாசினி என்னை நிராகரித்தது ஏன்? - மணிரத்னம் பேட்டி

http://www.cinesouth.com/images/new/pwed-4.jpg

குழந்தைகளும் வயதானவர்களும் இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள்!"


ஆர்.சரண்
ணிரத்னம் பேசுவதே ஆச்சர்யம். அதுவும் மீடியா ஆட்களுடன் பேசு வது அபூர்வம். அப்படிப்பட்டவர் ஒரு பேட்டிக்காக ஒரு செய்தியாள ரிடம் 100 மணி நேரம் பேசியிருக் கிறார் என்றால், நம்ப முடிகிறதா?



'தி இந்து’ நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன், தேசிய விருதுபெற்ற திரை விமர்சகர். சினிமா, இசை, ஓவியம், புத்தகம், பயணம், நகைச்சுவை எனப் பல தளங்களில் எழுதுபவர். பென்குவின் பதிப்பகத்துக்காக இவர் மணிரத்னத்தை எடுத்திருக்கும் நீண்ட பேட்டிதான் 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வந்திருக்கிறது.



''நான் 50 தடவை அவரைச் சந்தித்து இருப்பேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு சூழலில் பேசுவோம். எவ்வளவோ முறை அவரை வெறுப்பேற்றும்விதமான கேள்விகளைக் கேட்டு இருக்கிறேன். ஆனால், அவரிடம் சற்றும் முகச்சுளிப்போ, அசௌகர்யமான உடல்மொழியோ வெளிப்பட்டது இல்லை. விமர்சகரை மதிக்கத் தெரிந்த உன்னதமான கலைஞன் மணிரத்னம்!'' என்கிறார் பரத்வாஜ் ரங்கன். புத்தகத்துக்கு அணிந்துரை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்லவும் வேண்டுமா? விற்பனையில் பரபரப் பைக் கிளப்பி இருக்கிறது 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’. புத்தகத்தில் இருந்து...


http://www.our-kerala.com/newgallery/imageMaker.php?size=530x500&image=images/photos/images/suhasini%20with%20maniratnam2.jpg

''பார்த்த முதல் படம்...''



'' 'உத்தமபுத்திரன்’ என்று நினைவு. நான் கலாஷேத்ரா கேம்பஸில் இருக்கும் பெசன்ட் தியாசெபிகல் ஸ்கூல் ஹாஸ்டலில் தங்கிப் படித்த காலத்தில்தான் நிறையப் படங்கள் பார்த்தேன். அங்கு பக்கத்தில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. யாருக்கும் தெரியாமல் நண்பர்களோடு லுங்கி, பனியனோடு போய் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். அங்கு வார்டனும் யாருக்கும் தெரியாமல் வருவார். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் பார்த்து பம்மிக்கொள்வோம்!''




''முதல் பட அனுபவம்...''



''மும்பை 'பஜாஜ் இன்ஸ்டிட்யூட்’ டில் எம்.பி.ஏ. முடித்த பின், அங்கு ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அப்போது எல்லாம் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இருந்தது இல்லை. ஆனால், நண்பர்கள் பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிஷங்கர், வீணை பாலசந்தரின் மகன் ராமன் ஆகியோருடனான சினிமா தொடர்பான விவாதங்களும் திரைக்கதை அமைக்கும் பணி களும்தான் என்னை சினிமா பக்கம் ஈர்த்தன.




ஆனால், அதுவரை நான் சினிமாபற்றித் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் வெறும் ஆங்கிலப் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே. இந்தச் சூழலில்தான் பாரதிராஜாவின் '16 வயதினிலே’, மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’ இரண்டும் என்னுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.



சந்தான பாரதி, பி.வாசு, பி.சி.ஸ்ரீராம் போன்ற நண்பர்களின் அறிமுகம் கிடைத்தபோது, 'உட்லண்ட்ஸ் டிரைவ் இன்’னில்தான் எப்போதும் கிடப்பேன். நாள் முழுக்கக் காபி குடித்துக்கொண்டு சினிமாபற்றிப் பேசுவோம். கிட்டி எம்.பி.ஏ. படிக்கும்போது எனக்கு சீனியர். அவர் அப்போது சோழா ஷெரட்டன் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.



 'பல்லவி அனுபல்லவி’ கன்னடப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை முடித்த பின், கமலிடம் காட்டி ஓ.கே. வாங்குவதற் காக எப்போதும் கிட்டியுடன் கமல் வரும் நேரத்தில் அங்கு இருப்பேன். 'பல்லவி அனுபல்லவி’ படத்தில் அனில் கபூர் நடித்த ரோலில், அப்போது கமலை நடிக்கவைக்க வேண்டும் என்பது என் கனவு. ஆனால், கமலுக்கு நான் ஒரு கதை சொன்னால், அவர் எனக்கு ஐந்து கதைகள் சொன்னார்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_-_Film_Maker_Mani_Ratnam_and_his_wife_Suhasini.jpg/220px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_-_Film_Maker_Mani_Ratnam_and_his_wife_Suhasini.jpg

 இப்படியே போனது. சாருஹாசன் அறிமுகமானார். நான் யாரிடமாவது உதவி இயக்குநராக சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். என்னுடைய அப்போதைய ஒரே சாய்ஸ்... மகேந்திரன். சாருஹாசனே அப்போது மகேந்திரனிடம் என்னை அழைத்துச் சென்றார். ஆனால், மகேந்திரன் என்னைக் கவனிக்கவே இல்லை. அப்போது வருத்தமாக இருந்தது.



ஆனால், சில வருடங்களில் இயக்குநரான பிறகு இந்தச் சம்பவத்தை அவரிடம் சொன்னபோது சிரித்துக்கொண்டே, 'சந்தோஷப்படுங்க... யாருடைய துணையும் இல்லாமல் நீங்கள் பெரிய ஆளாக வர வேண்டும்னு இருந்திருக்கு. அன்னைக்கு நான் கவனிக்காததுகூட நல்லதுக் குத்தான் பார்த்தீங்களா!’ என்றார்.



என் அண்ணன் ஜீ.வி. மூலம் 'கலாகேந்திரா’வின் இயக்குநரான துரைக்கு ஸ்க்ரிப்ட்டை அனுப்பிவைத்தேன். அது பாலசந்தரின் கைகளுக்குக் கடைசி வரை போய்ச் சேரவில்லை என்பது எனக்கு அப்போது தெரியாது. பாரதிராஜா என் அடுத்த டார்கெட். அவரை நேரில் போய் சந்தித்தேன். பெர்ஃபெக்ட் ஸ்பைரல் பைண்டில் ஆங்கில ஸ்க்ரிப்ட்டோடு போய் நின்றேன். 'நிழல்கள்’ படத்தில் பிஸியாக இருப்பதாகவும் பிறகு சந்திக்கலாம் என்றும் பாஸிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்தார்.



 இயக்குநர் ஆன பிறகுதான் தெரிந்தது என்னு டைய குழப்பமான ஆங்கில நடை அவருக்கு அன்று புரியவில்லை என்பது. பி.சி.ஸ்ரீராமோடு லாம்ப் ரெட்டா ஸ்கூட்டரில் ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ஏறி இறங்கி இருக்கிறேன். கடைசியில் கிருஷ்ணமூர்த்தி என்ற தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு, அப்போதைய ஹிட் பெர்சனாலிட்டிகளான ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவையும் இளையராஜாவையும் சந்தித்து கதையைச் சொன்னேன்.



 அதன் பிறகு, அந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்காக சுஹாசினியிடம் கேட்டேன். 'நோ’ சொல்லிவிட்டார். (சுஹாசினி என் இரண்டு படங்களை அப்போது நிராகரித்தார்). அப்புறம் அனில் கபூர், லட்சுமி, எடிட்டர் லெனின் வந்தது எல்லாம் பெரிய கதை. படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், சிறந்த திரைக்கதைக்கான மாநில விருதும், கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையே ஆன உணர்வுகளைப் பேசியதால், தைரியமான முயற்சி என்று பாராட்டுக்களையும் குவித்தது!''



''முதல் தமிழ்ப் படம்...''



''என் முதல் தமிழ்ப் படம் 'பகல் நிலவு’. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வசனம் எழுதினேன். பேப்பரில் இருந்து காட்சிகளாக உருவம் கொடுக்கும்போது ஆங்கிலத்தில் இருப்பது வேறு மாதிரி இருந்தது. அது பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். தமிழில் முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதினேன். 'மெயின் ஸ்ட்ரீம் கமர்ஷியல் படம் இது’ என்று நிர்ணயித்துக்கொண்டு, நானும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் இணைந்து வேலை பார்த்தோம். சத்யராஜ் - முரளி - இளையராஜா காம்பினேஷனில் அண்ணனே இந்தப் படத்தைத் தயாரித்ததால், நான் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான சினிமா கற்றுக்கொண்டே இயக்கிய படம்!''




''முதல் தோல்வி...''



''தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.



நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றி யது. குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத் துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!''



''முதல் சிறுகதை...''



''திவ்யா என்ற ஒரு சிறுகதையை, எனக்குத் தெரிந்த தமிழில் பள்ளி நாட்களில் எழுதி இருந்தேன். மோசமான பிராமணத் தமிழில் இருக்கும் அது. என் மனைவி அதைப் படிக்கும்போது எல்லாம் சிரிப்பாள். உடையில் கட்டுப்பாடு, ஆண்களோடு பேசக் கட்டுப்பாடு எனக் கட்டுப்பாடுகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண்ணை, திடீரென ஒரு நாளில் ஒரு மனிதனுடன் தனி அறைக்குள் தள்ளிவிட்டு வாழ்ந்துகொள் என்று சொல்வது அபத்தம் இல்லையா என அந்தக் கதை பேசும். முதலிரவை மட்டுமே மையமாக வைத்து அந்தக் கதையை எழுதி இருந்தேன். முதலிரவைத் தாண்டிய என் பார்வைதான் 'மௌன ராகம்’. 'கம்பளிப் பூச்சி மாதிரி இருக்கு’ என்ற டயலாக் அந்த முதல் சிறுகதையில் இருந்து வந்ததுதான்!''



''முதல் மெகா ஹிட்...''



''மும்பையில் எம்.பி.ஏ., படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள்.



தமிழ்நாட்டில் இருந்து போன ஒருவ ரால் எப்படி வேற்று மொழி நகரமான மும்பையில் கொடி கட்டி ஆள முடிகிறது என ஆச்சர்யப்பட்டேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படம் எடுக்கலாம் என்று சொன்னதும், உடனே சம்மதித் தார். கமல் இந்தப் படத்தில் ஓர் இயக்கு நரின் ஆளுமையோடு என்னை வழி நடத்தினார். சக நடிகர்களுக்கு மேக்கப் போட்டுவிடுவதில் ஆரம்பித்து, ஹேர் ஸ்டைல் வரை அந்தப் படத்தில் கமல் எனக்கு அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகத்தான் இருந்தார்.



ஒரு காட்சியை விளக்கும்போதே ஏழு விதமான யோசனைகளோடு அந்தக் காட்சிக்குப் பன்முகத்தன்மை கொடுத்து வியக்கவைப்பார். ஒரு நடிகனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற நடிப்புகுறித்த என் எல்லைகளை விரிவாக்கியதே கமல்தான். ஓர் இயக்குநர் அவரிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம், நிறையக் கவன மாகவும் இருக்க வேண்டும்!''  



''முதலும் கடைசியுமான சென்டிமென்ட்ஸ்...''



''என் படங்களில் எப்படியும் அதிக அளவில் குழந்தைகளையும் வயதானவர் களையும் பயன்படுத்துவேன். அது சினிமாவுக்குள் இந்தியாவைப் பிரதிபலிக்கும் அம்சம் என்பதால்.



அதுபோலவே ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்படியும் வைத்துவிட மெனக்கெடுவேன். ஃபேர்வெல் உணர் வுக்கு ரயிலைவிடச் சிறந்த கருவி வேறு எதுவும் இருக்க முடியாது!''


நன்றி - விகடன்



http://www.deccanherald.com/images/editor_images/June%202010/June%2017%202010/mani-ratnam-rai-ap.jpg

அய்யர் - சாதிக்காகவா? - மணி சங்கர அய்யர் பர பரப்புப்பேட்டி

"ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லை!"

சமஸ்
படம் : கே.குணசீலன்
ந்திய அமைச்சரவையில் யார் இருக்கலாம்; இருக்கக் கூடாது என்பதையே அம்பானிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்தியபோது, அனைத்து ஊடகங்களின் பார்வையும் திரும்பிய இடம்... மணி சங்கர் அய்யர் எம்.பி. காரணம், இப்போது ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத் துறை பறிக்கப்படக் காரணமாகச் சொல்லப்படும் 'ரிலையன்ஸ் லாபி’தான் மணி சங்கர் அய்யர் பதவி பறிப்புக்கும் முன்பு சொல்லப்பட்டது. டெல்லி ஊடகங்கள் துரத்திக்கொண்டு இருந்தவரை மயிலாடுதுறையில் சந்தித்தேன்.



 ''ஆரம்ப காலத்தில் நீங்கள் ஒரு மார்க்சிஸ்ட் அல்லவா?''



''ஆமா, பள்ளிக்கூடக் காலத்துல. என் அப்பா விமான விபத்துல இறந்ததுக்குப் பிறகு, எங்க குடும்பம் இருந்த கஷ்டமான சூழல் எனக்குள்ளே நிறையக் கேள்விகளை எழுப்புச்சு. மார்க்ஸைப் படிச்சேன். ஆனா, இந்தியால இருந்த கம்யூனிஸ்ட்டு களின் நடவடிக்கைகள் அது எல்லாத்தையும் உடைச்சுடுச்சு. நேருவோட சோஷலிசம் பிடிச்சுது. அதே சமயம், நம்ம ஜனநாயகம் 'பூர்ஷ்வா ஜனநாயகம்’கிற எண்ணம் மட்டும் இன்னைக்கும் இருக்கு.''



''ராஜீவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அவருடைய குடும்பத்துடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?''



''(பழைய நினைவுகளில் ஆழ்கிறார்) ராஜீவ்... என்னோட தம்பி முகுந்தோட வகுப்புத் தோழர். அப்போ பேச்சு, கட்டுரைனு டூன் ஸ்கூல்ல நான் பிரபலம். அதனால, ராஜீவுக்கு என்னைத் தெரியும். ஆனா, ஜூனியரான அவரை எனக்குத் தெரியாது. அதேபோல, கேம்பிரிட்ஜ்ல படிக்கும்போது நான் மாணவர்கள் பிரதிநிதித் தேர்தல்ல நின்னப்போ, அங்கே ஜூனியரா இருந்த ராஜீவ் எனக்காக சக இந்திய மாணவர்கள்கிட்ட ஆதரவு திரட்டி இருக்கார். ஆனா, அந்தச் சமயத்துல அதுவும் எனக்குத் தெரியாது. எனக்கும் ராஜீவுக்குமான இளவயதுப் பழக்கம் இப்படித்தான் இருந்துச்சு. நான் வெளியுறவுத் துறையில வேலை பார்த்துட்டு இருந்தப்ப, ஒரு மீட்டிங்ல ராஜீவும் நானும் சந்திச்சோம். அடையாளம் கண்டுக்கிட்டார்.



 பொற்கோவில் தாக்குதல் நடந்த சமயத்துல பத்திரிகை தொடர்பு வேலையை அரசாங்கத்துல என்கிட்ட ஒப்படைச்சா. அந்தச் சமயத்துல தினம் நான் எழுதுற ரிப்போர்ட் ராஜீவ் கைக்குப் போகும்னு சொல்வா. பின்னாடி ராஜீவ் பிரதமர் ஆனப்ப, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் ஆக்கினார். அவரோட அரசியல் நடவடிக்கைகளைப் பக்கத்துல இருந்து பார்த்ததால, அரசு வேலையைவிடவும் அரசியல் மூலமா மக்களுக்கு நிறையப் பண்ண முடியும்னு தோணுச்சு. 'நான் அரசியலுக்கு வந்துடலாம்னு நெனைக்கிறேன்.



 நீங்க என்ன நெனைக்கிறேள்?’னு ஒருநாள் கேட்டேன். அவர் 'வேண்டாம்’னார். ஏன்னா, 'இங்கே உள்ள அரசியல் சூழல் உங்களை மாதிரி ஆளுங்களை அனுமதிக்காது’ன்னார். நான் பிடிவாதமா இருக்கவும், 'சரி, காங்கிரஸ்ல சேர்ந்துடுங்கோ, சேர்ந்து நல்லது பண்ணுவோம்’ னார். சேர்ந்தேன். ஆனா, அரசியல்ல நாங்க சேர்ந்து


சோனியாம்மாவுக்கு நான் ராஜீவுக்கு நெருக்கமானவன்னு தெரியும். கேசரியால் கட்சி சிதைஞ்சுக்கிட்டு இருந்த நேரம். அப்போ, சோனியாம்மாவைச் சந்திச்சேன். 'கேசரி இனியும் காங்கிரஸ் தலைவரா இருந்தா, கட்சி நாசமாயிடும்; நீங்க தலைவரா வாங்கோ’னு கூப்பிட்டேன். அவா 'முடியாது’னு சொல்லிட்டா. 'என்னை காங்கிரஸ்காரனா நீங்க பார்க்குறது இதுதான் கடைசி முறை’னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்போதான் மம்தா கூப்பிட்டதால, திரிணாமுல் காங்கிரஸ்ல சேர்ந்தேன். அடுத்த சில வாரங்கள்லயே சோனியாம்மா காங்கிரஸ் தலைவரானா... கூப்பிட்டா. நானும் காங்கிரஸுக்குப் போய்ட்டேன்.



அதற்குப் பிறகு, கட்சியோட அகில இந்தியச் செயலாளர் ஆக்கினா. அப்புறம், எம்.பி. வாய்ப்பு கொடுத்தா. அமைச்சர் வாய்ப்பு கொடுத்தா. ராஜீவோட கனவான பஞ்சாயத்து ராஜ் நனவாக அதுக்குனு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி என்கிட்ட கொடுத்தா. இன்னைக்கு ராஜ்ய சபா எம்.பி-யா இருக்குறதும் அவாளாலதானே? அதே போல ராகுல், பிரியங்காகூடவும் எப்பவும் நல்ல தொடர்புலதான் இருக்கேன்.''



''காமன்வெல்த் போட்டி ஊழல் பெரிதாக வெடிக்க முக்கியக் காரணங்களில் நீங்களும் ஒருவர். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அரசைக் காய்ச்சி எடுக்கிறீர்கள். காங்கிரஸ் தலைமை இதை எல்லாம் எப்படிப் பார்க்கிறது?''




''நேரு குடும்பமும் காங்கிரஸும் இல்லேன்னா, இந்தியா இருக்காதுனு நம்புற சராசரி காங்கிரஸ்காரன்தான் நானும். ஆனா, தவறுகளைச் சுட்டிக்காட்டுறது ஜனநாயகத்துல முக்கியமான கடமைனு நான் நெனைக்கிறேன். அதைத் தலைமை அனுமதிக்குறதாலதானே இன்னமும் கட்சியில் இருக்கேன்?''



''தமிழக காங்கிரஸில் உள்ள இரு பெரும் மூளைகள் என்று சிதம்பரத்தையும் உங்களையும் சொல்வார்கள். அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆக்கப்படலாம் என்கிற அளவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் சிதம்பரம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறார். நீங்களோ ஓரம்கட்டப்பட்டீர்கள். பெருநிறுவனங்களின் லாபிதான் இரண்டுக்கும் காரணமா?''



''கட்சியும் ஆட்சியும் இன்னைக்கு எது தன்னோட கொள்கைனு நெனைக்குதோ, அந்தக் கொள்கையோட ஆயிரம் சதவிகிதம் ஒட்டி இருக்கார் சிதம்பரம். நமக்கு சோஷலிசம் வேணாம்; அந்த வார்த்தையையே உபயோகம் பண்ணக் கூடாது; தனியாராலதான் நாட்டை முன்னேற்றத்துக்குக் கொண்டுபோக முடியும்கிறது அவரோட முழுமையான நம்பிக்கை. எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நேரு, சோஷலிசம்... இதெல்லாம்தான் உண்மைனு இன்னும் நெனைச்சுக்கிட்டு இருக்கிறவன்.



 என்னோட கொள்கை - சிதம்பரத்தோட கொள்கை ரெண்டுமே பிரதமருக்குத் தெரியும். இந்த மாதிரி சூழல்ல நம்ம கட்சி, ஆட்சி ரெண்டுமே அவருடைய கொள்கைதான் சரினு நம்புற நிலையில, அவரை வெச்சுக்கிறதுதான் முறை. என்னை வெச்சுக்கிட்டா, வீண் சண்டை போடுவேன்!''



''அமைச்சரவையைப் பெறுநிறுவனங்கள் தீர்மானிக்கின்றன என்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜெய்பால் ரெட்டி இலாகா பறிப்புக்கு அதுதானே காரணம்?''


''நான் அப்படி நெனைக்கலை.''


''சரி, பெட்ரோலிய அமைச்சகம் உங்களிடம் இருந்து பறிக்கப்பட 'ரிலையன்ஸ்’ லாபிதானே காரணம்?''



''அப்படின்னு பலரும் சொல்றா. ஆனா, ஒரு விஷயம்... என்கிட்ட பெட்ரோலிய அமைச்சகத்தைக் கொடுத்தப்ப, தற்காலிகமான பொறுப்புலதான் கொடுத்தா. ஆனா, உலகமே பேசுற மாதிரி ஒரு காரியத்தை அதில் நான் பண்ணினேன். ஈரான்லேர்ந்து பாகிஸ்தான் வழியா இந்தியாவுக்கு எரிவாயு கொண்டுவர்ற திட்டத்தை ஆரம்பிச்சேன்.


விலை நிர்ணயத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் கைகோத்து நின்னப்ப, எல்லோருமே அசந்துபோனா. பெட்ரோலிய அமைச்சகத்தை நானே தொடர்ந்து பார்க்குற முடிவை அரசு எடுக்கும்னு நிறையப் பேர் எதிர் பார்த்தா. ஆனா, ஆச்சர்யமா பெட்ரோலியத் துறை அப்போதான் என்கிட்டே இருந்து இன்னொருத்தர் கைக்குப் போச்சு. அப்படி மாத்தின நேரத்துல என்னை மட்டும் மாத்தினா. அதுதான் இந்தப் பேச்சுக்குக் காரணமாச்சு.''




''ஓர் அமைச்சராக உங்களை முகேஷ் அம்பானி சந்தித்து இருக்கிறாரா?''



''ரெண்டு முறை சந்திச்சு இருக்கார். முதல் முறை மரியாதை நிமித்தமா; ரெண்டாவது முறை ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் சம்பந்தமா பேச வந்தார். ரிலையன்ஸ் சம்பந்தமா அவர் சில கோரிக்கைகளை வெச்சார். நான் முடியாதுனு சொல்லி அனுப்பிச் சுட்டேன்.''



''நீங்கள் நீக்கப்பட்ட பிறகு, பெட்ரோலிய அமைச்சகத்தில், 'ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டன அல்லவா?''



''ஆமாம். ஆனா, முரளி தியோரா மட்டும் எடுத்த முடிவு இல்லை அது. ஒரு அமைச்சரவைக் குழு அந்த முடிவை எடுத்தது.''



''ஒருவேளை நீங்கள் அமைச்சராகத் தொடர்ந்திருந்தால், 'ரிலையன்ஸ்’ விஷயத்தில் உங்கள் முடிவு என்னவாக இருந்திருக்கும்?''



''நான் எதிர்த்து இருப்பேன்.''



''இந்த நிலைப்பாடே உங்களை அந்தப் பதவியில் இருந்து அகற்றக் காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?''



''தெரியலை. இப்படி யூகமாவே கேட்டா, எப்படி?''


''இந்தியாவில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''



''உலகத்துல எந்த நாட்டுல ஊழல் நடந்தா லும் அதோட அடிப்படை தொழில் துறைதான். ஒரு நாட்டோட பொருளா தாரம் அந்த நாட்டோட தொழில் துறை சார்ந்து தான் இயங்கும். சுதந்திர இந்தியாவோட முதல் 45 வருஷங்கள்ல பொதுத் துறை நிறுவனங்களை நம்பி இருந்துச்சு தொழில் துறை. அவாளுக்கு ஏத்த முடிவுகளை எடுத்தோம். அப்புறம், தனியார் துறையைச் சார்ந்ததா நம்ம தொழில் துறையை மாத்தி அமைச்சோம். இப்ப இவாளுக்கு ஏத்த முடிவுகளை எடுக்குறோம்.



இப்ப நம்ம நாட்டோட தொழில் துறையைப் பத்துப் பதினஞ்சு பெரிய நிறுவனங்கள்கிட்ட ஒப்படைச்சுட்டோம். அப்படின்னா, அவங்க சொல்றதைக் கேட்டுத்தானே ஆகணும்? நாட்டுலயே அதிகமா முதலீடு பண்ற நிறுவனம் 'ரிலையன்ஸ்’. அது சொல்றதைக் கேட்டுதானே ஆகணும்? இந்த அளவுக்குத் தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவங்களா நாம மாறிட்டா, அவா செய்ற தப்புகள் அரசாங்கத்தை வந்துதானே சேரும்? ஆனா, ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லையே?''




''உங்கள் பார்வையில் இதற்கு எதைத் தீர்வாகப் பார்க்கிறீர்கள்?''



''நேரு பாதையில் போறது. அப்படி ஒரு காலம் திரும்ப வரும்.''



''முதல் முறையாக, வட கிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக அமைச்சராக நியமிக்கப்பட்டவர் என்கிற முறையில் சொல்லுங்கள்... பழங்குடியின மக்கள் ஆயுதம் தூக்க என்ன காரணம்? அவர்களின் கோரிக்கைகளுக்கு நம்முடைய அரசு நேர்மையாக நடந்துகொள்கிறதா?'



'
''இந்தக் கேள்விக்கு என் பதிலைவிட முக்கியம், அந்த மக்களோட பதில். அவாளோட எண்ணம். அரசாங்கம் தங்களுக்கு நியாயமா நடந்துக்குறதா அவா நெனைக்கலை.''



''அதிகாரத்தைப் பரவலாக்க உதவும் என்று பஞ்சாயத்து ராஜைப் பற்றி நினைத்தோம். ஆனால், அது ஊழலை அல்லவா பரவலாக்கி இருக்கிறது?''  



''பல லட்சம் பேருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிச்சு இருக்கு பஞ்சாயத்து ராஜ். முக்கியமா பெண்கள், தலித்துகள் கைக்கு அதிகாரம் போய் இருக்கு. இது எல்லாத்தையும் நீங்க கணக்கில் எடுத்துக்கணும். எல்லாருமே ஊழல்வாதிகள்னு பொதுவாச் சொல்லிடக் கூடாது.''




''வெளியுறவுத் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவர் என்கிற முறையில் சொல்லுங்கள்... இந்தியப் பிரதமர்களிலேயே யாருடைய காலத்தில் வெளியுறவுக் கொள்கை சிறப்பாக இருந்தது?''



''நேருவைத்தான் சொல்லணும். அவர்தானே இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு முகமே கொடுத்தார்?''



''ஆனால், அவர் வகுத்த கொள்கை சீனா முதல் இலங்கை வரை நமக்குத் தோல்விகளைத்தானே தந்திருக்கின்றன?''



''வெளியறவு நலன்கிறது ஒரே விஷயம்தான். பிற நாடுகளோட நல்ல உறவைப் பராமரிக்கிறது. அதை நாம செய்றோம்.''



''நீங்கள் நழுவுகிறீர்கள்... இலங்கை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். நம்முடைய நிலைப்பாடு சரியா?''



''நூறு சதவிகிதம் சரி.''



''அதாவது, உங்கள் நண்பர் ராஜபக்ஷேவை நம்புவது சரி என்கிறீர்கள்?''


''நீங்க உள்நோக்கத்தோடு கேட்கிறேள். நான் வெளியுறவுத் துறையில் இருந்தவன். எல்லாரோடும் பழகுறவன். ராஜபக்ஷே இல்லை; சந்திரிகாகூடத் தான் எனக்கு நண்பர். அது வேற விஷயம். அதை வெச்சு என் தமிழ் உணர்வை நீங்க கேள்விக்கு உள்ளாக்க வேணாம். இலங்கை விவகாரத்துல சரியான பாதையில அரசு போகுதுனு நம்புறேன்.''




''டூன், கேம்பிரிட்ஜ் என்று படித்து இருக்கிறீர்கள். மார்க்ஸிசம், சோஷலிசம் என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், பெயருக்குப் பின் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கிறதே?''



''ஆரம்ப காலத்துல நான் மணி சங்கர்தான் டெல்லி பல்கலைக்கழகத்துல, பரீட்சையில முதல் மாணவனா என் பேரை மணி சங்கர் அய்யர்னு பத்திரிகைல போட்டா. 'ஏன் அய்யர் சேர்த்து இருக்கு?’னு கேட்டப்ப, 'அப்பதான் நீ தெற்கே இருந்து வந்தவன்னு தெரியும்; இல்லேன்னா, இந்தப் பேரைப் பார்த்து உத்தரப்பிரதேசக்காரன்னு நெனைச்சுக்குவா’னு சொன்னா.



 ஒரு தமிழனா என்னைக் காட்டிக்க இது உதவும்னு நெனைச்சுதான் அய்யரைச் சேர்த்துக்கிட்டேனே தவிர, சாதி மேல எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லாதவன் நான். நம்பிக்கை இல்லேன்னா, ஒரு குண்டான்ல சிக்கன் பிரியாணியை எடுத்துக்கிட்டு வாங்கோ, யார் நிறையச் சாப்பிடறா நீங்களா... நானானு பார்த்துடலாம்!''


நன்றி - விகடன் 



விகடனில் அதிக பட்ச மார்க் அள்ளிய 4 படங்கள் - ஒரு அலசல்

'என்னைப் பொறுத்தவரை...'

றுமையின் நிறம் சிவ'ப்பு - கே.பாலசந்தர், 'மௌன கீதங்கள்’ - கே.பாக்யராஜ், 'பாலைவனச் சோலை’ - ராபர்ட்-ராஜசேகரன், 'அலைகள் ஓய்வதில்லை’ - பாரதிராஜா - 'விகடனில் வெளியான சினிமா விமர்சனங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் (ஏ-50-க்கு மேல்) பெற்ற படங்கள் இவை.




வாசகர்களின் சார்பாகப் பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த நான்கு படங்களின் டைரக்டர்களை விகடன் அலுவலகத்துக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தோம். அவர்களும் எங்கள் அழைப்பை ஏற்று அலுவலகம் வந்து கௌரவித்தார்கள்.



''உங்கள் படம் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே நீங்கள் எதிர்பார்த்தீர்களா? என்னென்ன காரணங்களுக்காகப் படம் வெற்றி அடையும் என்று நினைத்தீர்கள்? எதிர்பார்த்த நல்ல அம்சங்கள் எல்லாம் பாராட்டப்பெற்ற னவா? பாராட்டப்படாத அம்சம் ஏதாவது உண்டா? வரப்போகும் உங்களுடைய படங் களுக்கு எந்த விதத்தில் இந்த வெற்றி பயன் தரப் போகிறது?'' என்று கேள்விகள் கேட்டு டைரக்டர் களின் கருத்துக்களை அறிய விகடன் விமர்சனக் குழு விரும்பியது.



'என்னைப் பொறுத்தவரை என் படத்தைப் பற்றி நான் கூற விரும்புவது இதுதான்...’ என்று அந்த டைரக்டர்கள் மனம் திறந்து பேசினார் கள்.



கே.பாலசந்தர் - 'வறுமையின் நிறம் சிவப்பு’

''வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில்தான் எந்தப் படத்தையுமே ஆரம்பிக்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் ஆரம்பிக்கப் போவதில்லையே. சில சமயங்களில் படப்பிடிப்பின் பாதி கட்டத்தில் நம்பிக்கை இழக்க நேரிடும். நினைத்த அளவுக்குச் சில இடங்கள் அமையாமல் போகலாம்.




'வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தைப் பொறுத்தவரை வறுமையை நகைச்சுவையோடு சொல்ல வேண்டும் என்றே தீர்மானித்திருந்தேன். 'இது ஒரு 'டிரை’ சப்ஜெக்ட்... க்ளிக் ஆகாது...’ என்று நண்பர்கள் பயமுறுத்தினார்கள். இருந்தாலும், எனக்கு நம்பிக்கை இருந்தது.



வேலை இல்லாத் திண்டாட்டத்தை, பூதாகாரமான அந்தப் பிரச்னையை சுயவேலைவாய்ப்பு மூலம் ஓரளவுக்குத் தீர்க்க முடியும்  என்று படத்தில் நான் சொல்ல விரும்பினேன். ஆனால், அதை நான் பிரசாரம் செய்யவில்லை.



பம்பாயில் இருந்து வரும் ஒரு பத்திரிகையில் நான் படித்த கட்டுரை ஒன்று இந்தப் படத்தை எடுக்க எனக்குத் தூண்டுகோலாக இருந்தது. மொபைல் பீடாக் கடை வைத்திருக்கும் ஒரு பட்டதாரியைப் பற்றிய கட்டுரை அது. 'சொந்தமாக வேலை செய்து நான் சந்தோஷமாக இருக்கிறேன்...’ என்று சொல்லியிருந்தார் அவர். சின்ன நூலிழைபோல் இதை வைத்துக்கொண்டு அதை மெருகேற்றுவதற்காகச் சில ஜிலுஜிலுப்புகளைச் சேர்த்தேன்.



சாதாரணமாக, ட்ரீட்மென்ட்டின்போது பாதி திருப்தி கிடைக்கும். நடிகர், நடிகைகளின் பெர்ஃபார்மன்ஸ் மீதி திருப்தியைக் கொடுக்கும். கடைசியில், சினிமா துறையைச் சேர்ந்த சிலரே குழப்புவார்கள். சிறப்பாக எடுத்திருக்கிறோம் என்று நான் நினைப்பதை, நன்றாக இல்லை என்று யாராவது சொல்லிவிட்டால்போதும்,  இரண்டு நாட்களுக்கு எனக்குத் தூக்கமே வராது.



வ.நி.சிவப்பில் ஒரு சின்ன கதையைத்தான் வைத்திருந்தேன். படம் முடிந்ததும் என் யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டினேன்... மறு நாள் ரீ ரிக்கார்டிங் ஆரம்பம். படத்தைப் பார்த்ததும் என் ஒருவனைத் தவிர வேறு யாருக்குமே நம்பிக்கை ஏற்படவில்லை. என்னை நேருக்கு நேர் சந்திப்பதையே தவிர்த்தார்கள். படத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டு அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த நானும் விரும்பவில்லை.



'இரண்டு வாரம்தான் ஓடும்...’ என்றார் ஒருவர்.

'மூன்று வாரம்தான்...’ என்றார் இன்னொருவர்.

'ஒரு வாரம்தான்...’ என்று கெடு வைத்தார் மூன்றாமவர்.

ஆக, என் யூனிட்காரர்களின் கணிப்புப்படி அதிகபட்சம் மூன்று வாரங்கள்தான் இந்தப் படத்துக்கு லைஃப் கொடுத்தார்கள்.



ஆனால், இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டது. இதை இந்தியிலும் எடுக்கப்போகிறேன்.



இந்தப் படத்தில் கமல் ஏற்ற கேரக்டர் எல்லோராலும் ரசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். பாரதியாரின் அபிமானியாக அந்தப் பாத்திரத்தைச் சித்திரித்து இருந்தேன். கிட்டத்தட்ட பாரதியின் சின்னமாக அதை அமைத்து இருந்தேன். படம் பார்க்கிறவர்கள் அந்தப் பாத்திரத்தோடு ஐக்கியமாக வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை மறந்துவிட்ட மாதிரி பாரதியாரையும் மக்கள் மறந்துவிட்டு இருந்தால் கமலின் கேரக்டரே எடுபட்டு இருக்காது; படத்துக்கும் வெற்றி கிடைத்திருக்காது.



தீவிரமான இந்த கேரக்டருக்காக, மற்ற இரண்டு கேரக்டர்களையும் கான்ட்ராஸ்ட்டாகவே அமைத்திருந்தேன்.



கமலின் உத்வேகமும் ஆவேசமும் நான் படைத்திருந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தன. குட்டி பாரதியாராகவே அவர் மாறிவிட்டார். நான் நினைத்த இந்த நல்ல அம்சம் மக்களிடையே வரவேற்கப்பட்டது.



கமலும் ஸ்ரீதேவியும் கவிதையிலேயே பாடும் 'சிப்பி இருக்குது...’ பாடல் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்தேன். அதே மாதிரி அந்தப் பாடல் எல்லோராலும் பாராட்டப்பட்டது.



திரைக்கதை அமைக்கும்போது நான் எதிர்பார்த்து, ஆனால் முழுமை பெறாமல் போனது அந்த மூன்றாவது கேரக்டர்தான். எதிர்பார்த்த எஃபெக்ட்டைக் கொடுக்கவில்லை அது. ஒரு புது முகத்தை அந்தப் பாத்திரத்துக்குப் போட்டேன். என் எதிர்பார்ப்புக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. கமலுக்குச் சரிசமமாக எடுபட்டிருக்க வேண்டிய பாத்திரம் அது. ஒருவேளை, அந்தப் புது முகத்தின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வர முடியாதது என்னுடைய பலவீனம்தானோ என்று நினைக்கிறேன்.



க்ளைமாக்ஸ் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால், ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் க்ளைமாக்ஸ் இல்லாமல் முடிக்கத் தைரியம் இருக்காது. ஏதோ ஒரு விதமான க்ளைமாக்ஸ் கொடுப்பேன். இந்தப் படத்தைத்தான் தைரியமாக க்ளை மாக்ஸ் இல்லாமல் முடித்தேன்.


 'தீர்த்தக் கரையினிலே’ பாடலுடன் படம் முடியும். இதை எந்த அளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்று நான் பயந்தேன்.


க்ளைமாக்ஸ் என்ற பெயரால் வலுக்கட்டாயமாக மெலோ டிராமாவை நுழைத்தோ, போலித்தனமாகச் சில திருப்பங்களைக் கொடுத்தோதான் படத்தை முடிக்க வேண்டும் என்பது தேவையே இல்லை என்பதை இந்தப் படம் எனக்குத் தெளிவுபடுத்தியது!''



கே.பாக்யராஜ் - 'மௌன கீதங்கள்’ 



''மௌன கீதங்களைப் பொறுத்தவரை ட்ரீட்மென்ட்டிலேயே எனக்கு முழு நம்பிக்கை கிடைச்சுடுச்சு. படம் முழுக்கக் காமெடியை வெச்சா அதை நல்லா ரசிப்பாங்கன்னு எதிர்பார்த்து அது மாதிரியே செய்தேன். புருஷன் - பெண்டாட்டி சச்சரவு களை வீடுகளிலே நடப்பது மாதிரியே காட்டியிருந்தேன். 'நம்ம வீட்டிலேயும் இதே மாதிரிதான் நடக்குது’னு படம் பார்க்கற ஒவ்வொரு புருஷனும், ஒவ்வொரு பெண்டாட்டியும் நினைக்கணும். இரண்டு, மூன்று காட்சிகளிலாவது அது மாதிரி நினைச்சா எனக்கு சக்சஸ்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.




'வாராயோ தோழி’ பாட்டுடன் படத்தை முடிச்சுடலாம்னு ஆரம்பத்துல நினைச்சேன். அதுவரைக்கும் படத்தைப் போட்டுப் பார்த்தபோது கொஞ்சம் பயந்துட்டேன். 'பலமா மியூஸிக் வெச்சு ஒரு க்ளைமாக்ஸ் இல்லாம என்னய்யா படம் எடுத்திருக்கார்’னு சொல்வாங்களோனு ஒரு கன்ஃப்யூஷன். அந்த மாதிரி நினைக்கறவங்களுக்கு இருக்கட்டுமேனு கடைசி சீனைச் சேர்த்தேன்.



பாலசந்தர் சார்கிட்ட படத்தைப் போட்டுக் காட்டி க்ளைமாக்ஸுக்காகத் திட்டு வாங்கினேன். 'கல்யாணம் வேணுமா?’னு அவர் கேட்டார். படத்தைப் பார்த்த பாரதிராஜா, 'கடைசி சீன் இல்லாட்டா மாஸ் அப்பீல் இருக்காதுனு பயந்துட்டியா?’னுட்டார். ஆனா, சரிதாவோட நடிப்பு கடைசி நேரத்துல எனக்குக் கை கொடுத்துச்சு. படம் பார்க்கறவங்களை அது எமோஷனலா தொட்டுடுச்சு.



சாத்துக்குடி வாங்கிட்டு வர்ற காட்சியை நான் எதிர்பார்த்ததுக்கும் மேலயே ரசிச்சாங்க... 'எனக்கு இதெல்லாம் பிடிக்காது’னு அந்தப் பொண்ணு சொல்லியும், அம்மா அதைப் பிடுங்கிட்டுப் போறதைப் பிரமாதமா ரசிப்பாங்கன்னு நினைச்சேன்... அந்த அளவுக்கு அங்கே சிரிப்பு இல்ல.




மௌன கீதங்களோட வெற்றியால எனக்குப் புது 'தாட்’ எதுவும் வரல. ஆனா, மத்த இரண்டு படங்கள்ல நான் செஞ்ச தப்பிலேருந்து நான் நிறையத் தெரிஞ்சுக் கிட்டேன்... 'இன்று போய் நாளை வா’ படத்தில், கடைசியில் நான் வேண்டும் என்றே சேர்த்த கதை சரியா வரவேற்கப்படல... இன்னும் கொஞ்சம் 'வெயிட்’ கொடுத்து அதை நான் நல்லாவே அமைச்சிருக்கணும். அதுபோல 'விடியும்வரை காத்திரு’ படத்துல என்னுடைய வில்லன் கேரக்டர் ஜனங்களுக்குப் பிடிக்கல.




'இவன் எப்போதும் அப்பாவி ரோலையே பண்ணிக்கிட்டு இருக்கான்’னு சொல்றாங்களேனு 'விடியும்வரை காத்திரு’ படத்துல வித்தியாசமா பண்ண நினைச்சேன். ஆனா, படத்துக்கு கலெக்ஷன் கம்மி! 'மௌன கீதங்கள்’ல மனைவிக்காகக் கணவன் அஞ்சு வருஷம் காத்துக்கிட்டு இருக்கற மாதிரி காட்டிட்டு, அந்தப் படம் ஓடிக்கிட்டு இருக்கிறபோதே, 'விடியும்வரை காத்திரு’ படத்தில் கையில துப்பாக்கியை வெச்சுக் கிட்டு மனைவியைக் கொல்றதுக்காகவே எந்நேரமும் நான் அலைஞ்சுக்கிட்டு இருக் கிற மாதிரி காட்டினது ஜனங்களுக்குப் பிடிக்கல.



அதனால அடுத்து வரப்போகும் படங்களில் கதையைத்தான் மாத்தணுமே தவிர, என் சுபாவத்தை மாத்திக்கிடத் தேவை இல்லேனு தெளிவாயிடுச்சு!''



ராபர்ட் - ராஜசேகரன் - 'பாலைவனச் சோலை’
''கதைக்கான கரு கிடைத்தவுடனேயே எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது.



'பாலைவனச் சோலை’ எங்களுடைய முதல் படமாக இருந்ததால் முழு திரைக் கதையையும் எழுதி முடித்த பின்புதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம்.



படத்தில் வரும் ஐந்து இளைஞர்களுடன் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு 'இன்வால்வ்மென்ட்’ நிச்சயமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். மற்றவர்களைப் போல நடித்துக் காட்டும் கேரக்டர் - அதை ஏற்று நடித்தவரின் திறமை காரணமாகவே - நன்றாகப் பாராட்டப்படும் என்று நினைத்தோம். அந்த நம்பிக்கையின் காரணமாகக் கடைசியில் மீண்டும் அதை 'ரிபீட்’ செய்தோம்.
அதே மாதிரி வாசுவின் தங்கையைப் பெண் பார்க்கும் காட்சியில், 'நான் உன்னைக் காதலிக்கல... சகோதரி மாதிரியே நடந்துக்க விரும்பறேன்’னு சுஹாசினி மறைமுகமா சொல்ற இடத்தை ரசிப்பாங்கன்னு எதிர்பார்த்தோம். ரசிச்சாங்க. வேலைக்காக நூறாவது அப்ளிகேஷனை போஸ்ட் செய்வதற்கு முன்னால் தபால் பெட்டிக்கு மாலை போடும் இடமும், 'வேலை இல்லாமல் திண்டாடுபவர்களின் கண்ணீர்தான் நமது நாட்டில் ஓடும் வற்றாத ஜீவநதி!’ என்ற வசனமும் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் என்று திடமாக நம்பினோம். நம்பிக்கை வீண் போகவில்லை.




'ஆளானாலும் ஆளு...’ என்று ஐந்து பேர்களையும் ஜாலியாகப் பாட வைத்துவிட்டு, பாடலின் முடிவில் கிடாரை 'மிக்ஸ்’ செய்து அழுகையில் முடித்திருப்பதில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அனுதாபமும், கடன் வாங்கி டாக்ஸிக்காரனுக்கு பத்து ரூபாயைக் கொடுக்கும் சந்திரசேகரை, 'நீ என்ன கர்ணன் மாதிரி’ என்று மற்ற நாலு பேர் கிண்டல் செய்யும் இடத்தில் தியேட்டரில் தோன்றும் சிரிப்பும் - நாங்கள் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை



.
முதல் படத்தில் கிடைத்திருக்கும் வெற்றி எங்களை வெகுவாகப் பயமுறுத்தியிருக்கிறது. தமிழ்ப்பட ரசிகர்கள் ரொம்பவும் புத்திசாலிகள். அவர்களுக்கு ஏற்ற புத்திசாலித்தனமான படங் களை - வெகுஜன ரசனையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற கவலையில், நாங்கள் எங்கள் அடுத்த படத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்!''



பாரதிராஜா - 'அலைகள் ஓய்வதில்லை’  



''படத்தோட வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 'இதைச் சொல்லணும்’னு என் மண்டையில ஒரு அரிப்பு உண்டாகும். உடனே, அதைச் சொல்லிடுவேன். நான் சொல்றது முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். ஆனா, தப்போ ரைட்டோ, சொல்ல நினைக்கறதை அழுத்தமா சொல்லிடுவேன். நான் சொல்றதை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா ஓ.கே. ஏத்துக்கலேன்னா அவங்களுக்கு அது பிடிக்கலேன்னு நினைச்சுப்பேன். திருப்பியும் மண்டையைச் சொறிய ஆரம்பிச்சுடுவேன்.



நான் எதையும் 'அனலைஸ்’ பண்ணிப் பார்க்கறதும் இல்லை... ஒரு மாட்டு இடையன் புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி நான் வாசிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட வாசிப்பு நல்லாயிருக்குன்னு சொன்னா சந்தோஷப்படுவேன். 'இது என்ன ராகம்?’னு கேட்டா எனக்குத் தெரியாது. என்கிட்ட ஏதோ ஒரு உணர்வு இருக்கும். அதை அப்படியே படத்துல கொட்டிடுவேன். ஆனா, அதைப் பத்திப் பிரிச்சுத் தர்க்கம் பண்ணிப் பேச எனக்குத் தெரியாது.



'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் சில தவறுகளைத் தெரிஞ்சே செய்திருக்கேன்னு வெச்சுக்குங்களேன்... சரியா ஊதத் தெரியாம அதைக் கெடுத்துட்டேன்னு சொன்னாலும் அந்தத் தப்பை நான் ஏத்துக்கிறேன்.



கடைசி ஷாட்ல பூணூலையும், சிலுவையையும் கழற்றி எறியறப்போ கொஞ்சம் சலசலப்பு இருக்குமோனு பயந்தேன். எனக்கு நியாயமா பட்டத்தை நான் சொன்னேன். ஆனா, எனக்கு நியாயமா படறது எல்லோருக்கும் நியாயமா படணும்னு என்ன அவசியம்?



என்னோட சாதனை எனக்கு இனம் புரியாத ஒரு விஷயம். படத்துக்கு வர வேண்டிய வெற்றி, மரியாதை இல்லாம வந்திருக்கலாம். எனக்கு ஏதாவது தோணிக்கிட்டே இருக்கும். அதைச் சொல்லிக்கிட்டே இருப்பேன். எனக்கு என்னையே எடை போட இன்னொரு பதினைந்து, இருபது வருடங்களாவது ஆகும்!''

 நன்றி - விக்டன்

துப்பாக்கி - ஜாலி கலாட்டா

http://suriyantv.com/wp-content/uploads/2012/04/thubaki.jpg

1. காவலன் பட ரிலீசில் இருந்தே வேண்டும் என்றே விஜய் படங்களுக்கு முக்கியமான பெரிய தியேட்டர்கள் புக் ஆவதில்லை.ஏதோ உள்ளடி அரசியல்




--------------------


2.  துப்பாக்கி ட்ரெய்லர்ல விஜய் ஷைனிங்கா தெரியறார்.சச்சினுக்குப்பின் இந்தப்படத்துலதான்




-----------------------


3. பட க்ளைமாக்ஸ்ல பிரமாதமான ட்விஸ்ட் 1 இருக்கு.


சார்.ஊட்டி போனா 27 ட்விஸ்ட் இருக்கு.ஆல் ஹேர்பின் பெண்ட் ட்விஸ்ட்



-------------------------



4. விஜய் - ண்ணா ,படம் ஓடுமா?


 முருகதாஸ் - 16 ரீல் இருக்கு.ரெண்டே முக்கா மணி நேரம் ஓடும்.டோண்ட் ஒர்ரி



----------------------------


 5. விஜய் மிலிட்ரி ஆபீசராக வருவதை கேள்விப்பட்டு இந்திய ராணுவ வீரர்கள் போராட்டம்.ராணுவ அமைச்சர் திகைப்பு




-------------------------


6. விஜய்:பாய்ஸ் இந்த ஆப்பரேஷன் ரொம்ப முக்கியமான ஆப்பரேசன்.


ஓஹோ கு க ஆபரேசனா?



----------------------------



7. இயக்குநர் - படம் மிலிட்ரி மீல்ஸ் மாதிரி இருக்கும்.#



ஒஹோ ஹீரோ மிலிட்ரி ஹோட்டல் ஓனரா?



-----------------------


8. ஜோசியரே.ஜாதகப்பொருத்தம் பாத்தாச்சா?



மாப்ளை அஜித் ரசிகர்.பொண்ணு விஜய் ரசிகை. 2ம் அடிச்சுக்கும்



---------------------


9. அஜித் ரசிகன் - ஐ ஆம் ஆன் த வே டூ யுவர் ஹவுஸ் ,ஐ வில் கிஸ் யூ .



விஜய் ரசிகை - ஐ ஆம் வெயிட்டிங் ;-)))



-------------------------------


10. ஹீரோ கூலிங் கிளாஸ் கோட் ஸூட் போட்டுக்கிட்டு வாக்கிங் போனா அது அஜித் படம்.ஜாக்கிங் போனா விஜய் படம்




----------------------


11.  டியூட்டில எவ்ளவ் பக்தி இருந்தா இளைய தளபதி பொண்ணு பார்க்கும்போது கூட மிலிட்ரி யூனிஃபார்ம்லயே போவாரு ? # துப்பாகி ட்ரெய்லர்




---------------------



12. ஈரோடு அபிராமி தியேட்டர் ஓனர் - நீங்க கேட்கற 12 லட்சத்துக்கு நிஜ மெஷின்கன்னே வாங்கிடலாம் #




 ம், அதையே வாங்கி எக்‌ஸிபிசன் மாதிரி வாசல்ல வை



-----------------------


13. அத்தான், தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுத்துத்தர்லைன்னா எங்கம்மா வீட்டுக்கு போய்டுவேன் # விஜய் ரசிகன் - ஐ ஆம் வெயிட்டிங்க், போய்த்தொலை ;-))



-------------------------



14. மிலிட்ரிமேன் சம்பளத்தை விட அப்படி நடிப்பவர் சம்பளம் பல மடங்கு அதிகம் # நீதி -வாழ்க்கையில் நடிப்புக்கு மதிப்பு




-------------------------------


15. ராசி இல்லாத மைனாரிட்டி திமுக ஆட்சியில் சரிந்திருந்த விஜய்யின் மார்க்கெட் என் தலைமயில் அமைந்த ஆட்சியில் என் ஆணைப்படி ஹிட் ஆனது-ஜெ



---------------------------


16. துப்பாக்கி படத்துக்கு பொருத்தமான டைட்டில் - மிலிட்ரிமேன் , அல்லது ஜெக "தீ"ஸ்வரன்




-----------------------



17,. இந்தியாவின் ஸ்லீப்பர் செல்ஸ் காங்கிரஸ்காரர்கள்.ஜெகதீஸ்வரன் இப்போதைக்கு கேஜ்ரிவால்




--------------------------


18. துள்ளாத மனமும் துள்ளும் -க்குப்பின் ஈரோடு ராயலுக்கு கிடைத்த பம்ப்பர் பரிசு துப்பாக்கி.டிக்கெட் ரேட் இப்போ ரூ 300.சன்டே வரை புல்்




---------------------



19. ஈரோடு அபிராமி தியேட்டர் ஓனர் லபோ திபோ லபோ திபோ என அடித்துக்கொள்வதாக கேள்வி # மிஸ்டு த சான்ஸ் ஆப் துப்பாக்கி




----------------------



20. துப்பாக்கி ஈரோட்டில் மட்டும் ஒரே நாளில் 19 லட்சம் வசூல்.விஜய் தன் சம்பளத்தை உயர்த்தி விடுவார்



--------------------------



21. அஜித் வாழ்த்து சொன்னதாலதான் துப்பாக்கி ஹிட் ஆகிடுச்சுன்னு யாரும் இன்னும் சொல்லலையே?





----------------------


22.  ஏய் படத்தை பட்டி, டிங்கர் பண்ணி துப்பாக்கி ஆக்கி விட்டார்கள் - சரத் ஆவேசம், சித்தி அமைதிப்படுத்தினார் # சும்மா



-----------------------


23. துப்பாக்கி படத்தை 2 தடவை பார்த்த ரஜினிகாந்த். முருகதாஸ் பெருமிதம் # இப்போ ரஜினி கிட்டே கதை கேளுங்க, சொல்றாரா? பார்ப்போம்..



------------------------


24. திருமணம் ஆன ஒல்லி கில்லி விஜய் ரசிகைகள் தலையணை மந்திரம் போடுவதை விரும்பமாட்டார்கள் 1, தல 2 மந்த்ரா ( "தல" அணை "மந்த்ரா")



-------------------------


25. யார் டாப் விஜய்? அஜித்? 'பூவா' 'தலையா' போட்டுப் பார்த்தேன்.விழுந்தது " தல' ;-)) # சஸ்பென்ஸ் ஸ்டோரி




-----------------


26.  விஜய்,  ஷாருக் இருவரின் தீபாவளிப்படங்களிலும் ஹீரோ மிலிட்ரி என்பதால், 2ம் ஹிட் என்பதால் இனி நிறைய மிலிட்ரி படங்கள் வரலாம் # உஷார்



-------------------


27. நிருபர் - சார், நீங்க துப்பாக்கியை 2 டைம் பார்த்தீங்களா?


ரஜினி - ஆமா, புது GUN மாடல் வாங்குனதா முருகதாஸ் காட்னாரு


--------------------



28. லொள்ளுதாதா படத்தையும் 2 டைம் பார்க்க வேண்டும் என மன்சூர் அலிகான் ரஜினியிடம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ரஜினி இமய மலை பயணம்




--------------------------------


29. சென்சார் ஆஃபீசர் துப்பாக்கி படத்தை 2 முறை பார்த்தனர் - ஏ ஆர் முருகதாஸ் ட்விட்டரில் அறிவிப்பு, விஜய் ஃபேஸ் புக்கில் கடுப்பு




----------------------------


30. கமல் டூ விஜய் - துப்பாக்கி படத்தை 2 டைம் பார்க்கனும்னா விஸ்வரூபம் படத்தை நீங்க 4 டைம் பார்த்து கதை சொல்லனும். ஓக்கேவா? # பழிக்குப்பழி



-------------------------


31. விஜய் டூ இன்கம்டாக்ஸ் ஆஃபீசர் - ண்ணா, டெய்லி 20 கோடி கலெக்‌ஷன்னு நம்ம பசங்க ட்விட்டர்ல ஏதோ ஆர்வக்கோளாறுல போட்டுட்டாங்க,விட்ருங்க்ணா




----------------------------


32. துப்பாக்கி'க்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - தலைமை செயலாளரிடம் விஜய் மனு # மிலிட்ரியையே கூப்டுக்குங்க - போலீஸ் மறுப்பு # சும்மா




--------------------------


33. அஜீத் அழைத்தால் பண்ணிட்டு இருக்கும் படத்தை பாதியிலே விட்டுட்டு வந்துடுவேன் - முருகதாஸ் # அப்போ ரஜினி கூப்பிட்டா இதை பாதில விட்ருவீங்ளா?





----------------------



34/ இளைஞர்களுடைய கையில், எதிர்காலம் இருக்கிறது - கருணாநிதி #  தலைவா! துப்பாக்கி ரிசர்வேஷன் டிக்கெட்தான் இருக்கு





-------------------------------



35. துப்பாக்கி ல அஜித் நடிச்சிருந்தா இன்னும் செமயா இருந்திருக்கும்னு யாரும் கிளம்பலையா?




--------------------------



36. விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல.அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என பாடியவர்்



-----------------------------


37. கமல் - ஹூம்.விஜய்க்கு அவங்கப்பா இருக்காரு .எனக்கு? விஸ்வரூபம் வந்தா தெரியும்




-----------------------


38.  துப்பாக்கி ஓடும் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு.அந்த போலீஸ்க்கு மிலிட்ரி பாதுகாப்புன்னா அப்போ நாட்டை யார் பாதுகாப்பது?




------------------------


39. விஜய் - இறைவா ! அஜித் ரசிகர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன்.எங்கப்பா வாயை திறக்காம நீ பார்த்துக்கோ




-------------------


40. கோட்டு ஸூட் போட்டு நடித்தது கோபிநாத்தை அவமானப்படுத்தியது போல் இருந்ததால் அடுத்த படத்தில் விஜய் நீயா நானா கோபிநாத்தாக




--------------------------


41. பாரக் ஒபாமா துப்பாக்கி படத்தை 20 முறை பார்த்தார்.பின் இந்தியாவின் மீது போர் தொடுப்பேன் என்றார் - முருகதாஸ் பெருமிதம் ( சும்மா )



-----------------------------


42. மன்னிக்கவும்.பவர் ஸ்டார் பார்த்தார் என சொன்னதை சூப்பர் ஸ்டார் என ஊடகங்கள் திரித்து விட்டன - ஏ ஆர் முருகதாஸ் பல்டி # சும்மா



----------------------

கரண்ட் போயிடுச்சுன்னு மொட்டை மாடிக்கு நைசா போனா ...

Amazing...!
1.கரூர்வாசிகளே! உஷார்! சேலத்தில் சுத்திட்டு இருந்த குட்டி சாமியார் சின்னப்பையன் பெருசாகி ஐ மீன் 24 வயசு ஆகி இப்போ கரூரில் ரவுண்டிங்காம்



---------------------


2. அன்பே ஆஃபீஸ் ஸ்டெனோ அல்போன்சா! நீ கலக்கல் மணியாய் இரு போதும், கழகக்கண்மணியாய் மாறி கறுப்பு ஜாக்கெட் மட்டும் போட்டு விடாதே!



--------------------



3. இப்போ எல்லா திமுக உடன்பிறப்புகளும் கறுப்பு சட்டையில், தலைவர் இதுக்கும் ஜவுளிக்கடைல கமிஷன் வாங்கி இருப்பாரோ?



-----------


4. சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு # கூட்டுத்தொகை 8 வருது, அஷ்டமத்துல சனி , மக்களுக்கா? ஆட்சிக்கா?



-----



5. என்னை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும்போது என் காலடியில் படுப்பது கணக்கில் வராது - ஜெ அறிவிப்பு அதிமுக அமைச்சர்கள் மகிழ்ச்சி



-----






6. இனி தமிழக எல்லைக்குள் யார் படுத்திருந்தாலும் படுக்கை வரி விதிக்கப்படும் - ஜெ



-----


7. அரசாங்கத்தின் மறு ஆணை வரும் வரை யாரும் படுக்கவே கூடாது - ஜெ அதிரடி உத்தரவு # இப்போ என்ன செய்வீங்க? ;-0



-----------


8. நயன் தாரா - நானும் படுத்துக்கொண்டே விட்டே மார்க்கெட்டை பிடிப்பேன் ;-0



----------


9. படுத்துக்கொண்டே ஆட்சியை பிடிப்போம்-ராமதாஸ் # யார் கூட?



---------------


10. மிகச் சிறந்த கேலியாக கருதப்படுகிறது ஆம்பளையை புடவை துவை எனச் சொல்வது. #அவமரியாதை.



----------




11. நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது, நினைவில் GOD உள்ள மனிதனை அந்த நினைவில் இருந்து விலக்க முடியாது



---------------

12. ஜஸ்ட் டைம் பாஸ்க்காகத்தான் உங்களை லவ் பண்ணேன்னு பொண்ணுங்க சொல்லவே முடியாது, 5 ரூபாய்க்கு விகடனின் டைம் பாஸ்- புதிய வார இதழ் ;-0



------


13. இந்திய ரகசியங்களை விற்க முயன்றஅன்சாரிக்கு போலிஸ் காவல்-# அன்சாரி அவிசாரி ஆனாரே அடடே!



-------


14. ஏய் மிஸ்டர், பொண்ணுங்க கிட்டே வயசோ,ஃபோன் நெம்பரோ, அட்ரசோ கேட்கக்கூடாது. # ஓக்கே மிஸ், 1000 ரூபா கடன் குடுங்க ;-0




-----------------


15. இரண்டாம் முறை நம் முறைப்பெண்களை நேசிக்கும்போது புது அனர்த்தம் உருவாகிறது ;-0



-------------------


Photo: Good Morning Friends.....




16.  மிஸ்டு கால் கொடுத்து பேசின லவ்வரு திடீர்னு அவளே கால் பண்ணா பயம் வேணாம், அவளுக்கு மேரேஜ் வேற பக்கம் ஃபிக்ஸ் ஆகி இருக்கும்



------------------------------


17. பிரம்மாண்டம் என்றதும் நினைவுக்கு வருவது ஷங்கர் ,கலைப்புலி தாணு , நமீதா, சோனா,ஷகீலா ( பெண் பால் மட்டும் ஆஆஆ-னு முடியுது)


-------------------


18.  டீச்சர்கள் பெயரை இப்படியா கெடுப்பது.. 'ஸாரி டீச்சர்' படத்துக்கு செம டோஸ்! # டைட்டில ஆப் சாரி மிஸ்னு மாத்தனும்.பாதி சேலைதான் ஹீரோயினுக்கு 




-----------------


19. ஒயிட் & பிளாக் படம் பார்க்க மாட்டேன் கலர் படம் தான் பார்ப்பேன் என அடம் பிடிப்பதுதான் நிறவெறியா? 




--------------------


20. டாடி ஸ்கூல் வாசல்ல என்னை டிராப் பண்ணுனா போதும்.உள்ளே வர வேணாம்.மம்மி தான் சொன்னாங்க ;-) #நற நற 




---------------------------


Photo: ♥ SHARING ♥ ♥ MOMENTS WTH MY SWEET FRIENDS ♥



 21. கிச்சனில் பாத்திரங்கள் தேய்த்தேன்.ஹாலில் அயர்ன் பாக்ஸ் கொண்டு உன் புடவையை தேய்த்தேன்.பாத்ரூமில் உன் முதுகு தேய்த்தேன்.ஐ எத்தன தேன் ;-) 



-----------------


22. குணச்சித்திரமோ ,கிளாமரோ அதை முழுமையாக காட்டிவிடுங்கள், பிறகு மார்க்கெட் இல்லாமல் கூட போகலாம்.. 




-------


23. என்னருகே நீ இருந்தால் என் உடம்பெல்லாம் உதறுவதேன்?உன்னருகே நான் இருந்தால் ஒரு கலகமும்தான் வருவதி ஏன்?:-) 



---------


24. மாப்ளைக்கு தம் ,தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கா? 



கோபம் வந்தா சம்சாரத்தை மட்டும் அடிப்பாருங்க :-) 




--------------------


25. ஒருவருக்கு தம் அடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க 1 அவன் கீழ் உதடு கறுத்திருக்கும் 2 பாக்கு பபிள்கம் விக்ஸ் ஏதாவது மெல்வான்




------------ 


Photo: if u like<3



26. கரண்ட் போயிடுச்சுன்னு மொட்டை மாடிக்கு நைசா போனா காம்பவுன்ட் சனமே இங்கேதான்யா இருக்கு 




-----



27. "பள்ளி பகுதி மெதுவாக செல்லவும பள்ளி அறை பகுதி .பம்மிக்கிட்டே செல்லவும் 



---------


28. என் ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: ஒபாமா பெருமிதம்! # தீவிரவாதிகளுக்கா?அண்ணே? 




------------------



29. நீ ஒரு கன்னத்தில் முத்தமிட்டபோதுதான் விரல்கள் எண்ணிக்கை போல் கன்னங்களும் 10 இருந்திருக்கலாம் என்று தோன்றியது 



----------


30. நான் சின்னப்பையனா இருந்தப்ப டெம்பிள் ரன் என்றால் அன்னதான்ம் போடும்போது இடம் பிடிக்க ஓடுவது என்றே நினைத்தேன் :-)் 



-------------------



Thursday, November 15, 2012

போடா போடி - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters/images/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters06.jpg 

படத்தோட கதை , விமர்சனத்துக்குள்ளே போறதுக்கு முன்னே இந்த கதை எப்படி உருவாச்சுங்கற பின் புலத்தை பார்த்துடுவோம். அது மெயின் கதையை  சுவராஸ்யமாய் புரிந்து கொள்ள ஏதுவா இருக்கும். 


அண்ணி (!!!! ) நயன் தாராவுடன் அண்ணன் சிம்பு நட்புடன் இருந்த கால கட்டத்தில்  நயன் நடிக்கும் பட ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கெல்லாம் போய் அவரது காதலை, பொசசிவ்னெஸ்ஸை வெளிப்படுத்தி வருவார். ஒரு தெலுங்குப்பட ஷூட்டிங்க்கின் போது நயன் ஆந்திர ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது உடன் இருந்து பார்த்த சிம்பு கடுப்பாகி அந்தப்பட வாய்ப்பை கேன்சல் பண்ணச்சொன்னார்.



 அதுக்கு சாத்தியம் இல்லை என நயன் சொன்னதே பிரிவுக்கான முதல் அச்சாரம். நயனுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த சிம்பு அந்த கதையை பேஸ் பண்ணி கெட்டவன் படத்தை தொடங்கினார். சில  காரணங்களால் அது தள்ளிப்போக போடா போடியில் அந்த சொந்தக்கதையை சாமார்த்தியமாக உள் நுழைத்து விட்டார்.


 பிராமண எதிர்ப்பு வசனங்கள் இருந்ததால் இது நம்ம ஆளு படத்தின் முழுப்பொறுப்பும் ஏற்றிருந்த கே பாக்யராஜ் எப்படி பாலகுமாரனை கேடயமாகப்பயன்படுத்தினாரோ ,பல படங்களில் கமல் இயக்குநராகப்பணி ஆற்றியும் டைட்டிலில் அவர் பேர் போடாமல் இருப்பது போலவும் இந்தப்படத்திலும் சிம்பு தான் ஆல் இன் ஆல் என ஒரு பேச்சு இருக்கு.. ஓக்கே லெட் கோ டூ  த ரிவ்யூ..


http://tamil.cinesnacks.net/photos/movies/Poda-Podi/poda-podi-movie-stills-005.jpg


ஹீரோ தமிழ்க்கலாச்சாரத்தை மதிப்பவர். அதே மாதிரி பெண் வேணும்னு நினைக்கறவர். அவர் கண்ல அலட்ரா மாடர்ன் கேர்ள் சாரி அல்ட்ரா மாடர்ன் கேர்ள் ஹீரோயின் கண்ல படறாங்க.. காதலுக்கு பிரபோஸ் பண்றார். பசை உள்ள பார்ட்டின்னு நினைச்சு ஹீரோயின் ஓக்கே சொல்லிடுது.


 ஹீரோயின் டான்ஸ் கிளாஸ் போகுது. அங்கே டெயிலி டான்ஸ் பிராக்டிஸ். அங்கே கண்ட கண்ட நாயோட ( ரைட்டர் நாயோன் மன்னிக்க ;-)) )எல்லாம் அவர் கட்டிப்பிடிச்சு டான்ஸ் ஆடறது ஹீரோவுக்குப்பிடிக்கலை.கதைக்களன்  லண்டன். அதனால் ஹீரோயினுக்கு அது ஜூஜுபி மேட்டர். அவர் கற்புள்ளவர்தான். ஆனா அதை எல்லாம் சாதாரணமா எடுத்துக்கறவர்.ஆனா ஹீரோவால அப்படி டேக் இட் ஈசி பாலிஸின்னு இருக்க முடியல.

 குஷி படத்துல வர்ற மாதிரி அடிக்கடி சண்டை போட்டு பிரிவதுன்னு இருக்காங்க.. அப்போதான் ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஐடியா தர்றாரு. ஒரு குழந்தை பொறந்தா எல்லாம் சரி ஆகிடும். குழந்தையை பார்த்துக்கவே நேரம் சரி ஆகிடும். அப்புறம் எங்கே இருந்து டான்ஸ் கிளாஸ் போக?இந்த ஐடியாப்படி மேரேஜ் ஆகாமயே லிவிங்க் டுகெதரா வாழும் இருவரும் கில்மாவை முடிச்சு ( வல்லவன் படத்தில் வருவது போல் ) குழந்தை பெத்துக்கறாங்க. இடை வேளை 


ஹீரோயினுக்கு ஹீரோவோட டிராமா தெரிஞ்சுடுது.ஓஹோ, இந்த கில்மா, குழந்தை எல்லாம் இயற்கையா நடக்கனும், இதைக்கூட பிளான் போட்டு செய்வாங்களா?ன்னு கேட்டு பழைய ஜிகிடி கதவைதொறடின்னு பாப்பா மறுபடி டான்ஸ் கிளாஸ் போகுது.


 அதுக்குப்பின் என்ன நடக்குது என்பது மிச்ச மீதிக்கதை . 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMNGv3QFEClOpP8IunNQ5UYATPQ84I3ELQXEtBBPljrcVs_mILTvT6hH9cNo8eNZZ5sM9Nzfq9xyg0ctmPuhaGpi07-gxBsJlxTb9g1_bqrjP2sI6QzFrU9_DfyfnsPj5uefInqW6abhI1/s640/Poda+Podi+Latest+Stills+%25289%2529.jpg


 விண்ணைத்தாண்டி வருவாயா? கோவில் படங்களுக்குப்பின் சிம்பு ரொம்ப க்யூட்டா, பர்சனாலிட்டியா தோன்றும் 3 வது படம் இது.ஒளிப்பதிவாளரின் கைங்கர்யமோ என்னவோ ஆள் செம பர்சனாலிட்டியா இருக்கார்.பல காட்சிகளில் இளமைக்குறும்பு. இதே போல் ஒழுங்காக அடக்கி வாசித்தால்  இன்னொரு விஜய் ஆக வர வாய்ப்பு உண்டு. 


ஹீரோயின் சரத்குமார் மகள் வர லட்சுமி எனும் வரு. யார் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை, ஒரு மேட்டரை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடறேன். படத்துக்கு பெரிய மைனசே ஹீரோயின் தான். அவர் ஹேர் ஸ்டைலை மாற்றி ,  மேக்கப் விமனை மாற்றி , கெட்டப்பை ,மாற்றி ரொம்ப முயற்சி பண்ணா மட்டுமே பாஸ் மார்க்காவது எடுக்க முடியும்.. மற்ற பிரதேசங்கள் செழிப்பான பூமியாக இருந்தாலும் முகம் வரண்ட லட்சுமியாக இருப்பதால் முடில.. 


இது  நம்ம ஆளு சோபனா , ஹீரோவின் நண்பர் என ஆங்காங்கே கொஞ்சம் தெரிந்த தலைகள். எல்லாருக்கும் வாய்ப்புக்குத்தகுந்தாற்போல் காட்சிகளை சரியாக உபயோகப்படுத்தி இருக்காங்க.. 



http://reviews.in.88db.com/images/femina-latest-trisha/femina-magazine-release-stills-photos-pics-30.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. குஷி படத்தின் பாதிப்பு என்பது திரைக்கதையில் யாரும் குறை சொல்லிடக்கூடாது என்று கதைக்களனை லண்டனுக்கு மாற்றியது .சிம்புவின் சொந்தக்கதையை , சில காட்சிகளை அழகாக பயன்படுத்தியது .



2. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சுமார் என்றாலும் பல பாடல்கள் ஹிட் ரகம். குறிப்பாக லவ் பண்ணலாமா? வேணாமா? 



3. சிம்புவின் ஸ்டைலிஷ் தோற்றம் , ஷோபனாவின் அண்டர் ப்ளே ஆக்டிங்க், கதையுடன் பயணிக்கும் காமெடி 



4. தன் மனைவியுடன் ஆடும் ஆளை முகத்தில் தன் கோட்டை மாட்டி அவரை நையப்புடைக்கும் காட்சி , க்ளைமாக்ஸ் டான்ஸ் கலக்கல் ரகம்  , அதே போல் ஹீரோ - ஹீரோயினுக்கான வாக்கு வாதங்கள் சுவராஸ்யம்



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-new-stills-/images/tamil-cinema-poda-podi-new-stills-12.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ தான் தமிழ்க்கலாச்சாரத்தோட வாழ்ந்ததால் ஹீரோயினின் ஃப்ரீனெஸ் எல்லாம் ஜீரணிக்க முடியலைங்கறார். ஆனா முதன் முதலா ஹீரோயினை பார்க்கும்போதும் சரி, காதலை சொல்லும்போதும் சரி  ஹீரோயின்  படு கிளாமரா தானே டிரஸ் பண்ணி இருந்தாங்க.. அது ஏன் ஹீரோ கண்ணுக்கு உறுத்தலை? 


2. ஹீரோயின் யாரோ ஒரு ஆள் கூட டான்ஸ் பண்ணுவதை தாங்கிக்க முடியாத ஹீரோ பல காட்சிகளில் ஹீரோயின்  படு கிளாமராக லோ கட் , லோ  ஹிப்பில் வரும்போது ஒண்ணும் சொல்லலையே? ஒரு காட்சியிலாவது “ ஏம்மா , இதெல்லாம் புருஷன் நான் பார்க்க , இப்படி கடை பரப்புனா எப்படி?”ன்னு ஒரு டயலாக் வெச்சிருக்க வேண்டாமா?


3. ஹீரோ பூவாவுக்கு என்ன பண்றார்? அவர் பணக்காரன் என ஹீரோயின் நினைச்சு லவ் பண்றார், ஓக்கே. அதுக்குப்பின் பண விஷயத்தில்  அல்லது தொழில் விஷயத்தில் குட்டு உடை பட்டதா? அது பற்றி காட்சியே இல்லையே? 



4. ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் கில்மா நடக்கும் காட்சி வல்லவனில் இருந்து உருவப்பட்டாலும் அதில் இருந்த கிக் இதில் இல்லை.. ஏனோதானோ என படமாக்கப்பட்டிருக்கு.,. 



5. குழந்தை பிறந்த பின் ஹீரோயினின் மனமாற்றம் பற்றி சொல்லவே இல்லை.. எப்போ பாரு டான்ஸ் , டான்ஸ் என உயிரா இருக்கும் அவர் குழந்தையால் டைவர்ட் ஆனாரா? குழந்தைப்பாசம் உள்ளவரா? வேண்டா வெறுப்பா இருந்தாரா? மனசார இருந்தாரா? என டீட்டெயில் சொல்லலை



6. ஹீரோ , ஹீரோயின் இருவரின் அஜாக்கரதையால் , தேவையற்ற சண்டையால் தடார் என ஒரு விபத்து நடந்து குழந்தை இறந்துடுது. படத்தில் எவ்வளவு முக்கியமான சீன். ஜஸ்ட் 18 விநாடியில் அந்த சீன் கடந்துடுது. அந்த பாதிப்பை அழுகை மூலம் காட்டாவிட்டாலும் அட்லீஸ்ட் பின்னணி இசை , ஒளிப்பதிவு மூலமாவது பதிவு செய்திருக்க வேண்டாமா?



7. இடைவேளைக்குப்பின் ஜஸ்ட் 40 நிமிஷம் தான் படம். ரொம்ப சின்னப்படமா இருக்கே? 3 மணி நேரம் இருந்தா பெரிய படம்னு சொல்லும் தமிழன் ரெண்டே கால் மணி நேரத்துக்கு கம்மியா இருந்தாலும் தன் காசு வேஸ்ட்டா போச்சுன்னு நினைப்பான் .


8. ஹீரோயின் ஏதோ கோபத்துல தன் மேரேஜ் மோதிரத்தை கழட்டி லெட் இன் ரூம்ல அங்கே வீசிடற மாதிரியும் பின்  மனம் மாறி கையை விட்டு எடுப்பது போலவும் சீன் உவ்வே.... சும்மா வெளில வீசி பர பரப்பா தேடுற மாதிரி சீன் எடுத்தா போதாதா/



9. க்ளைமாக்ஸ்  கடைசி 3 ரீலை இன்னும் டிஸ்கோ டேன்சர் , பாடும் வானம்பாடி ரேஞ்சுக்கு இழுத்து இருக்கலாம். டான்ஸ் போட்டிக்கான கெத்து கம்மி.. இன்னும் பின்னணி இசை பட்டாசா இருந்திருக்கனும். 

10. டைட்டில் டிசைன் வித்தியாசமா பண்ண நினைச்சிருப்பீங்க போல.. அது ஏ செண்ட்டர்க்கு ஓக்கே, பி சி செண்ட்டருக்கு தனி போஸ்டர் ஒட்டி இருக்கலாமே? தளபதி படத்துக்கு மணி ரத்னம் செஞ்ச மாதிரி


11. அடிக்கடி  தமிழ்க்கலாச்சாரத்துல வளர்ந்த நல்ல பையன்னு சொல்ற ஹீரோ ஒரு டைம் ஹீரோயின் கூட கில்மா பண்றப்போ “  என்னைப்பக்கத்துல வெச்சுக்கிட்டே எந்தப்பொண்ணும் இப்படி சொன்னதே இல்லை.. ” அப்டினு பெருமை பேசறாரே? ரியல் லைஃப்ல அவர் ப்ளே பாயா இருக்கலாம், ஆனா இந்த கேரக்டருக்கு ஏன் அந்த பஞ்ச் டயலாக்? அதே போல் கலாச்சாரம் குறித்து அடிக்கடி பேசுபவர் மேரேஜ்க்கு முன் மேட்டர்க்கு கூப்பிடறார். முடிக்கறார். அது மட்டும் ஓக்கேவா? 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAqaiJRsIB7ooGApLoToVkbwR_8Qs4O1pf6u2Iy6tAwJ78ZXDAU31DtdJ65IeAD_ae2b4pqxd4QjR5CMKH9WtzFRXsuxSBbX37TDR19c-Mc2U26gAX27932WlzbXKO_yGNh4YWu9XFdY4/


 மனம் கவர்ந்த வசனங்கள்

1. லவ் பண்ற ,மேரேஜ் பண்ணிக்கிட்ட ,சைட் அடிக்கறபொண்ணு யாராவது அந்நிய ஆண் கூட நின்னு சிரிச்சு பேசுனாஅடிவயிறு பத்தி எரியும்



2. ஆக்சிடெண்ட் ஈஸ் ஏன் ஆக்சிடென்ட்.அது தானா நடக்கும்.நல்லவங்க ,கெட்டவங்க பாகுபாடு இல்லாம எல்லாருக்கும் நடக்கும் 



3.  இந்தக்காலத்துப்பொண்ணுங்க நல்ல பசங்களை எங்கே  லவ் பண்றாங்க?வெட்டி பந்தா பண்றவன், பொறுக்கி , தறுதலை இவனுங்களுக்குத்தான் காலம்



4. சொந்தக்காசுல சீன் போடற சந்தோஷம் இருக்கே.. அடடா.. அது போல் உலகத்துல எதுவும் இல்லை


5. ஹாய்.. பார்ட்டிக்குத்தனியாவா வந்தே?


 ஆமா, ஆனா ரிட்டர்ன் போறப்போ ஜோடியாப்போகலாம்னு ஐடியா



6. காதல் வந்துட்டா உலகத்துல இருக்கற கண்றாவியான , கேவலமான விஷயங்கள் கூட அழகாத்தெரியும்

7. ஷோபனா - என்ன பண்றீங்க?


 சிம்பு - வெயிட் பண்ணிட்டு இருக்கேன்


 அது தெரியுது, புரொஃபஷனலா என்ன பண்றீங்க?ன்னு கேட்டேன்


8. யோவ். இவ்ளவ் விஷயம் இங்கே ஓடிட்டு இருக்கு. ஷகீலா படம் பார்த்துட்டு இருக்கியா? டி வி ல இரு உன் சம்சாரத்து கிட்டே போட்டுக்குடுக்கறேன்


9. சிம்பு - எப்பவாவது பொய் பேசறவளை பார்த்திருக்கேன், ஆனா  எப்பவும் பொய் மட்டுமே பேசுபவளை இப்போதான் பார்க்கறேன்



10. சிம்பு - என் கிட்டேயே விரலை வெச்சு வித்தையா?


11. எப்பவுமே நான் பெட் மேலதான் படுப்பேன், ஆனா இப்போ என் மேல ஒரு பெட் படுத்திருக்கு.. ஐ ஜாலி


12. வரு( 23 வயசு )  - மேரேஜா? நான் சின்னக்குழந்தைங்க . எப்படி உடனே மேரேஜ் பண்ணிக்க முடியும்.. 


13. நான் என்ன சொல்ல வர்றேன்னா நல்ல பொண்ணுங்க இந்த மாதிரி சுத்த மாட்டாங்க..


 அப்போ நான் நல்ல பொண்ணு இல்லையா?



14. அந்தப்பொண்ணு வேணாம்கறதைத்தான் இவ்ளவ் நேரமா இங்க்லீஷ்ல சொல்லிட்டு இருந்தே?


ஆமா


 சரி, காரை ஓரமா நிறுத்து , நான் இப்பவே அவளை பார்க்கனும்


15. இப்போ நீங்க பண்ணுன காமெடிக்கு நாளைக்கு காலைல சிரிக்கறேனே? இப்போ டயர்டா இருக்கு


 http://www.southgossips.net/wp-content/uploads/2012/01/varalakshmi-sarathkumar-unseen-photo-gallery03.jpg


16. தமிழ்நாட்டைத்தவிர மத்த நாட்ல எல்லாம் டெலிவரி டைம்ல பொண்ணோட புருஷனையும் பக்கத்துல இருக்கச்சொல்வாங்க.மனைவியின் வலி தெரிஞ்சுக்கனும



17. பொண்ணுங்க மேரேஜ்க்கு முன்னே லவ் பண்றப்ப பேசி பேசி நம்மை சாகடிப்பாங்க.மேரேஜ்க்குப்பின் பேசாம சாகடிப்பாங்க


18. சந்தேகம் வராதவரை ஓக்கே, ஆனா வந்துட்டா அதை க்ளியர் பண்ணிக்கறதுதான் பெட்டர்


19. லவ்ல நோ லாக், ஆனா மேரேஜ்ல லாக் இருக்கு. லவ் பண்றப்போ “ நான் இந்தப்பொண்ணை லவ் பண்றேன்னு ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்க த்தேவை இல்லை, ஆனா மேரேஜ் பண்றப்போ ஊரைக்கூட்டி சொல்லனும்


20. எத்தனை டைம் சொல்லி இருக்கேன்? அவ கூட சேராதேன்னு ,ஏம்மா? சாக்லேட் தந்து அவனை ஏமாத்தறியா?


21.  உங்க வாய்ஸ் பிளஸ் பாயிண்ட், ஆனா வாய் மைனஸ்



22. கல்யாணம் ஆகற வரை பொண்ணுங்க ஜலக் முலக் கலக்னு இருப்பாங்க, மேரேஜ் ஆகிட்டா பொலக்னு ஆகிடுவாங்க . ஒரு சைல்டுக்கு மதர் ஆகிட்டா அவங்க அதர் ஆக்டிவிட்டி  டமால் ஆகிடும்


23.  நீங்க ரொம்ப மோசம்

 என்னைப்பக்கத்துல வெச்சுக்கிட்டே எந்தப்பொண்ணும் இப்படி சொன்னதே இல்லை..


24. வீடியோ எடுக்கற டைமா இது?

 ஃபேஸ் புக்ல போடவா எடுத்தேன்? குழந்தைக்கு  பிற்காலத்துல போட்டுக்காட்டி அம்மா உன்னை பெக்கறப்போ எவ்ளவ் கஷ்டப்பட்டாங்கன்னு காட்டிட


25. உங்களுக்கு சொன்னா புரியாதா?


 ஷோபனா - ட்ரை மீ


 வாட்?

 ஐ மீன் எனக்கு புரிய வைக்க ட்ரை .. பண்ணு



26. ஏய்.. எவன் அவன்?

 என் க்ளோஸ் ஃபிரண்ட்

 இப்போ என்ன செஞ்சான் உன்னை?

 ஹக் பண்ணிட்டு போனான்.. இது எல்லாம் லண்டன்ல சாதாரணம்



இங்கே இது தப்பில்லை, ஆனா தமிழ்க்கலாச்சாரத்துல இது தப்பு











சி.பி கமெண்ட் - போடா போடி -குஷி பார்ட் 2 -காதலர்கள் , யூத்ங்க, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ,  மனத்தாங்கலால் பிரிந்து  வாழும்  தம்பதிகள் , சிம்பு ரசிகர்கள் பார்க்கலாம். பொது ரசிகர்கள் ஹீரொயின் வரும் சீன் மட்டும் கண்ணை கூடிக்கொண்டே பார்த்தால் ரசிக்கலாம்.





 விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே



 டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேட்டிங் - 5 / 10



டிஸ்கி -

துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

   http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

இளையராஜா மட்டும்தான் கம்போஸர்’ என்றதால் பிரச்சனையா? - யுவன் சங்கர் ராஜா பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC0BifJ38wU_tx1MSfx9gVMHCSq8IyVn1edOv6x45ByiqTtIIvo5e2_s6w0ZZ0o58okrVNKWwwpiln5pw4neVcrhMHN3dpas4BwFYgiNdhCVoqDtpq4PU1wiD7QLk_bi5_rntEQjx99qw/s400/yuvan+shankar+raja.jpg 
தினம் தினம் காதலில் விழுகிறேன் !

க.நாகப்பன்
எனக்கு ஆறு வயசு இருக்கும்... அப்போ அப்பா 'ஆனந்த்’ படத்துக்கு மியூஸிக் பண்ணிட்டு இருந்தார்... 'பூவுக்குப் பூவாலே மஞ்சம் ஒன்று’ங்கிற பாட்டுல ரெண்டு வரிக்கு மட்டும் நான் பியானோ வாசிச்சேன். நேத்து நடந்தது மாதிரி இருக்கு...''- சாக்ஸபோனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பேசும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு, 'பிரியாணி’ 100-வது படம்!


இசை ராஜாவின் இளைய ராஜா, இன்றைய சினிமாவின் மினி மேஸ்ட்ரோ. 




''பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்தைக் கனவு கண்டீங்களா?'' 

''எனக்கு இசை ஆர்வம் உண்டு. ஆனா, நான் இசையமைப்பாளர் ஆகணும்னு நினைச்சதே இல்லை. பைலட் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். 'கடவுளுக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கும். இசை மூலமா கடவுளைத் தரிசிக்கலாம்’னு அப்பா சொல்வார். அப்படித்தான் கடவுளுக்கு என்னைப் பிடிச்சு இந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கார்னு தோணுது.



 'பில்லா 2’ ஆல்பம் வந்தப்போ, 'யுவனோட 100-வது படம்’னு ட்விட்டர்ல கமென்ட் போட்டாங்க. அது வரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கேன்னு எனக்கே தெரியாது. எண்ணிப் பார்த்துடலாம்னு உக்காந்தப்பதான், 'பிரியாணி’ 100-வது படம்னு தெரிஞ்சது. அப்பா 1,000 படங்கள் தாண்டியிருக்கார். அவர் மகனா நான் 100 படங்கள் பண்ணினது சந்தோஷம். ஆனா, இன்னும் ரொம்ப தூரம் கடக்கணும். இத்தனை வருஷத்துல ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயம் கத்துட்டே இருக்கேன்.



 எவ்வளவு நண்பர்கள் நான் வளரணும்னு நினைக்கிறாங்களோ, அதைவிட அதிகம் பேர் என் வளர்ச்சியில் பொறாமைப்படவும் செய்றாங்க. அவங்ககிட்ட இருந்து எப்படித் தப்பிக்கணும், விலகி இருக்கணும்னு கத்துக்கிட்டேன்!''



''ஆனா, இசையமைப்பாளர்கள்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்தானே ரொம்பப் பெரிசு?'' 



''ஆமாம். அது எனக்குப் பிடிக்கும். எப்பவும் என் ஃப்ரெண்ட்ஷிப் சர்க்கிள் பெருசா இருக்கணும். சந்திக்கிற எல்லா மனிதர்களையும் ஃப்ரெண்ட் ஆக்கிக்கணும்னு ஆசைப்படுவேன்.


இதனாலயே 'எனக்கு இவ்ளோ தெரியும், இவ்ளோ அனுபவம் இருக்கு’னு எந்தப் புது இயக்குநர்கிட்டயும் என்னை வெளிப்படுத்திக்க மாட்டேன். ஒருத்தர் கஷ்டப்படும்போது நாம உதவுனா, நாம கஷ்டப்படும்போது அவங்க உதவுவாங்கன்னு நம்புறேன். எனக்கு எல்லாருமே வேணும்!''


''அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்னு எல்லார்கூடவும் ஒரே நேரத்துல எப்படி ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்க முடியுது?'' 



''ஒவ்வொருத்தர் நட்புக்கும் உண்மையா இருப்பேன். அஜித் பெர்சனலாப் பழகுறதுக்கு அவ்ளோ நல்ல மனுஷன். எதுவா இருந்தாலும் வெளிப்படையாப் பேசுவார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் பழகுவார். ஹெலிகாப்டர் பத்தி டெக்னிக்கலா நாள் முழுக்கப் பேசிட்டே இருப்பார். மினி ஹெலிகாப்டரை பார்ட் பார்ட்டாப் பிரிச்சு, திரும்ப அசெம்பிள் பண்ணுவார். நான் புதுசா வாங்கியிருந்த என் ஆஸ்டன் மார்ட்டின் காரை அவரிடம் காண்பிச்சேன். 'சூப்பர்... சூப்பர்... ஆனா, சென்னைல இதுக்கேத்த ரோட்ஸ் இல்லை’னு சிரிச்சவர், அப்புறம் அந்த காரை எப்படிப் பராமரிக்கிறதுனு டியூஷனே எடுத்தார்.



சிம்புவும் அப்படித்தான். ரொம்ப நேர்மையா இருப்பார். மனசுல பட்டதைப் பளிச்னு சொல்லிடுவார். சூர்யா, கார்த்தி, விஷ்ணுவர்தன், கிருஷ்ணா எல்லாரும் ஒரே ஸ்கூல்ல படிச்சோம். தனுஷ், செல்வா, விஷால், அமீர் எல்லாம் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க மாதிரி. எந்த விஷயமும் என்னைக் கட்டுப்படுத்தாது, அன்பைத் தவிர. இந்தப் பக்குவம் என் அம்மா கத்துக்கொடுத்தது. அப்பாகிட்ட  டெடிகேஷன் கத்துக்கிட்ட மாதிரி, அம்மாகிட்ட கத்துக்கிட்டது இது!''



''அஜித்தை வெச்சு ஒரு படம் தயாரிக்கிறீங்கனு சொல்றாங்களே... உண்மையா?'' 



''ஸ்கூல் படிக்கும்போதே நான், அண்ணன் கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு எல்லாம் வீடியோ கேமரா எடுத்துட்டு வீட்டைச் சுத்திச் சுத்தி வந்து படம் எடுப்போம். அந்த ஆசையும் ஆர்வமும் இன்னும் அடங்கலை. ஸ்க்ரிப்ட் எழுதிட்டு இருக்கேன். டைரக்ஷனும் எனக்கு வரும்னு நம்புறேன்.


சீக்கிரமே தயாரிப்பாளரா, இயக்குநரா யுவனைப் பார்க்கலாம். ஃபேன்டஸி படங்களை இப்பல்லாம் ரசிக்க மாட்டாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, 'நான் ஈ’ எல்லாத்தையும் உடைச்சு ஹிட் அடிச்சது. ஹீரோயிசம் படங்கள் தாண்டி சஸ்பென்ஸ், த்ரில்லர், ஃபேன்டஸி, மியூஸிக்கல்னு எல்லா ஜானர்லயும் படம் பண்ணலாம்னு இருக்கேன். எங்க குடும்பத்துலயே பாட்டுக்கு கங்கை அமரன் சித்தப்பா, நடிப்புக்கு பிரேம்ஜி, டைரக்ஷனுக்கு வெங்கட் பிரபு, இசைக்கு அண்ணன், நான், அக்கா, காஸ்ட்யூமுக்கு வாசுகினு நல்ல டீம் இருக்கு. இவங்களைச் சரியா பயன்படுத்தினாலே போதும். ஆனா, அஜித்தை வெச்சு நான் எதுவும் படம் எடுக்கலை!''




'' 'அப்பா மட்டும்தான் கம்போஸர்’னு சொல்லி இருக்கீங்களே? மத்தவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?'' 



''அப்பா என்பதையும் தாண்டி எனக்கு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல், காட்ஃபாதர் எல்லாமே அவர்தான். எல்லாருக்கும் அப்பா மேல் இருக்கும் காதலைவிட எனக்கு ஒரு துளியாச்சும் அதிகமா இருக்கும். அந்தப் பாசத்துலதான் அப்படிச்
சொன்னேன். அப்பாவைப் புரிஞ்சவங்க, என்னைத் தெரிஞ்சவங்க அதுல எதுவும் தப்பு இருக்கிறதா நினைக்க மாட்டாங்க.''



''எம்.எஸ்.வி-யுடன் இணைந்து வேலை பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கு?''  



''ரொம்பப் பெரிய ஆசீர்வாதம். 'தில்லுமுல்லு’ ரீமேக் படத்துக்கு எம்.எஸ்.வி. சார் டியூன் போடுறார். நான் அதை ஒருங்கிணைக்கிறேன். என் பூரிப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வரம் வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு!''



''மலேசியா இசை நிகழ்ச்சி, பாப் ஆல்பங்கள்னு பரபரப்பா இருக்கீங்க? சர்வதேச அங்கீகாரத்துக்கான முயற்சிகளா?'' 



''நூறாவது பட இசையைக் கொண்டாடணும்னு மலேசியா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்றேன். மத்தபடி என் ஒவ்வொரு சாதனையையும் நானே முறியடிக்கணும்னு ஆசை. அதுக்காக நிறைய மெனக்கெட்டு உழைக்கிறேன். அதான் ஹாலிவுட் பட இசை, இங்கிலீஷ் ஹிப்ஹாப், சிம்புவுடன் லவ் ஆன்தெம். ஓய்வே இல்லாம, தூங்காம ஓடிட்டே இருக்கேன். இப்போ எல்லாம் படிப்பு  பெரிய சுமையா இருக்கு. குழந்தைங்க ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கலைனு சொல்றாங்க. அவங்களோட மன அழுத்தத்தை ஜாலியா சொல்ல நினைச்சேன். அதைத்தான் 'ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு பாஸு ஃபெயிலு’னு பாட்டா எடுத்துட்டு இருக்கோம்!''

''இளம் இசையமைப்பாளர்கள்ல யார் கவனிக்கவைக்கிறாங்க?'' 



''ஜி.வி.பிரகாஷ், தமன், அனிருத்... மூணு பேரும் நல்லாப் பண்றாங்க. கார்ல போகும்போது எஃப்.எம்-ல நம்ம பாட்டு போடுறாங்களானு சேனல் மாத்திட்டே இருப்பேன். என் பாட்டுக்கு அடுத்து யார் பாட்டு நிறைய ப்ளே பண்றாங்கனு கவனிப்பேன். பாட்டு பிடிச்சிருந்தா, உடனே அந்த மியூஸிக் டைரக்டர்களுக்கு போன்ல வாழ்த்து சொல்லுவேன். இங்கே ஈகோ எல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஸ்பேஸ் இருக்கு!''



''உங்க அளவுக்கு அண்ணன் கார்த்திக் ராஜாவுக்கு இன்னும் சரியான பிரேக் கிடைக்கலையே?'' 



''அவருக்கு என்னைவிட திறமை அதிகம். அப்பா மாதிரி வெறித்தனமா வேலை செய்வார். சமயங்கள்ல அவர் வேலை செய்றதைப் பார்த்து நானே மிரண்டுபோய் இருக்கேன். அண்ணன் டைரக்ஷனும் பண்ணுவான். நல்ல டீமும் இயக்குநரும் கிடைச்சா, அவன் லைஃப் கிராஃப் மாறிடும். வாழ்க்கையும் சினிமா மாதிரிதான். சிலருக்கு ஃபர்ஸ்ட் ஆஃப் நல்லா இருக்கும். சிலருக்கு செகண்ட் ஆஃப் நல்லா இருக்கும். கார்த்திக் அண்ணனுக்கு செகண்ட் ஆஃப் பிரமாதமா இருக்கும்!''



''கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?'' 



''இசைவசமானவனைத் தன் வசப்படுத்தத் தெரிஞ்சிருக்கு ஷில்பாவுக்கு. தினம் தினம் காதலில் விழுகிறேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!''

 நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOisveZqJi6VXsMqVK6SBxiBO6IPH9YSveRZ3Kco6ljPiA_Huar9H9qrmFCfi9Dw7xjQkdBt3p96e0pVLA2WFPtai7p1hyqrLS64iZTQR6VBIgnhmxtbqgEDTveV38b4mxOHsUv_9vRGI/s1600/Ilayaraja+Wife+Death+Photos%252CJeeva+family+pics+sons+Yuvan+Shankar+Raja+and+Karthik+Raja+and+daughter+Bhavatharini.jpg