Monday, August 08, 2011

கருங்காலி - அங்காடித்தெரு அஞ்சலியின் கில்மா படமா?! - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/_VtsKRZCn0cc/TQM412jJzEI/AAAAAAAABCQ/vxfl5HEmUT4/s320/karungali_audio_launch_posters_01.jpg

மலையாளப்படங்கள்ல வர்ற மாதிரி கில்மா படம் எடுக்கனும்னு நினைக்கறவங்க  நேரடியா அப்படியே படம் எடுக்கனும்.நாயகன், தளபதி ரேஞ்சுக்கு தாதா கதை அல்லது லோக்கல் ரவுடி கதை எடுக்க ஆசைப்பட்டா அப்படி எடுக்கனும், ரெண்டுங்கெட்டானா இந்த 2 கதையையும் சேர்த்து எடுக்க ஆசைப்பட்டா இப்படித்தான் வகைப்படுத்த வழி இல்லாம ரெண்டுங்கெட்டானா படம் அமைஞ்சிடும்.. 

பூ மணி, பூந்தோட்டம் மாதிரி மென்மையான படங்களை கொடுத்து தனக்குன்னு நல்ல இமேஜை மெயிண்டெயின் பண்ணி வந்த மு களஞ்சியம் திடீர்னு இந்தளவு இறங்கிப்போய் ஆண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் பண்ணுவார்னு யாரும் எதிர்பார்க்கலை. இருக்கற கொடுமை பத்தாதுன்னு அண்ணன் தான் இதுல ஹீரோ வேற .. முத படத்துலயே அண்னனுக்கு 3 ஜோடி

ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கிட்ட ஒரு லேடி டாக்டரை போலீஸால் துரத்தப்ப்படும் ஒரு கிரிமினல்  கம் மர்டரர் காப்பாத்தறான்.உடனே எந்த வித லாஜிக்கும் இல்லாம அந்த கேனை டாக்டர் அந்த கேவலமான ரவுடியைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு தலை கீழா நிக்குது .

ரவுடியோட ஃபிளாஸ்பேக் கதை .பொட்டலம் விக்கற ஆள் கிட்டே எடுபுடியா வேலைக்கு சேர்ந்த ஹீரோ 18 வருஷங்கள் அவன் கூட ஒண்ணா ஒர்க் பண்ணிட்டு தனியா தொழில் பண்ண அவனையே போட்டுத்தள்ளிடறான், அவன் கூடவே இருக்கற ஒரு ஃபிகரை தாலி மட்டும் கட்டாம மேட்டர் எல்லாம் முடிச்சிடறான். மாசமான அவ தாலி கட்ட சொல்றப்ப இரக்கமே இல்லாம அவளை போட்டுத்தள்ளிடறான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXEG3JzpERvH-Gkz41iZZSFH7CahFSN1wDyMTXQh5vVDNLEQNLCj5UYvr1wMxXVsJdn_nsQx5jpqj0hZMht9LNJDlV7dcnOL7NFL84HEzOvdnWMTaLoztDg_CjraYcW0wZ6FP0md5HFun-/s1600/anjali+in+karungali+tamil+movie+stills+3.jpg

இந்த கேடு கெட்ட ஃபிளாஸ்பேக்கை கேட்ட பின்னும் அந்த லேடி டாக்டர் அந்த ரவுடியை மேரேஜ் பண்ணிக்கறாங்க.குழந்தை பாக்கியம் இல்லாத அஞ்சலி ட்ரீட்மெண்ட்டுக்காக இந்த டாக்டர்ட்ட வர்றாங்க. அவங்களுக்கு ஒரு ஃபிளாஸ்பேக்.. அந்த கதையை தன் ரவுடி கணவனிடம் எதேச்சையா சொல்றாங்க. உடனே ரவுடிக்கு அஞ்சலியை மடக்கிடனும்னு  நியாயமான (!!!!!!!!!) ஆசை வந்துடுது. 

அஞ்சலியோட அபார்ட்மெண்ட்க்கு அவங்க தனியா இருக்கும்போது போய்  அவங்க மனசை கலைக்கறாரு ஹீரோ.. இது தினம் நடக்குது.. ஒரு 5 நிமிஷம்  அட்ஜஸ் பண்ணீக்கோ. உனக்கு குழந்தை நிச்சயம்ங்கறாரு ஹீரோ. ரொம்ப அப்பாவியான அஞ்சலி  என்ன பண்றாங்க? எப்படி நடந்துக்கறாங்க என்பதுதான் மீதி ஜொள்ளப்பட்ட கதை.

படம் ஆரம்பித்து முதல்  50 நிமிடங்கள் ரவுடி கஞ்சா கதை என்பதால் ரொம்பவே பொறுமை வேணும்..அஞ்சலியை கணக்கு பண்ண களஞ்சியம்  பண்ற முயற்சிகள் எல்லாம் பத்தாம் பசலித்தனமா இருக்கு. ( எங்க கிட்டே கேட்டிருந்தா பல நல்ல ஐடியாக்கள் வாரி வழங்கி இருப்போமில்ல?)

ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தை பார்த்து பின் பாதி கதையை எடுத்திருப்பதும் 14 ரீல்கள் கரெக்ட் பண்ண முன் பாதியை சேர்த்திருப்பதும் நல்லா தெரியுது.



http://www.cinibox.com/content/wp-content/uploads/2011/07/karungali_movie_stills_08.jpg

கில்மா படத்தில் வந்த ஜொள்மா டயலாக்ஸ்

1. உழைச்சு சம்பாதிச்ச காசைத்தான் சேர்த்து வைக்கனும்,ஏமாத்தி ஊரை ஏய்ச்ச காசை அப்பப்போ செலவு பண்ணிடனும்.

2.  நான் இன்னும் எத்தனை பொண்ணுங்களை பார்க்கப்போறேனோ, எவ கிட்டே அடங்கப்போறேனோ? எனக்கே தெரிலயே?

3,   அவன் அடையவே முடியாத பொக்கிஷமா நான் இருப்பேன்..

4. அவனோட டார்கெட் ரெண்டே ரெண்டு தான் 1. பணம் 2 பொண்ணுங்க.

5. பெட்ரூம்க்குள்ளே லேப்டாப், கம்ப்யூட்டர், செல் ஃபோன் இதெல்லாம் இருக்கவே கூடாது.. 

6. நான் தெரியாமத்தான் கேட்கறேன், பெட்ரூம்க்குள்ளே எதுக்கு பிஸ்னெஸ்?

7. இந்த உலகத்துல பறவைகளை எங்கே பார்த்தாலும் எனக்கு உன் ஞாபகம் தான் வருது. 

8.  தேங்காய்க்குள்ளே இருக்கற தண்ணி மாதிரி எனக்கே தெரியாம நீ எனக்குள்ளே இருந்திருக்கே!

9.  என் ஒயிஃப் என் கிட்டே பேசற முத வார்த்தை ஐ லவ் யூ வா இருக்கனும்.. 

10.  என் புருஷன் என்னை பெட்ரூம்ல கெட்ட வார்த்தை எல்லாம் சொல்ல சொல்றாரு. 

அப்டி என்ன சொன்னாரு?

ஐ லவ் யூ சொல்ல சொல்றாரு. 






http://www.w3newz.com/wp-content/uploads/2011/07/karungali_6-hot-stills-500x283.jpg
11. உன்னை என்னுடன் சேர்த்து வைக்க சொல்லி நான் வேண்டிக்கிட்ட சாமி இதுதான்

12.  டாக்டர்ட்ட போய் செக்கப் பண்ணிக்கிட்டா  யார்ட்ட குறை இருக்குதுங்கறது தெரிஞ்சிடும். அப்புறம் குற்ற உணர்ச்சி வந்துடும். 

13.சென்னை 12 கிமீ நீளம், 12 கிமீ அகலம் இதுக்குள்ளே தான் சுத்தி சுத்தி வரனும்.. எப்போ வேணாலும் நாம் மறுபடி மீட் பண்ணுவோம்..

14.  பார்ட்டிக்கு வாங்க டியர்..

அடப்போம்மா.. நீ இல்லாதப்ப அந்த பார்ட்டியை உஷார் பண்ணலாம்னு நினைச்சா...



http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/karungali-anjali-hot-stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அஞ்சலியை களஞ்சியம் மடக்கும் காட்சியில் பெண்களையே  சூடேத்தும் அளவுக்கு காட்சியை அமைத்து விட்டு டி வி விளம்பரங்களில் பெண்கள் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம் என அஞ்சலி வாயாலேயே சொல்ல வைத்த விளம்பரம் எடுத்த கெட்டிக்காரத்தனம்..

2.  அஞ்சலியை இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCXH-MDhlba6vZVmJnichjczSEiwk7vNfMGye3FfZhOoSOIR7CAa8gFk8YQo4-AEVv8zcGVc3wvjNiI01V0Sv2HImSmaPJ9zpIWBxEtdI_h7f5nLVeIzqa4aMS-E7zHLZqPoOWAUWLJlO/s1600/karungali-anjali-hot-stills-4.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நம்ம பிளாட்ல குடி இருக்கற பொண்ணு வேற ஒரு ஆள் கூட தினம் பழகறா என டயலாக் பேசும் அலெக்ஸ் பைனாகுலரில் எதிர் அபார்ட்மெண்ட்டில்  அஞ்சலியை பைனாகுலர் மூலம் நோட் பண்றாரே, அது எப்படி? ( அதாவது எதிர் வீதி )

2. முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆளை தன் வீட்டுக்கு அழைத்து வரும் அஞ்சலியின் கணவன் சிக்கன் பார்சலை அவனிடம் கொடுத்து என் மனைவிட்ட குடுங்க, நான் இந்த பில்டிங்க் ஓனரை பார்த்துட்டு வந்துடறேன் அப்டினு சொல்றாரே, அது எப்படி?அவனுக்கு அவர் வீடு எப்படி தெரியும்?

3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ அடியாள்களுடன் உயிருக்கு போராடும் காட்சியில் அவரை சுற்றி ஒரு குரூப் அவரை காப்பாற்ற அல்லது அவருக்கு உதவி செய்யாமல் அவர்  போடும் ஃபைட்டுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கொடுக்குதே, அது ஏன்?

4. அஞ்சலியின் கணவன் அஞ்சலியின் க்ளாஸ்மேட்டாகவும் ,லவ் மேரேஜ் பண்ணினவராகவும் காட்டப்படுகிறார், அவர் திடீர் என ரகுவரன் (புரியாத புதிர்) ரேஞ்சுக்கு சைக்கோ மாதிரி ஏன் கத்தறார்? ஏன் பளார்னு அறையறார்? ( 5 தடவை) ஓவர் ஆக்டிங்க் வேற

5.  ஹீரோ, அஞ்சலி, அஞ்சலியின் கணவன் என 3 பேர் மட்டுமே ஹாலில் இருக்கும்போது வழக்கமா எந்த வேலையா இருந்தாலும் மனைவியை விரட்டும் கேரக்டரான கணவன் நீ இவர்ட்ட பேசிட்டு இரு, நான் போய் என் பர்சை எடுத்துட்டு வர்றேன் அப்டினு சொல்லி 12 நிமிஷம் காணாம போறாரே.. அது எப்படி?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih46Byc3zZKwj3Xd70ADXVzOCop-oiYPvrhZvi8lFGeJyfvRTxU_MP8OVmFB6wDqSFd7fx9R4LHbhUw9pjc8DHY4PNYqa6LgW0xxZcXTL2Hw1KMchwU5cRUbAU6uXNv43P6ylbxT0uwsU/s1600/karungali-angali-hot-stills-004.jpg

6. க்ளைமாக்ஸில்  தான் யார் என வெளீப்பட்டுவிடுவோமோ என அஞ்சும் ஹீரோ ஓடிப்போய் எஸ் ஆகனும் ,அல்லது மனைவியை போட்டுத்தள்ளனும், அதை விட்டு மரத்தின் மீது வாலண்ட்ரியாய் காரை இடித்து அவ்வளவு சீரியஸ் ஆக ஆபத்தான நிலைக்கு  தான் மட்டும் ஏன் போகனும்?

7.  என்னதான் கிராமத்துப்பெண்ணாக காண்பிக்கப்பட்டாலும், அப்பாவி என சொல்லப்பட்டாலும், ஒரு அறிமுகம் இல்லாத ஆள் வந்து டாக்டர் தான் என்னை அனுப்பினார், உங்களூக்கு குழந்தை உருவாக்க என்னை உங்களை உபயோகப்படுத்திக்க சொன்னார் என்று சொல்லும்போது டாக்டரிடம் ஏன் க்ராஸ் செக் செய்ய்யவில்லை. ?

8. உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கா?ன்னு செக் பண்றேன், உணர்ச்சி நரம்புகள் வருதான்னு பார்க்கனும், உங்க அடி வயிற்றுல கை வைக்கறேன் கண்டுக்காதீங்க என ஹீரோ சொல்லிட்டு  அஞ்சலியை என்னென்னமோ பண்றாரு, ஆனா பாப்பா எதுமே கண்டுக்கலை, அவ்வளவு அப்பாவியா?

9. ஹீரோ சேரன் மாதிரி நடிக்க முயற்சி பண்றார், ஆனா அவருக்கு மன்சூர் அலிகான் பாவனைகள் தான் வருது.. இதுல ஏகப்பட்ட க்ளோசப் காட்சிகள் வேற.

10. அஞ்சலியின் கணவன் மாதிரி ஒரு வடி கட்டிய முட்டாளை நான் இதுவரை பார்த்ததே இல்லை.. இதுல இவர் பெரிய ஆஃபீசர் வேற.. ஹூம்..

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/karungali_movie-2011.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்ல சரியா ஓடாது.. பி செண்டர்ல 25 நாட்கள். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடும்..

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி , கமெண்ட் - கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்,சீன் இல்லை, ஆனாலும் சூடேற்றும் காட்சிகள்க்கான லீடு உண்டு.

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.



http://3.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TQN9xlVP9NI/AAAAAAAABts/RWb9fU3FJ3g/s1600/Karungali_+MOvie_+Gallary_25.jpg

பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன் இவர்களுடன் மோதலா? அஜீத் பேட்டி - காமெடி கும்மி

http://www.mirchigossips.in/wp-content/uploads/2011/04/mankatha-movie-stills-1-600x399.jpg

ரஜினி என் கடவுள்!

''என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத்.

சி.பி - என்ன தல!!! ரசிகர் மன்றமும் வேணாம், வெளம்பரமும் வேணாம்னா எப்படி? மார்க்கெட்டிங்க் டெக்னிக்கே தெரியாம இருக்கீங்களே?


1.  ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?''


'' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு  சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். 

ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக் கெட்டவன்’னு 'மங்காத்தா’ கதையைச் சொன்னார். ரொம்பப் பிடிச்சது. 'நானே நடிக்கிறேன் வெங்கட்’னு சொல்லிட்டேன்!''

சி.பி - வாலி மெகா ஹிட் ஆச்சு,.காரணம் திரைக்கதை பக்கா, + கேரக்டர்ஸ் கம்மி, ஆனா இதுல ஏகப்பட்ட கேரக்டர்ஸ், பத்தாததுக்கு உங்க கெட்டப் வேற நரைச்ச தலை முடியோட.. கொஞ்சம் டவுட் தான்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg78M1Waghr-ft6VYWswNvEOqAFXLYGl3IEKaWM9xml4TDigNF2hkX3GUB2KGgRwO5D32PQjCvwheBCe-D_w7TzcEvPhwGFlfHCH9TceZVP08C1G2HXs8Nayb5QSS3UtSq7WmX_g76_RRKZ/s1600/phoca_thumb_l_mankatha-stills-1.jpg
2. ''படத்தில் உங்கள் கேரக்டர்பற்றி சொல்லுங்க?''


''என் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். படத்தில் நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்!''


சி.பி - ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் தமிழ்ல எடுபட்டது ரஜினிக்கும், சத்யராஜ்க்கும் மட்டும் தான், பார்ப்போம் உங்க ராசியை.. வாலில நெகடிவ் கேரக்டரை பேலன்ஸ் பண்ண  இன்னொரு பாசிடிவ் இருந்தது..


3. ''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?''


''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''


சி.பி - பாலாவின் நான் கடவுள் நீங்க மிஸ் பண்ணி இருக்கக்கூடாத படம் .. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கருணைக்கொலை செய்யும் சீன்ல நடிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்களாமே?


4. ''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?''

''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''


சி.பி - எந்த ஊர்லயாவது யாராவது அவர் பேரை சொல்லி மிஸ் யூஸ் பண்ணி இருப்பாங்க.. அதான் தல பொங்கிடுச்சு..!!


http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/03/ajith-trisha-lakshmi-rai-mankatha-movie-stills.jpg

5. '' 'ஆடுகளம்’ ஆறு தேசிய விருதுகளை வாங்கி இருக்கு. தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போவதை உணர்கிறீர்களா?''


''ஒட்டுமொத்த சினிமாவையும்பற்றி பேசும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கா இல்லையான்னு தெரியலை. நம் தமிழ் சினிமா நண்பர்கள் வெற்றி பெறுவது சந்தோஷமான விஷயம். 'காதல் கோட்டை’ படத்துக்காக அகத்தியன் தேசிய விருது வாங்கியபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போதும் அதே சந்தோஷம்தான்!''

சி.பி - ஏகன்,ஆஞ்சநேயா மாதிரி படங்கள்ல நடிக்கறதை கட் பண்ணிட்டு விருதுக்குன்னு ஒரு படம் பண்ணுங்க..  

Actress Thrisha hot wallpaepr



6. '' 'பில்லா-2’ எப்படிப் போயிட்டு இருக்கு?''


''50 நாள் ஒரே ஷெட்யூல்ல ஹைதரா பாத்ல ஷூட்டிங் போயிட்டு இருக்கு. அடுத்து ஐரோப்பிய நாடுகளில் ஷூட் பண்ண இருக்கோம். நவம்பர் மாதம் ஷூட்டிங் முடிஞ்சவுடன், 'பில்லா-2’ பத்தி உங்ககிட்ட நிறையப் பேசுறேன்!''


சி.பி - இதுலயும் வாக்கிங்க், கூலிங்க் கிளாஸ் தொடருதா?


7. ''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''


''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''


8. ''ஆட்சி மாற்றம்பற்றி..?''

''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''  

சி.பி - என்னை மிரட்றாங்கன்னு தைரியமா நீங்க மேடைல சொன்னப்பவே நீங்க எந்த கட்சியையும் சாராதிருப்பவர்னு தெரிஞ்சிடுச்சே? 

http://moviestills.in/wp-content/uploads/2010/09/laxmi-rai-hot-navel-1.jpg


9. ''ஷாலினியும் அனோஷ்காவும் எப்படி இருக்காங்க?''


''அனோஷ்கா, இப்போ எல்.கே.ஜி படிக்கிறாங்க. அவங்களுக்கு இப்போ ஏகப்பட்ட சொந்தங்களோட அன்பும் அரவணைப்பும் வேணும். அதனால், அப்பா, அம்மானு எல்லோரையும் வீட்டுக்குள் கூட்டி வந்து கூட்டுக் குடும்பமா மாத்திட்டேன். வாரத்துக்கு ஒருமுறை ஷாலினியோட அப்பா, அம்மாவும் வந்து பாப்பாங்க. என்னை மட்டுமே நம்பி வந்தவங்க ஷாலினி. 11 வருஷமா எங்க குடும்ப வாழ்க்கை சந்தோஷமாப் போயிட்டு இருக்குன்னா, அதுக்கு முழுக் காரணமும் ஷாலினிதான். எத்தனை பிறவி எடுத்தாலும் அவங்களுக்கு நான் நன்றி சொல்லிட்டே இருக்கணும்!'

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxuKp-BZyhbK8BXILpom_oaHOn4AJQuWnJZGmE5NvjWX6Dk1Z1eE70RhmahPzGPT1a_gDq-0UUt8BHBpgnhnXG98pOx7VDwpLhpCHYdPEv2SYXpKRSja6AgSYE458oq2pxcJ5yOYeGNzI/s1600/Ajith+(6).jpg a

thanx - vikatan

மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!


1.உன் மன பாரங்களை என்னிடம் இறக்கி வைக்கையில் நான் ஆறுதல் மொழிகளால் உன்னை ஏற்று அணைத்துக்கொள்கிறேன்

------------------------

2. ஜெயித்துக்கொண்டே  இருப்பேன் -நான் வளரும் வரை, என்னை வெறுத்தவர்கள் என்னை வாழ்த்தும் வரை

-----------------

3. நீ சோகமாகும்போது நான் சோகம் ஆவதில்லை, உன்னை உற்சாகப்படுத்தும் கடமை எனக்கு உண்டு

-------------------

4. உன் விழிகளில் இருந்து ஒரு வரிக்கவிதையாகிய கண்ணீர் வந்து விடவே கூடாது என்று தான் வரிக்கு வரி  கவனத்துடன் கவிதை எழுதுகிறேன்

-----------------

5.பொங்கி வரும் பாலை தண்ணீர் ஊற்றி அடக்குவது போல் கோபம் கொள்ளும் உன்னை என் கண்ணீர் மட்டும் தான் மட்டுறுத்துகிறது

-----------------------------



6. நெயில் பாலீஸ் விரல்களையே பார்த்து சலித்த கண்களுக்கு மருதாணி விரல்களும் ,இயற்கை நக விரல்களுமே அழகிய அலங்காரமாய் காட்சி அளிக்கும் பெண்களுக்கு

----------------------

7. அனுஷ்காவுக்காக தவம் கிடக்கும் செல்வராகவன்!#அண்ணே, இப்போத்தானே 2வது கல்யாணம் முடிச்சீங்க? 2மாசமாவது போகட்டும்ணே

------------------

8. ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் -அசின்#OK மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது ஒரு டர்க்கி டவலை போர்த்திக்குங்க , கண் கூசுது

-----------------------------

9. லாரா தத்தா 3 மாத கர்ப்பம்! #கழக ஆட்சியில் நடந்த சாதனைகள்எல்லாம் அம்மையாரின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டதாக திரித்துக்கூறுவது வேதனை - கலைஞர்

-------------------------

10. மிஸ் சின்னத்திரை அழகியாக லீலாவதி தேர்வு! #சுமாராதான் இருக்கு ஃபிகரு, சதிலீலாவதி ஆக இருக்குமோ? டவுட்டு

-----------------------


11. த்ரிஷா மாப்பிள்ளை தொழிலதிபரா? என்ஜினீயரா? செப்டம்பரில் தெரியும்! #அவங்க 2 பேரும் எக்ஸாம் எழுதி ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்க்கா?

----------------------

12.ரஹ்மானுக்கே கத்துக் கொடுத்தவன் நான் -டி.ராஜேந்தர் #கத்தறதை கத்துக்குடுத்த கஜேந்திரா, நீவிர் வாழி!

-----------------------------
13. என்கேகேபி ராஜா நள்ளிரவில் கைது # அய்யய்யோ, நள்ளிரவில் அரெஸ்ட் ஆனா அவங்க அடுத்த 5 வருஷத்துல சி எம் ஆகிடுவாங்களே?ஆண்டவா, காப்பாத்து

------------------------------


14. எழுத்துக்களில் அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் பிம்பங்களில் அடையாளம் காண்பவர்கள் இன்னும் உழைக்க எனக்கு நினைவுபடுத்துகிறார்கள்

--------------------------------

15. இனி தப்பு பண்றவங்களுக்கு நான் தலைவலியா இருக்கப்போறேன் - விஜய்@ வேலாயுதம் #உங்க படத்தை பார்க்க வர்றவங்களையா சொல்றீங்கண்ணே?

------------------------


16. மேடம், உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது, DR கிட்டே உடம்பை காண்பிச்சு ட்ரீட்மெண்ட் எடுத்துக்குங்க. 

சாரி, நான் குணச்சித்திர நடிகை ஆச்சே? எப்படி என் உடம்பை காட்டுவேன்?

------------------

17. உன் காதலிட்ட நேருக்கு நேர் நின்னு பேசாம ஒரு சைடா நின்னு பேசறியே , ஏன்? 

என்னோடதுதான் ஒன் சைடு லவ் ஆச்சே?


-------------------------------

18. தலைவருக்கு ஊழலே வராது..

நிஜமாவா? எப்படி? 

அவருக்கு ழகரம் வராது, அதனால ஊழல்னு சொல்ல வராது

---------------------------

19. மிலிட்ரிமேனைத்தாண் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். 

ஏண்டி? மிலிட்ரிமேன்னா உயிரா? 

ம்ஹூம், மிலிட்ரி சரக்குன்னா உயிரு

------------------------------------


20. மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!

எனக்கு வேகம் பிடிக்காதுங்க,பேசஞ்சர் ஐ டி வேணா தரவா? # கலாட்டா கடலை

------------------------------


a

21. சார், வாரம் 3 நாள் வாசல் திண்ணைல படுத்துக்கறீங்களே? ஏன்?


சமச்சீர் கலவித்திட்டத்தை என் மனைவி ஆதரிக்கறா.. # ஜிகிடி

--------------------------

22. டியர், இஞ்சினியரிங்க் படிக்கறதுல உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இஞ்சி NEARING ஃபிகர்னு பேர் அடிக்கலாமே? # YELLOYISH WAIST GIRL

-------------------------------

23.பாமக கட்சி ஆளை லவ் பண்ணுனது தப்பா போச்சா? ஏன்?

என்னை மேரேஜ் பண்ணிக்குவீங்களா?ன்னு கேட்டா அதை இப்பவே எப்படி சொல்ல முடியும்?கறாரு..

---------------------

24. கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது.


ஓஹோ,யாரை வெச்சிருந்தா அந்த சலுகை உண்டு?

---------------------

25. ஈரோட்டில் 5 ரூபாய்க்காக  கண்டக்டருக்கு பெண் "பளார்'சமாதானம்செய்த போலீஸார்#அந்த ஃபிகர் பேரு ”அஞ்சு”கமா?

--------------------
 

Saturday, August 06, 2011

என்னை விரட்டும் சங்கீதம் நீ, எண்ணெய் மிரட்டும் சங்கடம் நான் -30 வகை எண்ணெய் இல்லாத சமையல் டிப்ஸ்

30 வகை எண்ணெய் இல்லாத சமையல் !

'ஹெல்த் கான்ஷியஸ்னஸ்' அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது... எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். இதற்கு உங்களுக்கு கைகொடுக்க வருகிறார் 'சமையல்கலை நிபுணர்’ நங்கநல்லூர் பத்மா.


 புரோட்டீன் ரிச் உசிலி, வடிகஞ்சி சூப், குழல் புட்டு என்று சத்தும், சுவையும் மிக்க ரெசிபிகளை அள்ளித் தந்து அசத்தியிருக்கும் அவர், ''சிலவற்றைத் தாளிப்பதற்கு மட்டும் சில துளி எண்ணெயைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி எண்ணெய் பயன்பாடு ஜீரோதான்.

அதேசமயம், சுவையில் துளியும் குறை வைக்காமல் விதம்விதமான அயிட்டங்களை தந்திருக்கிறேன். குறிப்பாக, மல்டி கடலை உருண்டை, வெஜிடபிள் ஸ்பெகட்டி, மல்டி பழ டெஸட் போன்றவற்றைச் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், தட்டு காலியாகும் வேகத்தைக் கண்டு மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படுவீர்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார். அவருடைய ரெசிபிகள், செஃப் ரஜினியின் அலங்கரிப்போடு இங்கே இடம்பெறுகின்றன.

களத்தில் இறங்குங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!

1.  மல்டி கடலை உருண்டை 


தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, உருட்டும் பதம் வந்ததும் (தண்ணீரில் போட்டால் உருட்டும் பதம்) இறக்கவும். பாதாம், பிஸ்தாவை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து... உடைத்த பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து, பாகுடன் கலக்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.


2.  வெஜிடபிள் கலவைக் கூட்டு 


தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச்  சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.

3.  மேத்தி ரொட்டி 

தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு,  பால் - 100 மில்லி, உப்பு -   தேவையான அளவு,

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.

4.  தேன் நெல்லிக்காய்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி, சர்க்கரை - 200 கிராம்.

செய்முறை: நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.

குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.

5.  நீர்க் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கும் நீரில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.

6.  வெஜிடபிள் குருமா

தேவையானவை: தக்காளி - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி  - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி.... பச்சைப் பட்டாணி,  நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும், தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலந்து, மிளகாய், தேங்காய் துருவலை அரைத்துச் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய்க்கு பதில்   தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.

7.  எள் உருண்டை

தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.  வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை   தனித்தனியாக பாகுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை  பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை  துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.

8.  வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப், கோஸ் (துருவியது) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும். நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே  சேவையின் மேல் தூவி சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்!  பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.

9.  வடிகஞ்சி சூப்

தேவையானவை: அரிசி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - அரை கப், துருவிய கேரட் - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு சிட்டிகை, பொடியாக துருவிய கோஸ் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,  ரஸ்க் - 4, உப்பு -    தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் களைந்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது கஞ்சி  வடிக்கவும். அதில் தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், உப்பு சேர்க்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, சிறிது சோள மாவை கரைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும். சாப்பிடும்போது ரஸ்க்கை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துச் சாப்பிடவும்.

குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

10.  மல்டி பழ டெஸட்

தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள் - 6, சப்போட்டா - இரண்டு, ஆரஞ்சு - ஒன்று, ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, தேன் - 4 டீஸ்பூன், பைனாப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எல்லா பழங்களையும் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பிளேட்டில் பரவலாக போட்டு, தேன் ஊற்றி அப்படியே சாப்பிடவும்.

குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!



11.  புரோட்டீன் ரிச் உசிலி

தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து...  உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.

குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.

12.  ராகி இனிப்பு உருண்டை

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.

13.  வெஜிடபிள் சொதி

தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு,  தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.


செய்முறை: கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி  வேக வைக்கவும். பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.

14.  குழல் புட்டு

தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நேந்திரம்பழம் - ஒன்று.

செய்முறை: புட்டு மாவில் இளம் சூடாக தண்ணீரைத் தெளித்து, நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது மாவை நிரப்பி. அதன் மேலே தேங்காய் துருவல், பிறகு மாவு, பிறகு நேந்திரம்பழத் துண்டுகள்... இப்படி மாற்றி மாற்றி அடைத்து, வேக வைத்து எடுக்கவும். குழல் வடிவத்தில் இருக்கும் இந்தப் புட்டை கைகளால் பிசைந்து சாப்பிடலாம்.

குறிப்பு:  மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.

15.  பயறு கறி

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து... குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, வேக வைத்த காராமணியில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

16.  வெஜிடபிள் இட்லி

தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.

செய்முறை: இட்லி மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.

17.  அகத்திக்கீரை பொரியல்

தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - முக்கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அகத்திக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து,  தேங்காய் துருவல், வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்.

குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும்.   கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.

 18. பைனாப்பிள் ரசம்

தேவையானவை: புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியைக் கரைத்து கடாயில் விட்டு, சாம்பார் பொடி உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை நறுக்கிப்    போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் பைனாப்பிள் துண்டுகள் போட்டு, வேக வைத்த பருப்பை கரைத்து விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.

19.  நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும்.  எண்ணெயில் கடுகு தாளித்து இதில் கொட்டவும்..

குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.

 20. முருங்கைக் கீரை கூட்டு

தேவையானவை: முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் கொட்டவும். நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.



 21. கத்திரிக்காய் கொத்ஸு

தேவையானவை: கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய்,  கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை சுட்டு, தோல் உரித்து, நன்கு பிசையவும். புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, பிசைந்த கத்திரிக்காய், உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, வெல்லத்தை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: அரிசி உப்புமாவுக்கும்,  பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.

22  காராமணி சுண்டல்

தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.

செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேகவிடவும். வெல்லத்தை பாகுகாய்ச்சி, வடிகட்டி, உருட்டும் பதம் வந்ததும் வேக வைத்த காராமணி சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.

குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.

23. மல்டி பருப்பு பொடி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வெறும் காடயில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.

24. மல்டி மாவு கேக்

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.

குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.

 25. பாசிப்பயறு சுண்டல்

தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.


செய்முறை: பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பயறு குழையாமல் வேக வேண்டும். காடயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, பயறு, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.

26.  மூலிகைப் பொடி

தேவையானவை: சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, வேப்பம்பூ - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 6, கடுகு - 4 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலை, வேப்பம்பூ, சீரகம், உளுத்தம்பருப்பு, சுண்டைக்காய் வற்றல், கடுகு, சுக்கு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை  சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

27.  பால் அவல்

தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.

செய்முறை: அவலை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வெல்லத்தை தூள் செய்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து, அவலுடன்   சேர்க்கவும்.
குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.

28.  புதினா - சீரக ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம்  - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்


செய்முறை: அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும்   இறக்கவும். புதினாவையும் வெங்காயத்தையும் வதக்கவும். வதக்கிய வெங்காயம், புதினா,பொட்டுக்கடலை, வேர்க்கடலை, நெய் ஆகியவற்றுடன் சாதத்தைச் சேர்க்கவும். கடுகு, சீரகத்தை எண் ணெயில் தாளித்து சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 29. காரப்பொரி

தேவையானவை: அரிசிப்பொரி -  மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: பூண்டை தோல் உரித்து, நசுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காய்த்துள் போட்டு... பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.

 30. வெஜிடபிள் ஸ்பெகட்டி

தேவையானவை: ஸ்பெகட்டி (சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பச்சைப்  பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஸ்பெகடியை உடைத்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். தக்காளி, குடமிளகாய், கேரட்,       வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு உப்பு போட்டு, வேக வைத்த ஸ்பெகட்டியுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!

 நன்றி - விகடன்