Showing posts with label Ananya Bhattacharya. Show all posts
Showing posts with label Ananya Bhattacharya. Show all posts

Monday, October 01, 2012

OH MY GOD - சினிமா விமர்சனம்

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/09/OMG-Oh-My-God-Movie-Review-Poster.jpg 

தமிழில் வந்த முதல்  சயின்ஸ் ஃபிக்‌ஷன்  சிறுகதை புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும். அப்புறம்  தமிழில் வந்த அந்த மாதிரி  டைப் படம் சிம்புதேவனின் அறை எண் 305 இல் கடவுள்.அதே டைப்ல குஜராத் நாடகமான  காஞ்சி விருத் காஞ்சி , மற்றும் ஹிந்தி நாடகமான கிருஷ்ணன் வெர்சஸ் கன்னையா  ஆகியவற்றின் தழுவல் தான் இந்த ஓ மை காடு ஹிந்திப்படம் .


 தான் ஒரு நாத்திகவாதியா இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஆத்திகவாதிகள் வாக்குகள் வாங்கித்தான் கலைஞரால சி எம் ஆக முடிஞ்சுது,,அந்த மாதிரி ஹீரோ அடிப்படையில் நாத்திகர் என்றாலும் அவர் பண்ற பிஸ்னெஸ் எல்லாமே கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களான  சிலைகள்,புனித நீர் , கங்கா தீர்த்தம் இந்த மாதிரி அயிட்டங்கள் தான்.


ஹீரோவோட மனைவி ஆன்மீகப்பழம்.எந்த நல்ல காரியம் அல்லது யாகம் செஞ்சாலும் எப்படி ஜெ , நல்ல நேரம் பார்த்து செய்யறாரோ அந்த மாதிரி டைப்.இந்த கடவுள் நம்பிக்கை சம்பந்தமா 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்.




 ஒரு நாள் திடீர்னு பூகம்பம் வருது.ஹைவேஸ்காரங்க எப்படி கேப்டனின் கல்யாண மண்டபத்தை மட்டும் குறி பார்த்து இடிச்சாங்களோ அந்த மாதிரி . ஊர்லயே ஹீரோவோட கடை மட்டும் தான் பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகுது இன்சூரன்ஸ் கம்ப்பெனி இயற்கைச்சீற்றங்களுக்கு பொறுப்பேத்துக்க முடியாதுன்னு எஸ் ஆகிடறாங்க .இதுக்கெல்லாம் காரணம் ஹீரோவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததுதான் அப்படின்னு மனைவி சொல்றா. ஹீரோ செம காண்ட் ஆகிடறாரு.


இப்போ ஹீரோ உலகத்தில் உள்ள அனைத்து மதக்கடவுள் மேலயும் கேஸ் போடறார்.எல்லா மத சாமியார்கள், பாதிரியார்கள் எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பறார். நஷ்ட ஈடு கேட்கறார். ஆரம்பத்துல எல்லாரும் ஹீரோவை லூஸ் மாதிரி பார்க்கறாங்க..


 ஆனா அவர் தானே வக்கீல் மாதிரி கோர்ட்ல  விதி பட சுஜாதா மாதிரி கலக்கு கலக்குன்னு கலக்கறார். இப்போ நாடே பத்தி எரியுது.நாட்டு மக்கள் செம்மறி ஆடு கணக்கா ஹீரோவுக்கு சப்போர்ட் ஆகறாங்க.


 திடீர்னு கடவுள் வர்றாரு. என்ன நடக்குது என்பதுதான் சுவராஸ்யமான மிச்சக்கதை.. 



எம் ஆர் ராதா ரத்தக்கணீர் நாடகம், சோ முகம்மது பின் துக்ளக்  என  சூப்பர் ஹிட் நாடகங்கள்ல நடிச்சு அதை சினிமா ஆக்கி மெகா ஹிட் கணட மாதிரி  பரேஷ் ராவல் நாடகத்துல நடிச்சு சினிமால்யும் அநாயசமா நடிச்சிருக்கார். கோர்ட் காட்சிகள் பொறி பறக்குது. வசனகர்த்தாதான் அதுக்குக்காரணம்னாலும் நடிப்பும் பக்க பலம். 


 பகவான் கிருஷ்ணரா  அக்‌ஷய் குமார். சுமாரான நடிப்பு.

http://image3.mouthshut.com/images/ImagesR/2012/9/OMG-Oh-My-God-925662626-3459785-1.jpg?a=9/29/2012%2011:03:42%20AM


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சீரியஸா போகும் திரைக்கதையில் நயன் தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவா - சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியின் டப்பாங்குத்து  டான்ஸ்.


2. பஸ்ஸில் தீர்த்தக்கமண்டலத்தில் சரக்கு வெச்சு ஆண்கள் எல்லாம் ஷேர் பண்ணிட்டு இருக்கும்போது ஒரு லேடி அதை வாங்கிக்குடிப்பது ஆல்ரெடி பல தமிழ்ப்படங்கள்ல பார்த்தது என்றாலும் ஜாலியான சீன்


3. தெளிவான திரைக்கதை ரெண்டேகால் மணி நேரம் ஓடும் படத்துல 20 நிமிடம் மட்டும் தான் ஸ்லோவா போகுது . மற்ற எல்லா இடங்கள்லயும் செம ஸ்பீடு


4. படத்தில் தேவையற்ற டூயட் , செண்ட்டிமென்ட் சீன்ஸ் எல்லாம் வைக்காம படத்துக்கு என்ன தேவையோ  அந்த சம்பவங்களை மட்டும் திரைக்கதை ஆக்கியது. 


5. பொறி பறக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.. அதுவும் கோர்ட்டில் அவர்  நாத்திக வாதம் பேசும்போதும், ஆன்மீக வாதிகளை மடக்கும்போதும் சபாஷ் வசனகர்த்தா சொல்லத்தோணுது


http://i.indiglamour.com/photogallery/hindi/movies/2012/July16-1/OMG-Oh-My-God/wide/OMG-Oh-My-God_2145rs.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ரிலையன்ஸ் கம்பெனில ஒரு பிரச்சனைன்னா நீ டைரக்டா அம்பானிட்ட தான் பேசுவியா? டீலர்ட்ட பேசுவியா? அதே மாதிரிதான் கடவுளால ஒரு பிரச்சனைன்னா கடவுளோட ஏஜெண்ட்டுகள்னு தன்னை சொல்லிக்கற ஆட்கள்தான் பதில் தரனும் , அவங்க தான் அதுக்கெல்லாம் பொறுப்பு 



2.  இன்சூரன்ஸ்காரங்க கண்டிஷன்ஸ் அப்ளைனு கை கழுவப்பார்க்கறாங்க , ஆனா கடவுள் நான் உங்களை கை விட மாட்டேன்னு சொல்லிட்டே கண்டுக்காம இருக்கார்


3.  யாருய்யா நீ? உன் பேரென்னா? 

 கிருஷ்ண வாசுதேவ் கோகுல் ( அவ்ளவ் தானே, என்னமோ கூகுள் ஓனர் மாதிரி பில்டப் எதுக்கு - திஸ் வசனம் பை அதிகப்பிரசிங்கி சி பி )


நையாண்டி வேணாம்

 யோவ், நிஜமா நான் கடவுள் தான்யா 



4. கடவுளைப்பற்றி போதிக்கறோம்னு என்னைக்காவது நாங்க சர்வீஸ் டேக்ஸ் கட்டுன்னு கேட்டோமா? இப்போ அவரால ஒரு நஷ்டம்னு ஆனதும் எங்க கிட்டே நட்ட ஈடு கேட்டா எப்படி? 



5. மதவாதிகள் தங்களோட வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கறதில்லை. எதையாவது உளறி அவங்க இமேஜையும் கெடுத்துக்கிட்டு கடவுள் பேரையும் கெடுக்கறாங்க.. 


6. குழந்தை சாக்லெட் வேணும்னு அப்பா கிட்டே அடம் பிடிக்குது, அப்போ தன் குழந்தைக்கு சாக்லெட் வாங்கித்தர வேண்டியது  அப்பாவோட கடமை, அதே மாதிரி தான் கடவுளும். பக்தனோட வேண்டுகோளை கோரிக்கைகளை நிறைவேத்தனும் , அதை செய்யலைன்னா அவன் எபப்டி கடவுள்?



7. இப்போ ஆன்மீகம் ஒரு தொழில் ஆகிடுச்சு 


8. நம்ம நாட்ல ஸ்கூலுக்கு போறவங்களை விட கோயிலுக்கு போறவங்க தான் அதிகம்


9. பாலாபிஷேகமே டோட்டல் வேஸ்ட்தான். வெளீல பசில ஏகப்பட்ட ஏழைங்க துடிக்கும்போது வெறும் கல்லுக்கு ஊற்றப்படும் பால் வீணாத்தானே போகுது?


10. கடவுள் இருக்கார்ங்கறதை நீங்க ஒத்துக்கலையா? 


 யோவ்! நான் தான் கடவுளே!


11.  நீ கீதோபதேசம் படிச்சிருக்கியா? 

 இல்லை.அவ்ளவ் பெரிய புக், நோ ஃபோட்டோ . எவன் பொறுமையா உக்காந்து படிப்பான்? 



12. பைபிள் , கீதோபதேசம் எல்லாமே  மனிதனின் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் விளக்கம் அளிக்கும் பதில்களோட இருக்கு. அதை முதல்ல முழுசா படிச்சுட்டு வந்து அப்புறமா தர்க்கத்துல ஈடு படனும் 


13. சுகமும் துக்கமும் வரும்போது இரண்டையும் சமமாக பாவிப்பனே யுக புருஷன்


14. உலகில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் நானே பொறுப்புன்னு கடவுள் எல்லா மதத்திலும் சொல்லி இருக்கார் 


15. கடவுளோட வேலை மனிதனை உருவாக்குவது மட்டுமே, பாவ புண்ணியங்கள் எல்லாம் மனிதனின் வேலைகள்

16. கோயில்ல சாமி கும்பிடறவங்களுக்கு  மட்டும் மரணம் சம்பவிக்காமயா இருக்கு? அப்புறம் அவங்க சாமி எதுக்காக கும்பிடனும்? என்ன யூஸ்?


http://thecommonmanspeaks.com/wp-content/uploads/2012/09/Oh-My-God-movie2.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. தன்னோட கடை பூகம்பத்துல நாசமாப்போயிடுச்சுன்னு ஹீரோ தன்  வீட்ல இருந்து டி வி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறாரு. என்ன கொடுமை சார் இது? ஊருக்கே தெரிஞ்சு சேனல், மீடியா கவர் பண்றவரை இவர் என்ன பண்ணிட்டு இருந்தார்? பக்கத்து கடைக்காரங்க ஃபோன் போட்டு சொல்லி இருக்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் போலீஸ் கூட தகவல் சொல்லி இருக்காதா?


2. ஹீரோ கோர்ட்ல கடவுள் மேல கேஸ் போட்டுட்டார். ஓக்கே .தெரு மக்கள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.மதவாதிகள் வந்து மிரட்டிட்டு போறாங்க . இதுக்கெல்லாமா ஒரு மனைவி தன் 2 குழந்தைகளை கூட்டிட்டு கோவிச்சுட்டு அப்பா வீட்டுக்கு போவாங்க . பொதுவா இந்த சம்சாரங்க பட்டுப்புடவை எடுத்து தர்லை,தன் பேச்சை கேட்காம புருஷன் தன் அம்மாவுக்கு புது டூத் பிரஷ் வாங்கிக்குடுத்து 50 ரூபா தண்டம் பண்ணிட்டார்னு முக்கியமான பிரச்சனைக்குத்தானே அம்மா வீட்டுக்கு கோவிச்சுட்டு போவாங்க?


3. படத்துல முதல் பாதி வரை சராசரி ஆளா, கொஞ்சம் பயந்த சுபாவமா உள்ள ஹீரோ கோர்ட் காட்சிகளில் அநாயசமா , கம்பீரமா பேசுவது எப்படி? அதுவும் ஜட்ஜே வியக்கும் வண்ணம் பட்டாசை கிளப்பறாரே? ஒரு வை கோவோ ஒரு ஆ ராசாவோ அப்படி செஞ்சாங்கன்னா பேசிக்கலா அவங்க லாயர்ஸ் அல்லது சட்டம் படிச்சவங்க. ஆனா ஹீரோ அதிகம் படிக்காதவர். பயந்த சுபாவம் உள்ள அவர் கோர்ட்டை பார்த்து நடுங்க வேணாம்? விஜய் டி வி கோபிநாத் ரேஞ்ச்சுக்கு அவர் விளாசுவது ரசிக்க முடிஞ்சாலும் லாஜிக் உதைக்குதே?



4. பகவான் கிருஷ்ணரா ஒரு கேரக்டர் கொண்டாரமலேயே இந்தப்படத்தை  எடுத்திருக்க முடியும். இன்னும் ஓப்பனா சொல்லனும்னா படம் ஸ்லோ ஆகறதுக்கு காரணமே கடவுள் வரும் அந்த  23 நிமிட காட்சிகளே! 



5. பகவான் கிருஷ்ணர் தன் அவதாரத்துல  கைல சங்கு சக்கரம் சுத்திட்டு இருந்தார் ஓக்கே அதுக்காக நவ நாகரீக இளைஞனாக வருபவர்  கைல எந்நெரமும் பைக் சாவியை சுத்திட்டே எதுக்கு இருக்காரு? மகா எரிச்சல். 


http://images.jagran.com/inext/Inext_p_ebolly_12aug465.jpg


6. பகவான் கிருஷணர் தன் விஸ்வரூபத்தை கமலுக்கு முன்னாடியே காட்டனும்கறதுக்காக ஹீரோ முன்னால் அவதார தரிசனம் தர்றார், ஓக்கே  ஆனா அப்போ கட் ஷூ போட்டிருக்காறே? அது எப்படி? இது வரை வந்த சாமி படங்கள்ல வெறும் பாதங்கள் தானே? கடவுளும் செப்பல் ஆர் ஷூ போடனும்னா அப்புறம் அவரும் சராசரி மனிதன் தானா? 


7. ஹீரோ கோர்ட்ல வாதிடும்போது திடீர்னு கிறு கிறுனு வந்து மயக்கம் வர்ற மாதிரி கீழே விழறாரு. அப்போ ஜட்ஜே பதட்டம் ஆகி எந்திரிக்கறாரே? ஏன்? ஆனானப்பட்ட புரட்சித்தலைவிக்கே கர்நாடகா ஜட்ஜ் எந்திரிக்கலையே? ஒரு சாதாரண சாட்சி மயங்குனதுக்கு ஒய் சோ மெனி பட படப்பு? 


8. ஹீரோ கடவுளுக்கெதிரா வழக்கு போட்டதும் ஆரம்பத்துல பரிகாசம் செஞ்ச மக்கள் பின் அவருக்கு ஆதரவா இருந்தது ஓக்கே, ஆனா கோர்ட்ல அவர் சாதாரணமா மயக்கம் போட்டதுக்கு  என்னமோ ஒளி விளக்கு எம் ஜி ஆர் ரேஞ்ச்க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியோட பிரார்த்தனை பண்றது எல்லாம் ஓவரோ ஓவர், நல்ல வேளை இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு அப்டினு பாட்டெல்லாம் போடலை.


9. இந்தப்படத்துக்கு போஸ்டர் டிசைன் யாரு? வேஸ்ட்.  காமெடிப்படமா? மெலோ டிராமாவா? என யூகிக்க முடியாத படி ரொம்ப சராசரியா இருக்கு.. 


10. அக்சய் குமார் கடவுளா வர்ற சீன்ஸே தேவை இல்லைங்கறப்போ அவர் பைக்ல விஜய் மாதிரி சர்க்கஸ் எல்லாம் பண்றது செம காமெடி. பை த பை ஒரு ஜாலி கேள்வி. கடவுள் பாட்டுக்கு தனியா வந்துட்டாரே? ஜோடியையும் கூட்டிட்டு வந்தார்னா கொஞ்சம் ரொமான்ஸும் நடந்திருக்கும் , ஜாலியா டைம் பாஸ் ஆகி இருக்கும்

 http://www.sonakshisinhawallpapers.com/wp-content/uploads/2011/02/sonakshi-sinha-in-black-hot-wallpapers-500x375.jpg



சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புவர்கள் , ஹீரோயிசம் , ஃபைட், தாதா கதை பார்த்து சலித்தவர்கள் பார்க்கலாம். பெண்கள் ரசிச்சு பார்ப்பாங்க.. ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன் 


Thursday, June 14, 2012

SHANGHAI -பொலிட்டிகல் க்ரைம் த்ரில்லர் - பாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0tuuoJCEi45pwrrgif75vBNK5OvIk5qqFL_F7Ot5G7XdnTI0EQiMA0bt42cxxJhM_7k4u7dzVOgXZYu7wfeWpbmfmKHza62OkuBk7Igswedfq4XfXq7wFOZf_hChnRj8dwLEkW_fIHFo/s1600/Bollywood+Movie+Shanghai+Desktop+Wallpaper.jpg
ஒரு வித்தியாசமான க்ரைம் சப்ஜெக்ட் தான். ஏ செண்ட்டர் ரசிகர்களை மட்டுமே கவரும் என்றாலும்  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கவேண்டிய ஒரு படம் தான் இது.. சாலை விபத்து என்னும் போர்வையில் ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்படறார்.. அது பற்றிய போலீஸ் விசாரணைகள் தான் படம்.. ஹை கிளாஸ் ஆடியன்ஸ்க்கு புரிஞ்சா போதும்னு டைரக்டர் நினச்சதுதான் திரைக்கதையின் ஒரே மைனஸ்.. என்னால முடிஞ்சவரைக்கும் எளிமைப்படுத்தி கதை சொல்றேன்


ஐ ஏ எஸ் ஆஃபீசர் கிருஷ்ணன் ஐபிபி (IBP)யோட வைஸ் சேர்மேன் ((India Bane Pardes/ International Business Park).. பாரத் நகர்ங்கற இடத்துல ஒரு பிஸ்னெஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நடக்கப்போகுதுன்னு அங்கே வர்றார்.. நாட்டின் முதல்வர் மற்றும் கட்சி ஆள்ங்க கிட்டே நல்ல பேரும், மதிப்பும் இருக்கறதால அவருக்கு பிரமோஷன் வரப்போற நேரம்.. 

ஹீரோயின் ஷாலினி ((Kalki Koechlin) ஃபாரீன்ல போய் படிச்சுட்டு வந்த பொண்ணு.. இவர் அப்பா ஒரு ஆர்மி ஆஃபீசர். IBP  நிறுவனம் தான் நடத்தப்போகும் பிராஜக்ட்டுக்காக அந்த ஏரியா மக்களை அப்புறப்படுத்தப் பாக்குது.. அதை ஹீரோயின் எதிர்க்கிறார்,, இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட .. ஹீரோயினோட முன்னாள் ஆசிரியரும், இந்த ஐ பி பி நிறுவனத்துக்கான எதிர்க்குழு தலைவருமான டாக்டர் அஹமத்(Dr. Ahemad )எதிர்ப்புப்பிரச்சாரத்துக்காக பாரத் நகர் வர்றாரு. 

 நம்ம ஊர்ல எப்படி அன்னா ஹசாரே ஊழலுக்கெதிரா தனி நபரா போராடுனாரோ, மக்கள் அபிமானத்தை பெற்றாரோ அந்த மாதிரி இவர் தன் பேச்சால் மக்களை எச்சரிக்கைப்படுத்தறார்.. அது பலருக்குப்பிடிக்கலை.. பல மிரட்டல்கள் வருது./. அதை அவர் பொருட்படுத்தலை.. போலீஸ் உதவியுடன், பல அரசியல் தலைவர்கள் சப்போர்ட்டோட அவர் தனது எதிர்ப்புப்பிரச்சாரத்தை பேசி முடிக்கறார்.. 



http://g.ahan.in/hindi/Shanghai%20Movie%20First%20Look%20Launch/Shanghai%20Movie%20First%20Look%20Launch%20(23).jpg

 பேசி முடிச்சதும் அவர் ஒரு டாட்டா ஏஸ் மாதிரி ஒரு டெம்ப்போ வேனால் நட்ட நடு ரோட்ல மக்கள் பார்க்க பார்க்க அடிச்சுத்தூக்கி வீசப்படுறார்,, டெம்போ டிரைவர் போலீஸால் பிடிக்கபட்டு விசாரனைக்கு உட்படுத்தப்படறார் .. அப்போதான் ஹீரோ அறிமுகம். இவர் ஒரு வீடியோ கிராஃபர். கம் போர்னோ கிராஃபர். அவரும் இந்த கேஸ் துப்பறிதலில் ஹீரோயினுக்கு உதவியா இருக்கார்.. ஹீரோவோட வேலையே ஹீரோயினுக்கு உதவியா இருக்கறதுதானே?


ஐ ஏ எஸ் ஆஃபீசர் கிருஷ்ணன் இந்த கொலைக்கேஸ் கண்டுபிடிக்கும் குழுக்கு தலைவர்.. யார் அவரை கொலை செஞ்சாங்க? அந்த நகர் மக்கள் என்ன ஆனாங்க? ஹீரோயின் என்ன ஆனார்?  என்பதெல்லாம் திரையில் காண்க..


படத்தோட ஓப்பங்க் சீன்லயே Prosenjit Chatterjee க்கும் ,ஹீரோயின் ((Kalki Koechlin)க்கும் ஒரு செம டீப் லிப் டூ லிப் சீன் இருக்கு. கமலுக்கே சவால் விடும் சீன் அது.. யோவ்.. ஒரு பெரிய மனிஷன் பண்ற வேலையா இது?ன்னெல்லாம் கேட்கப்படாது.. ஏன்னா இந்தக்காலத்துல பெரிய மனுஷனுங்க தான் சின்னத்தனமான வேலை எல்லாம் செய்யறாங்க.


 ஹீரோயின் பற்றி ஒரு சின்ன விமர்சனம்.. பெண்ணியவாதிகள்.மாதர்சங்க மாதாக்கள் என்னை மன்னிக்க .. தமிழனுக்கு 1% கூட பிடிக்காத முக வெட்டு, ஹேர் ஸ்டைல். அவரோட உதடு.. கொங்கு மண்டல பாஷைல சொன்னா ஒப்பிட்டு வாய்.. அது என்ன புது பிட்டு?ன்னு கேட்கறவங்களுக்கு ஒப்புட்டு என்பதே பேச்சு வழக்கில் ஒப்பிட்டு ஆனது .. அது சப்பாத்தி போல் சைஸில் இருக்கும், இனிப்பானது.. 


அன்னா ஹசாரே மாதிரி விழிப்புணர்வு ஊட்டும் தலைவரா வந்து கிஸ் அடிச்சு கிளுகிளுப்புணர்வு ஊட்டிய  சட்டர்ஜி படத்துல மொத்தமே 20 நிமிஷம் தான் வர்றார்.. ஆனாலும் மொத்தக்கதையும் இவரை சுத்தித்தான்


வீடியோகிராஃபரா வர்ற ஹீரோ (Emraan Hashmi) அக்மார்க் தமிழ் ஹீரோ மாதிரி.. அலட்சியம், தெனாவெட்டு, பெண்கள் என்றால் பம்முதல் டைம் கிடைக்கும்போது ஆக்‌ஷன். குறை சொல்ல முடியாத நடிப்பு. 


ஐ ஏ எஸ் ஆஃபீசரா வர்றவர் டிரஸ்சிங்க் சென்ஸ், பாடி லேங்குவேஜ் கன கச்சிதம்.. செம நடிப்பு. படத்துல நடிப்பதற்கு முன் நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருப்பார் போல 


http://www.washingtonbanglaradio.com/images05/Kalki-Koechlin.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. Vassilis Vassilikos -ன் இஜட் (Z) என்னும் நாவல் தான் படத்தின் திரைக்கதை என்பதை டைட்டிலிலேயே கவுரமாக ஒத்துக்கொண்டது.. ஏன்னா இப்போ வர்ற படங்கள் 70% தழுவலா இருந்தாலும் யாரும் அதை ஒத்துக்கறதில்லை


2. சாகப்போற கேரக்டருடன்  ஹீரோயின் கில்மா, அப்புறம் ஒரு ஹீரோ அறிமுகம் தமிழுக்கு புதுசு..  ஐ மீன் தமிழனுக்கு புதுசு. 


3. திரைக்கதை போர் அடிக்காமல் விறுவிறுப்பாக செல்வது.. ஒரு கொலைக்கேஸை , அதன் விசாரணையை  நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்தது ( மலையாளத்தில் மம்முட்டி நடித்த சி பி ஐ டைரிக்குறிப்பு போல் )


4. படத்தில் வரும் பல கேரக்டர்களுக்கான ஆடை வடிவமைப்பு கன கச்சிதம். அப்புரம் பின்னணி இசை நச்.. 

5. ஹீரோவுடன் ஹீரோயின் டூயட் இன்ன பிற அபத்தங்கள் ஏதும் செய்யாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வது.. 





Kalki Koechlin in Dev D (12431) size:1280x1024



 இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. படத்துல வர்ற அந்த அன்னா ஹசாரே பார்ட்டி ஹீரோயின் கூட கில்மா பண்ணாரா? இல்லையா?ங்கறதை  தெளிவா  சொல்லலை.. சென்சார் அனுமதி அளிச்ச வரை காட்டி இருக்கலாம்.. அல்லது சிம்பாலிக் ஷாட்டாவது வெச்சிருக்கலாம்.. ஏன்னா தமிழன் காலம் காலமா கில்மா நடந்துச்சா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்க 1 கேமரா புலி மான் வேட்டையாடும் படம், 2ஃபேன் ஓடும்போது அதுல சேலை மாட்டுவது, 3.ஏதோ ஒரு பூவில் வண்டு மகரந்தம் உறிஞ்சுவது போல் சிம்பாலிக் ஷாட் பார்த்து பழக்கம் ஆகிடுச்சு.. சும்மா லிப் கிஸ் பண்ணினார்னு மட்டும் தான் காட்டி இருக்கீங்க 


2.  பொதுவா புகழ் பெற்ற தலைவர்களை கொலை பண்ண திட்டம் போடுறவங்க லாங்க் ஷாட்ல கன் மூலமா சுடுவாங்க அல்லது பாம் வெச்சு போட்டுத்தள்ளுவாங்க.. இப்படி கேனத்தனமா  பப்ளிக் பார்க்கறப்ப 400 ரூபா வாடகைக்கு வந்த டெம்போ வேன்ல 45 கிமீ வேகம் மட்டுமே போகக்கூடிய வண்டில வந்து ஆக்சிடெண்ட் பண்ணுவாங்களா?


3. ஹீரோ ஒரு போர்னோகிராஃபர்.. அவர் தன் ரூம்ல கில்மா படம் ஷூட் பண்ணிட்டு இருக்கார்.. அப்போ ஹீரோயின் கதவைத்தட்டறாங்க..கில்மாபடத்துல நடிச்சுட்டு இருக்கற ஹீரோ & ஹீரோயின் டிரஸ் எல்லாம் எடுத்து போடறதுக்குள்ள ஹீரோ கதவைத்திறக்கறார். ஹீரோயின் அவங்களை பார்க்கறாங்க- இந்த சீன் படத்துல எதுக்கு? வழக்கமா ஹீரோயினுக்கு மூடு ஏத்த ஹீரோ இந்த மாதிரி ட்ரிக்ஸ் பண்ணுவாரு.. ஆனா இந்தப்படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன்ல தான் போகுது... எதுக்கு அந்த சீன்? ஆடியன்ஸை உசுப்பேத்தவா? 


4. விபத்து நடக்கும் ஷாட் ஒரு டைம் அல்லது 2 டைம் காட்டுனா ஓக்கே.. எதுக்காக படம் பூரா அடிக்கடி அது ரிப்பீட் ஆகுது? 



சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் கண்ணியமான காட்சி அமைப்புகள் தான்.. கொஞ்சம் பொறுமை வேண்டும்.. படத்தில் வசன ஆதிக்கம் அதிகம்.. ஹிந்தி தெரியாமல் படம் பார்ப்பவர்கள் சலிக்கும் அளவு வசனம் இருந்தாலும் காட்சி அமைப்புகள் காப்பாற்றிடும்.. ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்..  


Shanghai Review (Shanghai Movie Stills)