Monday, April 18, 2011

ஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல்லக்கூடாதா? என்ன கொடுமை சார் இது?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg

பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.

பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்  மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!

சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும்? நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே!' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.

1. சத்துமாவு மிக்ஸ் 

தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.

--------------------------------------------------

2. ரவா தோசை மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ்,  உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து  இதில் சேர்க்கவும்.

சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/Pasumai-Samayal4.jpg
---------------------------------------------
 3. தேங்காய் பொடி 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.

இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

-----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKPHpnT8esxNmCtkReAk9nRTxe-ZgPLULgHYiFNpDnpfnnGG4lh3xf-f7RVHi_BJVWj5P5VNMaSeLkosTCN88JMcwmyQOmn2toW2pCte1fddxkSqMqPrErBd_7gOX3JlpCOf4BkTsRdCUc/s1600/Tamanna_Red_Green_Half_Saree.jpg
4.சேமியா பகாளாபாத் மிக்ஸ் 

தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.

பகாளாபாத் செய்ய:  உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்),  கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

--------------------------------------

5.ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

---------------------------------


 டிஸ்கி 1  - பெண்கள் படிக்கற மாதிரி சி பி எழுதறதே இல்ல என்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.. ஹி ஹி

டிஸ்கி 2 - அவள் விகடன் ல இருந்த கட்டுரையைத்தான் இதுல போட்டிருக்கேன்.. அதனால இதுல ஏதாவது டவுட்னா என்னை கேட்காதீங்க.. எனக்கு ருசியா யாராவது சமைச்சா சாப்பிட மட்டுமே தெரியும்..

டிஸ்கி 3  - சி பி க்கு என்ன ஆச்சு? வீட்ல சண்டையா? சொந்த சமையலா? மாமியார் வீட்ல மனைவியா ?போன்ற கமெண்ட்கள் கடுமையாக மறுக்கப்படும்.ஹி ஹி 

டிஸ்கி 4 -  நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடற ஜெ புத்தி எனக்கு கிடையாது என்பதால் என் தளத்துக்கு ரெகுலரா வர்றவங்க  வை கோ  மாதிரி ஏமாந்து போகாம இருக்க சில ஸ்டில்களை இணைத்துள்ளேன்.. பார்த்து ரசித்து விட்டு செல்லவும்..

தேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh02GbzF2KBtfWgE62bkDU1Qce_tsAepD3dXJs75i3TLW_TYxhz3eF_tyBEkQiityi8egi-gcoBnqL8JuEEYWByp6VTvC3ngmJiy3qGbHvUploFBQGgiuYW8sQK-WLDuvHU1QWpR5334OoV/s1600/Devathasiyin_Kadhai_Movie_Posters_02.jpg


வெள்ளிக்கிழமையே (15.4.2011)இந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் அன்னைக்கு போகமுடில.. ஆஃபீஸ்ல கண்காணிப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு..( எவனாவது போட்டுக்குடுத்துட்டானா)17.4.2011 அன்னைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு(!!!) ஈரோடு பள்ளிபாளையம் சினி ராம் தியேட்டர்க்கு  மதியம் 2.45 க்கு போனேன்..( பெரிய கலெக்டரு.. விசிட் அடிக்கற டைம் எல்லாம் சொல்றாரு) 

 பைக் ஸ்டேண்டில் வண்டியைப்போட்டு விட்டு காலம் காலமாக லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும்  எல்லா  கேனப்பசங்களும்  கேட்கும் அதே புராதனக்கேள்வியை நானும் கேட்டேன்.( அப்போ கேனம்னு ஒத்துக்கறியா?) “ படம் போட்டாச்சுங்களா? இன்னும் இல்லங்க... 3 மணிக்குத்தான் படம்..( உஷ் அப்பாடா..)

உள்ளே போய் சீட்ல உக்கார்ந்ததும் பக்கத்து சீட்ல 2 பேர் பேசிட்டிருந்ததை ஒட்டு கேட்டேன் .( ஓட்டு கேட்டாத்தான் கேவலம்)

அண்ணே.. இந்தப்படத்துல கண்டிப்பா சீன் இருக்கும்.....

 எப்படி சொல்றீங்க?

தேவ லீலை ல சீன் இருந்தது..தேவ ரகசியம் ல சீன் இருந்தது.தேவதாசியின் கதைலயும் சீன் இருக்கும்.. 3 லயும் பொதுவான சொல்லா தேவ இருக்கு..

( அப்படியே செண்ட்டிமெண்ட் செம்மல்னு நினப்பு)
 http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/jan/devathasiyin-kadhai/devathasiyin-kadhai_018.jpg
படத்தோட ஓப்பனிங்க்லயே செம காமெடி .....ஃபாரீன் ரிட்டர்ன் ஹீரோன்னு சொல்லப்படும் அந்த ஆள் பக்கா லோக்கல் மாதிரி,பஞ்சப்பரதேசி மாதிரி  இருக்கான். அவன் பீச்ல ஜாக்கிங்க் போற ஒரு அட்டு ஃபிகரை டவுன் பஸ்ஸை குறுக்காட்டற மாதிரி கை காண்பிச்சு நிறுத்தறான்..

நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்

அதுக்கு அந்த அ.  ஃபி  ஒத்துக்கலை ( அ.  ஃபி  = அட்டு ஃபிகர்). 2 பிளம் கேக்கும் ஒரு கடலை மிட்டாயும் வாங்கிக்குடுத்தாலே பின்னாலயே வந்துடற மாதிரி இருக்கற அவ  நாட் ஓக்கே சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

மின்சாரக்கனவுல கன்யாஸ்திரியா வர்ற கஜோல் இந்த பார்ட்டியை பார்த்தா மனசு வெறுத்து சினி ஃபீல்டை விட்டே விலகிடும்.

ஃபிளாஸ்பேக்.

அந்த அட்டு ஃபிகர்  ஸ்கூல்ல கூட படிக்கற  ஒருத்தனை லவ் பண்றா.. ஆனா அவன் வேற ஒரு ஆண்ட்டியை லவ் பண்றான்.அந்த ஆண்ட்டிக்கு கண் தெரியாது..

பையனுக்கு மீறி மீறிப்போனா 18 வயசு இருக்கும்.. ( மீறாம போனா....?) ஆண்ட்டிக்கு 28 இருக்கும்..( வயசுய்யா..)

இந்த இடத்துலதான் இயக்குநர் டைரக்‌ஷன் டச் வெச்சிருக்கார்.அந்த கண் தெரியாத ஆண்ட்டி பங்களா காம்பவுண்ட் கேட்,வீட்டுக்கதவு, பாத்ரூம் கதவு எல்லாத்தையும் திறந்து போட்டுட்டு குளிக்குது.. ( பாவம் ரொம்ப ஓப்பன் டைப் போல,..)

யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. டர்க்கி டவல் கட்டிட்டு தான் குளிக்குது.....
( அடச்சே...  வட போச்சே...)




http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/movies/kw/2011/jan/devathasiyin-kadhai/devathasiyin-kadhai_023.jpg

ஒரு கூரியர் பாய் அவளை செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுக்கறான்.. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகி அவனை துரத்திட்டு இவ கிட்ட ஐ லவ் யூ சொல்றான்.. உடனே அவ அவனை ஏத்துக்கறா...(சப்புன்னு போச்சே..)

கண் ஆபரேஷன் பண்ணப்போறேன்னு ஆண்ட்டி சொன்னதும் ஹீரோ பயந்துட்டான்.. வல்லவன் சிம்பு மாதிரி வயசு கம்மி என்பதால் ஆண்ட்டி ஏத்துக்க மாட்டாங்களே...இப்போ ஆண்ட்டிக்கு ஹீரோ வயசு கம்மின்னு தெரிஞ்சுடுது...( ஆனா பர்த் சர்ட்டிஃபிகேட் எல்லாம் கேட்கலை)

இப்போ ஆண்ட்டி தயங்கறா... அந்த அட்டு ஃபிகர் ஹீரோ கிட்டே என்னை ஏத்துக்குங்க அப்படிங்கறா.. உடனே இந்த ஹீரோ சரி ஆண்ட்டி கிட்டே ஃபைனல் ரிசல்ட் கேட்கறேன்..அவங்க ஓகே சொல்லாட்டி உன்னை ஏத்துக்கறேன்கறான்.. ( ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம் )

ஆண்ட்டியை பார்க்கப்போறப்ப இந்த தடவையும் ஆண்ட்டி 3 கதவுகளையும் திறந்து வெச்சுட்டு குளிக்குது.. 3 வில்லன்க வந்து ரேப் பண்ணிடறாங்க..
( வில்லன்க பின்னே சமூக சேவையா செய்வாங்க..)

ஆண்ட்டி மேல் லோகத்துக்கு டிக்கட் வாங்கிடுது. ( ஒரு டிக்கெட்டே டிக்கெட் வாங்கிடுச்சே.. அடடே ஒரு ஆச்சரியக்குறி...)ஹீரோ அதை பார்த்து ஸ்பாட்லயே செத்துடறான்.( தெய்வீக  காதலாம்..அடிங்கொய்யால)

ஃபிளாஸ்பேக் முடியுது.. நான் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணுனதால.. அவன் இறந்துட்டதால இந்த கன்யாஸ்திரி ஆகும் முடிவை எடுத்துட்டேன்கறா...


http://mimg.sulekha.com/tamil/devathasiyin-kadhai/stills/devathasiyin-kadhai-011.jpg
பஞ்சப்பரதேசி ஹீரோ   கட்டாயப்படுத்தறான்.. உடனே அந்த அட்டு ஃபிகர் அடுத்த ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்ணுது... (ஃபிளாஸ்பேக்கை மட்டும்தான் ஓப்பன் பண்ணுது ஹி ஹி # 50 ரூபா தண்டமா?)

அவளோட அம்மா தேவதாசிக்குடும்பம்.. மோனிகா பேடி சும்மா தக தக என 100 பவுன் நகை போட்டு அலங்கரிக்கப்பட்டு தேவதை மாதிரி ஒரு ஓப்பனிங்க்ல வர்றப்ப  இடை வேளை வருது.. 
எவனும் எந்திரிக்கலை..... ஏன்னா கேண்ட்டீன் போய்ட்டு வர்றதுக்குள்ள படம் போட்டுட்டா சீன் மிஸ் ஆகிடுமே..?ரிஸ்க் எடுக்க விரும்பலையாம். (உஷார் பார்ட்டி உலகநாதன்கள்)

மோனிகா பேடியோட அம்மா ஒரு தேவதாசி..அவளைப்பார்க்க வர்ற வில்லன்  ஒரு 500 ரூபாய் நோட்டுக்கட்டை தர்றான்..( ஆனா பார்ட்டி ரூ50,000க்கு ஒர்த் இல்லை.. 5000 கூட தேறாது ஹி ஹி )

இந்தியாவோட பொருளாதாரமும்,பணப்புழக்காட்டமும்,பண வீக்கமும் ஏன் தாறுமாறா இருக்குங்கறது இப்பத்தான் புரிஞ்சுது.. ( கில்மாப்படத்துக்கு  வந்தாலும் சமூக சிந்தனை மாறலை பார்த்தீங்களா?ஹி ஹி )

அவன் மோனிகாபேடியைப்பார்த்ததும் அவதான் எனக்கு வேணும்னு  அடம் பிடிச்சு 1 1/2 லட்சம் தர்றான்.கோயில் விக்ரகம் மாதிரி இருக்கற ஃபிகரை அவ்வளவு கம்மியான ரேட்டுக்கு விக்கற ரகமா அவங்கம்மா.. ஹூம்.. 

இப்போ பெட்ரூம்ல மோனிகா பேடி.. நகை எல்லாம் கழட்றாங்க.. ( நகையை மட்டும் தான் ஹி ஹி )அதுக்கே 7 நிமிஷம் ஆகுது.. (வாட்சை பார்த்துட்டே டென்ஷனோட ஆடியன்ஸ்)

அப்புறம் முக்கியமான நேரத்துல இன்னொரு வில்லன் குறுக்கே வந்துடறான். அவன் தான் முறைப்படி பொட்டுக்கட்டி முறைப்படி ரிசர்வ் பண்ணுனவனாம்..
( பண்றதெல்லாம் முறையற்ற செயல்... )

புதுசா வந்த வில்லனை பழைய வில்லன் போட்டுத்தள்ளிடறான்.அப்புறம் காலம் காலமா சீன் படங்கள்ல காட்ற மாதிரி ஒரு புள்ளிமானை புலி அடிக்கற மாதிரி ஓவியத்தை காட்றாங்க.. ( அட போங்கப்பா)

கொஞ்ச காலத்துக்குப்பிறகு அந்த வில்லன் மீண்டும் வர்றான்.இப்போ மோனிகா பேடியோட மகளுக்கு ஆசைப்படறான்.( அந்த மகள் தான் இப்போ ஃபிளாஸ்பேக் சொல்லிட்டு இருக்கற அந்த அட்டு ஃபிகர்)

வேற வழி இல்லாம அதுக்கும் ஓக்கே சொல்லிடறாங்க மோனிகா பேடி.. பெட்ரூம்ல அட்டு ஃபிகர்.. +அடாவடி வில்லன்.. பால்ல விஷம் வெச்சு குடுத்துடறா.. அந்த தத்தி வில்லன் அதைக்குடிச்சு செத்துடறான்..

அம்புட்டுதான் ஃபிளாஸ்பேக்.

தான் ஆசைப்பட்டபோது  வாழ்வு அமையல.. வாழ்வு அமையறப்ப தனக்கு ஆசை இல்லை.. அப்படிங்கற உயரிய தத்துவத்தோட படம் முடியுது.. ஹி ஹி

http://www.indiaonapage.com/upload/images/wallpaper/original/00/00/03/131307639298570.jpg



சீன் படத்துல பார்த்த அதாவது கேட்ட கேவலமான வசனங்கள்

1,  மண்ணு திங்கற இந்த உடம்பை மனுஷன் சாப்பிட்டுப்போகுது விடம்மா..
( நர மாமிசம் சாப்பிடற கதையா?)

2.  டியர்.. என் மேல உங்களுக்கு அவ்வளவு ஆசையா?

 ஆமா.. அதான் மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்தேன்,வெச்சுக்கோ.. ( தக்காளி.. 2 முழம் பூ வாங்கிட்டு வந்து வசனம் பேசுது பாரு.. )

ஆசை இருக்கறவங்க பூவை கையில தர மாட்டாங்க.. தலைல தான் வெச்சு விடுவாங்க.. ( கல்யாணம் ஆன கபோதிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா.. எல்லாரும் அவனவன் சம்சாரத்துக்கு தலைல பூ வெச்சு விடுங்க.. டேபிள்ல வீசிட்டு பெட்ரூம் போகாதீங்க # நீதி)

3.  வில்லன் - பால் சூடா இருக்கறப்பவே சாப்பிட்டா தான்  டேஸ்ட்டா இருக்கும். ( புதிய தத்துவம் 12,357)

நான் நிலா மாதிரின்னு நினைக்காத.. பார்க்கத்தான் நிலா.. ஆனா கிட்டே வந்தா சூரியன்.. நெருப்பு..

வில்லன் - அப்போ நான் என்ன பருப்பா? ( இந்த டயலாக்ல பருப்புங்கற வார்த்தையை சென்சார் பண்ணீட்டாங்க போல..)




http://media.onsugar.com/files/2011/02/08/3/1440/14400286/7e/devathasiyin-kadhai_2B_11_.jpg
இந்தப்படத்துல ரசிச்ச அம்சங்கள்

 1, மோனிகா பேடியை கண்ணியமா காட்டிய ஒளிப்பதிவாளர்.. ( அவர் கண்ண்னியத்துல இடி விழ,,)

2. படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னாலும் வில்லனோட மனைவியோட குளியல் சீன்.. ( நல்ல ஃபிகர்ப்பா)

3.மோனிகா பேடியோட  அம்மாவா வர்ற ஃபிகர்க்கு 30 வயசுதான் இருக்கும்.. வளர்ர்புத்தாய் போல.. அந்த ஃபிகரும் நல்லாருந்தது.

 இந்தப்படத்தின் மூலம் நாம் கற்க வேண்டிய நீதிகள்

1. யாரையாவது ரேப் பண்ண போறப்ப முட்டாள் தனமா அவங்க வீட்ல எதையும் சாப்பிடக்கூடாது.. ( விஷம் கலந்திருக்கும்)

2. ஏதாவது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணுனா அதோட விட்டுடனும்..நைஸா அந்தப்பொண்ணோட மகளையும் ட்ரை பண்ணக்கூடாது.. ( அதுவும் ஒரு வகைல மக முறை தானே..)

3.எந்த ஃபிகரையாவது லவ் பண்ணுனா சான்ஸ் கிடைக்கறப்ப  மேட்டரை முடிச்சுடனும்.. மிஸ் ஆனா பொண்ணு மிஸ் ஆகிட்டா பின்னால் அல்லது முன்னால வருத்தப்பட வேண்டி வரும்.

4. போஸ்ட்டர் டிசைன் நல்லாருக்குன்னு விசாரிக்காம எந்த படத்துக்கும் போகக்கூடாது.. ஏ சர்ட்டிஃபிகேட் பணம் குடுத்து  வாங்கி இருப்பாங்க.. படத்துல சீன் இருக்காது .. அ வ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 1 - இடப்பற்றாக்குறையின்  காரணமா இந்தப்படத்துல பார்த்த  2 நல்ல ஃபிகர்கள் பற்றி வர்ணிக்க முடில. ஹி ஹி . அப்புறம் படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்த வேலைக்காரி VS காமெடியன் சீன் பற்றி சிலாகிக்க முடியல..

டிஸ்கி 2 - இந்தப்பதிவை படிச்சுட்டு என்னைத்திட்றவங்களுக்கும், மைனஸ் ஓட்டுப்போட நினைப்பவர்களுக்கும் ஒரு வார்த்தை.. இதுக்குப்பரிகாரமாத்தான்
நான் நேற்றே 2 ஆன்மீகப்பதிவு போட்டாச்சு.. 

டிஸ்கி 3 - இது வரைக்கும் நல்ல பசங்களா இருக்கறவங்க இந்த பதிவு மூலமா கெட்டுப்போனா(!!!!) அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.. மன்னிப்பு கேட்ட்டுக்கறேன் ஹி ஹி


Sunday, April 17, 2011

கண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

ந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து க்ஷேமங்களும் கிடைப்பதற்கு, பகவான் நாராயணனை மனதாரப் பிரார்த்திக்கிறேன். சகல புண்ணியங்களையும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மிகப் பெரிய வேள்வி நடத்த வேண்டுமா? கங்கை, காவிரி முதலான புனித நதிகளில் நீராடவேண்டுமா? நித்யானுஷ்டானங்களைச் சரிவரச் செய்து, எங்கேனும் மலையுச்சியிலோ அடர்ந்த வனத்திலோ கடும் தவம் இருக்கவேண்டுமா? 

தினமும் ஒரு மணி நேரம் அல்லது வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் அனுஷ்டித்தால் சகல புண்ணியங்களும் கிடைத்துவிடுமா? வேறு என்னதான் செய்யவேண்டும்?

மிகவும் எளிதான காரியம்தான்.
சகல புண்ணியங்களும் பெறவேண்டும் என்றால், பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள்!
மகாபாரதம், மிகப் பிரமாண்டமானது. அதில் உள்ள எண்ணற்ற அத்தியாயங்களில், சகஸ்ரநாம அத்தியாயம் என்பதும் ஒன்று. பகவானின் நாமங்களைச் சொல்வதால் விளையும் நன்மைகளைச் சொல்கிற அத்தியாயம். அத்தனைப் பிரம்மாண்ட மகாபாரதத்தில், அத்தியாயம் என்பது ரொம்ப ரொம்பச் சின்னதுதான்!


ஆனால் என்ன... ஒரு சின்ன விதையில் இருந்துதானே மிகப் பெரிய ஆலமரம் உருவாகிறது?! ஒரு சின்ன கருத்தில் இருந்துதானே, பலப்பல அர்த்தங்கள் உண்டாகின்றன. இறைவனின் திருநாமங் களுக்கு, அதுவும் ஸ்ரீகண்ணனின் திருநாமங் களுக்கு அத்தனை வலிமை உண்டு!

ஒரு குழந்தைக்கு என்ன தரவேண்டும் என இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நல்ல, சத்தான உணவில் இருந்துதான் நாம் கொடுக்கத் துவங்குகிறோம். 'சுவர் இருந்தால் தான் சித்திரம்’ என்பது போல், உடம்பு தெம்பாக இருந்தால்தானே ஓடியாடி விளையாட முடியும்!

அடுத்து, அந்தக் குழந்தைக்கு கல்வியைத் தருகிறோம்; இந்தப் பள்ளியில் சேர்க்க
வேண்டும்; இன்ன படிப்பைப் படிக்க வேண்டும்; பெரியவனானதும் இப்படிப் பட்ட பதவியில் அந்தக் குழந்தை அமர வேண்டும் என யோசித்து யோசித்து, அனைத்தையும் செய்கிறோம்.

ஆக, உடம்பைக் கவனித்துக் காப்பாற்றுகிறோம்; கல்வியை வழங்குகிறோம்; குறிப்பாக, கை நிறைய சம்பளம் வாங்குவதற்கு உண்டான கல்வியை அளிக்கத் தயாராக இருக்கிறோம். இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்தால் போதுமா? மூன்றாவதாக ஒன்று இருப்பதையே நம்மில் பலர் கவனிக்கத் தவறுகிறோம்.

என்ன அது? ஆத்மா! அந்தக் குழந்தையின் ஆத்மா நல்லவிதமாக வளர்வதற்கு, நல்ல விஷயங் களைச் சிந்திப்பதற்கு, நல்ல காரியங்களில் ஈடுபடு வதற்கு நாம் ஏதாவது செய்கிறோமா? எதுவுமே செய்வதில்லையே?!

உடல் நன்றாக இருந்தால்தான் ஆத்மா ஒழுங்காக வேலை செய்யமுடியும் என்பது சரிதான். ஆனால், உடல் நன்றாக இருக்கிற அதேநேரத்தில் ஆத்மாவும் நன்றாக இருக்கவேண்டுமே! இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தானே ஓசை! ஆகவே, ஆத்மா வைக் கவனிப்பது மிகவும் அவசியம்.

சரி... கர்மயோகமும் ஞானயோகமும் கைகூட வேண்டும் என்றால், இன்றைக்கு விதையாக இருக்கிற குழந்தை, நாளைக்கு நிழல் தரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்க வேண்டுமெனில், வேதங்களையும் சாஸ்திரங்களையும், புராணங்களையும் இதிகாசங் களையும் சிறுவயதிலேயே சொல்லித் தரவேண்டும்; முக்கியமாக பகவத் விஷய ஞானம் என்பது சிறுவயதிலேயே ஏற்பட்டால்தான், பின்னாளில் அவர்களால் அவர்களுக்கும் இந்தச் சமூகத்துக்கும் நன்மைகள் விளையும்!

வேதங்கள் சகல உயிர்கள் மீதும் பிரியம் கொண் டவை. தராசின் தட்டுகளில், தாய்-தந்தையரையும் வேதங்களையும் வைத்தால்,  குழந்தைகள் மீது பெற்றோர் செலுத்துகிற அன்பைவிட ஒருசதவிகித மேனும் கூடுதலான அன்பையும் அக்கறையையும், வேதங்கள் காட்டுகின்றன என்பது சத்தியம்! அதாவது, வேதங்களைப் பயில்வது ஆத்மாவுக்கு நல்லது!

ஆனால், வேதங்களைக் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சம்ஸ்கிருதத்தை சரிவர உச்சரிக்கவேண்டும். அதன் அர்த்தங்களை ஆழப் புரிந்து கொள்ளவேண்டும். உச்சரிப்பில் கொஞ்சம் பிழை ஏற்பட்டாலும், அர்த்தங்களைப் புரிந்து கொள்ளமுடியாத நிலை வந்தாலும் குழந்தைகள் ஆடிப்போவார்கள்; அயர்ந்துவிடுவார்கள்!

அப்படியெனில் குழந்தைகளுக்கு, அவர்களின் ஆத்மாக்களின் நலனுக்கு, எதைப் பயிற்றுவிக்க வேண்டும்?! அப்படிப் பயிற்றுவிப்பது எளிமையான தாக இருக்க வேண்டுமே?!

ஆமாம். எளிமையானதும் இனிமையானதுமான ஒன்று இருக்கிறது; சக்தி வாய்ந்ததும் சத்து மிகுந்ததுமான அதை எவரும் புரிந்துகொள்ளலாம். அது, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம். அதாவது, பகவானின் திருநாமங்கள்!

உச்சரிக்க உச்சரிக்க, உள்ளம் பூரிக்கும்; அந்தப் பூரிப்பு, அகத்திலும் முகத்திலுமாக சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும்; இத்தனை சத்காரியங்களும் நிகழும்போது, ஆத்மாவானது எத்தனை குதூகலத்துடன் இருக்கும் என சற்றே நினைத்துப் பாருங்கள்!

'பிரம்ம சூத்திரம்’ படைத்தார் வேதவியாசர். வித்வான் களுக்கும் பண்டிதர்களுக்குமான விஷயமாக இதைப் படைத்திருக்கிறோமே, கொஞ்சம் எளிமையாக இருந்தால், சகல மனிதர்களும் புரிந்து, அறிந்து, உணர்ந்து, பலன் பெறுவார்களே... என வருந்தினாராம்! இந்த வருத்தத்திலும் ஏக்கத்திலும் பிறந்ததுதான், சகஸ்ரநாம அத்தியாயம்!

வாழ்க்கையில் சங்கடமும் சந்தோஷமும் மாறி மாறித்தான் வரும்! சங்கடத்தில் மட்டுமே சிக்கித் தவிப்பவர்களும் இல்லை; சந்தோஷத்தை மட்டுமே அனுபவிப்பவர்களும் கிடையாது!

ஆனால் ஒன்று... சங்கடம் - சந்தோஷம் என எந்தச் சூழ்நிலையிலும், நம்மில் பலரும் இறைவனின் திவ்விய நாமங்களைச் சொல்லி வருகிறோம். 'கிருஷ்ணா... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுடாப்பா’ என்றோ, 'ராமா... நீதான்டாப்பா பாத்துக்கணும்’ என்றோ பலரும் சொல்கிறோம், அல்லவா?! அதுதான் திவ்விய நாமத்தின் மகிமை!


மகாபாரதத்தில்... யுதிஷ்டிரருக்கு ஒரு சந்தேகம். அந்தச் சந்தேகத்தை யாரால் தீர்த்து வைக்க முடியும்? நல்ல ஆச்சார்யர் ஒருவரால்தான் சந்தேகத்தைத் தீர்க்கமுடியும். ஒவ்வொருவருக்கும் ஆச்சார்யர் எனப்படும் குரு மிகவும் அவசியம்! அதேபோல், ஆச்சார்யர்களுக்கு சிஷ்யர்கள் தேவை. ஒரு ஆச்சார்யர் என்பவர், மடி கனத்துக் கிடக்கிற பசுவுக்குச் சமமானவராம்! அதாவது, மடி கனத்த நிலையில், பசுவானது, கன்று பால் குடித்ததா இல்லையா என்று பார்க்காமல், கனத்த மடியிலிருந்து பாலைப் பீய்ச்சி விடும்
அதேபோல், ஆச்சார்யர் எந்த எதிர்பார்ப்புமின்றி, தனக்குத் தெரிந்தவை அனைத்தையும் தனது சிஷ்யர்களுக்கு போதித்து விடுவார்!

பீஷ்மர், அப்படிப்பட்ட ஆச்சார் யர்தான்! அவரிடம் யுதிஷ்டிரர் சென்று, 'என்னுடைய சந்தேகத்தை தாங்கள்தான் தீர்த்துவைக்க வேண்டும் குரு!’ என்றார். பீஷ்மரும் சந்தோஷத்துடன் பதில் சொல்லத் தயாரானார்.

''குருவே! பிறவியின் நோக்கம் நிறைவேற, அதாவது மோட்ச லாபம் கிடைப்பதற்கு ஏதேனும் வழி உண்டா?’' என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
மெள்ளப் புன்னகைத்த பீஷ்மர் சொன்னார்... ''நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடு; மோட்ச லாபம் நிச்சயம்!'' என்றார்.

இறைவனது திருநாமங் களுக்குத்தான் எத்தனை வலிமை, பாருங்கள்!

12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள்.பிரபல ஜோதிடர்-ன் விகடன் கட்டுரை

கர வருட பலன்கள் !

 ஜோதிட ரத்னா' கே.பி.வித்யதரன்
1.மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால்... வைகாசி, தை மாதங்களில் லாபகரமாக அமையும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்கள் நிம்மதி தரும்.

இந்தப் புத்தாண்டு, உங்கள் பலம், பலவீனத்தை உணர வைப்பதுடன், ஓரளவு நன்மையையும் தரும். 


பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள். 

------------------------------------------

2.ரிஷபம்: கடின உழைப்பாளிகளே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்கிரன், 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 8.5.11 வரை 11-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

ஆனால், 9.5.11-ம் தேதி முதல் 12-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், வருங்காலம் பற்றிய பயம், களைப்பு வந்து செல்லும். 16.5.11 முதல் கேது ராசிக்குள் நுழைவதால்... ஏமாற்றம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால்... கணவருடன் வாக்குவாதம் வரக்கூடும்.

ஆனி, ஆவணி மாதங்களில் மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு வேலை அமையும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ம் வீட்டுக்குள் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் வரவு உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியைத் தரும். 

பரிகாரம்: அம்மன் ஆலயத்துக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். 

----------------------------

3.மிதுனம்: நடுநிலையாளர்களே! உங்கள் ராசிநாதனான புதன், நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், புதிய திட்டங்கள்  நிறைவேறும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 10-ல் நின்று கொண்டு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் குருபகவான், 9.5.11 முதல் 11-ம் வீட்டுக்குள் நுழைவதால்... எதிர்பாராத பணவரவு உண்டு.

15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால் கவலை, வீண் விரயம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், கணவருடன் சச்சரவு வந்து விலகும். 16.5.11 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், உடல்நலக் கோளாறு நீங்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள்.

24.7.11 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு சில சறுக்கல்களை தந்தாலும், குருவின் அனுக்கிரகத்தால் வாழ்க்கைத் தரம் உயரும்.

பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானையும் குலதெய்வத்தையும் வணங்குங்கள்.  

--------------------------------
4.கடகம்: கடமை தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அனுபவ அறிவாலும், கனிவான பேச்சாலும் காரியம் சாதிப்பீர்கள். குரு 8.5.11 வரை 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும்.

பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆனால், 9.5.11 முதல் குரு 10-ம் வீட்டுக்குள் நுழைவதால்... வீண் விமர்சனம் வரக்கூடும். வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் பணம் வரும். 16.5.11 முதல் ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால், பிள்ளைகள் சில சமயங்களில் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 20.12.11 வரை சனி பகவான் 3-ம் வீட்டில் பலமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும்.   வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்... அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.


இந்தப் புத்தாண்டு... வெகுளியாக இருந்த உங்களை சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக மாற்றும்.

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்

--------------------------

5.சிம்மம்: சிந்தனைவாதிகளே! சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். அதேசமயம், உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். கேது 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய பிரச்னைகள் தீரும்.

15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் மனவருத்தம் வரும். 9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் கடினமாக உழைக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து விலகும். 21.12.11 முதல் 3-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் வெளியாகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில், பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும், மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

--------------------------------

6.கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே! உங்கள் ராசிநாதனும், குருபகவானும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், மன இறுக்கம் வந்து நீங்கும். ஆனால், குரு உங்களின் 2-ம்  வீட்டை பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு.

வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால், உறவினர்களுடன் உரசல் வரும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கேது 10-ல் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படலாம். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

கேது 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 20.12.11 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் உபாதை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.
--------------------------------------

7.துலாம்: நியாயவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவடைந்திருக்கும் போதும், 3-ம் வீட்டில் ராகு நிற்கும்போதும் இந்த கர வருடம் பிறப்பதால், நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். உங்கள் லாப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 6-ல் நிற்பதால் வீண் சந்தேகம், செலவுகள் வந்து போகும்.

ஆனால், குரு பகவான் 9.5.11 முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து போகும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், கோ£பமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கேது 8-ல் நுழைவதால், திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

20.12.11 வரை 12-ல் விரயச்சனி தொடர்வதால், மறைமுக அவமானம் வந்து போகும். 21.12.11 முதல் ஜென்மச்சனியாக வருவதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் உண்டு.

நாலா விதத்திலும் சிரமத்திலிருக்கும் உங்களுக்கு வசதியைத் தருவதாக இந்த ஆண்டு அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

-------------------------------------

8.விருச்சிகம்: விகடகவிகளே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான், குருவுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். 8.5.11 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

ஆனால், 9.5.11 முதல் குரு 6-ம் வீட்டில் நுழைவதால்... சலசலப்பு, பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கேது 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், ஏற்படக்கூடும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால், உடல் உபாதை வந்து போகும்.

கேது 7-ல் நுழைவதால், கணவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 20.12.11 வரை லாப வீட்டில் சனிபகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.  21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், மறைமுக எதிர்ப்பு வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டு நீங்கள் சுய உழைப்பால் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.
 --------------------------------
9.தனுசு: கூடிவாழும் குணமுடையவர்களே! சனி பகவான் சாதகமான இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த கர ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும்.

8.5.11 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீண் கவலைகள் வரக்கூடும். 9.5.11 முதல் குரு 5-ம் வீட்டில் நுழைவதால்... புது நிலம், வீடு வாங்குவீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து போகும். கேது 7-ல் நிற்பதால், கணவருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும்.

16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் ஆரோக்கியம் கூடும். சொத்து, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 20.12.11 வரை 10-ல் சனிபகவான் நிற்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் சென்று வணங்குங்கள்.

----------------------------

10. மகரம்: மனவலிமை மிக்கவர்களே! யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆனால் 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் காரிய தாமதம் ஏற்படக்கூடும்.

15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால், கோபம், அலைச்சல் வரக்கூடும். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால், கௌரவம் பலமடங்கு உயரும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் செலவுகள் வரும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து சிக்கல்கள் ஏற்படக்கூடும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சமடைந்து 10-ம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் கிட்டும்.

இந்த கர ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும், அவ்வப்போது தன்   மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: ஷீரடி சத்ய சாய்பாபாவை வணங்குங்கள்.

---------------------------------------------------
11. கும்பம்: சுயநலமில்லாதவர்களே! உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்குபோதும் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு க¬ளைகட்டும்.

ஆனால், 9.5.11 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால்...  வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். 15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச் சுமை சோர்வு தரும். காரிய தாமதம் ஏற்படும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால், கணவருக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை வந்து போகும்.

21.12.11 முதல் ராசிநாதன் சனிபகவான் 9-ல் நுழைவதால். எதிலும் வெற்றி கிட்டும்.  வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில், சித்திரை மாதத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் தடுமாற்றங்களை தந்தாலும், இறுதி பகுதி சாதிக்க வைப்பதாகவும் அமையும்.
\
பரிகாரம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.

-----------------------------------------

12.மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் 8.5.11 வரை ஜென்ம குருவாக இருப்பதால்... உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நுழைவதால், பணவரவு அதிகரிக்கும்.

15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், மனக்குழப்பம் வரக்கூடும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வந்து போகும்.

21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் விமர்சனங்கள் வரும். மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரை செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில், முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.


இந்தப் புத்தாண்டு ஓரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மனநிறைவைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ நடராஜப் பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

Saturday, April 16, 2011

Lake Consequence (1993) - சினிமா விமர்சனம் 18 +

http://img.getglue.com/movies/lake_consequence/rafael_eisenman/normal.jpg

A MAN AND TWO WOMEN  -என்னதான் ஹோட்டல்ல வெரைட்டியா சாப்பிட்டாலும்,கல்யாண மண்டபத்துல பஃபே சிஸ்டத்துல ஓ சி ல ஒரு வெட்டு வெட்டினாலும் ,கிராமங்கள்-ல சாப்பிடற பழைய சோறும், மோர் மிளகாய் அல்லது வத்தல் காம்பினேஷனும் செம டேஸ்ட்டா இருக்கும்..( இது கில்மா பதிவா ?உப்புமா பதிவா? #டவுட்டு) 

 அது சாப்பிட்டாத்தான் உண்மையிலேயே வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. அந்த மாதிரி தான் இந்த மாதிரி பழைய படங்களை ஒரு ரிவிஷன் பண்றதும். (ம்க்கும்.. எட்டாங்க்ளாஸ் படிக்கறப்ப இப்படி ரிவிஷன் பண்ணி இருந்தா பாஸ் ஆகி இருப்பே..# மனசாட்சி )


 படத்தோட கதை என்ன? ஓப்பனிங்க்ல (என்னது எடுத்ததுமே ஓப்பனிங்கா?)
ஒரு சந்தோஷமான தம்பதி சந்தோஷமா இருக்காங்க.. ( இதென்ன கேனத்தனமான லைனா இருக்கு? சந்தோஷமான தம்பதி சந்தோஷமா த்தான்இருப்பாங்க. இதுல என்ன இருக்கு?ன்னு தங்கபாலுத்தனமா கேள்வி கேட்கறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்..)


மங்களகரமா முத எடுத்ததும் சீன் பார்த்த சந்தோஷம் தியேட்டர்ல இருந்த 890 பேர்ல 760 பேருக்கு.. (பெரிய சைக்காலஜி சகுந்தலான்னு நினப்பு) மீதி 130 பேரோட கருத்து என்னான்னா புருஷன் பொண்டாட்டி குஜாலா இருக்கறதுல என்ன சுவராஸ்யம் வந்துடப்போகுது?அது காங்கிரஸ்காரங்க கோஷ்டி சண்டை போடற மாதிரி..ரெகுலரா நடக்கறதுதான்.

http://kinofilms.tv/images/films/8/7090/pict/3.jpg

ஏதாவது கள்ளக்க்காதல் சீன் வந்தாத்தான் விறுவிறுப்பா இருக்கும்னு நயன் தாராத்தனமா  அடச்சே.. நாதாரித்தனமா  நினைக்கறப்பத்தான் படத்துல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வருது.. ( ம் ம் இப்பத்தான் கொட்டாவி விட்டவனெல்லாம் நேரா உட்கார்றான்)


ஹீரோயின் தனிமைல இருக்கா ( ஹி ஹி சீன் கன்ஃபர்ம் # பட்சி சொல்லுது) ஹீரோ ஆஃபீஸ்க்கு போயிட்டான் ( தொலைந்தான் எதிரி )
இப்போ வில்லன் ஹீரோயின் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன்ல வந்து மரங்களை வெட்றான்.( இவன் படத்துக்குத்தான் வில்லன்.. நமக்கு ஹீரோ எப்படின்னா இவனாலதானே சீன் வருது?# வாஸ்கோடகாமா தோத்தான் போ)
ஏன் இப்படி  சத்தம் வர்ற மாதிரி மரம் வெட்றே?ன்னு ஹீரோயின் சண்டை போடறா..( மரத்தை வெட்றப்ப கோடாலியை அல்லது ரம்பத்தை சைலண்ட் மோடுலயா போட முடியும்?)வில்லன் சிரிக்கறான்.ஒரு கட்டத்துல ஹீரோயின் வில்லனோட வேன் ல ஏற வேன் கிளம்பிடுது. (வேன் மட்டுமா? ஹி ஹி )

 ஒரு ஏரி.. ஒளிப்பதிவு  சூப்பர்னு ஒருத்தன் சிலாகிக்கறான்.. அப்போ ஒரு கமெண்ட்.. டே கூமுட்டை... கேமராவைப்பாராட்ற நேரமா இது?அப்போ இன்னொரு ஃபிகரு சேரில அடச்சே ஏரில குளிக்குது... அவள் புன்னகையை மட்டுமே அணிந்திருந்தாள் ( நன்றி அமரர் சுஜாதா @நில்லுங்கள் ராஜாவே)

Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-008.jpg
இப்போ நம்ம பழைய ஹீரோயினும், புது ஹீரோயினும் சேர்ந்து குளிக்கறாங்க. பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. 17  நிமிஷம் ரெண்டு பேரும் கம்பைன் பாத் பண்றாங்க.. ( கம்பைன் ஸ்டடி பண்றப்ப கம்பைன் பாத் பண்ணக்கூடாதா?)

அப்புறம் வில்லன் வந்து 2 பேரையும் ஒரு கிளப்புக்கு கூட்டிட்டு போறான்.அங்கே புது ஹீரோயின் கூட வில்லன் சந்தோஷமா இருக்கான். அது பழைய ஹீரோயினுக்கு  பிடிக்கலை.. ( ஆனா நமக்கு பிடிக்குது ஹி ஹி )

இப்போ அந்த பழைய ஹீரோயின் வில்லி ஆகறா.. அதாவது ஹீரோவுக்கு ஜோடியா இருந்தப்ப அவ ஹீரோயின்.. வில்லனுக்கு ஜோடி ஆன பின்னே அவ வில்லி... ( நம்ம பழைய ஹீரோயின் வில்லன் கூட மேட்டரை முடிச்சுட்டா என்பதை இவ்வளவு கண்ணியமா ,மறைமுகமா சொன்னதுக்காக இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணிய எழுத்தாளர் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக்கறேன் ஹி ஹி )


http://content.internetvideoarchive.com/content/photos/266/011179_3.jpg
இப்போ டைம் ஆகிடுச்சு.. ( ஹீரோயினுக்கா/) அதாவது ஹீரோ வீட்டுக்கு வர்ற டைம் ஆகிடுச்சு.. வீட்டுக்கு திரும்பி போகனுமே.. வில்லன் டிராப் பண்ணலை.. இவ கோவிச்சுக்கிட்டு தானே போறா.. இது வில்லனுக்கு பிடிக்கலை.. துரத்தறான்... ஒரு காட்டுல சேஸிங்க் சீன்.. ( சேஸிங்க்கின் முடிவில் ஒரு சீன் உண்டு என்பதால்  சேஸிங்க் சீன். என்ற பதம் உருவக அணியாகவும், தற்குறிப்பேற்ற அணியாகவும் இங்கே இடம் பெறுது. # தமிழ் இலக்கணத்துல பின்றேடா போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கப்படுது ஹி ஹி .)

இப்போ காலம் போன காலத்துல ஹீரோயின் சின்ன வயசுல அவளுக்கு நடந்த ஒரு பாலியல் பலாத்கார ஃபிளாஸ்பேக்கை சொல்றா... வில்லன் அதை கேட்டுக்கறான்... இப்போ ஹீரோயின் வீடு வந்து சேர்ந்துடறா... 

பழையபடி பத்தினி ஆகிடறா.... இப்போ சுபம்... ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU7SQLFzi4jvOPPpbXZ_zkzLtPmazlDxSXrM8JOazPBofT8sDyzIs20FPNCRA3NzgqhN6x4bXOf5aYHVpG0hyOWC1WRIuxywyS-A6FSHZU3gbSKyBlfGDvGiQuwo0xWwWVjD4ilW3zVqg/s400/star-joan_severance-nue.jpg
.
படம் முடிஞ்சிடுச்சுன்னு ரசிகர்களுக்கு உணர்த்தறதுக்காக  THE END  கார்டு போட்ட பின்பும் எவனும் கிளம்ப மாட்டேங்கறான்.. என்னமோ அத்தை பொண்ணோட திரட்டிக்கு வந்த முறைமாமன் கணக்கா அங்கேயே உக்காந்திருக்கான்.. 
தியேட்டர்காரன் வந்து கிளம்பப்பா படம் முடிஞ்சுதுன்னு சொன்ன பிறகு வேண்டா வெறுப்பா கிளம்பறாங்க.. இதுல எத்தனை பேரு ரிப்பீட் ஆடியன்சா அடுத்த ஷோவே வரப்போறாங்களோ.. 

இந்தப்படம் ஈரோடு அபிராமி தியேட்டர்ல  4 வாரம் ஹவுஸ் ஃபுல்லா தியேட்டர் பூரா ஜொள்ளா ஓடுச்சு.. நான் 3 தடவை பார்த்தேன்  என்பதை வெட்கத்தை விட்டு சொல்றேன்.. ( தக்காளி.. பார்க்கறது சீன் படம் இதுல வெட்கம் என்ன வேண்டி கிடக்கு..?)



http://pulsarwallpapers.com/data/media/554/Lake_Bell_001_2837_Wallpaper.jpg
 படத்துல மொத்தம் 6 சீன் இருக்கு. 1. ஹீரோ ஹீரோயின் 2. வில்லன் வில்லி 3 வில்லன் ஹீரோயின் 4 வில்லி ஹீரோயின் 5 வில்லன் + வில்லி + ஹீரோயின்
6.க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோயின்.

பாருங்கள் பயன் பெறுங்கள். ஹி ஹி.

படத்தோட உண்மையான டைட்டில் THW LAKE CONSEQUENCE. ஆனா போஸ்டர்ல A MAN AND TWO WOMEN  அப்படின்னு போட்டிருக்கறதுக்கு காரணம் ஒரு கிளாமருக்கு..


http://dodjer.com/uploads/posts/2010-10/1288311725_Lake_Consequence_1993_1.jpg
டிஸ்கி -1  இந்தப்படத்துல ஹீரோ, வில்லன்,ஹீரோயின், வில்லி யாரோட நடிப்பு நல்லாருந்ததுன்னு சொல்லவே இல்லை? என யாரும் கேட்காதீங்க.. யார் நடிப்பை பார்த்தா..? ஹி ஹி,படத்தின் ட்ரெய்லர்

டிஸ்கி 2 - வழக்கமா சிறந்த வசனங்கள்னு ஒரு இடம் ஒதுக்குவேன் அதுவும் இந்த போஸ்ட்க்கு இல்லை.. ஏன்னா வசனத்துகு வேலையே இல்லாத படம்.. ஹி ஹி  டிஸ்கி 3 - இளைஞர்களை கெடுக்கறதா யாரும் என்னை சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கு அட்வான்ஸ் பாவ மன்னிப்புபப்ரிகாரமா இன்று 2 நல்ல பதிவு போட்டூட்டேன்.. ஹி ஹி .. Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-010.jpg

வேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிடைக்குமா?ஆன்மீகத்தேடல்

ந்தப் பிறப்பில் மட்டுமல்ல, ஏழேழு பிறவிக்கும் நமக்குக் காப்பு, ஸ்ரீமந் நாராயணனின் பாதாரவிந்தங்களே! மனைவி-மக்கள், உற்றார்-உறவுகள், சொத்து-சுகங்கள் ஆயிரம் இருந்தாலும், இந்த ஜென்மம் முடிந்தபின், நம்மைப் பற்றித் தொடர்வது, எம்பெருமானின் திருவருள் ஒன்றுதான். 


கோதை ஆண்டாளும், 'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி...’ என்று நாச்சியார் திருமொழியில் குறிப்பிடுகிறாள். ஆமாம்...
இறைவனுக்கும் நமக்குமான உறவு ஒன்றே நிலையானது.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBCeK0ZL9g6GGnIZb0CfI3Q0zQqEmZgL-vX6QqKDpLKKy0LHHX4YtzBkikGK7zjJ2JjwopucyonObF-1MAIK3-2iaAH7peNNH2WllEElq6TCr2NFTnel1bqgTTnMP-agKgu2fQ6ZiPYFf6/s400/ennappan.jpg
இந்த சூட்சுமத்தை அறிந்துகொண்டதால்தானே ரிஷிகளும், மகான்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும்... இவர்களுக்கெல்லாம் முன்னதாக கிருத யுகத்தில் பக்த பிரகலாதனும் பரந்தாமனின் பாத கமலங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார்கள். அதற்கு, அவர்களுக்கு உறுதுணை புரிந்தது... 'ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம்!


மந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய ரிஷி, தேவதை, சந்தஸ் எனத் தனித்தனியே உண்டு. ஆனால், எல்லா உயிர்களிலும் உயிராகவும் உடலாகவும் திகழும் பரம்பொருளே அஷ்டாட்சர மந்திரத்தின் தேவதையாகவும் ரிஷியாகவும் சந்தஸாகவும் திகழ்கிறாராம்! எனில், இதை உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்லவும் வேண்டுமா?! 

'மலைகளின் அருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத அமைதியான சூழலில் தனித்திருந்து, இதயத்தில் என்னை இருத்தி, அஷ்டாட்சர மந்திரம் ஜபிக்க... சகல சௌபாக்கியங்களும் தருவேன்’ என்று பகவானே அருளியிருப்பதாகச் சொல்வார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1j_TqsxMY88GkhifL_w9ihJPMwsFyrN1JRJ7wYFzjDjXMCNQescwG9UcPCnhpNNR2qe5gY3w5n_4F9Vc6Gijyl_w_ZiO1X54BW5H_7kg2pxN6IsQzveGPkgxr-DTsZEj80vm6Lrjud3ie/s320/AndalKalyanam.JPG

நாமும் அனந்தனை மனதில் இருத்தி, அஷ்டாட்சர மந்திரத்தை உதட்டில் வைத்து, பரம்பொருள் சொன்னது போலவே மலைகளை நாடிச் செல்வோம்! எட்டெழுத்தால் தன்னைக் கட்டிப்போட்ட பாலகன் பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்மப் பரம்பொருளின் மலைக்கோயில்கள் சிலவற்றைத் தரிசித்து வருவோம்!


திருவருள் தரும் திருக்கடிகை
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது சுமார் அரை மணி நேரம் (ஒரு கடிகை - 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் தரும் அற்புதத் தலம் இது. 

எனவே, திருக்கடிகை என்று திருப்பெயர்! ஆதி அந்தம் இல்லாத பரம்பொருளின் பிரமாண்டத்தை உணர்த்துவது போல் ஓங்கியுயர்ந்து திகழ்கிறது சோளிங்கர் மலை. அடிவாரத்தில் இருந்து சுமார் 1305 படிகள் ஏறிச் சென்று ஸ்ரீயோக நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.


இரண்யகசிபுவை அழித்தும் ஆக்ரோஷம் தணியாத நரசிம்மருக்கு, பிரகலாதனின் பால்வடியும் முகம் கண்டு கோபம் தணிந்தது. பிறகு, உலக மக்கள் யாவருக்கும் அருளும் விதம் கோயில் கொண்டு, யோகத்தில் ஆழ்ந்த தலமே இந்த சோளிங்கர். சோளிங்கரின் மேன்மை அறிந்த சப்த ரிஷிகள், பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மரின்


தரிசனத்தை காண விரும்பி இங்கே வந்து தவம் செய்தனராம். அப்போது, கும்போதரர், காலகேயர் ஆகிய அசுரர்களின் கொட்டம் இங்கு அதிகம். இவர்களால் முனிவர்களின் தவத்துக்கு பங்கம் நேரக்கூடாது என்று விரும்பிய இறைவன், அனுமனிடம் சங்கு- சக்ராயுதத்தைக் கொடுத்து அசுரர்களை அடக்கும்படி பணித்தார். 

அதன்படியே இந்திரத்யும்னன் எனும் மன்னனின் சைனியத்துடன் சென்று அசுரர்களை அழித்தார் அனுமன். அதன் பிறகு, முனிவர்களுக்கும் அனுமனுக்கும் காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர். அதுமட்டுமா? ஸ்ரீநரசிம்மரின் ஆணைப்படி அனுமனும் சங்கு- சக்கரத்துடன் அருகில் உள்ள சின்ன மலையில் யோக நிலையில் கோயில் கொண்டாராம்!

மலையின்மீது அழகிய ராஜகோபுரத்துடன் திகழும் கோயிலில், ஸ்ரீயோக நரசிம்மருக்கும் அமிர்தபலவல்லித் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள். கருவறையில், ஹேம கோட்டி விமானத்தின் கீழ், சதுர்புஜநாயகராக கிழக்கு திருமுக மண்டலமாக அருள்கிறார் ஸ்ரீநரசிம்மர்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே 
- எனத் திருமங்கையாழ்வார் போற்றும் இந்தத் தலத்தின்
ஸ்ரீயோக நரசிம்மர், வருடத்தில் 11 மாதம் யோகத்தில் ஆழ்ந்திருப்பாராம். அவர் கண் விழித்திருக்கும்  கார்த்திகை மாதத்தில்... ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்வாமியை வழிபடுவது விசேஷம். தை மாதம் 3-ஆம் நாள் ஸ்வாமியே கிரிவலம் வருவது இந்தத் தலத்தின் சிறப்பு.

இங்கு வந்து அடிவாரத்தில் இருக்கும் தக்கான் குளத்தில் நீராடி, விரதமிருந்து, மலைக்கு மேல் ஏறி ஸ்வாமியைத் தரிசித்து வழிபட்டால், பில்லி-சூனியம் போன்ற சகல தீவினைகளும், பிணிகளும் நீங்குமாம்!

திருமார்பில் திருமகள்! 

நாமக்கல்- கம்பீரமாக அமைந்திருக் கும் கோட்டை- கொத்தளங்கள் வரலாற் றுச் சிறப்பையும், திருக்கோயில்கள் ஆன்மிக மகிமையையும் பறைசாற்றும் அற்புதத் திருத்தலம் இது.

லட்சுமணனுக்காக சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், வழியில் கண்டகி நதிதீரத்தில் அற்புதமான சாளக்கிராம கல் ஒன்றைக் கண்டு, எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் திரும்பி வரும் வழியில், பூமியில் கமலாலயக் குளத்தைக் கண்டு தரையிறங்கி, சற்றே களைப்பாறினார். 

அது, லட்சுமிதேவியின் தபோவனமாக இருந்தது. சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு, எம்பெருமானை தியானித்து தவம் செய்யும் தாயாரை வழிபடச் சென்றார் அனுமன். அவர் திரும்பி வருவதற்குள், சாளக்கிராமம் பெரும் மலையாக வளர்ந்து விட்டதாம்!


அதேபோல்... களைப்பாறத் தரை இறங்கிய அனுமன், அங்கு திருமகள் தவமிருந்து வழிபடுவதைக் கண்டார். தேவியை வணங்கி தவத்துக்கான காரணம் கேட்க, திருமாலை ஸ்ரீநரசிம்ம வடிவில் தரிசிக்க வேண்டி தவமிருப்ப தாகச் சொன்னார் அன்னை. 

பிறகு, சாளக்கிராமத்தை அவரிடம் தந்த அனுமன், தான் நீராடிவிட்டு வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னார். 'குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால் சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிடு வேன்’ எனும் நிபந்தனையுடன் அதைப் பெற்றுக்கொண்டார் லட்சுமிதேவி. அனுமன் வரத் தாமதமாகவே, லட்சுமி தேவி சாளக்கிராமத்தை தரையில் வைத்த தாகவும், அது பெரும் மலையாக வளர, அந்த மலையின் மீது ஸ்ரீநரசிம்மர் தோன்றி திருமகளுக்கு அருளியதாகவும்  ஒரு வரலாறு சொல்வர்.
 http://www.dinamani.com/Images/article/2009/7/17/17velli6.jpg

கோட்டையில் பிரமாண்ட திருவுருவத்துடனும், குளக்கரையில் சிறிய வடிவின ராகவும் அருள்புரிகிறார் அனுமன். அனுதினமும் தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு வரம் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர், தனக்கு அருள் வேண்டி எதிர்நோக்கி இருப்பது, ஸ்ரீயோக நரசிம்மரின் திருக்கோயிலை!

அனுமனை எதிர்நோக்கியபடி அமைந்துள்ளது ஸ்ரீநரசிம்மர் சந்நிதி. மலை யைக் குடைந்து சந்நிதி அமைத்திருக் கின்றனர். திருமகள் இவர் திருமார்பில் உறைந்திருப்பது விசேஷ அம்சம்! குடைவரை மூர்த்தி என்பதால், ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது; உற்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது.


இவரது சந்நிதிக்கு வடக்கே ஸ்ரீவைகுண்ட நாராயண  மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஸ்வாமி நரசிம்ம அவதாரம் எடுப்பது குறித்து, மும்மூர்த்தியரும் கூடி ஆலோசித்தது இங்குதான் என்கிறார்கள்.  இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநாமகிரி தாயாரும் வரப்பிரசாதியே! கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்க இந்தத் தாயாரை வழிபடுவது சிறப்பு.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHUIq8MkqYZ7yljR8zhw8kPeQF63n2YUrYA9emCyQ5BEvCt9b8va1X5Fxun8HU-Yfv7JmdZRF5Rki7glzJ1qVBfHfrMUdiCT2yf-jRPMjfbv3LxsYgTZ4iWeRumq-tu0xIWf_So-lGEdQh/s320/hanuman12.jpg
மலைக்கு இடப்புறம் பேட்டையில் ஸ்ரீரங்கநாதர் கோயில் கொண்டிருக்கிறார். தந்தை காசியப முனிவரிடமே சாபம் பெற்ற கார்க்கோடகன், விமோசனம் வேண்டி இங்கு தவம் செய்தான். அவனுக்குக் காட்சி தந்த பெருமாளிடம், தன் மீது சயனித்து அருளும்படி வேண்டிக்கொண்டான். அதன்படியே கார்க்கோடகன் மீது சயனித் திருக்கிறார் இந்த ரங்கநாதர்.

நினைத்தது நிறைவேறவும்; தொழில் சிறக்கவும், உயர்பதவி வாய்க்கவும், எதிர்காலம் வளமாகவும் சனிக்கிழமை களில் நாமக்கல் அனுமனையும் ஸ்ரீநரசிம்ம ரையும் ஸ்ரீநாமகிரி தாயாரையும் வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்!இந்த மேட்டர் பக்தி விகடனில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி டூ விகடன் குரூப்

சுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)

http://clipart.peirceinternet.com/png/reading-child.png 

1.மதிய உணவு

மதிய உணவுக்கான நேரம்... அந்தப் பள்ளியின் மரத்தடி, வராண்டா எங்கும் சுட்டிகள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். நித்யா வகுப்பு அறையைவிட்டு வெளியே வர, கையில் சாப்பாட்டுப் பையுடன் அம்மா. ''எல்லோரும் வந்து பத்து நிமிஷம் ஆச்சு... நீ ஏன்டி இவ்வளவு நேரம் கழிச்சு வரே?'' என்று கேட்டாள் அம்மா. ''அது...வந்து...'' என்று நித்யா தயங்க...
  ''தெரியும் சொல்லாதே! எழுதிகிட்டு இருந்திருப்பே'' என்ற அம்மா, 

ஒரு சுட்டியிடம் ''உன் பேர் என்ன?'' என்று கேட்டாள்.

  ''அனிதா'' என்றாள் அவள். '

'என்ன படிக்கறே?'' ''தேர்ட் ஸ்டாண்டர்ட்''

  ''ஓ! நித்யா கிளாஸ்தானா?'' 

 ''ஆமா!'' என்றாள்.

உடனே நித்யா பக்கம் திரும்பிய அம்மா ''இவளைப் பாரு! கரெக்டா வந்து க்ளீயரா சாப்பிட்டுகிட்டு இருக்கா. நீ இப்ப பெல் அடிச்சுடுவாங்கன்னு அரைகுறையா சாப்பிடுவே. ஒருநாள் பிரின்ஸ்பால் கிட்ட சொன்னாதான் நீ சரிப்படுவே'' என்றாள்.

''போதும் நிறுத்தும்மா! இவங்க ஹோம் ஒர்க்கைப் பார்த்து கரெக்ஷன் போட லேட்டாயிடுச்சு. சாப்பாடு கொடுத்தாச்சு இல்லே. கிளம்பு'' என்றார் மூன்றாம் வகுப்பு மிஸ் நித்யா.
http://sabigames.com/wp-content/gallery/blog/sad-child.jpg

போலீஸ் !


நேரம் செல்லச் செல்ல பாலுவுக்கு டென்ஷன் அதிகமானது. பத்து மணிக்கே எஸ்கேப் ஆவதாகப் பிளான். ''நீ எப்படியாவது வந்துடு பாலு... உன் திறமை மேலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எல்லாத்தையும் நாங்களே கொண்டுவரோம். அவங்களை அடிச்சு நொறுக்கிடணும்'' என்று சொல்லி இருந்தார்கள்.
வெளியே இருந்து மூன்று முறை சிக்னல் வந்துவிட்டது. மெதுவாக எட்டிப் பார்த்தான் பாலு. 'ஒரு நிமிஷம் கிடைச்சாலே போதும். எஸ்கேப் ஆயிடலாம். ஆனா, இந்தப் போலீஸ்... இடத்தைவிட்டுக் கொஞ்சமும் அசையலையே’ என்று தவித்தான். அப்போது தொலைபேசி ஒலித்தது. வாசலில் இருந்த அவர் எழுந்தார். பாலு சட்டெனப் பதுங்கினான். அவர் உள்ளே வந்து போனை நெருங்க...


  அந்த சில நொடிகளில் 'குபீர்’ என வெளியே பாய்ந்துவிட்டான். திரும்பிப் பார்த்த அவர், ''டேய்... டேய்!'' என்று கத்தினார். ''என்ன... கோட்டை விட்டுட்டியா? என்ற இன்ஸ்பெக்டரிடம், ''ஸாரி சார்... ரொம்பக் கவனமா பார்த்துட்டு இருந்தேன்... அப்படியும் டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டான் சார்!'' என்றார் அந்த கான்ஸ்டபிள்.

''பாருடீ உன் பையனை... எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாட ஓடிட்டான்!'' என்று நொந்து
கொண்டார் அந்த இன்ஸ்பெக்டர் அப்பா.

http://mindspower.com/wordpress/wp-content/uploads/2010/10/mother_child.jpg
3.எக்ஸ்பிரஸ் ! 

''அம்மா நான் கிளம்பறேன்'' என்றான் முரளி. ''சீக்கிரம் போ! நேத்து மாதிரி எக்ஸ்பிரஸ் வந்துடப் போகுது!'' என்றாள் அம்மா.
''இல்லேம்மா அதுக்குள்ளே போய்டுவேன்'' என்றபடி கிளம்பினான்.
நேற்று கிளம்பும் நேரத்தில் சைக்கிள் டியூப் பஞ்சர். கடைக்குப் போனால் பஞ்சர் ஒட்டுபவர் எங்கோ போய் இருந்தார். பிறகு ரெடி செய்துகொண்டு போவதற்குள் எக்ஸ்பிரஸ் போய்விட்டது. இன்று எழுந்ததும் சைக்கிளை சரி பார்த்துவிட்டான். 

அதனால் தவற விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டே தெரு முனைக்கு வந்தான். கடைசி வீட்டு, பாட்டி நின்றிருந்தார். ''முரளி ரெண்டு நாளா காய்ச்சல். என்னை ஆஸ்பத்திரியில விட்டுடறியா?'' என்றார்.


ஆஸ்பத்திரி இருப்பது எதிர் திசையில்... பாவம் பாட்டிக்கும் வீட்டில் யாருமில்லை. அதனால், மறுக்க முடியாமல் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்று ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தினான். அடுத்த நொடியே மின்னலாக கிளம்பினான். ''நன்றிப்பா'' என்ற பாட்டியின் குரல் காற்றில் கரைந்தது. சரியான நேரத்துக்கு வந்து, சைக்கிளை நிறுத்தினான். எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. டயம் இருந்தது.


அந்த லெவல் கிராஸிங்கில் காத்திருந்த பேருந்துகளில் தூக்கு பாத்திரத்தோடு ஏறியவன், ''சுண்டல்! சுண்டல்'' என்று விற்க ஆரம்பித்தான்.