Friday, July 06, 2012

முதல் கணவரை விட்டு விலகியது ஏன்? பாடல் ஆசிரியர் தாமரை பேட்டி

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/thamarai1.jpg 

மீட்டு வருவேன் மீண்டு வருவேன்!”

சந்திப்பு: அமிர்தம் சூர்யா


தாமரை உக்கிரம்

பாடலாசிரியர் தாமரை 500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதி, கலைஞர், ஜெயலலிதா இருவரிடமும் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர். சமூக நோக்கோடும் தமிழ் உணர்வோடும் பயணப்படும் தனித்துவமான படைப்பாளி. காதலுக்கு முன்... காதலுக்குப் பின்; திருமணத்துக்கு முன்... திருமணத்துக்குப் பின்; சினிமாவுக்கு முன்... சினிமாவுக்குப் பின் என மூன்று கட்டங்களில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கேட்டபோது, அவரது பதில்கள், தன்னம்பிக்கைப் பாடமாய் விரிந்தது.


நான், புத்தகம் வளர்த்த பிள்ளை. என் தோழமை, பலம் எல்லாமே புத்தகங்கள்தான். வாசிப்பு என்பது எனக்கு மூச்சு விடுதல் மாதிரி. என் வாழ்வின் தன்னம்பிக்கையை நான் புத்தகங்களிலிருந்தும் வகுப்பறையிலிருந்தும்தான் வாங்கிக் கொண்டேன். உண்மையிலேயே அன்று பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக இருந்தனர். பள்ளி ஒழுக்கமாக இருந்தது. இன்று விதிவிலக்காகத்தான் நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள். என் பள்ளியும் பள்ளி ஆசிரியர்களும்தான் என் தன்னம்பிக்கையைத் தட்டித் தட்டிச் செதுக்கியவர்கள


யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் எரிச்சலோடு மனப்பாடம் செய்த திருக்குறளும் தமிழ்ப் பாடங்களும்தான் என் மனதில் ஊன்றி என்னை இப்போதும் வழி நடத்தி வருகிறது என்று சொல்லலாம்," என்று சொல்லிக்கொண்டே வந்த தாமரையை நோக்கி, இந்தத் தன்னம்பிக்கைதான் உங்களின் கசப்பான முதல் காதலிலிருந்தும் முதல் திருமணத்திலிருந்தும் விடுவித்ததா?" என்ற கேள்வித் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். தாமரையின் இதழ்களில் இளம் புன்னகை.


நான் மங்கையர் மலர் வாசகிகளுக்கு என் வாழ்வின் ரணமான பக்கங்களையும் அந்தக் காயங்களை ஆற்றிய தன்னம்பிக்கை மருந்தைப் பற்றியும் பகிரங்கமாய்ப் பறை சாற்ற விரும்புகிறேன். இந்தக் கடுமையான கேள்விகள் என்னை எதுவும் செய்யாது நண்பரே! உங்களுக்குத் தெரியுமா?


கோயம்புத்தூரில் ஒரு முன்னணி தொழிற்சாலையில் முன்னணி பொறியாளர் பணியில் இருந்தேன். காலை 6.30 மணிக்குக் கிளம்பி இரவு நேரங்காலமின்றித் திரும்பும் இயந்திரமாய் இயங்கினேன். கல்லூரியில் என்னுடன் படித்த ஒருவரை விரும்பி இருந்தேன். சாதிகளைக் கடந்து ஆரம்பித்த காதல் அது.

http://3.bp.blogspot.com/-LGiIX4SRbh8/ToSqF7lBwFI/AAAAAAAAN1Q/XV_iPp6gvWs/s1600/Writer_Thamarai_Stills_01.jpg
திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே போராட்டம்தான். அவருக்கு வேலை இல்லை. தொழிலதிபராகும் கனவு மட்டும் இருந்தது. அவர் கனவை நனவாக்க நான் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிப் போனேன். என் கனவுகள், ஆசைகளைப் புதைத்து அவருக்கும் சேர்த்து உழைக்க வேண்டியிருந்தது. என் பெயரில் நிறைய கடனும் வாங்கப்பட்டது. மன உளைச்சலோடு துக்கம் கவ்விய நிலையில் என் முதல் திருமணம் தோல்வி அடைந்ததை உணர்ந்தேன்" என்று வெப்பம் கலந்த பெருமூச்சோடு சற்றே நிறுத்தினார் தாமரை.

தோழி, நீங்கள் சொன்ன சம்பவத்தில் தோல்வி என்று இதை எப்படி ஏற்பது? நீங்கள் கொஞ்சம் அதிகமாகக் கற்பனை செய்து கொண்டது போலத் தோன்றுகிறதே?" என்று சொன்னதுதான் தாமதம். கவிஞரின் கண்கள் சிவக்க ஆரம்பித்து செந்தாமரையாகவே மாறிவிட்டது.


ஓஓ! காதலித்து மனைவியான நான் இருக்கும்போதே இன்னொரு பெண்ணை எனக்குத் தெரியாமல் மணந்து, குழந்தை பெற்று இன்னொரு குடும்பம் நடத்தி வருவது தெரிந்தும் அதை நிரூபிக்க முடியாமல் தத்தளித்து மனதுக்குள் அழுது தற்கொலை உணர்வோடு, சம்பாதித்து மட்டுமே போடும் இயந்திரமாய் இருக்கும் பெண் அந்தத் திருமண வாழ்வைத் தோல்வி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இது கொஞ்சம் அதீதமான கற்பனையா? ஆண்கள் மொழியில் இதை வேறு எப்படிச் சொல்வது?" என்றார். அந்தரங்கத்தின் காயம் அறிந்தபின் அந்த வலியை சக மனிதனாய் நாமும் உணரத்தான் முடிந்தது. உங்கள் தன்னம்பிக்கை இதற்கு என்ன தீர்வு தந்தது. உங்கள் வாழ்வை, உங்களின் தனித்துவத்தைப் பிறகு எப்படித்தான் மீட்டெடுத்தீர்கள்?" என்று கேட்டேன்.

http://2.bp.blogspot.com/-ULDoTDxZZpA/T7cYczEchiI/AAAAAAAABZQ/4YWIWbk-VSg/s1600/2006110900400101.jpg
ஏழு வருடம் செய்த பொறியாளர் பணியிலிருந்து துணிந்து 93-ல் வேலையை விட்டேன். 94லிருந்து 97வரை முதன்முறையாக நான் எனக்காக வாழ ஆரம்பித்தேன். நிறைய படித்தேன். ஏழு ஆண்டுகளில் விட்டதைப் பிடித்தேன். இலக்கியத்தை இரவு பகலாகக் கரைத்துக் குடித்தேன். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவை மீட்டெடுக்க ஆரம்பித்தேன். ‘கல்கி’, ‘மங்கையர் மலர்’ ‘தினமலர்’, ‘குமுதம்’ ‘தினமணிஎன்று இதழ்களின் போட்டிகளுக்கு - கவிதை, கட்டுரை, கதை எழுதி பரிசுகளை வென்றேன். மாணவ நிருபராக விகடனில் இருந்த நான் மீண்டும் விகடனுக்கு எழுத ஆரம்பித்தேன். சிறந்த கதைக்காகசாவியில்தங்கச் சாவிபரிசு பெற்றேன். சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை துளிர்விட்டது. பாடலாசிரியராக வேண்டும் என்ற என் சிறு வயதுக் கனவை தூசித் தட்டி எடுத்துக்கொண்டு 97ல் சென்னைக்கு வந்தேன்.



சன்டீ.வி.க்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தேன். என் மனுவுக்குப் பதிலே இல்லை. அப்போது உறுதிமொழி எடுத்தேன். இதேசன்டீ.வி., என்னைப் பேட்டி எடுக்கும் நிலைக்குப் போவேன் என்று. பின்னர் அதுவும் நிகழ்ந்தது.


நான் சென்னைக்குத் தனியாக ஒரே ஒரு பெட்டியுடன்தான் ரயில் ஏறினேன். நான் பிறந்து வளர்ந்த கோவையைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், அந்தகோயமுத்தூரையே என்னைத் திரும்பிப் பார்க்க வைப்பேன்என்ற சபதம் அப்படியே புத்தியில் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_hY7Z7_eD_eyNC84bIo5L7Zu72YH-vIHrhpOnpOpIslUzYnVKaW6gL_83e-esHEeOt28lxKxhXdzhvlyBpOffNgQSzKSrWt4b7LnT15ZOMMCnTfnJCaFzW99e25WEF8crKzj0y5JQZD2G/s400/t.jpg
2008ல் தினமலர் வழங்கியகோவையின் தங்கப் பெண்மணிஎன்ற விருதின் மூலம் அதையும் சாதித்தேன்... இல்லை சாதித்தது சாதிக்க வைத்தது என் தன்னம்பிக்கை" என்று முடித்தார் பாடலாசிரியர் தாமரை.


நீறுபூத்த நெருப்பை ஊதிவிடும் காற்றைப்போல அவிழ்த்துப் போட்டேன் வேண்டுமென்றே ஒரு கேள்வியை. ‘சினிமா அதிர்ஷ்டம்தானே உங்களைப் புகழ் உச்சிக்கு ஏற்றியது. அந்த இடத்திலும் எதுக்குக் கொள்கை கோஷம்னு வீம்புப் பிடிக்கிறீங்க?’ என்றதும்தான் தாமதம்.

மன்னிக்க வேண்டும். அது நல்வாய்ப்பு இல்லை. என் அரிய உழைப்பு. விடாமுயற்சிதான் காரணம். 97லிருந்து 2000வரை திரைப்படத் துறையில் போராடினேன். தேடினேன். தேடிக்கிட்டே இருந்தேன். வாய்ப்பு வராது. வந்தாலும் என் ஆங்கிலம் கலக்காத, ஆபாசச் சொல் இல்லாத பாடல் என்ற கொள்கைக்குப் பாடல் கிடைக்காது. கிடைத்தாலும் பாடல் இடம் பெறாது. இடம் பெற்றாலும் படம் வெளிவராது. படம் வந்தாலும் கைக்குப் பணம் கிடைக்காது. இத்தனைக்கும் நான் இதுவரை கடன் வாங்கியது இல்லை என் வாழ்நாளில். குறைந்த வருமானத்துக்குள் என்னை அடக்கிக் கொண்டு வாழப் பழகினேன்.


2000-ல் கௌதமுடன் வாய்ப்பு வந்த போதுமின்னலேபடத்தின்வசீகராபாடல் என்னைத் தூக்கி நிறுத்தி அங்கீகாரம் தந்தது. மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ததை எதிர்த்து, கணவன் மீது குற்றவியல் வழக்குப் போட்டு சென்னைக்கு அவர்களை இழுத்து, நானே நீதிமன்றத்துக்குத் தனியாகப் போய்ப் போராடி விவாகரத்துப் பெற்றேன்.


பிறகு 2002-ல் தோழர் தியாகுவுடன் திருமணம் நடந்தது. கைக்குழந்தையோடு சினிமா வாய்ப்புக்கு நீங்கள் அலைந்து பாருங்கள். அதன் வலி புரியும். சென்னையில் நான் தனியாக வாழ்ந்தபோது, என் அறைக்கு யாரையும் அழைத்துப் பேச மாட்டேன். என்னைச் சந்திக்க வருபவர்களை அறைக்கு வெளியே பொது இடத்தில் வைத்துத்தான் எச்சரிக்கையோடு பேசுவேன். இதுவரை எந்த வதந்தியும் என் மீது படர்ந்தது இல்லை" என்றபோது கொஞ்சம் ஆசுவாசம் படுத்தியபின் பேசினேன்...
நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறீர்கள்" என்றபடி என் இறுதிக் கேள்விக்கு இடம் விட்டேன்...


வதந்திக்கு உட்படாத உங்கள் வாழ்வில் உங்களது இரண்டாவது மணவாழ்வு ஊடகங்களால் இப்போது ஊசலாடுவது போலிருக்கிறதே. இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்றேன்.


ஒரு நாள் காலை எழும்போது நேற்று வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, உழைத்த உழைப்பு, வைத்த நம்பிக்கைகள் அத்தனையுமே பொய்யானவை என்ற நிலை ஏற்பட்டால் என்ன வலி ஏற்படுமோ அதுதான் எனக்கும் ஏற்பட்டது. கைகால்கள் மரத்துப் போய் செயல் இழந்த நிலையில்தான் அதையும் எதிர்கொண்டேன்.
திருமணம் என்பது இருவர் சேர்ந்து செய்துகொள்வது. அதைத் திடீரென்று இருவரில் ஒருவர் தன்னிச்சையாக, தனிப்பட்ட முறையில், தன் சொந்தக் காரணங்களுக்காக, உடைத்து வெளியேற முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன்.


அப்படித்தான் எனது இந்தப் போராட்டம் எனக்கு இன்னும் பல அனுபவங்களையும் பார்வைகளையும் கற்றுக் கொடுத்துள்ளது. மீட்டு, மீண்டு வருவேன்" என்றார் உக்கிரமாய்.


தமிழகத்தின் ஹிலாரி போல் தெரியும் தாமரை, கிளிண்டன் போல் தோற்றம் காட்டும் தியாகுவையும் சேர்த்தே வெல்ல வேண்டும். இந்த உரையாடலில் தாமரையை மொழிபெயர்த்தால்தன்னம்பிக்கைஎன்றே வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்லா பெண்களுக்குள்ளும் போராடும் ஒரு செந்தாமரை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்ற சிந்தனையோடு விடை பெற்றோம்.

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/161967_163686113679931_6652959_n.jpg


நன்றி - மங்கையர் மலர் மாத இதழ் , அமிர்தம் சூர்யா, கல்கி வார இதழ்


 டிஸ்கி - நான் ஈ - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6.7..2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

http://cinema.natpu.in/wp-content/uploads/2012/05/Naan-Ee-Tamil-Poster-cinemad70mm-2.jpeg 

1. 'நான் ஈ'.- தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி, முதன் முறையாக தமிழில் இயக்கியிருக்கும் படம் 'நான் ஈ'. இதுவரை சினிமா வரலாற்றில் இல்லாத விதத்தில் ஒரு ஈ யை மையமாக வைத்து இப்படத்தை ராஜமெளலி இயக்கியிருக்கிறார்.


வில்லனால் கொலை செய்யப்படும் ஹீரோ, ஈ யாக பிறந்து வில்லனை பழிவாங்குவதுதான் இப்படத்தின் கதை. அசத்தும் கிராபிக் காட்சிகளோடு தயாராகியிருக்கும் இப்படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால், படத்தின் வெளியீட்டு தேதியில் பெரும் குழப்பம் நீடித்தது. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக்காட்டப்பட்டது.


படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

ஞானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம். எந்த பெரிய ஹீரோவும் இல்லாமல், கதையையும் ராஜமெளலியின் இயக்கத்தையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்டதாம். ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 


நான் ஈ - விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html


http://www3.images.coolspotters.com/photos/498261/street-dance-3d-profile.jpg


2. STREET DANCE - PART 2 - 3 D - நம்ம ஊர்ல ஆனந்த்பாபு நடிச்ச பாடும் வானம்பாடி நினைவிருக்கா? அது போல் டான்ஸை மையமாகக்கொண்ட படம்.. 2010இல் ரிலீஸ் ஆன படம், இங்கே இப்போத்தான் வருது,. Nichola Burley, Richard Winsor and Ukweli Roach இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க. சாரி ஆடி இருக்காங்க..



3. நாளை எனது நாள் -  இது ஏதோ தெலுங்கு டப்பிங்க் படம் போல.. பல வருடங்களூக்கு முன் வெளீ வந்த நாளை உனது நாள் கேப்டன் நடிச்ச க்ரைம் த்ரில்லர் படம்.. இது அதே போலா? அதனோட உல்டாவா? தெரியல..

http://www.theonestopmovies.com/wp-content/uploads/2012/01/Ammana-Summa-Illada.jpg



4. அம்மான்னா சும்மா இல்லைடா  -  ஆர் பாண்டிய ராஜன் நடிச்ச படம் போல .. இந்தப்படத்தை பற்றி எந்த தகவலும் தெரியல.. ஏற்கனவே ரிலீஸ் ஆன படம் போல.. அல்லது ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாத படமாகக்கூட இருக்கலாம்.. ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ் 

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/03/Inbanila-Movie-Release-Date-Poster.jpg


5. இன்ப நிலா - இது வழக்கம் போல ஒரு கில்மா படம் போல. துரோகம் நடந்தது என்ன என்ற படத்தில் நடித்தவர் ஸ்வாதி வர்மா. இந்த படத்தில் கிளாமராக நடித்த ஸ்வாதி வர்மா தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முழு நீள கதாநாயகியாக நடிப்பதற்கு நல்ல படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் கில்மா படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு ஒன்றுதான் கிடைத்தது. கிடைத்த வாய்ப்யை பயன்படுத்திக் கொண்ட ஸ்வாதி வர்மா இன்பநிலா படத்தின் மூலம் விரைவில் ரசிகர்களை சந்திக்க வரவிருக்கிறார்.ஈரோடு ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, ஆனாலும்  6 கி மீ தள்ளி உள்ள பள்ளி பாளையம் சினி ராமில் ரிலீஸ் ஹி ஹி

http://media.movietalkies.com/posters/bollywood/movies/2012/bolbachchan/bolbachchan-2012-3b.jpg


6. BOL BACHCHAN -  அபிஷேக் பச்சன், அசின், அஜய் தேவ் கான், பிராச்சி தேசாய் என யூத் டீம் களம் இறங்குது.. காமெடி சப்ஜெக்ட்,.,. படம் பூரா ஏகப்பட்ட டைமிங்க் விட் இருக்கு. தில்வாலே, ஹம் ஆப் கே ஹே கோன் மாதிரி எல்லாரும் ரசிக்க முடியாது, ஹிந்தி தெரிஞ்சவங்க மட்டும் பார்க்கலாம்..1979-ல் வெளி வந்த கோல் மால், தில்லு முல்லு, 1995 இல் வந்த பாண்டிப்படா  எல்லா படத்தின் சாயலும் இதில் உண்டு..

 ஹீரோ அரிச்சந்திரன் வீட்டுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்.. வாயைத்திறந்தாலே
 கலைஞர் மாதிரி பொய் தான் வருது. வில்லன் அன்னா ஹசாரே மாதிரி  அவர் கிட்டே இவர் எப்படி கோல்மால் பண்ணி ஏமாத்தி சக்சஸ் ஆகறார் என்பதே கதை.. தனது கடனை அடைக்க நிலத்தை விற்க ஹீரோ செய்யும் கோல்மால் பொய்கள் தான் கதை. அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோல்ல 2 சீன் வர்றார்


 டைரக்டர் ரோஹித் ஷெட்டி. இவர் பேசிக்கலி ஸ்டண்ட் மாஸ்டரும் கூட என்பதால் ஃபைட் சீன்ஸ் ஏகப்பட்டது இருக்கும்.. மெகா பட்ஜெட் படம். ஆனா போஸ்டர் டிசைன் ரொம்ப கேவலமா இருக்கு .. ஈரோடு ஸ்ரீநிவசாவில் ரிலீஸ்
http://www.flicksandbits.com/wp-content/uploads/2012/07/savages-movie-poster-wallpaper-blake-lively-taylor-kitsch-aaron-johnson.jpg

7. SAVAGES - கஞ்சா செடி வளர்க்கும் 2 கபோதிகள்.. அவன்க 2 பேருக்கும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு தோழி./. அவ்ளை போதை மருந்து கடத்தும் மாஃபியா கும்பல் தலைவன்  கிட்நாப் பண்ணிடறான். அவன் அவ்ளை ரேப் பண்ரதுக்குள்ளே இவனுங்க 2 பேரும் எப்படி காப்பாத்தறாங்க என்பதே கதை. ( காப்பாத்தி அவ சம்மதத்தோட இவன்க ஹி ஹி )

ஆலிவர் ஸ்டோன் தான் டைரக்டர். ஆள் எப்பவும் போதிலயே இருக்கற ஆளாம். ஆனா திரைக்கதைல கில்லாடி.. ப்ளாட்டூன் செம ஹிட் அடிச்சுது.. 1994 -ல் ரிலீஸ் ஆன நேச்சுரல் பார்ன்  கில்லர்ஸ் கேமரா ஆங்கிள்க்காகவே பேசப்பட்டன.



டிஸ்கி - நான் ஈ விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_5455.html

விஜய் டி விக்கு அடுத்த மேட்டர் ரெடி ஆகிடுச்சுங்கோவ்

ஒரு
டீ
பன்னாவது
வாங்கி
குடுடா
பாவி...
1.மேலதிகாரி என்ற ஒரே காரணத்துக்காக  முன்பின் அறிமுகம் இல்லாதவரிடம் கீழ்ப்படியும் நாம் பெற்றோரிடம் கீழ்ப்படிவதில் அலட்சியம் காட்டுகிறோம்



-----------------------------

2. பொறு​மைக்​கும் எல்லை உண்டு - கருணாநிதி # கழகத்தின் சிறுமைக்கு மட்டும் எல்லையே இல்லையா தலைவரே?




------------------------------------


3. தனக்கு வரப்போகும் கணவன் ராமனா இருக்க ஆசைப்படும் பெண்களே!ஊர் வாயை மூட உங்களை துரத்தி அடிக்கும் ஆண் தேவையா?


-------------------------------


4. மேரேஜ் பண்றப்போ ஊரைக்கூட்டி விருந்து வைக்கறீங்க, ஆனா டைவர்ஸ் பண்றப்போ ஏன் அவங்களை கூப்பிடறதில்லை?எங்களுக்கு விருந்து மிஸ் ஆகுதில்ல? ;-)


------------------------------------


5. மருத்துவதுறையில் முறைகேடு...! பார்லிமென்ட்டில் உரையாற்றுகிறார் அமீர்கான்!! # விஜய் டி விக்கு அடுத்த மேட்டர் ரெடி


----------------------



haha elarum apidithana..:)


6. நர்ஸை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்ன ஒரு சந்தோஷம்னா ஊர்ல எல்லாரும் சிஸ்டர்னு தான் கூப்பிடுவாங்க ;-)


-------------------------------

7. ரிசப்ஷனிஸ்ட்டை மேரேஜ் பண்ணிக்கிட்டா வீட்டுக்கு திருடன் வந்தாக்கூட “ வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார்?”னு கேனை மாதிரி கேட்டுடுமோ?;-)



----------------------------------


8. பேங்க் கேஷியரை மேரேஜ் பண்ணிக்கிட்டா “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கூப்பிடறேன்” அப்டிம்பாங்களோ?


-------------------------------------


 9. தள்ளிப்போய்க்கிட்டே இருப்பது மேரேஜ்னா நல்ல லைஃப் பார்ட்னரும்,ரிலீஸ் டேட்னா படத்துக்கு நல்ல ரிசல்ட்டும் கிடைக்கும்# பில்லா 2


--------------------------------


10. உலக இசை தினத்தை முன்னிட்டு வீட்டில் மனைவிக்கும், ஆஃபீசில் டேமேஜருக்கும் ஜிங்க் ஜக் அடிக்கும்  6 கோடி தமிழர்களுக்கு வாழ்த்துகள்



-----------------------------------



11. புஜ்ஜுக்குட்டி, செல்லக்குட்டி என கொஞ்சினால்  காதலி (கள்) மயங்குகிறார்(கள்), ஷார்ட்கட்டா குட்டி -ன்னு கூப்பிட்டா பொங்கறாங்க, அது ஏன்?


------------------------

12. ஒரு படத்துல வில்லனா நடிச்சதுக்கே அஜித்க்கு அவார்டுன்னா  தன் எல்லா படத்துலயும் (90%) தயாரிப்பாளருக்கு வில்லனா ஆன விஜய்க்கு.?



------------------------------

13.  அழகான பொண்ணுங்க எங்கே நடந்து போனாலும்   நான் அவங்களை அவங்க வீடு வரை ஃபாலோ பண்ணுவேன்


--------------------------


14. சீமைப்பசுவுக்கும், செமக்குதிரைக்கும் சிலர் வித்தியாசம் தெரியாம இருக்காங்க.. அய்யோ பாவம் # லட்சுமி ஹார்ஸ் ராய்



--------------------------------------

15. அன்பே! உன் இசைவை சொல்லி விடு இன்றாவது, இன்று உலக இசை(வு) தினமாம்


------------------------



way scientists's photo.


16. கவிதையை வாசிப்பதில் ஆர்வம் கொண்டால் நீ எல் கே ஜி, கவிதைப்பெண்ணை நேசிப்பதில் ஆர்வம் கொண்டால் நீ பி ஹெச் டி # லவ் யுனிவர்சிட்டி


----------------------------



17.  கண்டக்டர் - ஏம்மா டிக்கெட் எடுக்கலை?


 டீன் ஏஜ் கேர்ள் - எங்கம்மா தான் வெளில போறப்ப கண்டவன் கொடுக்கறதை எல்லாம் வாங்காதேன்னாங்க #  SMS



--------------------------------


18. ஜெயிலில் வீரபாண்டிஆறுமுகம் தைரியத்துடன் உள்ளார்- கனிமொழி  # யார் அந்த தைரிய லட்சுமி? ஜெயில்ல அதை எல்லாம் அலோ பண்ண மாட்டாங்களே?


--------------------------------

19. இன்ஸ்பெக்டர், என் கற்பு களவு போயிடுச்சு....


 நல்லா தேடிப்பாரம்மா, உன்கிட்டே தான் இருக்கும்


-----------------------------------------


20. அப்பாவி ஆண்களே! நாங்கள் முந்தானை கொண்டு மூடுவதே உங்கள் MOOD கிளப்பவே - அப் பாவிப் பெண்கள்



-----------------------------------------


நம்ம பிளாகர் தான் .. சரக்கு அதிகமா போய்ட்டு ....
நம்ம பிளாகர் தான் .. சரக்கு அதிகமா போய்ட்டு ....
 நாய் நக்ஸ் நக்கீரன்?

Thursday, July 05, 2012

ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் பம்முவது ஏன்? ஓ பக்கங்கள் ஞானி பேட்டி @ சூர்யக்கதிர்

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_11835443974.jpg1. ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையெல்லாம் உங்களுக்கு கிடையாதா?


இதில் நான் கலாம் கட்சி. எல்லா கட்சிகளும் சேர்ந்து வந்து என்னைப்
போட்டியின்றித் தேர்ந்தெடுத்தால் குடியரசுத் தலைவராவதில் எனக்கு ஒன்றும்
ஆட்சேபணையில்லை.



2. அப்பாவிகளிடம் நில அபகரிப்பு செய்ததன் விளைவே தி.மு.க. மாஜியினர்
ஜெயிலுக்கு போயுள்ளனர். ஆனால், குற்றம் செய்த அமைச்சர்களை கண்டிக்காமல்
அவர்களுக்கு ஆதரவாக அப்பாவி தி.மு.க. தொண்டர்களை சிறை நிரப்பும்
போராட்டம் என்ற பெயரில் சிறைக்கு அனுப்ப ஆசைப்படுகிறாரே கருணாநிதி?



ஜெயிலுக்குப் போயிருப்பவர்களின் நிதி ஆதாரத்தில்தானே கட்சி ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடக்கிறது ? அவர்களைக் காப்பாற்றினால்தானே கட்சியைக்
காப்பாற்றமுடியும் ? அப்பாவி தொண்டர்களால் கட்சிக்கு பணம் கொடுத்து
உதவமுடியாது அல்லவா. எனவே அவர்களால் முடிந்தது உடல் உழைப்பு. அதனால்
சிறைக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள்.



3. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி தான் காரணம் என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்
பி.ஏ. சங்மா குற்றம் சாட்டியுள்ளாரே?



தனி நபர் யாரையும் பொறுப்பாக்க முடியாது. மொத்த அரசாங்கமும் ஆளும்
கட்சியும் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளுமே பொறுப்பு.



4. பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாக மக்களை
திரட்டுவேன் என்கிறாரே வைகோ?



செய்ய முடிந்தால் நல்லதுதான்.ஆனால் கிராமம் கிராமமாக மக்கள் திரண்டு
வந்து அமைதியாகப் போராடியும் அணு உலை விஷயத்தில் அரசுகள் காட்டும்
பிடிவாதத்தைப் பார்க்கும்போது, அணை விஷயத்திலும் அதேதானே நடக்கும் என்ற
கவலை எழுகிறது.



5. வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாய் கறி விற்பதில் பிரணாப் கெட்டிக்காரர்
என்கிறாரே நாஞ்சில் சம்பத்?


பிரணாப் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளும் அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்தான்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW3cOnnmWSo-6pSGMqmaUQsuvP3dv6x7J3_dXh0Sn7qP9b0OIZ5QueU7ci7M-v-9xtEHiM_N5aUUuR5WNh_LViXjgemKMZN78LEJ4hpDmTg7daGlION4DO9zXqjJDUqyqLiTm_-nR7BLY/s1600/0.jpg


6. கலகம் – கழகம் என்ன வித்தியாசம் சார் ?


கழகத்துக்குள் கலகம் நடந்தால் இன்னொரு கழகம் பிறக்கும் என்பது வரலாறு.
கழகம் மக்களுக்கு எதிராகக் கலகம் செய்தால் ஆட்சியை இழக்கும் என்பதும்
வரலாறு.



7. மத்தியில் கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று
கருணாநிதி கூறியிருக்கிறாரே?


அவர் சொல்வது முழுக்க முழுக்க சரிதான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?
இந்தக் கூட்டணிகள் எல்லாம் என்ன கொள்கைக் கூட்டணிகளா, இல்லையே? சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்ப அவரவர் சுயநலம் சார்ந்து அணி மாறுவதுதானே வழக்கம் ?
இதற்கெல்லாம் கோபப்படலாம், வருத்தப்படலாம். ஆச்சரியப்படமுடியாது.



8. குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஓராண்டில் தமது வீட்டில் 171
சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி இருக்கிறாராமே?


பொதுவாக நம் நாட்டு அரசியல் நிர்வாக முறையில் எம்.எல்.ஏ தொடங்கி
ஜனாதிபதி வரை எல்லா பதவிகளிலும் இருப்பவர்கள் வீட்டில் அவர்கள் குடும்பம்
மட்டுமே இருப்பதில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு பெரும்படையே
அங்கே பொதுச் செலவில் வாழ்க்கை நடத்துகிறது. சென்னையில் எம்.எல்.ஏ
ஹாஸ்டலுக்குப் போய் பாருங்கள்.

எம்.எல்.ஏவை சந்திக்கமுடியாதே தவிர, அவர்
ஊரிலிருந்து வந்து தங்கியிருக்கும் சுற்றம் நட்பு எல்லாரையும்
சந்தித்துவிடலாம். இதற்கு மற்றபடி நேர்மையான அறிஞரான அன்சாரியும் விதிவிலக்கல்ல என்று
தெரிகிறது. அப்துல் கலாம் போல திருமணமே ஆகாதவர்கள் மட்டும்தான் எந்தப்
பதவியிலும் இருக்கலாம் என்று விதி போட முடியாது. அப்படிப் போட்டால் கூட,
அவரைக் கவனித்துக் கொள்கிறேன் என்று ஒரு கூட்டம் வந்து சேரும்.



9. குடியரசு தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதி ஆகி விட்ட நிலையில்
சங்மா போட்டியிடுவது அவசியமா ?


போட்டியின்றி பிரணாப் ஜெயிக்கக்கூடாது என்று அரசியல்ரீதியாக எதிர் அணி
நினைக்கும்போது அது சரிதான். ஜனநாயகத்தில் போட்டி இருந்தால் அது ஒன்றும்
தவறல்ல.


10. சங்மா போட்டியிடுவதால், பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாயப்பு நன்றாக
உள்ளது என்கிறாரே கருணாநிதி?



யார் போட்டியிட்டாலும் பிரணாபின் வாய்ப்பு மாறாது. கலாமே நின்றிருந்தால்
கூட பிரணாபுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.


http://www.vikatan.com/news/images/muthu_toon(2).jpg


11. தமிழகத்தில் தற்கொலைகள் அதிகம் என வந்துள்ள செய்தி குறித்து ?


டாஸ்மாக்கில் தினம் குடித்து ஸ்லோவாக தற்கொலை செய்வோரின் என்ணிக்கையையும்
சேர்த்தா, சேர்க்காமலா?



12. மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் திடீர் தீவிபத்து
ஏற்பட்டது சதி செயல் என கூறப் படுவது குறித்து?


இந்தியாவில் அரசு அலுவலகங்களிலும் தனியார் கம்பெனிகளின் ஆலைகளிலும்
தீவிபத்து நடந்தால் அது விபத்து என்று நம்புவதற்கான வாய்ப்பு பொதுவாகக்
குறைவுதான். சென்னையில் மூர்மார்க்கெட் எரிந்ததே, அந்த இடம்/நிலம்
ரயில்வேக்கு தேவைப்பட்டது என்பதாலும், அதை தர மார்க்கெட் வியாபாரிகள்
மறுத்துவந்ததினாலும்தான் என்று அப்போதே பேசப்பட்டது.



13. தேசத்திற்காக விளையாட வேண்டிய பயஸ் – பூபதி தனி நபர் வெறுப்பை காட்டுவது
முறைதானா சார்?


டென்னிஸ் தனி நபர் விளையாட்டு. ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு தேசம்,
மாநிலம் என்பதற்கெல்லாம் அர்த்தம் கிடையாது.



14. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப் பொருளாளர்
மு.க.ஸ்டாலின் தனது தந்தையைப் போலவே கருப்புக் கண்ணாடியுடன் வந்தது
அனைவரையும் சற்றே சிந்திக்க வைத்து யோசிக்க வைத்ததாமே?


ஸ்டாலின் அவர் அப்பா போல தோற்றம் காட்டினால் பிரச்சினை இல்லை. அவரைப்
போலவே அரசியல் செய்யாமல் இருந்தால் போதும்.



15. ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கும் என்று விஜயகாந்த்
கூறியிருப்பதன் உள் அர்த்தம் என்ன?


2014ல் எந்த அணியுடன் போவது என்று இன்னும் முடிவு செய்யமுடியாமல்
இருப்பதால் இருவரையும் விரோதிக்க விரும்பாமல் இருக்கலாம்.


http://www.vikatan.com/av/2012/07/ndqyqy/images/p7b.jpg


16. தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தை அழகிரி புறக்கணித்துவிட்டாரே?

செயற்குழுவில் என்ன நடந்தால் என்ன? கடைசியில் தனக்கு சாதகமாக முடிவுகளை மாற்றவும் வளைக்கவும் வேறு அழுத்தங்கள் தரமுடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாமே.



17. அடிக்கடி நீங்கள் ஸ்டாலினை புகழ்கிறீர்கள்.. ஸ்டாலினை பிடித்த அளவிற்கு
உங்களுக்கு அழகிரியை பிடிக்காமல் போனது ஏன்?


ஸ்டாலினை நான் புகழ்வதில்லை. அழகிரியுடன் ஒப்பிடும்போது, அவர்
படிப்படியாக அரசியலில் வேலை செய்து மேலே வந்தவர் என்பதை நான் அவருக்கு
சாதகமன அம்சமாகப் பார்க்கிறேன் அவ்வளவுதான்.



18. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வதாக பிரணாப் உறுதியளித்த
பிறகு ஆதரியுங்களேன் என தி.மு.க.வுக்கு சீமான் அட்வைஸ் செய்திருக்கிறாரே?


நல்ல அட்வைஸ்தான். பிரணாப் ஆதரவு கேட்டு வந்து சந்திக்கும்போது இதை
கலைஞர் கருணாநிதி வலியுறுத்தலாம். பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக இந்த
உத்தரவைப் போட்டால், தமிழக மக்களுக்கு பிரனாப் மீது பெரு மதிப்பு
ஏற்படும்.


நன்றி - சூரிய கதிர் 1.7.2012


நன்றி - ஞானி இணைய தளம்


http://www.vikatan.com/news/images/p8(3).jpg

ஜி. நாகராஜன் - ன் கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHnP1xgejDRG_le9w4H49RMRp6G0QmTe1l4saOrd9U2eyaTpZ0H7d3pUMwXoG9UgohLHb9vPAhCaKrc4yRnzuBLPqUHIC3FTi6xGzqHR9U8Tf_Da4yrZkLhc8wWYfbafk06UM36SOtq5Km/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%25811.JPG 

எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.


நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ? அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.


காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்?’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்?’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே?’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.


ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். “பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. “மூப்பனாரா? அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது.


மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.


மறக்க முடியாத அப்பாவின் நினைவு! `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா! இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே!’ `அய்யோ, அப்பா! இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு? நீங்க நிம்மதியா இருங்க

. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க…’


நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.


“நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்…’’


நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.

வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்துவிட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.

“… என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’


மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. “நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.


`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை! உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது? எல்லாமே ஆச்சரியப்பட வேண்டியதுதானே! நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்!’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன? புரியவில்லையே! மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா? விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா?

ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர்! அந்தக் காதர்!! அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு… காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி? இல்லை, வெறும் கற்பனையா? எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா?


நிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.

“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’

“சரிங்க, மிஸ்.’’

மிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை! ஆனால்… நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.


காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.

“ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’


“நல்லதுங்க’’ என்றான் காதர்.

அரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.


“உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?’’


“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்?’’

“அப்படியா, எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’

“உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.


நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள்,

சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த ஜெ. + கலைஞர் குடும்பத்துக்கு 2 ஜி ஊழலில் ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?? ,

http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg 

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.



இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.



இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:



நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கருணாநிதி கண்டனம் : இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பிரதமர் கருணாநிதிக்கு கடிதம் : இலங்கை தமிழர் சீரமைப்பு மற்றும் அந்நாட்டு அமைச்சர் பேச்சு குறித்தும் சமீபத்திய ரியோடி ஜெனீரோ மாநாட்டின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.


http://athikalai.files.wordpress.com/2011/02/2g-cartoon.jpg


 2. கருணாநிதி குடும்பத்துக்கு ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?ஆதாரம் தாக்கல்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.



தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேற்று முன்தினம் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர்.


அப்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்ற நிறுவனங்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 223 கோடி மற்றும் 550 கோடி ரூபாய் என, தனித் தனியாக அளித்ததற்கான ஆதாரங்கள், தங்களிடம் உள்ளதாகக் கூறினர். அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர்.



223 கோடி:கூட்டுக் குழுவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி:அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் இருந்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற டி.பி., குழும நிறுவனம், அதற்கு பிரதிபலனாக 223.55 கோடி ரூபாயை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டி.பி., குழுமத்திடம் இருந்து, கலைஞர்"டிவி'க்கு இந்த பணம், எந்த வழியில், எப்படி கைமாறியது என்பதற்கான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளோம்.



ஏர்செல் விவகாரம்:அடுத்ததாக, ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனம், கருணாநிதியின் உறவினர் குடும்பத்துக்குச் சொந்தமான சன் டைரக்ட் "டிவி' லிட்., நிறுவனத்தில், 549.96 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இது தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 


கடந்த மே மாதம், இது தொடர்பாக சி.பி.ஐ.,யுடன் இணைந்து, மலேசியாவில் விசாரணை நடத்தினோம். இன்னும் சிலமுக்கியமான தகவல்கள், மலேசிய அதிகாரிகளிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvtwsqNWE6NDerOtPlFj37dlMW7JyoLhTBcIgiMVRI1cE1MJRwRcXBwHDOWa8-KCIjD-yU78MmL7FLhX7ZmUxdrYk5wR31E0g9SMH2siGTnQaAZrP-MP6Fdimy3EEcsrqQPlnc4Whp4pnN/s1600/tamilmakkalkural_blogspot_madan_cartoon.jpg


நன்றி - தினமணி , மதி , தின மலர்

கடவுளை கண்டுபிடிச்சாச்சா? விஞ்ஞானிகள் அறிவிப்பால் உலகெங்கும் பர பரப்பு

உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று  . இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' ஆசாமிகள்.


பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.


ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. Big bang theory சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டு்ள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.


இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் இன்று (புதன்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

god particle world awaits higgs boson announcement

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் Big Bang பெரு வெடிப்பின்போது உருவான துகள்கள், வாயுக்களை கிரகங்களாக, நட்சத்திரங்களாக, வான்வெளி மண்டலங்களாக மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கும் துகளாகக் கருதப்படுவது ஹிக்ஸ் போஸான்.
ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.

ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.

இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.

கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் 'போஸான்'.


(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).


இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு 'விக்கல்' தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.


இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.


சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது.


பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.


1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.


கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள்.


2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.


ஒரு குழுவுக்கு 'அட்லஸ்' (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு 'சிஎம்எஸ்' (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.


2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் 'சோதனை' வந்துவிட்டது.


ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.


LHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.


காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா!.


எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் கிசுகிசு.
இன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளனர் CERN விஞ்ஞானிகள்.



கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.


Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.


இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.


ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தியோடு' அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.


இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.


ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத 'சூப்பர் ஸ்டார்' தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.


இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.


இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.


அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.


ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)


பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.


இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.


ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.


CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.


ஆனால், 0.1% கேள்வி இன்னமும் மிச்சமிருக்கிறது...!



நன்றி - தட்ஸ் தமிழ்

 )
பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.


பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.

13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

கடவுள் துகள்

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.

இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.

இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

பிரபஞ்ச ரகசியம் அவிழும்

செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்"என்றார்.
நன்றி - விகடன்


டிஸ்கி - தமிழ் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப்.எம் இப்பொழுது இணையத்தில் ஒலித்து கொண்டிருக்கிறது.. கேட்டீங்களா. கேட்டீங்களா... ப்ளாக்கர் எப்.எம்....
http://www.puradsifm.com/

கவுரவக்கொலைன்னா இன்னான்னு மீ கண்டு பிடிச்சிங்க் ( ஜோக்ஸ் )

Cool noon friends
1.ஏண்டா டெயிலி ஸ்கூல்க்கு லேட்டா வர்றே? 


 மிஸ், இந்த கிளாஸ்ல 48 பேர்ல என்னை மட்டும் தனிச்சு காட்ட வேற வழி தெரியலை :-)



------------------------------------

2. இன்று காஜல் அகர்வாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை  அகர்வால் ஸ்வீட் கடையில்  சேல்ஸ் கேர்ளை சைட் அடித்தால் நீயும் தமிழனே!



----------------------------------


3. 1006 பேருக்கு ஜெ மேரேஜ் பண்ணி வெச்சாரு,நேத்து நைட் மட்டும் 2012 பேர் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடி இருப்பாங்க @ 2012 வது வருசம்


-------------------------------

4. பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: ஜி.கே.மணி # என்னது பா ம க ஹேர் டை சேல்ஸ் வேற பண்ணுதா?



-----------------------------


5. மரண மொக்கை என்பது உயிர் பிரியும் தருணத்தில் கூட மனைவியை அருகில் அழைத்து ஒரு மொக்கை ஜோக் சொல்லி பழி எடுப்பதே !



--------------------------




6. கல்யாணச்சாப்பாடு எப்போ போடப்போறே?ன்னு கேட்கறாங்களே? ஏன்? டிஃபன் போட்டா சாப்பிட மாடாங்களா? 



--------------------------


7. DAY IS BORINGனு யாராவது புலம்புனா அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்களாத்தான் இருக்கும்  # நைட் ஈஸ் நாட் போரிங்க்


---------------------


 8. TempleRun  விளையாட்டுன்னா கோயில்ல ஓடிப்பிடிச்சு விளையாடற விளையட்டா?



-------------------------------


9.1008 விளையாட்டுகள் புதுசு புதுசா ஃபாரீன்காரன் கண்டு பிடிச்சாலும் தொட்டு விளையாட்டு போல நுணுக்கமான , கிளு கிளுப்பான விளையாட்டை தமிழன் தான் கண்டு பிடிச்சான்


---------------------------

10. முதல் இரவில் உடல் முழுக்க  நகையுடன் உள்ளே வரும் புது மணப்பெண்  உதடு நிறைய புன்னகையுடன் வெளியேறுகிறாள்


------------------------------------

Belated Happy Birthday" Rahul Ghandhi"



11.  டீச்சர் - பாஸ்கல் பற்றி சிறு குறிப்பு வரை,,



மாணவன் - ஹூ ஈஸ் தட் ராஸ்கல் மிஸ்? 


--------------------------------


12. பாட்டனி டீச்சர் - ரோஜாவின் படம் வரைந்து பாகங்களை குறி


மாணவன் - ஆர் கே செல்வமணி கோவிச்சுக்க மாட்டாரா?



--------------------------------


13. ஆண்களுக்கு குரல் கொடுக்க எந்த பெண்ணும் முன் வராததுக்கு காரணம் கட்டைக்கு குரலும் கட்டைன்னு சொல்லிட்டா?



-----------------------------------


14. கோவையில் உள்ள வாணி நாமகரணப்பெண்கள் வளரவே மாட்டாங்களா? # சிறுவாணி ஸ்பெஷல் ஊர்னு சொல்றாங்களே?


--------------------------

15. ஜொள் புத்தி உள்ளவர்கள் “சுய” புத்தி யூஸ் பண்ணத்தேவை இல்லை # கில்மா தத்ஸ்



-------------------------



16.நீத்து சந்த்ராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பங்களா வாசல் முன் அவரை பிறந்த நாள் உடையில் காண ஆவலோடு கூடி நின்றால் நீயும் ஒரு தமிழனே!



-----------------------------------


17. உங்கள் குழந்தையிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அன்பை உங்கள் பெற்றோர் உங்களிடம் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதை மறக்காதீர்!



--------------------------------


18. கவுரவக்கொலைன்னா பாண்டவர்கள் கவுரவர்களை போர்ல கொன்னாங்களே, அதுவா?



------------------------------


19. நித்தி ஆணை இட்டால் நடிப்பேன் - ரஞ்சிதா # ஜெயிலில் இருந்து வரும் வரை காத்திரு - நித்தி


---------------------------------


20. மருதாணி சிவப்பது விரலுக்கு ,உள்ளங்கைக்கு ,மட்டும் தான், நல்ல வேளை ;-)



--------------------------------



என் ரத்தத்தின் ரத்தங்களே !! ........# விசில் எப்படி பறந்துருக்கும்.!!!!!!!! ,:)

Wednesday, July 04, 2012

ஆடி மாசத்துல புது மணத்தம்பதிகள் ஹி ஹி ஹி ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

Amazing Horse

Most beautiful horse in the world in Turkey.
1.மொழி பெயர்க்கவும் என்ற ஆங்கில வினாத்தாளில் - LONG LONG AGO THERE WAS A KING = லாங்க் லாங்க் எகோ  தேர் வாஸ் எ கிங்க்  # ஹி ஹி 



---------------------


2. +2 படிக்கறவரை பசங்களோட ஹாபி -பொண்ணுங்க ஜாமிண்ட்ரி பாக்ஸை செக் பண்றது, அப்புறம் லேடீஸ் ஹேண்ட் பேக் # ஏகப்பட்ட  நொறுக்ஸ் தீனி கிடைக்கும்



-----------------


3. எப்பவாவது வரும் சாதாரண வயிற்றுவலியையே ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியறதில்லை,மாதாமாதம் பெண்கள் எப்படி தாங்கிக்கறாங்களோ?



--------------------

4. ஆண்களின் கண்கள் பயணிக்கும் திசையை வைத்து அவர்கள் கண்ணியம் பெண்களால் அளக்கப்படுகிறது


--------------------


5. கர்ப்பமான பெண்களுக்கான கட்டுச்சோறு விருந்தில் அந்தப்பெண்ணின் கன்னத்தில் சந்தனம் தடவும்போதுதான் ஒரு பெண்ணின் அதிகபட்சஅழகு வெளிப்படுகிறது 



-------------------------




6. ஒரு நல்ல கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது மாதத்தில்  3 நாட்கள் சமையலுக்கும் விடுமுறை வேண்டும் என்பதையே!


-------------------------


7. பெண் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையின் அம்மாவுக்கு பொறுப்பும், அப்பாவுக்கு  கண்ணியமும் கூடி விடும்



--------------


8. நான் டயட்டில் இருப்பதால் இப்போ எல்லாம் 10 இட்லி மட்டுமே சாப்பிடறேன்;-)



-------------------


9.ஆடி மாசத்துல புது மணத்தம்பதிகள் பெரியவங்க பேச்சைக்கேட்டு சும்மாதான் இருக்காங்கன்னு பெரியவங்க நினைச்சுக்கறாங்க, ஹய்யோ அய்யோ



---------------------------


10. டைரக்டர் - இப்போ வில்லன் உங்களை ரேப் பண்ண வர்றார், நீங்க “அய்யய்யோ”ன்னு கத்தனும்..


 நடிகை -இப்பவே கத்தனுமா? அப்பறமாவா?


----------------------------------


" சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ,
இப்பிடியே வந்துராதம்மா ! "

11. காதலன் -டியர், ஐ லவ் யூ...


காதலி -  ஐ லவ் யூ டூ ..


...காதலன் - லவ் பண்றப்போ எதுக்கு டூ விடறே? பழம் விடு



------------------------


12. கடைசி வரிசையில் போராட நான் தயார் - மு.கருணாநிதி # மானாட மயிலாட மாதிரி டான்ஸ் புரோகிராம்னா மட்டும் முத வரிசை ஹி ஹி



--------------------------


13. எதுக்காக அரிசி மாவு பாக்கெட்டை கிளாஸ் ரூமுக்கு கொண்டு வந்திருக்கே?


ஹோம் ஒர்க் பண்ணிட்டு வந்தா போதாது, அதைக்கொண்டு வரனும்னு நேத்து சொன்னீங்களே, டீச்சர்?


------------------------


14. தலைவரே... நூலகத்தில் கல்யாணம் பண்னக்கூடாதுன்னு கோர்ட்ல தீர்ப்பு சொல்லீட்டாங்க..



 சாந்தி முகூர்த்தம் வைக்கலாமா?



-----------------------------


15. தலைவர் நெஞ்சுரம் மிக்கவர்னு எப்படி சொல்றே?

 உரம் விலை எவ்ளவ் ஏறுனாலும் கவலைப்படாம இருக்காரே?


-----------------------





16. டீச்சர் - இந்தியாவின் கேப்பிடல் எங்கே இருக்கு?


மாணவன் - பாதி ஸ்விஸ் பேங்க்லயும் , மீதி கலைஞர் அக்கவுண்ட்லயும் இருக்கு



------------------------------


17. காதலி - டியர், என்னை காலம் பூரா வெச்சுக்காப்பாத்துவீங்களா?


காதலன் 2012 - ”வெச்சு”க்காப்பாத்தனும்னா இப்பவே ரெடி..ஹி ஹி 



------------------------------


18. எனக்கும், என் புருஷனுக்கும் சண்டை..


 அடடா.. அப்புறம்?


 அவர் எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டார்.. நான் அவர்  அம்மா வீட்டுக்கு போய்ட்டேன்



-----------------------------


19. அத்தான், சினிமா, டிராமா , வாட்டர் தீம் பார்க் எங்கே கூப்பிட்டாலும் வராத நீங்க பீச்சுக்கு மட்டும் வந்துடறீங்களே, ஏன்?


அங்கே தானே செலவு இல்லை, 2 ரூபாக்கு சுண்டல் வாங்குனா போதும்



-------------------------------


20.கலைஞர் - எல்லாரும் ஜெயிலுக்கு வந்துடுங்க.



 தொண்டர்கள் - குஷ்பூவும்வருவாங்க தானே?


-----------------------------


கோணி ஓட்டம்.........ஓடலாம் வாங்க...(மலரும் நினைவுகள்)