Thursday, June 14, 2012

SHANGHAI -பொலிட்டிகல் க்ரைம் த்ரில்லர் - பாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0tuuoJCEi45pwrrgif75vBNK5OvIk5qqFL_F7Ot5G7XdnTI0EQiMA0bt42cxxJhM_7k4u7dzVOgXZYu7wfeWpbmfmKHza62OkuBk7Igswedfq4XfXq7wFOZf_hChnRj8dwLEkW_fIHFo/s1600/Bollywood+Movie+Shanghai+Desktop+Wallpaper.jpg
ஒரு வித்தியாசமான க்ரைம் சப்ஜெக்ட் தான். ஏ செண்ட்டர் ரசிகர்களை மட்டுமே கவரும் என்றாலும்  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கவேண்டிய ஒரு படம் தான் இது.. சாலை விபத்து என்னும் போர்வையில் ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்படறார்.. அது பற்றிய போலீஸ் விசாரணைகள் தான் படம்.. ஹை கிளாஸ் ஆடியன்ஸ்க்கு புரிஞ்சா போதும்னு டைரக்டர் நினச்சதுதான் திரைக்கதையின் ஒரே மைனஸ்.. என்னால முடிஞ்சவரைக்கும் எளிமைப்படுத்தி கதை சொல்றேன்


ஐ ஏ எஸ் ஆஃபீசர் கிருஷ்ணன் ஐபிபி (IBP)யோட வைஸ் சேர்மேன் ((India Bane Pardes/ International Business Park).. பாரத் நகர்ங்கற இடத்துல ஒரு பிஸ்னெஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நடக்கப்போகுதுன்னு அங்கே வர்றார்.. நாட்டின் முதல்வர் மற்றும் கட்சி ஆள்ங்க கிட்டே நல்ல பேரும், மதிப்பும் இருக்கறதால அவருக்கு பிரமோஷன் வரப்போற நேரம்.. 

ஹீரோயின் ஷாலினி ((Kalki Koechlin) ஃபாரீன்ல போய் படிச்சுட்டு வந்த பொண்ணு.. இவர் அப்பா ஒரு ஆர்மி ஆஃபீசர். IBP  நிறுவனம் தான் நடத்தப்போகும் பிராஜக்ட்டுக்காக அந்த ஏரியா மக்களை அப்புறப்படுத்தப் பாக்குது.. அதை ஹீரோயின் எதிர்க்கிறார்,, இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட .. ஹீரோயினோட முன்னாள் ஆசிரியரும், இந்த ஐ பி பி நிறுவனத்துக்கான எதிர்க்குழு தலைவருமான டாக்டர் அஹமத்(Dr. Ahemad )எதிர்ப்புப்பிரச்சாரத்துக்காக பாரத் நகர் வர்றாரு. 

 நம்ம ஊர்ல எப்படி அன்னா ஹசாரே ஊழலுக்கெதிரா தனி நபரா போராடுனாரோ, மக்கள் அபிமானத்தை பெற்றாரோ அந்த மாதிரி இவர் தன் பேச்சால் மக்களை எச்சரிக்கைப்படுத்தறார்.. அது பலருக்குப்பிடிக்கலை.. பல மிரட்டல்கள் வருது./. அதை அவர் பொருட்படுத்தலை.. போலீஸ் உதவியுடன், பல அரசியல் தலைவர்கள் சப்போர்ட்டோட அவர் தனது எதிர்ப்புப்பிரச்சாரத்தை பேசி முடிக்கறார்.. 



http://g.ahan.in/hindi/Shanghai%20Movie%20First%20Look%20Launch/Shanghai%20Movie%20First%20Look%20Launch%20(23).jpg

 பேசி முடிச்சதும் அவர் ஒரு டாட்டா ஏஸ் மாதிரி ஒரு டெம்ப்போ வேனால் நட்ட நடு ரோட்ல மக்கள் பார்க்க பார்க்க அடிச்சுத்தூக்கி வீசப்படுறார்,, டெம்போ டிரைவர் போலீஸால் பிடிக்கபட்டு விசாரனைக்கு உட்படுத்தப்படறார் .. அப்போதான் ஹீரோ அறிமுகம். இவர் ஒரு வீடியோ கிராஃபர். கம் போர்னோ கிராஃபர். அவரும் இந்த கேஸ் துப்பறிதலில் ஹீரோயினுக்கு உதவியா இருக்கார்.. ஹீரோவோட வேலையே ஹீரோயினுக்கு உதவியா இருக்கறதுதானே?


ஐ ஏ எஸ் ஆஃபீசர் கிருஷ்ணன் இந்த கொலைக்கேஸ் கண்டுபிடிக்கும் குழுக்கு தலைவர்.. யார் அவரை கொலை செஞ்சாங்க? அந்த நகர் மக்கள் என்ன ஆனாங்க? ஹீரோயின் என்ன ஆனார்?  என்பதெல்லாம் திரையில் காண்க..


படத்தோட ஓப்பங்க் சீன்லயே Prosenjit Chatterjee க்கும் ,ஹீரோயின் ((Kalki Koechlin)க்கும் ஒரு செம டீப் லிப் டூ லிப் சீன் இருக்கு. கமலுக்கே சவால் விடும் சீன் அது.. யோவ்.. ஒரு பெரிய மனிஷன் பண்ற வேலையா இது?ன்னெல்லாம் கேட்கப்படாது.. ஏன்னா இந்தக்காலத்துல பெரிய மனுஷனுங்க தான் சின்னத்தனமான வேலை எல்லாம் செய்யறாங்க.


 ஹீரோயின் பற்றி ஒரு சின்ன விமர்சனம்.. பெண்ணியவாதிகள்.மாதர்சங்க மாதாக்கள் என்னை மன்னிக்க .. தமிழனுக்கு 1% கூட பிடிக்காத முக வெட்டு, ஹேர் ஸ்டைல். அவரோட உதடு.. கொங்கு மண்டல பாஷைல சொன்னா ஒப்பிட்டு வாய்.. அது என்ன புது பிட்டு?ன்னு கேட்கறவங்களுக்கு ஒப்புட்டு என்பதே பேச்சு வழக்கில் ஒப்பிட்டு ஆனது .. அது சப்பாத்தி போல் சைஸில் இருக்கும், இனிப்பானது.. 


அன்னா ஹசாரே மாதிரி விழிப்புணர்வு ஊட்டும் தலைவரா வந்து கிஸ் அடிச்சு கிளுகிளுப்புணர்வு ஊட்டிய  சட்டர்ஜி படத்துல மொத்தமே 20 நிமிஷம் தான் வர்றார்.. ஆனாலும் மொத்தக்கதையும் இவரை சுத்தித்தான்


வீடியோகிராஃபரா வர்ற ஹீரோ (Emraan Hashmi) அக்மார்க் தமிழ் ஹீரோ மாதிரி.. அலட்சியம், தெனாவெட்டு, பெண்கள் என்றால் பம்முதல் டைம் கிடைக்கும்போது ஆக்‌ஷன். குறை சொல்ல முடியாத நடிப்பு. 


ஐ ஏ எஸ் ஆஃபீசரா வர்றவர் டிரஸ்சிங்க் சென்ஸ், பாடி லேங்குவேஜ் கன கச்சிதம்.. செம நடிப்பு. படத்துல நடிப்பதற்கு முன் நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருப்பார் போல 


http://www.washingtonbanglaradio.com/images05/Kalki-Koechlin.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. Vassilis Vassilikos -ன் இஜட் (Z) என்னும் நாவல் தான் படத்தின் திரைக்கதை என்பதை டைட்டிலிலேயே கவுரமாக ஒத்துக்கொண்டது.. ஏன்னா இப்போ வர்ற படங்கள் 70% தழுவலா இருந்தாலும் யாரும் அதை ஒத்துக்கறதில்லை


2. சாகப்போற கேரக்டருடன்  ஹீரோயின் கில்மா, அப்புறம் ஒரு ஹீரோ அறிமுகம் தமிழுக்கு புதுசு..  ஐ மீன் தமிழனுக்கு புதுசு. 


3. திரைக்கதை போர் அடிக்காமல் விறுவிறுப்பாக செல்வது.. ஒரு கொலைக்கேஸை , அதன் விசாரணையை  நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்தது ( மலையாளத்தில் மம்முட்டி நடித்த சி பி ஐ டைரிக்குறிப்பு போல் )


4. படத்தில் வரும் பல கேரக்டர்களுக்கான ஆடை வடிவமைப்பு கன கச்சிதம். அப்புரம் பின்னணி இசை நச்.. 

5. ஹீரோவுடன் ஹீரோயின் டூயட் இன்ன பிற அபத்தங்கள் ஏதும் செய்யாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வது.. 





Kalki Koechlin in Dev D (12431) size:1280x1024



 இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. படத்துல வர்ற அந்த அன்னா ஹசாரே பார்ட்டி ஹீரோயின் கூட கில்மா பண்ணாரா? இல்லையா?ங்கறதை  தெளிவா  சொல்லலை.. சென்சார் அனுமதி அளிச்ச வரை காட்டி இருக்கலாம்.. அல்லது சிம்பாலிக் ஷாட்டாவது வெச்சிருக்கலாம்.. ஏன்னா தமிழன் காலம் காலமா கில்மா நடந்துச்சா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்க 1 கேமரா புலி மான் வேட்டையாடும் படம், 2ஃபேன் ஓடும்போது அதுல சேலை மாட்டுவது, 3.ஏதோ ஒரு பூவில் வண்டு மகரந்தம் உறிஞ்சுவது போல் சிம்பாலிக் ஷாட் பார்த்து பழக்கம் ஆகிடுச்சு.. சும்மா லிப் கிஸ் பண்ணினார்னு மட்டும் தான் காட்டி இருக்கீங்க 


2.  பொதுவா புகழ் பெற்ற தலைவர்களை கொலை பண்ண திட்டம் போடுறவங்க லாங்க் ஷாட்ல கன் மூலமா சுடுவாங்க அல்லது பாம் வெச்சு போட்டுத்தள்ளுவாங்க.. இப்படி கேனத்தனமா  பப்ளிக் பார்க்கறப்ப 400 ரூபா வாடகைக்கு வந்த டெம்போ வேன்ல 45 கிமீ வேகம் மட்டுமே போகக்கூடிய வண்டில வந்து ஆக்சிடெண்ட் பண்ணுவாங்களா?


3. ஹீரோ ஒரு போர்னோகிராஃபர்.. அவர் தன் ரூம்ல கில்மா படம் ஷூட் பண்ணிட்டு இருக்கார்.. அப்போ ஹீரோயின் கதவைத்தட்டறாங்க..கில்மாபடத்துல நடிச்சுட்டு இருக்கற ஹீரோ & ஹீரோயின் டிரஸ் எல்லாம் எடுத்து போடறதுக்குள்ள ஹீரோ கதவைத்திறக்கறார். ஹீரோயின் அவங்களை பார்க்கறாங்க- இந்த சீன் படத்துல எதுக்கு? வழக்கமா ஹீரோயினுக்கு மூடு ஏத்த ஹீரோ இந்த மாதிரி ட்ரிக்ஸ் பண்ணுவாரு.. ஆனா இந்தப்படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன்ல தான் போகுது... எதுக்கு அந்த சீன்? ஆடியன்ஸை உசுப்பேத்தவா? 


4. விபத்து நடக்கும் ஷாட் ஒரு டைம் அல்லது 2 டைம் காட்டுனா ஓக்கே.. எதுக்காக படம் பூரா அடிக்கடி அது ரிப்பீட் ஆகுது? 



சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் கண்ணியமான காட்சி அமைப்புகள் தான்.. கொஞ்சம் பொறுமை வேண்டும்.. படத்தில் வசன ஆதிக்கம் அதிகம்.. ஹிந்தி தெரியாமல் படம் பார்ப்பவர்கள் சலிக்கும் அளவு வசனம் இருந்தாலும் காட்சி அமைப்புகள் காப்பாற்றிடும்.. ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்..  


Shanghai Review (Shanghai Movie Stills)

மனிதன் காலடித்தடம் பதிக்காத 10 இடங்கள்!! – புகைப்படங்கள்


மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)


அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா

2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.

3. Amazon Rain-forest – அமேசான் மழைக்காடுகள்!

4. Antarctica – அண்டார்டிகா

5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!

6. Deserts – பாலைவனங்கள்!

7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்

8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து

9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்

10. Central Range, New Guinea – புது குனியா மலைத்தொடர்கள்
நன்றி - Engr.Sulthan

மனைவி கணவனுக்குத்தரும் ரெண்டே சாய்ஸ் என்னென்ன?

1.ஒரே கவிதையை 10 ஃபிகர்களுக்கு ஃபார்வர்டு பண்ணுவது தவறல்ல,டூ அட்ரஸில் 10 பெயரையும் வரிசையா டைப் பண்ணி அனுப்புவதே தவறு#க்ரேஸி பாய்ஸ்

----------------------------

 2.காதலிக்கு முதல் பரிசாக தர மோதிரமா?கொலுசா?என்ற குழப்பத்தில் அதை விட பெஸ்ட் சாய்ஸான முத்தத்தை மொத்தமாக மறக்கிறான் காதலன்#லவ்வாலஜி

 -------------------------------------------------


 3. ஏன் இப்படி? என கேட்கும் உரிமையும் எனக்கு நீ தரவில்லை.
இப்படி ஏன்? என கோபிக்கும் துணிவும் எனக்கு இல்லை
எதனால இப்படி? என கேட்டு கெஞ்சுவதற்கு மட்டுமே எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது


------------------------------


4.ஜடை பின்னிக்கொண்டால் அடிக்கடி கூந்தலை ஒதுக்கும் ஸ்டைலை செய்ய முடியாது என்பதால்தான் ஃபிகர்கள் கூந்தலை அலைபாய விடுகிறார்கள்#லூஸ் ஹேர் லவ்லி


-----------------------


5. ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் கூட ஒரு வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர்தான்,லோஹிப் சேலையா? இல்லையா? என்ற மர்மம் மாலை வரை நீடிக்கிறது#ஆஃபீஸாலஜி


--------------------------


Thanks : KR Vijayan


6. கன்னிப்பெண்கள் காலை நேரத்தில் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள்,கல்யாணம் ஆன பெண்கள் மாலை யில் மினு மினுப்புடன் மிளிர்கிறார்கள்#கில்மாலஜி


------------------------


7. ஹைக்ளாஸ் ஃபிகர்கள் அனைவரும் ஹைஹீல்ஸ் செப்பல்வாலாக்களே,ஆனால் ஹைஹீல்ஸ்ஸர்ஸ் அனைவரும் ஹை க்ளாஸ் ஃபிகர்ஸ் அல்ல#என்ன ஒரு கேவலமான கண்டுபிடிப்பு


----------------------------------


8. காதலிக்கும்போது சில பெண்கள் காதலன் தாடியுடன் இருப்பதை விரும்பலாம்,ஆனால் கல்யாணமான பெண்கள் பெரும்பாலும் கணவன் தாடியுடன் இருப்பதை நாட் லைக்


--------------------------------


9. சைக்கிளோட்டும் டீன்ஏஜ் ஃபிகர்களை கூடுதல் கவனிப்புடன் பார்க்கும் ஆண்களை தாம் சைக்கிள் ஓட்டும் அழகைத்தான் ரசிக்கிறார்கள் என மிஸ்கால்குலேட்


------------------------------


10. சேலை,ஜாக்கெட் இரண்டும் ஒரேகலரில்அணியும் பெண்களை விட சேலை பார்டர் கலரில் ஜாக்கெட் அணியும் பெண்கள் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள்#டிரஸாலஜி


---------------------------




11.காதலுக்கு கண் இல்லை என்று சொல்லப்பட்டாலும் காதலியின் கண் வலையில் சிக்கிய காதலர்கள் வலையை விட்டு வெளியே வர விரும்புவதில்லை#லவ்வாலஜி

---------------------------

12. தொடர்ந்து 3 மணி நேரம் கடலை போட நேர்ந்தாலும் 5 நிமிடம் கூட கமர்ஷியல் பிரேக் எடுத்துக்கொள்வதில்லை எந்த காதலனும்#லவ்வாலஜி

-----------------------

13. ஸ்கை ப்ளூ + பிளாக் கலர் காம்பினேஷன் தான் ஆண், பெண் இரு பாலருக்குமான சூப்பர் ஹிட் கலர் கோட்#டிரஸ்ஸாலஜி

--------------------------------

14.தனது டீன் ஏஜ் கதைகளை பெருமை அடிக்கும் ஆண்களுக்கு அவர் தம்  மனைவியின் டீன் ஏஜ் கதைகளை கேட்கும் ஆர்வமோ, மனோபலமோ இருப்பதாக தெரியவில்லை

---------------------------

15.. பெண் பார்க்கும் படலத்தில் அனைவரின் பார்வையும் மாப்ளை மேல் இருப்பதால் பெண்ணை சரி வர பார்க்க முடிவதில்லை # குத்து மதிப்பு குருசாமி


---------------------------



16.  அதிகாலையில் வாக்கிங்க் போறப்ப சில நாய்களின் தொந்தரவு ஜாஸ்தி ஆகுது - இதையே லேடீஸ் சொன்னா நம்மளத்தான் சொல்றாங்களோன்னு நினைக்கத்தோணுது.

-------------------------


17. சட்டசபைல கமுக்கமா பிட் படம் பார்த்ததால் பிஜேபி தோல்வி # நீதி - இனி பப்"லீக்"கா லேப்டாப்லயே பாருங்க :)



--------------------------------

18. உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தால் நீ நன்றி உள்ளவன், ஒப்புட்டு இட்டவரை நீ விலக்கினால் இளமையிலேயே சுகர் உள்ளவன்



---------------------------


19. மனைவி கணவனுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே  தருகிறார் 1. என் கிட்டே உண்மையை மட்டும் சொல் 2. பொய்யே சொல்லாதே


---------------------------

20. போராட்ட குணம் பெண்களுக்கும்,சமையல் அறையில் மாவாட்டும் குணம் ஆண்களுக்கும்  இயல்பாகவே அமைந்துவிடுகிறது



---------------------------------------------------------------



Wednesday, June 13, 2012

DHADAA- காஜல் அகர்வால் -ன் தெலுங்கு சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2011/11/DhadaSongsDownload1-1.jpg

உதயம் தெலுங்கு டப்பிங்க் ரிலீஸ் ஆனப்போ நாகார்ஜூன்க்கு சிரிக்கவே தெரியாதா? எப்பவும் முகத்தை உர்னு வெச்சுட்டு இருக்காரே.. அப்படின்னு ஒரு டாக்..(TALK)  அவர் நடிச்ச மணிரத்னம் படமான இதயத்தை திருடாதே ( தெலுங்கில் கீதாஞ்சலி) படத்திலும் அதே விமர்சனம் தான்.. இப்போ அவர் பையன் நாக சைதன்யா ஹீரோ ஆகிட்டார்.. அப்பாவுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கார்.. தெலுங்குல இவர் சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரோன்னு பயமா இருக்கு ..

வில்லன் ஒரு லேடீஸ் புரோக்கர்.. அதாவது இங்கே உள்நாட்ல இருக்கற பெண்களை கடத்தி வெளிநாட்டுக்கு பெண்களை விற்கற ஆள்.. ஒரு பெண்ணுக்கு ஒரு கோடி.. கையில் ஒரு லேடி, கிவ் மீ எ  கோடி , மீ எ கேடி.. இதுதான் வில்லனோட தாரக மந்திரம்.. இவரோட கேவலமான பிஸ்னெஸ்ல ஒரு சறுக்கல்.. தெரிஞ்சோ தெரியாமயோ ஹீரோ வில்லனோட பிஸ்னெஸ்ல ஒரு டைம் கிராஸ் ஆகி அவருக்கு ஒரு லாஸை ஏற்படுத்திடறாரு..

வில்லன் ஹீரோவைப்போட்டுத்தள்ள ஐவர் குழுவை அமைக்கறாரு.. ஹீரோ வெட்டாஃபீஸ்.. ஹீரோயின் பயங்கர செல்வச்சீமாட்டி.. ஹீரோயின்க்கு அவங்கப்பா ஒரு ஃபாரீன் மாப்பிள்ளையை நிச்சயம் பண்றாரு.. அந்த மாப்பிள்லை ஆள் படா ஷோக்காத்தான் இருக்காரு.. ஆனா பாருங்க, ஹீரோயினுக்கு  அவனை பிடிக்கலை..

அவருக்கு தெரு பொறுக்கும் ஹீரோ தான் பிடிச்சிருக்கு.. ( இந்த மாதிரி கேவலமான கதைகளை படிச்சுட்டு, படம் பார்த்துட்டு யாரும் இதுவரை பார்த்துட்டு இருக்கற நல்ல வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊர் சுத்த ஆசைப்பட்டதில்லை, நல்ல வேளை )2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவர் வில்லனோட கேங்க்ல தான் இருக்கார் அப்டிங்கறது இடைவேளை ட்விஸ்ட்ல தான் டைரக்டர்க்கு தெரியுது.. ஆனா பாருங்க படம் போட்ட 20 வது நிமிஷமே நமக்கு புரிஞ்சுடுது..



வில்லன் ஹீரோவை கொலை செஞ்சானா? ஹீரோ ஹீரொயினை மேரேஜ் செஞ்சாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை..

ஹீரோ நாக சைதன்யா ஆள் தலையே சீவாம , தாடியோட முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாம நடிச்சிருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.. ஆனா தெலுங்குல ஹிட் அடிச்சுடுவார்னு தோணுது..

ஹீரோயின் காஜல் அகர்வால்.. சமீபத்துல இவ்ளவ் கேவலமா ஒரு ஹீரோயினை வேஸ்ட் செஞ்ச டைரக்டரை பார்க்கலை.. ஹீரோயின் ஹேர் ஸ்டைல் மகா மட்டம்..  பாப் கட்டிங்க்காம்.. சகிக்கலை.. மாவீரன் படத்துல அவர் என்னா கலக்கு கலக்குனாரு? அதுவும் ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட் கற்பனை வறட்சி.. இருட்டுக்கடை அல்வா அரைக்கிலோவை கைல கொடுத்தும் அதை டேஸ்ட் பண்ணாம வேடிக்கை பார்த்தவன் கதையா இயக்குநர் வேஸ்ட் பண்ணது வன்மையா கண்டிக்கத்தக்கது..

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் தான் ஹீரோவுக்கு அண்ணன்.. ஆள் செம பர்சனாலிட்டி.. அவர் அருகே நிற்கும்போது ஹீரோ படு கேவலமாக இருக்கார்.. தமிழனுக்கு பெருமை..



அவருக்கு ஜோடி சமீக்‌ஷா.. வந்தவரை ஓக்கே.. ஆனா அவருக்கு திறமை காட்ட சந்தர்ப்பம் இல்லை.. சோ சேடு..


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNWjJLiWCCEpksoZlRKp9RuDmKyJ5LjMwI2ygdcSDBb5RnyMf4WUdQeO79bbxKYyIjIF5wfEGAxA-NQe_DWoorboAYnsT13X11RnNcovefRwOPJ0bf-3Fze7NGgJqfmfIZuPJpIUkHQ21Y/s1600/49c88c86480f4a1c83e9aa6ce8ca6838.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பூவிழி வாசலிலே படத்துல வர்ற ரகுவரன் செஞ்ச ஒரு கால் ஊனம் உற்ற கேரக்டரை நைஸா சுட்டு இந்தப்பட வில்லன் கேரக்டர் ஆக்குனது..

2. படத்தை ஆந்திராவில் சாதாரண இடத்துல எடுக்க வேண்டிய ஷூட்டிங்கை படம் கிராண்டா வரனும்னு தயாரிப்பாளரை பிரெயின் வாஸ் பண்ணி உலகம் பூரா சுற்றி பல லொக்கேஷன்ஸை ஓ சில பார்த்துக்கிட்டது

3. ஹீரோ, ஸ்ரீகாந்த், வில்லன் , சமீக்‌ஷா இவங்க 4 பேருக்குமான ஆடை வடிவமைப்பு அருமை... செம டீசண்ட்..

4. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் போனாலும் பிரம்மானந்தம் காமெடியை சாமார்த்தியமா புகுத்தியது


5. பாடல் காட்சிகளில் காட்டிய பிரம்மாண்டம்.. தொடவா? தொடவா? உன் நெஞ்சை பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகுக்கவிதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGIQuODSJDOWRJD5FGsqZFtbQ7vqRu1CqqpmwiWCSuqWyLmQsJkGSNFYHDg4GxxAPrw4hN4hBxAWhUhV44FXII9LUdMKZcUNA9ljjEU5uUtp2qjJStNUEI2Yhh6yeOuSEo83A5AqNlj04/s1600/Kajal+Agarwal+in+Saree1.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. வில்லன் ஒரு அரைக்கேனமா? அடிக்கடி யார் கிட்டேயாவது தன் கால் எப்படி ஊனம் ஆச்சு?ன்னு ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு விதமா சொல்றது மகா எரிச்சல்..


2. மேரேஜ் ஆகாத ஒரு பொண்ணு நிச்சயம் செய்யப்போற மாப்பிள்ளையுடனான முதல் சந்திப்பில் அப்படித்தான் லோ கட், லோ ஹிப் டிரஸ்ல வருமா? ஃபேமிலி கேர்ள் மாதிரியே ஃபீல் வர்லை.. பக்கா அயிட்டம் மாதிரி இருக்கு..

3. ஹீரோயினுக்கு பேரண்ட்ஸ் பார்த்த மாப்ளைக்கு எந்த குறையும்  இல்லை,ஆளும் பர்சனாலிட்டிதான், அவர் வில்லனும் அல்ல (க்ளைமாக்ஸ்ல வில்லனா வலியனா காட்டறது தவிர)அப்புறம் ஏன் அவரை ஹீரோயினுக்கு பிடிக்கலை?

4. ஹீரோ என்னதான் பண்றார்? பூவாவுக்கு என்ன பண்றார்? வேலைக்கும் போறதே இல்லை.. எப்போ பாரு ஹீரோயின் பின்னாலயே சுத்திட்டு இருக்கார்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DPWiGleIOSM4tf2UlAqFpCKYzopJ-vhANIYWlyh-TasU7cb1-1BfboBFIHTljjlMlfHkjb_XF3WbDr34EkZetaQuEJDpnsk1zGNGI4eOLvFA9KzNrE0oIevKxqUY4HtH2dxpY8ynVuur/s1600/kajalagarwal-00118.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. கோபம் உன் வீக்னஸ்.. எனக்கு வீகன்ஸ் ஆகாது

2. வெளிநாடு போகும் வேலை வேணாம்ணே... ஜாப்பை ரிசைன் பண்ணிடுங்க..

அவங்க விடமாட்டாங்க

அப்போ ஏதாவது தப்பு பண்ணுங்க.. அவங்களே தூக்கிடுவாங்க

3. பிரம்மானந்தம் - சிட்டிங்க், சீட்டிங்க்,கிஸ்ஸிங்க்.... இதுக்கெல்லாம் நீ ஓக்கே சொன்னா நீ தான் என் செக்ரட்டரி..

உங்களுக்கு வயசான மாதிரி தெரியுதே?

பார்க்கத்தான் அப்படித்தெரியும்.. ஆனா எனக்கு 25 வயசு தான் ஆகுது

4. அட, இது அழகான பொண்ணுதான், உங்க ஒயிஃபா?

யோவ்,ஒயிஃப் இந்த மாதிரி டிரெஸ் பண்ணா குடும்பம்  உருப்படுமா?

5. எதுக்கு இங்கேயே வேடிக்கை பார்த்துட்டு இருக்கே?நீ ஒண்ணு பண்ணு, ஒரு சேர் எடுத்து எங்க எதிர்ல போட்டுக்க வேடிக்கை பாரு.. ரொம்ப ஈசியா இருக்கும்.. லைவ் ஷோ

6,இவ ஏன் இவ்ளவ் வேகமா கார்ல  போறா? சாகடிக்கவா? சாகவா?

7. ஆஹா.. பியூட்டிஃபுல்.. இதுக்கே பார்ட்டி வைக்கறேன்..

 ரொம்ப தாங்க்ஸ்டா..

 ஆனா பில் பே பண்றது நீதான்..

ம்க்கும்

8. டியர்.. உனக்கு 2 ஆப்ஷன்ஸ் தர்றேன்..


1. எனக்கு போர் அடிக்கற வரை நீ என் கூட இருக்கனும்


2. உனக்கு போர் அடிக்கற வரை நான் உன் கூட இருக்கனும்

9. ஸாரி.. நான் கிளம்பறேன், என்னைக்காணோம்னு தேடுவாங்க..

அப்படி தேடற ஆளுங்களோ, உன் மேல அக்கறை உள்ள ஆளுங்களோ இருந்தா நீ இங்கே வந்திருக்க மாட்டே..

10அவன் டெக்னிக்கல் ஃபைட்டர், நான் எமோஷனல் ஃபைட்டர்,அவன் ஃபைட் பண்றது என்னை தோற்கடிக்க, நான் ஃபைட் பண்றது அவனை ஜெயிக்க.. அவன் ஃபைட் போடறது பணத்துக்காக , நான் ஃபைட் பண்றது உனக்காக



11. அவ பேரு தெரியும், அட்ரஸ் இனிதான் தெரிஞ்சுக்கனும்..

 மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சா?

12. அவ கிட்டே லவ்வை எப்படி சொல்றதுன்னு தயக்கமா, பயமா இருக்கு.

 அவளோட பிரச்சனை என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டு அவ கேட்காமலேயே அதை நீ சால்வ் பண்ணு.. அப்புறம் உன் லவ்வை சொல்லத்தேவையே இருக்காது.. அவளே தெரிஞ்சுக்குவா..

13. ஒவ்வொரு நாளும் அவனோட உடல் பார்ட்ஸ் ஒவ்வொண்ணா வேலை செய்யாம போனா அவன் எப்போ சாவான்? அவன் சாவு அவ்ளவ் குரூரமா இருக்கனும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE_7KQrhDKQnzK1h35crj9I2YdyURy2IuGETKVfVrFcSP4vKam4qCsUAllGbjzo7z5bpUm7ad70a144IFIMb8OmrQ-LO-zuhPB1nGEtCLP_p2yHVw1Rp329R_pqmHJcDQa9YdbhiG4uzG9/s1600/kajalagarwal-00053.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 (தெலுங்குப்படத்துக்கு மார்க் போடமாட்டாங்க, சும்மா ஒரு ஒப்பீட்டுக்காக, தர நிர்ணயத்துக்காக )

எதிர்பார்க்கும்  குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்கத்தேவை இல்லை

ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்.. ஸ்டில்ஸ் எல்லாம் காஜலின் ஃபேஸ் புக்கில் இருந்து எடுக்கப்பட்டவை.. பட ஸ்டில்ஸ் எதுவும் சகிக்கலை



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYcjcWfdCR_KJTWQOPXERsb3R3gIUPK8dVUsSUrLeltjp0gCgkgsstZZqLD5DmN_r3IBE3B2bZ1VoMbaF8kBWnzJkd4en8d_ZtVEcTUNqQPXs0F5v1taanrURezIdB0cpoMt-7L8GmKR8/s1600/2.jpg

லீனா மணிமேகலையின் சதிராட்டமும்,காலச்சுவட்டின் கரகாட்டமும்


 லீனா மணிமேகலையைப்பற்றி அறிமுகம் தேவை இல்லை.. அவர் ஒரு பிரபலமான கவிதாயினி, பெண்ணியவாதி, குறும்பட இயக்குநர்.. அவர் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.. அது பற்றி காலச்சுவடு இலக்கிய இதழ் எழுதிய கட்டுரை







டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
1907இல் சாக்சி - காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா - கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்மையாக எதிர்க்கப்படுகின்றன.


டாடா போன்ற ஒரு கார்ப்போரேட் நிறுவனம் இவ்வாறு எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, எதிர்ப்பின் காரணங்களை, மக்கள் பிரச்சினைகளை, அவர்கள் வாழ்வாதாரங்கள், வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதைக் கருதுவதில்லை. மாறாகத் தனது பிம்பம் போராட்டங்களால் சிதைக்கப்படுவதைப் பற்றிக் கவலை கொள்கிறது. தேசத்திற்குச் சேவைசெய்யும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, உயரிய மதிப்பீடுகளைப் பின்பற்றும் நிறுவனம் டாடா என்ற காலங்காலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் மாசுபடுவதைத் தவிர்க்க விரும்புகிறது. இதற்குச் சிறந்த வழிமுறை விளம்பரப் படங்களைத் தயாரிப்பது. இதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. 


ஒன்று, நடுத்தர வர்க்கத்திடம் டாடா நிறுவனம் பற்றிய உன்னதக் கருத்தாக்கத்தைக் கட்டமைப்பது. இரண்டு, விளம்பரங்கள் வழி ஊடகங்களுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து போராட்டங்கள் செய்தியாகாமல் தடுப்பது. விளம்பரம் கையூட்டாக மாறும் சாகசம். மேற்படி ஆதிவாசியின் போராட்டங்களுக்கு எதிர்வினையாகப் பல விளம்பரங்களை டாடா நிறுவனம் தயாரிக்க முடிவுசெய்து அப்பணியை ஒகில்வி & மாத்தர் என்ற 120 நாடுகளில் அலுவலகங்களுடைய பன்னாட்டு விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் தயாரித்த விளம்பரங்களில் ஒன்றின் தலைப்பு ‘தேஜஸ்வினி.’ ஆதிவாசிப் பெண்களின் முன்னேற்றத்திற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு ‘தேஜஸ்வினி’. பிரகாசம் அல்லது ஒளிமயம் என்று பொருள்.



2006 ஜனவரி 2இல் கலிங்க நகரில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகள் 14 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். டாடாவின் கூலிப்படையும் போராடிய ஆதிவாசிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நான்கு உடல்களின் கைகள் மணிகட்டிற்கு மேல் வெட்டப்பட்டு இருந்தன. இந்தியாவின் கார்ப்பொரேட் - அதிகார வர்க்க - ஊடக ஊடாடல் பற்றிப் பல புரிதல்களை நமக்குத் தந்த அரிய ஆவணம் நீரா ராடியா ஒலிப்பதிவுகள். இதில் பத்திரிகையாளர் வீர் சிங்வியிடம் டாடாவின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகப் பணிபுரிந்த ராடியா, கலிங்க நகர் ‘மாவோயிஸ்டுக’ளுக்கு எதிரான தனது போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிவாசிகளின் எதிர்ப்பை மாவோயிஸ்டு பிரச்சினையுடன் இணைத்திட ஊடகங்கள் வழி டாடா ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு இது சான்றாகிறது. கலிங்க நகரில் போராடும் மக்கள் துணை ராணுவத்தினர் மீது மக்கள் சில கற்களை வீசியதும் அவர்கள் அம்மக்களின் தானியங்களை அழித்து, பாத்திரங்களை உடைத்து, நீரில் மண்ணெண்ணெயைக் கலந்த அராஜகத்தையும் இந்த ஒளிப்பதிவில் பாருங்கள் (http://www.youtube.com/watch?v=iQNXxLaQt-o&feature=youtube).



 ஆதிவாசிகளுக்கு எதிரான தனது வன்செயல்பாடுகள் ஊடகங்கள் வழி வெளிக்குத் தெரியாமல் டாடா தடுத்து நிறுத்தினாலும் மக்கள் தாங்களே எடுத்த பதிவுகளை you-tubeஇல் பகிரங்கப்படுத்தினார்கள். அப்பதிவுகளை (http://www.youtube.com/samadrusti) இங்கே காணலாம்.


ஆதிவாசிகளின் வாழ்விடங்களை அழிக்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் டாடா ஸ்டீல் தன்மீதான கறையை நீக்க உருவாக்கிய ஆதிவாசிப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்தான் ‘தேஜஸ்வினி.’ தேஜஸ்வினி எனும் விளம்பரப் படம் அத்திட்டத்தின் சிறப்பை முன்னிறுத்துவதாக உள்ளது. அன்றாட வேலைகளிலும் நடனமாடியும் ‘சாதாரண’மாக வாழ்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவர் டாடா ஸ்டீலில் சேர்ந்த பிறகு பேண்ட் சட்டை அணிந்து, ஸ்கூட்டர் ஓட்டி, வாகன ஓட்டுநராகி வாழ்க்கையில் முன்னேறிச் சமூகத்தின் மதிப்பைப் பெறுவதாக விளம்பரக் ‘கதை’ அமைந்துள்ளது. டாடா ஸ்டீல் ஆதிவாசிப் பெண்ணுக்கு உதவுவதாக மட்டும் காட்டுவது இன்று ‘சரியான அரசியல்’ அல்ல. ஆதிவாசிப் பெண்ணும் டாடாவுக்குப் பங்களிப்பதாகக் காட்ட வேண்டும். ஆகவே விளம்பரக் கதையின்படி இந்தப் பெண்ணிடமிருந்து டாடா ஸ்டீலும் கற்றுக்கொள்கிறது. அது ‘துணிச்ச’லைக் கற்கிறது. இது விளம்பரம்.



டாடாவிடம் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை, அவர்களின் சுற்றுச்சூழலை அழிக்கும் பலப்பல திட்டங்கள். அத்திட்டங்களின் ரத்தக் கறையை மூடிமறைக்க ‘தேஜஸ்வினி’ என்று ஒரு நலத்திட்டம். அந்நலத்திட்டத்திற்கு ஒரு விளம்பரம். 


இந்த விளம்பரத்தைச் ‘சரியான அரசியல்’ கூறுகளுடன் இயக்கப் பொருத்தமான நபராக யார் இருக்க முடியும்? களப் பணியாளர், போராளி, பெண்ணியவாதி போன்ற பிம்பங்களை உடைய ஒருவர்தான் சரியான தேர்வாக இருக்கும். அத்தோடு நாய் விற்ற காசு குரைக்காது என்ற நெஞ்சுறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். 


டாடா ஸ்டீலும் ஒகில்வியும் சரியான நபரைத் தேர்வுசெய்தன. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர், இடதுசாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆவணப்பட இயக்குநர், கிட்டத்தட்ட நக்சலைட் லீனா மணிமேகலை. இவ்விளம்பரப் படத்தை இங்கே http://www.youtube.com/watch?NR=1&feature= endscreen&v=-qYs62hTFpg பார்த்து ரசிக்கலாம். ‘ஆதிவாசிப் பெண்களை மேம்படுத்தும் நிறுவனம் டாடா’ என்று காட்டிடும் இந்தப் பிரச்சாரப்படத்தை இயக்கிட எத்தனை லட்சம் கிடைத்தது லீனா?
இது வெறும் விளம்பரம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். விளம்பரத்தின் கடைசி வாசகம் இது: “இது விளம்பரம் அல்ல, வாழ்க்கை.” 


 THANX - KALACHUVADU

திருமண மண்டபங்களில் (ஆ)பெண்களைக்கவர்வது எது? நெக்குருகும் ரிப்போர்ட்

na Erra's photo. — with Santhi M Mary and 20 others.
1. விட்டமின் விட்டமின் அப்டினு சொல்றாங்களே அது ஆத்துல விட்ட மீனா? கடல்ல விட்ட மீனா? # SMS



-----------------------------

2. மாமனார் வீட்டிற்குச்செல்லும் மாப்பிள்ளைக்கான ஒரே பொழுது போக்கு மச்சினியுடனான குறும்புப்பேச்சே.



------------------------------


3.பில்லா- 2 ஓடலைன்னா சகுனிதான் காரணம்னு சொல்லிடலாம், சகுனியே ஓடலைன்னா சகுனிக்கு சகுனம் சரி இல்லைன்னு சொல்லலாம் # ஜுன் 22



---------------------------------

4. திருமண மேடையில் புதுமணத்தம்பதிகளைப்பார்க்கும் பழைய மணத்தம்பதிகள் மனதில் அடையும் கிளுகிளுப்பு வர்ணிப்பில் அடங்காதது


-----------------------------


5. மணமேடையில் அமர்ந்திருக்கும் தம்பதிகள் 2000 பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வு பற்றிஎல்லாம் கவலை இன்றி கடலை சாகுபடியில்:)



---------------------------------

6. உன் எல்லா சந்தோஷங்களுக்கும் நானே முழு முதற்காரணமாக இருக்க வேண்டும்,உன் ஒரே ஒரு சோகத்துக்கூட நான் காரணியாகிவிடக்கூடாது



----------------------


 7. நாம் காதலித்த பொழுதுகளில் நீ ஒரு பொழுதும் “ஐ லவ் யூ” சொன்னதில்லை, பின் ஏன் பிரிகையில் மட்டும் “ ஐ ஹேட் யூ” சொல்கிறாய்?



---------------------------------------------

8. சதுரங்க விளையாட்டில் ராணிக்குத்தான் அதீத சக்தி என்றாலும் மும்முனைத்தாக்குதல் குதிரையால் மட்டுமே 




-------------------

9. வெற்றிச்செல்வி அணைக்கையில் அடக்கி வாசித்தல்,தோல்விதேவதை தழுவும்போதும் அனைவரையும் நேசித்தல்,மனைவியை மீறி பெற்றோரை பூஜித்தல்- இவை மூன்றும் என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டவை


---------------------------------------

10. நம் இருவருக்கிடையேயான தூரங்கள் அதிகமாகும்போது நமக்கான காதல் இடைவெளி குறைகிறது #  லா ஆஃப் அட்ராக்சன்



------------------------------



11. காதல் பந்தியில் நான் அமர்ந்திருந்தபோது உன் லட்டுக்கண்களால் பார்வை பூந்திகளை பரிமாறிச்சென்றாய்!



-------------------

12. சொல்லாத காதலை உணர வைக்க எளிய வழி - தோழியின் துயர் துடைக்க அவர்கள் அழைக்காமலேயெ செல்வதே!



-----------------------------------


13. நீ என்னை சாப்பாட்டு ராமன் என்று கிண்டல் செய்யும்போது உன்னையும் அறியாமல் என்னை ராமன் என்றாய்!



-------------------------

14. கொத்தினால் உனக்கு வலிக்கும் என்பதால் நான் உன் மனம் கொத்தாத பறவை



---------------------------------

15. திருமண மண்டபங்களில் பெண்களைக்கவர்வது சக பெண்ணின் புடவை டிசைன், ஆண்களைக்கவர்வது வித விதமான ஜாக்கெட் டிசைன் # U,V,W NECK



--------------------

venil Murugesan shared Jokes.'s photo.




16. நீ என்னை அன்ஃபாலோ செய்தாலும் என் மனம் உன்னை ஃபாலோ செய்யும், நீ என்னை பிளாக் பண்ணினாலும் என் கையில் ஒயிட் சமாதானக்கொடி இருக்கும்



-----------------------------

17. அத்தான், என்னைத்தவிர எவளையும் நீங்க பார்க்கக்கூடாது..



 ஓ, அப்புறம் எப்படி நீதான் பெஸ்ட் அழகின்னு கம்பேர் பண்றது? 



----------------------


18. தூக்கக்கலக்கத்திலும் சம்போ மகாதேவா என்றால் அவள் பக்தமீரா, சிம்போ-பிரபுதேவா என்றால் அவர் நயன் தாரா 



------------


19. நானும் ஆ.ராசாவும் அண்ணன்-தம்பி போன்றவர்கள்: கருணாநிதி # எல்லாரும் கேட்டுக்குங்க, நானும் யூத் தான் நானும் யூத் தான் - கலைஞர்



---------------------------------


20. நமக்கு நீதி கிடைக்கும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்:நித்தியானந்தா # என்னது? நீதி தேவதையையும் விட்டு வைக்க மாட்டீங்களா?



-----------------------


இந்தியாவின் நிலையை அழகாக சொல்லும் படம்......











Tuesday, June 12, 2012

நாளைய இயக்குநர் -விமர்சனம் (10.6.2012)



வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..

நடுவர்களான இயக்குநர் விக்ரமன், சுந்தர் சி ரெண்டு பேர்ட்டயும் ஆர்த்தி ஒரு கேள்வி கேட்டாங்க..நம்ம நாட்டுல நடத்தற ஷூட்டிங்க், ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல நடத்தற ஷூட்டிங்க் எது ஈசி,  என்ன ரீஸன்?


ஃபாரீன்ல செலவு கம்மி.. 10 பேரை வெச்சு முடிச்சுடலாம்.. இங்கே யூனியன் அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.. 100 பேரை வெச்சு  எடுக்கனும், செலவு, சிரமம் எல்லாம் பல மடங்கு.. அப்புறம் நம்ம நாட்ல ஷூட் பண்ண பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. உதாரணமா மேட்டூர் டேம்ல ஒரு ஷூட்னா வன இலாகா, PWD,போலீஸ் இப்படி பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. ஃபாரீன்ல அப்படி இல்லை.. ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல சொன்னா போதும்.. அவங்களே ஒரு ஆளை கூட அனுப்புவாங்க .. ஷூட்டிங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே உதவி செய்வாங்க, க்ளியர் பண்ணி விடுவாங்க 


அப்டின்னாரு சுந்தர் சி..அதே போல் விக்ரமன் சாரும் ஸ்விச்சர்லாந்தில் ரொம்ப ஈசியா தான் நடத்துன பட ஷூட்டிங்க் பற்றி சிலாகிச்சு பேசுனாரு..



1.இயக்குநர் பெயர் - மித்ரன்  , குறும்படத்தின் பெயர் - மனிதம் ( அறம் செய்ய விரும்பு )


ஒரு நாட்டுல ஒருத்தர் செய்யற தப்பால அந்த நாட்டுக்கே  கெட்ட பேர் வர்றது எப்படி? எதனால குறை சொல்றாங்க? அப்டிங்கற ஒன் லைன் தான் கதைக்கரு.. சமீபத்துல ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தான் கதைக்கான பேசிக்  KNOT

ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் ஒரு இந்திய மாணவன் செல் ஃபோன்ல அப்பா கிட்டே பேசிட்டு இருக்கான்.. அப்போ ஒருத்தன் வந்து அவனை கத்தியால குத்திட்டு போயிடறான்.. கொலை செஞ்சவனோட அம்மா வீட்ல அவனோட வித்தியாச நடவடிக்கைகளை நோட் பண்றாங்க.. இன்னொரு பக்கம் கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா கண்ணீர் விட்டுட்டு இருக்காரு..

 கலவரம், போராட்டம் நடக்குது.. நாடு முழுவதும் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரே ஒரு நாள் இந்திய உணவை சாப்பிட முடிவு செய்யறாங்க. ஒரு அஞ்சலி மாதிரி.. கொலையாளியின் அம்மாவே போலீஸ்ல அவனை பிடிச்சுக்கொடுத்துடறா.ங்க.

 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  கேவலம், ஒரே ஒரு செல் ஃபோனுக்காக ஒரு ஆளையே கொல்வாங்களா?

2. டேய் இந்தியா வர்றப்ப எனக்கு ஃபாரீன் சரக்கு வாங்கிட்டு வாடா..

அப்பா.. பையன் கிட்டே இப்படியா பேசுவாங்க?

புள்ளையையே எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன், சரக்கை இம்போர்ட் பண்ணக்கூடாதா?

3. குத்தறதையும் குத்திட்டு குருமா வேற சாப்பிடுவாங்களா?

4. என் பையன் எங்கே எல்லாம் போனானோ அங்கே எல்லாம் நானும் போய் பார்க்கனும்



சுந்தர் சி இந்தப்படத்தை ரொம்ப சிலாகிச்சு பாராட்டுனாலும் படம் ரொம்ப ஸ்லோவா போகுது,இன்னும் ஸ்பீடு பண்னனும்னாரு



2..இயக்குநர் பெயர் - கார்த்திகேயன் , குறும்படத்தின் பெயர் - புழுதிக்காடு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஒளிப்பதிவுல கலக்கி எடுத்துட்டாங்க .. அழகிய கிராமம்.. அங்கே பனை மரங்கள் உள்ள இடம்.. நிர்மலமான வானம், குருவி, ஓடை, பச்சைப்பசேல் வயல்கள், என ஷாட் பை ஷாட் பின்னி எடுத்தாங்க.. ஆனா கதை தான் ஒண்ணும் தேறலை..

 படத்துல வசனமே இல்லை.. 5  பிட் பாட்டுக்கள்.. ஓப்பனிங்க் ஷாங்க், ஒரு கொண்டாட்டப்பாட்டு, ஒரு ஒப்பாரிப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, நண்பர்களுடனான ஒரு தெம்மாங்குப்பாட்டு.. அவ்ளவ் தான் படம் முடிஞ்சுது.. இதுல என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலை..

 இதே கேள்வியை ஜட்ஜ்ங்க கேட்டப்ப “ ஹீரோவை அவன் காதலி மறந்துட்டு போயிடறா.. ஆனா ஹீரோவால அவளை மறக்க முடியலை.. அவ நினைவாவே காலம் எல்லாம் வாழறார்.. அதைத்தான் சொல்ல வந்தேன்னாரு.. ஆனா காட்சிகள்ல அந்த வலி பதிவு செய்யப்படலை.. 


பாடல் மூலமா கதை சொல்றது நல்ல விஷயம் தான் நாங்க எல்லாம் ஒரே பாட்டுல ஹீரோவை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கோம், ஆனா நீங்க சொன்ன கதைல எதுவும் தேறலை, பெட்டர்  லக் நெக்ஸ்ட் டைம் அப்டின்னாரு விக்ரமன்


3. இயக்குநர் பெயர் - நித்திலன் , குறும்படத்தின் பெயர் - சிரிப்பு வர்லைன்னா  பொறுப்பு நாங்க இல்லை

இதுல ஸ்பெஷல் விஷயம் என்னான்னா படத்தோட  ஹீரோ நம்ம ஊர்க்காரர் சாம் ஆண்டர்சன்.. 

ஒரு அப்பா தன் பையனை மன நல  மருத்துவரிடம் கூட்டிட்டு வர்றார்.. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு.. விசாரிச்சா காதல் தோல்வி.. தன்னோட  3 காதல் தோல்விகள் பற்றி ஹீரோ புளி போடாமயே விளக்கறாரு.. அப்போ டாக்டர் சொல்றாரு.. என் கிட்டே  ஒரு மாத்திரை இருக்கு, அதை விழுங்கிட்டா நீ கடந்த காலத்துல பயணம் செஞ்சு நீ செஞ்ச தப்பை கரெக்ட் பண்ணலாம், உன் காதலியை கிஸ் பண்ணலாம், என்ன வேணா செய்யலாம்..

 அட்டகாசமான வாய்ப்பு.. ஆனா இந்த ஹீரோ என்ன பண்றாரு ? கடந்த காலத்துல போய் தன்னை  , தன் காதலை கேவலப்படுத்திய ஒரு காதலி கிட்டே 1000 ரூபா நோட்டுல ஐ லவ் யூ எழுதி கொடுக்கறாரு.. அந்த பொண்ணு கெக்கே கெக்கே பிக்கெக்கே  என சிரிச்சுட்டே வாங்கிக்குது.. உடனே பளார்னு ஒரு அறை விட்டுட்டு ரிட்டர்ன் வந்துடறாரு.. 

 ரெண்டாவது காதல்.. அதை எதிர்த்த தன் அப்பாவை அடிச்சுட்டு வர்றாரு.. க்ளினிக் வெளீல வெயிட் பண்ணிட்டு இருந்த அப்பா அழுதுட்டே வர்றாரு.. அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் - ரமணா டயலாக் போல .. 

 மூணாவது காதல் -ல ஒரு ட்விஸ்ட்.. அதாவது காதலியின் அண்ணன் இப்போ மாத்திரை கொடுத்த டாக்டர் தான். அவரையும் ஹீரோ அடிக்கறாரு.. டாக்டர் அய்யோ அய்யோன்னு கத்த படம் ஃபினிஷ்.. 


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கடந்த காலத்துல பயணிக்கும் அரிய வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் பாசிட்டிவா திங்க்  பண்ணி  காதலியை கரெக்ட் பண்ண பாப்பாங்க. ஹீரோ 3 காதலிகளை கண்டுக்கவே இல்லை.. பழி வாங்கும் உணர்ச்சி தான் அவன் கிட்டே இருக்கு.. 


2. காமெடிக்குத்தான் என்றாலும் 3 ஃபிளாஸ்பேக்க்கிலும் அவர் அடி  போடுவது போர்..  ஒவ்வொரு காதலையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.. 


3. நான் எடுக்க நினைச்ச கதையே வேற.. சாம் அண்டர்சன் கால்ஷீட் சொதப்பலால் வேற கதையை மாத்த வேண்டியதா போச்சுன்னு சமாளீஃபிகேஷன் கொடுத்ததை ஏத்துக்க முடியலை..


 சிறந்த படம் முதல் படமே.. அவார்டு வாங்குனதும் அதுவே..

கஷ்டாவதானி டி.ராஜேந்தர் பேட்டி

http://www.kollywoodtoday.net/gallery/actors/t_rajendar/images/trajandar15.jpg 

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, திடீர் அரசியல் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்.  


''ஏன் இந்தத் திடீர் முடிவு?''



''பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது நான்கு மடங்கு. குறைத்தது ஒரு மடங்கு. பெட்ரோல் விலை உயர்வுக்காக தி.மு.க. போராடியது வெறும் சடங்கு. காங் கிரஸ் தலைமை எச்சரித்த பிறகு கலைஞர் அடங்கி விட்டார் ஒரே அடங்கு. எங்கே போனது அவரது சங்கே முழங்கு? 'ஈழப் பிரச்னைக்கு எம்.பி-க்கள் எல்லாம் ராஜினாமா செய்வோம்’ என்று சொல்லி ராஜினாமா கடிதங்களை முன்பு கலைஞர் வாங்கிவைத்துக் கொண்டதோடு சரி. ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா செய்யாத கலைஞரா, பெட்ரோலுக்காகப் பதவியைத் துறப்பார்?''


ஆனால், கலைஞரைவிட அம்மா எவ்வளவோ மேல். மண்ணெண்ணெய் அளவைக் குறைத்த போதும், திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியபோதும், மத்திய அரசுக்கு எதிராக உரத்த குரல் கொடுக்கும் ஆற்றல் அம்மா வுக்கு உண்டு. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார். மக்கள் நலனுக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராடும் அம்மாவின் போராட்ட குணம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். அதனால்தான் அ.தி.மு.க-வை புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆதரிக்கிறேன். கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு புதுக்கோட்டைத் தேர்தலில்தான் அ.தி.மு.க-வை ஆதரிக்கிறோம். இடையில் நடந்த தேர்தல்களில் அவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை.''



''பால், பஸ், மின் கட்டண உயர்வு உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?''



''கட்டண உயர்வுக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித் திருக்கிறேன். ஆனால், இந்த விலை உயர்வுக்கு தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும்தான் காரணம். மின்உற்பத்திக்கான திட்டங்களை முந்தைய தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் போனதால், அதன் பாதிப்புகள் இப்போது அ.தி.மு.க. அரசு மீது விழுந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நிதிஉதவி அளித்த மத்திய காங்கிரஸ் அரசு, இப்போது ஏன் பாராமுகம் காட்டுகிறது. நில அபகரிப்புப் புகார்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியைப் போன்று வேறு யாராவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? குறைகள் சில இருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி மக்களுக்கு நல்ல திட்டங் களைத் தருவதைப் பாருங்கள்.''



''கடந்த சட்டசபைத் தேர்தலில் போதிய இடங் களை உங்களுக்கு ஒதுக்காமல், உதாசீனப்படுத்திய ஜெயலிதாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே..?''






''அப்போது அவர் என்னை உதாசீனப்படுத்த வில்லை. விஜயகாந்த் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே அ.தி.மு.க-வோடு நான் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், கணிசமான தொகுதிகளை ஒதுக்கித் தர அம்மா சம்மதித்தார். விஜயகாந்த் வந்த சூழ்நிலையில், அங்கே நான் இருக்க முடியாது என்பதால் வெளியேற வேண்டிய நிலை. விஜயகாந்த்தைவிட எங்களுக்கு இடங்கள் குறைவாகக் கிடைக்கும் நிலையில், கூட்டணியில் தொடர விரும்பாமல் வெளியேறினோம். இது நானே எடுத்த முடிவு. மற்றபடி முரண்டு பிடித்து எல்லாம் வெளியேறவில்லை. கௌரவமாகத்தான் நடத்தினார்கள். கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு, அரசின் செயல்பாடுகளைச் சுதந்திரமாக விமர்சிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்பதாலும் வெளியேற வேண்டிய நிலை உருவானது.''

 http://www.thedipaar.com/pictures/resize_20100921101852.jpg

''புதுக்கோட்டை தேர்தலில்  தி.மு.க. போட்டியிடாதது சரிதானா?''


''திருமங்கலம் தேர்தலில் புதிய ஃபார்முலாவை உருவாக்கிய தி.மு.க., சங்கரன்கோவிலில் டெபாசிட்டைப் பறிகொடுத்ததால், இப்போது நிற்காமல் பின்வாங்கி ஓடியிருக்கிறது. புதுக்கோட்டை யில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? போட்டியிடுவதற்கு என்ன தயக்கம்? தேர்தலில் போட்டியிடாமல் இருக்க எதற்காக வேண்டும் இயக்கம்?


 புதுக்கோட்டையில் தே.மு.தி.க. நிற்கிறது. தி.மு.க. நிற்காமல் திக்குமுக்காடி நிற்கிறது. தன்னிடத்தில் விஜயகாந்த் ஆதரவு கேட்பார் என்பது கலைஞரின் எதிர்பார்ப்பு. யாரும் நிற்காதபோது நான் ஏன் கலைஞரிடம் வெளிப்படையாக ஆதரவு கேட்க வேண்டும் என்பது விஜயகாந்த்தின் இறுமாப்பு!''


''புதுக்கோட்டையில் லட்சிய தி.மு.க. போட்டியிடும் என்று பேசப்பட்டதே?''



''புதுக்கோட்டையில் என்னை நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். காரணம் அதில் ஒளிந்திருந்த அரசியல்தான். கலைஞர் அரசியல் சாதுர்யத்தை உருவாக்க நினைத்தார். அதை நான் புரிந்துகொண்டதால் தேர்தலில் போட்டியிடவில்லை. 


நான் களத்தில் நின்றிருந்தால், விஜயகாந்த் தி.மு.க-வின் ஆதரவைக் கேட்டிருப்பார். விஜயகாந்த் வந்து தன்னிடம் ஆதரவு கேட்க வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். அந்த விருப்பத்துக்கு நான் வழி ஏற்படுத்தித் தரவில்லை. அதேநேரம், விஜயகாந்த் நேரடியாக கலைஞரிடம் கையேந்தாமல், மனைவியை விட்டு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வைத்திருக்கிறார். அதன்மூலம், தி.மு.க-வின் ஓட்டுகள் விழும் என்பது விஜயகாந்த்தின் கணக்கு.''


''உங்களுக்கு பின்னர் கட்சி ஆரம்பித்த சரத்குமாரும் விஜயகாந்த்தும் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக் கிறார்கள். நீங்கள் மட்டும்..?''


''விஜயகாந்த்துக்கு அரசியல் தலைவருக்கான நாகரிகம் இருக்கிறதா? இரண்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்கிறோம். அதுகூட அவருக்கு இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்திருப்பதே அம்மாவின் தயவால்தான். 


தனியாக நின்று ஒரு இடத்தில்தானே அவரால் ஜெயிக்க முடிந்தது. டி.ஆரின் துணிச்சல் ஊருக்கே தெரியும். சட்டசபைத் தேர்தலில் ஸீட் வேண்டாம் என்று தூக்கி எறிந்தவன். சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவியைக்கூட விரும்பாமல் ராஜினாமா செய்தவன் நான். பதவியை வைத்து எடை போடாதீர்கள். இறைவன் கொடுக்க நினைப்பதை பூமியில் தடுப்பார் எவருமில்லை. இறைவன் கொடுக்க மறுப்பதை பூமியில் கொடுப்பார் எவருமில்லை!''

http://pirabuwin.files.wordpress.com/2009/03/rajender11.jpg?w=600&h=800

நன்றி - விகடன்

கடல் - மணி ரத்னம் + நயன் தாரா..????

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhbd-gPDCPLDJ8JEyUwY5fjptqV-haFxFtEGPBIJ6RZxSpSEJjvCBVf4yYr5S4fhRCe7WJ_OUfCw814s-h5ysu7vRhwvASMBFM_mz_WLE6t_YLdvwiYh_uhPMPdbIMa8G-t9XCOhNxTSE/s1600/manirathnam+ar+rahman+samantha+kadal+movie+stills+wallpapers+first+look+hellotolly.com+(3).jpg1.நமது காதல் வினாத்தாளில் “ பொருத்துக” என்ற பகுதியே இல்லை, ஆனாலும் நம் மனங்கள் ஒன்றை ஒன்று பொருத்திக்கொண்டன




----------------------------

2.தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாகிவிடும் - ஜெ. # ஓவர் கான்ஃபிடன்ஸ் ஓங்கார நாயகியே போற்றி ஓம்!



----------------------------------

3. நான் கறைப்படுத்தப்பட்டேனே தவிர கறைபடியவில்லை:- நித்யானந்தா #  வாஷிங்க் பவுடர் நிர்மா, ஐ வில் வாஸ் ஆல் ஆஃப்டர் மை கர்மா 



---------------------------------------

4. விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும் - சிம்பு # சம்பளம் வேண்டாம், உடன் நடிக்கும் ஹீரோயின் சம்மதம் போதும் - மைண்ட் வாய்ஸ்



---------------------------------


5. ஜெயா டி வியில் குஷ்பூ யூஸ் பண்ணாத ஒரே ஜாக்கெட் மாடல் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டே # கேவலமான அவதானிப்பு



---------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiYbTbWC0OPIfgvO7EJTlDw-O-RPdyxe5ld-rylXoEghtxTqnF19MI8Gqn9KLn3sntEnh1fAzVMp7h1qg1Dh92jodZUdAa5C1Y-pxcm39ByWo1dZxdk3AV008CtpnnXjoIq1PXVGb1ss0/s1600/manirathnam+ar+rahman+samantha+kadal+movie+stills+wallpapers+first+look+hellotolly.com+(4).jpg

6. குருவே!காலையில் எழுந்தவுடன்  யார் முகத்தில் விழிப்பீர்கள்? 



நித்தி -காட்டில் இருந்தால் நரி முகத்தில், கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்



----------------------------


7. ஆத்திகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் வணங்க வேண்டியவர்கள் அவரவர் பெற்றோரே!




--------------------------------


8. தனுஷ் பெர்ஃபாமர், நான் எண்டர்டெய்னர் - சிம்பு # அதாவது தனுஷ் லவ்ல நல்லா பர்ஃபார்ம் பண்றாரு, நீங்க காதலை பொழுதுபோக்கா எடுத்துக்கறீங்க?



-----------------------------------

9.மத்தியஅரசு,மூழ்கிக்கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பல்-மோடி # அய்யய்யோ , அப்போ சோனியாகாந்திதான் ரோஸா? அவ்வ்வ்வ்



-------------------------------

10.  விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும்:சிம்பு #  அப்போ பஸ் கண்டக்டர்கள் மடும் படம் பார்க்க வந்தா போதுமா?



-------------------

http://www.cinemamasti.com/wp-content/uploads/Mani-Ratnams-Kadal-New-Posters-1.jpg


11. திமுகவால் தயாரிக்கப்பட்ட சமச்சீர்பாடநூல்களில் வரலாற்றுப்பிழை-ராமதாஸ்# தல ரசிகர்களே! பொங்கி எழுங்கள்! வரலாறு படம் பற்றிபிழைத்தகவலாம்


-------------------------

12. சிம்புவுக்கும் உண்டோ அடக்கி வைத்திருக்கும் விரல்?


-----------------------------


13. நயன் தாராவை கடலுக்காக கூப்பிட்ட மணிரத்னம் -செய்தி # நல்ல வேளை ,படத்தோட  டைட்டில் கடல், இன்பம் இல்லை



------------------------------------


14.  கமல் ஹாலிவுட் படத்துல நடிக்கிறார் என்றதும் மனதில் எழும் முதல் கேள்வி -அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் முத்த அழகி யார்?


----------------------------

15. நீ வெட்கப்பட்டு உன் விரல் நகம் கடித்தாய்! நான் முக வரிகள் படித்தேன்! மேலும் சிவந்தது உன் கம்யூனிஸ்ட் இதழ்கள்



--------------------


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/04/Kadal-gauntham-samantha-maniratnam-kadal-movie-story.jpg
16. இமயம் தொடுவது சாதனை அல்ல, ஒரு பெண்ணின் இதயம் தொடுவதே சாதனை # SMS


-----------------------------


17.பெரும்பாலான பெண்களுக்குள்ளே ஒரு விழிப்புணர்வு நாயகி குடி இருக்கிறாள், அது தெரிந்தும் ஆண்கள் விக்கிரமாதித்தன் போல் மனம் தளருவதில்லை



-----------------------------------------


18. நமது முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர் பட்டியல் தயார் செய்தால் அதில் முதல் இடம் எப்போதும்  நம் பெற்றோருக்கே!



----------------------------------


19.  முக துணையோடு 2ஜி வழக்கில் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா # அவருக்கு 3 துணை இருக்கு.. குறிப்பா எந்த துனை என விளக்கமா சொல்லவும்,வீ ஆர் டியூப்லைட்ஸ்


----------------------------------

20. கர்நாடகா அரசு என்னை கைது செய்தால் மதுரை ஆக்டிங்க் ஆதீனமாக  ஆக்டிங்க் ஹீரோயின் ரஞ்சிதா செயல்படுவார் - நிதியானந்தா அறிவிப்பு @ கற்பனை



--------------------------------------


http://images.desimartini.com/user_uploads/moviereview/500_500-pd/7876579_1331889651_1955.jpg


மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மற்றப் படங்களை ஓரமாக ஒதுக்கி வைத்து கால்ஷீட் தர இந்தியாவில் உள்ள அனேகமாக எல்லா நடிகைகளும் தயாராக இருக்கிறார்கள்.
சமந்தாவும் கடல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் அப்படிதான் உணர்ச்சிவசப்பட்டார். ஆனால் இப்போது அவராகவே படத்திலிருந்து விலகி ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சி தந்துள்ளார்.
மணிரத்னம் தனது கடல் படத்தை தென் தமிழக கடற்கரையோரங்களில் நடத்தி வருகிறார். கார்த்திக் மகன் கௌதம் ஹீரோ. வசனம் ஜெயமோகன். சமந்தா இதில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
ரஹ்மான் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து மணிரத்னத்துடன் கடலில் படகு சாவாரி செய்ததிலிருந்து கடலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்திலிருந்து தானாக விலகுவதாக இப்போது சமந்தா தெரிவித்துள்ளார். விலகலுக்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மணிரத்னம் தரப்பும் இது குறித்து விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. எப்போதும் போல பூரண மௌனம்.
தனது விலகலின் மூலம் கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் சமந்தா.

http://moviegalleri.net/wp-content/uploads/2012/02/mani_ratnam_kadal_movie_first_look_posters.jpg

Monday, June 11, 2012

ஸ்டாலின் ,அழகிரி யை விட கனிமொழியே கரெக்ட் - இளங்கோவனின் அதிரடி பேட்டி

ஸ்டாலின் அல்ல... அழகிரி அல்ல... கனிமொழியே கரெக்ட்!

இளங்கோவனின் அதிரடி


''பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு எதிரா போராட வந்த இடத்துல, 'மத்திய அரசின் கூட்டணியில இருந்து விலகுவோம்’னு முழங்குறாரு. அடுத்த அரை மணி நேரத்துல, 'கூட்டணியில் இருந்து நான் விலகுவேன்னு சொல்லவே இல்லை’ன்றாரு. அவர் வரவர ரொம்பச் சரியில்லைங்க... ஏன் இப்படில்லாம் பண்றாரு?'' - பேட்டி எடுக்கச் சென்ற என்னை கருணாநிதி குறித்த விசாரணை யுடன் வரவேற்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.



 ''சமாளிக்காதீங்க... ஆயிரம் சொன்னாலும் பெட்ரோல் விலையேற்றத்துக்கு மத்திய அரசின் கொள்கைகள்தானே காரணம், இது நியாயமா?''



''இல்லவே இல்லை... அது பொருளாதாரத் தெளிவின்மை இல்லாதவர்கள் சொல்ற கருத்து. பெட்ரோலை இறக்குமதி செஞ்சு, இந்தியாவில் விற்கும் சில தனியார் கம்பெனிகள்தான் அதன் விலையையும் நிர்ணயம் செய்கின்றன. இவ்வளவு ஏன், 'மத்தியில் இருப்பது ஆள்வதற்கு லாயக்கற்ற கட்சி’னு குறை சொல்றாங்களே ஜெயலலிதா, அவங்க பெட்ரோல் விலையில் மாநில அரசின் 27 சதவிகித வரியைக் குறைக்க வேண்டியதுதானே? 10 சதவிகிதம் குறைச்சாலே, பழைய விலைக்கு பெட்ரோல் கொடுக்க முடியுமே. மற்ற மாநிலங்களில் அப்படி வரி குறைச்சு இருக்காங்களே... அதை ஜெயலலிதாவும் செஞ்சிருக்கலாமே. மத்திய அரசைக் குறை சொல்றதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா இதுவும் பேசுவார்... இன்னமும் பேசுவார்!''



''நேர்மையாகச் சொல்லுங்கள்... மத்திய காங்கிரஸ் அரசின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் எந்தக் குறையும் இல்லையா?''


''மத்திய அரசின் செயல்பாடு இப்போது அதிக அளவிலான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்குங்கிறதை ஒப்புக்கிறேன். குறிப்பா, பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவு. அதை மத்திய அரசும் உணர்ந்து இருக்கு.


 மாநில அரசைப் பத்தி நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்றேன். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்களைக் கொடுத்தது மட்டுமே ஜெயலலிதா அரசின் கடந்த ஒரு வருட ஆட்சியின் அசுர சாதனை. இன்னொரு சாதனை, டாஸ்மாக் விற்பனையை அதிகரிச்சு இருக்கிறார். மக்களுக்கு செஞ்ச நல்லதைவிட, அவர்களின் சுமையை மேலும் அதிகரிச்சு இருக்கிறது ஜெயலலிதாவோட அரசு.''


''ஜாக்கிரதையா உங்கள் நண்பர் விஜயகாந்தைப் பற்றிக் கருத்து சொல்லாமல் தவிர்க்கிறீர்களே?''


''விஜயகாந்த் வளர வேண்டிய ஒரு நல்ல அரசியல்வாதி. தமிழகத்தில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். தன்னோட சக்தியை அவர் நல்ல பாதைக்குக் கொண்டுபோய் பயன்படுத்தணும். விஜயகாந்திடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். அவர் நல்லா வருவார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு!''


''மதுரை ஆதீன சர்ச்சைகளைக் கவனிக்கிறீங்களா?''


''பொதுவாவே, இந்தச் சாமியார்கள் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. சாமியார்கள் பெரும்பாலும் மக்களை ஏமாத்துறவங்களாதான் இருக்காங்க. அவங்களை நம்பி ஏமாந்துபோகாமல் மக்கள்தான் உஷாரா இருக்கணும்!''


'' 'தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம்’னு பா.ஜ.க. சொல்லி இருக்கிறதே?''


''பா.ஜ.க. மட்டுமா... ராமதாஸ், திருமாவளவன் எல்லாம்கூடத்தான் சொல்றாங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அது ஒரு கனவு. தூக்கத்தில் இருந்து முழிக்கிறப்ப, 'தமிழகத் தில் ஆட்சியைப் பிடிப்போம்’னு சொல்றதை ஒரு வழக்கமா வெச்சிருக்காங்க. ஆனா, ஒரு விஷயத்தை எல்லோரும் தெளிவாப் புரிஞ்சுக்கணும்.


 தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த மூணு கட்சிகளும்தான் பெரிய கட்சிகள். இதுல ஒண்ணுதான் தமிழகத்தை ஆள முடியும். வேற யாரும் தலை கீழா நின்னாலும் கதைக்கு ஆகாது!''



''தி.மு.க-வில் கருணாநிதிக்குப் பிறகு அழகிரியா... ஸ்டாலினா? உங்கள் சாய்ஸ் யார்?''



''அவங்க ரெண்டு பேருமே அதுக் குச் சரியான ஆள் கிடையாது. கனிமொழிதான் அந்தப் பதவிக்குத் தகுதியானவங்க. தலைமைப் பொறுப்பை ஏற்கிற எல்லாத் தகுதிகளும் கனிமொழிகிட்ட இருக்கு. பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் தரணும்னு முழங்கும் கலைஞர், அவர் காலத்துலயே கனிமொழியை தி.மு.க-வின் தலைவர் ஆக்கணும். அப்போதுதான் தி.மு.க-வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!''



''சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றனவே..?''



'' 'என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்’ என்று பிரதமர் பகிரங்கமாகவே அறிவிச்சுட்டாரே.   ஊழல் புகார் சுமத்திய அண்ணா ஹஜாரே அதை நிரூபிக்க வேண்டியதுதானே? சிதம்பரமோ, பிரதமரோ யார் தப்பு செய்திருந்தாலும் ஆதாரத்தோடு அதை நிரூபிக்கட்டும். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால், அவர்கள் சொல்லும் எதையும் கேட்டுக்கொள்ள நான் தயார்!''



''சமீபத்தில் என்ன படம் பார்த்தீங்க?''



'' 'பெரியார்’ படத்துக்குப் பிறகு நான் தியேட்டர் போய்ப் பார்த்த படம் 'கர்ணன்’. அந்தக் காலத்துல டூரிங் டாக்கீஸில் சிவாஜி படம் பார்த்த ஞாபகங்கள் எல்லாம் வந்து போச்சு. அந்தப் படத்தைப் போல நல்ல கதையம்சத்துடன் வெளியான பழைய படங்கள் எல்லாத்தையும் தூசு தட்டி புதுப் பொலிவோடு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்!''


தூதுவன் - சினிமா விமர்சனம்



http://images.desimartini.com/user_uploads/moviereview/500_500-pd/7876579_1337850539_48847.jpg

ஹீரோயின் தினத்தூது என்ற பத்திரிக்கை ரிப்போர்ட்டர்.. சேரிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுவதாக தகவல் கிடைக்குது..வறுமையின் காரணமாவும், வசதியா வாழ்ந்துடலாம்கற எண்ணமும் தான் பெற்றோரையே அப்படி சிந்திக்க வெச்சிருக்கு.. அவங்களைப்பற்றி ஒரு ஆர்ட்டிகிள் ரெடி பண்ண சேரில டேரா போடுது ஹீரோயின்..

அஸ் யூசுவல் ஹீரோ ஒரு அநாதை.. அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.ஆனாலும் பாருங்க ஒத்தைக்கையாலயே வில்லன்க கூட்டத்தை அடிச்சு விரட்டறார். ஊர்ல இருக்கற பெண் குழந்தைகளை எல்லாம் காப்பாத்தறார்.. கூட்டிக்கொடுக்கும் வில்லன் கூட்டத்தை போலீஸ்க்கு காட்டிக்கொடுக்கிறார்..

ஹீரோ காப்பத்துன ஒரு பொண்ணு படிச்சு பெரிய ஆளா வருது.. மேடைல பரிசி, விருது எல்லாம் வாங்கறப்போ உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்துல வர்ற க்ளைமாக்ஸ் மாதிரி ஹீரோ கையால தான் அந்த விருது வாங்குவேன்னு சொல்றாரு.. அதை பார்த்த கலெக்டர் அந்த பொண்ணு மேல ஆசைப்படறார்.. மேரேஜ் பண்ணிக்கத்தான்..

அந்தப்பொண்ணு ஹீரோ மேல அட்டாச்மெண்ட்டோட இருக்கறதும், அஃபக்‌ஷனோட பழகறதும் அந்தப்பொண்ணோட அண்ணனுக்குப்பிடிக்கலை.. அந்தப்பொண்ணோட மேரேஜ் ஃபங்க்‌ஷன்ல  ஹீரோ கலந்துக்கக்கூடாதுன்னு ஹீரோவை அடைச்சு வெச்சுடறான்..

இதுக்கு மேல என்ன ஆகுதுங்கறதை தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க... ஏன்னா அதுக்கு மேல பொறுக்க முடியாம நான் எந்திரிச்சு வந்துட்டேன்..





http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/thoothuvan-movie-audio-launch/thoothuvan-movie-audio-launch-stills-29_01.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஹீரோ ஒரு மாற்றுத்திறனாளி என்று காட்டுவது எந்த வகையில் கதைக்கு யூஸ் ஆகுது? அவர் அப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அனுதாப ஓட்டு வாங்கவா? சுத்தமா எடுபடலை..

2. ஒரு புது முகத்துக்கு படத்தோட ஓப்பனிங்க்ல பாட்டு வைக்கலாமா? அவரே மக்களுக்கு அறிமுகம் ஆகாதவர்.. படம் போட்டு அரை மணி நேரம் கழிச்சாவது வைக்கலாம்

3.ஹீரோயினா படத்தோட முதல் பாதில வர்றவங்க.. சாரி நோ கமெண்ட்ஸ்.. அவங்க அக்காவா வர்றவங்க கூட ஓக்கே.. அவங்களையே ஹீரோயினா போட்டிருக்கலாம்.. படத்துக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோயினை பாதிலயே கழட்டி விட்டது ஏன்? கால்ஷீட் பிரச்சனையா?

4. ஒரு பெரிய பணக்கார ஆள் ஆட்டோல சேரிக்கு வர்ற மாதிரியும், 13 வயசுப்பொண்ணை ஆட்டோக்குள்லயே ( க்ளோஸ்டு ஸ்க்ரீன் தான் ) கில்மா பண்ணிட்டு போயிடற மாதிரி ஒரு சீன் வெச்சிருக்கீங்க..  அவ்வளவு மோசமான ஏரியாவுல ஒரு பணக்காரன் அந்த மாதிரி செய்வானா? மூடு வருமா? பேடு ஸ்மெல்லும், மோசமான சூழலும் இருக்கற  அந்த சேரி ஏரியாவுல எப்படி பணக்காரன் கில்மா பண்றான்? அவ்வளவு காஞ்ச ஆளா?

5. படத்துல முதல் 3 ரீல்ல என்ன கதை சொன்னீங்களோ அதுதான் திரும்ப திரும்ப வருது.. திரைக்கதைன்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டீங்களா?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkMCdMNJy0WpjNxlXRray3OzweEl0LAdtnwDnKG9cmhA0gtfINI0iAIjXOPvUeTQci9rAp_HSpkJzE-koaRpC5tpX8flvdofEi-CCgjKxHUm2hvqWarWfi2c3GHqUS28W_GMJcOTWifJQ/s1600/Thoothuvan+Movie+Audio+Launch+Stills+Thoothuvan+Audio+Release+Photos+(3).jpg

6. ஹீரோ காப்பாத்தற பொண்ணு கிட்டத்தட்ட 16 வயசு தான் இருக்கும், ஹீரோ  30 வயசு ஆளு.. அந்தப்பொண்ணு கூச்சமே இல்லாம ஹீரோவை கட்டிக்க ஆசைப்படுதே.. எப்படி? தன்னைக்காப்பாத்துன அவரை அப்பா ஸ்தானத்துல இருக்கறப்போ எப்படி புருஷன் ஸ்தானத்துல பார்க்க முடியும்?

7. மினிஸ்டர் ஹீரோயின் மேல ஆசைப்படறதை, அவரோட தவறான  எண்ணத்தை கடைசி வரை ஹீரோயின் ஹீரோ கிட்டே சொல்லவே இல்லையே?

8. இன்ஸ்பெக்டர் ஹீரோவை கைது பண்ண வருவதும் , அவர் ஆற்றிய உரையைக்கேட்டு அவருக்கு கை கொடுத்து பாராட்டி செல்வதும் படு செயற்கை.. அவர் என்ன கவர்மெண்ட் ஆஃபீசரா? எடுப்பார் கைப்புள்ளயா?

9. படம் ரொம்ப ட்ரை (dry) சப்ஜெக்ட்.. எப்போ பாரு சேரி, ரவுடிங்க, ரேப் அப்டினு போர் போர் செம போர்

10. டாக்குமெண்ட்ரியா 20 நிமிடங்கள் எடுக்க வேண்டிய படம் இது.. எந்த விதமான திருப்பு முனைகளோ, திரைக்கதை சுவராஸ்யமோ படத்துல கொஞ்சம் கூட இல்லை..

11. ரெண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் மனதில் தங்கும்படி  ஒரு வசனம் கூட இல்லை.






http://haihoi.com/Channels/cine_gallery/thoothuvan_movie_stills_0037_S_516.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  - 30

எதிர்பார்க்கும் குமுதம்  ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க, டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.

 இந்த டப்பாவை ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல பார்த்தேன்



http://www.cinemaexpress.com/Images/article/2011/5/18/archana.jpg