Wednesday, June 27, 2012

ஜூவிக்கு சுளுக்கு, ஜெ கையில் சவுக்கு - பின்னணி என்ன?

http://www.vikatan.com/news/images/23.jpg 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,


கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் ஆசிரியர் கண்ணன், வெளியீட்டாளர் அசோகன், மாதவன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ஜூனியர் விகடன் இதழும் சேர்ந்துள்ளது.


http://www.envazhi.com/wp-content/uploads/2011/06/jaya-news.jpg

சர்ச்சைக்கு உள்ளான அந்த கட்டுரை 

மிஸ்டர் கழுகு: யாகப் புகையில் போயஸ் கார்டன்!

கழுகாருக்கு மேளதாளம் வைக்காத குறையாக வரவேற்பு கொடுத்தோம்! 
புரியாதவர் போலவே நம்முடைய அலுவலகத்துக்குள் நுழைந்தார். லட்டைக் கிள்ளி கொஞ்சமாய் வாயில் போட்டுக்​கொண்டவரிடம், ''பிரணாப் பராக்... என்று நீர் சொன்னீர். அதுதான் நடந்தது!'' என்றோம்.


''அதிகாரப் பட்சிகளுக்குள் அடிக்கடி பிரணாப் முகர்ஜி பெயர்​தான் இடம் பெற்றது. அதை வைத்துத்தான் சொன்னேன். பிரணாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று, வெள்ளிக்​கிழமை மதியம்தான் சோனியா முடிவு எடுத்தார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு எத்தனையோ யோசனைகள். ஆனால், அத்தனையையும் மத்தியப் புலனாய்வுத் துறை கொடுத்த ஒற்றை வரி லாஜிக் அறிக்கை தகர்த்து விட்டதாம்!''


''அது என்ன?''


''ஜனாதிபதி பதவிக்கு யார் தகுதிஆனவர் என்று சோனியா கேட்ட அறிக்கைக்கு, எப்போதோ மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்து விட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை ஒரு தகவல் தந்தார்களாம். 'பிரணாப் வேட்பாளராக நியமிக்கப்​பட்டால், காங்கிரஸ் வலுவான போட்டியை எதிர்கொள்ளத் தேவை இல்லை. 


அவரை ஆதரிக்க எதிர்க்கூட்டணியிலேயே பல கட்சிகள் தயாராக இருக்கின்றன’ என்றதாம் அறிக்கை. 'வெற்றி பெறுவதற்கான பலம் இருந்தாலும் வேட்பாளர் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்த சோனியா, இறுதியாக பிரணாப் முகர்ஜியை ஓகே செய்தார்.


 இந்தத் தகவல் கிடைத்ததும், 'ஆண்டவனின் ஆசீர்வாதம்’ என்றாராம் பிரணாப்!''


''சோனியாவின் ஆசீர்வாதம் என்றுதானே சொல்ல வேண்டும்?''


''கடந்த மூன்று மாதங்களாக கோயில் கோயிலாக வலம் வந்தார்கள் பிரணாபின் ஆட்கள். 'எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை’ என்று உமது டெல்லி நிருபர் எழுதி கடந்த மாதமே ஒரு கட்டுரை நீர் வெளியிட்டு இருந்​தீர்


. 'இப்போது ஜோதிடருடன் சேர்ந்து மகாகாளியையும் நம்பத் தொடங்கி விட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காக தன்​னுடைய வீட்டிலேயே காளி பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் நடக்கும் இந்தக் காளி பூஜை, எதிர்ப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளுமாம்’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு பூஜையில் மூழ்கினார் பிரணாப்.

 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

கும்பகோணம் வந்து சூரியனார் கோயிலுக்கு ஒன்பது பசு மாடுகளைத் தானம் செய்து, அதற்கான சிறப்பு பூஜைகள் செய்து உள்ளார்கள் பிரணாபின் ஆட்கள். பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலும் பிரணாபின் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடந்துள்ளது. அவருடைய குடும்பத்தின் ஆஸ்தான புரோகிதர் என்று சொல்லப்​படும் ராஜேஸ் தைதபதி என்பவர்தான் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார். 


மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்ட வஸ்திரங்கள், பிரணாப் வீட்டு பூஜை அறையையும் அலங்கரித்து உள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய நம்பிக்கை​யின் அடிப்படையில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்​கொண்டாராம் பிரணாப்!''


''அடுத்த நிதி அமைச்சர்?''


''பலர் குறி வைக்கிறார்கள். ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரம் படித்தவர். பிரணாப் முகர்ஜியோடு பணியாற்றி இருக்கிறார். திட்டக் குழு உறுப்பினர்போன்ற தகுதிகள் உண்டு. அதனால் அடுத்த நிதிஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான் என்பது சோனியாவின் சாய்ஸ்.''


''தி.மு.க-வுக்குப் பிடிக்காத ஆள் ஆச்சே?''


''ஆமாம். 2009-ல் ஜெய்ராம் ரமேஷ் மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்தார். இதைக் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். 'ஜெய்ராம் ரமேஷ§க்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்’ என அப்போது தி.மு.க. அறிவித்தது.


 கேரள அணை தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அனுப்பாததையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகாராகத் தெரிவித்தார் கருணாநிதி. ஜெய்ராம் ரமேஷ§க்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், போராட்டத்தைக் கைவிட்டார். அப்படிப்பட்டவரை நிதி அமைச்சராக்க தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்!''


''ப.சிதம்பரம் நிதிஅமைச்சர் ஆவதை தி.மு.க. விரும்புமே?''


''ஆமாம்! பிரணாப் முகர்ஜியை வேட்​பாளராக அறிவிக்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலுவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமா வளவனும் கலந்துகொண்டார்கள். வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கே பொக்கே, சால்வைகளை சோனியாவுக்கு இவர்கள் வழங்கியதைப் பார்த்து வட இந்தியத் தலைவர்கள் முகம் சுளித்தார்கள். 'பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற அவை முன்னவராகவும் இருக்கிறார். காலியாகும் அந்தப் பதவியை சோனியாவுக்கு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ்காரர்களே சொல்லாதபோது, அவர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மாறி டி.ஆர். பாலு பேட்டி கொடுத்ததையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் மௌனச் சிரிப்புடன் குறித்துக்கொண்டார்கள்!''

http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg


'இப்படி பாலு ஐஸ் வைப்பதற்குக் காரணம் கேபினெட் மீது அவருக்கு இருக்கும் கண்தான்.’ என்கிறார்கள்!'' என்றவர், டெல்லிச் செய்திகளில் இருந்து தமிழக அரசியலுக்குள் புகுந்தார்.


''புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்கும். விஜயகாந்த்தும் நிறைய வாக்குகள் வாங்குவார். இது தொடர்பாக தமிழக உளவுத் துறை போலீஸார், முதல்வருக்கு அனுப்பி உள்ள ரிப்போர்ட்டையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். 'நாமதான் ஜெயிப்போம். அப்புறமா எதுக்கு செலவு செய்யணும்?’ என்ற மிதப்பில் பலரும் பணத்தைப் பதுக்கி​ விட்டதையும் சொன்னேன்.


தேர்தல் முடிவு வெளியான வெள்ளிக்கிழமை, அப்செட் ஆனார் முதல்வர். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் இருந்தவர், அதைப் பாதியில் முடித்துவிட்டு, கார்டன் கிளம்​பினார். வழக்கம்போல அம்மாவை வழி அனுப்ப போர்டிகோவில் காத்திருந்தார்கள் அமைச்சர்கள். சீரியஸான முகத்துடன் அவர்களைப் பார்த்து விட்டுக் கிளம்பினார். மறுநாள் காலை கார்டனில் இருந்து அமைச்சர்களுக்கு அழைப்பு போனது!''


''அனல் பறந்ததா?''


''11.30-க்கு வரச்சொல்லிவிட்டு, 1.30-க்குத்தான் அவர்களைச் சந்தித்தார். மொத்தம் 14 அமைச்சர்கள் போனார்களாம். பத்தே நிமிடங்கள்தான் பேசினாராம் முதல்வர்... அத்தனையும் அனலான வார்த்தைகள். தே.மு.தி.க. டெபாசிட் வாங்கியது எப்படி என்பதுதான் ஜெயலலிதாவின் கேள்வி.


 'ஜெயிச்சிடுவோம்கிற மிதப்பிலேயே இருந்திருக்கீங்க’

 என்றாராம் முதல்வர். '


நகர்ப் புறங்களில் நமக்கு ஓட்டு விழவில்லை. முஸ்லிம் வேட்பாளர் என்பதால் முஸ்லிம் வாக்குகள் அவருக்கு முழுமையாகச் சென்றுவிட்டன’ என்று மந்திரிகள் சில சமாதானங்களைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதையும் முதல்வர் ஏற்கவில்லை!''


''ஆனாலும், 1006 திருமணங்களை சந்தோஷமாகத்​தானே முதல்வர் நடத்தி வைத்தார்?''


'திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடக்கும் திருமண விழாவை தனது முக்கியமான பரிகாரமாகவே ஜெயலலிதா செய்து முடித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, சிலர் இதற்குத் தடை போடும் காரியத்தையும் பார்த்தார்கள். 


'திருமணம் நடப்பதற்காகக் குறிக்கப்பட்டுள்ள திருமண நாள் முழுஅமாவாசை நாள். எனவே இந்தத் தேதியில் திருமணம் செய்வது கெடுதல்’ என்று சிலர் கடிதம் எழுதி அனுப்பவும் ஆரம்பித்தார்கள். இந்து அறநிலையத் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து, அவருக்குப் பிடிக்காத கோஷ்டியினர் செய்த வேலைபோல அது இருந்தது. 


19-ம் தேதி செவ்வாய்க்கிழமைதான் அமாவாசை. அதன்படி பார்த்தால் 18-ம் தேதி இரவு 7 மணியில் இருந்துதான் போதாயன அமாவாசை தொடங்கும். ஆனால், முதல்வர் ஏற்பாடு செய்த திருமணங்கள், காலை 9.30-க்கு நடந்து விட்டன. எனவே, கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள பீதி இதற்குப் பொருந்தாது. 6, 9, 15, 18, 24, 27 ஆகிய தேதிகளில்தான் முக்கியமான தனது நடவடிக்கைகளை முதல்வர் வைத்துக்கொள்வார் என்பதால் இந்தத் தேதி குறிக்கப்பட்டதாம்!''


''அப்படியா?''


''19-ம் தேதி அன்று போயஸ் கார்டன் முழுக்க யாகப் புகை வீச இருக்கிறது. அதே நேரத்தில் பையனூரிலும் யாகம் நடக்க இருக்கிறது. சுமார் 11 மணி நேரம் நடக்கு​மாம் இந்த யாகம். 'ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலமும் சிறப்பாக இருக்க வேண்டும், எதிரிகளின் பலம் குறைய வேண்டும்... என்பதற்காக இந்த யாகம் நடத்தப்பட உள்ளது’ என்கிறார்கள்.

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 இதற்கென மாயவரத்தில் இருந்து பிரத்யேகமான புரோகிதர்கள் சென்னை வந்து நான்கைந்து நாட்களாக டேரா போட்டு உள்ளனர். இவை முடிந்த பிறகுதான் கொடநாடு பயணம் குறித்த திட்டங்களை வகுக்க இருக்கிறார்.''


''கொடநாடு பயணம் இருக்காது என்றும் சொன்னார்களே?''


''இறுதி முடிவுக்கு இன்னும் முதல்வர் வரவில்லை. அப்படிச் சென்றால், குறைந்தது இரண்டு மாதங்கள் வரை அவர் அங்கு இருக்கலாம் என்றும் சொல்​கிறார்கள்!''


''சசிகலாவை அழைத்துச் செல்வாரா?''


''கேட்பீர் என்று நினைத்தேன். இவர் செல்லும்போது அவர் செல்ல மாட்டார். அப்புறம் தனியாகப் போகலாம்!''


''ஓ!'' பெங்களூரு கோர்ட் மேட்டரை ஓப்பன் செய்தார் கழுகார்... ''சசிகலாவுக்கு தனி நீதிமன்றம் மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. கடந்த 6-ம் தேதி சசிகலா கோர்ட்டுக்கு வரவில்லை. கண்டித்தார் நீதிபதி. '18-ம் தேதி நிச்சயம் வருவோம்’ என்றார்கள். அன்றும் வராவிட்டால் நீதிபதிக்கு கோபம் பொங்கத்தானே செய்யும்!''


''தைரியம்தான்!''


''18-ம் தேதி காலை 11 மணிக்கு, 'சசிகலாவிடம் மிச்சம் இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைப் பிடுங்க வேண்டும்’ என்ற வேகத்தில் வந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. வந்ததும் குற்றவாளிக் கூண்டை நோட்டமிட்டவருக்கு ஷாக். சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரையும் காணவில்லை


. கடிகாரத்தைப் பார்த்தவர், 'ஒருவேளை தாமதமாக வருவார்கள்’ என்று நினைத்தார். ஆனால், வழக்கம்போல மூவரின் வக்கீல்களும் மனுவை நீட்டினார்கள். 'என்ன இது? கொஞ்சம்கூட சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் காட்டி இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று சீறினார் நீதிபதி.  


முதலில் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 16 பக்க அறிக்கையை ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார். அதில் ஆறு பக்க மருத்துவச் சான்றிதழும் இருந்தது. '63 வயதான சசிகலா சட்டத்தை எப்படி எல்லாம் மதித்து இருக்கிறார். மதிக்கப்போகிறார்’ என்பதை 10 நிமிடங்கள் விலாவாரியாக‌ எடுத்துச் சொன்னவர், '1991-ம் ஆண்டு சசிகலா கார் விபத்தில் சிக்கினார்.அப்போது இருந்து அவரது இடது கண்ணில் பிரச்னை இருக்கிறது. 


http://www.envazhi.com/wp-content/uploads/2012/05/jaya-vkanth.jpg

கடந்த 22 வருடங்களாக கண்ணில் 'குளுக்கோமா’ கோளாறு இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார். கண் புரையும் இருக்கிறது. இதைத் தொடர்ந்தே கடந்த மே 26-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள உதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது..


. நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்’ என்று சொன்னார் வக்கீல். இவர் வாதாடிக்கொண்டு இருக்கும்போது, வக்கீல் செந்திலும் ஜெயலலிதா வக்கீல் பி.குமாரும் அவருக்கு பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்தனர். அதனால் டென்ஷன் ஆன‌ நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, 'இது கோர்ட்டா? இல்லை மார்க்கெட்டா?’ என்று சத்தம் போட, செந்தில் எழுந்து மன்னிப்பு கோரினார்.


மேலும் டென்ஷனான நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'தமிழ்நாடு சி.எம். ஆக இருக்கிற ஜெயலலிதாவே கோர்ட்டின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டார். சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இழுத்தடிக்கிறார். உலகில் வியாதி இல்லாத மனிதர்க‌ளே இல்லை. அதேபோன்று எல்லா குற்றவாளிகளுக்கும் எதாவது ஒரு வியாதி இருக்கத்தான் செய்கிறது. 


அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமலா இருக்கிறார்கள்? பிடிவாரன்ட் பிறப்பித்தால் கோர்ட்டைத் தேடி வருவீர்கள்தானே?’ என சீறிவிட்டு, சுதாகரன் வராத காரணத்தைக் கேட்டார். அப்போது எழுந்த வக்கீல் சரவணகுமார், 'சுதாகரனுக்கு கடுமையான முதுகுவலி. அதனால் பயணம் செய்ய முடிய​வில்லை’ என்றார். அதன் பிறகு இளவரசியின் வக்கீல் அசோகன் எழுந்து, 'இளவரசிக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது. தொடர் வாந்தி வேறு. அதனால் பயணம் செய்ய முடியவில்லை’ எனப் பள்ளிக்கூடத்துக்கு வராத பிள்ளைகள்போல் வரிசையாகக் காரணங்களை அடுக் கினார்கள்!''


''ஓஹோ!''


''நீதிபதி மல்லிகார்ஜுனையா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். 'அதெப்படி மூன்று பேரும் ஒரே காரணத்தை மாறிமாறிச் சொல்லி கோர்ட்டின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஒவ்​வொரு முறை தேதி கேட்பதும், ஆஜராகாமல் இழுத்தடிப்பதுமே வாடிக்கையாகி விட்டது.


 உலகில் குற்றவாளிகளுக்கு நோய் இருக்கிறது என்பதால், சட்டத்தையும் கோர்ட்டையும் மூடி விட முடியுமா? இவ்வளவு சொன்ன பிறகும் உங்கள் இழுத்தடிப்பு இன்னும் ஓயவில்லையே? இனி சசிகலா ஆஜராகத் தவறினால், சுதாகரனிடமும் இளவரசியிடமும் கேள்விகள் கேட்கப்படும். அதற்குத் தயாராக வந்து விடுங்கள்.


 அடுத்த முறை கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்காத ஆர்டர் வரும்’ என்று கடுமை​யாக எச்சரித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் வராவிட்டால், வாரன்ட் பிறப்பிக்கப்படுமாம்!''


''இதுவரை ஒழுங்காக ஆஜராகி வந்தாரே சசிகலா?''


''திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி சமாதிக்கு அமாவாசை தோறும் வருவதாக சசிகலா வேண்டி இருக்கிறாராம். இங்கு வந்தால் செவ்வாய்க்கிழமை அங்கு போக முடியாது என்று நினைத்தாராம். அதனால் வரவில்லையாம்!'' என்ற கழுகாரிடம்...


''இன்று சொன்ன பாதி மேட்டர்கள் பூஜை, புனஸ் காரங்களாகவே இருக்கின்றனவே!'' என்று கேட்டோம். பதில் சொல்லாமல் சிரித்தார், பறந்தார்!


    
குண்டாஸ்..!
சேலம், அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகளுக்குத் தீ வைத்த விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அங்கம்மாள் காலனியில் இருந்த ஜெயலலிதா ஃப்ளெக்ஸுக்குத் தீ வைத்தது, கடந்த முறை அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தி.மு.க-வினர் ஜெயலலிதா போன்று சேலை அணிந்து அசிங்கப்படுத்தியது என ஆறுமுகத்தின் மீது தீராத கோபத்திலேயே இருந்தது மேலிடம்.


 அதனால்தான், சென்னையில் கைது செய்யப்பட்டவரை சேலம், புழல், வேலூர் என்று அலைக்கழித்தது போலீஸ். இன்னும் சில நாட்களில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலையில், இப்போது குண்டர் தடுப்புச் சட்டம்  பாய்ந்திருக்கிறது. இப்போதைக்கு, ஆறுமுகம் வெளியில் வருவது கஷ்டம்தான்!



 நன்றி - தட்ஸ் தமிழ் , ஜூ வி , தகவல் சொன்ன ட்விட்டர் நண்பர்கள்,தினமணி, கார்ட்டூனிஸ்ட் மதி

ஜெயமோகனுக்கு எதிராக ஒரு கட்டுரை

http://lh5.ggpht.com/-4AsyoVhVYoo/TIINSjzEX9I/AAAAAAAAAOQ/0frGhaSaQbE/Jeyamohan%252527s%252520family.JPG 

ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல்: தர்க்கரீதியான மறுப்பு- Rajan Kurai Krishnan

1. பூச்சாண்டி அரசியல்: பூச்சாண்டி அரசியல் என்றால் என்ன? கொச்சையான வார்த்தை என்று முகம் சுளிக்காதீர்கள். தத்துவத்திற்கு கொச்சை பிரயோகங்களை எடுத்து கையாண்டு புதிய அர்த்தங்களை வழங்க உரிமை உண்டு. பூச்சாண்டி காட்டுவது என்பது ரகளை செய்யும் குழந்தைகளை பயமுறுத்த பெற்றோர் கடைப்பிடிக்கும் வழி. நண்பர்கள் யாரோ சொன்னார்கள்


, ஃபிரான்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கறுப்பின மக்களை காட்டி குழந்தைகளை பயமுறுத்துவார்கள் என்று. அப்படி சில சமயம் உள்நாட்டில் பல்வேறு விதமாக பாதிக்கப்படும் மக்களின் உரிமைக் குரல்களை அடக்குவதற்கு அரசும், அரசியல்வாதிகளும் அந்நிய சக்திகள், ஏகாதிபத்தியம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுவார்கள். அதுதான் பூச்சாண்டி அரசியல். இந்த கருத்தாக்கத்தை பெரியாரும் அவருக்கே உரிய வழியில் உபயோகித்துள்ளார். எனவே பூச்சாண்டி அரசியல் புதிதல்ல. 


ஒரு அமைப்பின் உள்ளே நிலவும் அதிருப்தியை சமாளிக்க வெளியேயிருந்து வரும் ஆபத்தை கற்பிப்பது பூச்சாண்டி அரசியல் என வரையறுக்கலாம். ஜெயமோகனின் பூச்சாண்டி என்னவென்றால் இந்திய தேசத்தினை “அழிக்க”, இறையாண்மையை பலவீனமாக்க அந்நிய சக்திகள், அந்நிய நிதி (இது ஜெயமோகனின் சுவாரசியமான சொற்சேர்க்கை), ஏகாதிபத்தியம் ஆகியவை கிறிஸ்துவ மத அமைப்புகளின் மூலம், அவர்கள் உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், சிந்தனையாளர்கள் மூலம் சதி செய்கின்றன என்பதுதான். இது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை பொறுமையாக பரிசீலிப்போம். அதற்கு முன் இந்த உள்/வெளி என்ற அடையாளங்களை பொறுத்தவரை அரசியல் தத்துவம் இன்று சந்திக்கும் சிக்கல் என்ன என்பதை முதலில் பரிசீலித்து வைத்துக்கொள்வோம்.


நான் குடியிருந்த ஒரு வீட்டிற்கு பக்கத்து போர்ஷனில் தினமும் காலையில் கணவன், மனைவியிடையே கடும் தகராறு வரும். பாத்திரங்கள் உருளும், நாற்காலிகள் எறியப்படும் பயங்கர சப்தங்களும் அந்த அம்மாள் அய்யோ, அய்யோ என்று கத்துவதும் கலவரமாக இருக்கும். ஒரு நாள் சப்தத்தின் உச்சத்தில் நான் பயந்து ஓடிப்போய் அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்தி விட்டேன். அந்த கணவர் தெலுங்கு பட வில்லனை போல் வாட்ட, சாட்டமாக தாடியுடன் இருப்பார். வெளியே வந்து என்னவேண்டும் என்று கர்ஜித்தார். பின்னாலிருந்து அந்த அம்மாளும் எட்டிப்பார்த்தார். “இல்லை, ஏதோ சப்தம் கேட்டது” என்று மென்று விழுங்கினேன். அதெல்லாம் ஒன்றுமில்லை, போங்கள் என்று கூறிவிட்டு கதவை அறைந்து சாத்தி விட்டார்.


எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் “அடுத்தவர்” பிரச்சினையில் தலையிடலாமா, கூடாதா அதை எப்படி முடிவு செய்வது என்பதை தீர்மானிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மேற்கத்திய தேசங்கள் பலவற்றில் அரசு குடும்பத்தை அங்கீகரிப்பதே இல்லை. சமீபத்தில் இந்திய பெற்றோரிடமிருந்து குழுந்தையை நார்வே போலீஸ் எடுத்துச்சென்ற சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். உங்கள் வளர்ப்புப் பிராணியை நீங்கள் கொடுமைப்படுத்துவதாக யாராவது புகார் சொன்னால்கூட போலீஸ் வந்துவிடும். என் மனைவி, என் குழந்தை, என்னுடைய நாய் நான் அடிப்பேன் என்றெல்லாம் பேசினால், கம்பிதான். ஏனென்றால் உரிமைகள் பற்றிய கருத்தாக்கங்கள் குடும்பத்தின் சுவர்களை தகர்த்துவிட்டன.

தேசங்களுக்கிடையே இன்று அப்படி ஒரு பிரச்சினை தீவிரமாக நிலவுகிறது. சமீபத்தில் லெபனானில் ஐக்கிய, அதாவது மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டுமா, கூடாதா என்பதில் வலது சாரிகள், இடது சாரிகள் என எல்லாரிடையேயும் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. சூடானில் ஏன் மேற்கத்திய நாடுகள் தலையிடவில்லை, டார்ஃபர் படுகொலைகளை வேடிக்கை பார்க்கலாமா என்று பல இடதுசாரிகளே கேட்டார்கள். இலங்கையை பற்றி பேசினால் இதயம் வலிக்கும். இந்தியாவோ, ஐக்கிய நாடுகளோ உள்ளே நுழைந்து முள்ளிவாய்க்காலை தவிர்த்திருந்தால் இடது சாரி நண்பர்கள் பலரும் மகிழ்ந்திருப்போம் என்பதுதான் உண்மை.


மனித உரிமைகளின் சர்வதேசப் பரிமாணம் கூடிக்கொண்டே போகிறது. பொதுவாக இவை மேற்கத்திய நாடுகளின், சர்வதேச முதலீட்டின் நலன்களுக்கு ஏற்ப வளைக்கப்படுகின்றன என்றாலும், பல சமயங்களில் தேசத்தின் எல்லைகளை மதிப்பதில் பலருக்கும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இதை முதலில் நாம் குறித்துக்கொள்ள வேண்டும். தேசத்தின் இறையாண்மை என்பது கருத்தியல் தளத்திலும், பொருளாதார தளத்திலும் பலவகையான இடையீடுகளை சந்தித்தே தீரவேண்டிய நிலை எல்லா நாடுகளுக்குமே இருக்கிறது. மனித உரிமை தளத்தில் சீனாவும் கடுமையான அழுத்தங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது, இப்போதைக்கு அதை அசைக்க முடியாது என்றாலும், அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல.


குடியேற்றம் குறித்த அதன் கொள்கைகள் கடுமையான விமர்சனத்தை சந்திக்கின்றன. எந்த நாடும் வெளியிலிருந்து வரும் விமர்சனங்களிற்கு தப்ப முடியாது. இறையாண்மையின் பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது. வழக்கம்போல அ.மார்க்ஸ் நல்ல கட்டுரை ஒன்றை இதுகுறித்து எழுதியிருக்கிறார். அவரை வசைபாடுவதில் காட்டும் உற்சாகத்தை அவரது நல்ல கட்டுரைகளை விமர்சன ரீதியாக வாசிப்பதிலும் காட்டலாம். ஒவ்வொரு வார்த்தையிலுமா வஹாபிசம் ஒட்டிக்கொள்ளும்? அப்படி ஒட்டிக்கொண்டாலும் ஜெயமோகனை படித்து அதை கழுவி விடலாம் என்பதால் அரசியல் தத்துவம் சார்ந்த கட்டுரைகளை வாசகர்கள் கவனமாக படிக்கவேண்டும். மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் சார்ந்து, சர்வதேச குடிமைச் சமூகம் உருவாகிறதா, வடிவமற்றுப் பரவும் எதிர்பாற்றலால் தேசங்கள் கடந்த மக்கள் திரள் (multitude) சக்திகள் உருவாகின்றனவா என்பதெல்லாம்தான் இன்று அரசியல் தத்துவம் தீவிரமாக விவாதிக்கும் கேள்விகள். பூச்சாண்டி அரசியல் இதையெல்லாம் கண்டுகொள்ளாது.
http://www.sactamil.org/Writer%20Jeyamohan%20visit%20to%20Sacramento/slides/Jemo-GC%201029.jpg

2. கருத்தா, நேர்மையா?: ஜெயமோகன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இன்னொரு பிரச்சினையையும் நான் முதலிலேயே எதிர்கொண்டுவிட வேண்டும். ஒருவரது கருத்தை எதிர்கொள்வது பிரச்சினையல்ல, அவரது நேர்மைதான் முக்கியம் என்கிறார்.


(உ-ம்:1. “ஒருவரின் கருத்துக்களை நான் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அக்கருத்துக்களை அவர் நேர்மையுடன் சொல்கிறார் என்று நம்பவேண்டும். அந்நம்பிக்கை இல்லாதபோது நிழலுடன் போரிட்டு அடையப்போவது என்ன?”


2. தமிழில் நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட ஒவ்வொரு இடதுசாரியையும் ஒவ்வொரு பெரியாரியரையும் நான் அங்கீகரித்து வழிபாட்டின் தொனியில் எழுதியிருப்பதைக் காணமுடியும். ஏனென்றால் நான் பார்ப்பது அந்தக்கருத்துக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை மட்டுமே. நான் என் வாசிப்பாலும் அனுபவத்தாலும் அவர்களிடம் முரண்படுகிறேன் என்பது அந்த மதிப்பை ஒருபோதும் குறைப்பதில்லை.- அவதூறு செய்கிறேனா? ஜூன் 23,2012;) நான் இதை மிக ஆபத்தான கருத்தாக பார்க்கிறேன்.

ஒருவர் அவர் கருத்தை நேர்மையாக சொல்கிறாரா இல்லையா என்பதை எப்படி மதிப்பிடுவது? எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், முத்துகிருஷ்ணன் ஆகியவர்களிடம் நேர்மை இல்லை என்று ஜெயமோகன் தீர்ப்பளிக்கிறார். அவர்களை மிகச்சிறந்த நேர்மையாளர்களாக மதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை எப்படி புரிந்துகொள்வது? அந்தக்காலத்தில் இடதுசாரிகள் மூச்சுக்கு நூறுமுறை “இன்டக்ரிடி, இன்டக்ரிடி” என்று ஜெபிப்பார்கள். அப்போதிருந்தே எனக்கு மிகுந்த அருவருப்பை ஏற்படுத்தும் கருத்தாகத்தான் அது இருந்தது.

காரணம் அடுத்தவர் நேர்மை, இன்டக்ரிடி இதையெல்லாம் பற்றி பேசுவது என்னை போலீஸ்காரனாக, துப்பறிவாளனாக, நீதிபதியாக மாற்றுகிறது. நான் சிந்தனையாளன். நீதிபதி அல்ல. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதே என்னுடைய ஆப்த வாக்கியம். சொல்பவர் கடன் வாங்கி சொல்கிறாரா, காசு வாங்கிக்கொண்டு சொல்கிறாரா, சுத்த சுயம்புவாக தன் ஆன்மாவிற்குள்ளிருந்து தோண்டியெடுத்து (பயமாக இருக்கிறது) சொல்கிறாரா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. சொன்னது என்ன என்பதுதான் என் அக்கறை. இதற்காக “ஆசிரியன் இறந்துவிட்டான்”, “குறியியக்கத்தின் சுயமின்மை” என்பதெல்லாம் வரை போக வேண்டியதில்லை.

சாதாரண பொதுப்புத்தியே நல்லதை யார் சொன்னாலும் கேட்கனும், கெட்டதை யார் சொன்னாலும் கேட்கக் கூடாது என்பதுதான். நல்லது எது, கெட்டது எது என்று தீர்மானிப்பதன் தளமே சுதந்திரம். பெரியார் அழகாகச் சொல்வார். நான் திருடனாகவோ, சுயநலமியாகவோ, பச்சோந்தியாகவோ இருந்தால் உங்களுக்கு என்ன? நான் சொல்வது சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்று. ஆகையால் நான் தம்பி அரங்கசாமி எதை சொன்னாலும் அந்தக் கருத்தைதான் எதிர்கொள்வேன். அவர் ஜெயமோகன் தூண்டுவிட்டு சொன்னாரா, “சுய” சிந்தனையில் சொன்னாரா, அல்லது சிலர் ஐயப்படுவது போல ஜெயமோகனே அவர் அடையாளத்தில் எழுதுகிறாரா என்பதெல்லாம் என் பிரச்சினை கிடையாது.


அதேபோல ஜெயமோகனின் உள்நோக்கம் என்ன, அவர் எந்த அரசியல் ஆதாயத்திற்காக இதை சொல்கிறார், அவர் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அவர் ஒரு கருத்தை சொல்கிறார். அதை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கோட்பாடு. உளவு அமைப்பு அதிகாரிகளுடன் பேசுவது, போலீஸ் அதிகாரிகளுடன் பேசுவது, கிறுத்துவத் தன்னார்வக் குழுக்களுக்கு உள்ளேயிருந்தே உளவுத் தகவல்கள் பெறுவது இதெல்லாம் என் வேலையல்ல.பொதுவெளியில் சுய-நியாயப்பாட்டிற்காக பேசுவதும், என்னுடைய அளவுகோல்களைக் கொண்டு பிறரை அளந்து பார்ப்பதும் எனக்கு சிறிதும் ஒவ்வாத செயல்கள். நான் கருத்துக்களுடன் மட்டுமே பேசுகிறேன். நபர்களோடு அல்ல. கண்காணிப்பது என் வேலையல்ல.


என்னுடைய பேனாப்டிகானை (panopticon) தகர்த்து நொறுக்கிவிட்டேன். ஜெயமோகன் சுய நியாயப்பாட்டின் பிரம்மாண்ட மேடையில் அமர்ந்து, எந்திரன் ரஜினி போல உளவுப்படைகள் இலட்சம், எந்திர நாய்கள் நூறு ஆகிவயற்றுடன் அனைவரது வாழ்க்கையையும் விசாரணை செய்து தீர்ப்புகள் வழங்குவதைப் பார்த்து என்னால் சிரிக்க மட்டுமே முடியும். காஃப்காவின் மின்னலைகளை பகிராத ஒரு சமகால இலக்கியத்தை என்னால் யோசிக்க முடியாது. கொடுப்பினை உள்ளவர்களுக்கு வாய்க்கும் காஃப்காவும், தெல்யூஸும். மற்றவர்கள் நீதிபதியின் ஆசனத்திற்கு முந்தலாம். பரஸ்பர குற்றச்சாட்டுகளில் முக்குளிக்கலாம்.

3. ஏகாதிபத்தியம் என்றால் என்ன? ஜெயமோகனின் கட்டுரைகளில் வெளிப்படும் முக்கியமான அரசியல் கருத்து கிறித்துவ நிறுவனங்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக இயங்கும் முன்னணி அமைப்புகள் என்பது. இதில் அவர் மதம் என்பதைவிட அரசியல் பொருளாதாரமே அடிப்படையாக இருப்பதாக பலமுறை தெளிவுபடுத்துகிறார். அவரிடம் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்று கேட்பதில் பொருள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் சிக்கலான கேள்வியைக் கண்டால் நான் எழுத்தாளன், கோட்பாட்டாளனல்ல என்று சொல்லிவிடுவார். ஆகவே அவரைக் கேட்காமல் நானே என் சிந்தனைக்கு எட்டியதை சொல்லிவிடுகிறேன்.

இன்றைய நிலையில் ஏகாதிபத்தியம் என்று எதையும் வரையறுப்பது கடினம். ராணுவ, தொழில் கூட்டமைப்பில் (military-industrial complex) அமெரிக்கா அதிகபட்ச ஆற்றலுடன் இருக்கிறது. ஆனால் பொருளாதார அளவில் அது சீனாவுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கடன், நிலுவை பட்டியலில் அமெரிக்கா அதிகபட்ச கடனாளியாகவும், சீனா அதிகபட்ச கடன் கொடுத்த நாடாகவும் இருப்பதை நீங்கள் கூகுள் செய்து பார்க்கலாம். இப்படிப்பட்ட சீன-அமெரிக்க வர்த்தக நிலையின் அரசியல் அர்த்தம் என்ன, யூரோவிற்கும் டாலருக்கும் முரண்பாடு இருக்கிறதா இல்லையா, ஏன் ஐரோப்பிய நாடுகள் பலவும் திவாலாகும் நிலையில் இருக்கின்றன என்பதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் உலக பொருளாதார அமைப்பு முன்னெப்போதும் இல்லாது அளவு சிக்கலடைந்திருப்பது தெரியும்.


http://10hot.files.wordpress.com/2009/08/writer-tamil-authors-jeyamohan-a-muthulingam.jpg
முதலீட்டின் பன்னாட்டுப் பரிமாணம் அதன் தேசியப் பரிமாணத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ள காலம் என்று சொல்லலாம். ஆனால் தேசம் என்ற கட்டுமானம் இல்லாமல் இந்த அமைப்பை நிர்வகிப்பதும் கடினம். தேசம் என்பது வேண்டும். ஆனால் அது சர்வதேசிய முதலீட்டிற்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும். எந்தவொரு தேசிய அரசும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும், அந்நிய பொருள்களை அனுமதிக்க வேண்டும். இந்திய கார்ப்பரேஷன்களும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்கின்றன. நைஜீரியாவில் இந்திய முதலீடு மொத்தம் $13 பில்லியன் என்கிறது கூகுள் செய்தி. 6500 கோடி ரூபாய் என்று நினைக்கிறேன். சின்ன தொகைதான்.


ஆனால் பொருளாதார வலைப்பின்னல் என்பதைப் பற்றி யோசிக்க மிகவும் உதவக்கூடியது. ஏக ஆதிபத்தியம் என்பது குண ரீதியான ஒரு ஒப்பீட்டு ரீதியான வார்த்தையாகவே இன்று அர்த்தப்படும். ஏகம் அநேகமாய் பரம்பொருளைப்போல திரிவது முதலீடு என்ற மாய சக்திதான். ஒவ்வொரு தேசிய இறையாண்மையும் தன்னை செலவாணிகளாக, நாணயங்களாக (currency) மாற்றிக்கொண்டு சூதாடியைப்போல மேஜையை சுற்றி நின்று விளையாடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் உழைக்கும் மக்களும், வறியவர்களும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏதோ போராடுகின்றனர், கோஷங்கள் போடுகின்றனர், வோட்டுப்போடுகின்றனர், ஆட்சியை மாற்றுகின்றனர். ஆனால் வரலாறு அவர்கள் கைகளிலிருந்து சூதாடிகளின் மேஜைக்கு போய்விட்டது. 


4. இந்திய தேசமும், அந்நிய நிதியும் இந்திய அரசும், இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்நிய நிதியை பெரிது விரும்புகின்றன. FDI (Foreign Direct Investment) என்ற நேரடி அந்நிய மூலதனமே இந்திய பொருளாதார வளர்ச்சியின் மூல நாடி. மைக்ரோசாஃட் அதிபர் பில் கேட்ஸ் இந்தியா வந்தபோது ஒரு அரசருக்கு உரிய மரியாதையும், கவனமும் அவருக்கு தரப்படவில்லையா? பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அந்நிய முதலீடு பெருமளவில் கிடைக்க தமிழக கோவில்கள் பலவற்றில் விசேஷ பூஜைகளும், அர்ச்சனைகளும் செய்யவில்லையா? சி.பி.ஐ(எம்) முதலமைச்சர் புத்ததேப் அந்நிய முதலீட்டினை பெற கடுந்தவம் புரியவில்லையா?

எல்லா அரசியல் கட்சிகளுமே வளர்ச்சிக்கு முதலீடு தேவை, முதலீடு பெருமளவில் வேண்டுமென்றால் அது அந்நிய முதலீடாக இருந்தால்தான் சாத்தியம் என்பதில் முழு உடன்பாட்டுடன் இயங்கி வருகின்றன. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த பிம்பம் ஒருபுறம், கையூட்டு கமிஷன்கள் ஒருபுறம் என்ற இருவித கவர்ச்சிகள் அனைவரையும் இயக்குகின்றன.


இப்படிப்பட்ட நிலையில் தாங்கள் முதலீடு செய்யும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குறைப்பதில், அந்த நாட்டு அரசாங்கத்தை பலவீனமாக்குவதில் அந்நிய நிதிக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? இந்திய அரசு வலுவாக இருந்தால்தானே அவர்கள் தொழில் இங்கு நன்றாக நடக்கும்? அவர்கள் முதலுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்?

ஒருவேளை ஜெயமோகன் சொல்வதை இப்படி எடுத்துக்கொள்வோம். அந்நிய நிதி மூலங்கள் இந்திய அரசினை கைக்குள் வைத்திருக்க பல்வேறு அதிருப்திகளை வளர்த்து வைத்துக்கொள்ள விரும்புகின்றன; தேவைப்பட்டால் அவற்றை தூண்டிவிட்டு பெரிதாக்க விரும்புகின்றன என்கிறார் ஜெயமோகன். நைஜீரியா விஷயத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். வேண்டுமென்றால் பெரிதுபடுத்திக்கொள்ள வசதியாக அதிருப்திகளுக்கு கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்பதால் இந்த அந்நிய நிதிகள் அறிவாளிகளையும், கல்வியாளர்களையும் வந்தடைகின்றன என்று அவர் நினைக்கிறார். அவர்களும் ஆதரவு அளிப்பவர்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்பவதால் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கித் தருகின்றனர் என்பதே அவர் வாதம்.

இது எவ்வளவு அடிப்படையற்ற கற்பனை என்பதை புரிந்துகொள்ள அந்நிய நிதி என்பதை அளவு ரீதியாக முதலில் கவனித்தால் போதும். இந்திய பட்ஜெட்டில் வரவு செலவு கணக்கு காட்டப்படும் பணம் பதினாலு இலட்சம் கோடி. ஒரு ஆண்டில் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நிதி குத்துமதிப்பாக 12,500 கோடி முதல் 15,000 கோடி ரூபாய் என்று கூகுள் தகவல்களிலிருந்து சொல்ல முடிகிறது. ஒரு ஆண்டில் மட்டும். ஒரு தொழிற்சாலை தொடங்கவே முந்நூறு கோடி, ஐநூறு கோடி என்று செலவாகிறது. தமிழ் சினிமாவே கூட நூறு கோடி முதலீட்டில் எடுக்கத் துணிகிறார்கள்.

அரசியல்வாதிகள் பெறும் கையூட்டுக்களைப் பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவர்களது சொத்துக்களெல்லாம் பிரமிப்பூட்டும் எல்லைகளில் இருக்கின்றன. இதெல்லாம் அந்நிய நிதியின் உள்வரத்து தோற்றுவித்த பொருளாதார நடவடிக்கைகளின் விளைவு என்று கூறப்படுகிறது. இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளில் வரும் நிதிக்கும், ஃபோர்டு ஃப்வுண்டேஷன் வழங்கும் நிதிக்கும் என்ன ஒப்பீடு? அரசு சாரா நிறுவனங்கள் (NGO) எவ்வளவு கோடிகள் பெறுகின்றன? எனக்குத் தெரிந்து ஒரு தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பு பெறும் நிதி என்பது இலட்சங்களில்தான் இருக்கிறது. அப்படியே ஒரு அமைப்பு சாரா நிறுவனத்திற்கு சில கோடிகள் கிடைத்தாலும் அவர்கள் அதை ஆயிரக்கணக்கானோருக்கு பகிர்ந்தளிக்க நேர்கிறது. ஏதோ ஒரு சில பேர் கார்களில் போய்விட்டு வருவதை பார்த்துவிட்டு “ஆஹா, அயல்நாட்டு பணம், அயல்நாட்டு பணம்” என்று கூவுபவர்கள் ஒரு அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் வகை வகையான பத்து கார்கள் முன்னும் பின்னும் வர பவனி வருவதை என்னவென்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

எதற்காக இந்த ஒப்பீடு என்றால ஆயிரக்கணக்கான கோடிகளை நேரடியாக முதலீடு செய்து இந்தியாவின் முதலாளி வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் வர்க்கம் எல்லோருடனும் நேரடியாக பேரத்தில் இருக்கும் அந்நிய நிதி மூலங்கள் அவர்கள் ஒத்துழைப்புடன் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் நேரடியாக செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட கட்சி ஒத்துழைக்கவில்லையென்றால் அதை கவிழ்த்துவிட்டு ஒத்துழைக்கும் கட்சியின் ஆட்சியை கொண்டுவரலாம். (சுப்ரமண்யம் சுவாமி சொல்வதை விகடனில் படித்தீர்களா? நினைவிலிருந்து சொல்கிறேன்:

“சோனியா பிஜேபி ஆட்சியை கவுத்து எனக்கு ஆட்சியை பிடிச்சுகொடுங்கோன்னு கேட்டா(ர்)! ஜெயலலிதாவும் கேட்டா(ர்)! நான் டீ பார்ட்டி வைச்சேன்”. எவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார் இந்த மனிதர்) எந்த ஆட்சிக்கும் தலைவலி தர எந்த பகுதியிலும் எந்த ஒரு குட்டி அரசியல்வாதியையும் தூண்டிவிட்டு பிரச்சினை செய்யலாம். தேவைப்பட்டால் ஆயுதங்களை கூட தருவித்துக் கொடுக்கலாம். அந்நிய நிதி என்பது ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான கோடிகளின் விளையாட்டு என்பதால் அது பாதாளம் வரை நேரடியாகப் பாயும். இப்படியிருக்க அரசை கட்டுக்குள் வைத்திருக்க ஆய்வாளர்களுக்கு சுண்டைக்காய் பணம் கொடுத்து, அவர்கள் ஆய்வை திசை மாற்றி, கருத்தியலை உருவாக்கி, அதை ஊடகத்துள் செலுத்தி, பின்னர் இந்திய அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தும் திட்டம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் சாமர்த்தியமாக இருக்கிறது.

என்னவோ அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், தேசிய முதலாளிகளும் இந்த தேசத்தை பாதுகாக்க துடிப்பது போலவும், அறிவுஜீவிகள் மட்டுமே காசு வாங்கிக்கொண்டு காட்டிக் கொடுப்பது போலவும் ஜெயமோகனின் பூச்சாண்டி அரசியல் காமெடி ஃபில்ம் காட்டுகிறது. உண்மை என்னவென்றால் தேசமென்பது மக்கள் என்று கொண்டால் அறிவு ஜீவிகள் மட்டுமே அவர்கள் நலனை பேச முனைகிறார்கள். அதிகாரப் பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறார்கள். வறியவர்கள் சந்திக்கும் அநீதியின் கோர தாண்டவத்தை மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறார்கள். தேசத்தை அந்நிய நிதி மூலங்களுடன் சேர்ந்து சுரண்டும் கும்பலுக்கு அது பிடிக்காததால் இவர்களை தேச விரோதிகள் என்கின்றன. ஜெயமோகனிடம் இடம் என்ன என்பதை அவர் தீர்மானிக்கட்டும். வாசகர்கள் முதலில் என்ன நடக்கிறது என்பதில் தெளிவு பெற வேண்டும்.

எஸ்.வி.ஆர் நூலையே எடுத்துக்கொள்வோம். அவர் எழுதித்தான் திராவிட இயக்கம் பிரிவினை கோரிக்கையை வைத்ததா? பெரியார் சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தாரா? தி.மு.க மாநில சுயாட்சி கோரிக்கையாக பிரிவினை கோரிக்கையை மாற்றியதா? பல்வேறு விதமான தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றியவண்ணம் இருக்கின்றனவா? அவரைக்கேட்டுதான் RAW என்ற இந்திய உளவுத்துறை அமைப்பு இலங்கை ஆயுதப் போராட்டித்திற்கான முகாம்களை தமிழகத்தில் நடத்தியதா? அவருடைய நூலால் என்ன இதுவரை இல்லாத கருத்தியல் பரவி இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஏற்படப்போகிறது? 1994-இல் தனுவின் படத்தை தியாகியின் படம் என்று ஊர்வலத்தில் தூக்கிச்சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் அடுத்தடுத்த தேர்தல்களில் பி.ஜே.பி.யும், காங்கிரஸும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லையா? வெகுஜன அரசியலில் எதைப்பேசினாலும் சகஜம். அறிவுஜீவிகள் முரண்களை பதிவு செய்தால் தேசத்திற்கு ஆபத்து வந்துவிடுமா? பூச்சாண்டி சூ ஓடிப்போ.

5. இந்திய அரசே காட்டும் பூச்சாண்டி: இடது சாரிகளும் கூட இந்த பூச்சாண்டி அரசியலில் கைதேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு பிடிக்காதவர்களை CIA, NGO என்று போட்டுத்தள்ளும் காலத்தில்தான் எஸ்.வி.ஆரை அவதூறு செய்து கேடயம் எழுதியதை இன்று ஜெயமோகன் மேற்கோள் காட்டுகிறார். கோட்பாட்டு ரீதியான உடன்பாடு இல்லாத பகுதிகளிலிருந்து அவதூறை மட்டும் எடுத்துக்கொள்வதை சந்தர்ப்பவாத அரசியல் என்பார்கள். அது போக அரசியலில் குழப்பம் என்பது அனைவருக்கும் நேர்வதுதான். ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டத்தை பி.ஜே.பி, இந்து முன்னணி இன்னபிற ராமர் பேரால் எதிர்க்கின்றன. மீனவர்களிடையே செயல்படும் ஒரு சில கிறித்துவ என்.ஜி.ஓக்களும் சுற்றுச்சூழல் காரணத்திற்காக எதிர்க்கின்றன. அங்கே ஒரு இடதுசாரி நண்பர் என்னிடம் சொன்னார்: “அந்நிய சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கின்றன” என்று. பி.ஜே.பியும் எதிர்க்கிறதே என்றேன். அது மதவாத சக்தி என்றார். பூச்சாண்டி அரசியலுக்கு முரண்களை புரிந்துகொள்ளும் சக்தி கிடையாது.

பூச்சாண்டி அரசியலில் ஜெயமோகனின் புதுமை தமிழில் வலது சாரி அரசியல் சார்பாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதும், சிந்தனையாளர்கள் மீதும் அதை ஏவுவதுதான். ஏனென்றால் சோ ராமசாமி, சுப்ரமண்யம் சுவாமி போன்றவர்கள் எஸ்.வி.ஆரையோ, அ.மார்க்ஸையோ, முத்துகிருஷ்ணனையோ கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் விடுபட்ட ஏரியாவில் பூச்சாண்டி அரசியல் செய்ய முனைந்திருக்கிறார். இந்திய அரசே அதைச்செய்யும்போது ரொம்ப வேடிக்கையாக இருக்கும். கூடங்குளம் போராட்டத்தில்தான் அது நடந்தது. நல்லவேளையாக கூடங்குளம் போராட்டத்தை ஜெயமோகன் ஆதரிப்பதால் இப்போது நான் சொல்வது அனைவருக்கும் விளங்கும்.

கூடங்குளம் போராட்டத்தை அந்நிய சக்திகள் தூண்டி விடுவதாக அரசு கூறியது. அந்த போராட்டத்தை வழிநடத்தும் உதயகுமாரின் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அமைப்புகளையெல்லாம் தடலாடியாக ரெய்டு செய்து தினமலர் தலைப்புச் செய்தியாக்கினார்கள். அந்தப் பக்கம் வந்த யாரோ ஐரோப்பிய தேசாந்திரியை பிடித்து நாடகீயமாக நாடு கடத்தினார்கள். அமெரிக்க ஆதரவுள்ள அரசு சாரா நிறுவனங்கள் அணு உலையை தடுப்பதாக பிரதமரே சொன்னார். எதற்காக தடுக்க வேண்டும்? அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதானே இந்த காரியத்தில் இறங்குகிறார்கள்? அமெரிக்கா நினைத்தால் நேரடியாக இந்த அணு உலைகளை தடுக்க, ஆட்சேபிக்க முடியாதா?

இந்த அணு உலையை ரஷ்யா கொடுக்கிறது. அடுத்தடுத்த அணு உலைகள் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்றன. இதில் பிரச்சினை செய்தால், அடுத்த உலைகளுக்கும் பிரச்சினை வராதா? இன்று பொருளாதார மந்த நிலையை உலகளாவியதாகத்தானே சொல்கிறார்கள் (Global recession)? எந்த ஒரு நாட்டிலும் பொருளாதார நடவடிக்கையை தடுப்பது எல்லா நாடுகளையும்தானே பாதிக்கும்? கிரீஸ் திவாலானால் ஏன் மற்ற நாடுகளில் விலை ஏறுகிறது? இன்றைய உலக பொருளாதார அமைப்பில் தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறியேறும். எனவே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து உலக பொருளாதார மந்த நிலையை அதிகரிப்பதில் எந்த அந்நிய சக்திக்கும் ஆர்வம் கிடையாது. அந்நிய நிதிக்கும், இந்திய நிதிக்கும் பெரிய முரண்பாடும் கிடையாது. ஓடுகிற நீரில் என் கை நீர் எது என்பது போலத்தான் உலக முதலீட்டியம் இயங்குகிறது.

ஆனால் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவேண்டுமென்றால் அதற்கு நியாயம் கற்பிக்க வேண்டுமல்லவா? போராடும் மக்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி கைது பண்ணும் அரசு அதற்கு ஏற்ற ஃபில்ம் காட்ட வேண்டாமா? அதற்குத்தான் இந்த பூச்சாண்டி அரசியல். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகனுக்கு என்ன தேவை என்றுதான் புரிந்துகொள்ள முடியவில்லை.

6. ஆய்வுக்கு ஆதரவு கொடுங்கள்: ஜெயமோகனுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி எனக்கில்லாவிட்டாலும் தேவை இருக்கிறது. நான் மேற்கொள்ள விரும்பும் பல்வேறு பண்பாட்டு ஆய்வுகளுக்கு நிதி உதவிக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. மீண்டும், மீண்டும் அந்நிய நிதிகளிடமே போகவேண்டியிருக்கிறது. ஜெயமோகன், பேசாமல் நீங்களே விஷ்ணுபுரம் அறக்கட்டளை ஒன்றையும். அதன் சார்பாக விஷ்ணுபுரம் ஆய்வு நிறுவனம் ஒன்றையும் தொடங்குங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு உண்டு. அ.நீ, ராஜீவ் மல்ஹோத்ரா மூலமாக ஹிந்துஜா போன்ற நிறுவனங்களிடமிருந்தும் “தேசிய” நன்கொடை வாங்கலாம்.

மணிரத்தினம் மூலமாக ரிலையன்ஸை கூட அணுகலாம். மொத்தமாக ஒரு கணிசமான நிதியை உருவாக்கினீர்கள் என்றால், என்னைப் போன்றவர்களின் ஆய்வுகளுக்கு உதவி செய்யலாம். எனக்கும் அடிப்படையில் இந்த நாட்டின் பண்பாட்டின்மீது மிகுந்த மதிப்பும், காதலும் உண்டு என்பதால் இந்திய இறையாண்மையை எந்த வகையிலும் தொந்திரவு செய்யாமல் ஆய்வை மேற்கொள்கிறேன். அரவிந்தன் நீலகண்டன் மேற்பார்வையில்கூட வேலை செய்கிறேன். ஆய்வாளர்களின் கருத்தியல் சுதந்திரத்தை நீங்கள் மதித்து, கிறித்துவ ஏகாபத்திய நிறுவனங்கள் செய்வதாக நீங்கள் சொல்வதுபோல ஆய்வின் போக்கில் தலையிடமாட்டீர்கள், முன் நிபந்தனைகள் விதிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சீக்கிரம் “தேசிய நிதி” சக்திகளை சமூக அறிவியல், மொழியியல், வரலாறு போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதில் ஈடுபடுத்துங்கள். இல்லாவிட்டால் அந்நிய நிதியைத்தான் நாட வேண்டியிருக்கும்.

அதே போல அரசு நிர்வாகமும் உண்மையிலேயே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யத் தொடங்கினால் அரசு சாரா நிறுவனங்களுக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ஒரு கிராமத்தில் துப்புரவு தொழிலாளிக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர ஒரு NGO பணியாளர் போராட வேண்டியிருக்கிறது. சில இடங்களில் கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் எங்கேயும் இதுபோன்ற காரியங்களை செய்வதை நான் பார்க்கவில்லை. செய்கிறார்கள் என்றால் மகிழ்ச்சிதான். பெரியார் பெயரை சொன்னால் உங்களுக்கு பிடிக்காது. அதனால் காந்தியும், வினோபாவும் பிறந்த மண்ணில் ஒரு துப்புரவு தொழிலாளி கெளரவமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் தமிழகமெங்கும் ஏற்படுத்திவிட்டீர்களென்றால் உங்களை சிலை வைத்து வழிபடுவேன். வெல்க பாரதம்!

P.S: I have not asked for Rajan's permission to share this. In case he has a problem with this, I will take this down- Prakash Venkatesan

கன்னி ராசி ஆண்களுக்கு ஸ்பெஷல் சலுகை ஏதாவது இருக்கா??? ?

ஆசையும் பயமும் தன்னகத்தே விதி மாறி இரண்டற கலந்து நிலையில்லா நிமிடங்கள் அனைத்தையும்     இருதலைகொள்ளி எறும்பாக வாட்டி வதைக்குதே!!!!!!!!!!
1.நடிகை - ரசிகர் மன்றங்களை கலைக்கலாம்னு இருக்கேன் 


டாக்டர்- ஏம்மா, மாசா மாசம் க்ளினிக் வந்து கலைக்கவே உனக்கு நேரம் இல்லை ;-)


--------------------------------------------


2. எப்போதும் ஆனந்தமாக இருக்க ஆசைப்பட்டால் காதலி! அவள் பேரே ஆனந்தியாக இருந்தால் மகிழ்ச்சி!




-----------------------------


3. ஐ கெட் மேரீடு வித் சில்ட்ரன் = மேரேஜ் ஆகும்போதே குழந்தைங்க இருந்துதுன்னு அர்த்தமா? 



----------------------------


4. பின் நவீனத்துவம்னா  ஸ்ரீதேவி மூக்கை ஆபரேஷன் பண்ணி அழகு படுத்துன  மாதிரி பின்னழகை அழகுபடுத்துவதா?



------------------------


5. 20 கண்கள் இருந்தும் ராவணன் கவனம் ஒரே ஒரு பெண் மீதுதான் இருந்துச்சு, 2 கண்ணை வெச்சுட்டு நாம டெயிலி 200 பேரை சைட் அடிக்கறோம்;-)



-----------------------





6. மது ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர் ராம்தாஸை விட கேப்டன் தான், டெயிலி ஒரு ஃபுல் அடிச்சே ஒழிக்கப்பார்க்கறார்


-----------------------


7. நான் தீ படம் பார்க்கிறேன் = I AM SEEING THE FILM FIRE # எடக்கு மடக்கு மொழிபெயர்ப்பு



-----------------------------


8. வேட்டியின் நுனி பிடித்து உறங்குகிறாள் மகள், மனைவியிடம் சாப்பாடு கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டேன் # சிம்ப்பிள்



---------------------


9. ஜூலை 25ல் வங்கிகள் போராட்டம்  # அட லூசுங்களா! 29ந்தேதி ஸ்ட்ரைக் பண்ணாலாவது பில்லா 2 பார்க்கலாம்



----------------------------


10. ரோட்ல ஆக்சிடெண்ட் ஆனா , சாரி தெரியாம பட்டுடுச்சுன்னு பணிஞ்சு போயிடுங்க , சண்டையை தவிர்க்கலாம் 



--------------------------




11. ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்? # மொத பாட்டு  ராஜாதி ராஜன் இந்த ராஜா?



--------------------------


12. வெட்னரி டாக்டர் நீங்க, எதுக்கு உங்க கழுத்துல  ஸ்டெதஸ்கோப்? 



 ம், செல்ஃப் செக்கப் அப்பப்ப பண்ணிக்குவேன் ;-)


-----------------


13. அரசியலில் ஈடுபடுவேன்: நடிகை சோனா) #  சோனியா காந்தி, சோ வரிசைல சோனா! செத்தாண்டா சேகரு



-----------------

14. மாநகராட்சியில் தவறு செய்யும் அதிமுக கவுன்சிலர்கள் திருந்தாவிட்டால் மாமன்றத்தை கலைத்து விடுவேன்-ஜெ # அதனால தப்பு பண்றவங்க யூஸ் லாட்ஜ் 


-----------------------------------


15. தமிழ் ஒரு நுணுக்கமான மொழி! எழுத்துப்பிழைகள் சில சமயம் பூமாரங்க் ஆகி நம்மையே தாக்கும்


---------------------------------


மேலிருந்து கீழாக கோடு உள்ள சட்டை அணிந்தால் ஒல்லியாக காட்டும். குறுக்கு கோடு போட்டால் குண்டாக காட்டும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த பெண்மணிக்கு பிபிசியின் ‘அமெச்சூர் சயின்டிஸ்ட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.



16. ஜாதி ஒழியாது: ஜி.கே.மணி #  ஜாதிக்கட்சி ஒழிஞ்சாக்கூட இப்போதைக்கு போதும் 


-- ----------------------------


17.  கன்னி ராசில பிறந்த  ஆண்களுக்கு  ஏதாவது ஸ்பெஷல் சலுகை கிடைச்சிருக்கா? ரொம்ப நாள் டவுட்டு 



-------------------------------


18. தலைவரே! இன்னும் நீங்க கடிதம் எழுதிட்டு இருக்கறது உடன் பிறப்புகள் எங்களுக்கே கேவலமா இருக்கு! ஒண்ணா மெயில் அனுப்புங்க, அல்லது STD பேசுங்க


---------------------------------------

19. சாக்லேட் கேர்ள்ஸ் அப்டின்னா அதிகமா சாக்லெட் சாப்பிட்டு சுகரை ஏத்திக்கும் ஃபிகர்ஸா?



---------------------------------

20. என்னைக் கடக்கும் போது உன் நடையில் வரும் சிறு தடுமாற்றம் சொல்லுது நீ லவ் பண்ண வர்றப்பக்கூட மப்பில்தான் இருக்காய் என்பதை !



----------------------------------


Tuesday, June 26, 2012

சரோஜாதேவி

சரோஜாதேவி


Veteran Actress B. Saroja Devi


ஒவ்வொரு காலமும், தன் கால மக்களுக்கு எவ்வளவுதான் இடரும் துயரும் தந்தாலும், அது அவர்களுக்கு விசேஷமான சந்தோஷத்தையும் பரவசத்தையும் தரத் தவறுவதில்லை. என் இளம் பிராயம் கறுப்பு- வெள்ளைத் திரைப்படக் காலமாக அமைந்த தென்பது காலம் எனக்களித்த பரிசு. கறுப்பு வெள்ளைத் திரைப் படங்களும் அவற்றின் அற்புதமான பாடல்களும், ஆடிப்பாடிய அழகு தேவதைகளும் என் நினைவுகளின் சேகரக் கிடங்குகளில் சேர்மானமாகியிருக்கும் பொக்கிஷங்கள்.

திரைப்படங்களுடன் பெரும் அபிமானத்தோடு உறவுகொள்ளும் காலமென்பது, பத்து முதல் இருபது வரையான பத்தாண்டுக் காலம். என்னுடைய இப்பிராயத்தில் தமிழ்த் திரையுலகம், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் ஆகியோருடைய ஆளுகையில் இருந்தது. அவர்களோடு இணைந்து நாயகிகளாக நடித்த சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, தேவிகா ஆகியோரே இன்றளவுக்கும் என் மனதுக்கு இதமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், என் அபிமானம் அதிகமாக சாய்ந்திருந்ததும், சாய்ந்திருப்பதும் சரோஜாதேவியின் பக்கம்தான். என் வளரிளம் பருவத்தில் தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் ஒளிர்ந்த நட்சத்திர நாயகி சரோஜாதேவி. காலம் பரிசளித்த மகத்துவம். என் கால யுவன்களையும் யுவதி களையும் முழுவதுமாக வசப்படுத்தியிருந்த பைங்கிளி.

தமிழ்த் திரையுலகில் “குணவதிக்குக் குணவதி, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்ற பிம்பத்தை முதன்முதலாக பரிபூரணமாகக் கட்டமைத்தவர் சரோஜாதேவி (பின்னாளில் தன் காலத்திற்கேற்ற அம்சங்களோடு அந்த பிம்பத்தில் கச்சிதமாகப் பொருந்தியவர் சிம்ரன். அன்று சரோஜாதேவி; இன்று சிம்ரன் என்று கொண்டாடுவதற்கான என் மன அமைப்பு இதன் வழி வெளிப்படுவதாகவே தோன்றுகிறது).


 இவருடைய குணவதி பிம்பம் எல்லாப் படங்களிலும் நாயகிக்கே உரிய பாங்கோடு புலப்படும் என்றாலும் மிக எளிய உதாரணமாக, கல்யாணப் பரிசு, பாலும் பழமும் என்ற இரு படங்களை நினைவுகூரலாம். தியாகத்தில் சுடரும் இருவேறு பாத்திரங்களில் வெளிப்படும் இவருடைய நடிப்பும் முக அபிநயங்களும் அலாதி யானவை. பரிவும் பாசமும், பாந்தமும் பரிபக்குவமும் உடல் மொழியில் கனிந்திருக்கும்.



பேதமையிலிருந்து பரிபக்குவம் வரையான எல்லைகளில் சஞ்சாரம் செய்யும் இவருடைய முகமொழி வசீகரமானது. காதல் பெண்ணாக வாழும்போது வெளிப்படும் குறும்பும் குதூகலமும், ஒயிலும் ஒய்யாரமும், நளினமும் நாணமும், செருக்கும் மிடுக்கும், கனிவும் காதலும் நம்மைப் பரவசப்படுத்து பவை. மனைவியாக வரும்போது பாசமும் நேசமும், பரிவும் பாந்தமும், எழிலும் எளிமையும் வெகு சுபாவமாக வெளிப்படும்.

சரோஜாதேவியின் உடல் வனப்பு இயல்பிலேயே அலாதியான கவர்ச்சி கொண்டது. அவருடைய முன்னழ கின் ஈர்ப்பும், முக அழகின் நயங்களும் எவரையும் சுண்டியிழுத்து சொக்க வைப்பவை. அவருடைய பின்னழகு விசேஷமானது. சோழர்காலச் சிற்பங்களின் லாவண்யம் கொண்டது. தமிழ்ச் சமூகம் பின்னழகின் மகத்துவத்தை அறிந்து கொண்டதும், அந்த அறிதலின் வழி ஆனந்தப்பட்டதும் இவருடைய வருகைக்குப் பின்னர்தான். பாடல் காட்சிகளில் இவர் ஒயிலாகவும் மிடுக்காகவும் நடக்கும்போது கேமரா பின்னாலிருந்து தொடரும் மாயமும் நிகழ்ந்தது. அதுவரை, எந்தக் கதாநாயகியின் பின்னாலும் கேமரா இப்படி ஆனந்தக் கூத்தாடி அலைந்ததில்லை.

http://im.rediff.com/movies/2007/nov/28saroja2.jpg


காதல் பாடல் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கும்போது, காட்சியின் ஏதோ ஒரு தருணத்தில், நாணத்தை வெளிப்படுத்தும் விசேஷ அம்சமாக, இவர் தோள்களை சற்றே குன்னி சில எட்டுகள் எடுத்து வைப்பார். அப்போது அவர் முகம் நாணத்தில் மலர்ந்திருக்கும். உடல், வனப்பில் ஜொலித்திருக்கும். நம் மனம் பரவச அலைகளில் மிதந் திருக்கும். பாடல் காட்சி வீட்டுக்குள் நிகழும்போது, அதன் ஏதோ ஒரு தருணத்தில், படுக்கையில் குப்புறப் படுத்தபடி, இரு கால்களையும் மேலும் கீழுமாக ஆட்டுவார். நம் மனம் கிறுகிறுக்கும்.


ஆக அன்றைய வாலிபர்களை இவர் வசப்படுத்தியதிலும், கிறங்க வைத்ததிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேசமயம் அன்றைய மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் இவர் மனதளவில் அழகிய சிநேகிதியாக இருந்தார். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார்.

தமிழில் அதிகமான படங்களில் மாணவியாக நடித்தவர் இவராகத் தான் இருக்கக்கூடும். அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள்.

அக்காலகட்டத்துப் படங்களில் சரோஜாதேவி அணிந்த விதவிதமான காதணிகளை மட்டுமே கொண்ட ஒரு கண்காட்சிக் கூடத்தை நிர்மாணிக்கலாம். மேலும், இவர் உடுத்திய ஆடைகள்தான் எத்தனை வகை. பாவாடை – தாவணி, சேலை – ஜாக்கெட் (ஜாக்கெட்டில் விதவிதமாய் பல்வேறு வடிவங்கள்), முழு நீள கவுன், அரை கவுன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், சுடிதார், பைஜாமா, பேன்ட், விதவிதமான மேலாடைகள், சட்டை, டி-சர்ட் என எல்லாமே இவர் உடலில் அழகுற, பாந்தமாய்ப் பொருந்தின.

அதுபோன்றே கணக்கற்ற சிகையலங்காரங்கள். விதவிதமாய் ஸ்கார்ப் அணிந்ததும், அழகழகாய் ரிப்பன்கள் சூடியதும் இவர்தான். இரட்டைச் சடை போட்டு, அதையும் இரண்டாக மடித்து அவற்றில் ரிப்பன்களைப் பூ வடிவில் சூடிச் சுடர்ந்தார். அவர் கொண்ட எண்ணற்ற அழகுக் கோலங்கள், தமிழ்ப் பெண்கள் சமூகத்தையும் அழகுபடுத்தின. தமிழ்த் திரையுலகம் இவரை விதவிதமாய் அழகுபடுத்திப் பார்த்தது. இவர் தமிழ்ச் சமூகத்தை விதவிதமாய் அழகுபடுத்தினார்.

அபிநய சரஸ்வதியாக தன் இருபதாவது வயதில் (1958) சரோஜாதேவி கன்னடத்திலிருந்து தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். எம்.ஜி.ஆர் தமிழ்த் திரையுலக்கு அளித்த பெரும் கொடையாக இந்நிகழ்வு அமைந்தது. எம்.ஜி.ஆர் முதன்முதலாக தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார்.

 கறுப்பு  – வெள்ளைப்படமான நாடோடி மன்னனின் பிற்பாதியில் சரோஜாதேவி அறிமுகமா வதிலிருந்து படம் வண்ண மயமாகும். தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய நட்சத்திரம் மங்காத வண்ணமாய் ஒளிவீசத் தொடங்கியது. அடுத்த பத்தாண்டுகளில், தன் கொஞ்சும் தமிழாலும் அழகாலும் நடிப்பாலும் கன்னடத்துப் பைங்கிளியாகத் தமிழ் மனங்களில் சிறகடித்தார்.

பெங்களூரில் அவருடைய இல்லத்தில் தமிழ்த் தொலைக்காட்சி சேனலொன்று சமீபத்தில் எடுத்த நேர்காணலின் போது அவர் வெளிப்படுத்திய ஆதங்கமிது: “எனக்கு முன்பெல்லாம் சென்னையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நான்கு வீடுகள் எப்போதும் இருந்தன. அவர்களில் எவரும் இப்போது இல்லை. நெஞ்சில் நினைவுகளோடும் கண்களில் கண்ணீரோடும் நான் மட்டும் தனியாக இருந்து கொண்டிருக்கிறேன்."

இன்றும்கூட, ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தவறாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவ்வகையில் என் வாழ்வில் பெரும் பங்கு வகிக் கின்றன. குறைந்தது நான்கைந்து சரோஜாதேவி பாடல்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நாளின் இடைப்பட்ட பொழுதுகள் எப்படிப் போனலும், நாள் அழகாகப் புலரவும், இரவு அமைதியாகத் துயிலவும் இவை இதமாக இருந்து கொண்டிருக்கின்றன.


என்னளவில் சரோஜாதேவி, காலம் பரிசளித்த பெறுமதி வாய்ந்த கொடை.


 நன்றி - த சண்டே இந்தியன் 

PURSUED - ஹாலிவுட் த்ரில்லர் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnOoiIkqKen4MKhhi8w0plU6y-v5CXpOT2AAf1DkJfepU84Ienl5KH1ilcJnRZ1XkJ15fKqG8nqM94Ibl8FZpi27cIBt1WIlv-FQUFlwekJyifUQNzxd-8jRlV8Owqi5ftaDItpFOqyS4/s1600/Www.ChillnMasti.BlogSpot.Com.jpg

ஹீரோ  ஒரு பெரிய கார்ப்பரைட் கம்ப்பெனில ஒர்க் பண்றாரு.. அந்த கம்ப்பெனில ஒரு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க.. அதாவது யாராவது காணாமபோனா  அடுத்த 15 நிமிஷத்துல அவங்களைக்கண்டு பிடிக்கற மாதிரி ஒரு சாஃப்ட்வேர்.. ஒவ்வொருவர் உடம்புலயும் அந்த கருவியை பொருத்திட்டா  போதும்..நாட்ல நடக்கும் பல குற்றங்கள், கடத்தல்கள் குறைஞ்சுடும்.. போலீஸ்க்கு பெரிய தலைவலி போயிடும்.. இந்த பிராஜக்ட் மட்டும் சக்சஸ் ஆகிட்டா உலகமே அவங்களைகொண்டாடும்..ஒன்றரை லட்சம் பில்லியன் டாலர் அவங்களுக்கு கிடைக்கும்

வில்லன் ஒரு புரோக்கர்.. இவன் வேலை என்னான்னா கம்மியா சம்பளம் வாங்கற திறமையான ஆட்களை நயமா பேசி, பிரெயின்வாஷ் பண்ணி அவங்களை போட்டி கம்ப்பெனில சேர்த்து விட்டு அதுக்கான கமிஷனை வாங்கற ஆளு.. கிட்டத்தட்ட புரோக்கர் மாதிரி..

ஈரோடு,திருப்பூர் நகரங்களில் இது மாதிரி பரவலா பார்க்க முடியும்.. அதாவது கார்மெண்ட்ஸ் தொழில் தான் இங்கே கொடி கட்டி பறக்குது,, டெய்லர்கள், கட்டிங்க் மாஸ்டர்கள்,லைன் சூப்பர்வைஸர்ஸ் தேவை அதிகமாகிட்டே இருக்கு.. இவங்க என்ன பண்ணுவாங்கன்னா கேரளா, திருநெல்வேலி ஏரியாக்களில் போய் ஆளுக்கு ரூ5000 டூ ரூ 10,000 குடுத்து கூட்டிட்டு வந்துடுவாங்க.. வாரா வாராம் சனிக்கிழமை சம்பளம்.. கம்ப்பெனியை விட்டு நிக்கனும்னா அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுக்கனும்..இதுக்குன்னே புரோக்கர்ஸும் இருக்காங்க..

அதே மாதிரி இங்கே ஐ டி கம்ப்பெனில பெரிய அளவுல நடக்குது. அவ்ளவ் தான் வித்தியாசம்..

http://www.celebs101.com/gallery/Estella_Warren/154226/9Estella_Warren.jpg

ஹீரோவோட மனைவிக்கு ஹீரோ மேல ரொம்ப நாளா ஆதங்கம்.. கம்மி சம்பளம் வாங்கறார்னு.அடிக்கடி அவங்களுக்குள்ள வாக்குவாதம் வரும் , வளரும்..  . தொடரும்.. உறவுகள் மட்டும் தொடர்கதை அல்ல, அவங்களுக்கிடையேயான பிணக்குகளும் ஒரு தொடர்கதை தான்..

வில்லன் என்ன பண்றான்? ஹீரோவுக்கு மெண்ட்டல் டார்ச்சர் கொடுக்கறான்
அவன் சொல்ற கம்ப்பெனிக்கு வந்து சேர்ந்தே ஆகனும்.. உங்களூகுத்தான் லாபம்.. டபுள் மடங்கு சம்பளம்.. இந்த சான்ஸ் மறுபடி கிடைக்காதுன்னு.. அதுவும் இல்லாம ஹீரோ ஒர்க் பண்ற கம்ப்பெனி பாஸ்க்கு ஒரு மெயில் வேற அனுப்பி ஹீரோவை மாட்டி விடறான்.. அதாவது உங்க ஆள் எங்க கம்பேனிக்கு வரப்போறார்னு.. இதனால ஹீரோ ஒர்க் பண்ற கம்பெனி ஓனர்க்கும், ஹீரோவுக்கும் மனத்தாங்கல்கள்,வாக்குவாதங்கள் நடக்குது..

 ஹீரோ, ஹீரோயின் வெக்கேஷனுக்காக ஒரு இடத்துக்கு போறாங்க.. ஹீரோவோட ஓனர் என்னா நினைக்கறார்னா புது கம்ப்பெனில சேர பிளான் போடத்தான் அங்கே போய் இருக்கான்னு.. வில்லன் ஹீரோ போற பக்கம் எல்லாம் தொடர்ந்து டார்ச்சர் தர்றான்.. ஹீரோ இல்லாதப்ப அவன் மனைவி கிட்டே வந்து டார்ச்சர் பண்றான்..

மனைவி வில்லனின் டார்ச்சர் பற்றி ஹீரோ கிட்டே சொல்லி அவன் சொல்ற மாதிரி அந்த கம்ப்பெனில தான் சேர்ந்துடுங்களேன்னு கேட்கறா.. ஹீரோ மனைவி கிட்டே அவன் உன்னை தொட்டனா?ன்னு விவகாரமா ஒரு கேள்வி கேட்கறான்


தம்பதிகளுக்குள் தேவை இல்லாத சண்டை, ஹீரோ இந்த மெண்ட்டல் டார்ச்சர்ல இருந்து எப்படித்தப்பிக்கிறான்? அப்டிங்கறதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொலி இருக்காங்க..

2004 ல ரிலீஸ் ஆன இந்தப்படம் அங்கே சரியா ஓடலை.. 

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எடுத்துக்கொண்ட கதை என்னவோ அந்த நேர்கோட்டில் இருந்து கொஞ்சமும் மாறாமல் சீராக திரைக்கதை அமைத்த உத்தி.. கமலின் மகா நதி படம் போல்  நீட்டான திரைக்கதை பெரிய பிளஸ்..


2. படம் லேசா போர் அடிக்கற  மாதிரி இடம் வர்ற டைம்ல வில்லன் ஹீரோ இல்லாத டைம்ல ஹீரோயின் கிட்டே தகராறு பண்ணுவதும் அதை தொடர்ந்து ஆடியன்சிடம் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதும்.. ( நான் படம் பார்த்தப்போ வில்லன் ஹீரோயினை ரேப்பிடடுவான்னு நினைச்சேன். ஆனா அது நடக்கலை ;-))


3. ஹீரோ, ஹீரோயின், வில்லன் 3 பேர் நடிப்பும் கன கச்சிதம்.. ஒளிப்பதிவு, இசை எல்லாம் தேவையான அளவுக்கு எளிமையா இருந்தது..



http://artsfuse.org/wp-content/uploads/2011/12/watch-shame-film-and-movies-online-in-review.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்( உத்தேசமான மொழி பெயர்ப்பு)


1.  என் ஃபோன் நெம்பர் எப்படி உன் கைக்கு வந்தது?


 நல்லா ஒர்க் பண்றவங்க பயோடேட்டாவை அப்டேட்டா வெச்சிருக்கறதுதான் என் ஒர்க்கே!



2.  இவன் பயங்கரக்கஞ்சனா இருக்கான்.. உன்னை லவ் பண்றான். நீயாவது அவனை நல்லா செலவு பண்ண வை.



3.  பொதுவா கம்பேனி தனது போட்டிக்கம்ப்பெனி ஆளுங்களை கைக்குள்ளே போட்டுக்குவாங்க.. அப்பறமா கம்பெனி ஃபைல்ஸை அவங்க மூலமா கையகப்படுத்திக்குவாங்க .. இதான் அவங்க ட்ரிக்ஸ்


4. ஹாய் மேடம். இப்போ உங்க கணவர் எப்படி இருக்காரு?

நல்லா இருக்காரு.. ஏன்னா நான் இருக்கேனே?


5. ஓ. ரொம்ப தாங்க்ஸ்ங்க.. என் காரை ரிப்பேர் பண்ணிக்குடுத்ததுக்கு......


 இதென்னங்க பெரிய விஷயம்..  நாளைக்கே என் கார் ரிப்பேர் ஆனா நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்.. நீங்க வந்து சரி பண்ணிக்குடுங்க..  தானிக்கு தீனி


6.  மிஸ்.. இதுவரை நான் குடிச்ச டீ-ல இதுதான் பெஸ்ட் டீ



7. மிஸ்டர்... நீங்க மீடியாவுல இருக்கீங்களா?

 இல்லை மீடியேட்டரா இருக்கேன்.. உடைச்சு சொன்னா புரோக்கரா இருக்கேன்..


8. ஹலோ.. இங்கே  என்ன பண்றீங்க?


ஒரு ஹார்ஸ் ரைடர் என்ன பண்ணுவார்? ரைடிங்க் த ஹார்ஸ்...


 குதிரை மாதிரி ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கு.. அதை ஓட்டாம.....



9.  நமக்கு பிடிக்கலைங்கறதுக்காக புது ஆள் கிட்டே விரோதம் காட்டக்கூடாது,. ஒரு காஃபி குடிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்..


10. டியர்.. ஆல்ரெடி நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்..

 பின்னே நான் சோகமா இருக்கறதாவா சொன்னேன்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்கன்னு தான் கேட்டேன். அதுக்கு ஒரு பதில் நேர்மையா வருதா?


11,. உங்களூக்கு ஒரு விஷயம் தெரியுமா?  ஒரு நல்ல ஜாப் ஆப்புர்சுனிட்டிக்காக ( வேலை வாய்ப்பு) ஒரு ஆள் தன் மனைவியையே கொலை பண்ணிட்டார்..


அந்த ஒரு ஆள் நீங்க தானே?


12. உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான் இருக்கு


1. நீ எங்க கம்பெனில சேரனும்

2. உன்னை யாராவது கொலை பண்றதை நீ ஏத்துக்கனும்..

 எது வசதி?


13. கொஞ்சம் பணத்தை அள்ளி வீசுனா இந்த உலகத்துல எல்லாரும் ஃபிரண்ட் தான்


14. ஃபிளைட்ல மேலே போன்னு சொல்றேன்.. செத்துத்தான் மேலே போவேன்னு அடம் பிடிச்சா எப்படி?


15. உன் கிட்டே இப்போ 3 ஆப்ஷன்ஸ் தான் இருக்கு


1. அக்ரிமெண்ட்ல சைன் பண்ணுனபடி நீ எங்க கம்ப்பெனில சேரனும்.

2. என்னை சுடனும்

3. நான் உன்னை சுடனும்


16. பேசிட்டு இருக்கும்போது ஏன் சூட் பண்றே? பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்..

http://www.dvd-covers.org/d/69649-3/10Pursued.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ மேல எந்த தப்பும் இல்லை.. வில்லன் இந்த மாதிரி டார்ச்சர் பண்றான்னு ஏன் போலீஸ்ல புகாரே தர்லை?


2. ஹார்ஸ் ரைடிங்க்ல ஹீரோ மயக்கம் போட்டு விழறார் . வில்லன் ஏன் அப்படியே அவரை அங்கே விட்டுட்டு போகனும்.. மறுபடி ஹீரோவுக்கு உணர்வு வந்து ஏன் விட்டுட்டுப்போனேன்னு கேட்கறப்ப ஏன் தடுமாறனும்? அவருக்கு தெரியாதா? விழிப்பு வந்ததும் சமாளிக்க வேண்டி இருக்கும்.. ஏதாவது பதில் ரெடி பண்ணீ வெச்சுக்கனும்னு?


3. ஹீரோ தன் மனைவி கிட்டே “ அவன் தான் இப்போ ஃபோன்ல காண்டாக்ட் பண்ணான்” அப்படின்னு சொல்றப்போ அவ நம்பலை.. ஏன் அவன் தன் மொபைல் ஃபோன்ல ரிசீவ்டு கால் காட்டலை..?


4. இவ்ளவ் பிரச்சனை நடக்கறப்போ  மனைவியை வீட்ல தனியா விட்டுட்டுப்போனா  வில்லன் அங்கே வருவான்னு ஹீரோவுக்கு தெரியாதா?


5. நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க்ல இருக்கற தம்பதிகளா ஹீரோ ஹீரோயினை காட்டிட்டு திடீர்னு ஒரு சீன்ல “ அவன் உன்னை டச் பண்ணனா?” அப்டினு ஒரு தேவை இல்லாத கேள்வியை கேட்பது எதுக்கு?


 படத்துல ஏகப்பட்ட வசனங்கள்.. ஆனாலும் ரசிக்கலாம்.. இணையத்தில் டவுன்லோடு பண்ணி பார்த்தேன் லிங்க் -http://www.alluc.org/movies/watch-pursued-2004-online/367069.html

http://www.hotflick.net/flicks/2001_Tangled/001TGL_Estella_Warren_003.jpg
A

டிஸ்கி - படத்தோட டைட்டிலுக்கு இன்னா மீனிங்க்னா
  1. Follow (someone or something) to catch or attack them.
  2. Seek to form a sexual relationship with (someone) in a persistent way

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 12


Photo: I love my Indian Tradition ♥

share it if u like it :)
1. அட்ரா சக்க என பேர் வைக்கறதுக்குப்பதிலா  கொங்கா மக்கா என ஏன் வைக்கலை? - குட்டி சாகசன் 




முதல்ல கொங்கா மக்கா-ன்னுதான் வெச்சிருந்தேன்,நிறைய பேரு ஏன் அட்ரா சக்க அப்டினு வைக்கலாமே?ன்னு கேட்டாங்க.. அதனால மாத்திட்டேன்.. கோக்கு மாக்கா கேள்வி கேட்டே குழப்புங்கய்யா.. 




2. தினமும் 3 பதிவுகள் போடறீங்களே, உங்களுக்கு சலிக்கவே இல்லையா? -குட்டி சாகசன் 




இந்த கேள்வில ஏதோ உள்குத்து இருக்கு.. படிக்கறவங்களுக்கு சலிப்புன்னு அர்த்தம் வருது.. நல்லா கவனிங்க.. நான் தினமும் காலைல 5 டூ 6  ஜோக்ஸ் & ட்வீட்ஸ் போஸ்ட் போடறேன். மாலையில் ஒரு சினிமா விமர்சனம் போஸ்ட். நடுவே ஏதாவது அரசியல் போஸ்ட்,.. அதனால 3 வெவ்வேற பிரிவில் போடுவதால் படிக்கறவங்களுக்கு போர் அடிக்காதுனு நினைக்கறேன். எனக்கு பதிவு போடுவதில் இதுவரை சலிப்பு வந்ததில்லை. வந்தால் ஏன் போடறேன்?




 3. நீங்ககேட்க வேண்டிய மன்னிப்பு, தெரிவிக்க வேண்டிய வருத்தங்கள் ஏதாவது இன்னும் மிச்சம் மீதி பாக்கி இருக்கா? - சே செந்தில்குமார்




வாரா வாரம் சண்டே அன்னைக்கு சர்ச் போய் பாவ மன்னிப்பு கேட்கறாங்க, கோயில்க்கு வெள்ளிக்கிழமை போய் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு சாமின்னு சொல்றாங்க.. சாமி இருக்கா? இல்லையா?ன்னு முழுசா தெரியாமயே அவங்க கிட்டே மன்னிப்பு கேட்கறப்போ தினமும் நாம பார்த்து பழகின மனிதர்களிடம் மன்னிப்பு கேட்பதால் என்ன தவறு?


 ஜாலியா கலாய்க்கறப்போ சில சமயம் சிலர்  மனம் புண் படும்படி ஆகிடுது.. அவங்க மனசு ஆறுதலுக்கு நம்ம மன்னிப்பு பயன் பட்டால் எத்தனை முறை வேணாலும் கேட்கலாம்.




 4. உங்கள் திரைப்பட விமர்சனக்களில் உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வாசிப்பவர்களை ஏன் நெளிய வைக்க வேண்டும்- J.P Josephine Baba,


நிறைய பேர் கேட்டாச்சு.. சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமா நாயகியின் வர்ணனை இருக்கும். அதை ரசிக்கறீங்க.. ஒவ்வொரு படத்திலும் ஹீரோயினை 4 லைன்ஸ் வர்ணிச்சா தப்பா?நெளிய வைக்காதே. பெண்களும் ரசிக்கும் வண்ணமே என் வர்ணிப்புகளும் ,கலாய்ப்புகளும் இருக்கும். லிமிட் தாண்ட மாட்டேனே? அப்படி இருந்தா சுட்டிக்காட்டுங்கள்.. வரிகள் அகற்றப்படும் 







5. பதிவு எழுத்து பற்றி உங்கள் திட்டங்கள் என்ன? - J.P Josephine Baba,

 1. சினிமா விமர்சனங்களில் பல முறை ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் கணிப்பு தவறி விடுகிறது. இதுவரை 6 படங்களுக்கு மட்டுமே துல்லியமாக மார்க்கை முன் கூட்டியே கணிக்க முடிந்தது,... அதை மாற்ற வேண்டும்.. சமீபத்தைய என் சறுக்கல் சகுனி விமர்சனம்.. பல குறைகள் இருந்தாலும் படம் கம்ர்சியலாக சக்சஸ் தான் என எழுதி இருந்தேன், ஆனால் 90 % விமர்சகர்கள், பொதுமக்கள் பார்வையில் அது கடி ஆகி விட்டது.. இதை , இந்த ராங்க் ஜட்ஜ்மெண்ட்டை தவிர்க்க ஆசை


2.நகரங்களில் உள்ள டாப் டென் ஹோட்டல்கள் பற்றி ஒரு பதிவு போட்டேன். நல்ல வரவேற்பு பெற்றது, அது போல் மக்களுக்கு பயன் உள்ள வகையில் பதிவு போடனும்.. உதாரணமா ஒரு சினிமா விமர்சனம் அந்த கால கட்டத்தில் மட்டுமே படிக்கப்படும், ரசிக்கப்படும்.. ஆனா  எந்த காலத்தில் படிச்சாலும் யூஸ் ஆகற மாதிரி போஸ்ட்ஸ் போடனும்.. உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன








6 . பதிவு எழுதுவதின் நோக்கம் என்ன என்று தெரியலாமா? பதிவு எழுதுவதால் தாங்ககள் அனுபவிக்கும் மன மகிழ்ச்சி என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,


பத்திரிக்கைகளில் ரிஜக்‌ஷன் பண்றது இப்போ அதிகம் ஆகிடுச்சு.. அதனால நம்ம படைப்பை வெளிக்கொணர பிளாக் அதிகம் பயன் படுது.  ஒரு மேகஜின்க்கு படைப்பை அனுப்பிட்டு வருமா? வராதா?  பிரசுரம் ஆகுமா? ஆகாதா? என காத்திட்டு இருக்கறதுக்கு ஆன் த ஸ்பாட் நாமளே எடிட்டரா இருந்து போஸ்ட் போடறது  ஒரு கிக்... மன மகிழ்ச்சி என்னன்னு பார்த்தா வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல வாசகர்கள் ஃபோன் பண்ணி பாராட்டுவதுதான்.. பத்திரிக்கைகளில் வரும் படைப்புகளுக்கு சன்மானம் கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட வாசகர்கள் பாராட்டு அதிக சந்தோஷம் தருது










7. பதிவு எழுதுவதால் தாங்கள் அனுபவிக்கும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?- J.P Josephine Baba,



1.பத்திரிக்கைகள் இல்லாத அல்லது போய்ச்சேராத இலங்கை போன்ற தேசங்களில் கூட வாசகர்கள்  நமக்கு கிடைக்கறாங்க


2. அலெக்சா ரேங்க் நல்ல நிலைல இருந்தா பிற்காலத்தில் விளம்பரம் மூலம் வருமானம் வர வாய்ப்பு உண்டு


3. சினிமா விமர்சனம் போட்டதும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஃபோன் பண்ணி தங்கள் கருத்துகளை தெரிவிக்கறாங்க.. நாம நேரில் பார்க்க முடியாத வி ஐ பி கள் அவங்களே தேடி வந்து பேசறது சந்தோஷம்,., சமீபத்தில் இயக்குநர்  மு களஞ்சியம், வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேசினார்கள், மகிழ்ச்சி!







8. 80 வயது தாத்தா சி.பி செந்தில் எழுத போகும் ஒரு பதிவை இப்போது எழுதி பதிவிட இயலுமா?-
J.P Josephine Baba,



அது எப்படி முடியும்?இனிமே கிடைக்கப்போகும் அனுபவங்கள் என்ன? என எப்படி இப்போவே தெரியும்? வேணா ஒண்ணு செய்யலாம்.. 80 வயதில் எப்படி இருப்பேன் என கற்பனையா ஒரு பதிவு வேணா எழுதலாம்.. 


9.பயண தொடர்கள் எழுத வாய்ப்பு உண்டா?-J.P Josephine Baba,


எழுத  எனக்கும் ஆசை தான்.. ஆனால் அதற்குத்தடையாக இருப்பது என் உடல் நிலை தான்.. எனக்கு பஸ் பயணம் எப்போதும் ஒத்துக்கொள்வதில்லை.. வாமிட் வந்துடும்.. எங்கே போனாலும் ரயில் பயணமே.. முன்னே மாதிரி இல்லை.. 40 நாட்கள் முன்னாலயே  ரிசர்வ் செஞ்சாதான் சீட் கிடைக்குது.. தட்கால் -ல கிடைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆனாலும் இதை எல்லாம் மீறி பயணம் செஞ்சு கட்டுரை எழுத ஆசை தான்.. 








10. அடுத்தவர்கள் உங்களை விமர்சிப்பதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? -J.P Josephine Baba,

 விமர்சனங்கள் என்னைப்பற்றி , என் எழுத்தைப்பற்றி இருந்தால் கவலையே படமாட்டேன்.. ஏன்னா நானே பலரை கலாய்ச்சு இருக்கேன்,.. நண்பர்கள் ஆனாலும் சரி எதிரிகள் ஆனாலும் சரி.. என்னை யார் கலாய்ச்சலும்  அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு அந்தப்பதிவில் கமெண்ட்டும் போடுவேன்..

 ஆனா என்னை விட்டுட்டு சம்பந்தம் இல்லாம என் குடும்பத்தை பற்றி யாராவது எழுதுனா அது என் மனதை புண் படுத்துவதாக இருக்கும்.. அந்த பதிவில் கமெண்ட் போடுவதில்லை./.. பதிலுக்கு பதில் லாவணி பாடுவதில் தேவையற்ற மனக்குழப்பங்கள், கோபம் வந்து நிம்மதியை குலைக்கும் என்பதால் எதிர் பதிவுகளை தவிர்த்து விடுவேன்  





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 




டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

அன்னா ஹசாரே கேரளத்துக்காரரா? புதிய கேனத்தனமான சர்ச்சை

1.கேப்டன் - எங்கெல்லாம் அநியாயம் நடக்குதோ அங்கெல்லாம் நான் வந்துடுவேன் # அதெப்பிடி முடியும் ? கலைஞர் வாக்கிங்க் போறது கோபாலபுரம்



----------------------------------


2. அன்னா ஹசாரே கேரளத்துக்காரரா? கடைசில ஸாரே-ன்னு முடியுதே? # எந்தா ஸாரே?



-----------------------------------------


3. உலகத்துல எத்தனை ஹீரோயின்ஸ் இருந்தாலும் மணிரத்னம் பட ஹீரோயினை  தன் படத்துக்கு ஹீரோயின் ஆக்கிடனும்னு ஷங்கர் நினைப்பாரு # சமந்தா @ ஐ



--------------------------------------

4. நயன்தாரா முடிந்து போன விஷயம்! - பிரபுதேவா!! # கோனார் நோட்ஸ் - மேட்டரை முடிச்சுட்டா கண்டுக்க மாட்டேன்


-------------------------------


5. கவர்ச்சியில் கறாராக இருக்க மாட்டேன்! காஜல் அகர்வால் # உங்க படம்னா ஓப்பனிங்க் ஷாட்டை உஷாரா நோட் பண்றோம், டாப் ஆங்கிள்



---------------------------------


6. சுரங்க மோசடி விசாரணை: எடியூரப்பா உட்பட நான்கு பேருக்கு முன்ஜாமின் # சுரங்கத்திலும் சுரண்டியாச்சா?


-----------------------------



7. ஆஃபீஸ்ல வெள்ளிக்கிழமை ஆனா எல்லா லேடீஸும் புடவை கட்டி வர்றாங்க, ஆனா ஆண்கள் யாரும் ஏன் வேட்டி கட்டி வர்றதில்லை?



------------------------------

8. மஹாராஷ்ட்ராவில் இருக்கற மந்த்ராலயா = மந்த்ராவுக்கு கட்டுன ஆலயமா?




------------------------

9.தமிழன் தாழவும் மாட்டான்; தாழ்த்தவும் மாட்டான்': கருணாநிதி # ஈழத்தமிழனை வாழவும் விட மாட்டீங்க, தமிழகத்தமிழனை சாகவும் விட மாட்டீங்க



--------------------------------------

10. கலைஞ்சர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன் - அன்பழகன் # அவரை நடு ரோட்டுக்கு கொண்டு வர ஏதோ திட்டம் தீட்டறாரோ?



---------------------------------




11. டாம் & ஜெர்ரி போல் டெயிலி வீட்டில் அடிச்சுக்கிட்டு இருக்கும்  தம்பதிகளே! இன்று அவர்கள் 72வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று மட்டும்...


------------------------


12. சிறை செல்லும் தொண்டர்களுக்கே இனி பதவி: ஸ்டாலின் பேச்சு # ஆல்ரெடி பதவில இருக்கறவங்க எல்லாம் ஜெயில் ஜெயபால்கள்தானா? அடங்கோ!


-------------------------


13. ராஜ்யசபாவில் சத்தமின்றி சாதிப்பேன்: சச்சின் உறுதி # சைலண்ட்டா தூங்கிடுங்க


-----------------------------


14. ஃபாரீன்காரன் மதுரை வந்தா மீனாட்சி கோயில் இங்கே இருக்கு,  சரவணன் கோயில் எங்கே?ன்னு கேட்கப்போறான்



---------------------------------


15. மதுரையில் உலக திரைப்பட விழா  #  மதுரை ஆதீனம்-ஜிஞ்சிதா நடிச்ச குறும்படம் திரை இடப்படுமா?




--------------------------------



16.அனுஷ்கா,பிரணீதா,கிரண்,ஆண்ட்ரியா,ரோஜா என பஞ்ச பூத தேகங்களும் இருப்பதால் தலைக்கு ரூ 20 என்றாலும் ரூ 100க்கு ஒர்த் தான் # சகுனி



---------------------------------


17. நான் பார்த்து பயங்கரமாய் பொறாமைப்படுவர்களில் பலர்  பல மனைவிகளை அவர்கள் கணவர்க்குத்தெர்யாமல் வைத்திருப்போரே ! # எ கீ



---------------------------------


18.  தன் மகனை "முட்டாப்பய மகனே" என்று திட்டும் தந்தை முட்டாப்பொண்ணு மவனே என திட்ட தைரியம் இல்லாதவரே!



---------------------------


19. நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? -சங்மா#  விதண்டாவாதம் பண்ண ஊர்ல தான் ஏகப்பட்ட தண்டங்கள் இருக்கே, நீங்களுமா?



---------------------


20. சகலகலா வல்லவன் ரீமேக்கில் சூர்யா.! # கலா மாஸ்டர் நடிச்சுடுவாரோ?மரண பயத்தில் சூர்யா ரசிகர்கள்



------------------------------------