Saturday, October 06, 2012

ஈரோட்டில் கில்மா - சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரி லீலை - கிடாவெட்டு

ஈரோடு: ""சத்தியமங்கலத்தை, புலிகள் காப்பகமாக அறிவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டதால், என்னை பழி தீர்க்கும் முயற்சியில், இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ஈடுபட்டுள்ளார்,'' என, ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் அருண் தெரிவித்தார்.


நெய்வேலியைச் சேர்ந்த மலர்க்கொடி, 21, அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் உள்ள, தன் அக்கா வீட்டில் தங்கி, கோபியில் உள்ள கல்லூரியில், எம்.சி.ஏ., முதலாமாண்டு பயில்கிறார். நெய்வேலி சென்றிருந்த மாணவி, நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அப்போது, பஸ் ஸ்டாண்டுக்கு வந்த, ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் அருண், 52, மாணவியிடம் பேச்சு கொடுத்தார். 


போதையில் இருந்த அவரைக் கண்டு பயந்து போன மாணவி, அங்கிருந்த மக்களுடன் சேர்ந்து நின்று கொண்டார். அதிகாலை, 3.40க்கு, அந்தியூர் சென்ற, "திருமகள்' பஸ்சில் ஏறிய மாணவியைப் பின் தொடர்ந்து, அருணும் ஏறினார். மாணவிக்கு அருகில் அமர்ந்து, மாணவிக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். மாணவி கொடுத்த, எஸ்.எம்.எஸ்., தகவலால், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் தயாராக நின்றிருந்த மாணவியின் உறவினர்கள், அருணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, அருண் ஐ.எப்.எஸ்., அதிகாரி என்பதால், வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர். "சில்மிஷ' புகார் குறித்து விளக்கம் தெரிவிக்க, மண்டல வனப் பாதுகாவலர் அருண், நேற்று நிருபர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.





அவர் கூறியதாவது:


ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, மரக்கட்டைகள் அந்தியூருக்கு கடத்துவதாக தகவல் வந்தது. நான் மட்டும் தனியாக என் காரில், பஸ் ஸ்டாண்ட் சென்ற போது, அங்கே தனியாக நின்றிருந்த பெண்ணை, வாலிபர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களை விரட்டி விட்டு, அப்பெண்ணை விசாரிக்கையில், அவர் அந்தியூர் செல்வதாக தெரிவித்தார். "நானும், அந்தியூர் தான் செல்கிறேன் என்னுடன் வருகிறாயா?' என, கேட்டேன்; அவர் மறுத்தார். அதிகாலையில் செல்லும் முதல் பஸ்சில், மரக்கட்டைகள் கடத்தப்படலாம் என்ற நோக்கத்தில் தான், "திருமகள்' பஸ்சில் ஏறினேன்.




மற்றபடி என் சுண்டுவிரல் கூட, அப்பெண் மீது படவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் நான் தெரிவித்ததால், என்னை விடுவித்தனர். சத்தி வனப்பகுதியை, புலிகள் காப்பகமாக அறிவிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டதால், சில வனத்துறை அதிகாரிகளும், பவானிசாகர், இ.கம்யூ.,-எம்.எல்.ஏ., சுந்தரம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் என் மீது வெறுப்பில் உள்ளனர்.


பெண்ணின் உறவினர்கள் சமாதானமாக செல்ல தயாராக உள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ., சுந்தரம் தான் விஷயத்தை பெரிதாக்கி, பெண்ணின் உறவினர்களை புகார் கொடுக்க வற்புறுத்துகிறார். அப்பெண்ணிடம் நான் தவறாக நடந்திருந்தால், அந்தியூர் வரும் வரை அப்பெண் காத்திருக்க தேவையில்லை. பஸ்சுக்குள் சத்தம் போட்டிருந்தாலே போதும்; என்ன நடந்தது என்பது இறைவனுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பெண் புகாரால் அவப்பெயர்:


அருண், 1984ல் நடந்த, ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில் ரப்பர் நல வாரியத்தில் மேலாளராக பணியாற்றினார். 2010 அக்டோபர் 14ம் தேதி, ஈரோடு மண்டல வனப் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். பணி ரீதியாக, கண்டிப்பான அதிகாரியாக இருந்த அருண், பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே, அதிரடி நடவடிக்கையால், பல வனத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளின் வெறுப்பை சம்பாதித்தார். பல வனக் குற்றங்களை கண்டறிந்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தார்.


அருணின் நடவடிக்கையால், ஒரு சில வன அலுவலர்களுக்கு, "கிம்பளம்' இல்லாமல் போனது. இதனால், அருணுக்கும், சக அதிகாரிகளுக்கும், பனிப்போர் நடந்து வந்தது. இவரது முயற்சியால் தான், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால், சில வன அதிகாரிகள், பவானிசாகர், இ.கம்யூ.,-எம்.எல்.ஏ., சுந்தரம் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். அருணை இடமாற்றம் செய்ய, பலரும் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கண்டிப்பான அதிகாரியாக இருந்த அருண், "சில்மிஷ' புகாரில் சிக்கியதால், அவப்பெயர் அடைந்துள்ளார். குடும்பம்: அருணுக்கு, திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி பிரிஷில்லா, 46, வீட்டில் உள்ளார். அவரது மகன், மகள் இருவரும் கோவை கல்லூரியில் பயில்வதால், அவர்கள் கோவையில் உள்ளனர். அருண் மட்டும் ஈரோட்டில் வனத்துறை குடியிருப்பில் தங்கியுள்ளார்.

மாணவி "பல்டி':


நேற்று முன்தினம் இரவு, மாணவி மலர்க்கொடி, தன் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். "பஸ்சில், தன் அருகில் அருண் அமர்ந்திருந்த போதும், அவர் தன்னை தொடவில்லை. மேலும், அவர் உயர் அதிகாரி என்பது தெரிய வந்ததால், புகாரை வாபஸ் பெறுகிறேன்' என, மாணவி கூறியதாக, அந்தியூர் போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து 
1. கட்டையை கடத்துறாங்கன்னு பஸ்ல எறுனாய், அது ஒகே. ஆனா அந்த பொண்ணு பக்கத்துலதான் உட்காரனுமா ராசா ?? புலிகளை காப்பாத்திட்டு பொண்ணுங்களை வேட்டையாடுரியா, அது தப்பாச்சே... உன் பொண்ணை நினைச்சு பாரு 
 2.ஏங்க அருண் தெரியாமதான் கேக்குறேன், பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கிரான்னா, வேறொரு சீட்ல ஒக்கார வேண்டியது தான, அதிகாலை செல்லும் பஸ்ஸில் அப்படி கூட்டம் இருந்துச்சா?, உன்னோட பொண்டாட்டி பஸ்சுல போவாளா? அவ பக்கத்துல நான் போயி உக்காரட்டுமா? 
3. நல்ல வேல போன ஆட்சியால தான் இந்த சம்பவமே நடந்ததுன்னு சொல்லாம விட்டாரே அது வரைக்கும் பரவால 
4.ஒரு நல்ல அதிகாரி "கண்ணி" வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஆனால், தேவையில்லாமல் மாணவி எதற்கு உறவினரை அழைக்கின்றார்? அவர்கள் ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? அவருக்கும் சேர்த்து, இந்த அதிகாரியே பேருந்து கட்டணம் செலுத்தியபோது, மாணவி அதை மறுக்கவில்லை. அவர் தனக்கென தனியாகப் பயணச்சீட்டு பெறவில்லை என்பது ஏன்? இரண்டு பக்கமுமே மறைக்கப்பட்ட உண்மைகள் சில இருப்பதாகவே படுகின்றது.

ஒரு கள்ளக்காதலனின் டைரியில் இருந்து

1.எப்பெண்ணைப்பழித்தார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை அனுஷ்காவை மொக்கை ஃபிகர் என்றோர்க்கு # அனுஷ்கா டேபிள் ஃபேன் 



-----------------------


2. எறும்பு புத்து பாம்பு புத்து அருகே போனா எல்லாத்துக்கும் புத்துணர்ச்சி வந்துடுமா? 



---------------------


3. தோசை தீஞ்சு போனா அதை டெடிபேர் தோசைனு சொல்லிடலாமா? 



--------------------------


4. புவா -நான் போடும் கோலம் குழந்தை கிறுக்கினா மாதிரி,இருக்கும் # ஆனா வாய் மட்டும் பாட்டி மாதிரி 




-------------


5. வாசம் உள்ள சந்தன மரங்களின் வேர்கள் அதிக ஆழம் வரை ஊடுருவாது.அதுபோல் பேரழகிகளின் நேசம் # அப்ராக்ஸிமேட் அவதானிப்ஸ் 




---------------------------




6. அன்பே நீ கும்பராசியா? கும்பகர்ணன் ராசியா?காலை மணி ஏழரை ஆகியும் ஏழரை நீ இன்னும் எழலையே அடடே! 




-----------------------------


7. குடும்பத்தலைவி எப்பவும் குடுப்பா தலைவலி 




--------------------------



8. உன் விழிகள் அஹிம்சை..உன் மவுனம் ஹிம்சை 




-------------------


9. ரயிலில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக உ.பி. ஐஏஎஸ் அதிகாரி கைது # I A S = INTERNATIONAL ADULTSONLY SERVICEனு நினச்ட்டாரோ 




-------------------


10. அன்பே! உன் கூந்தலை விட உன் வாய் நீளமா இருக்கே? அய்யய்யோ! # நீளவேணிப்ரியன் 




-----------------------




11. முதல் காதல் சொதப்பி விட்டால் முற்றிலும் கோணல் அல்ல ! 



--------------------------


12. அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை.- நல்லகண்ணு # அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வனவாசம் அனுப்பிடறாங்க, இல்லைன்னா.. - கலைஞர்



--------------------


13. எதையாவது இவர் மிஸ் பண்ணிக்கிட்டே இருக்காரே? மிஸ் கிடைச்சா மிஸஸ் பண்ணிடுவாரோ?



----------------------


14. காந்திக்காக டாஸ்மாக்கை மூடுனாங்கோ, பெரியாருக்காக கோயிலை மூடுனாங்கோ, என் படம் ரிலீஸ் ஆனா தியேட்டர் கதவைக்கூட மூடறதில்லை - பூனம்பாண்டே



-----------


15. மண்வெட்டியால் கணவனை வெட்டிக்கொன்ற மனைவி:~# ஒரு வேலை வெட்டி இல்லாத ஆளை வெட்டி வாழா வெட்டி ஆகிடுச்சே அடடே



-------------------



Photo: ‎India‎



16, காதலிக்கும்போது  கிளி , கல்யாணத்துக்குப்பின் கிலி குடுக்கும் வெட்டுக்கிளி




-----------------------------


17. விமல் சிபாரிசு எனக்குத் தேவையில்லை! -ஓவியா # அதானே, அவருக்கே நீங்கதான் சிபாரிசாமே?



----------------------


18. அன்னதானம் சாப்பிடப்போய் சாப்பிட்டுட்டு மட்டும் வந்தா அது சாதா தமிழச்சி, 3 வேளைக்கு  பார்சலும் வாங்கிட்டு வந்தா அது I I O  தமிழச்சி ;-0




----------------------------


19. சின்ன வயசுல நாம சைட் அடிச்ச பொண்ணுங்க இப்போ மேரேஜுக்குப்பின் ஒண்ணா அந்நியம் ஆகிடறாங்க, இல்லைன்னா அண்ணி ஆகிடறாங்க



--------------------


20. கள்ளக்காதலனின் டைரியில் இருந்து - அன்பே! நீ பிளாங்க் மெசேஜ் அனுப்பினால் உங்க வீட்ல யாரும் இல்லைன்னு அர்த்தம் ;-0



-----------------------------



Photo: Funny man....

Mani innocent

Friday, October 05, 2012

ENGLISH VINGLISH - சினிமா விமர்சனம்

http://makeupandbeauty.com/wp-content/uploads/2012/10/Hidesign-in-English-Vinglish-3.jpg 

ஒரு அம்மா தன் பெண் குழந்தைக்கு எப்படி சமையல் கத்துக்கொடுக்கறாங்களோ, ஒரு அப்பா எப்படி  தன் பையனுக்கு நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற அடிப்படை வித்தைகளை கற்றுத்தர்றாரோ அது போல அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவங்க ஆன பின்னாடி  தான் கற்ற கல்வி அல்லது வித்தை , கலைகளை தன் பெற்றோருக்கு கற்றுத்தருதா? 10% கூட இல்லை.. 


பெற்றவர்கள் மனோ பாவம் தான் கற்றவைகள் எல்லாம் தன் குழந்தைகளுக்கும் கற்றுத்தருவதோடு அல்லாமல்  தான் கல்லாதவை, தனக்கு தெரியாதவை எல்லாம் தங்கள் வாரிசுகள் தெரிஞ்சு வெச்சிருக்கனும்னு உயர்வா நினைப்பாங்க. ஆனா வாரிசுகள் அப்படி இல்லை. 


ஹீரோயின் ஒரு ஹவுஸ் ஒயிஃப். சமையல்ல ஸ்பெஷலிஸ்ட். குறிப்பா லட்டு செய்வதில் டேலண்ட்.  டீன் ஏஜ்ல ஒரு பொண்ணு, 6 வயசுல ஒரு பையன். எல்லாரும் நுனி நாக்குல இங்க்லீஷ் பேசறாங்க. ஆனா ஹீரோயினுக்கு இங்க்லீஷ் ரொம்ப வீக்.


தன் குழந்தைகள் , கணவர் எல்லாரும் தன்னை கிண்டல் பண்றது அவளுக்கு பிடிக்கலை. 


அவ அக்கா  ஃபாரீன்ல இருக்கா.அக்கா பொண்ணுக்கு மேரேஜ். தனியா ஃபாரீன் போக வேண்டிய சூழல்.அவ மட்டும் முதல்ல போறா.அங்கே இங்க்லீஷ்கு தனியா டியூஷன் போறா.

தன்னை மதிக்காத கணவன் இருக்கும்போது  இங்க்லீஷ் டியூசன்ல தன்னை மதிக்கும் பலர் இருக்கக்கண்டு சந்தோஷப்படறா. அதுல ஒருத்தன் பிட்டைப்போடறான் , ஐ மீன் லவ் அப்ளிகேஷன்.


எக்சாம் வருது. எக்சாம் டேட்டும் அக்கா பொண்ணு மேரேஜ் டேட்டும் ஒண்ணு.

 என்ன ஆகுது? என்பது மிச்ச மீதிக்கதை.. 


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/09/Sridevi-In-English-Vinglish-Movie-Stills-And-Music-Reciew.jpg



 படத்தில் முதல் பாராட்டு இயக்குநர் கவுரி ஷிண்டேவுக்கு. மசாலா ஸ்கிரிப்ட் எல்லாம் கைல எடுக்காம இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததுக்கு. இது  அவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவமாம். அவர் அம்மா கதை . ஹேட்ஸ் ஆஃப் மேடம்.. 


படத்தோட மொத்த பாரமும் ஸ்ரீதேவி  இடுப்புல தான் ஸாரி முதுகுலதான். பூவே பூச்சூடவா நதியா எப்படி எம் குமரன் சன் ஆஃப் மகா லட்சுமில செகண்ட் ரவுண்ட் ஆரம்பிச்சாரோ அதே போல் அவருக்கு இது குட் ஓப்பனிங்க்.. 50 வயசு ஆன மாதிரியே தெரியலை.1977  ல 16 வயதினிலே படம் ரிலீஸ் ஆனப்ப மினிமம் அவருக்கு 16 வயசுனு  வெச்சாக்கூட  இப்போ அவருக்கு 49 வயசு இருக்கும் .ஆனா ஆள் நீட்டா தான் இருக்கார். 


தாழ்வு மனப்பான்மையில் துடிப்பது , தன் மகளே  தன்னை  திட்டுவது கண்டு பொறுமுவது , ஃபாரீன் க்ளாஸில் தன் சமையலை எல்லாரும் பாராட்டும்போது பெருமிதப்படுவது , திடீர்க்காதல் பிரப்போசலில் மனம் தடுமாறுவது  எல்லாமே கிளாசிக் நடிப்பு.. 


அடுத்த பாராட்டு ப்ரியா ஆனந்த். அக்கா மகளாக அழகுப்பதுமையா வர்றார். கண்ணுக்கு குளிர்ச்சியா ஆங்காங்கே சிரிப்பது அருண் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரி.. அவரோட ஆடை வடிவமைப்பு, நகை அலங்காரங்கள் , கூந்தல் அலங்காரங்கள் எல்லாமே கொள்ளை அழகு.. குறிப்பாக மணப்பெண்ணாய் அவரை பார்க்கும்போது பேசாம நாமளே போய் தாலி கட்டிக்கலாமா? என எண்ண வைக்கும் அழகு.. 



இங்க்லீஷ் மாஸ்டராக வருபவர் , திடீர்க்காதலனாக வருபவர் , அக்கா கேரக்டர் என சொல்லிட்டே போலாம்.ஸ்ரீதேவியின் சுட்டிப்பையனா வர்ற குட்டி சோ க்யூட்.. அவன் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ரசிக்க வைக்குது.. அடிக்கடி அம்மாவை பே என பயமுறுத்துவது செம..  அந்த டீன் ஏஜ் பொண்ணு நடிப்பும் கன கச்சிதம்././ 


 அஜித் ஒரே ஒரு சீன்ல 3 நிமிஷம் வர்றார்.. தன்னம்பிக்கை டயலாக் அடிச்சுட்டு போறார்.. 


http://mimg.sulekha.com/tamil/english-vinglish/stills/english-vinglish-05.jpg


 இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்



1. ஹீரோயின் இங்க்லீஷ் கிளாசில் எல்லோராலும் பாராட்டப்பட்டு ஒரு வித பெருமிதத்துடன் வெளியே வந்து தோரணையா  ரோட்டில் நடப்பதும் , யாஹூ என கையை பம்ப் பண்ணுவதும் அக்மார் ஸ்ரீதேவி ஸ்பெஷல் நடிப்பு . அந்த காட்சியில் கேமரா ஆங்கிள் லாங்க் ஷாட்டில் கன கச்சிதம். 


2. படத்தின் மார்க்கெட்டிங்க்காக அஜித்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தது , ஹிந்தியில் அமிதாப் 


3. தெளிவான திரைக்கதை  அமைப்பு , கண்ணை உறுத்தாத அழகிய ஒளிப்பதிவு , ஃபாரீன் லொக்கேஷன்ஸ் அழகு.. 



4. படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் மனதில் பதியும்படி நடிக்க வைத்தது, குறிப்பாக அந்த இங்க்லீஷ் டியூசன் செண்டர் ஸ்டூடன்ஸ் எல்லாரையும் சரியா யூஸ் பண்ணியது 


5. படத்தின் உயிர் நாடியான அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வேலைக்காரன் தர்மதுரை ரஜினி மாதிரி ஹீரோயின் மானாவாரி இங்க்லீஷில் பேசி அசத்த விடாமல் மிக நார்மலான , எளிமையான ஆங்கிலத்தில் உரை ஆற்ற விடுவது.. 


http://www.indicine.com/images/gallery/bollywood/movies/english-vinglish/73236-english-vinglish-2-large.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின்  தான் இங்க்லீஷ் டியூசன் போற மேட்டரை ஏன் தன் சொந்த  அக்கா கிட்டே மறைக்கறா?  இது என்ன பெரிய தப்பா? வெட்கப்பட வேண்டிய விஷயமா? தனக்குத்தெரியாத ஒரு விஷயத்தை அவ கத்துக்கறா , அவ்வ் தானே? 



2. ஹீரோயின் ஒரு சீன்ல  தன் அக்கா கிட்டே “ ஒரு காலத்துல  உனக்கு இங்க்லீஷே வராது, இப்போ பின்னிப்பெடல் எடுக்கறே” அப்டிங்கறாங்க. ஏன் அக்கா கிட்டேயே இங்க்லீஷ் கத்துக்கக்கூடாது. வீட்ல சமையல் வேலை எல்லாம் ஹீரொயின் தானே செய்யறாங்க? அக்கா ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அந்த சமையல் டைம் டியூசன் டைமாக்கிக்கலாமே? 



3. உனக்கு தனியா ஒரு கம்பெனி கிடைச்சுதா? எங்களோட இருக்கறது.ல உனக்கு சந்தோஷம் இல்லையா?ன்னு கணவன் கேட்கறப்பவாவது  ஹீரோயின் “ டேய் வெண்ணெய், நான் எங்கேயும் போகலை, டியூசன் தான் போனேன்னு சொல்றதுக்கு என்ன? பெங்களூர் கோர்ட்ல  ஜெ , சசிகலா எல்லாம் பம்முன மாதிரி ஏன் பம்முறாங்க? 



4.கன்னிப்பருவத்திலே , மவுன கீதங்கள் படங்கள்ல அந்த ஒரு நிமிட உரசல் சபலம் சீன் இருந்ததுன்னா படத்தோட ஆணி வேரே அந்த சீன் தான். தேவைப்பட்டுது. இந்தப்படத்துல கதையோட நோக்கம் ஒரு அம்மா எப்படி ஆங்கிலம் த்தெரியாம உலகை ஃபேஸ் பண்றாங்க என்பதே.. ஒரு பெண் இயக்குநரா இருந்துட்டு எதுக்கு தேவையில்லாத அந்த கில்மா சீன்? 



5. இப்போ ஆடியன்ஸ் மனசுல ஹீரோயின் இங்க்லீஷ் கத்துக்குவாங்களா? மாட்டாங்களா? என்ற துடிப்பு மாயமா போய் அந்த கள்ளக்காதல்க்கு ஹீரோயின் ஓக்கே சொல்வாங்களா? மாட்டாங்களா? என திசை திரும்புதே? 

 ஸ்ரீதேவியின் குடும்பம் மகள்கள் மற்றும் கணவர் ( ரியல் லைஃப்)
http://www.teluguwave.in/wp-content/uploads/2012/08/Sridevi-and-Daughters-at-English-Vinglish-First-Look.jpg



6. சப்போஸ் ஹீரோயின் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லைன்னா  எதுக்கு அந்த சிச்சுவேஷன்ல அலைபாயுதே மனம் அப்டினு ஒரு பாட்டு.. 


7. லட்டு பிடிக்கும் ஆரம்ப காட்சியில் ஹீரோயின் இடது கைல ஏன் பிடிக்கறாங்க? வலது கைதானே பெஸ்ட்? அதே காட்சி க்ளைமாக்ஸில் வரும்போது மற்ற பெண்கள் 2 பேரு கைல கிளவுசோட  இருக்காங்க, ஆனா ஹீரோயின் மட்டும் வெறும் கைல இடது கைல லட்டு பிடிக்கறாங்க


8. அவனவன் ஐ ஏ எஸ் எக்சாம்க்கு கூட கவலைபடலை.. ஆனா சாதா இங்க்லீஷ் டியூசன் எக்சாம்  மேரேஜ் அன்னைக்கே வர்ற தெல்லாம் ஒரு ட்விஸ்ட்டா?   ஆடி போனா ஆவணி , தாவணி போனா ஏதோ. ஒரு சுங்கடி . இதுக்கு ஏன்  டென்ஷன்? 



9. ஒரு குடும்பப்பெண் மேரேஜ் ஆகி 2 குழந்தை இருக்கறவ அவளுக்கு விழிப்புணர்வு, ஜாக்கிரதை உணர்வு  ஜாஸ்தியாவே இருக்கும். இங்க்லீஷ் தெரியலைன்னாலும் இங்கிதம் தெரியும். டியூசன் க்ளாஸ்ல  வர்ற அந்த கள்ளக்காதலன் பிட்டை போடப்போறான்னு தியேட்டர்ல இருக்கும் வயசுக்கு வராத வனஜாவுக்கே தெரியுது. ஸ்ரீதேவிக்கு ஐ மீன் அந்த கேரக்டருக்கு தெரியாதா? 



10.  க்ளைமாக்சில் ஹீரோயின் ஆங்கிலத்தில் உரை ஆற்றும்போது அவர் பெண் திடீர் என  உணர்ச்சி வசப்பட்டு அழுவது ஓவர். ஏன் அப்படி திடீர்னு திருந்தனும்? 



11. ஒரு சாதாரண விஷயத்துக்கு, வாக்கு வாதத்தில் மகள் “ உன் மூஞ்சியைப்பாரு “ என திட்டி விடுகிறாள். அவ வயசு அப்படி , பக்குவம் பத்தலை. ஆனா ஒரு அம்மாவான ஹீரோயின் உடனே உணர்ச்சி வசப்பட்டு பேசும் அந்த நீண்ட டயலாக் செயற்கை  பெற்றோர் என்றால் பொறுமை , சகித்தல் இது கூட தெரியாதா? ..


12. திரைக்கதையில் இங்க்லீஷ் டியூசன் போவது தவிர அழுத்தமான சம்பவங்களே இல்லையே? ஏ செண்டர் ரசிகர்களுக்கு ஓக்கே.. ஆல் கிளாஸ் ஆடியன்சை கவர ஏதும் இல்லையே?


13. ஒரு இடைவெளிக்குப்பின் தம்பதிகள் ஃபாரீனில் தனி அறையில் சந்திக்கும்போது குட்டிப்பையன் மம்மி என வந்து பக்கத்துல படுத்துக்கறான், உடனே கணவர் ரொம்ப சலிச்சுக்கிட்டு அந்தப்பக்கம் திரும்பிப்படுத்து தூங்கறார் , குழந்தை தூங்க மேக்சிமம் 10 நிமிஷம் ஆகுமா? அது கூட வெயிட் பண்ண முடியாதா?


http://moviegalleri.net/wp-content/gallery/english-vinglish-press-meet-stills/english_vinglish_press_meet_stills_sridevi_priya_anand_84f401e.jpg

படத்தின் இயக்குநர் ( என்னை கேட்டா இவரே நடிச்சிருக்கலாம்)


மனம் கவர்ந்த வசனங்கள்


1. சுட்டிப்பையன் கம் குட்டி - அம்மா, உனக்கு கோபம் வருமா? வருவாதா? 

 டேய்,. அது வருவாதா இல்லை. வராதா? டோண்ட் ஒர்ரி, எனக்கு எப்பவும் கோபம் வரவே வராது 



2. நான் நல்லா சமைக்கலைன்னா வீட்டுக்கே வர மாட்டீங்களோ? 



3. போம்மா , உனக்கு பி டி னா என்னன்னே தெரியாது 


 ஆனா பேரண்ட்ஸ்னா என்னனு தெரியும்.. அவங்க கடமை என்னன்னும் தெரியும்




4. இந்த வயசுல எல்லா சைல்ட்ஸும் பேரண்ட்சை அவமானப்படுத்திட்டுதான் இருப்பாங்க.. 



5. ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற பெண்ணை இவ்ளவ் க்ளோசாவா கட்டிப்பிடிப்பாங்க? 


 இதுக்குப்பேரு ஹக் . நாம ஹலோ சொல்றோமில்லை.. அது போல.. ஹக் பண்றது நெருக்கத்தை காட்டும் 


 அப்போ நாம 2 பேரும் கணவன், மனைவி .  இந்த நெருக்கத்தை காட்னீங்களா? 




6. அஜித் - இங்க்லீஷ்காரங்களைப்பார்த்து நாம பயப்படத்தேவை இல்லை.. அவங்க தான் நம்மை பார்த்து பயப்படனும்.. முத தடவை என்பது நம்ம வாழ்வில் ஒரு முறைதான் வரும்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு முத தடவை உண்டு.. எஞ்சாய்.. 


 நான் முதன் முதல்ல தமிழ் பேசுனப்போ அதை கிண்டல் செஞ்சவங்க உண்டு. இப்போ ஏத்துக்கலையா? 

 இங்க்லீஷோ , மலையாளமோ  எல்லாம் ஒரு மொழிதான்./. 



7. ஆம்பளை சமைச்சா அது கலை, பொம்பளை சமைச்சா அது  அவங்க கடமையா? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNkoxLTgwGp6R4zFHx8n-I7uLgAB072rGYVHp_FfRbQbi6uDkj5_wBMMv3jTUirMRtj5HcqQr4mm2TY2ymi2bTo8PessNmHncy-P7Tet5hIsfb-SyTBQkGOu2MD5VMSvGdejz5I61G4Tk/s640/Priya+Anand+at+NAC+Jewellers+for+1000+Diamond+Necklaces+Festival+Event+(3).jpg?priya-anand-in-saree-at-nac-ewellers-for-1000-diamond-necklaces-festival-event--actress-pics%20http:
8. இந்தக்கால குழந்தைகளுக்கு பேரண்ட்ஸ் கிட்டே எப்படி நடந்துக்கனும்னு தெரியலை..  நான் என்ன குப்பைத்தொட்டியா? ஆளாளுக்கு தூக்கி எரிய? எப்போ பாரு குறையே சொல்லிட்டு இருந்தா எப்படி? 



9. தாம்பூலப்பைன்னா என்னமா? 


 மேரேஜ்க்கு வர்றவங்களூக்கு நாம தர்ற பரிசு

 அவங்க தானே நமக்குத்தரனும்?

 ஹா ஹா ம் ம் ஆனா நாம தர்ற சின்ன பதில் கிஃப்ட்னு வெச்சுகலாம்


 10. அமெரிக்கா இவ்ளவ் பெரிய நாடுன்னு சொல்றாங்க,, அழகான இடம்கறாங்க. ஆனா இங்கே நான் 2 விஷயங்கள் மிஸ் பண்றேன் . 1. அம்மா  2 இட்லி.  


11. எதை ஸ்டார்ட் பண்ணுனீங்களோ அதை ஃபினிஷ் பண்ணவேணாமா? 

 ம் ம் என் குழந்தைகளுக்கு அம்மாவா இருப்பதுதான் என் முத கடமை  இங்க்லீஷ் எனக்கு முக்கியம் இல்லை.. 



12. என் மனைவி லட்டு ஸ்பெஷலிஸ்ட். அதை உருவாக்கவே அவ பிறந்திருக்கா.. ( இந்த சீனில் அப்போ நான் சமையலுக்கு மட்டுமா? என்பது போல் ஒரு பார்வை பார்க்கிறாரே. செம ) 



13.  எனக்கு என் கணவர்ட்ட இருந்து காதல் இல்லாட்டி கூடப்பரவாயில்லை. அட்லீஸ்ட் ஒரு மரியாதை.. .. 



14. இவளுக்கு 17 வயசு இருக்கும்போது ஏதோ கோபத்துல, வாழ்க்கைல ஒரு வெறுப்புல என்னை ஏம்மா பெத்தீங்கன்னு கேட்டா.. இதை எல்லாம் பர்மிஷன் போட்டுட்டா செய்ய முடியும்.. 


15. குடும்பம்கறது  அன்பு மற்றும் மரியாதை.. நம்மை நாமளே நேசிக்கலினா எப்படி> ? நாம நம்மை நேசிக்க ஆரம்பிச்சா நம்ம பழைய வாழ்க்கையையே நேசிக்கத்தோணும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiokAvNqLSk8jh1Pjb94-euy7q_Mpchvl4whESEVwGTUljQkaoBQRqAxRFfGCU7pilTqVg1rVyYAI2LBEY3XPX9Wt4ZIi6A3nmtFz1DXv6RmY5lWu3zhh0_3SIhS_EoCXOts-WSy_91iY0y/s1600/Priya-Anand-Hot-Saree-stills-03.jpg


சி.பி. கமெண்ட் - ஒரு திறமையான ஓவியன்  அல்லது சிற்பி தனது அழகிய படைப்பை  நிர்மாணிக்கும்போது சின்ன தவறு நடந்திருக்கலாம். ஆனாலும் அந்தப்படைப்பு நம் மனம் கவர்ந்து விடும். அது போல் மேக்கிங்க் வைஸ் சற்று சறுக்கி இருந்தாலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நல்ல சினிமா தான் இது.. ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ( இது ஹிந்தி டப்பிங்க் என்பதால்  விகடன் விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்கிங்க் - ஓக்கே



 டெக்கான் கிரானிக்கல் - 3 1/2   / 5


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  - 6 1/2  / 10 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5. 10. 2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.aceshowbiz.com/images/still/english-vinglish-poster03.jpg 

1.English Vinglish  - பதினான்கு வருட இடைவெளிக்கு பின் வெள்ளி திரைக்கு ஸ்ரீதேவியின் மறு பிரவேசம் “இங்க்லீஷ் விங்க்லீஷ்” என்ற படத்தின் மூலம் நடக்க உள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டு மருமகளாக போகும் இந்திய பெண்ணாக நடித்திருக்கிறார் ஸ்ரீ. ஆங்கிலம் தெரியாததனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.


ஹிந்தி தமிழ் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வர போகும் இந்த படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார் அமிதாப். அதே வேடத்தை தமிழிலில் அஜீத் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பால்கி கூறி இருக்கிறார்.


ஆங்கிலம் தெரியாது என்பதால் மனம் வருத்தப்படும் ஸ்ரீதேவியிடம் “மொழி என்பது நம் உணர்வுகளை தெரிவிக்கும் ஒரு கருவி மட்டுமே. அதற்க்கு மேல் பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மன உறுதி அளிக்கும் மூன்று நிமிட வேடத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் என்றும் பால்கி தெரிவித்துள்ளார்.


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலிஸ்  

விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/english-vinglish.html

 http://nowrunning.com/content/movie/2011/Doubles/wall_800x600_1.jpg

2.  புதுவை மாநகரம் - மம்முட்டி, நதியா, டாப்ஸி ஆகியோரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப் படமான 'டபுள்ஸ்' படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது.

ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பாலா.ஆர் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தை ஷோகன் இயக்கியிருக்கிறார். இதில் மம்முட்டி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். நதியா மம்முடியின் சகோதரி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு பாடலுக்கு நடிகை கிரண் நடனம் ஆடியிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், சினேகன், பரிதி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

மம்முட்டியும், நதியாவும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். அவர்களது பெற்றோர் விபத்தில் பலியாகி விட, வளர்ந்த பிறகு இருவரும் சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் உயரிய தொண்டாற்றி வருகிறார்கள். அப்படியொரு விபத்தில் சிக்கும் டாப்ஸியை காப்பற்றுகிறார் மம்முட்டி. அதற்கு பிறகு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் கதை.

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் செம்ப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. (டிஎன்எஸ்)


ஈரோடு அண்ணாவில் ரிலிஸ்  

http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/02/Mangala-Movie-Wallpaper-8.jpg

3. “சிவாங்கி” -  தெலுங்கில் ரிலீசான சிவாங்கி படம் தமிழில் வருகிறது. இதில் ஷார்மி, பிரதீப்ராவத், உதேஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஓஷோ துளசிராம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷார்மி நடிகை கேரக்டரிலேயே வருகிறார். மந்திரவாதி மகன் ஷார்மிக்கு தீவிர ரசிகனாக இருக்கிறான். ஒருநாள் விமானத்தில் வந்து இறங்கும் ஷார்மியை காண விமான நிலையம் வருகிறான். அப்போது  ஒருவன் ஷார்மியை தொட்டு மானபங்கம் செய்ய முயற்சிக்கிறான்.

அவன் கையை பிடித்து இழுத்து மந்திரவாதி மகன் தடுக்கிறான். அப்போது தவறுதலாக மந்திரவாதி மகன் கை ஷார்மி மேல் படுகிறது. இதனால் ஆவேசமாகி அவனை அடிக்கிறார். கூட்டத்தினரும் நையப்புடைக்கின்றனர்.

இதனால் அவமானப்பட்டு மந்திரவாதி மகன் தற்கொலை செய்கிறான். மகன் சாவுக்கு காரணமான ஷார்மியை பழிவாங்க மந்திரவாதி பில்லி சூனியம் வைக்கிறான். அதில் சிக்கி ஷார்மி அவஸ்தைபடுகிறார். அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

இசை: விஸ்வா, பாடல்: ஜெயமுரசு. கவர்ச்சி அழகி ஷார்மி, பிரதீப் ராவத், உதேஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “சிவாங்கி” படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது.


தெலுங்கில் வெற்றி பெற்ற மங்களா என்ற படத்தை, தமிழில் சிவாங்கி என்ற பெயரில் டப் பண்ணியிருக்கிறார்கள்.


படத்தின் ட்ரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. ஐஸ் ஐஸ் தின்னுக்கோ என்ற பாடலில் ஷார்மி கவர்ச்சியான அங்க அசைவுகளில் கிளுகிளு ஆட்டம் போட்டிருக்கிறார். 


விழாவில் ஷார்மி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. வேறு படப்பிடிப்பில் ஷார்மி பிஸியாக இருந்ததால் விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனதாக படக்குழுவினர் வருத்தத்தோடு கூறியுள்ளனர். 


ஐஸ் ஐஸ் தின்னுக்கோ பாடலை கவிஞர் ஜெயமுரசு எழுதியுள்ளார். இப்பாடலை ரீட்டா பாடியிருக்கிறார்.


துல்லியமான முறையில் பாடலை பதிவு செய்துள்ளார்கள். புதுமையாக தோல் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசையமைப்பாளர் விஸ்வா இப்பாடலை உருவாக்கியுள்ளார்.


அறிவியல், ஆன்மிகம் கலந்த சைக்லாஜிகல் படமாக இந்த சிவாங்கியை இயக்குனர் ஓஷோ துளசிராம் எடுத்துள்ளார் என்று படக்குழு கூறுகிறது.


ஈரோடு ஸ்டாரில் ரிலிஸ்  

 http://www.thedipaar.com/pictures/resize_20110308164736.jpg
4. புதிய காவியம் -ப்ரண்ட்ஸ் சர்க்கிள் மூவிஸ் சார்பில் ஜி.கமலநாதன், எம். வைஜெயந்திமாலா தயாரிக்கும் படம் ‘புதிய காவியம்’. இதில் நாயகனாக திலீப்குமார், நாயகியாக ஜானவி நடிக்கின்றனர். அல்வா வாசு, ஆதேஷ், ரமணா ராமகிருஷ்ணன் காதல் மீனாட்சி ஆகியோரும் நடிக்கின்றனர். புஞ்சை வடிவேலு முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம, பாடல்கள் எழுதி பெ.ந.ரமேஷ்குமார் இயக்குகிறார்.

அறியாமையில் ஒரு கிராமம் மூழ்கிக் கிடக்கிறது. அதில் இருந்து அவர்களை நல்வழிப்படுத்தி முன்னேற்ற இளைஞன் ஒருவன் துடிக்கிறான். ஆனால் கிராமத்தினர் அவனை உதாசீனம் செய்கின்றனர். ஊர் மக்களால் நல்லவன் என நேசிக்கப்படும் அயோக்கியன் ஒருவன் அமெரிக்க விஞ்ஞானியிடம் கூட்டு வைத்து விவசாய நிலத்தை அழித்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறான். அவனிடம் இருந்து நல்ல மனம் கொண்ட இளைஞன் மக்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பது கதை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது.

இசை: தஷி, ஒளிப்பதிவு: கிச்சாஸ், எடிட்டிங் ஜி.பி.வெங்கடேஷ், நடனம்: காதல் கந்தாஸ், ஸ்டண்ட்: வாலிதேஜா. இணை தயாரிப்பு: ஏ.வேலு, ஆர்.அன்பரசு, எம்.எஸ்.சீதாராமன். 

http://www.thedipaar.com/pictures/resize_20120423055415.jpg


5. செம்பட்டை -  அழகிய தீயே, சிந்தனை செய் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த பாலா கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர். விமல், வித்தார்த் ஆகியோருக்கு நடிப்புப்பயிற்சி அளித்தவர் இவர்தான்.


பாசிலின் காதலுக்கு மரியாதை, கண்ணுக்கள் நிலவு ஆகிய படங்களில் பணிபுரிந்த ஐ.கணேஷ் இயக்கும் "செம்பட்டை" படத்தில் பாலா கதாநாயகனாக நடித்துவருகிறார். கடல், நீர்ப்பறவை போல இதுவும் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை.


ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்
http://www.filmofilia.com/wp-content/uploads/2012/07/Taken2_Quad.jpg

6. TAKEN 2  - 2008 ல் ரிலிஸ் ஆன டேக்கன் படம் செம ஓட்டம் ஓடியது . ரஜினி நடிப்பதாக இருந்து பின் சரத் நடித்த ஜக்குபாய் உட்பட 2009 ஆம் வருடம் 9 படங்கள் டேக்கன் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு சாதனை. அப்பேர்ப்பட்ட ஹிட் படத்தின் 2 ஆம் பாகம் இன்று ரிலீஸ்.. சுடறவங்கள்ல யார் முந்தப்போறாங்களோ. இதிலும் அதே டைப் கதைதான். கடத்தப்பட்ட மனைவி , துரத்தப்படும் மகள் இரு வேறு திசையில் ., எப்படி ஹீரோ 2 பேரையும் காப்பாத்தறார் என்பதே கதை . செம ஸ்பீடு ஆக்‌ஷன் படமாம்.. தமிழ் நாட்டில் ரிலீஸ் இல்லை..


திவானா இருந்த புரோட்டா புவனா அப்பா திவாலா ஆனது எப்படி?


சென்னிமலை ஒரு இனிய உதயம்
1.நான் ரீஃபன்டபில் டெபாசிட் = காதலிக்கு செய்யப்படும் தண்டச்செலவுகள் 



--------------------


2. ஆஃபீஸுக்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம் எடுத்துசெல்வேன் ஆஃபீஸ் கவர்களை, பேப்பர்களை 



-------------------


3. கொழுக் மொழுக்னு இருந்தா அது கொழுந்தியா , கொளுந்து மாதிரி இளமையா இருந்தா கொளுந்தியா # தமிழ் இலக்கணங்கள் 




-------------


4.  ஒரு நாட்டின் சி எம் எழுதி வெச்சதை பார்த்து படிப்பது தப்பில்லைன்னா எக்சாம்ல புக் பார்த்து எழுதுறது மட்டும் தப்பா? 



---------------------


5.  மாற்றான் படத்துல காஜல் அகர்வாலுக்கு வேலையே இல்லை போல , சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் # அட போங்கப்பா ;(((



---------------------

ஏஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருக்கும் 'துப்பாக்கி' விஜய்!



6.  புவா - டாக்டர்,டெய்லி 5 பாதாம் நட்ஸ் ,அரை கட் குங்குமப்பூ போட்ட பாலோட சாப்டா என்ன ஆகும்? #



 திவானா இருக்கும் உங்கப்பா திவாலாகிடுவாரு



--------------------


7. மேனேஜர் சார், என் லவ்வருக்கும் இதே ஆஃபீஸ்ல வேலை வேணும். எதுக்கு?


நீங்க 2 பேரும் வேலை செய்யவா?அதுக்கு சம்பளம் வேற !



----------------------


8.  ஆஃபீஸுக்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை ஆனால் போகும்போது நிச்சயம் எடுத்துசெல்வேன் ஆஃபீஸ் கவர்களை, பேப்பர்களை



-------------------


9.  படத்துல குளிக்கற சீன் நிறைய இருக்கும் போல, அதுவும் தலைக்கு குளிக்கற சீன், ஆனா என்ன சோகம்னா ஹீரோ குளியல் சீன் ;( # துப்பாக்கி ;-0




--------------------------



10. ஆண்களின் அகராதியில் தன்னிடம் நட்புடனோ தோழமையுடனோ இருக்க மறுக்கும் பெண்கள் மாதவிகள்,அவர்கள் சீதையாக இருந்தாலும்




--------------------

செத்தான்டா சேகரு..



11. தன்னுடன் இருக்கும் பெண் கண்ணகியாகவும் ,தனக்கு எதிரே வரும் பெண்கள் மாதவியாகவும் இருக்கவேண்டும் என்பதே ஆண்கள் நிலைப்பாடு




-----------------


12. இலங்கை விவகாரத்தில், என்னைப் போல பிரதமர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது,'' மு- க# அவருக்கு நடிக்கும் வல்லமை பத்தாதா?




-----------------------



13. ஆபீஸ்ல நிறைய மொக்கை பிகருங்கதான் இருக்குங்கறதை விட அதை சொல்லும்போது யாரும் நம்ப மறுப்பது இன்னும் பெரிய கொடுமை :



------------------------


14. சகிப்புத்தன்மை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்நேரம் பல ஆண்கள் டைவ்ர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் தவம் கிடப்பார்கள்




----------------------


15. உலக சினிமாவை நோக்கி பயணிப்போம்: கமல்ஹாசன் #விஸ்வரூபம் எந்த உலக சினிமாவை நோக்கிய பயணம் சார்? ஹி ஹி




--------------------

அடடா.. என்ன அழகு..:)



16. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மீண்டும் சோனியா பெயர் சிபாரிசு ! # சமாதிக்கும் அமைதிக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுங்கய்யா



------------------------


17. காந்தியக் கொள்கையை பின்பற்றும் ஒரே கட்சி காங்கிரஸ்: சோனியா # ராகுலுக்கு வயசு 41, காந்திக்கு மேரேஜ் ஆகும்போது வயசு 13 ஹி ஹி



--------------------------


18.  ஆவின் பால் லிட்டர்  ரூ 32 , சீம்பால் லிட்டர் ரூ 104 , அமலாபால் ஒரு பட சம்பளம் ரூ 27 லட்சம் # பால்காரர் டைரிக்குறிப்பு




------------------------


19.பெண்களை கடுப்பேற்ற ஈசியான வழி - உங்களை விட உங்க தங்கச்சி இளமையாவும், அழகாவும் இருக்காங்களே



-----



20. அமலாபால் மேனேஜர் பேரு பால் வசீகரன் ஹி ஹி # அடிஷனல் அட்டாச்மென்ட்



-------------------




21. மிஸ், நான் உங்களை ஒன் சைடா 5 வருஷமா லவ் பண்றேன் .




 அட லூசே, நான் அஞ்சு பேரை  டபுள் சைடுலயும் லவ் பண்றேன் # பஞ்ச் பா ஞ்சாலி



-----------------------


22. விவசாயி மகன் விவசாயி ஆக விரும்புவதில்லை - பிரணாப் முகர்ஜி  # ஆனா ஒரு சி எம்மோட மகனும், ஒரு பி எம்மோட மகனும்  அதே போல் ஆக விரும்பறாங்க




------------------------


23..XQSமீ மிஸ், இன்னைக்கு என் கேர்ள் ஃபிரண்ட்டை கூட்டிட்டு வர மறந்துட்டேன்,நீங்க ஓக்கேன்னா உங்க கூட கடலை போட்டுட்டு திருப்பி அனுப்பிடறேன்# பீச்



---------------------


24. பெண் பார்க்கும் படலத்தில் - மாப்ளைக்கு சமைக்கத்தெரியுமா?  வெற்றி விழா கமல் - எனக்கு சமைக்கத்தெரியுமா? தெரியாதா?ங்கறதே மறந்துடுச்சு



---------------


25. ராவணன் சீதையை கடத்திட்டு ஏன் தண்டமா அவ்ளவ் தூரம் போனான்? அந்த நேரத்துல ஹி ஹி




----------------------




Thursday, October 04, 2012

கன்னிமை - கி. ராஜநாராயணன்-சிறுகதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP5UhDnpi709BZRatOoHZq9plsyafYN8280dc5lWe3dJPEd8S-ykkrilEsZJv0eD8wp1ZOiYi9HKMQCD-vfhpghKxWSxME6JEqirQsSPosmFXp6fKhnzD_smp-KZmXJyQsVXONCmXLeV5a/?imgmax=800

சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று
நினைக்கவேயில்லை.


அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்.
‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக்கொண்டாள்.


அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு நிகர் அவளேதான்.

அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள்
குடும்பத்துக்கே பொன் நாட்கள்.

வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி.

நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச் சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.



ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள
கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின்
காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா கொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாஅ பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.




வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா
என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப்
படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி.
அவள் வாழ்க்கைப்பட்டு, புருஷன் வீட்டுக்குப் போனபிறகு எங்கள் நாக்குகள் எல்லாம்
இப்போது சப்பிட்டுப் போய்விட்டது. உயர்ந்த ஜாதி நெத்திலியைத் தலைகளைக் கிள்ளி
நீக்கிவிட்டுக் காரம் இட்டு வறுத்துக் கொடுப்பாள்.



இப்போது யாருமில்லை எங்களுக்கு. அந்தப் பொன்முறுவல் பக்குவம் யாருக்கும் கைவராது. பருப்புச்சோற்றுக்கு உப்புக்கண்டம் வறுத்துக் கொடுப்பாள். ரஸ சாதத்துக்கு முட்டை அவித்துக் காரமிட்டுக் கொடுப்பாள். திரண்ட கட்டி வெண்ணெயை எடுத்துத் தின்னக் கொடுப்பாள், அம்மாவுக்குத் தெரியாமல்.
அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு
நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.



மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும்
வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது.



அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது
அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள்



. வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.




அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும்
செய்யும்; ‘கேட்க’வும் செய்யும்.
விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும்
விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும்
அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.
தானாகக் கண்கள் சோர்ந்து மூடிக்கொண்டுவிடும்.



அதிகாலையில் ரங்கையா வந்து என்னை எழுப்பினான். ராமர், லக்‌ஷ்மணர், சீதை மூவரும் எங்கள் தெருவின் முடிவிலுள்ள கிழக்காகப் பார்த்த ஒரு வீட்டிலிருந்து இறங்கிக் காட்டுக்குப் போகிறார்கள். பார்வதி அம்மன் கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தையும் கடந்து, கம்மாய்க்கரை வழியாக அந்த மூவரும் போகிறாள். எனக்குத் தொண்டையில் வலிக்கிறாற்போல் இருக்கிறது. முகத்தைச் சுளிக்க முடியவில்லை. ரங்கையா தோள்களைப் பிடித்துப் பலமாக உலுக்கியதால் விழித்துவிட்டேன். சே! நன்றாக விடிந்துவிட்டிருக்கிறது. ரங்கையா சிரித்துக்கொண்டு நின்றிருந்தான், கிளம்பு கிளம்பு என்று ஜரூர்ப்படுத்தினான்.


நாச்சியாரம்மா செம்பு நிறையத் தயிர் கொண்டுவந்து வைத்தாள், இருவரும்
வயிறுமுட்டக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.
ரங்கையா எங்கள் மச்சினன்; ‘வீட்டுக்கு மேல்’ வரப்போகும் மாப்பிள்ளை.
நாச்சியாரம்மாவை இவனுக்குத்தான் கொடுக்க இருக்கிறோம். இவனும்
நாச்சியாரம்மாபேரில் உயிரையே வைத்திருக்கிறான்; அவளும் அப்படித்தான்.



‘புல்லை’யையும் ’மயிலை’ யையும் பிடித்து ரங்கையா வண்டி போட்டான். அவை இரண்டும் எங்கள் தொழுவில் பிறந்தவை. ஒன்று இரண்டு; இன்னொன்று நாலு பல். பாய்ச்சலில் புறப்பட்டது வண்டி. ஊணுக் கம்பைப் பிடித்துத்தொத்தி, அவற்றில் இரண்டைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்றுகொண்டேன். சட்டத்தில் இரும்பு வளையங்கள் அதிர்ந்து குலுங்கிச் சத்தம் எழுப்பியது. வண்டியின் வேகத்தினால் ஏற்பட்ட குலுக்கலில் உடம்பு அதிர்ந்தது. கல்லாஞ்சிரட்டைத் தாண்டி வண்டியின் அறைத் தடத்துக்குள் காளைகள் நிதானங்கொண்டு நடை போட்டன.
நடுவோடைப் பாதையிலுள்ள வன்னிமரத்தருகில் வண்டியை அவிழ்த்து, காளைகளை
மேய்ச்சலுக்காக ஓடைக்குக் கொண்டு போனோம்.



காட்டில் பருத்தி எடுக்கும் பெண்கள் காட்டுப் பாடல்கள் பாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நாச்சியாரம்மாவும் நிரை போட்டுப் பருத்தி
எடுத்துக் கொண்டிருந்தாள். பருத்தி ‘காடாய்’ வெடித்துக் கிடந்தது; பச்சை
வானத்தில் நட்சத்திரங்களைப்போலே. ரங்கையா தன் மடியிலிருந்த கம்பரக் கத்தியால்
கருவைக் குச்சியைச் சீவி, பல் தேய்க்கத் தனக்கு ஒன்று வைத்துக்கொண்டு எனக்கு
ஒன்று கொடுத்தான்.



 போக இன்னொன்று தயார் செய்து வைத்துக்கொண்டான்!
நேரம், கிடை எழுப்புகிற நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. காளைகள் வயிறு முட்டப்
புல்மேய்ந்து விட்டு வன்னிமர நிழலில் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.
நாச்சியாரம்மா, பருத்தியைக் கருவமரத்து நிழலில் கூறுவைத்துக் கொடுத்துக்
கொண்டிருந்தாள். மடிப் பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று
பகிர்ந்து போட, பள்ளுப் பெண்கள் சந்தோஷமாக நாச்சியாரம்மாவை வாழ்த்திக்கொண்டே வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் வேறு யார் வந்து கூறுவைத்துக் கொடுத்தாலும் ஒப்பமாட்டார்கள். நாச்சியாரம்மாதான் வேணும் அவர்களுக்கு.
கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தைப் பொதியாக்கட்டி வண்டியில்
பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டோம்.



 பள்ளுப்பெண்கள் முன்கூட்டிப்
புறப்பட்டுப் போய் விட்டார்கள் - நாச்சியாரம்மாவும் நானும் வண்டியில்
ஏறிக்கொண்டு பருத்திப் பொட்டணங்களின்மேல் உட்கார்ந்துகொண்டு ஊணுக்கம்புகளைப் பிடித்துக்கொண்டோம். ரங்கையா வண்டியை விரட்டினான்.
வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியோடு நடந்து வருகிற பெண்டுகளின்
கூட்டத்தைக் கடந்துகொண்டே வந்தது வண்டி. அவர்கள் வேண்டுமென்று
குடிகாரர்களைப்போல் தள்ளாடி நடந்துகொண்டே வேடிக்கைப் பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள். தொட்டெரம்மா கோயில் பக்கத்தில் வந்ததும் ரங்கையா கயிறுகளை முழங்கைகளில் சுற்றி இழுத்து வண்டியை நிறுத்தினான். தொட்டெரம்மா கோயிலின் இலந்தைமுள் கோட்டையின்மேல் நாச்சியாரம்மா ஒரு கூறு பருத்தியை எடுத்து இரு கைகளிலும் ஏந்திப் பயபக்தியோடு அந்த முள்கோட்டையின் மீது போட்டாள். பின்னால் வந்துக்கொண்டிருந்த பள்ளுப்பெண்கள் குலவையிட்டார்கள். ரங்கையா கயிற்றை நெகிழ்ந்து விட்டதும் புல்லையும் மயிலையும் வால்களை விடைத்துக்கொண்டு பாய்ந்து புறப்பட்டது.




********
ஊரெல்லாம் ஒரே சலசலப்பு. என்ன ஆகுமோ என்ற பயம். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் ரங்கையா. ‘என்ன ஆச்சி?’ என்று அவனைக் கேட்பதுபோல் பார்த்தோம் யாவரும். அவன் என்னை மட்டிலும் ‘ராஜா, இங்கே வா’ என்று தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.
எங்கள் ஊரில், சுந்தரத்தேவன் என்று ஒரு பெரிய போக்கிரி இருந்தான். ஏழுதடவை
ஜெயிலுக்குப் போனவன். மூன்று கொலைகள் செய்தவன். அதில் ஒன்று இரட்டைக் கொலை. அவனுடைய மகனை, எங்கள் தகப்பனார் எங்கள் புஞ்சையில் ‘வாங்கித்திங்க’




பருத்திச்சுளை எடுத்தான் என்றதுக்கு ஊணுக்கம்பால் அடி நொறுக்கி எடுத்து
விட்டார். பையனைக் கட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து அவனுடைய வீட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சுந்தரத்தேவன் வெட்டரிவாளை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறான். விஷயம் இதுதான். ரங்கையா போய் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை அவன்.
நாச்சியாரம்மா சுந்தரத்தேவன் வீட்டை


நோக்கிப் போனாள். அவள் அங்கு போயிருப்பாள் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை; பிறகுதான் தெரியவந்தது.
அங்கு அவள் போனபோது ஒரே கூட்டம். அழுகைச் சத்தம். நாச்சியாரம்மா நுழைந்ததும் பரபரப்பு உண்டானது. பெண்கள் பணிவாக வழிவிட்டு விலகி நின்றனர். அடிப்பட்ட சிறுவ்னை அந்தக் கட்டிலிலேயே கிடந்த்தியிருந்தது. இரத்த உறவு கொண்ட பெண்கள் ஓவென்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறுவனின் தாய் கதறியது உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது. நாச்சியாரம்மா சிலையானாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. அவள் சுந்தரத்தேவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு கட்டிலின்
சட்டத்தில் உட்கார்ந்தாள்.



தன் முந்தானையாள் கண்ணீரை ஒத்திக்கொண்டு
அச்சிறுவனின் இரத்தம் உறைந்த முகத்தைத் துடைத்தாள். சுந்தரத்தேவன் கட்டிலின்
பக்கத்தில் நெருங்கி அரிவாளைத் தரையில் ஊன்றி ஒற்றைக் கால் மண்டியிட்டு
உட்கார்ந்துகொண்டு இடது முழங்கையைக் கட்டிலின் சட்டத்தில் ஊன்றி முகத்தில்
ஐந்து விரல்களால் விரித்து மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல் குமுறி அழுதான்.



நாச்சியாரம்மா சிறுவனை மூர்ச்சை தெளிவித்தாள். வீட்டிலிருந்த புளித்த மோரை
வருத்திச் சிறிது கொடுத்துத் தெம்பு உண்டாக்கினாள். மஞ்சணத்தி இலைகளைப்
பறித்துக்கொண்டு வரச் சொன்னாள். அதை வதக்கித் தன் கையாலேயே ஒத்தடம் கொடுத்தாள்.
சுவரொட்டி இலைகளை வாட்டிப் பக்குவப்படுத்திக் காயங்களைக் கட்டினாள். பின்பு
வீட்டுக்கு வந்து, பத்துப் பக்கா நெல் அரிசியும், இரண்டு கோழிகளையும்
கொடுத்தனுப்பினாள்.


நாங்கள் ஊமைகளைப்போல் ஒன்றுமே பேசாமல் அவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
எங்கள் தகப்பனாரோ, இப்பொழுதுதான் ஒன்றுமே நடக்காதது போல் தலையில் கட்டிய
லேஞ்சியோடு நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சுவர்நிழலில் சூரித்தட்டை
வீசிக்கொண்டிருந்தார். இடையிடையே வாயில் ஊறும் வெற்றிலை எச்சியை இரண்டு
விரல்களை உதட்டில் அழுத்திப் பதித்துக்கொண்டு பீச்சித் துப்புவார். அது
கம்மந்தட்டைகளையெல்லாம் தாண்டித் தூரப்போய் விழும்.



********
எல்லாப் பெண்களையும்போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒருநாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்றுவரைக்கும் நான் யாரிடமும் காரனம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணுநாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள்.


வழக்கம்போல் மூன்றுநாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் ‘பொண்ணுக்கு இருந்த’ அழகைச் சொல்லிமுடியாது. கல்யாணம் முடிந்த நாலாம்நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக்கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின்
ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்-


*‘மாயம்ம லக்‌ஷ்மியம்ம போயிராவே...’
(எங்கள் தாயே லக்‌ஷ்மி தேவியே போய் வருவாய்)*
அந்தக் காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது. அவளை நாங்கள்
உள்ளூரில்தான் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஐந்து வீடுகள் தள்ளித்தான் அவளுடைய
புக்ககம். அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில்
அர்த்தமில்லைதான். ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்தனுப்பி
இருக்கிறோம்.


அந்த ஒன்று இப்பொழுது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை. அது அவளிடமிருந்துபோயே போய்விட்டது.


-----
2
ஆம் அது ரொம்ப உண்மை.
ராஜா அடிக்கடி சொல்லுவான். இப்பொழுதுதான் தெரிகிறது எனக்கு.
நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன். ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன்.
அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என்
குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு
இருந்த நாச்சியாரம்மாள்; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள்; நான் அந்த
அவளைத்தான் மிகவும் நேசிக்கிறேன்.



இப்பொழுது மூணு குழந்தைகள் எங்களுக்கு, தொடர்ந்த பிரசவம். இது அவளைப்
பாதித்திருப்பது உண்மைதான். குழந்தைகளையும், குடும்பத்தையுமே சதா கவனிக்கும்
சுயநலமி ஆகிவிட்டாள்.


எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள். உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை, என்ன பொறுமை!


குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி செய்து கொள்ளாமல்
தூளியில் இட்டு ஆட்டும் இந்த இவளா அவள்?


ஏகாலிக்கும், குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள்.
குழந்தைக்குப் பாலூட்டும்போதோ, அல்லது தான் சாப்பிட உட்காரும்போதோ
பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார்
செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்கு ‘வாய்தாப்’ போடுகிராள். வேலைக்காரகளின்மேல்
எரிந்து விழுகிராள். ‘அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்’
என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.



குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில்
வெகுநேரம் புகழ்வதில்லை. பெருமாள் மாட்டுக்காரன் தன் மாட்டுக்கு
கம்மஞ்சோற்றையும் பருத்திக்கொட்டையையும் தவிட்டையும் கலந்து வைக்கும் அந்த ‘நாச்சியார்’ எங்கே போனாள் என்று தேடிக்கொண்டிருக்கிறான்.
கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு, நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள்,
தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால்
வேலைப்பாடுகள் செய்வாள்.


அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும்
நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில், தன்
கன்னிப் பருவத்தின் எண்ணங்களையும் கனவுகளையுமே அதில் பதித்துப் பின்னுவதுபோல் தோன்றும். இடையிடையே அவளுக்குள் அவளாகவே குறுநகை செய்து கொள்வாள். சில சமயம் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பார்வை எந்தப் பொருள்பேரிலும் படியாமல் ‘பார்த்து’க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள்.



ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம்
தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ஒரு நீளமான ஓடு வேய்ந்த கட்டிடம். அதில் ‘குறுக்க மறுக்க’ நிறையக் குலுக்கைகள். குதிரைவாலி,
நாத்துச்சோளம், வரகு, காடைக்கண்ணி முதலிய தானியங்கள் ரொம்பி இருக்கும். புதிய
ஏர் வடங்கள் ஓட்டின் கைமரச் சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில், மண் ஓட்டில் ஓட்டை போட்டுக்
கோர்த்திருந்தார்கள்.


 ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண்
ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு
அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை மேல் ஏறி நின்றேன். மத்தியான வெயிலால் ஓட்டின் வெக்கை தாள முடியாததாக இருந்தது.



தற்செயலாக மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தரையில் நாச்சியாரு ஒரு
தலைப்பலகையை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்! மார்பின்மீது விரித்துக்
கவிழ்க்கப்பட்ட ’அல்லி அரசாணி மாலை’ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப்
பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு, பக்கத்தில்
ஒரு சினுக்குவலி, இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு, ஒரு ஈருவாங்கி,
ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தாள். பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில்
பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி.
அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.


அடர்ந்த நீண்டு வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய் இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும் ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது.
சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த
விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தது. குலுக்கைமேல் இருந்த என்னை அதே கணம் பார்த்துவிட்டாள். ‘


இது என்ன வேடிக்கை?’ என்பதுபோல் சிரித்துப் பார்த்தாள்.
அவள் எழுந்த வேகத்தில் புஸ்தகம் அவளுடைய காலடியில் விழுந்தது. விழுந்த
புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை எடுத்து ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே, நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினாள்.



கல்யாணத்துக்கு முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொலைவில் இருந்துகொண்டே ரகசியமாக ஒட்டிப் பழகினோம். இதயங்கள் அப்படி ஒன்றி ஊசலாடின. பேசாத ரகசியங்கள்தான் எங்களுக்குள் எத்தனை!
எனக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமென்று நான் உணர்த்தாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும் அப்போது.



********
ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச்
சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது.
முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம். இப்போதோ நிறைய ரூபாய்கள் கொண்டுபோய் கொஞ்ச சாமான்களையே வாங்கமுடிகிறது.


வந்ததும் வராததுமாய்ச் சாமான்களையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கி
வைத்துவிட்டுப் பணப்பையையும் கச்சாத்துகளையும் நாச்சியாருவிடம் கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம் அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல் தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துடைத்துத் திரியைக் கத்தரித்து விடாததாலோ என்னவோ சுடர் பிறைவடிவில் எரிந்துகொண்டிருந்தது. சிம்னியில் புகைபிடிக்க ஆரம்பித்திருந்தது.


அந்த வெளிச்சத்தில் அவள் கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக்கொண்டும்,
மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள்.
கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன
என்று என்னிடம் கேட்டாள்.
’எல்லாத்தையும் எடுத்துவை
கணக்கு எங்கெயும் போய்விடாது;
காலையில் பாத்துக்கலாம், எல்லாம்.’
அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.



எனக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும்போல்
இருந்தது. என்னுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஒத்தடத்துக்கு ஏங்கியது.
மூக்கு மயிர் கருகும்படியான உஷ்ணக்காற்றை நான் வெளிவிட்டுக் கொண்டிருந்தேன்.
நல்ல உயர்ந்த காய்ச்சல்.



சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன, மெல்லிய
சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில் மூழ்கியிருந்தாள்.


குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன, துடைத்துக்கொள்ளக் கையை
எடுக்க இஷ்டமில்லை. அதை இமைகளாலேயே மூடி வெளியேற்றினேன். மீண்டும்
நாச்சியாருவையே பார்த்தேன். அவளுடைய ரவிக்கையின் அவிழ்க்கப்பட்ட முடிச்சு
முடியப்படாமலே தொங்கின. கூந்தல் வாரிச் சேர்க்கப்படாததால் கற்றைகள்
முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன.


என்ன ஆனந்தமான ‘சொகம்’ இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால்! கானல்
அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள் கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான் எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு
சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அடக்கமாக இருந்தது. உயர்ந்த
காய்ச்சலின் போதை இடைவிடாது மீட்டப்படும் சுருதிபோல் லயிப்பு மயமாக இருந்தது.
இந்த ஆனந்தத்தில் பங்குகொள்ள எனக்கு ஒரு துணைவேண்டும்போல் இருந்தது. அவள் எங்கே? அவள்தான்; என் அருமை நாச்சியாரு.


‘நாச்சியாரு, என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?’

http://www.uyirmmai.com/Images/ProductImages/2011/anbulla%20kee%20raa.jpg

********
நன்றி: தீபம்


s:
 சிறுகதை கி.ராஜநாராயணன் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)